மரண அறிவித்தல்


.

                             திரு .சபாரட்ணம் சந்திரபோஸ் காலமானார்

                                                 
மறைவு 01.08.2014


யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் Claremont Meadows  நியூசவுத்வேல்சை வதிவிடமாகவும், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலும் சிட்னி UTS இலும் பணியாற்றியவருமான சபாரட்ணம் சந்திரபோஸ் அவர்கள் ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சிட்னியில் காலமானார்.
அன்னார் ஸ்ரீரஞ்சனியின் அன்புக்கணவரும், காலம் சென்ற மயூரனின் அன்புத்தந்தையும்,  செல்வி என்று அழைக்கப்படும் பங்கயற்செல்வி ஸ்ரீதரன் (சிட்னி) ஜெயலஷ்மி (யாழ்) காலம் சென்ற லக்ஷ்மணலால்,  குபேரலால் (சிட்னி) , காலம் சென்ற கணேஸ்வரன் ,  ரவீந்திரலால் (யாழ்) , காலம் சென்ற பாலச்சந்திரலால் , சுந்தரலிங்கம் (பிரான்ஸ்) , திருஞானசெந்தில்லால் (யாழ்) , ஞானா(யாழ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஸ்ரீதரன் ( ST Clair SYD  ) , பாலினி , இந்திராணி ஆகியோரின் மைத்துணரும்,  பிரவீனின் அன்பு மாமனாரும்  தனுஷா , ரொஹான் , ரோகினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.00 மணியில் இருந்து 9.00 மணிவரை
Academy Funeral Services , No -10, Jane St , Blacktown இல் வைக்கப் பட்டு 

 இறுதிக்கிரிகைகள்  6ம் திகதி புதன் கிழமை மதியம்  12.30 மணியில் இருந்து 2.30 மணிவரை  Pinegrove Memorial Park and Crematorium, Kington St , Minchinbury யில் இடம் பெறும் 


இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

தொடர்புகளுக்கு

ஸ்ரீதரன் - (St Clair )  0470 383 574
பிரவீன் ஸ்ரீதரன்    0402 389 954
ஸ்ரீரஞ்சனி               9673 2984

மானிடத்தின் பேராசை..!




கென்யா நாட்டின்,
கொடும் கோடையிலும்,
பனிக் கவசம் சுமக்கின்ற,
கிளிமாஞ்சரோ மலைக்குன்றின்,
அடிவாரத்தில்………!

பிளெமிங்கோ பறவைகள்,
உழுது கோடு வரைந்த நிலம்,
பாளம் பாளமாய்,
பிளந்து கிடக்கிறது!

பிளந்த நிலத்தின் வடுக்களுக்குள்,
புதைந்து மறைகின்ற,
சிறு தவளைக் குஞ்சுகள் கூட,
கதிரவனின் கொடுங்கரங்களின்,
வெம்மையை உணர்கின்றன!

நாளைய மேகங்களின்,
வருகைக்காக,
நம்பிக்கை சுமந்து,
அவை வாழ்ந்திருக்கின்றன!

சிட்னி முருகன் கோவிலில் ஆடிப்பூரம் 30.07.2014

.

குட்டித்தீவில் கொட்டிய தமிழ் மொரீஷியசில் புலம்பெயர் தமிழர்களின் மாநாடு கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்


மொரீஷியசின் பிரதமர் முனைவர் ராம் குலாம்  தலைமையில் ஆசியவியல் கல்வி மையம்மற்றும் மொரீஷியசின் அரசு அனுசரணையுடன் புலம் பெயர் தமிழர் மாநாடு மொரீஷியசில்ஜூலை 23 மகாத்மா காந்தி நிறுவனத்தில் கோலாகலமாகத் தொடங்கியது . இது  தமிழர்அடையாளம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் தலைப்பில்புலம்பெயர்ந்த தமிழர்களின்முதல் மாநாடுமூன்று நாளும் அங்கு முத்தமிழ் அருவி கொட்டியதில் காதுகளும் மனமும்நனைந்தன,
உலகத்தமிழர்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும்தமிழர்களை ஒன்றிணைக்கும் முதலாவது அனைத்துலக மாநாடு மொரீஷியசில்புலம்பெயர்ந்த தமிழர் மாநாடு  என்ற தலைப்பில் மூன்று நாள் மாநாடாக ஜூலை 23 முதல்25 வரை  கொண்டாடப் பட்டதுதொடர்ந்து மூன்று நாட்கள் திருவிழாவாக நடந்தேறியது,


