எமது சிட்னி முருகன் கோவிலை heritage value ஆக விடமால் தடைசெய்யவும்


.
ஒவ்வொரு 12 வருடங்களும் கும்பாவிஷேகம் செய்வதற்கு முன்னர் திருத்த வேலைகள் அல்லது புதிய வேலைகள் செய்ய முடியாதவாறு ஆக்கி விட முயற்சிக்கிறார்கள். இதை தடுப்பதற்காக உடனடியாக கீழே தரப்பட்ட கடிதத்தை நிரப்பி ஆகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் Holroyd City Council  க்கு  அனுப்பவும்.

ஹெலிகொப்டர் விபத்தில் இந்தோனேசியாவில் 10 பேர் பலி

 .

Friday, 05 August 2011

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய சுரங்கத் தொழில் கம்பனியொன்றுக்குச் சொந்தமான பெல் 412 ரக ஹெலிகொப்டர் ஒன்று கிழக்கு இந்தோனேஷியாவிலுள்ள மலைப் பகுதியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

வசந்தத்தின் சுமையாய் ...... செ பாஸ்கரன்


.
வசந்தகாலம் வந்துபோனபோது
வரவு சொல்லாது வந்த
குயிலின் பாட்டு
இன்றும் இனிமையாய்
என் காதில் ஒலிக்கிறது.
வாசம் வீசி வரவேற்ற 
வண்ண மலர்த்தோட்டம்
என்னை மட்டுமல்ல
வண்டுகளையும் 
கவர்ந்து கொண்டது
பூவிற்கு நோகாத புணர்தலில்
வண்டுகளின் ரீங்காரம்
முற்றும் இசையறிந்த
வீணை வித்துவானை விஞ்சிநிற்கும்
தேனுண்ட கழிப்பில் மதிமயங்கி
காதல் சுகமென்று
தன்காதலின் அனுபவத்தை
என் காதில் பகிர்ந்து கொள்ளும்
வசந்தத்தின் வருகையோடு
அவள் வருவாள் என
காத்திருந்த எனக்கு
வசந்தம் வந்துபோன 
நினைவுகள் மட்டுமே 
நெஞ்சின் சுமையாய் இருக்கிறது. 


‘மகத்தான சேவையாற்றிய பேராசிரியர்’


.

மெல்பன் இரங்கல் கூட்டத்தில் தமிழ்அறிஞர் சிவத்தம்பிக்கு புகழாரம்
“இலங்கையில் சமீபத்தில் மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் மொழிக்கும் திறனாய்விற்கும் மட்டுமல்லாது தமிழ் மக்கள் இன்னலுற்ற காலப்பகுதியிலும் சிறந்த தொண்டனாக வாழ்ந்தவர். அவரது மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு” – என்று கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் உரையாற்றியவர்கள் ஏகமனதாக குறிப்பிட்டனர்.


இலங்கைச் செய்திகள்

.
ஊடகத்துறையினரை அராஜக நடவடிக்கைகளால் முடக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் கண்டனம்
Tuesday, 02 August 2011 

 உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை இ.தொ.கா.வன்மையாகக் கண்டிப்பதாக இ.தொ.கா.தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.


பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு சரியான தகவல்களை உரிய வடிவத்தில் வழங்குகின்ற ஊடகத்துறையினரை அராஜக செயற்பாடுகளினால் முடக்குவது வேதனை அளிப்பதுடன் கண்டிக்கத்தக்க விடயமுமாகும்.

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - பரிசளிப்பு நிகழ்ச்சி 13-08-2011

.
இவ் வருடம் நடைபெற்ற ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி துர்க்கை அம்மன் கோவிலில் புதிதாக திறக்கப்படவிருக்கும் மண்டபத்தில் 13-08-2011 ம் திகதி சனிக்கிழமை மாலை 5.45 மணிக்கு நடைபெற உள்ளது.மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 3


.
                                                                                      பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


சொந்த உறவுக் காதல்

பிறப்பிலேயே மச்சான்-மச்சாள் உறவுமுறை அமைந்துவிட்ட  இருவருக்கு
இடையிலான காதல் சம்பந்தமான பாடல்கள் சிலவற்றின் தொகுப்பை இவ்வத்தியாயத்தில் காணலாம்.

