மரண அறிவித்தல்


இராஜசுந்தரம் ராஜ்குமார்
இலங்கையில் சங்கானையில் பிறந்து, அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வாழ்ந்தவரும் துபாயில் கணக்காளராக பணியிலிருந்தவருமாக திரு இராஜசுந்தரம் ராஜ்குமார் (Accountant, Gibca Limited, Dubai, UAE) கடந்த செவ்வாய்க்கிழமை 03-09-2013 ஆம் திகதி சிட்னியில் காலமானார்.

அன்னார், ரஞ்சினியின் அன்புக்கணவரும், ரதீபன்(NSW Business Link), ரூபினி(McGrath Nicol) ஆகியோரின் அருமைத் தந்தையாரும் சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு திருமதி இராஜசுந்தரம் தம்பதியரின் செல்வமகனும், காலஞ்சென்ற திரு விஜயரத்தினம், திருமதி விஜயரத்தினம் தம்பதியரின் அருமை மருமகனும், ரஞ்சித் கனகசபை(சிட்னி) ராஜேஸ்வரா (சிட்னி) சிவகுமார் (மெல்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், ரஞ்சன் (துபாய்) சுமார் (தலவாக்கலை, இலங்கை) சுரேஷ் (மலவாக்கலை, இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

இறுதிச்சடங்கு விபரம்:
எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சிட்னியில்  Liberty  Funerals, 101 South Street, Granville NSW2142 இல் நடைபெறும். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சிட்னி ருக்வூ;ட் மயானத்தில் (Rookwood Cemetry, Memorial Avenue, Rookwood NSW2135) தகனக் கிரியைகள் நடைபெறும்.
நண்பர்களும் உறவினர்களும் இவ்வறித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: திரு ரஞ்சித் கனகசபை +61 423 577 715
முகவரி: 50 Long Street, Strathfield NSW 2135, Australia

தந்தையர் தினம் - செ. பாஸ்கரன்

.


காத்திருந்து
தந்தை கண் விழிக்கும் போதினிலே
Bed காபி தந்து
ஹாப்பி பாதேஸ் டே
என்று பிள்ளைகள்
குரல் தரும் போது
எல்லாம் மறைந்துவிடும்
துயரம் கவலை
மனதை விட்டு அகன்றுவிடும்
சோம்பிக் கிடந்த மனது - இப்போ
வீணை இசை மீட்டும்
பிள்ளைகளை அருகிழுத்து
கட்டி அணைக்கயிலே
தந்தை மனம்
வானவெளியில் சிறகடிக்கும்

நாமும் தந்தையர் தினம்
பார்த்திருக்கிறோம்
இல்லாத தந்தைக்கு
நிலவொளிந்து
வானம் கறுத்திருந்த
அமாவாசை நாளொன்றில்
சாதம் படைத்து
காக்கைகளை வரவழைத்து
சோகம் சுமந்த நெஞ்சோடு
நம் தந்தையர் தினம்
வந்துபோன நாட்கள்
நினைவில் வருகிறது

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு சிட்னி 2013 - நிகழ்ச்சிநிரல் - கு கருணாசலதேவாவெள்ளிக்கிழமை 06 09 2013

இடம்: தமிழர் மண்டபம், துர்க்கை அம்மன் கோயில், சிட்னி

மாலை 4.30 மணி:    திருக்குறள் மங்கலத் தேனிசை
            வழங்குபவர்: திருக்குறள் இசைத்தென்றல் திரு டி கே எஸ் கலைவாணன்

5.30:    திருவள்ளுவர் சிலை திறப்பு
(நுழைவாயிலில் இருந்து மங்கல இசை முழங்க மேள தாளத்துடன் மங்கல நிறை கும்ப வரவேற்புடன் சான்றோர்களை அழைத்து வரல்.)
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்
திருவள்ளுவர் சிலைக்கு பூச்செறிதல்
சான்றோர்கள் மேடைக்குச் செல்லுதல்

