தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! 02 .11. 2013 சனிக்கிழமை

.

 இனிய வாசகர்களே உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!



இன்னும் எப்போ பூ பூக்குமோ?? -கவிதை

.


உன் மெளனமும்
என் மெளனமும்
இன்னும் எப்போ
பூ பூக்குமோ?

காதல் செய்யும் என் கனவாய் நீ
கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ

பனியில் - நீ
கனியா

நெஞ்சோரம் சாய்வாய்

மொட்ட விழ்ந்த கள்ளி
சட்டென்று எள்ளி
நகைகொண்டாய் உயிரில்

பயிர் கொண்ட கள்வா
உறவாட வருவாய்
பலநாள் என்னெதிரில்

மனசென்னும் இசையில்
விசைகொண்ட ராகம்

மனசென்னும் இசையில்
விசைகொண்ட தாளம்

அடங்காப்பற்று - நாட்டியத்தி​ல் ஒரு வரலாற்றுக் காவியம்‏ --சாந்தினி

.

l90l.jpg
இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் அடங்காப்பற்று ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று.
மூன்றாவது முறையாக Patchwork அமைப்பிற்கு நிதியளிப்பதற்காக அடங்காப்பற்று அரங்கேற்றப்பட்டது. போரின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி, அவையங்களை இழந்து, தனித்து இயங்கமுடியாமல் இருக்கும் எம் உறவுகளுக்கு உதவி வழங்கிப் பராமரித்து வரும் அமைப்புத்தான் Patchwork. கடந்து மூன்று வருட்களாகச் செயற்பட்டு வரும் இந்த அமைப்பு முழுமையாக மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பின் செயற்பாட்டுக்கு உறுதுணை வழங்குவதற்காக, ரசனா நடனப்பள்ளி 2013இல் அடங்காப்பற்று என்ற தொனிப்பொருளில் நாட்டிய நாடகத்தை வழங்கியது. இது ரசனா நடனப்பள்ளியின் நீண்டநாள், கடின உழைப்பின் ஆறாவது அரங்கேற்றம்.
19.10.2013 அன்று மாலை 6.30 Hurstville Entertainment Centre (Sydney) இல் நிகழ்வு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆறு மணிக்கே கூட்டம் கூடத்தொடங்கிவிட்டது. தமிழர்கள் மட்டுமல்ல, கணிசமான அளவில் வேற்று இனத்தவர்களும் வந்திருந்தார்கள். ஈழத்தமிழர் மீது அபிமானம் கொண்ட பசுமைக்கட்சியின் (Green Party) உறுப்பினர்களும் வருகை தந்திருந்தார்கள்.

அவுஸ்திரேலியக் கம்பன் விழா 2013 - மெல்பேர்ண் 03/11/2013



சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரமாவதற்கு  tamilmurasu1@gmail.com  or   paskiho@hotmail.com , karunalojana@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்


16 - 11 - 2013           Sat      யூனியன் கல்லூரி Fun Night 2013 at Yaarl Function Centre மாலை                                             6.31 மணிக்கு

17 - 11 - 2013           Sun      தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பழைய மாணவர்
                                              சங்கத்தின்   நிகழ்வு

24 - 11 - 2013           Sun      மானிப்பாய் இந்து/மகளிர் பழைய மாணவர்
                                              சங்கத்தின்   நிகழ்வு
30 - 11 -2013            Sat      Trinco X,Mas celebrations  6.30 pm to 10.30 at St Anthony Church Hall
                                              27-33 Aurelia Street, ToongabbieToongabbie

08 - 12 - 2013          Sun   AMAF proudly presents
                                          முத்தமிழ் மாலை  at 5.30PM.

