மரண அறிவித்தல்


பிறப்பு: 22-05-1933                            இறப்பு: 01-08-2021
         
திரு. குணரத்தினம் கார்த்திகேசு

Retired Asst Director of Agriculture, North-East Province, Sri Lanka

National Consultant UN/FAO, Sri Lanka

வயது- 88

Jaffna, Colombo and Sydney Australia 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குணரத்தினம் கார்த்திகேசு அவர்கள் 01/08/2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான கார்த்திகேசு, இராசம்மா தம்பதியினரின் ஏக புதல்வரும், காலம் சென்றவர்களான தம்பிப்பிள்ளை, தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும், கருணேஸ்வரியின் அன்புக் கணவரும்,
சுரேகா, சுரேந்திரா, பாலேந்திரா, சத்தியேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகுமார், நிக்கி, ஹேமலதா, ஹொங், சோபனா, ஆகியோரின் அன்பு மாமனாரும், காலம் சென்ற மகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலம் சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலம் சென்ற கமலேஸ்வரி, காலம் சென்ற மகேஸ்வரி , சிவனேஸ்வரி, காலம் சென்ற சிவலிங்கம் , லீலாநந்தேஸ்வரி, காலம் சென்ற திருநாவுக்கரசு, ரெட்ணேஸ்வரி, காலம் சென்ற தனலெட்சுமி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

Dr.சரணியா, ஷோபியா, சரண், ரூபேஷ், ஆதேஷ், சொபியா, ரயன், சனந்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIP book ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும். அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் இணையம் வழியாக பார்வையிடுவதற்கு கீழே உள்ள இணைப்பைத் தொடர்புகொள்ளவும்.

pin: 3365

தகவல் – குடும்பத்தினர்


கிரியை மற்றும் தகனம்

9th August 2021 (Monday)

Time: 9.00AM - 11.45AM (Sydney time)

Magnolia Chapel Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi and Plassey Roads North Ryde NSW 2113

தொடர்புகளுக்கு
சுகுமார்:                   +447789681407

சுரேந்திரா:              +61447246857

பாலேந்திரா:          +61490778630
சத்தியேந்திரா:      +61488038639
கஜேந்திரா:             +61403112031

 

அன்புவெனும் ஊற்றெழுந்தால் ஆனந்தம் பெருக்கெடுக்கும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா


மறைவாகப் பேசுவதும்
குறை கூறிப் பேசுவதும்
மாண்பற்ற செயலென்று 

மனமிருத்தல் அவசியமே
கண்டவுடன் கைகூப்பி 
களிப்புடனே பேசிவிட்டு
சென்றபின்பு புறம்பேசல்
சிந்தைவிட்டு அகற்றிடுவோம் !


அகமிருந்து அன்பெழுந்து
அணைத்திடலே அறமாகும்
அகமுறையும் ஆணவத்தை
அகற்றிடலே முறையாகும்
கறைகொண்ட எண்ணமதை
கழற்றிடலே சிறப்பாகும்
நிறைவான நினைப்புகளை
நெஞ்சமதில் இருத்திடுவோம் !


இயன்றவரை இன்சொல்லை

எவ்விடமும் பேசிடுவோம்
ஏற்பில்லா வார்த்தைகளை
எங்குரைக்கா இருந்திடுவோம்
பூச்சொரியும் சோலைகளாய்
பொலிவுபெற நாமுரைத்தால்
வாட்டமெலாம் பறந்தோடி
வசந்தமங்கே வீசிநிற்கும் !

டோக்யோ ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஜப்பானியர்களின் 'ஒமோதெனாஷி' - 5 நெகிழ்ச்சி தகவல்கள்

டோக்யோ ஒலிம்பிக் நிறைவு விழா.

பட மூலாதாரம்,LEON NEAL / GETTY IMAGES

படக்குறிப்பு,

டோக்யோ ஒலிம்பிக் நிறைவு விழா.

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. டோக்யோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இதற்கான நிறைவு விழா நடந்தது. இந்த ஒலிம்பிக் தொடக்க விழா ஜூலை 23ஆம் தேதி நடந்தது.