6.10    மாலை அரங்கம்

6.10    மங்கல விளக்கேற்றல்

தமிழ்த்தாய் வாழ்த்து – முனைவர் வாசுகி கண்ணப்பன்

 வரவேற்பு நடனம் - திருமதி மிர்ணாளினி மாணவர்கள்

வரவேற்புரை: தலைவர்    இரத்தினம் மகேந்திரன்  

 சிறப்புரைகள்:     டாக்டர் வி.ஜி. சந்தோசம்
            நீதியரசர் வள்ளிநாயகம்
            சொல்வேந்தர் அவ்வை நடராசன்
            இலக்கியச் செல்வர் திரு குமரி அனந்தன்
            வேந்தர் ஏ சி சண்மும்

விழா மலர் வெளியீடு -    நீதியரசர் திரு வள்ளிநாயகம்

மலர் நயவுரை -        திரு பத்மநாபன்

8.00    இடைவேளை

8.15    நாடகம் "சிலம்பரசி கண்ணகி" -  ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள்

சிட்னி முருகன் இராப்போசன விருந்து 31/08/2013சிட்னியில் உலகத் தமிழ் மாநாடு SEP 6,7,8 -2013

.
விபரங்களை அறிந்துகொள்ள எங்கள் இணையத்தளத்தை பாருங்கள்
பதிவுக் கட்டணம் $30 தனி நபர்  (மூன்று நாட்கள்);  மாணவர்கள் இலவசம்

'டேவிட் ஐயா...' - டி.அருள் எழிலன்

.
நடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு.

ஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் - இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள்.
யார் இந்த டேவிட்?

''என்னை எல்லோரும் 'டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்!'' என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார்.

திரும்பிப்பார்க்கின்றேன் -- 05 ஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா முருகபூபதி


யாழ்ப்பாணம்  அரியாலையில்  நாவலர்  வீதியில்  அமைந்த  ஸ்ரான்லி  கல்லூரியில் (தற்பொழுது  கனகரத்தினம்  மத்திய  கல்லூரி) 1962  ஆம்  ஆண்டளவில்  எனக்கும்   எனது  மச்சான்  முருகானந்தனுக்கும்  ஆறாம்  வகுப்பு    புலமைப்பரிசில்  அனுமதி  கிடைத்தது.   அப்பொழுது    எனக்கு    பதினொரு  வயதிருக்கும்.

நான்    முதல    தடவையாக  பனைமரங்களைப்பார்த்தது    அக்காலத்தில்தான்.  அதற்கு  முன்னர்  அந்தக்கற்பகதருவை  பாடசாலை  பாடப்புத்தகங்களில்தான்   பார்த்திருக்கின்றேன்.

ஈழவிடுதலைப்போராட்டம்     ஆரம்பமானதன்பின்பு    பல  இலக்கிய  மற்றும்  ஆய்வு  நூல்களில்  பனைமரங்கள்    அட்டைப்படமாகின. 


ரஜனி  திராணகம  சம்பந்தப்பட்ட  யாழ்.  பல்கலைக்கழக  மனித  உரிமை  ஆசிரியர்  சங்கத்தின்    வெளியீடான    முறிந்த  பனை,  மூத்த   பத்திரிகையாளர்  கார்மேகத்தின்    ஈழத்தமிழர்  எழுச்சி,   செ. யோகநாதன்     தொகுத்த  ஈழச்சிறுகதைகள்  வெள்ளிப்பாதசரம்,     ஜெயமோகனின்    ஈழத்து  இலக்கியம்,   பேராசிரியர்   கா.  சிவத்தம்பியின்    யாழ்ப்பாணம்   சமூகம் - பண்பாடு – கருத்துநிலை  உட்பட   பல  நூல்கள்  பனைமரத்தை  ஒரு  குறியீடாகவே   அட்டைகளில்  சித்திரித்துள்ளன.


உலக தமிழ் இலக்கிய மாநாடு

.

எதேச்சாதிகாரப் பாதையில் சிறிலங்கா – பயண முடிவில் நவநீதம்பிள்ளை

.
இதுபற்றி தமிழில் வெளிவந்த கட்டுரை கீளே  உள்ளது .