2014

08 - 03 - 2014          Sat      Vembadi Girls' High School 175th Anniversary celebration 

22 - 03 - 2014           Sat      UNSW Anjali Tamil Society proudly presents "Oli Olli 2014"

23 - 03 - 2013           Sun    UNSW Anjali Tamil Society proudly presents "Oli Olli 2014"

29 - 03 - 2014          Sat     Abayakaram proudly presents their Annual Program
                                            விபரம் பின்னர் தரப்படும்

05 - 04 - 2014             Sat     Anbaalayam Musical and Talent Contest, Bowman Hall, Blacktown

16 - 08 -  2014  -         Sat     Musical concert by Dr. Myuri Kantharajah 



மெல்பேர்ணில் நடைபெறும் நிகழ்வுகள்

23 - 08 -  2014  -         Sat     Musical concert by Dr. Myuri Kantharajah விபரம் பின்னர் தரப்படும்

சிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.

திரும்பிப்பார்க்கின்றேன் 12 ---முருகபூபதி

.
பன்மொழி  அறிஞர்  தமிழ்  தூதுவர்  தனிநாயகம்  அடிகளார்

இந்தியாவை  தாய்நாடென்றும்  இலங்கையை  சேய்நாடென்றும்    காலம்  காலமாக கூறிவருகிறார்கள்.  இந்த  சேய்  நாடு  பலவிடயங்களில்  இந்தியாவுக்கு  முன்மாதிரியான  நாடென்று  மட்டும்  எவரும்  சொல்ல  முன்வருவதில்லை.
பல  நூறு ஆண்டுகளுக்கு  முன்னர்  வந்த  கடற்கோள் அநர்த்தத்தில்  இந்த இரண்டு நாடுகளும்  கடலால்  பிரிக்கப்பட்டுவிட்டன.  அதனால்  இன்றும்  தொப்புள்கொடி உறவு  பற்றி  பேசப்படுகிறது.
ஐதீகத்தின் பிரகாரம்  ஹனுமான்தான்   இலங்கைக்கான  முதலாவது  தூதுவர்.  இலங்கைவேந்தன்  இராவணனிடமிருந்து  சீதையை  மீட்பதற்காக  இராமனால்  தூது அனுப்பப்பட்ட  ஹனுமானின்    வாலில்  இராவணனின்  படையினர் தீவைத்தமையால்  இலங்காதகனம்  நடந்தது. 
ஹனுமான்  கூட Bush Fire  (காட்டுத்தீ)  சூத்திரதாரியாக இருந்திருக்கிறார்.
இலங்கையில்   இனப்பிரச்சினை   கூர்மையடைந்து   இனவிடுதலைப்போராட்டமாக வெடித்து  இனச்சங்காரம்   தொடங்கியதும்  1983 இல்  இந்திராகாந்தியினால்  முதலில்  அனுப்பப்பட்ட  தூதுவர்  நரசிம்மராவ்.  பிறகு  ஜி. பார்த்தசாரதி.  அதன்பிறகு  பலர்  பேச்சுவார்த்தை  நடத்தும்   தூதுவர்களாக  வந்து வந்து  போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைச் செய்திகள்


யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை 26வது நினைவு தினம்

தெவிநுவர தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரணிலின் செயலாளர் உட்பட 6 பேர் கைது

மட்டு.வில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரிப்பு -டாக்டர் சித்ரா கலமநாதன்

