மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... ஆஸ்திரேலியா
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/09/2024 22/09/ 2024 தமிழ் 15 முரசு 23 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... ஆஸ்திரேலியா
கவிஞர் அம்பி,
எமது இலக்கிய குடும்பத்தில் பலருக்கும் ஞானத் தந்தையாகவும் விளங்கியவர்.
அம்பிக்கு
2004 ஆம் ஆண்டு 75 வயது பவளவிழா நடந்த காலத்தில்,
ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனின் வேண்டுகோளை ஏற்று, ஞானம் இதழில் பிரசுரிப்பதற்காக அட்டைப்ட அதிதி கட்டுரை
எழுதியிருந்தேன்.
இலங்கை வடபுலத்தில்
நாவற்குழியில் 1929 ஆம் ஆண்டு பிறந்திருக்கும்
அம்பியும், அதே வடபுலத்தில் 1941 இல் புன்னாலைக்கட்டுவனில்
பிறந்த தி. ஞானசேகரனும், தமது தாயகத்தில் நெருங்கிப்
பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைந்திருந்தாலும், இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் நெருக்கமாகி உறவாடியதனால் பல
விடயங்கள் சாத்தியமானது என்பதற்கு நானும் ஒரு
சாட்சி.
அம்பி மறைந்த செய்தி அறிந்ததும், என்னைத் தொடர்புகொண்டவர் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன். இதற்கு முன்னர் மூத்த எழுத்தாளர்கள் எஸ். பொ., காவலூர் ராஜதுரை, பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், கலாநிதி ஆ. கந்தையா, திருமதி ஞானம் இரத்தினம், வானொலி மாமா மகேசன் ஆகியோர் சிட்னியிலும், எழுத்தாளர்கள் நித்தியகீர்த்தி, அருண். விஜயராணி ஆகியோர் மெல்பனிலும் மறைந்த வேளையிலும் தொடர்புகொண்டு தனது துயரத்தை பகிர்ந்துகொண்டவர்தான் ஞானசேகரன்.
குங்குமம் பொட்டு , கொட்டப்பாக்களவு குடுமி , முகத்தில் சாந்தம் , வெள்ளுடை வேந்தர் இப்படிச் சொன்னால் இப்படி நினைத்தால் கண்முன்னே வந்து நிற்பார் பேராசான் குருக்கள் அவர்கள்.
அமைதியான ஆனால் ஆழமான அழகான ஆங்கிலம் அழகு கொஞ்சும் அன்னைத்தமிழ் அஷ்ஷரம் மாறாத சமஸ்கிருதம் குருக்கள் அவர்களுக்கே உரித்தானதாகும்.
ஆடம்பரம் நாடுவதில்லை. அலங்காரம் செய்வதும் இல்லை. ஆர்ப்பாட்டம் இல்லா ஆளுமைதான் அவர்.கைலாசபதி கைகூப்பும் கைலாசநாதர் ! சிவத்தம்பி கெளரவிக்கும் சிந்தனையாளர் ! வித்தியின் வணக்கத்துக்குரியவர் ! சிங்களப் பேராசிரியர்களும்
பேராசிரியர் குருக்கள் அவர்களை ஆசாரமிக்க அத்தணர் என்பதா , ஆகமக் கிரியைகளை ஆற்றும் சிவாசாரியப் பெருமகன் என்பதா , ஆன்மீகத்தில் நாட்டமிக்க பெரியவர் என்பதா , தமிழ் , ஆங்கிலம் , இல
அறிவு என்னும் தேட்டம் அனைத்தையும் திரட்டி எடுத்துக் கொண்டு என்றுமே குன்றாத பெரு மதிப்புடைய கல்விச் செல்வத்தை தனக்குள் வைத்திருக்காது யாவருக்கும் வழங்கும் பெரு நோக்குடையயவராய் அந்தண குலத்து ஒளிவிடும் விளக்காக உயர் பண்பாளராக மிளிர்ந்தவர்தான் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் எனலாம்.