Opening remarks by UN High Commissioner for Human Rights Navi Pillay at a press conference during her mission to Sri Lanka

posted on: 31-08-2013

DSC_5052
Colombo, 31 August 2013
Good morning, and thank you for coming.
As is customary at the end of official missions such as this, I would like to make some observations concerning the human rights situation in the country.
During my seven-day visit, I have held discussions with President Mahinda Rajapaksa, and senior members of the Government. These included the Ministers of External Affairs, Justice, Economic Development, National Languages and Social Integration, Youth Affairs and the Minister of Plantations Industries who is also Special Envoy to the President on Human Rights, as well as the Secretary of Defence.  I also met the Chief Justice, Attorney-General, Leader of the House of Parliament and the Permanent Secretary to the President, who is head of the taskforce appointed to monitor the implementation of the report of the Lessons Learned and Reconciliation Commission (LLRC).
I had discussions with politicians who are not part of the current Government, namely the Leader of the Opposition and the leader of the Tamil National Alliance; in addition I met with the National Human Rights Commission, and a total of eight different gatherings of human rights defenders and civil society organizations in Colombo, Jaffna and Trincomalee. I also received briefings from the Governors and other senior officials in the Northern and Eastern Provinces.

I thank the Government for its invitation and its excellent cooperation during the planning and conduct of this very complex mission. It stated that I could go anywhere, and see anything I wished to see. And, despite some disturbing incidents which I will go into later, that commitment was honoured throughout.
Even though this is the longest official visit I have ever made to a single country, I am acutely conscious that I was unable to see everyone who requested a meeting. Nor will I be able to do justice to all the human rights issues facing the Sri Lankan people and government. Since I will be providing an oral update to the Human Rights Council in Geneva in late September, and a full written report in March next year, I will today confine myself to a few key issues that crystallized during the course of the mission.
I will divide these human rights issues into two parts: those related to the vicious and debilitating 27-year conflict between the Government and the LTTE, and its aftermath; and those that relate to the whole country.

Some media, ministers, bloggers and various propagandists in Sri Lanka have, for several years now, on the basis of my Indian Tamil heritage, described me as a tool of the LTTE. They have claimed I was in their pay, the “Tamil Tigress in the UN.” This is not only wildly incorrect, it is deeply offensive. This type of abuse has reached an extraordinary crescendo during this past week, with at least three Government Ministers joining in.

Firstly, let me say, I am a South African and proud of it.
Secondly, the LTTE was a murderous organization that committed numerous crimes and destroyed many lives. In fact, my only previous visit to Sri Lanka was to attend a commemoration of the celebrated legislator, peacemaker and scholar, Neelan Tiruchelvam, who was killed by an LTTE suicide bomb in July 1999. Those in the diaspora who continue to revere the memory of the LTTE must recognize that there should be no place for the glorification of such a ruthless organization.
I would like to pay my respects to all Sri Lankans, across the country, who were killed during those three decades of conflict, and offer my heartfelt sympathy to their families, all of whom – no matter who they are – share one thing: they have lost someone they can never replace. I have met many people during this visit whose relatives or spouses – both civilians and soldiers – are known to have been killed, or who are missing and may well be dead.

It is important everyone realizes that, although the fighting is over, the suffering is not.
I have been extremely moved by the profound trauma I have seen among the relatives of the missing and the dead, and the war survivors, in all the places I have visited, as well as by their resilience. This was particularly evident among those scratching out a living among the ghosts of burned and shelled trees, ruined houses and other debris of the final battle of the the war along the lagoon in Mullaitivu.
Wounds will not heal and reconciliation will not happen, without respect for those who grieve, and remembrance for the tens of thousands of Tamils, Sinhalese, Muslims and others who died before their time on the battlefield, in buses, on the street, or in detention. As one wife of a missing man put it poignantly: “Even when we eat, we keep a portion for him.”


உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2013

.

இசைபாட இயல்பேச நாடகத் தமிழொடு
எழில் கூட்டும் விழாவன்றோ தோழர்களே!

