ஆழ்ந்த அனுதாபங்கள்


.

                                                       
தமிழ் முரசு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திருமதி மதுரா மகாதேவ் அவர்களின் அன்புக்குரிய மாமியார் (மகாதேவின் தாயார்) திருமதி கிரிஜா ஜக்குசிங்க்அவர்களின் மறைவிற்கு தமிழ்முரசு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றது. அவரின் பிரிவால் துயருறும் மதுரா மகாதேவ் குடும்பத்தினருக்கு வாசகர்களின் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

மரண அறிவித்தல்


.

மரண அறிவித்தல்

                                                   திருமதி கிரிஜா ஜக்குசிங்க்

                                                 
                                                            மறைவு 20.05.2011


ஏற்காடு இந்தியாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி கிரிஜா ஜக்கு சிங்க் 20.5.2011 இல் இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு ஜக்கு சிங்கின் அன்பு மனைவியும், அஜீத், மகாதேவ் (சிட்னி), கணேஷ், லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு தாயாரும். Phyllis , மதுரா (சிட்னி),  ஷர்மிளா, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், அஜய், விஜய், கீர்த்தி, டிக்ஸா, ரேஷ்மி, விஷால் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவர். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 21.5.2011 மாலை மூன்று மணிக்கு ஏற்காட்டில் (இந்தியா) நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

தகவல்: மதுரா மகாதேவ்
0403319971

மரமும் நிழலும் - கவிதை - வ.ஸ்ரீநிவாசன்


.

ற்று முன் பார்த்த
சந்திரன் - அருகில் ஒரு தாரகை -
அவற்றை
நாலு அடி நடந்த பின்
தீர முழுதாய்ப் பார்த்துவிட வேண்டும் எனத்
திரும்பினால்
தெரிவது அவற்றை மறைக்கும்
மரமும், நிழலும்தான்.
மரமும், நிழலும் மட்டும்
மட்டமா என்ன?
Nantri: solvanam.com

வசந்தமாலை 2011 - திரு திருநந்தகுமார் -


.   

படப்பிடிப்பு  தனபாலசிங்கம்
சிட்னி தமிழ் அறிவகத்தின் வசந்த மாலை 2011 நிகழ்ச்சி சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை 8/5/2011 அன்று றைட் சிவிக் சென்ரர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இது அறிவகத்தின் 20ஆவது வருடம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நூலகத்திற்கான வாடகை, நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் வாரப் பத்திரிகைகள் கொள்வனவு, தொலைபேசி மற்றும் மின்சாரக் கட்டணம் போன்ற செலவினங்களுக்கு அங்கத்துவ சந்தாப்பணம் போதாமையினால் வேறு நிதி ஆதாரங்களை தேடுதல் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அங்கத்தவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலமும், வருடந்தோறும் நடைபெறும் வசந்தமாலை நிகழ்ச்சி மூலமுமே செலவினங்களை ஓரளவுக்கு

மெல்பேர்ன், சிட்னி நகரங்களில் நடைபெற்ற "தேசிய நினைவேந்தல் நாள்

.

ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும்அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும்விடுதலைக்காக விலையான எம் தேசத்தின் புதல்வர்களையும் நினைவுகொள்ளும்நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேண் நகரங்களில்நடைபெற்றுள்ளன.


மே மாதம் 18ம் திகதி மாலை 4.30 தொடக்கம் மாலை 6.30 வரை மெல்பேணில்நடைபெற்ற நினைவேந்தல் நாள் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுதமது அகவணக்கத்தை செலுத்தினர்.

பவளமும் மணியும் மூன்று மூத்ததலைமுறையினருடன் மூன்று நாட்கள் - முருகபூபதி

.
“ படிப்பென்ன படிப்பு, கலியாணப்படிப்பு” என்று தனது இளமைக்கால சுவாரஸ்யத்தை சொல்கிறார் எண்பத்திரண்டு வயது அம்பித்தாத்தா. இலங்கையில் கொன்றை மரங்கள் செழித்து வாழ்ந்த நாவற்குழி கிராமத்தில் 1929 ஆம் ஆண்டு பிறந்த அம்பிகைபாகர் ஈழத்து இலக்கிய உலகில் கவிஞராக நன்கு அறியப்பட்டவர்.

தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் தமது மனைவி, மக்கள், மருமக்கள். பேரப்பிள்ளைகள் புடைசூழ படுக்கையிலிருந்தவாறு தமது இளமைக்காலத்தை அசைபோடுகிறார்.

தமிழ் மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான பொது அறிவுப்போட்டிகள்


இலங்கைச் செய்திகள்

.      
இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோற்கடித்தோம்


இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்கச் சார்பான அறிக்கையையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தோல்வியடையச் செய்வோம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

புத்தரின் படுகொலை

.

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.

யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்


வெள்ளிப் பாதசரம் - சிறுகதை -இலங்கையர்கோன் -



தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும்வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படிகோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க்குவிந்திருந்தனகுஞ்சுப்பெட்டிஅடுக்குப்பெட்டிதையற்பெட்டிமூடற்பெட்டி,பின்னற்பெட்டி... எத்தனை வகைஅருகில் மாட்டை அவிழ்த்து அதன்வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில்தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாகநுள்ளி 'மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோஎன்று கெஞ்சினாள்.

அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளைஇன்னும் தடவிக்கொண்டிருந்தனகிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்கஆரம்பித்தான்.

சிட்னியில் நூல் வெளியீடு

.
.