அவன் முறை மச்சான்.  தன் சொந்த மச்சாளைக் காதலிக்கிறான்.  அவளும் அவனில் உயிரையே வைத்திருக்கின்றாள். சிறு வயதிலே இருவரும் சேர்ந்து விளையாடியதுண்டு என்றாலும் அவள் பருவ வயதை அடைந்தபின்னர் ஒருவரையொருவர் பார்த்துக் கதைப்பதற்கே பெரும் பாடாகவிருக்கிறது. அத்துடன் அவர்களிருவரதும் குடும்பங்களுக்குகிடையே சிறு மனத்தாங்கல். இருவரும் சந்திப்பதற்கு இப்போதிருக்கும் பிரச்சினையே அதுதான்.

தொன்னூறு வயதில் கலைவளன் சிசு.நகேந்திரன் ஒரு கலை இலக்கியவாதியின் வாழ்வும் பணியும் - முருகபூபதி

.
தொன்னூறு வயதில் கலை, இலக்கிய அமைப்பொன்றுக்கு தலைவராக ஒருவர் பணியாற்றும் தகவல் எம்மவர்களுக்கு சற்று வியப்பாகவிருக்கலாம். அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் சோர்வின்றி இயங்கிக்கொண்டிருக்கும் அந்த மூத்ததலைமுறை கலை, இலக்கியவாதி ஒரு காலகட்டத்தில் சில ஈழத்து தமிழ் திரைப்படங்களில் தோன்;றியிருக்கிறார். இம்மாதம் 9 ஆம் திகதி தமது 90 ஆவது அகவையில் காலடிவைக்கும் ‘கலைவளன்’ சிசு.நகேந்திரன் அவர்களைப்பற்றித்தான் இப்பத்தியில் குறிப்பிட விரும்புகின்றேன்.

நல்லூர் முருகன் கோவில் திருவிழா

.
நல்லூர் முருகன் கோவில் திருவிழா 04.08.11   கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
விமர்சையாக நடை பெற்று வருகின்றது .  27.08.11  ம் திகதி தேர்த்திருவிழா இடம்பெற இருக்கின்றது. திருவிழா விபரத்தை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
கொடிஏற்ற திருவிழாவின் காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது .
சிட்னியில் துர்கை அம்மன் ஆலயத்தில் மண்டப திறப்பு விழா

.

சிட்னியில் துர்கை அம்மன் ஆலயத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மண்டபம் ஆகஸ்ட் மாதம் பதின்மூன்றாம் திகதி மாலையில் கோலாகமாக திறந்து வைக்கப்பட இருக்கின்றது.அன்றைய தினம்  பல கலை நிகழ்ச்சிகள் புதிய மண்டபத்தில் இடம்பெற உள்ளது .  சிட்னி தமிழ் மக்களுக்கு ஒரு மண்டபம் இல்லையே என்று நீண்ட நாட்களாக இருந்த குறை அம்மன் அருளால் அன்றைய தினத்தோடு நீங்குகின்றது .அம்மன் கோவில் நிர்வாகத்தினரை மக்கள் பாராட்டுவதை காணக்கூடியதாக இருக்கிறது.சனல் 4 சந்தேகநபரிடமிருந்தது கைப்பற்றபட்டவை தமிழ் சினிமா பட சீடிக்கள்!

.
சனல் 4 தொலைக்காட்சிக்கு தகவல் வழங்கினார் எனக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞனை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டுள்ளார்.

கந்தவனம் ஜெகதீஸ்வரன் என்ற இளைஞனே இலண்டனில் இருந்து இலங்கைக்கு வந்த போது கடந்த மாதம் 4ஆம் திகதி கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அக்கூ குருவி - சிறுகதை - உஷா. வை