திசையெட்டும் போற்றும்நற் தேன்தமிழ் அன்னையின்
திறம்பாடும் விழாவன்றோ தோழர்களே!
இசைபாட இயல்பேச நாடகத் தமிழொடு
எழில் கூட்டும் விழாவன்றோ தோழர்களே!

திருவள்ளு வர்தந்த பொதுமறை போற்றியே
சிலைநாட்டும் விழாக்கண்டு சிறப்புச் செய்வோம்
அருந்தமிழ் வளர்த்திட்ட பெருமை விளக்கிடும்
அற்புத விழாவன்றோ தோழர்களே!

உலகிற் பரந்திட்ட தமிழின் பெருமையை
உணர்த்துமோர் கண்காட்சி காணவாரீர்
பலநாட்டு அறிஞர்கள் கலந்திடும் விழாவினைப்
பார்த்துச் சுவைப்பீரே தோழர்களே!

எங்கெங்கும் தமிழ்மணம் எதிலுந் தமிழ்மணம்
என்றென்றும் தமிழினை வளர்ப்போ மென்று
இங்குவாழ் தமிழர்நாம் கூடிச்சூ ழுரைப்பமே
இளைஞர்காள் விழாவிற்குத் திரண்டு வாரீர்!

(இயற்றியவர் - பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி)

இலங்கைச் செய்திகள்


யாழில் காணாமல் போன உறவுகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ். சுன்னாகம், திருநெல்வேலி பகுதியில் ஐ. தே. க. பிரசார நடவடிக்கை

காணாமல்போனோர் விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் : நவநீதம்பிள்ளை

தமிழ் மக்கள் சிங்கள மக்கள் அனைவரையும் பகையாகப் பார்க்குமாறு பயிற்றப்பட்டுள்ளார்கள்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணை: நவி எச்சரிக்கை

---------------------------------------------------------------------------------------------------------


யாழில் காணாமல் போன உறவுகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
27/08/2013
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில் -கானா பிரபா

.


இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஈறாகவும், ஐக்கிய இராச்சியம் போன்ற புலம்பெயர் நாடுகளிலும், சென்னையிலே லயோலா கல்லூரியிலும் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு நினைவுச் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.  கடந்த நூற்றாண்டிலிருந்து அதிகப்படியான புலப்பெயர்வைச் சந்தித்த ஈழத்தமிழினத்தின் பெரும்பான்மை மக்கள் வாழும் கனடா நாட்டிலும் இன்று ஆகஸ்ட் 31 ஆம் திகதி தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டுப்பெருவிழா பெரும் எடுப்பில் நிகழவிருக்கின்றது. இந்த நிகழ்வில் சிறப்பு இசைவட்டு ஒன்றும், எழுநூறு பக்கங்கள் அடங்கிய தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலரும் வெளியிடப்படவிருக்கின்றது.   இந்த நிகழ்வு  குறித்த மேலதிக விபரங்களை இங்கே http://www.thaninayakaadikal.org/காணலாம்.

தனிநாயகம் அடிகளாரது வாழ்க்கை என்பது அவர் சார்ந்த சமயப்பணியாகக் குறுகிய வட்டத்தோடு நின்றுவிடாது, தான் சார்ந்த தமிழ்மொழி சார்ந்த சமூகப் பணி கடந்து விரவியிருந்ததை அவரது வாழ்நாளில் எமக்களித்துவிட்டுப் போன சான்றுகள் மூலம் ஆதாரம் பகிர்கின்றன. தமிழாராய்ச்சி மாநாட்டை உலகளாவிய ரீதியிலே நடத்துவதற்கு முன்னோடியாக அமைந்து அதைச் செயற்படுத்தியவர். மேலைத்தேய, கீழைத் தேய நாடுகளுக்கெல்லாம் சென்று, தேடித் தேடி கடந்த நூற்றாண்டுகளில்  பதிந்த தமிழரது சுவடுகளை வெளிக்கொணர்ந்தார். ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன்பு வரை வாழ்ந்த அந்தப் பெருந்தகை யார் என்று தெரியாத நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, நம் தாயகத்திலும் இருப்பதை எண்ணும் போது வேதனையும் வெட்கமும் பிறக்கின்றது. நமது கண்ணுக்கு முன்னால் தமிழ்ச்சமுதாயத்துக்காக உழைத்தவரை மறந்த நிலையில் இருக்கின்றோம்.