தமிழைக் கொண்டாடும் இன் நிகழ்வின் பின்புலமாக பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்மற்றும் ஆசியவியல் கல்வி மையம் இயக்குனர் ஜோன் சாமுவேல் ஆகியோரின் பெருமுயற்சி இருந்தது குறீப்பிடத்தக்கதாகும்.
இன் நிகழ்வு இனிதே நடந்ததுதவிர மொரிஷியஸ் நாட்டின் கலை மற்றும் கலாசாரஅமைச்சகம்புலம் பெயர்ந்த தமிழர்களின் சர்வதேச சங்கம்சென்னை ஆசிய கல்விநிறுவனம்மொரிஷியஸ் தமிழ் கோயில் அறக்கட்டளை ஆகியன இணைந்து,இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.


உலகம் முழுவதும் இருந்து சுமார் நாற்பதற்கும் மேற்பட்ட  நாடுகளிலிருந்து வந்தபுலம்பெயர்ந்த தமிழர்கள்அவர்களின் பிரதிநிதிகள்தமிழ் அறிஞர்கள் என முன்னூறுக்கும்மேற்பட்ட  தமிழர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்அவர்கள் கலந்து கொண்டு உலகம்முழுதும் வியாபித்துள்ள தமிழின் பெருமை பற்றி பேசினார்கள்இதில் கல்வி அமர்வு,அறிவியல் அமர்வுஆன்மிக அமர்வு என பல்வேறு அமர்வுகள்  ஆய்வுக் கட்டுரைசமர்ப்பித்தல்கருத்தரங்கங்கக்ங்கள் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூன்றுநாட்களும் .இடம்பெற்றனமாநாட்டில் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் கலாசாரத்தைபாதுகாக்கவும்உலக நாடுகளில் தமிழர்களின் நிலையை மேம்படுத்துவதற்கானதீர்மானங்களும் நிறைவேற்றபட்டன.

காயத்திரி ஹோமம் 09.08.14

.

Please note that Sri Sadguru Sharavanabava will be arriving Sydney soon.

மெல்பனில் தனிநாயகம் அடிகளார் நினைவரங்கு -ரஸஞானி

.
மெல்பனில் தனிநாயகம்  அடிகளார்    நினைவரங்கும்  கலை - இலக்கிய  நிகழ்வுகளும்  சங்கமித்த    பெருவிழா  

  
                                    அவுஸ்திரேலியா    தமிழ்   இலக்கிய   கலைச்சங்கத்தின்  வருடாந்த எழுத்தாளர்   விழா   அண்மையில்    கலை   இலக்கிய   விழாவாக நடைபெற்றது.   சங்கத்தின்   நடப்பாண்டு   தலைவர்   டொக்டர்   நடேசனின் தலைமையில்    மெல்பனில்  St. Bernadettes     மண்டபத்தில்   மதியம்  முதல்   இரவு  வரையில்   நடந்த   இவ்விழா   அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி   மக்களை   நினைவு    கூர்ந்தும்   உலகெங்கும்   போர்களினால் மடிந்த   இன்னுயிர்களுக்கு   மௌன  அஞ்சலி    நிகழ்த்தியும் தொடங்கப்பட்டது.
செல்வி  கீர்த்தனா   ஜெயரூபனின்  வரவேற்புரையுடன்    ஆரம்பித்த நிகழ்வுகளில்    முதலாவதாக   தமிழ்த்தூதுவர்    தனிநாயகம்    அடிகளாரின் நூற்றாண்டை    முன்னிட்டு   நினைவரங்கம்   இடம்பெற்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற கமல்ஹாசன் பேச்சு

.

தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் சோழநாச்சியார் பவுண்டேஷன் சார்பில் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிறார் ஆளுநர் கே.ரோசய்யா. விழாவில் இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, எஸ்.பி.முத்துராமன், சோழநாச்சியார் ராஜசேகர், பிரிட்டிஷ் துணை கமிஷனர் பரத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: க.ஸ்ரீபரத்

தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் சோழநாச்சியார் பவுண்டேஷன் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. ஆளுநர் கே.ரோசய்யா கலந்து கொண்டு விருதினை வழங்கினார்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:

கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மாருதி' விருது

.
அன்பானவர்களே,
எம் பணிவான வணக்கம்.


அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டிற்கான 'மாருதி' விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகளை 
உங்களிடமிருந்து வேண்டி நிற்கின்றோம்.

