முடிவுறாத முகாரியொன்று -செ.பாஸ்கரன்

.

         10.09.2008  இல் எழுதியது

நீலாம்பரி ராகம்
நெஞ்சில் உதைக்கிறது
முகாரி ராகம் வீட்டின் முகட்டு வழியால்
இறங்கி வருகிறது
அவள் பிறந்தபோதும்
தவழ்ந்த போதும்
முகாரியே முகவுரை கூறியது
தொப்பிள் கொடியறுத்த அன்னை
தொலைந்து போனோர் பட்டியலில்
துணைக்கிருந்த அப்பன்

அவுஸ்ரேலிய, உலக செய்திகள் - கரு

.
* எண்ணெய் கசிவினால் 17,000 பேர் வேலை இழப்பு
* இலங்கையர் அறுவர் அமெரிக்காவில் கைது
* ஜேர்மன் இசைநிகழ்ச்சி 19 ரசிகர்கள் பலி

எண்ணெய் கசிவினால் 17,000 பேர் வேலை இழப்பு
அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மெக்ஸிகோ வளைகுடா பகுதியிலுள்ள பிரிட்டிஷ்

மெல்பேர்னில் ஜுலை நினைவு நிகழ்வு

.

அவுஸ்திரேலியா மெல்பேர்னில் “ஜுலை நினைவு நிகழ்வும்“ வீரத்தளபதிகள் நினைவு பாடல் இறுவட்டு வெளியீடும்

ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஆறாத வடுக்களில் ஒன்றாக அமைந்த கறுப்பு ஜுலை நினைவு நிகழ்வும், ஜூலை மாதப் பெருநினைவுகளை சுமக்கும் தற்கொடையாளர் களுக்கான நினைவுநிகழ்வும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஞாபகார்த்த நினைவுப் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடும் ஆஸ்திரேலியா மெல்பேர்னில் கடந்த ஞாயிற்றுக்கிமை கிளைட்டனில் அமைந்துள்ள கிளைட்டன் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

சினிமா செய்திகள் சின்னன் சின்னனாய்

.
*மீண்டும் சர்ச்சையில் காவ்யா மாதவன்
*விஜய்க்கு ஜோடி காஜல் அகர்வால்
*விருந்தாளி திரைப்படம் மழையில் நனைத்தது
*

காசி, என் மன வானில், சாது மிரண்டால் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மனதினை வென்ற மலையாள நடிகை காவ்யா மாதவன், கடந்த வருடம் குவைத்தில் பணிபுரியும் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியேறினார்.


சீரான குடும்ப வாழ்க்கையை அனுபவித்துவந்த காவ்யா, திடீரென தனது கணவன் மீது புகார் கூறியிருந்தார். அதன் பின்னர் இந்தப் பிரச்சினை சற்று ஓய்ந்திருந்த நிலையில் காவ்யாவின் கணவர் தன்னையும்

குற்றம், ஆனால் குற்றமில்லை -அ. முத்துலிங்கம்

.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்வார், 'பஸ் வரும், ஆனால் வராது' என்று. அதுதான் நினைவுக்கு வந்தது, நேற்று ஈழத்துப் பூராடனாருடன் பேசிக்கொண்டிருந்தபோது. அவர் 1965ல் ஒரு புத்தகம் எழுதினார், தலைப்பு 'யாரிந்த வேடர்'. இவர் தான் வெளியிடும் புத்தகங்களை அளவாகவே அச்சிடுவார். வீணாக தொகையாக அச்சடித்து வீட்டில் அடுக்கி வைத்திருப்பதில்லை. ஒரேயொரு கொப்பியை தனக்கு வைத்துக்கொண்டு மீதியை நூலகங்களுக்கும், புத்தக விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பிவிடுவார். வாசகர்கள் யாராவது முன்கூட்டியே சொல்லிவைத்து வாங்கினால் ஒழிய ஒருமுறை தவறவிட்டால் பின்னர் புத்தகத்தை பார்க்க முடியாது.

வைரவர் சாமி பயப்புராணம் - வாசுகி பரமராஜ்

.

