மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில், இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும் கதைத் தொகுப்பின் கதை ( சிறுகதை ) நடந்தாய் வாழி களனி கங்கை ( கட்டுரை ) பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம் ) நூல்களின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 19 ஆம் திதி ( 19-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில் Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806) மண்டபத்தில் நடைபெறும்.
மகாகவி
பாரதியின் உருவப்படத்திற்கு மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும்.
மெல்பன்
வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள
இந்நிகழ்வு, திருமதி மேகானந்தா
சிவராசாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.
திருமதி
சரண்யா மனோசங்கர் தமிழ் வாழ்த்து பாடுவார்.
மூன்று
பகுதிகளாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பெருந்தொற்றினால் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவின் உருவப்படத்திற்கு விளக்கேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரைப்பற்றிய நினைவுரை நிகழ்த்தப்படும்.