 கொழும்பில் ஆரம்பமானது ஹலாலுக்கு எதிரான சேனாவின் பேரணி

 புதிய கட்டடத்தில் வட மாகாண சபையின் கன்னி அமர்வு நாளை

 விரிவுரையாளர்களின் சேவை 70 வயது வரை நீடிப்பு


--------------------------------------------------------------
யாழ். போதனா வைத்தியசாலை படுகொலை 26வது நினைவு தினம் இன்று(21/10/2013)
jaffnahospitalயாழ். போதனா வைத்தியசாலையில் கடமை நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களின் நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (21) அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ஒக்டோபர் மாதம் 21ம், 22ம், திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்து மீறி உள் நுழைந்த குழுவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், வைத்தியசாலை பணியாளர்கள், மற்றும் நோயாளிகள் என 68க்கும் மேற்பட்டவர்கள் அன்றைய இரு தினங்களிலும் படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய தினம் கடமையில் இருந்தவேளை படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பணியாளர்கள் 21 பேரின் நினைவாகவும் ஒவ்வொரு வருடமும் அவர்கள் படுகொலையான கட்டடத்தில் உள்ள அவர்களின் உருவப்படங்களுக்கு முன்பாக நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் அவர்களின் 26 நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. இன்றைய இந்த நிகழ்வில் 21 ஊழியர்களின் உருவப் படங்களுக்கும் மலர்மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா, பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா, வைத்தியர்கள் தாதியர்கள், பணியாளர்கள். மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர். நன்றி தேனீ 

மீண்டும் மரண பூமியாகும் யாழ்.குடாநாடு - -எஸ். நதிபரன்

.
எறிகணைகளின் முழக்கங்களும் வேட்டோசைகளின் இரைச்சல்களும் வடபுலத்தின் புலர்வை நிச்சயப்படுத்திய காலம் மறைந்து செல்பேசிகளின் சீண்டல்களுடன் வலைத்தளங்களில் குறிப்பாக முகநூல்களின் அரவணைப்புக்களுடன் பொழுது புலரும் இவ்வேளைகளில் மீண்டும் அவல மரணங்களின் பதிவுகள் குடாநாட்டை அச்சுறுத்தி வருகின்றன. அமைதியான நிலையிலிருந்து ஆதூரமான நிலைக்கு கடந்துபோன சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலை ஞாபகப்படுத்தி நிற்கின்றன.

யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் காங்கேசன்துறை வீதியின் மேற்குப் பக்கத்தில் நாச்சிமார் அம்மன் கோயில் அமைந்துள்ளது. 

அக்கோயில் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள தேர்முட்டிப் பகுதியில் நிறைந்த சனக்கூட்டம். இம்மாதம் 16ஆம் திகதி புதன்கிழமை மாலைக் கருங்கல்லில் எனது மோட்டார் வண்டி அவ்வீதி வழியே விரைந்து கொண்டிருந்தது. 

வீதியின் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு அகல விரித்துப் பார்வையை கூர்மைப்படுத்தியபடி விரைகிறேன். ’என்ன...என்ன....என்ன பிரச்சினை ஏதேனும் அக்சிடனனே!’ என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி கூட்டத்தை சற்று விலக்கி அந்தக் கோரக் காட்சியைக் காண்கிறேன். கண்டபோது என்மனம் திடுக்குற்றது. சித்தபேதமிழந்து அப்படியே அந்தச் சனக்கூட்டத்துக்குள்ளே ஒருகணம் உறைந்து விடுகின்றேன்.

காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்

.

estate tamil"எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைபடுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை" - இது களுத்துறை மாவட்டத்தில் அரம்பஹேனவில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.
ஹொரணை பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள் வாழ்வதாகவும் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பெரும்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கேசரிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.
ஆம்! புளத்சிங்ஹல நகரிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் கரடுமுரடான பாதையில் அரம்பஹேனவுக்கு பயணித்தோம். சுமார் 10 கிலோமீற்றர் பயணத்தின் பின்னர் இருபுறமும் அடர்ந்த காடுகள் நிறைந்திருக்க வேறெங்கோ தேசத்துக்கு வந்துவிட்டதுபோன்ற உணர்வு.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்

.