சென்றவாரம் செ.பாஸ்கரன் எழுதிய கட்டுரைக்கு தொடர்ச்சியான கட்டுரை


போனவாரம் தமிழ்முரசில் இடம் பெற்ற “மனதில் பதிந்த வைரவசாமி”என்ற கட்டரை படித்தேன். எனக்குள் அடக்கமுடியாத சிரிப்பு. அதே வைரவர் சாமி பயப்புராண அனுபவம் கட்டுரை ஆசிரியருக்கு மட்டுமல்லாமல் அவரது வழித்தோன்றல்களாகிய எமக்கும் இருந்ததென்பதை அவர் அறிய வாய்ப்பிருக்காதென நினை;கிறேன். அந்த வைரவர் சாமி பயப்புராண கதை திட்டமிட்டே ஊர்ப்பெரியவர்களால் பரப்பி விடப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டுமென்றே நம்பத் தோன்றுகின்றது. ஏனெனில் பிள்ளைகள் பொய் களவு போன்ற கெட்ட பழக்கங்களைப் பழகாது நல்லவர்களாக உருவாகுவதற்கும், பாடசாலை விட்டு வரும் குழந்தைகள் வம்பு தும்பு எந்த வித பிரச்சினையிலும் சிக்கிவிடாது பாதுகாப்பாக நேரகாலத்துடன் வீடுவந்து,

சேகுவேராவின் சேற்று தேவதை -எம்.ரிஷான் ஷெரீப்

.

(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010)யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர் முழுதும் அலைந்தபடியிருந்தாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவள் குளித்து வந்த அழுக்குச் சேற்று வாய்க்கால் மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம் தொட்டு அவள் அள்ளிக்குளிக்கப் பயன்படுத்தும் அகன்ற பெரும் அழுக்குச் சிரட்டையைப் போல, அவளும் தலையில் ஈரம் படாமலே வீதிகள் தோறும் சுற்றி வந்தாள். இத்தனைக்கும் ஊரின் மத்தியில் பெரிய ஆறு, நாணல்களைத் தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.

அவளுக்கென்று தனி இருப்பிடம் இல்லை. இருட்டிவிட்டால் போதும். எந்த இடத்தில் நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின் திண்ணையில், மாட்டுக்கொட்டகையில், கிணற்றடியிலெனத் தங்கிவிடுவாள். அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவுமற்ற காரணத்தால் ஊரார் எதுவும் சொல்வதில்லை. இன்னுமொரு காரணம் இருக்கிறது. விடியலின் முதல் கிரணம் கண்டு அவள் விழித்தெழுந்து, எந்த இடத்தில் தங்கினாளோ அந்த இடம், முற்றம், கிணற்றடி என எல்லா இடத்தையும் மிகவும் நேர்த்தியாகக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நகர்வாள். சூழ இருக்கும் குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போவாள். தான் அழுக்காக இருந்தாளே ஒழிய சூழ இருந்தவைகளை ஒரு போதும் அழுக்கடைய விட்டதில்லை அவள்.

சந்தோஷம் ஹரே கிருஷ்ணா

.


ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வாரம் எல்லோரும் விரும்பும், தேடும் உண்மையான சந்தோஷத்தை பற்றி காண்போம். சந்தோஷம் என்றால் என்ன? எதற்காக மகிழ்ச்சியை மனம் நாடுகிறது ? எதற்காக இன்பத்தை போல் துன்பத்தை ஏற்க மனம் மறுக்கிறது? நான் இன்பமாக உள்ளேன் என்று கூறும் போது நிஜமாகவே சந்தோஷமாகவே இருக்கிறேனா? ஒரு மனிதன் எப்போதும் இன்பமாகவோ (சந்தோஷமாக) இருக்க முடியுமா? இருக்க என்ன வழி? இதை பற்றி இன்று ஆராயலாம்.

சவக்கிடங்காக மாறிய அந்த நள்ளிரவு …..


.

 1984-ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் நாள். நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. வரவிருக்கும் ஆபத்தை உணராத மக்கள், டிசம்பர் மாதத்துக் குளிருக்கு அஞ்சி வீட்டிற்குள் அடைபட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். வீடற்றவர்களோ சாலையோரம் ஒடுங்கிக் கிடந்தனர். போபாலின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில், திடீரென அபாயச் சங்கு ஒலித்தது. தொழிலாளர்கள் பரபரப்பானார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தொழிற்சாலையின் உயரமான புகை போக்கியிலிருந்து கொடிய நச்சு வாயு கசிய ஆரம்பித்தது.