ஸ்வாமி விவேகனந்தரின் 150 வது பிறந்த ஆண்டு நினைவு

.

The Vedanta Centre (Ramakrishna Mission) is celebrating the 150th birth anniversary of Swami Vivekananda all over Australia and NZ. As part of the programmes we are holding seminars in the major universities of Australia. We have a unique event at the Sydney Opera House on the 17th and 18th of September wherein we will be enacting a Play on 'Oneness- Voice without Form' - an extraordinary life of Swami Vivekananda. 


Swami Atmeshananda
Vice President

உலகச் செய்திகள்


.
சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள்!

ஐ.நா. அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது சிரியாவில் ஸ்னைபர் தாக்குதல்!

சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள்!

சிரியாவில் அந்நாட்டு அரச படைகளால் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிரதேசத்திற்கு ஐ.நா. கண்காணிப்பாளர்கள் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவுப் படையினர் மோதல் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்தமையை அடுத்தே ஐ.நா. கண்காணிப்பாளர்கள் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும் சிரிய அரசாங்கத்தின் மேற்படி முடிவுக்கு சர்வதேசம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு சிரிய கிளர்ச்சியாளர்கள் தங்களது வரவேற்பைப் தெரிவித்துள்ளனர்.

கடன் - அ முத்துலிங்கம்

.


என் வாழ்க்கையில் நான் பட்ட கடன்களை வரிசைப் படுத்தும்போது பல கடன்களை நான் தீர்க்கவில்லை என்பது இப்போது தெரிகிறது. சிறுவயதில் பக்கத்து மேசை நண்பனிடம் பென்சில் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்கவில்லை. கோயிலுக்கு நேர்ந்து கடவுளுக்கு இது செய்வதாக, அது செய்வதாகச் சொல்லி செய்யாமல் விட்டது. புத்தகங்கள் கடன் வாங்கிப் படித்தால் தவறாமல் திருப்பிவிடுவது என் வழக்கம். ஒரு முறை என் புத்தகத் தட்டை ஆராய்ந்தபோது யாரோ ஒருவரிடம் கடன் வாங்கிய புத்தகம் ஒன்று இன்னும் திருப்பிக் கொடுக்காமலே இருப்பது தெரிந்தது. ஆனால் யாரிடம் புத்தகத்தை இரவல் வாங்கினேன் என்பது மறந்துவிட்டது. 
உரிய நேரத்தில் கடனை அடைக்காவிட்டால் அதை திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பே சமயத்தில் நழுவி விடக்கூடும். சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுகதை படித்தேன். காதலித்து கல்யாணம் செய்துகொண்ட தம்பதிகள் மத்தியில் சிறு விரிசல் விழுகிறது. ஆற்றிலே தண்ணீர் வற்றுவதுபோல அவளுக்கு கணவனிடத்தில் காரணமில்லாமல் அன்பு குறைந்துகொண்டே வருகிறது. திடீரென்று ஒருநாள் அவன் நெஞ்சு வலியில் அவதிப்படுகிறான். அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும்போது அதுவரை பாதி படித்த நாவலையும்  தன்னுடன் எடுத்துப் போகிறான். அவசர சிகிச்சையளித்தும் அவன் இறந்துவிடுகிறான். ஒருநாள், பல வருடங்கள் கழித்து புத்தகத்தட்டில் அவன் படித்த நாவலை மனைவி தற்செயலாக காண்கிறாள். அவன் கடைசியாகப் படித்த பக்கத்தை மடித்துவிட்டிருக்கிறான். தான் அவனிடம் உதாசீனமாக நடந்துகொண்டதை நினைத்து வருந்துகிறாள்.  அவளுக்கு அவன் மீது கனிவு மேலிட்டு அவனுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. அவன்  முடிக்காமல் விட்ட பக்கங்களை அவனுக்காக படித்து முடிக்கிறாள். 

அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத படகுப்பயணம் - துஸ்யந்தி கனகசபாபதிப்பிள்ளை


முன்னர் மோதல் வலயங்களாக உள்ள இடங்களில் ,வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து மற்றும் வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவதன் மூலமாகவே இந்தப்போக்கின் கடுமையை குறைக்க முடியும். தரப்பட்டுள்ள உள்ளுர் நிலமைகளின்படி, யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும். யுத்தத்தின் கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் புகலிடம் அல்லது குடியேற்றம் தேடும் போக்கினை தடுத்து நிறுத்தவும் நீடீத்த ஒரு முயற்சி அவசியம்”

australia tripமே 2009 ல் யுத்தம் நிறைவடைந்து விட்டாலும் ஒன்றில் புகலிட அந்தஸ்து தேடுவதற்கோ அல்லது பொய்யான அறிவிப்புகளை மேற்கொண்டு அவுஸ்திரேலிய மண்ணில் கால் வைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத பயணங்களை மேற்கொள்வது இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. உண்மையில் அதிகாரிகளின் கூற்றுப்படி அது தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நெருக்கடி.

உள்ளுர் மக்கள் தெரிவிப்பதன்படி, கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக வேலை செய்தவர்களில் பெரும்பாலானோர், பெரும் குழுக்களாகச் சேர்ந்து காலநிலைகளைப்பற்றி அறிந்து கொள்ளாமல், தேவையான உடைகளை எடுத்துக்கொள்ளாமல், மற்றும் பயணத்துக்கு எடுக்கும் கால அளவைக்கூட அறியாமல் அவுஸ்திரேலியாவுக்கான ஆபத்தான படகுப்பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார்களாம். விரக்தியுடன் நாட்டைவிட்டு வெளியேறிய முதல்தொகுதி ஆட்களில் அவர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியானபோதும் நான் அச்சுறுத்தலுக்கு ஆளானேன், எனது மனைவியின் தாலிக்கொடி உட்பட அனைத்து தங்க நகைகளையும் அடகுவைத்து அவுஸ்திரேலியாவுக்கான பாதுகாப்பான பயணத்துக்கு வேண்டி பயண முகவரிடம் 13 லட்சம் ரூபாவை செலுத்தினேன். நவம்பர் 2012ல் முதலாவதாகத் திருப்பியனுப்பப் பட்டவர்களில் நானும் ஒருவன்.

நோய்களை தடுத்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 14 உணவுகள்!!!

.
                        காவிரி மைந்தன் 
உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உணவிலிருந்து. உடுத்தும் உடையிலிருந்து கவனமாக இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி,ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதால்முதுமைத் தோற்றத்தைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும். உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது என்பது தேவையான ஒன்று. அன்றாடம் நாம் உழைத்து சேமிப்பது அனைத்தும் வயிற்றுக்கு தான். எனவே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்து உள்ளது. ஒரே ஒரு வைட்டமினின் சத்து மட்டும் உடலுக்கு போதாது. எல்லா வித சத்துக்களும் உடலுக்கு அவசியம். அதில் வைட்டமின் சி கண்ணிற்கு நல்லதுஓமேகா-3இதயத்திற்கு நல்லது என ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு சக்தியை உடலுக்கு தந்துமனதுக்கும்உடலுக்கும் தேவையான பலத்தை அளிக்கின்றது. எனவே அளவான உணவை தேவையான சத்துக்களுடன் எடுத்துக் கொண்டாலேஆரோக்கியமாகவும்இளமையுடனும் வாழ முடியும். குறிப்பாக நோய் இல்லாமல் இருந்தாலே,இளமையுடன் காட்சியளிக்க முடியும். சரிஇப்போது உடலில் ஏற்படும் நோய்களைத் தடுத்துமுதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் சில உணவுகள் பற்றிப் பார்ப்போமா!!!
ஆப்பிள்/திராட்சை/செர்ரி/ஸ்ட்ராபெர்ரி மேற்கூறியவற்றில் கரையும் நார்ச்சத்து இருப்பதால்அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மேலும் இந்த பழங்களில் எலாஜிக் அமிலங்கள் உள்ளன. இவை புற்றுநோய் வருவதை தடுக்கின்றது.