யூபோவான். பெங்களுரிலிருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் விமானம் யூ எல் ஒன்று ஏழு இரண்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்…”அறிவிப்பு தொடர்ந்தது. விமானப் பணிப்பெண் ஆபத்துகால வழிகளை சுட்டியபோது மட்டும் எதற்கும் இருக்கட்டும் என்று கவனித்துப் பார்த்துக்கொண்டேன்.
பக்கத்து இருக்கையில் இருந்த சூட் போட்ட மனிதர் சிரித்துவிட்டு “ஃபர்ஸ்ட் டைம்?” என்று கேட்டார். அவர் முகத்தைப் பார்த்தால் பயணம் முழுவதும் பேச விஷயம் வைத்திருப்பார் போல இருந்தது. எனக்குப் பேச மூட் இல்லை. என்ன வேண்டுமோ நினைத்துக்கொள்ளட்டும் என்று பொதுவாய் சிரித்துவிட்டு “டூ நாட் டிஸ்டர்ப்” விளக்கை எரியவிட்டு கண்களை மூடிக்கொண்டேன்.
கொலொம்போவுக்குப் பிரயாணம் எனக்கு ஒன்றும் புதிதில்லை. 2002லிருந்து மூன்று வருடங்களுக்கு மாதத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் அங்கே கழித்திருக்கிறேன். நான் வேலைபார்த்த கம்பெனியின் மென்பொருளை ஒரு வங்கியில் வாங்கி அதை சரளமாய் உபயோகிக்கப் பழகும்வரை நான் அங்கு வந்து இருக்கவேண்டும் என்று ஒப்பந்தத்தில் போட்டுவிட்டனர். ஒன்றிரண்டு மாதங்கள் பயிற்சி கொடுத்துவிட்டுக் கொஞ்சம் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்திருந்த எனக்கு மகா எரிச்சல்… வேறு வழி கிடையாது. மாட்டேன் என்றால் ‘சரி. இன்னொரு கம்பெனியிடம் வாங்கிக் கொள்கிறோம்’’’ என்பார்கள். கீரை வியாபாரம் மாதிரிதான். அத்தனை போட்டி.

மணிவிழாக்காணும் முருகபூபதியுடன் நேர்காணல்

.
சந்திப்பு: கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா

முருகபூபதி இலங்கையில், நீர்கொழும்பில் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி பிறந்தவர். இன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 ஆம் ஆண்டு விவேகானந்த வித்தியாலயம் என்ற பெயரில் தோன்றியபோது அங்கு முதலாவது மாணவனாகச்சேர்ந்து 1963 இல் புலமைப்பரிசில் பெற்று யாழ். ஸ்ரான்லி கல்லூரியிலும் பின்னர் நீர்கொழும்பு அல்ஹிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றவர். 1972 இல் படைப்பிலக்கியவாதியாகவும் பத்திரிகையாளராகவும் அறிமுகமானவர். சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், கடித இலக்கியம், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் இதுவரையில் 18 நூல்களை எழுதியிருப்பவர். சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கை தேசிய சாகித்திய விருதுகளை பெற்றுள்ள முருகபூபதி 1977 முதல் வீரகேசரியில் பணியாற்றிவிட்டு 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார். அவுஸ்திரேலியாவில் இலக்கியப்பணிகளுடன் சமூகப்பணிகளிலும் அயராமல் தொடர்ந்து உழைத்துவரும் முருகபூபதி அவுஸ்திரேலியாவிலும் சில விருதுகளைப்பெற்றவர்.

யாழ்ப்பாணத்துக் கிணற்றுப் பண்பாடு
                                                                                . பேராசிரியர் அ. சண்முகதாஸ்நீர் எங்கள் வாழ்வுக்கு இன்றியமையாதது. ஓர் அரசு தன்னுடைய குடிமக்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்கும் பெரிய பொறுப்பினை உடையது. ஆறு, ஏரி, குளம், கிணறு ஆகியன குடிநீர் வழங்குவன.

இலங்கையிலே சிங்கள மக்கள் வாழும் இடங்களிலே ஆறுகள் உண்டு. அவர்களுடைய ஆற்றுப் பயன்பாடு “ஆற்றுப் பண்பாடு' ஒன்றினை உருவாக்கியுள்ளது.

ஆனால், யாழ்ப்பாணம் ஆறில்லா இடம்.

கிணறுகள் பல நீர் வழங்கும் நிலைகளாயுள்ளன. இதனால் இங்கே ஒரு கிணற்றுப் பண்பாடு உருவாகியுள்ளது.