தமிழ் மொழியினதும், தமிழ்ச் சமுதாயத்தினதும் உயர்வுக்காக, அவுஸ்திரேலிய மண்ணில்/மண்ணிலிருந்து தன்னலமற்ற சேவையாற்றிய ஒருவரை, தமிழ் மக்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வுசெய்து, அவுஸ்திரேலியக் கம்பன் கழக உயர் 'மாருதி' விருதினை, 2012ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் கம்பன் விழாக்களில் வழங்கி வருகின்றோம்.

மேற்படி விருதுக்கான பரிந்துரைகள், அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களிடமிருந்து எதிர்வரும் 10-08-2014ஆம் திகதிக்கு முன்னர் எதிர்பார்க்கப்படுகின்றன.

திரும்பிப்பார்க்கிறேன் - முருகபூபதி

.
இலங்கையில்   கல்விக்கும்  இலக்கியத்திற்கும்  அயராது சேவையாற்றிய   ஆய்வறிஞர்   முகம்மது  சமீம்.

                             
   கடந்த  சில  மாதங்களாக   முற்போக்கு   இலக்கிய   முகாமிலிருந்து அடுத்தடுத்து   எனது  இனிய   நண்பர்களை  நான் இழந்துகொண்டிருக்கின்றேன்.
இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்   முன்னாள் செயலாளர்   நண்பர்   பிரேம்ஜி   ஞானசுந்தரன்   அவர்களின்   மறைவின் துயரத்தின்  சுவடு   மறையும்   முன்னர்   தமிழ்   நாட்டில்   மூத்த படைப்பாளி   இலக்கிய  விமர்சகர்   தி.க.சிவசங்கரன்   மறைந்தார். அவருக்கும்   இரங்கல்  எழுதி   எனது   நினைவுகளுக்கு   அவரை மீண்டும்   அழைத்து   மனதிற்குள் உரையாடிக்கொண்டிருந்தவேளையில் ---  இதோ  நானும்  வருகிறேன் என்னையும்    அழைத்துக்கொள்ளும்   என்று   நெஞ்சத்தினுள் பிரவேசித்துவிட்டார்     இனிய   நண்பர்    சமீம்   அவர்கள்.
அவரது   மறைவுச்செய்தியை  அறிந்தவுடன்  கடந்த  காலங்கள்தான் ஓடிவருகின்றன.   நான்   இலக்கிய   உலகில்   பிரவேசித்த  காலப்பகுதியில்  அதாவது 1972  ஆம்  ஆண்டு   காலப்பகுதியில்தான்   சமீம்  எனக்கு அறிமுகமானார்.  அவர்  கம்பளை  சாகிராக்கல்லூரி   அதிபராகவும்  பின்னர்   கிழக்குப்பிராந்திய   கல்வி  பணிப்பாளராகவும்  பணியாற்றிய காலகட்டத்தில்    எமது    இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்    பணிகளிலும்   தீவிரமாக   இணைந்து   இயங்கினார்.

இலங்கைச் செய்திகள்


பொது பல சேனாவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பு: அமெரிக்கா

யாழ். ஊடகவியலாளர்களிடம் மூன்று மணிநேரம் பொலிஸார் விசாரணை

பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் : திகதியை உறுதிசெய்தது வத்திக்கான்