ஆண்டவனே நீ ஏன் - கவிஞர் கண்ணதாசன்

.

திரளி முறி --நா. மகேசன்

.

மீன் குழம்பு வைக்கும்போது மீனைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றை மண்சட்டியலிட்டு, தேங்காய், மிளகாய், கறிச்சரக்குச் சேர்த்து அரைத்த கூட்டை இட்டு நீர்விட்டுக் குழம்பாக்கிப் புளியும் சேர்த்து அடுப்பில்வைத்துக் கொதிக்க வைத்து எடுப்பார்கள். இது ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னர் நடந்த செய்தி. தற்காலத்தில் மீன்குழம்பு வைப்பதிலோ பலவிதம். அது எனக்குப் பிரச்சனை அல்ல. ஆனால் அந்தக் குழம்பில் உள்ள மீன்துண்டுகளை முறி என்று சொல்வதுதான் தற்போதைய பிரச்சனை. திரளி முறி என்ற பதத்தைச் சில தினங்களுக்கு முன் இணையத் தளத்தில் பார்த்தபோது எனது நினைவுக்கு வந்தது இந்த மீன்குழம்பும் மீன் முறிகளும்தான். மீனைத் துண்டு துண்டாக வெட்டி எடுக்கும் போது அந்தத் துண்டுகளை முறி என்று சொல்லுவது வழக்கம்.

மெல்பேனில் புதிய சிந்தனை -- நொயல் நடேசன்-

  .                                               

விடுதலைப்புலிகளி;ன் ஆயுதப்போராட்டம் முடிந்து விட்டது.

விடுதலைப்புலிகளும் ஆரசாங்கமும் ஒருவரை ஒருவர் நம்பாத நிலையில்;தான் பேச்சு நடத்தினார்கள்.

விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகி இருக்கக் கூடாது.- இப்படி வெளியேறியதன் மூலம் உலகின் தார்மீக ஆதரவை இழந்து விட்டார்கள்.

அமெரிக்காவும் யப்பானும் ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகள் பேசத்தொடங்கிய போது வெளியேறினார்கள்.

எந்த ஒரு உலக நாடும் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காது.

சுவரை அகற்றுங்கள்-சரித்திர ரணம் ஆறட்டும்!

                                                                                        .
                                                                                                    -அருணன்

சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புற வாசலைத் திறந்துவிடச் சொல்லி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை தொலைக் காட்சி மூலம் கண்டபோது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று அந்தச்சுவரைப் பார்த்து ஆவேசப் பெருமூச்சு விட்டவர்களில் நானும் ஒருவன்.

மதராசப்பட்டினம்

.


'ஆளுக்கொரு அவுன்ஸ் கூவம்' என்று அதட்டினாலொழிய அசுத்தப்படுத்துவதை நிறுத்த மாட்டார்கள் போலிருக்கிறது. ஆனால் பழைய சென்னையை கண் முன்னே உருவாக்கி, இதுதான்யா அந்தகால மதராசு என்கிறார் டைரக்டர் விஜய். மீட்டெடுப்பது நடக்காத காரியம் என்றாலும், 'ரிப்பீட் ஷோ' பார்த்து திருப்தி பட்டுக் கொள்ள வைத்த இந்த டீமுக்கு சாஷ்டாங்கமாக ஒரு சல்யூட் போடலாம்.

சிட்னியில் இந்து சமய வேதங்கள் கற்றுக் கொடுக்கப்படும்

.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்து சமய வேதங்கள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும்.  இதனால் மன அமைதி,  இறைவன் திருவருள்,  நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் வந்து பயனடையலாம்.

இடம்: ஸ்ரீகற்பக விநாயகர் கோயில், 123 தெ கிறசன், ஹோம்புஷ் மேற்கு நி.ச.வே 2145

மேலதிக விபரங்களுக்கு ரவி குருக்களுடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கங்கள்: 02 9636 6979, 045 045 4553

நவீனத்தின் முப்பரிமாணம் 3D

.