இலங்கையில்  நீடித்த  போர்  அநர்த்தங்களினால்  பெற்றவர்களை  இழந்த  ஏழைத்தமிழ்  மாணவர்களின்   கல்வி   வளர்ச்சிக்கு  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவிவரும்  இலங்கை   மாணவர்  கல்வி  நிதியத்தின்   வருடாந்த  ஆண்டுப்பொதுக்கூட்டம்  நிதியத்தின்   செயலாளர்  திரு. செ. கொர்ணேலியஸ்  அவர்களின்   தலைமையில்  அண்மையில்   மெல்பனில்  வேர்மண்ட்  சவுத்  சமூக  மண்டபத்தில்  நடைபெற்றது.
நிதியத்தின்   தொடக்ககால  உறுப்பினர்  அமரர்  மருத்துவர்  இராசநாயகம்,  தமிழ்  அகதிகள்  புனர்வாழ்வுக்கழகத்தின்  ஸ்தாபகர்  அமரர் கே. கந்தசாமி,  கிழக்கு  பல்கலைக்கழக  முன்னாள்  துணைவேந்தர்  அமரர்  பேராசிரியர்  ரவீந்திரநாத்  ஆகியோரின்   உருவப்படங்களுக்கு  விளக்கேற்றியதையடுத்து   நிகழ்ச்சிகள்  ஆரம்பமாகின.


கடல் சிரித்தது - எஸ்.அகஸ்தியர்

.


மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்துபிணமாகக் கிடந்தான்அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்துபோய்க்கிடந்தன.

மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும்கடல் அலைகளின் முரட்டுமோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில்சதா மோதிக்கொண்டிருந்தது.

காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டனஇன்னும் அதன் நாற்றம்'வெடில்அந்த ஊரை உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது.

'பாவம்நாலு வருடங்களுக்குமுன்அடைக்கலமாதா கோயிலில் அவனைத் தன்நாயகனாகச் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட மேரியைக்கூடத் தவிக்கவிட்டு அவன் செத்துப்போய்விட்டான்.'

'நாசமாய்ப் போக அவள்தான் அவனுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டாள்.அதுதான் அவன் கடலில் விழுந்து செத்துப்போய்விட்டான்'.

'பொய்சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா?'

'மாஞ்சோலை வேதசாட்சி கோயிலிலே போய்ப்பார் அப்போ தெரியும் பொய்யா,மெய்யா என்பது.'

இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...!!’

.
சரிப்பட்டு வாரத பார்ட்டி யார் தெரியுமா நம்ம வடிவேலு தான். 1 மணி நேரத்துக்கு இவ்வளவு என கால்ஷீட் கொடுத்து கோடி...கோடியாய் சம்பாதித்த வடிவேலுவை வைத்து படமெடுக்க இன்று யாரும் தயாரில்லை. காரணம் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் வந்த வினை. தேர்தல் நேரத்தில் இப்படியும் நடந்திருக்கலாம் என்று கற்பனையாக எழுதப்பட்ட நகைச்சுவை படைப்பு... நகைசுவை என்றும் ரசிக்கதக்கதே என்பதால் பதிவாக உங்கள் முன்...

பிரச்சாரத்திற்கு மேக்-அப்போடு கிளம்பிய வடிவேலு, வேனில் ஏறுவதற்காக காலை எடுத்து வைத்த போது தான் அந்தப் பேச்சுச் சத்தம் கேட்டது.

“இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...”ன்னு திமுக துண்டைத் தோளில் போட்டுக் கொண்டி ருந்தவர் கிசுகிசுத்துக் கொண்டிருந் தார். வடிவேலுவுக்கு தாங்க முடியவில்லை. வைத்த காலை பின்னுக்கு இழுத்தவர், அவர்க ளுக்கு அருகில் வேகமாகப் போய் நின்றார்.

GUN & RING

.

அடையாளங்களை அழிக்கலாமா?

.

அருண். மோ
unnaipol oruvanunnaipol oruvan-jபுதிய தமிழ் படங்கள் தொடர்ச்சியாக ஒரு தவறைச் செய்துவருகின்றன. பழைய தமிழ்ப் படங்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருவதுதான் அந்தத் தவறு. இது அத்தனை ஆரோக்கியமானது அல்ல. இதில் உள்ள நுட்பமான அரசியலும், வியாபாரத் தன்மையும் மிக ஆபத்தானவை. எம்.ஜி.ஆரின் படங்களை வெவ்வேறு நடிகர்கள்,ரஜினி தொடங்கி விஜய் வரை தொடர்ச்சியாகத் தங்கள் படங்களுக்குச் சூட்டிக்கொள்கிறார்கள். எப்போதும் போல் இதிலும் கமல் முன்னோடியாகவே இருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன், உன்னைப் போல் ஒருவன் என்று அவர் பயன்படுத்திய பழைய படங்களின் தலைப்புகளுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உன்னைப் போல்ஒருவன் என்று ஒருவர் ஜெயகாந்தனின் படத்தைத் தேடினால், அவருக்குக் கமலின் படம்தான் கிடைக்கும். ஜெயகாந்தனின் திரைப்படம் பற்றிய தகவல் கிடைக்காமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.