இலங்கை அகதிகளை ஆஸி.க்கு அனுப்பிய இருவர் கைது

இலங்கை அகதிகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டமை சரியானதே

யுத்தத்தின் பின்னர் வடக்குப் பகுதியில் பௌத்த வழிபாட்டுத்தலங்கள் அதிகரிப்பு


நினைவுகள் இனிமை: துயரங்கள் நிறைந்த கணங்களுடன் – 3

.
ஆசிரியர் சுந்தரதாஸ் மூலம் கற்றதும் பெற்றதும் – திருநந்தகுமார்


சென்ற முறை தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளைத் தொட்டுச் சென்றிருந்தேன். நிறைவு நாள் நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்தினுள்ளே நடைபெறவே ஏற்பாடுகள் செய்திருந்தனர். எனினும் எதிர்பார்த்ததிற்கும் மேலாக பலமடங்கு கூட்டம் அன்று திரண்டமையால் தான் மேடையை வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே அமைத்திருந்தனர்.  தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் பேராசிரியார் நயினார் முகமது அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தான் காவலர் வண்டி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தது.  அண்மையில் தமிழ் ஆய்வாளரும் அறிஞரும், கடலியல் நிபுணரும் பிரபல பதிப்பாளருமான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் தமது முகநூலில் பேராசிரியர் நயினார் முகமது அவர்கள் 23/07/14 அன்று தனது எண்பத்தைந்தாவது வயதில் அமெரிக்காவில் காலமானர் என்ற செய்தியை பதிவு செய்திருந்தார். நயினார் முகமது அவர்கள் திருச்சியில் ஈழத்தமிழ் மாணவரைப் பேணியவர் என்றும் தனது தமிழாராய்ச்சிக்கு வழிகாட்டியவர் என்றும் பெரியவர் சச்சிதானந்தம் குறிப்பிட்டிருந்தார். தமிழாராய்ச்சி மாநாட்டின் விருந்தினர் வரவேற்புக் குழுவின் தலைவராகக் கடமைபுரிந்த ஐயா சச்சிதானந்தம் அவர்கள் அரிய இரு படங்களை இணைத்திருந்தார். அப்படங்களை இங்கு இணைத்துள்ளேன். முதலாவது படத்தில் பேராசிரியர் நயினார் முகமது அவர்கள் உரையாற்றுகிறார். மேடையில் உலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் அப்போதய தலைவர் பேராசிரியர் வித்தியானந்தன் அமர்ந்திருக்கிறார். இரண்டாவது படத்தில் அப்போதய உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) சந்திரசேகரா அவர்கள் அலங்கார ஊர்திப் பவனியினை தொடக்கி வைப்பதற்கு முன்னதாக கைலாசபிள்ளையார் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் காணப்படுகிறார். அருகில் மாநாட்டுச் செயலாளர் வி.எஸ் துரைராஜா அவர்கள்.

நம்மிடமிருந்து விடைபெற்ற 'வானொலிக் கலைஞன்' ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

.
இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்களில் ஒருவராகிய திரு.ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் இன்று காலை(29.07.2014) இலங்கை  சிலாபம் அரச மருத்துவ மனையில் காலமானார். அன்னாருக்கு வயது 74 ஆகும்.
220px-Rajaguru.jpg இளமைக் காலத்தில்
திரு.இரா.சே.கனகரத்தினம் திரு.கனகரத்தினம் அவர்கள் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான அறிவிப்பாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை சுமார் முப்பது ஆண்டுகள் பிரபல அறிவிப்பாளராகப்  பவனி வந்தார். இலங்கை வானொலியின் புகழ் பூத்த அறிவிப்பாளர்களாகிய கே.எஸ்.ராஜா, பி.எச். அப்துல் ஹமீத், மயில்வாகனம் சர்வானந்தா, வி.என்.மதியழகன், ஜோக்கிம் பெர்னாண்டோ, நடராஜா சிவம், ஜெயகிருஷ்ணா, ஜி.போல் ஆன்டனி, ராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி ஆகிய அத்தனை அறிவிப்பாளர்களுடனும் பணி புரிந்தவர் என்ற பெருமை மட்டுமல்லாது, இவர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடியும் ஆவார்.

சங்க இலக்கியக் காட்சிகள் 18- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

சிறைப்பட்டாள் தலைவி! முறைப்பட்டாள் தோழி!


மருகூர்ப்பட்டினம் என்று ஓர் ஊர். அழகான ஊர். அந்த ஊரிலே ஒரு பெரிய வீடு. அந்த வீட்டிலே செல்வம் நிறைந்து கிடக்கிறது. கிழக்குத் திசையிலே காலைநேரத்தில் உதித்து எழுகின்ற சூரியன் தனது கதிரின் வெப்பத்தால் மக்களின் கால்களில் சூடேற்றுகிறான். பகல்பொழுது ஆரம்பமாகின்றது. செல்வம் நிறைந்த அந்தப் பெரிய வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள். பொற்றொடியணிந்த பெண்கள் அவர்களை விருந்தோம்புகின்றார்கள். அந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு முன்னர் கொக்கின் இறகினைப்போன்ற வெண்மை நிறமான சோற்றை காகங்களுக்குப் போடுகிறார்கள். காகங்கள் அந்தச் சோற்றை உண்ணுகின்றன. சோற்றை உண்ட காகங்கள் பறந்து செல்கின்றன. மாலைவேளை வருகின்றது. பசிய கண்களையுடைய அந்தக் காகங்கள் அங்காடித்தெருவில் நிழலில் குவிக்கப்பட்டுள்ள இறால்மீன்களைக் கவர்ந்து சென்று உண்ணுகின்றன. பின்னர் அங்கிருந்து கடற்கரைக்குப் பறந்து செல்கின்றன. அங்கே மரக்கலங்கள் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. கடலிலிருந்து கரைக்கு வந்து மோதுகின்ற அலைகளால் அந்த மரக்கலங்கள் அசைந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் கூம்பிலே போய் இந்தக் காகங்கள் அமர்ந்துகொள்ளுகின்றன. அத்தகைய அழகு நிறைந்தது மருகூர்ப்பட்டினம்.