யாழ்ப்பாணம் பண்டைக் காலத்திலிருந்தே வரண்ட இடமாக இருந்துள்ளதாக செவி வழிக் கதைகளாலும் சில இலக்கியச் சான்றுகளாலும் அறிகிறோம். யாழ்ப்பாடி என்ற ஒருவன் யாழ் வாசித்து மணற்றிடர் எனப்படும் இப்பகுதியினைப் பரிசாகப் பெற்றான் என்று ஒரு கதை கூறுகின்றது.

புனித பூமியாம் அன்பு இல்லம்
புனித ரமழான்

1. ரமலானே வருக! வருக!! மனிதரெலாம் இணைந்து வாழ மறையோனின் அருள்பொழிக!!

2.  புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம்1. ரமலானே வருக! வருக!! மனிதரெலாம் இணைந்து வாழ மறையோனின் அருள்பொழிக!!

அருமறையின் அடிச்சுவட்டில்
அகமெங்கும் அர்ப்பணித்து
ஆண்டவனின் தாள்பணிந்து
அகிலத்தோர் வாழ்தலெனும்
பெருமைமிகு நபிகளவர்
செப்பிய வழிநடக்கும்

உலகச் செய்திகள்


.
அமெரிக்க கடன் உச்சவரம்பு பிரச்சினைக்கு தீர்வு 

1/8/2011
அமெரிக்காவின் கடன் பெறும் உச்சவரம்பை உயர்த்தும் விடயத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் உலகையே மீண்டும் பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடும் அபாயகரமான நிலையில் இருந்து இறுதி நேரத்தில் தப்பியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் கடன் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்து நிர்ணயிக்க அந் நாட்டு நாடாளுமன்றம் கடந்த 1971ம் ஆண்டில் ஒரு விதியை வகுத்தது. அதன்படி இந்தக் கடன் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் (US congress) அந் நாட்டு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.

கறிவேப்பிலையின் பயன்கள்* நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 இலை ... மென்று சாப்பிட... ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
* வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலை மென்று சாப்பிட வேண்டும்.

3 மாதம் சாப்பிட நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.  இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப் பிலை பயன்தரும்.

அதுமட்டுமல்ல - நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.

நன்றி TAMILCNNதமிழ் சினிமா

.
காஞ்சனா முனி - 2

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவன முனி படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘காஞ்சனா’.

ராகவா லாரன்ஸ் கிரிக்கெட் விளையாடுவதில் கில்லியாக இருக்கிறார். ஆனால் இருட்டைக் கண்டாலே அலறி ஓடிவிடுவார். தன் அம்மா, அண்ணன் ஆகியோருடன் வசித்து வரும் ராகவா லாரன்ஸின் பொழுது போக்கே கிரிக்கெட் விளையாடுவதுதான்.

அப்படி கிரிக்கெட் விளையாட இடம் கிடைக்காமல், தேடி அலைந்து ஒரு புதிய இடத்தைக் கண்டு பிடிக்கிறார். அந்த இடத்தில் அனைவரும் கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்புகின்றனர். அப்படி வீட்டிற்கு திரும்பும்போது, அவர் வைத்திருக்கும் ஸ்டம்பில் ரத்தக்கறை படிந்திருப்பதை ராகாவா லாரன்ஸ் கவனிக்கத் தவறுகிறார். இதனிடையே மச்சினிச்சியாக வரும் லட்சுமிராயுடன் காதல் ஏற்படுகிறது. இடை இடையே இவர்களது காதல் குறும்புகளும் தொடர்கிறது. சிலநாட்களுக்குப் பிறகு அவருக்குள் அமானுஷ்ய சக்திகள் புகுந்து கொண்டு சித்து வேலை காண்பிக்கின்றன. ஆணாக இருக்கும் லாரன்ஸ் திடீரென்று வளையல் அணிவதும், சேலை கட்டுவதும், மஞ்சள் தேய்த்து குளிப்பதுமாக இருக்கிறார். இதைனைக் கண்ட லாரன்ஸின் அம்மாவான கோவை சரளா, தன் மகனிடம் ஏதோ ஒரு விபரீதம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, அவரை முஸ்லீம் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார். அங்குதான் அவர் மீது ஆவி இருக்கிறது என்று தெரியவருகிறது. பிளாஷ்பேக் ஆரம்பமாகிறது. சரத்குமார் ஆணாகப் பிறந்தாலும், பருவமாற்றத்தால் திருநங்கையாக மாறி காஞ்சனா என்று பெயர் வைத்துக் கொள்கிறார்.