உலக சாதனை விருது பெற்ற உலகின் மிகப்பெரிய ஆலயம்



.
உலகின் மிகப்பெரிய ஆலயம் என்று கின்னஸ் விருதை பெற்ற அக்ஷர்தம் என்ற ஆலயம் டெல்லியில் யமுனா நதிக்கரையருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் முழுக்க முழுக்க மார்பிள் கற்கள் மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆலயத்தின் சிற்பங்களை போன்று அக்ஷர்தம் ஆலயத்தின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிட்னி முருகன் கோயிலில் நடை பெற்ற வைஹாசி விசாகம் 17 மே 2011

.
வைஹாசி விசாகம் சிட்னி முருகன் ஆலயத்திலும் சிறப்பாக நடை பெற்றது அன்றைய தினம் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலாவந்த காட்சி மிக சிறப்பாக இருந்தது .அந்தக் காட்சிகளை கீழே உள்ள படங்களில் பார்க்கலாம்.

                                                                                                    படப்பிடிப்பு ஞானி

தமிழ் எழுத்தாளர் விழா - 2011

.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியகலைச்சங்கத்தின் பதினொராவது தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் எதிர்வரும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணி வரையில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் கலை, இலக்கியச்சங்கம் இம்முறை பல்சுவை அரங்கு என்ற தலைப்பில் இலக்கிய கருத்தரங்கு, மாணவர் அரங்கு, விவாத அரங்கு, கவியரங்கு, ஆகியனவற்றுடன் குறும்படக்காட்சிகளையும் நடத்தவிருக்கிறது.

நிகழ்ச்சியின் இறுதியில் இராப்போசன விருந்தும் இடம்பெறவுள்ளது.

கொழும்பு வழியே ஒரு பயணம் - ஈழ விடுதலையுடன் நிறைவுறுகிறது - வித்யாசாகர்!!

.

பீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும்.

யாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா? சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ?

உறங்கிவிடுவாயெனில் ம்ம் சுடு................." ஒருவன் உரக்க கத்த ஒரு கூட்டமே அவன் பின் குரல் கொடுத்து மார்பு காட்டி நின்றது.

நோர்வேயில் நெடியவன் கைது! விசாரணையின் பின் விடுவிப்பு?


.
[ வியாழக்கிழமை, 19 மே 2011, 09:45.06 PM GMT ]

நோர்வேயில் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளார். என தெரிவிக்கப்பட்டுகிறது.

கொலன் நாட்டில் இருந்து வந்த சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்டு தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டு நெடியவன் கைது செய்யப்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தபட்டார்.

நெடியவன் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக ஐரோப்பிய பயங்கரவாத சட்டபடியான வழக்கை எதிர் நோக்கி வருகின்றார். இது தொடர்பாக இன்று நோர்வே தொலைக்காட்சியான ரிவி2 செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதான் காதல் -கவிதை - இரா. சம்பந்தன்


.

தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல்

தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்

தென்றலோ காதலால் பூமீது மோதும்

தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!


சலசலக்கும் அருவிக்கோ நதியில் காதல்


மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
71. எங்கே..?

எங்கே நம்பிக்கை உள்ளதோ, அங்கே அன்பு உண்டு:

எங்கே அன்பு உண்டோ, அங்கே அமைதி உண்டு:

எங்கே அமைதி உண்டோ, அங்கே உண்மை உண்டு:

எங்கே உண்மை உண்டோ, அங்கே ஆனந்தம் உண்டு:

எங்கே ஆனந்தம் உண்டோ, அங்கே இறைவன் உள்ளார்!



72. உண்மையான சாதனை

ரஜினிக்கு என்னதான் பிரச்சினை... ஒரு முழு ரிப்போர்ட்!

 .
புதன், 18 மே 2011 09:29

ரஜினிக்கு என்னதான் பிரச்சினை என்று நாடு முழுவதிலும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.ரஜினி ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்டார்.

இது அவர் ராணாவுக்காக 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மேற்கொண்ட கடும் உடற்பயிற்சி மற்றும் டயட்டின் விளைவு. அதன் தொடர்ச்சியான விளைவுகளாக, நுரையீரலில் நோய்த் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி போன்றவை அவரைச் சற்று கடுமையாக பாதித்துள்ளன.

நுரையீரலில் தேங்கும் திரவம்

உலகச் செய்திகள்

 .
*சிங்கப்பூரின் பிரதிப் பிரதமராக யாழ்ப்பாண வம்சாவளித் தமிழன்!
* பாகிஸ்தானில் இராணுவ காவலரண் மீது அமெரிக்கா  தாக்குதல்
* சர்வதேச நாணய நிதியத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் 


பாகிஸ்தான் பிராந்தியத்தில் மீண்டும் நேட்டோவின் தாக்குதல்

நேட்டோவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலில் இரு படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியருகே வடக்கு வஸிரிஸ்தான் பிராந்தியத்தில் டற்றா கெல் பகுதியில் அமைந்திருந்த பாகிஸ்தானிய இராணுவக் காவலரண் மீது குறித்த ஹெலிகொப்டர் தாக்குதல் நடத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சராக 3 வது முறையாக பதவியேற்றார் ஜெயலலிதா

.

தமிழக முதலமைச்சராக 3 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியை தமிழில் எடுத்துக் கொண்டார் ஜெயலலிதா.

அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். அதில் 24 பேர் புதுமுகங்கள். சட்டசபை தேர்தலில் 160 இடங்களில் போட்டியிட்டு 146 இடங்களை பிடித்த அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அந்த கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.

தென் துருவ தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் வாழ்த்து

.

தென் துருவ தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட  தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. இதை அதன் செயலாளர் திரு விக்டர் ராஜகுலேந்திரன் அனுப்பி வைத்துள்ளார் .அதில் தெரிவிப்பதாவது .