"ராஜகுரு சேனாதிபதி என்ற பெயரைப் பயன்படுத்த மயில்வாகனமே காரணம்...''

.

"என் தங்கச்சி பெயர் நோனம்மா. பாசமலர் படத்தில் வரும் அண்ணன் தங்கை அதாவது சிவாஜி, சாவித்திரி மாதிரி தான் நாங்கள் இருவரும் வாழ்ந்தோம். என் தங்கச்சி மீது உயிரையே வைத்திருந்தேன். எங்கு சென்றாலும் தங்கையை அழைத்துச் செல்வேன். ஒரு நாள் என் அம்மாவை என் தங்கை திட்டினாள். நான் அதை கண்டுக்கொள்ளவில்லை. அப்போது என் அம்மா, "என்ன உன் தங்கச்சி திட்டுறத வேடிக்கை பார்க்கிறியா..?" என்றார் என்னிடம். உடனே எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. என் தங்கையை என் கோபம் தீருமட்டும் அடித்தேன். பாவம் என் தங்கை! துடித்துப் போய்விட்டாள். அந்த சம்பவத்திற்குப் பின் அவள் என்னோடு பேசுவதில்லை. நானும் கதைப்பதில்லை. வீட்டில் அவள் தான் சமையல் செய்வாள். சாப்பாட்டை தட்டில் போட்டு விட்டு நான் இருக்கும் அறைக்கு எதிரே இருக்கும் கதவு நிறையில் சாய்ந்து கொண்டிருப்பாள். அவள் அப்படி நின்றால் அவள் என்னை சாப்பிட கூப்பிடுகிறாள் என்று அர்த்தம். என் தங்கையை நான் அப்படி அடித்திருக்கக் கூடாது. அவசரப்பட்டுவிட்டேன்.

 என் தங்கையை அடித்ததை எண்ணி நான் என் மனசுக்குள் அழுத நாட்கள் அனேகம். பிறகு என் தங்கைக்கு பிடித்தவனையே அவளுக்கு திருமணமும் செய்து வைத்தேன். எல்லாமே பாசமலர் படத்தில் வருவது போல.... சில காலங்களுக்கு பிறகு என் தங்கையின் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் கிளம்ப ஆரம்பித்தன.

இத்தாலிய குறும்படப் போட்டியில் ஈழத்தமிழனுக்கு முதல் பரிசு!

.

ஈழத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்னுமொரு மைல்கல்லாக அமைந்திருப்பது “MISINTERPRETATION”  “மொழிப்பிறழ்வு” எனும் குறுந்திரைப்படம்,  அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி திரைப்பட கல்லூரி ஒருங்கமைத்திருந்த இத்தாலிய குறும்பட ப் போட்டியில், பல மொழி குறுந்திரைப்படங்களுடன் போட்டியிட்டு முதலாம் பரிசை தட்டிச்சென்றுள்ளதாகும்.  இப்படத்தில், ஒரு ஈழத்து அகதிப்பெண்ணின் துன்பங்கள் தத்துருபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஈழத்து கதையை சொல்லவேண்டிய கோணத்தில்  இருந்து, சரியான கதை தெரிவுடனும், தெளிவுடனும், கலாச்சார சீர்கேடுகள், வன்முறைகள் போன்றவை இல்லாமல் மிக அழகான முறையில் இயக்கி அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஈழன் இளங்கோ அவர்கள்.