இதனால் வீட்டிலிருந்து துரத்தப்படுகிறார். எல்லோராலும் உதாசீனப்படுத்தப்படுத்துகிறார். இதனால் மனம் வெறுத்து தனித்து வாழ ஆரம்பிக்கிறார். அதுமட்டுமின்றி தன்னைப் போலொரு திருநங்கையை தத்தெதடுத்து, டாக்டருக்கு படிக்க வைக்கிறார். அங்குள்ள ஏழை மக்களுக்காக 25 லட்ச ரூபாய் செலவில் மருத்துவமனை கட்ட, ஒரு இடத்தை வாங்குகிறார் காஞ்சனா. அதே இடத்தின் மேல் ஒரு கண்ணாக இருக்கும் லோக்கல் எம்.எல்.ஏ, அந்த இடத்தை அபகரிப்பது மட்டுமின்றி காஞ்சனா, அவரது குடும்பத்தினர் என மூன்று பேரை படுகொலை செய்து புதைத்து விடுகிறார். அந்த மூன்று பேரும் புதைக்கப்பட்ட இடத்தில்தான் ராகவா லாரன்ஸ், ஸ்டம்ப் நட்டு விளையாடியிருக்கிறார்.

அப்போதுதான் அந்த ஆவிகள் அவருடைய உடலில் புகுந்திருக்கின்றன என்பதை கண்டுபிடிக்கிறார்கள். தங்களை கொலைசெய்த எம்.எல்.ஏவை பழிவாங்க துடிக்கிறாள் காஞ்சனா.

அவளின் பழி வேட்டை தீர்ந்ததா, ராகவா லாரன்ஸ் மீண்டும் இயல்பான மனிதாக மாறினாரா? லட்சுமி ராயுடன் அவருடைய காதல் என்ன ஆனது? என்பதை விறுப்பாக சொல்லி படத்தை முடித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி பாகம் இரண்டு கலக்கலாகத்தான் இருக்கிறது. அவரது நடிப்பும், ஆக்ரோஷமும், திருநங்கையாக மாறியபின் அவர் காட்டும் நளினமும் பளிச். நடனத்தில் மனிதரைக் கேட்கவே வேண்டாம் பின்னி எடுத்துவிடுகிறார்.

சிலகாட்சிகளே வந்தாலும் நம்ம சரத்குமாரா இது என்று வாய் பிளக்க வைக்கிறார். இமேஜிற்குள் சிக்காமல் திருநல்கை வேடத்தை துணிச்சலாக ஏற்றது மட்டுமின்றி, தத்ரூபமாக நடித்தமைக்கு அவருக்கு தாராளமாக கைதட்டல் போடலாம்.

கவர்ச்சிக்கும், காதலுக்கும் மட்டும் வந்து போகிறார் ல்ட்சுமிராய். லாரன்ஸ் உடன் அவர் அடிக்கும் காதல் லூட்டிகள் ரசிக்கும் படி இருக்கிறது. பாடல் காட்சியின் போது லாரன்ஸை இடுப்பில் தூக்கி வைத்தபடி ஆடுவது புதுமை.

லாரன்ஸின் அம்மாவாக வரும் கோவை சரளா நடிப்பில் பட்டாசு கிளப்புகிறார். பயந்தாங்கொள்ளி மகனைப் பெற்றதற்காக, அவரிடம் மாட்டிக் கொண்டு அவர் படும் பாடு, நமக்கு குபீர் சிரிப்பை வரவைழைக்கிறது. இப்படத்தின் முதுகெலும்பே இசையும், ஒளிப்பதிவும். தமனின் இசையமைப்பில் திகில் காட்சிகள் திடுக் திடுக்கை வரவழைக்கின்றன. வெற்றியின் ஒளிப்பதிவு இரவிலும் விழித்திருக்கும் நிலவாக காட்சிகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. ஸ்ரீமன், தேவதர்ஷினி, மனோ பாலா, தேவன் என அவரவர்களுக்கு கொடுகப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

