சதீஸ் வர்சனின் மகன் Lydian Nadashwaram உலகத்தில் முதன்மையான பியானோ வாத்திய கலைஞர்

.

இசையமைப்பாளர் சதீஸ் வர்சனின் மகன் Lydian Nadashwaram உலகத்தில் முதன்மையான பியானோ வாத்திய கலைஞராக நிரூபித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு எமது ATBC கலைவிழாவுக்கு வந்து இசை முழங்கி எல்லோரையும் ஆச்சரியத்தி ஆழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் பியானோ மாத்திரமல்ல Drums வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவர்.

நீ தான் அந்த வானின் நட்சத்திரம்.. - வித்யாசாகர்!

.

னைக் கண்டால் மட்டுமே
பாய்கிறதந்த மின்சாரம்
பிறப்பிற்கும்
இறப்பிற்குமாய்..

உனக்காக மட்டுமே
இப்படி குதிக்கிறது என் மூச்சு
வானுக்கும்
பூமிக்குமாய் ..

உன்னை மட்டுமே
தேடுகிறது
கண்கள்
அழகிற்கும் அறிவிற்குமாய் ..

ஒருத்தியைக்கூட
பிடிக்கவில்லை
ஏனோ - நீ
ஒருத்தி உள்ளே இருப்பதால்..

உனைக் காண மட்டுமே
மனசு அப்படி ஏங்குகிறது
ஆனால்,
காதல் கத்திரிக்கா யெல்லாம்
அதற்குப் பெயரில்லை, 

இது அதற்கும் மேல்!

நீ தான்
எனக்கு அந்த
கனவில் வரும் பெண்,
நீ தான் எனக்கு அந்த
காணக் கிடைக்காத தேவதை,
நீயே எனக்கந்த 
வானத்து நட்சத்திரம்,
நீ மட்டுமே எனக்கு
அத்தனைப் பிரியமானவள்!

வா.,
ஒருமுறை சந்திப்போம்
மறுமுறை தெரியவில்லை; 
ஒருவேளை
உன்னில் நான் கரையாதிருப்பின் 
மீண்டும் மீண்டும் சந்திப்போம் வா..

பரமட்டா பொங்கல் விழா 2019.

பரமட்டா பொங்கல் விழா 2019 சென்ற சனிக்கிழமை 16.02.2019 அன்று காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை  பரமட்டா River Side Theater   வெளி மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது. இவ்விழாவினை வழமைபோல் Community Migrant  Resource Centre  இன்  பேராதரவோடு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , கம்பன் கழகம், தமிழ்முரசுஅஸ்திரேலியா,
சந்திப்போம் வாழ் த்துவோம் குழுவினர்  மற்றும் அன்பாலயம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்திருந்தன. வென்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலை உட்பட பல சமூக அமைப்புக்கள் ஆதரவளித்து விழாவினை சிறப்பித்திருந்தன.

பிரதம விருந்தினராக பரமட்டா நகர முதல்வர் Mr .Andrew Wilson  கலந்து கொண்டு சிறப்பித்தார். இவரை வென்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலை அதிபர் திரு அலோசியஸ்  ஜெயச்சந்திரா அழைத்துவர சத்தியமூர்த்தி குழுவினரின் நாதஸ்வர இசை முழங்க பொங்கல் நிகழ்வு சரியான நேரத்திற்கு தொடங்கப் பட் டது . நிகழ்ச்சி தொகுப்பாளராக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்  திரு சிசம்பு பிரபாகரன் தொகுத்து வழங்கினார் . மங்கள விளக்கை Mr .Andrew Wilson  ஏற்றிவைக்க, பொங்கல் பானையை திரு திருமதி செ .பாஸ்கரன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள் .அவுஸ்திரேலிய கீதத்தையும் தமிழ்மொழி வாழ்த்தையும்  செல்விகள் துவாகினி ரட்ணசீலன் , சிவாஞ்சலி ரட்ணசீலன் ஆகியோர் மிக அழகாக இசைத்தார்கள்.

திருமுறை விழா 23-02-2019 சனிக்கிழமை பி.ப. 5.00 மணி

.