உலகச் செய்திகள்


ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தடைவிதிப்­பு­கள் தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டுறவை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது : ரஷ்யா

அமெரிக்காவில் இரு காட்டுத் தீ

மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டமை ஒரு போர் குற்றமாக கருதப்படலாம்

தனது பெயரை மாற்ற மலேசியா விமான சேவை முடிவு

காஸா மீது வான், கடல், தரை மார்க்கமாக இஸ்ரேல் உக்கிர தாக்குதல்; 60 பேர் பலி

ரஷ்யா அணுசக்தி ஏவுகணை உடன்படிக்கையை மீறியுள்ளது - அமெரிக்கா குற்றச்சாட்டு

நைஜீரியாவில் இரு பள்ளிவாசல்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள்; 6 பேர் பலி

சிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014 30.08.14

.



கொலஸ்ட்ரோல் நம்மைக் கொல்லுமா?

.
கொலெஸ்ட்ரோல் (Cholestrol) என்பது வெண்மை நிறத்திலான மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் (காட்டாக எஸ்ட்ரோஜென்), பித்த நீர், வைட்டமின் D போன்ற உடலின் பல்வேறு முக்கியச் செயல்பாடுகளில் பங்கு வகிக்கும் புரதச் சத்துகள் மற்றும் திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் உதவிகரமானதாகும்.

கொலெஸ்ட்ரோலை உடல் எங்கிருந்து பெறுகிறது?

கொலெஸ்ட்ரோலை நமது உடல் பொதுவாக இரண்டு விதங்களில் பெறுகிறது.

முதலாவதாகநமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறதுநமது உடலுறுப்புகளுள் ஒன்றான கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000மில்லிகிராம்கள்வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.

என் பார்வையில் கண்ணதாசன் --கீதமஞ்சரி

.

என் பார்வையில் கண்ணதாசன் - கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடம்











திரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்ததொரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார்.இலக்கியங்களிலிருந்து வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால்,இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லைபந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறதுஆனால் அது தனக்கானதில்லை என்பதை அவரும் அறிவார்நாமும் அறிவோம்.

ஷேக்ஸ்பியரின் வீடு - கவிதா முரளிதரன் 

.

  • ஷேக்ஸ்பியர் மனைவியின் வீடு
    ஷேக்ஸ்பியர் மனைவியின் வீடு
    பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த ஒரு கவிஞனால் 21-ம் நூற்றாண்டில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்? அந்தக் கவிஞன் ஷேக்ஸ்பியராக இருந்தால், தான் பிறந்து, வாழ்ந்த சிறு நகரத்தை வர்த்தகமும் வரலாறும் சந்திக்கும் புள்ளியாக மாற்ற முடியும். ஏவான் நதிக்கரையின் மீது அமைந்துள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவான் என்ற சிறுநகரத்தின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களித்துக்கொண்டிருப்பது ஷேக்ஸ்பியர்தான்.
இலக்கிய ஆர்வலர்களின் மெக்கா என்று அழைக்கப்படும் ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவானில் ஷேக்ஸ்பியர் பிறந்த வீடு, திருமணத்திற்கு முன்பு அவரது மனைவி ஆன் ஹாத்வே வாழ்ந்த வீடு, ஷேக்ஸ்பியரின் மகள் சூசான்னா மருத்துவரான அவரது கணவருடன் வாழ்ந்த வீடு, ஷேக்ஸ்பியரின் தாய் மேரி ஆர்டனின் வீடு, ஷேக்ஸ்பியர் புதைக்கப்பட்ட தேவாலயம் என்று இன்றளவும் இலக்கியப் பயணம் மேற்கொள்பவர்களை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக இருக்கிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட் அப்பான் ஏவான் நகரத்தின் பொருளாதார ஆதாரமாக இருப்பது ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இந்த வீடுகள்தாம்.

கருப்பு ஆடி - ஈழன் இளங்கோ அவுஸ்திரேலியா

.

இயற்கை அழகின் ஆதி அந்தம்   - இலங்கை மண்ணே என்றிடலாம்!
ஈழ மண்ணின் கலை வளமோ      - இமயம் வரை என்றிடலாம்!
என்ன வளம் இல்லை  எங்கள் மண்ணில்?
சுற்றிலும் கடல்  -  உப்பிற்கு பஞ்சமில்லை!
காடுகள்  மலைகள்  -  ஆறுகள்  அருவிகள்!   - நீருக்கும் பஞ்சமில்லை!
திக்கெட்டும் தோட்டம்!   -  உணவிற்குப் பஞ்சமில்லை!
வைரம்    வைதூரியம்   -   முத்து   பவளம்   என்று!
செல்வம்   செழித்துக்   கொழித்த   பூமி   அது!  -  இவை   இருந்து   என்ன   பயன்?
சிறப்பாய்    சிரித்துக்  களித்த   காலங்களோ    - நினைவுகளாய்   மட்டும்  -  நெஞ்சில்    இன்று!