டோக்யோ நகரின் இரவு வானில் வண்ணமயமான விளக்குகளும், வான வேடிக்கைகளும் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் வகையில் அமைந்தன. நடனம், இசை, சாகசங்கள் என்று ஜப்பானியர்கள் இந்த விழாவில் அசத்தி இருந்தனர்.

இந்திய அணிவகுப்பை வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடி ஏந்தி வழிநடத்திச் செல்கிறார்.

அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார் இலங்கை மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது ! முருகபூபதி

     நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய்


கள்ளத்தோணி என்கிறாங்க
   “-  இது மாத்தளை  கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும் வசனம்.

இலங்கைக்கு  60 சதவீதமான வருவாயை தேடித்தந்த உழைக்கும் வர்க்கத்திற்கு எங்கள் தேசத்து இனவாதிகள் வழங்கிய அடையாளம்தான் கள்ளத்தோணி.

 இனவாதிகள் மாத்திரமா..?

நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக வந்து


குவிந்த அகதிகளைக்கூட இங்கே அரசு தரப்பும்  வெள்ளை இனத்தவர்களும் Boat People – படகு மனிதர்கள் என்றுதான் நாகரீகமாக அழைக்கின்றார்கள்.

ஆனால்,    சில   நூறு வருடங்களுக்கு  முன்னர்  தமிழ்நாட்டிலிருந்து  அழைத்து வரப்பட்ட   இந்திய வம்சாவளித் தமிழர்கள்  - எங்கள் இலங்கை தேசத்தின் மலையகத்தில்   பசுமையை தோற்றுவிக்க,  காடுமேடு எங்கும் அலைந்து அட்டைக்கடி உபாதைகளுடன்  வாழ்ந்த  அந்த உழைக்கும் வர்க்கத்து மக்களுக்கு  வழங்கிய பெயர்கள் வடக்கத்தியான் – கள்ளத்தோணி.

இம்மக்களின் அடுத்தடுத்து வந்த தலைமுறையும் தென்னிலங்கை – வட இலங்கைக்கு வீட்டுவேலைக்காரர்களாக – பணிப்பெண்களாக இறக்குமதிசெய்யப்பட்ட  அவலத்தின் பின்னணியில்,  அவர்கள் வெறும்சோற்றுக்கே வந்தவர்கள்  என்ற சிறுகதையை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் எழுதிவைத்துவிட்டு, அவரும் மாத்தளை கார்த்திகேசு சென்றவிடத்திற்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் போய்ச்சேர்ந்துவிட்டார்.

வெறும்சோற்றுக்கே வந்தவர்களின் பிரதிநிதியான ஒரு  யுவதி எரிகாயங்களுடன் ஒரு முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து, அந்த பெண்ணுக்கு நீதிவேண்டும் என்று பரவலாக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் வேளையில் எங்கள் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் மறைவுச்செய்தி வந்திருக்கிறது.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 53 உயிர் காத்த உத்தமர்கள் இருவர் ! “ இலக்கியத்தோடு நின்றுகொள் “ எனச்சொன்ன ஒருவர் ! ! முருகபூபதி


வீரகேசரி வாரவெளியீட்டிலும் மித்திரன் வாரமலரிலும் எனது ஆக்கங்களை தொடர்ந்து படித்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஸி. மாணிக்கவாசகர் ஒரு நாள்  பம்பலப்பிட்டியில்  நடந்த எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டத்தில் எனக்கு புத்திமதிகள் சொன்னார். 

1983 கலவர காலத்தின் பின்னர் அப்போதுதான் 1984 ஆம் ஆண்டு,    மீண்டும்  நாம் கொழும்பில் சந்திக்கின்றோம். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீரா உட்பட பலர் தலைமறைவாகியிருந்தனர்.    அன்றைய அதிபர் ஜே. ஆர். ஜெயவர்தனா   அந்தக்கலவரத்திற்கான  பழியை எமது இயக்கத்தின் மீது சுமத்திவிட்டு உலகத்தின் கண்களை மூடுவதற்கு முயற்சித்தார்.

அவரது நண்பரான கொல்வின் ஆர். டீ. சில்வாவின் சமசமாஜக்கட்சி, மற்றும் பீட்டர் கெனமனின் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியனவற்றின்


மீதான தடை படிப்படியாக நீக்கப்பட்டது.  எனினும் மக்கள் விடுதலை முன்னணி மீதான தடை நீடித்தது.