நாவலர் பெருமான் பிறந்து வளர்ந்து உயர்ந்த - ஊர்களில் சிறந்த ஊரான - நல்லூரில் சேர் பொன். இராமநாதனின் குருவாகத் திகழ்ந்தவரும் வேதாகம சோதிட விற்பன்னரும் ஆகமக்கிரிகை களை ஆற்றுவதில் ஈடிணையற்றவரு மான சிவஶ்ரீ கார்த்திகேய க்குருக்கள் முனீஸ்வரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஶ்ரீமதி சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு துர்மதி
ஆகஸ்ட் 11, 2024 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணி: ஸ்ரீ சுக்த ஹோமம்,
காலை 10.30 மணி: ஸ்ரீ வரலட்சுமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம்,
காலை 11.30 - சாமுஹிக மகாலட்சுமி பூஜை (பக்தர்களால் கூட்டாக நடத்தப்படுகிறது)
பக்தர்கள் ஒரு தட்டு, தண்ணீர் வைக்க டம்ளர், தேங்காய் மற்றும் ஒரு விளக்கு கொண்டு வர வேண்டும். கோயில் மூலம் எண்ணெய் வழங்கப்படும்.
ஆகஸ்ட் 16, 2024 வெள்ளிக்கிழமை
காலை 10.00 மணி: ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ ஆண்டாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை.
ஆனந்த விகடன் வார இதழில் நாவல்களையும், வெளிநாட்டு பயணக்
இராமாயணத்தில் வரும் இராவணன்
தமிழனாகவும் இராமன் ஆரியனாகவும்
சித்திரிக்கப்படுகிறார்கள்.
இந்த இரண்டு பாத்திரங்களின்
குணவியல்புளை வைத்து இன்றும் பட்டிமன்றங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
வால்மீகி இராமாயணம் –
கம்பராமாயணம் ஆகியன குறித்தும் மாறுபட்ட
கதைகள் தொடருகின்றன.
இந்தியாவில் உத்தரபிரதேசம் அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்று
சொல்லிக்கொண்டு 32
வருடங்களுக்கு முன்னர் ( 1992 –
டிசம்பர் 06 இல் ) ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த பாபர்
மசூதியை இந்துத்துவா கரசேவர்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இது இவ்விதமிருக்க,
தாய்லாந்தில்தான் இராமர் பிறந்தார் என நம்புகின்றவர்கள், அங்கே அவருக்கு கோயில்
அமைத்து வழிபடுகிறார்கள்.
இந்தோனேஷியாவின்
ஆளுகைக்குள்ளிருக்கும் பாலித்தீவில்தான் அவர் பிறந்தார் என நம்புகின்றவர்கள்,
அங்கே அவருக்கு சிலைகள் எழுப்பியிருக்கிறார்கள்.
இவ்வாறு இராமாயணக் கதைகள்
பலவுள்ளன.
ஆனால், அவன் மனைவி சீதையை கடத்தி வந்து இலங்கையில்
அசோகவனத்தில் சிறை வைத்த இராவணன் இலங்கை மன்னன் என்பதனால் இவனுக்கு இலங்கேஸ்வரன்
எனவும் பெயர் உண்டு.
குறிப்பிட்ட அசோகவனம் அமைந்துள்ள இடத்தில் நாம் சீதையம்மன் கோயிலை பார்க்க முடியும். சிங்கள மக்களும் வழிபடும் இவ்விடத்திற்கு சீதா எலிய என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் என்ற ஆளுமையை வெறுமனே நடிகர் என்ற
August 3, 2024
August 1, 2024
ரணிலின் தேர்தல் வியூகம் அனைவரையும் நெருக்கடிக்குள் தள்ளி யுள்ளது. சஜித் பிரேமதாஸ முன்னணியில் இருக்கின்றார் – அநுரகுமார திஸநாயக்கா முன்னணியில் இருக்கின்றார் என்னும் கதைகள் ஓய்ந்து ரணிலுடன் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைகின்றனர் – ரணிலை எந்தக் கட்சிகள் ஆதரிக்கின்றன – என்றவாறு தென்னிலங்கையின் தேர்தல் களம் மாறியிருக்கின்றது.