தமிழ் சினிமா

சென்னை எக்ஸ்பிரஸ்

தமிழ் சினிமாவில் பார்த்த மசாலா படங்களை காரம் மசாலாவாக மாற்றி இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ்.
கில்லி, முத்து, அலெக்ஸ் பாண்டியன் சண்டைக்காட்சிகள், சில தெலுங்கு படங்கள் என அனைத்தையும் கலந்துகட்டிய சென்னை எக்ஸ்பிரஸ் படு வேகத்தில் பறக்கிறது.
தன் தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரம் கடலில் கரைப்பதற்காக தென்னிந்தியாவை நோக்கி புறப்படுகிறார் ஷாருக்கான் (ராகுல்). எதிர்பாராத விதமாக சென்னை எக்ஸ்பிரசில் தீபிகா படுகோனேவை (மீனம்மா என்கிற மீனலோச்சனி அழகுசுந்தரம்) சந்திக்கிறார். அவர் கூட உருவத்தில் பெரியதாக இருக்கும் நான்கு அடியாட்களும் இருக்கிறார்கள்.
தன் அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதால் ஊரைவிட்டு தப்பிவந்த என்னைக் கண்டுபிடித்து மீண்டும் தன் அப்பாவிடமே கொண்டுசெல்கிறார்கள் என்ற உண்மையை ஷாருக்கானிடம் சொல்லி தன்னைக் காப்பாற்ற சொல்கிறார் தீபிகா.
ஷாருக்கானும் ஏதேதோ ட்ரை பண்ண, எல்லாமே கொமெடியாக முடிந்துவிடுகிறது. வில்லன்களிடம் தன் குறும்புத்தனமான சேஷ்டைகளை காட்டியதால் ஷாருக்கானும் பிடித்துவைக்கப்படுகிறார். ரயில் தீபிகாவின் சொந்த ஊருக்கு வந்து சேர்கிறது. அங்கு தான் சத்யராஜ் அசத்தல் எண்ட்ரி கொடுக்கிறார்.
வேறு வழியில்லாமல், ஷாருக்கானைக் காட்டி இது தான் என் காதலன் என்று அப்பாவிடம் பொய்சொல்லிவிடுகிறார் தீபிகா. தூக்குங்கடா என் மாப்பிள்ளைய என்று சத்யராஜ் சொன்னதும் ஷாருக்கானுக்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது.
அப்போது தான் வில்லன் வருகிறார். அவர் தான் தீபிகாவுக்கு சத்யராஜ் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. ஒத்தைக்கு ஒத்தை சண்டைபோடுவோம் என்னை ஜெயிச்சிட்டு தீபிகாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று சவால் விடுகிறார்.
வில்லனின் கம்பீர உருவத்தைப்பார்த்து மிரண்டுபோகிறார் ஷாருக்கான். அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றும் மீண்டும் அதே ஊரில் வந்து அவர்களிடமே சிக்கிக்கொள்கிறார்.
என்ன செய்வதென்று தெரியாமல் கில்லி விஜய் ஸ்டைலில் ஒரு கத்தியை தீபிகா கழுத்தில் வைத்து அவரை ஒரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து இருவரும் எஸ்கேப் ஆகிறார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்குமே காதல் வருகிறது. தீபிகாவுடன் தன் சொந்த ஊருக்குத் தப்பிக்க போகிறார் ஷாருக் என எதிர்பார்க்கிற நேரத்தில் மீண்டும் சத்யராஜிடம் மாட்டிக் கொள்கின்றார்.
பின்பு தன் தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து, தன் பாட்டி தனக்கு கொடுத்த கடமையை நிறைவேற்றுகிறார் ஷாருக். வில்லனை வீழ்த்தி தீபிகாவை எப்படி மணம் முடிக்கிறார். என்ற மீதிக் கதையோடு பயணிக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ்.