இடம்:  விஷ்ணு சிவா கோயில்82 Mawson Drive,  ACT 2607
காலம்:        23-02-2019 சனிக்கிழமை பி.. 5.00 மணி    
தலைமை:    கலாநிதி கணேசலிங்கம்
நிகழ்ச்சி நிரல்
பஞ்சபுராணம்:   செல்வி நிருபா இரத்தினவேல்
சிவபுராணம்:      சபையோர் சேர்ந்து ஓதல்
மாணவர் பேச்சு:  
1. ஆலயம் தொழுவோம் -  ஹேதாரன் பிரமேந்திரன்
சிவபெருமானின் முத்தொழில் - மாதுரி துர்வாசர்
திருமுறை இசை:  திருமதி தமிழ்செல்வி யோகானந்தம் அவர்களின்  “கானாமிர்த  இசைப்பள்ளி மாணவர்கள்
தலைமையுரை:   கலாநிதி கணேசலிங்கம்
நடனம்:            'திருவிழா'
                          Drஅபிராமி யோகானந்தன் அவர்களின் மாணவர்கள்

சிறப்புரை:     ‘'திருமந்திரம் காட்டும் வழி'
                                திரு . ஸ்ரீஸ்கந்ததாஸ்சட்டத்தரணிசிட்னி

நாடகம்:      குரு பக்தி’
நன்றியுரை:  
தேவாரம்:         

                    அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் ல்லை  - திருமந்திரம்
 o   அன்பர்கள் பாரம்பரிய உடையில் வருவது விரும்பத்தக்கது.
ü  இரவு உணவு வழங்கப்படும்

விழா அமைப்பாளர்
தொ.பேஎண்: 61563658;  0470325468; 0444533121

இன்று ( 17.02.2019) 90 வது அகவையை தொட்டுநிற்கிறார் கவிஞர் அம்பி ..சிட்னியில் எங்கள் மத்தியில் வாழும் மூத்த எழுத்தாளர் கவிஞர் அம்பி என்று அன்பாக அழைக்கப்படும் அம்பிகைபாகர் அவர்களின் 90 வது பிறந்த தினம்  இன்று  17-02-2019 என்பது மகிழ்வாக இருக்கிறது. 

இலங்கை சாகித்திய விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். கொஞ்சும் தமிழ், அம்பி பாடல்,  வேதாளம் சொன்ன கதை, சிறுவர் பாடல்கள்,  யாதும் ஊரே…அம்பி கவிதைகள், பாலர் பைந்தமிழ், கிறீனின் அடிச்சுவடு மருத்துவத் தமிழ் முன்னோடி போன்றவை  அவரால் எழுதப்பட்ட நூல்களுள் சிலவாகும். 

அம்பியின் பவளவிழாவை முன்னிட்டு அவரது வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் விரிவான ஆய்வு நூல் (அம்பி: வாழ்வும் பணியும்) 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட்து 

அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் தாசீசியசின் நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிட தக்கது. 

அவுஸ்திரேலியாவில் நடந்த பல கவிஅரங்குகளை தலைமை தாங்கிய ஒரு மூத்த கவிஞர். பல கவிதை நூல் வெளியீடுகள் இவர் தலைமையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

தமிழ்முரசுஅவுஸ்திரேலியா கவிஞர் அம்பி ஐயா அவர்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றது .

அன்றும் இன்றும் - அங்கம் 02 - ரஸஞானி

.


தெற்கின் சந்திரிக்காவும் வடக்கின் சந்திரகலாவும்


                                                                          
தமிழறிஞர் ஒருவர், தெருவில் சென்று கொண்டிருந்தார். சைக்கிளில் வந்த ஒருவன், கவனிக்காமல் அவர் மீது மோதி விட்டான். உடனே அவன்  " ஐயா,  மன்னித்துக் கொள்ளுங்கள். தெரியாமல் மோதி விட்டேன்."  என்றான்.
இதைக் கேட்டதும்   அந்த தமிழறிஞர், கோபமாக, " மன்னிப்பு என்பது உருதுச் சொல்!  பொறுத்துக் கொள்ளுங்கள் என்பதே சரி."  என்றார்.
மோதியவனும் அவ்வாறே சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான். அந்தத் தமிழறிஞர்தான் தமிழ் உலகில் புகழ்பெற்ற  தேவநேய பாவாணர்!

இவரது பெயரில் சென்னையில் ஒரு நினைவு மண்டபமும் இருக்கிறது.
அவர் அன்று சொன்ன கருத்து, இன்றளவும் விவாதிக்கப்படுகிறது. ஆய்வறிஞர்கள் உருது மொழியையும் தமிழ் மொழியையும் இதற்காகவும் ஆராய்ந்தார்கள்.

இது அன்று நடந்த சம்பவம். இன்று நடக்கும் சம்பவங்களுடன் மன்னித்தல் - பொறுத்தருள்தல் பற்றி பார்த்தால் பல சுவாரசியங்களை காணமுடிகிறது.

இலங்கையில் நீடித்த போரினால் கொல்லப்பட்டவர்கள், ஆயுதம் ஏந்திய இயக்கங்களினால் அநாவசியமாக கொல்லப்பட்ட சமூகத்தலைவர்கள், சமூக நலன் விரும்பிகள், கல்விமான்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை  பல்லாயிரங்களையும் தாண்டி இலட்சத்தை எட்டிப்பிடிக்கும். அத்துடன் தாக்குதல் சம்பவங்களில் படுகாயமுற்று உடல் ஊனமுற்று - கண்பார்வையை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளியாக மாறிப்போனவர்கள், இன்றும் வலிசுமந்த மேனியர்களாக நடமாடுகின்றனர்.