இது எவருமே எதிர்பாராத விவாதம். ரணில் எந்த அடிப்படையில் போட்டியிட போகின்றார் என்னும் கேள்விக்கு பெரும்பாலானவர்களின் பதில் – அவர் ராஜபக்ஷக்களோடுதான் இணைந் திருப்பார் – அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை என்றே இதுவரையில் இருந்தது. ஆனால் அவரோ, சுயேச்சை வேட்பாளராக தன்னை அறிவித்தி ருக்கின்றார். அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் அடையாளத்துடன்தான் மீண்டும் அதிகார அரசியலுக்குள் நுழைந்தார். காணாமல் போய்விட்டார் –
இனி அரசியலில் அவரை ஒருபோதுமே காணமுடியாது என்னும் ஆருடங்களின் மத்தியில்தான் ரணில் அவரின் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார். ஒருவேளை சஜித் அன்றைய சூழலில் சரியாக ஆடியிருந்தால் ஒருவேளை ரணில் காணாமலும் போயிருக்கலாம். சஜித்தோ மேடை சரியில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால், எந்த மேடை கிடைக்கின்றதோ அதில் ஆடிக் காட்டுபவனே சாணக்கியன் என்பதே ரணிலின் கணக்காக இருந்தது. ரணிலை பலரும் நரி என்பதுண்டு. அரசியலில் நரியாக இருப்பது தேவை யானதுதான். ஏனெனில், அதிகாரத்துக்கான ஆட்டத்தில் நரிகள்தான் இருக்கின்றன என்றால் நரியாக இருப்பது மட்டும்தான் ஒரேயொரு புத்திசாதுர்ய மான நகர்வாகும். ஆனால், இந்த விடயத்தை தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் மட்டும் ஒருபோதும் கற்றுக்கொள்ள முயற்சிப்பதில்லை – கற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம்பிடிக்கின்றனர். ஒரு தேர்தல் களம் திறக்கப்பட்டுவிட்டது.
செப்டெம்பர் முதல் தொடர்ந்து சென்னை – பலாலிக்கிடையே இண்டிகோ விமான சேவை
புதிய அம்சம் கொண்டதாக 3 நிறங்களில் கடவுச்சீட்டு
மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!
நாட்டில் முதலிட முன்வருமாறு புலம்பெயர் இளைய தலைமுறையினருக்கு அழைப்பு
இன்று முதல் Online புகையிரத ஆசன முன்பதிவு
நாட்டில் வேகமாகப் பரவும் இன்ஃப்ளூவன்ஸா வைரஸ்
செப்டெம்பர் முதல் தொடர்ந்து சென்னை – பலாலிக்கிடையே இண்டிகோ விமான சேவை
குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை மேற்கொள்ளக்கூடிய வசதி கொண்ட இந்திய நிறுவனமான இண்டிகோ, அதன் சர்வதேச வழித்தட வலையமைப்பில் யாழ். பலாலிக்கு புதிதாக மேலதிக விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
காசாவின் கான் யூனிஸ் நகரத்தில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ்: சடலங்கள் மீட்பு
படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர்கள்
காசா போரில் தலையிட வாய்ப்பு; எர்துவான் எச்சரிக்கை
காசாவில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவினால் மக்கள் மீண்டும் ‘ஓட்டம்’
கலாசார சொத்து ஒப்பந்தத்தில் அமெரிக்கா–இந்தியா கைச்சாத்து
காசாவின் கான் யூனிஸ் நகரத்தில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ்: சடலங்கள் மீட்பு
மத்திய காசாவில் புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த இஸ்ரேலியப் படை தெற்கு நகரான கான் யூனிஸில் இருந்து திடீரென்று வாபஸ் பெற்ற நிலையில் இடிபாடுகளுக்கு மத்தியில் பலஸ்தீனர்கள் அங்கு திரும்பியுள்ளனர்.
ஜூலை மாதம் (ஆடி) வந்துவிட்டது. ஆடி துர்கா தேவிக்கான மாதம், இந்த மாதத்தில் பல கொண்டாட்டங்கள் உள்ளன.
ஜூலை 28, 2024 ஞாயிற்றுக்கிழமை விநாயகர் பூஜையுடன் தொடங்கி 10 நாள் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
ஆகஸ்ட் 03ஆம் தேதி சனிக்கிழமை தேர் திருவிழா நடைபெறுகிறது.
ஆடி பூரம் திருவிழாவின் ஒவ்வொரு இரவும் ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் தெய்வீக பிரதக்ஷனை நடக்கிறது.
ஆகஸ்ட் 07, 2024 புதன்கிழமை:
சிறப்பு ஆடி பூரம் பூஜை ஆகஸ்ட் 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு பால்குட அபிஷேகம் நடக்கிறது.
ஓம் நம சிவாய
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி
https://www.svtsydney.org/wp-
தேதி: 11 ஆகஸ்ட், 2024 - ஞாயிறு
இடம்: சிவன் கோவில் வளாகம்
நிகழ்ச்சி காலை 8:30 மணிக்கு தொடங்குகிறது
காலை 8.30 மணி : நிருத்தி வலம்புரி கணபதிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனையும் அதைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) மூலவருக்கு அபிஷேகம்.