ஆய்வு செய்பவர்கள், வெளிநாட்டில் இருந்து தமிழ் திரைப்படங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் வரும் பலநண்பர்களுக்கு, படத்தின் பெயரைத் தாண்டி வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை என்றால், அவர்கள் தேடும் படங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. உதாரணமாக, கே. ராம்நாத்தின் மனிதன் திரைப்படத்தை அதன் உள்ளடக்கத்திற்காக ஒருவர் தேடினால், ரஜினிகாந்த் நடித்த மனிதன் திரைப்படம்தான் அவருக்குக் கிடைக்கும்.

படித்தோம் சொல்கிறோம் -ரஸஞானி

.
கவிஞர் செ. கதிரேசர்பிள்ளையின்  பாரதம் தந்த பரிசு

நடிப்பதற்காகவே   எழுதப்படும்,  படிப்பதற்காக  மாத்திரம்  எழுதப்படும்,  நடிப்பதற்கும்  படிப்பதற்கும்  எழுதப்படும்  நாடகங்கள்  என்று  மூன்றுவகைகள்  இருப்பதாக  ஒரு  சந்தர்ப்பத்தில்  பேராசிரியர்  மு.வரதராசன்  குறிப்பிட்டார்.
நாடகங்களை  எழுதினால்  நடிக்கமாத்திரமே  முடியும்.  படிப்பதற்காக  நாடகங்கள்  எழுதமுடியாது   எனச்சொல்லும்  விமர்சகர்களும்  இருக்கிறார்கள்.  ஒரு  காலத்தில்  தமிழ்  சினிமாப்;படங்களின்   கதை,  வசனங்கள்  கையிலே  சுருட்டக்கூடிய  பருமனில்  சிறு  நூல்களாக  வெளியாகின.  அவற்றைப்படித்துப்பாடமாக்கி  பாடசாலைகளிலும்  மற்றும்  பிரதேச   சனசமூகநிலையங்கள்   ஊர்   மன்றங்களில்   நாடகம்  நடித்திருக்கிறார்கள்.
 குறிப்பாக  வீரபாண்டிய கட்டபொம்மன்   (வசனம்  சக்தி கிருஷ்ணசாமி)  இரத்தக்கண்ணீர்  (வசனம்  திருவாரூர் தங்கராசு)  திரைப்பட  வசனத்தை  வைத்துக்கொண்டு  நடித்திருக்கிறார்கள்.
  வரி, வட்டி, திறை,  வானம் பொழிகிறது…பூமி விளைகிறது… வயலுக்கு  வந்தாயா ஏற்றம்   இறைத்தாயா…அங்கு கொஞ்சி  விளையாடும்  எம்குலப்பெண்களுக்கு  மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா?   மாமனா   மச்சானா.... என்று  பாடசாலைக்காலத்தில் கட்டபொம்மன்   வசனம்  பேசிய  பலர்  எம்மத்தியில்  இருக்கிறார்கள்.


உலகச் செய்திகள்

துருக்கியில் 6 இலட்சம் சிரிய அகதிகள்

கனடாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி தமிழ் மாணவர் பலி

 நவாஸ் - ஒபாமா பேச்சு

 ஆசிரியையை அடித்துக்கொன்ற மாணவன்: அமெரிக்காவில் சம்பவம்

-----------------------------------------------------------------------------------------------------
துருக்கியில் 6 இலட்சம் சிரிய அகதிகள்

21/10/2013   துருக்கியில் இதுவரை 6 இலட்சத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களுக்கு வெளியே வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
இத்தகவலை துருக்கி நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கழகம் வெளியிட்டுள்ளது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.பத்மஸ்ரீ பட்டம் தர வலியுறுத்தி..