ஹொலிவுட்டின் பிரமாண்டங்களுக்கும் பிரதான விளையாட்டு நிகழ்வுகளுக்கும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த முப்பரிமாண புரட்சி வீடுகளுக்கும் விரைவில் நுழைந்துவிடும்.

குழந்தையின் முதல் நடை, பல்கலைக்கழக பட்டமளிப்பு போன்ற வாழ்வின் பெறுமதிமிக்க நிகழ்வுகளை முப்பரிமாணத்தில் பதிவு செய்யக்கூடிய முதலாவது முப்பரிமான கெமராவை பனசோனிக் நிறுவனம் தயாரித்துள்ளது.

1,900 அடி நீளமான ஹூவர் பாலம் செப்டம்பரில் பாவனைக்கு


 .


ஹூவர் அணைப் பாலம் - புவியில் காணப்படும் மெய்சிலிர்க்க வைக்கும் பிரமாண்டங்களில் ஒன்று. அந்த பாரிய அமைப்பு செப்டெம்பரில் பூரணப்படுத்தப்படவிருக்கிறது. மெய் சிலிர்க்க வைக்கும் கட்டுமாணப்பணிகளின் புகைப்படங்களே இவை.

12 வருடங்களாகத் திட்டமிடப்பட்டு 5 வருடங்களாக கட்டப்பட்டுவரும் இந்த பாலம் நிறைவை நெருங்கிவிட்டது. கொலறாடோ ஆற்றின் மேல் 890 அடிக்கு உயர்ந்தெழும் இந்த பாலம் 1,900 அடி நீளமானது.

கூழ‌ன் ச‌க்கை ப‌லாப்ப‌ழ‌ம்

.

ச‌வுதி அரேபியாவில் பேரிச்சை ம‌ர‌ங்க‌ள் அதிக‌ம். ஒருமுறை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் இந்த‌ பேரிச்சை ம‌ர‌ங்க‌ளை ப‌ற்றி பேசி கொண்டிருக்கும் போது ந‌ம‌து ஊரில் உள்ள‌ ப‌னை ம‌ர‌த்தை ப‌ற்றிய‌ பேச்சு வ‌ந்த‌து. அப்போது நான் ப‌னை ம‌ர‌த்தில் இர‌ண்டு வ‌கைக‌ள் உண்டு. ஒரு வ‌கை பூ தான் பூக்கும் அதில் நொங்கு கிடைப்ப‌து இல்லை என்றும், ம‌ற்றொரு வ‌கையில் தான் நொங்கு கிடைக்கும் என்று சொன்னேன்.

என்னுட‌ன் இருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ளில் சில‌ருக்கு இந்த‌ இர‌ண்டு வ‌கைக‌ளை ப‌ற்றி தெரிந்திருக்க‌ வில்லை.

எந்திரன் இசைவெளியீட்டில் சிம்புவின் நடனம்

.

உலக சினிமா சரித்திரத்தில் 'ஸ்பைடர் மான்' திரைப்படத்தின் பின்னர் அதிக திரையரங்குகளில் வெளியிட தீர்மானிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் எந்திரன். பிரமாண்ட கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் யாவும் நிறைவடைந்துவிட்டன. இப்பொழுது படப்பிடிப்புக்கு பிற்பட்ட வேலைகளில் எந்திரன் குழு மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் எதிர்வரும் 31ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் வெளியிடப்படவிருக்கின்றன.


அவுஸ்திரேலிய மூத்த தமிழர் சங்கம் -வென்ற்வேத்வில்.

.
அவுஸ்திரேலிய மூத்த தமிழர் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டம் 2010-07-28 அன்று வென்ற்வேத்வில் டாசி வீதியில் அமைந்துள்ள றெஜ் பேண் சன சமூக நிலைய மண்டபத்தில் காலை 10 மணியளவில் திரு வீ. எம். தேவராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டம் சங்க நலன்புரி நிதியத்தின் விதிகளில் அங்கத்தவராக இணைந்துகொள்வதற்கான வயதெல்லை தொடர்பாக சில மாற்றங்களை கொண்டுவருவதற்கான அங்கீகாரத்தை பொதுச் சபையிடம் பெறுவதற்காக கூட்டப்பட்டது.