தார்   உருக்கித்    தெரு போடும்   வீதிகளில்
கறுப்பு   வெள்ளைப்   பூக்களாய்  - வெள்ளைச் சீருடையில்  -  எங்கள்  சின்னஞ்சிறார்கள்!
கதைகள்   சில   பேசி    -   பாக்கள்   பல   பாடி  - பூக்கள்   பறித்து   -    சிரித்துக்   களித்து   வரும்    
அந்த    வெள்ளைப்பூக்களில்  - பூத்துக்குலுங்கும்   செம்பருத்திப்    பூச்சாயம்!
அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்! - வயல்   வரம்பில்   நடக்கையிலே     - வணக்கம்    கூறும்!
கோயில்   மேள   இசை   ஒலியும்  -  கூவித்திரியும்  குயில்  இசையும்  - காதுக்கு   விருந்தளிக்கும்!
தெருவோரங்களில்  தென்னைகள்   -   வீழ்ந்து கிடக்கும் தேங்காய்கள்  - இவர்களுக்கு   கால்ப்   பந்து!

.

36 யானைகளில் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்கம் எங்கே ???

ங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்...

''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை.

கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்!''

தமிழ் சினிமா

 .
திருமணம் எனும் நிக்காஹ்





ஒரு படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை விரிவாக சொல்ல முடியாத அளவிற்கு பல திருப்பங்களுடன் இருந்தால் அந்த படத்தின் வெற்றி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டு விடும். ஆனால், அந்த திரைக்கதையை படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு இருந்தால் என்ன செய்ய முடியும்.
Tamil shooting spotதிருமணம் எனும் நிக்காஹ்
ஒரு பிராமணப் பையனும், பிராமணப் பெண்ணும், ரயில் பயணத்தில் முஸ்லிம் பெயரில் பயணிக்கும் போது காதல் வயப்படுகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் முஸ்லிம் என நினைத்து காதலைத் தொடர, அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ், இதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. இதை எப்படிப்பட்ட சுவாரசியத்துடனும், திருப்பங்களுடனும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டார் அறிமுக இயக்குனர் அனிஸ்.
நல்ல தயாரிப்பாளர், நல்ல நட்சத்திரங்கள் கிடைத்தும் திரைக்கதை வலுவாக இல்லாததால் இந்த 'திருமணம் எனும் நிக்காஹ்' திக்கித் திணறி திண்டாடுகிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் பட்டியலில் அனிஸும் இடம் பெற்று விட்டார்.
Tamil shooting spotதிருமணம் எனும் நிக்காஹ்
பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெய், ரயிலில் டிக்கட் கிடைக்காத காரணத்தால் பிளாக்கில் அபுபக்கர் என்ற பெயரில் டிக்கட் வாங்கிப் பயணிக்கிறார். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நஸ்ரியா, கம்பெனி வேலையாக ஆயிஷா என்ற முஸ்லிம் தோழி செல்ல முடியாத காரணத்தால் ஆயிஷா என்ற பெயரில் பயணிக்கிறார். அப்போது சக பயணி ஒருவரால் நஸ்ரியா தூங்கும் போது வீடியோ எடுக்க, அதைத் தடுத்து அந்த பயணியை போலீசிடம் மாட்ட வைக்கிறார் ஜெய். பின்னர் இருவரும் சென்னை திரும்பியதும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ஜெய் தன்னை அபுபக்கர் என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள, நஸ்ரியா, ஆயிஷா என்ற முஸ்லிமாகவே காட்டிக் கொள்ள காதல் நாடகம் ஆடுகிறார்கள். ஜெய், நஸ்ரியாவைக் காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் நஸ்ரியா தனக்கு காதலில் விருப்பமில்லை என்கிறார். பின்னர், தனக்குள்ளும் காதல் இருப்பதை உணர்ந்து ஜெய்யைக் காதலிக்கிறார்.
Tamil shooting spotதிருமணம் எனும் நிக்காஹ்
ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் மற்றவர் முஸ்லிம் அல்ல, பிராமணர் என்ற உண்மைத் தெரியவர வீட்டில் காதலைத் தெரியப்படுத்துகிறார்கள். குடும்பத்தினர் அவர்களிருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்க, ஏதோ ஒரு குற்ற உணர்வால் திருமணத்தன்று இருவருமே சேர்ந்து முடிவெடுத்து திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள், பிரிந்தும் விடுகிறார்கள். அதன் பின் ஜெய், நஸ்ரியா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை. அட...இரண்டாவது பாதி கதையை கரெக்டாதான் சொல்லிட்டமா ? நாம சொன்னதுதான் சரியா, இல்லை இயக்குனர் வேற ஏதாவது நினைத்திருந்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். இடைவேளைக்குப் பிறகு அவ்வளவு குழப்பமான புரியாத அளவிலான திரைக்கதை.
Tamil shooting spotதிருமணம் எனும் நிக்காஹ்
ஜெய், அப்படியே வந்து போகிறார். ஆரம்பக் காட்சியில் நஸ்ரியாவைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டு நடிக்கிறார், அவ்வளவுதான். அதன் பின் தான் விஜயராகவாச்சாரி, அபுபக்கர் என்ற இரண்டு விதமான நடிப்பைத் தொடர வேண்டிய ஒரு சூழ்நிலை. இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் காட்ட வேண்டும் என்றெல்லாம் அவர் முயற்சிக்கவில்லை. கொஞ்சம் அப்பாவித்தனத்துடனும், பயந்த சுபாவத்துடனும் அதே 'எங்கேயும் எப்போதும்' பார்த்த நடிப்பையே வெளிப்படுத்துகிறார். கொஞ்சம் மாத்தி ட்ரை பண்ணுங்க பாஸ்.
Tamil shooting spotதிருமணம் எனும் நிக்காஹ்
இந்தப் படத்தில் நடித்த ராசியோ என்னமோ நஸ்ரியா, சீக்கிரமே கல்யாணம் ஆகிப் போகப் போறாங்க. விஷ்ணு ப்ரியா என்ற உண்மையான கதாபாத்திரப் பெயரை விட, ஆயிஷா என்ற பெயரில் மனதில் இடம் பிடித்து விடுகிறார். ஆனாலும், ஒரு குழப்பமான கதாபாத்திரத்தையே உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இவர் எப்போது ஜெய்யைக் காதலிக்க ஆரம்பிக்கிறார், எதற்காக வேண்டாமென்று விலகிச் செல்கிறார், திரும்பவும் எங்கோ ஒரு இடத்தில் 'அபுபக்கர்' என்ற பெயரைக் கேட்டதுமே தனக்குள்ளும் அவர் மீது காதல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறாரா என்பதெல்லாம் சரியாக விளங்கவில்லை. ரசிகர்கள் எதிர்பார்க்கும் துறு துறு நஸ்ரியாவில் பாதிதான் இந்தப் படத்தில் இருக்கிறார்.
Tamil shooting spotதிருமணம் எனும் நிக்காஹ்
சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஹெப்பா பட்டேல் அதிகமாகவே ஈர்க்கிறார். அதிக வசனங்கள் இல்லை, அதிக காட்சிகள் இல்லை, ஆனாலும் பார்வையாலேயே வீசும் அந்தக் காதல் பார்வை கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அடுத்த படத்திலாவது முழு கதாநாயகியாக ஜொலிக்கட்டும்.
Tamil shooting spotதிருமணம் எனும் நிக்காஹ்
மற்ற கதாபாத்திரத் தேர்வுகளில் யதார்த்தமான முகங்கள் நிறையவே உள்ளது. குறிப்பாக ஜெய், நஸ்ரியா இருவரது குடும்பத்தார்களும், ஹெப்பா பட்டேல் அப்பாவாக நடித்திருப்பருவம் அப்படியே பிராமண, முஸ்லிம் குடும்பத்தினரை கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரம் என்று தனியாக யாருமேயில்லை. நகைச்சுவை இல்லாததும் குறையாகவே உள்ளது.
Tamil shooting spotதிருமணம் எனும் நிக்காஹ்
கொஞ்சம் தடுக்கி விழுந்தாலும் படத்தில் பாடல்களைப் போட்டு விடுவார்கள் போல. எத்தனை பாடல்கள் என கணக்கு வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு பாடல்கள் வந்து போகின்றன. 'கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்' பாடலும், படமாக்கிய விதமும் அருமை.
Tamil shooting spotதிருமணம் எனும் நிக்காஹ்
'திருமணம் எனும் நிக்காஹ்' - சைவ விருந்தும் இல்லை, அசைவ விருந்தும் இல்லை...!!
நன்றி தினமலர் சினிமா