.

இறக்கும் மனிதர்கள்.. இறவாப் பாடல்கள் என்று அடிக்கடி கூறும் ஒரு மனிதர்!


Music.   Sound,  Voice  =  M.S.V.

நவீன உலகில் இசை உருவாக்கம் என்பது கணிணி சார்ந்த ஒன்றாகிவிட்டது.

அன்றைய காலக்கட்டத்தில்.. எல்லாமே அந்த ஆர்மோனியக் கட்டைக்குள் இருந்துதான்.. அப்படியென்றால் இசைக்கலைஞனின் மூலையிலிருந்துதான்.. முழுக்க.. முழுக்க..

அப்படி.. இசையை கேள்வியறிவின்மூலம் பெற்று.. முன்னணி இசையமைப்பாளரிடம் உதவியாளராய் பணிபுரிந்து.. தனது ஞானத்தால், தெய்வ அருளால், பெரியவர்களின் ஆசியால்.. காலம் கனிந்திட.. கண்ணதாசன் முதலான மாபெரும் கவிஞர்களின் பாடல்களுக்கெல்லாம் உயிர்கொடுத்த இசை வழங்கி.. ஆயிரக்கணக்கில் பாடல்களுக்கு இசையமைத்து நூற்றாண்டு சாதனை படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.. இந்திய அரசின் அங்கீகாரம் என்பது பற்பல காரணங்களால் கிட்டாமல் இருக்கிறது.  இதனை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறோம்.  நமது உணர்வுகளை ஒன்றுதிரட்டி.. அவருக்காக .. அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் தர வலியுறுத்தி.. கீழ்க்காணும் இணையதளத்தில் உங்கள் பதிவுகளை வழங்கிட வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் சினிமா

6 மெழுகுவர்த்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எப்படியாவது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் '6 மெழுகுவர்த்தி' படத்தை தயாரித்து, நடித்துள்ளார் ஷாம்.
ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள்.
தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.
காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர்.
அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது தெரிய வருகிறது.
இதற்கு பொலிஸ் எந்த உதவியும் செய்ய முடியாத சூழலில் தன் மகனைத் தேடி ஷாமே அலைகிறார்.
குழந்தையை மாநிலம் மாநிலமாக மாற்றி மாற்றி கொண்டு செல்கிறது கடத்தல் கும்பல். அந்த கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்து பின்தொடர்கிறார் ஷாம்.
கடைசியில் தன் மகனை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தாரா? என்பது மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஷாம்.
இந்த படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார். இதற்காக இவர் கடினமாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. மகனை இழந்த தந்தை படும் வேதனைகளை தன் நடிப்பால் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஷாம்.
மகனை இழந்து தாய் படும் வேதனையையும், வலியையும் தன் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் பூனம்.
குறிப்பாக தன் மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒரு பிச்சைக்காரன் காலைப் பிடித்து கெஞ்சும் காட்சி திரையரங்குகளில் உள்ளவர்களின் கண்களை கலங்க வைக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமல்ல, இப்படிபட்ட படங்களுக்கும் இசையமைக்க தெரியும் என நிரூபித்திருக்கிறார்.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் ஒரு பலம்.
கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் வி.இசட். துரை. வித்தியாசமான கதைக் களத்தோடு ஷாமோடு இணைந்திருக்கிறார்.
இந்த படத்திற்காக நீண்ட நாட்கள் உழைத்திருப்பது தெரிகிறது. தன் மகனுக்காக தன் வாழ்கையையே தொலைக்கும் தந்தை, நல்ல மனிதனுக்கு தவறு செய்துவிட்டோமே என்று வருந்தி கடைசி வரை கூடவே இருந்து உயிரை விடும் டிரைவர் என படம் முழுக்க அழுத்தமான கதாபாத்திரங்களை அருமையாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ்.
ஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்‌லையே! நம்மை உருக்கிவிடுகின்றது!
நடிகர் : ஷாம்
நடிகை : பூனம்
இயக்குனர் : வி.இசட்.துரை
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு : கிருஷ்ணசாமி
நன்றி விடுப்பு