எமது இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் லயனல் போப்பகே கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 

விஜேவீராவின் மனைவியின் அண்ணன் தோழர் எச். என். பெர்ணான்டோ தலைவராக இருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிகளில் என்னை  இழுத்துவிட்டவர்தான் இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிடும் ஸி. மாணிக்கவாசகர்.  அவர் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அதன் அதிபர் மகேசன், துணை அதிபர்  எஸ். பி. நடராஜா, பிற்பகலில் தொடங்கும் பாடசாலையின் அதிபர் சிவராசா ஆகியோரும் மாணிக்கவாசகரும் கொழும்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தவர்கள். பீட்டர் கெனமனுக்கும்  நெருக்கமானவர்கள்.  மாணிக்கவாசகர் , கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் துறை மற்றும் மத்திய குழு உறுப்பினர் ஸி. குமாரசாமியின் தம்பி.

 “ மாணிக்ஸ் “   இலக்கிய ஆர்வலருமாவார். அச்சமயம் அவர் தமது குடும்பத்தினருடன் பம்பலப்பிட்டி தொடர் மாடிக்குடியிருப்பில் வசித்துவந்தார்.

அவரது வீட்டிலும் எமது சங்கத்தின் கூட்டங்கள் நடக்கும்.

எனது இலக்கிய எழுத்துக்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து வந்தவர்.  பிரச்சினைகள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எச். என். பெர்ணான்டோவும் தலைமறைவாகி யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்.

இந்த ஆசிரியர் சங்கம் இலங்கையில் பலம்பொருந்திய தொழிற்சங்கம்.  சமகாலத்தில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்பு.  அரசுக்கு சவாலாக இருப்பவர்தான் இச்சங்கத்தின் தற்போதைய தலைவர் ஜோசப் ஸ்டாலின். இவர் தற்போது நாடாளுமன்றிலும் பேசுபொருள். இச்சங்கத்தில் அன்றே மூவினத்தவர்களும் இணைந்திருந்தனர்.

இச்சங்கத்தின் வெளியீடுகளான ஆசிரியர் குரல்  பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரும்  போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தேன்.

குடிசன மதிப்பீடு 2021 பற்றிய கலந்துரையாடல் - தமிழ் முழக்கம் , ATBC வானொலியில் ஒலிபரப்பானது

 .

குடிசன மதிப்பீடு 2021 பற்றிய தமிழ் முழக்கம் வானொலி மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபன வானொலி க் கலந்துரையாடலில் சமூக அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இம்மாதம்  10ம் திகதி  இடம்பெறும் குடிசன மதிப்பீட்டு  பத்திரத்தை தமிழர்கள் எப்படி நிரப்பினால் நல்லது  என்பது பற்றிய  பல காரணங்களை முன்வைத்துள்ளார்கள் அந்தக் காணொளி கீழே உள்ளது. 

நீங்கள் வீட்டில் பேசும் ஆங்கிலம் தவிர்ந்த மொழி என்ன ?

விடை - Tamil  

உங்கள் பூர்வீகம் என்ன ?  What is (Rajan's) ancestry?

விடை  - Sri Lankan Tamil  , Select - Other ancestry 1                Write -    Sri Lankan Tamil



                                                  https://fb.watch/7g9z9r45QJ/





பிள்ளை வளர்ப்பு - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணே சர்.

.



இன்று பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வளர்ப்பது பற்றியும் அதன் பலாபலன் பற்றியும் அதிகமாகப் பேசப்படுகிறது. இன்றய பெற்றோர் பலரும் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். இதனால் முன்பில்லாத மாதிரி இவர்களிடம் பணப்புழக்கம் அதிகம். இதனால்  தங்கள் வாரிசுகளான பிள்ளைகளுக்கு தம்மால் முடிந்த அத்தனை வசதிகளையும் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனை இவர்களிடம் வளர்ந்துள்ளது.