திருநங்கைகள் படும் துயரினை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியிருக்கும் ராகவா லாரன்ஸிற்கு கண்டீப்பாக சபாஷ் போட்டே தீரவேண்டும். சரத்குமாரின் அதிரடி நடிப்பும், ராகவா லாரன்ஸின் மிரட்டல் நடிப்பும், சுப்பர் சுப்பராயனின் சண்டை அமைப்பும், தமனின் திகலூட்டம் இசையும் நம்மை கட்டிப் போட்டு வைத்து விடுகின்றன.

திகில் பட ரசிகர்களுக்கு மட்டுமின்றி தைரியமான குழந்தைகள் வரை ரசிக்கும் படியான படத்தை கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

நன்றி விடுப்புவெப்பம்
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பில் ”வெப்பம்” படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தை கெளதம் மேனனின் உதவியாளர் அஞ்சனா இயக்கியுள்ளார்.

குப்பத்து பின்னணி கதையில் தெலுங்கு பட நடிகர் நானி, கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். நானி குப்பத்தில் தன் அண்ணனின் பராமரிப்பில் வளர்கிறார். பிஞ்சு பருவத்தில் அம்மாவை பறி கொடுத்த சகோதரர்கள் வளர்ந்து ஆளாகி தங்களின் தந்தையை ஏன் தீர்த்துகட்டுகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அஞ்சனா.

நானி - கார்த்திக் இருவரின் வாழ்க்கையில் நுழையும் காதல், மோதல், கடத்தல் விவகாரத்தை ரசனையோடு படமாக்கியுள்ளார் அஞ்சனா. குப்பத்தில் நானி, கார்த்திக் இருவரும் கெளதம் பட பாணியில் ஓடி, ஆடி விளையாடுகிறார்கள். குப்பத்தில் பளீர் பால் வெள்ளை நிறத்தில் நித்யா மேனன் நடித்திருப்பது படத்திற்கு யதார்த்தை தரவில்லை. வில்லியாக வரும் ஜெனிப்பர் மிரட்டலாக நடித்துள்ளார்.

விபச்சார அழகியான பிந்து மாதவியோடு வாழ கார்த்திக் திட்டம் போடுகிறார். தம்பி நானி விபச்சார புரோக்கரான தந்தையோடு பழகுவதை அண்ணன் எதிர்க்கிறார். திடீரென கார்த்திக் கொல்லப்படுகிறார். நானியை பொலிஸ் பிடித்து செல்கிறது. அதற்க்கு பிறகு, உண்மையில் கார்த்திக்கை கொன்றது யார்? என்பது தெரிய வருகிறது.

வில்லி ஜெனிப்பருடன் நானியும் அவருடைய அண்ணனும் மோதுகிறார்கள். காட்சிகளை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்ல விரும்பிய இயக்குனர் அஞ்சனா திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், இந்த வெப்பம் இன்னும் கதகதப்பை தந்திருக்கும்.

ஜோஸ்வா ஸ்ரீதர் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பாடல்களை படமாக்கிய விதத்தில் இயக்குனரின் ரசனை அட்டகாசம். தமிழ் சினிமாவில் பெண் இயக்குனரால் இப்படியும் ஒரு ஆக்ஷன் படம் பண்ண முடியும் என்பதை அஞ்சனா நிரூபித்துள்ளார்.

நடிகர்கள்: நானி, கார்த்திக், முத்துக்குமார், ஷிம்மோர்

நடிகைகள்: நித்யா மேனன், பிந்து மாதவி, ஜெனிப்பர்

இசை: ஜோஸ்வா ஸ்ரீதர்
ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்
எடிட்டிங்: ஆண்டனி
கலை: மாயன்
வசனம்: பிரபு
சண்டை பயிற்சி: ராஜசேகர், ரவி, ஜேம்ஸ்
பி.ஆர்.: நிகில்
தயாரிப்பு: கௌதம் வாசுதேவ் மேனன்
இயக்கம்: அஞ்சனா

நன்றி விடுப்பு