ராஜா ராணி

ஒரு திருமணம், இரண்டு காதல் கதைகள் என்ற கவித்துவமான பின்னணியில் அழகாக அரங்கேறியுள்ளது ராஜா ராணி.
ஜான், ரெஜினா இருவருக்கும் சர்ச்சில் திருமணம் நடக்கிறது. அவர்களின் முகபாவனையிலிருந்தே தெரிகிறது இந்த திருமணத்தில் இருவருக்குமே விருப்பமில்லையென்பது.
இஷ்டமில்லாமலே எலியும், பூனையுமாக புது அப்பார்ட்மெண்ட்டில் குடிபுகுந்து நொடிக்கொரு சண்டை, நிமிஷத்துகொரு முறைப்பு என்று ஆளுக்கொரு திசையில் போகிறார்கள்.
திடீரென்று ஒருநாள் ரெஜினாவிற்கு வலிப்பு வந்து சரிய ஜான் பதறிப்போய் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.
அங்கிருந்து தொடங்குகிறது ரெஜினாவின் முந்தைய வாழ்க்கைக் கதை.
காதலன் சூர்யா இறந்து போன துக்கத்தில் இருந்த ரெஜினவை சமாதனப்படுத்தித் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார் அப்பா என்பதை தெரிந்து கொள்கிறான் ஜான்.
ரெஜினாவின் கதை கேட்டு உருகிப்போன ஜான் அவளிடம் அன்பு காட்ட முயல, மீண்டும் முட்டல் மோதல் தொடங்குகிறது.
ஜானின் நண்பன் சாரதி ரெஜினாவை சமாதானப் படுத்தி ஜானின் காதல் பற்றியும், அவனின் காதலியின் நிலை பற்றியும் சொல்ல, ரெஜினா இளகிப்போகிறாள்.
இதற்கிடையில் இறந்து போனதாக நினைத்த சூர்யா உயிரோடு இருப்பது தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து ஜானும், ரெஜினாவும் இணைந்து வாழ்ந்தார்களா என்ற  மீதிக்கதையுடன் படம் நகர்கிறது.
அடர்த்தியான கதையுடன், ப்ரேம் பை ப்ரேம் உணர்ச்சிக் குவியலுடன் இப்படி ஒரு படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது.
ஜான் கேரக்டரில் ஜாலி பையனாக வரும் ஆர்யா சின்னச்சின்ன அசைவுகள் மூலம் அனாயசமாக நடித்து அசத்துகிறார்.
ஒரே வீட்டில் நயன்தாராவிடம் அவர் செய்யும் குறும்புகளாகட்டும், இரண்டாம் பாதியில் நஸ்ரியாவை காதலித்து கண் கலங்குவதாகட்டும் எல்லாமே ‘ஏ’ க்ளாஸ்.
ரெஜினாவாக நயன்தாரா அட்டகாசமாய் தன் 3வது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.
அதுவும் இதுவரை வந்த படங்களிலேயே அவரது பெஸ்ட் பெர்பார்மென்ஸ் இதில்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜெய் போன்ற இளம் நடிகருடனும் இயல்பாய் ஜோடியாய் தெரியும் அவரது குறையாத இளமை அழகு இன்னொரு ப்ளஸ்.
கோபத்தில் காதைப் பொத்திக்கொண்டு இருந்தவர் திடீரென கண்கள் சொறுக, கீழே விழுந்து துடிக்கும் இடம். நடிகையாய் முத்திரை பதிக்கிறார்.
காருக்குள் அப்பா சத்யராஜோடு அமர்ந்து கொண்டு தன்னை விட்டுவிட்டு அமெரிக்கா போன காதலனை நினைத்து வாய் பிளந்து அழும் இடம் அசத்தல் நடிப்பு.