அதனால், பிள்ளைகள் பாடசாலைப் படிப்பின் பின் பல்வேறு விதமான பொழுது போக்குக் கலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இசை, நாட்டியம், நீச்சல், கால்பந்து, கிறிகெற்... இப்படியாக வகை வகையாக எத்தனையோ பயிற்சிகளுக்குப் போகிறார்கள். இவற்றைக் கற்றுக் கொடுப்பதால் தமது பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கை உன்னதமாக அமையும் எனப் பெற்றோர் எண்ணுகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு பல்வேறு பயிற்சிகளிலும் ஈடுபடுவதால் வீட்டில் வேறு எதையும் கவனிப்பதற்கு அவர்களுக்கு நேரம் வருவதில்லை. பல பெற்றோர் தமது குழந்தைகளுக்காகச் செலவு செய்யும் இந்தப் பணம் இவர்களின் கடும் உழைப்பால் தேடப்பட்டவையே. இருந்தாலும் இந்தச் செலவு பலராலும் அத்தியாவசியம் என்றே கருத்தப் படுகிறது.

பெற்றோர் இந்த பிரச்சினைகள் எதையும் பிள்ளைகளுடன் பகிர்வது கிடையாது. குழந்தையின் வெற்றியே தமது வெற்றி எனக் கருதும் பெற்ரோர்கள் இவர்கள். இதனையே எனது நண்பர் ஒருவர், ‘They live through their children' என்றார்.

முருகபூபதி என்ற நதி ! வற்றாத ஜீவநதி அதன் கரைகளை நனைத்து ஈரலிப்பாக்கி பயிர்களை வளர்க்கும் !! சட்டத்தரணி செ. ரவீந்திரன்


அரசியல் தலைவர்களைப்பற்றியோ அல்லது சில வரலாறுகளையோ எழுதலாமா? என்று அண்மைக் காலமாக நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, நான் வதியும் அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டு தமிழ் மக்களின் நன்மைக்கு குறிப்பாகவும் சமுதாயத்திற்கு பொதுவாகவும் தங்கள் வாழ்நாளை செலவிட்டுக்கொண்டிருப்பவர்கள் பற்றியும்  முதலில் எழுதினால் பிரயோசனப்படும் என்று  யோசித்தேன்.

அத்தகையவர்களைப்பற்றி சிந்தித்தபோது பலர் மனத்திரையில்


வந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும் முந்திக்கொண்டு எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான லெட்சுமணன் முருகபூபதி நின்றார்.

கடந்த மாதம் ( ஜூலை ) 13 ஆம் திகதி, முருகபூபதிக்கு 70 வயது பிறந்தது. அதனை நினைவுபடுத்தி எனது மனப்பதிவுகளை எழுதவேண்டும் என்று விரும்பினேன்.

அவரது  இந்த பிறந்ததின காலமும் முக்கியத்துவமாக இருந்தமையால் அவரையே எனது பதிவில் முன்னெடுப்பதற்கு திடமானேன்.

அவருக்காக அண்மையில் அவரது நண்பர்கள் மெல்பன் நடேசன் மற்றும் கன்பரா பிரம்மேந்திரன் ஆகியோர் இணைந்து நடத்திய நம்மவர் பேசுகிறார் என்ற இணையவழி மெய்நிகர் கலந்துரையாடல் அரங்கில்,  முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் பற்றியும்  இங்கு வதியும் எழுத்தாளரும் கலைஞரும் பாரதி பள்ளி என்ற  கல்விச்சாலையை பல வருடங்களாக இயக்கி வருபவருமான மாவை நித்தியானந்தன் உரையாற்றுகையில்,  “ முருகபூபதி மனிதாபிமானம் மிக்க மனிதன். அதற்கும் மேல் தனது உற்ற நண்பன்    என்று குறிப்பிட்டார்.

அவரது அக்கூற்றைக்கேட்டதுமே நானும் எனக்குள் ஒரு உள்நோட்டம் விட்டேன்.

முருகபூபதி,  என்னைப்பொறுத்தவரையில்,  எனக்கு யார்..?

எனது சக சமூகசேவையாளனா..? 

நான் பலசந்தர்ப்பங்களில் ஆலோசனை கேட்கும் ஒருவரா..?

நல்ல நண்பனா..? அல்லது குடும்பத்தில் ஒருவரா..?

அன்றில் ஒரு உடன்பிறவாத சகோதரனா..?