மாமல்லபுரத்துச் சிற்பங்கள் நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

.

சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள் யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பாதிப்புக்கு உள்ளாகிய நாடுகள் அதனால் ஏற்பட்ட அழிவில் இருந்து தம்ம நிவர்த்திக்க முனைந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேரழிவு உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய போதும் சில புதிய தகவல்களும் எமக்குக் கிடைக்கின்றன.

அண்மையிலே வெளிவந்த ஒரு செய்தி எம்மை வியப்புக்குள்ளாக்கியது. சென்னைக்கு அருகில் உள்ல மகாபலிபுரம் என்னும் கடற்கரை கடல் அனர்த்தம் ஏற்பட்ட சமயத்தில் 100 மீற்றர் வரை உள்வாங்கியதாம். இவ்வாறு உள்வாங்கிய சமயத்தில் மகாபலிபுரத்துக் கடலுக்குள் பல சிற்பங்களைக் காணக்கூடியதாக இருந்ததாம்.

இது வரை இப்படியாகக் கடலின் அடியில் இருந்த சிற்பங்கள் யாராலும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு ஒரு சுனாமி ஏற்பட்டிராவிட்டால் மேலும் பலகாலம் இது யாரின் கண்ணிலும் பட்டிருக்காது. சுனாமி அனர்த்தத்தின் போது இதைக் கண்டதால் தற்போது இவை பற்றி அறிவதற்கு தொல்பொருள் அகழ்வாய்வாளர்களும் கடற்படையினரும் ஆய்வில் மூழ்கியுள்ளதாக அறிகிறோம். இந்த ஆய்வு எத்தனை வியப்பான செய்திகளை அளிக்குமோ என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிசு நகருக்கு வந்த ஒரு பேனா போராளி சொன்ன கதைகள் - துரைசிங்கம் - பிரான்ஸ்

.                               

பிரான்சில் முளைத்து பாரெல்லாம் தமிழ் பரப்பும் கோமகனின்நடுஇணைய இதழின்
ஏற்பாட்டில், கடந்த ஞாயிறன்று  நடந்த இலக்கியச்சந்திப்பில் அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும்  ஊடகவியலாளருமான முருகபூபதியின்  புதிய நூல் சொல்லத்தவறிய கதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
 இலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாளருமான  வாசுதேவன்
தலைமையில் நடு ஆசிரியர் கோமகனின் ஆரம்ப உரையுடன்
கலந்துரையாடல் ஆரம்பமானது. பாரிசு படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள்
ஆர்வத்துடன் சபையை அலங்கரித்தனர்

எழுத்தாளர் முருகபூபதி ஊடகராக படைப்பாளியாக சமூக அக்கறையாளனாக புடம் போடப்பட்டவர்.  மேலும் மேலும் இவற்றில் துலங்கி வருபவர்.

வாசகர் இறையனுபவம் - - ராஜலட்சுமி, சென்னை-10

.

வாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’

2016 - ம் ஆண்டு நவம்பர் மாதம், சென்னையை மழை புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த ஒரு நாள். தனியார் பள்ளி ஆசிரியையாகிய நான், பணி முடித்து மாலை 4 மணிக்கு வீடு திரும்பினேன். வீட்டில் சோகத்தோடு என் கணவர் தவித்துக்கொண்டிருந்தார்.

விஷயம் இதுதான். மதியம் 2 மணியளவில், பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்ற எங்களின் ஒரே மகள் இன்னமும் வரவில்லை; அவளைக் காணவில்லை என்றார். இடி இறங்கியதைப் போன்ற அந்தச் செய்தியால் நிலைகுலைந்து போனேன்.
16 வயது பெண்; விவரம் புரியாத வயது. நினைக்க நினைக்க எனக்குள் கவலையும் பயமும் பூதாகரமாக எழும்பி நின்றன. என்ன நடந்தது என்று கணவரிடம் கோபமும் அழுகையுமாய்க் கேட்டேன். `இந்த மழையில் பீச்சுக்குப் போனால் நன்றாக இருக்கும்' என்று கூறி கடற்கரைக்குச் சென்று வர அனுமதி கேட்டிருக்கிறாள். என் கணவர் அனுமதி தரவில்லையாம். அதனால் எழுந்த கோபத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, கடைக்குப் போய்விட்டு வருவ தாகச் சொல்லிச் சென்றிருக்கிறாள். மணி ஐந்தாகியும் திரும்பவில்லை.

மருதூர்க்கனியின் ஐந்து நூல்கள் அறிமுக விழா 24 02 2019

.