ஜெய் எங்கேயும் எப்போதும் கதாபாத்திரத்தை இங்கேயும் தொடர்கிறார்.
கால் சென்டரில் வேலை பார்ப்பவராய் அவர் நயன்தாராவிடம் படும் பாடு இருக்கே கலகலப்பின் உச்சம்.
நான் எங்கப்பாவுக்கு மட்டும்தாங்க பயப்படுவேன் மத்தபடி ஜ லவ் யூ என சொல்லும் டயலாக் அவரது மொத்த கதாபாத்திரத்தையும் காட்டுகிறது.
நஸ்ரியா நஸீம் நேரம் படத்தையடுத்து அவருக்கு வந்திருக்கும் பெரிய படம். ஆர்யாவை ப்ரெதர் என்று அழைத்து சுத்தல்ல விட்டு காதலிக்கிறார்.
நைட்டியை பின்புறமாக தூக்கிக் கொண்டு குத்தாட்டத்தோடு அறிமுகமாவது இயல்பான நடிப்பு.
சந்தானம் பல அழகான டைமிங் டயலாக்குகளால் படத்தை நிரப்பியிருக்கிறார். வலிய திணிக்காமல் இயல்பாய் இருந்திருப்பது பிளஸ்.
ஜி.வி.பிரகாஷின் இசை டைட்டான கதைக்குள் ரிலாக்ஸ் பண்ண வைக்கிறது.
படத்தின் இன்னொரு பெரிய பலம் என்று சொல்லலாம். ஒரு ரொமான்டிக் படத்தை படம் முழுவதும் ஒரு விதமான கலகலப்பை ரொமான்டிக் மியூசிக்கலாக்கியிருக்கிறார்.
சத்யராஜ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அளவெடுத்து தைத்தது போல் கம்பீரமாக வருகிறார்.
அட்லி குமார், ஷங்கரால் பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அவரது உதவி இயக்குனர், இதில் இயக்குனராய் அறிமுகம்.
ஒரு காதல் கதையில் இத்தனை ரிச்னெஸை கொண்டு வந்திருப்பதிலேயே நான் ஷங்கரின் அஸிஸ்டென்டாக்கும் என காட்டுகிறார்.
கணவன் மனைவியாய் ஆர்யா நயன்தாரா இருவருக்கும் இடையேயான மோதல்களை கண்ணாடியில் காட்சிப்படுத்தியிருப்பது அருமை.
ஆனால் அதைத்தவிர இயல்பான இறுக்கத்தையும், தவிப்பையும் தர வேண்டிய அழுத்தமான காட்சிகளை அமைக்கத்தவறி விட்டார்.
மேட் பார் ஈச் அதர்னு யாருமே கிடையாது வாழ்ந்து காட்டனும். காதலிக்கிறப்ப தண்ணியடிச்சா லவ் பெயிலியர் அவனே கல்யாணத்துக்கு அப்புறம் அடிச்சா லைபே பெயிலியர் இப்படி பல இடங்களில் வசனகர்த்தா கதாபாத்திரத்தையும், கதையையும் இன்னும் பலப்படுத்தி ஸ்கோர் பண்ணுகிறார்.
கண்டதுமே காதலா என தோன்றினாலும் இரண்டு ப்ளாஸ்பேக்குகளை அழகாய் சொல்லி நிறைவினை தந்துள்ளார் இயக்குனர்.
ஒரு கலகலப்பான, அழகான காதல் கதையாய் எடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் அரசவையை திருவிழாக் கோலமாக மாற்றியுள்ளனர் ராஜா ராணி.
நடிகர்: ஆர்யா, ஜெய்
நடிகை: நயன்தாரா, நஸ்ரியா நசீம்
இசை: ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு: ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ்
தயாரிப்பாளர்: ஏ,ஆர்,முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்
இயக்குனர்: அட்லி
நன்றி விடுப்பு