கதாநாயகனாக வரும் ஷாருக்கான் எந்தவித அலட்டலும் இல்லாமல் நடிப்பில் அசத்தியுள்ளார், காட்சிகளில் தமிழ் தெரியாமல் திணருவதும், இரண்டு மூன்று வார்த்தைகளை தமிழில் பேசும் கலாட்டா காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
க்ளைமாக்ஸ் காட்சியில் ‘உயிரோட வந்த நீ உயிரோட போமாட்ட, வெட்டி பீஸ் பீஸ் ஆக்கி பார்சல் அனுப்பிடுவேன்’ என்று வில்லன் பேசிய வசனத்தை அவரிடமே ஷாருக் பேசிக்காட்டுவது தூள்.
மீனலோச்சனி அழகுசுந்தரம் என்ற பெயரில் வரும் அழகு என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் ‘அசுட அசுட’ என்று ஷாருக் பேசுவது கலகலப்பு.
வழியைத் தொலைத்து திசைமாறி சென்றுவிடும் ஷாருக்கான் கேரளா பக்கம் போக, அங்கே ஒருவர் எந்தானு ஜோலி என்று கேட்க. ‘ஐ யம் நாட் ஏஞ்சலினா ஜோலி’ என்று ஷாருக் பதில் சொல்வது குபீர் சிரிப்பு.
கதாநாயகியாக வரும் தீபிகா படுகோனே தனது அழகு, அசத்தல் நடிப்பால் அசரடிக்கிறார். தமிழ் வசனங்களுக்கு அவரே குரல் கொடுத்திருப்பது, கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மெச்சத் தக்க முயற்சி.
ப்ரியாமணி ஒரு குத்துப்பாட்டுக்கு வருகிறார், அதிகமான கவர்ச்சி இல்லை என்றாலும் வழக்கமான திமிரோடு ஷாருக்கானுடன் கலக்கியிருக்கிறார், தமிழ் சினிமாவில் சரிந்த மார்க்கெட்டை பிடிப்பதற்கு இவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
பெரியதலையாக வரும் சத்யராஜ் அவருக்கு கொடுத்திருக்கும் பொருத்தமான கதாபாத்திரத்தை தனக்கே உரிய பாணியில் அசத்தியுள்ளார், படத்தில் மிகப்பெரிய பங்கு என்னம்மா கண்ணு சௌக்கியமா? என்று உச்சரிப்பதுதான்.
படத்தின் இசையில் மெலோடி பாடல் ஒன்று வருகிறது, மீதியுள்ள பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான், ஒளிப்பதிவாளரும் ரயில் பாலம் காட்சிகள், அருவிகள் என்று சில இடங்களில் பிரமிக்க வைத்துள்ளார்.
இயக்குனர் ரோஹித் ஷெட்டி தமிழ் மசாலா படங்களை காப்பியடித்து காரமான மசாலாவாக மாற்றி கொமடி, காதல், சென்டிமெண்ட் என்று கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
படத்தில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள், கதை நடப்பது அனைத்தும் தமிழகத்தில் என்பதால் படம் பார்க்கும் போது தமிழ் படம் பார்க்கிற உணர்வுதான் வருகிறது.
ரஜினிக்கு மரியாதை என்ற பெயரில் கடைசியில் இடம்பெறும் அந்த லுங்கி டான்ஸ் முடியும் வரை கூட்டம் காத்திருக்கிறது. ஷாரூக்கானின் புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு சான்று இது.
தமிழ் புரியாமல் மாட்டிக்கொண்டு சிரமப்படும் ஷாருக்கான், கலர் கலர் உடைகளோடு பளிச்சென வலம்வரும் தீபிகா படுகோனே, தென்னிந்தியாவின் டான்-னாக இருக்கும் சத்யராஜ் (பெரியதலை) என படம் முழுக்க கலர் புல் கலாட்டா தான்.
மொத்தத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படம்.
நடிகர்கள்: ஷாரூக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ்
இசை: விஷால் சேகர்
ஒளிப்பதிவு: டட்லீ
இயக்கம்: ரோஹித் ஷெட்டி
தயாரிப்பு: கவுரி கான், ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய்கபூர்

நன்றி விடுப்பு