காதல் எனும் கனியமுது - மகாதேவஐயர் ஜெயராமசர்மா

.
 •     இளமையிலும் காதல் வரும் 
          முதுமையிலும் காதல் வரும்
      எக்காதல் இனிமை என்று
          எல்லோரும் எண்ணி நிற்பர்
      இளமையிலே வரும் காதல்
            முதுமையிலும் தொடர்ந்து வரின்
      இனிமை நிறை காதலென
            எல்லோரும் மனதில் வைப்போம் 


        காதலுக்கு கண்ணும் இல்லை
           காதலுக்குப் பேதம் இல்லை
       காதல் என்னும் உணர்வுதனை
           கடவுள் தந்தார் பரிசெனவெ 
       காதலிலே மோதல் வரும்
            காதலிலே பிரிவும் வரும்
       என்றாலும் காதல் எனில்
          எல்லோரும் விரும்பி நிற்பார்


     காதல் என்று சொன்னவுடன்
        கவலை எல்லாம் ஓடிவிடும்
     கனவுபல தோன்றி  வந்து 
          கண்ணுக்குள் புகுந்து நிற்கும்
     கற்பனையில் உலா வந்து
         களிப்புடனே நாம் இருப்போம்
     காதல் என்னும் உணர்வில்லார்
         கல்லினுக்கே சமம் ஆவார் 


  காவியத்தில் காதல் வரும்
     ஓவியத்தில் காதல் வரும்
  கல்வியிலும் காதல் வரும்
      காசினிலும் காதல் வரும்
  அக்காதல் கொள்ள மனம்
     ஆசை பட்டு நின்றாலும்
   அழகு மங்கை தரும்காதல் 
     அனைவருக்கும் பிடிக்கும் அன்றோ 


  மனித குலம் முழுவதற்கும்
      மகிழ்வு எனும் மருந்தாக
  வரமாக காதல் அது 
     வந்து அமைந்து இருக்கிறது 
  புவிமீது நாம் வாழ
      பொலிவு தரும் அமிர்தமென
  காதல் எனும் கனியமுதை
     கடவுள் எமக் களித்துள்ளார் 
      

புதுச்சேரியில் தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா

.


புதுவைப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் உருவாக உள்ள தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தின் தொடக்க விழா 11.02.2019 (திங்கள் கிழமை) மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை புதுச்சேரியில் உள்ள செயராம் உணவகத்தில் நடைபெற்றது.

.தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் வெளியீட்டு விழாவில்  புதுச்சேரி அரசின் சட்டப்பேரவையின் துணைத்தலைவரும், புதுச்சேரி கம்பன் கழகத்தின் தலைவருமான வே.பொ. சிவக்கொழுந்து கலந்துகொண்டு ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தார் மயிலம் திருமடத்தின் அதிபர் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற  ஆவணப்படத் தொடக்க விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி ஆல்பா கல்வி நிறுவனங்களின் தலைவர் வ. பாசிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

கனடாவிலிருந்து வருகைபுரிந்த மருத்துவர் பால் ஜோசப், டென்மார்க்கிலிருந்து வருகைபுரிந்த இராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். இந்த ஆவணப்படத்தில் பணிபுரிய உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.

காமன் விழா: தமிழர்கள் கொண்டாடிய காதலர்கள் தினம்.
காதலர் தினம் என்றதும் இன்று பலருக்குப் பலவித ஒவ்வாமைகள் உண்டாகின்றன. நம் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டுங்கள், அதுவே ஒவ்வாமைக்கு மருந்து. சங்ககால சமுதாயத்தில் காதல் திருமணமே முறையாகும். இதற்கு, சங்க இலக்கியமான அகநானூற்றில் இடம்பெற்ற ‘காதல்’, ‘கற்பு’ ஆகிய அத்தியாயங்களை ஒரு சான்றாகக் கூறலாம்.
சாதிப் பிரிவுகள் இல்லாததால், இன்றைய மேற்கத்திய சமுதாயம்போல் காதல் திருமணங்கள் நடைபெற்றன. இதே காலத்தில்தான் காமனுக்கும் விழா எடுத்தனர். பங்குனி - சித்திரைக்கு இடையே வரும் பவுர்ணமியிலே இளவேனில் காலத்தில் இவ்விழா தொடங்கும். ஆட்சி செய்யும் மன்னனின் அரசு அறிவிப்பு கேட்டதும் மக்கள் தங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரிப்பார்கள். பாட்டு, கூத்து, பட்டிமன்றம் எனத் திருவிழாவுக்கான அனைத்துக் கொண்டாட்டங்களும் தங்குதடையின்றி அரங்கேறும். இதில், பொதுமக்கள் தம்மிடையே எந்த வேறுபாடுகளும் இன்றி ஒன்றாக இணைந்து கொண்டாடினர்.