தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

இறையினைக் காண இயம்புவோம் மந்திரம் !


 













மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



கந்தனும் மந்திரம் கடம்பனும் மந்திரம்
கண்ணனும் மந்திரம் காளியும் மந்திரம்
சிவனும் மந்திரம் உமையும் மந்திரம்
தேர்ந்திடும் அனைத்தும் சிறந்திடு மந்திரம்

உண்மையும் மந்திரம் நன்மையும் மந்திரம்
கண்ணியம் மந்திரம் கருணை மந்திரம்
தர்மமும்  மந்திரம் தானமும் மந்திரம்
தாராளம் என்பதும் மந்திர மாகும்

வாழ்த்து மந்திரம் வணங்கு மந்திரம்
பணிவும் மந்திரம் பக்குவம் மந்திரம்
அன்பு மந்திரம் அணைப்பு மந்திரம்
அகத்தில் அமர்ந்தால் அனைத்தும் மந்திரம்

தூய்மை மந்திரம் தாய்மை மந்திரம்
வாய்மை மந்திரம் வளங்குதல் மந்திரம்
தாழ்மை மந்திரம் தயவு மந்திரம்
தரமாய் எண்ணிடும் அனைத்தும் மந்திரம்

கவிதை..."பொங்கலோ பொங்கல்!"... மெல்போர்ன் அறவேந்தன்



 




செந்தமிழ் (கவிதை) நடை – அன்று தொட்டு இன்றுவரை! இயற்றியவர் பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்

 














சென்றபல நூற்றாண்டாய்  மரபுக் கவிதை

        செந்தமிழுக் கணிசேர்த்த திறத்தை ஆய்ந்தும்

வென்றேபுதுக்; கவிதையெனப் புதுமைப் சொட்ட

   விதைப்பவரின்; படைப்புகளை மெல்ல முகர்ந்தும்

நன்றெனவே மலரவரும் நாளைய சந்ததி;

   நமக்குத்தர விருப்பவற்றைக் கனவாய்ப் பார்த்தும் 

இன்றெனக்குப் பட்டதினைக் கவியிற் தருவேன்

   என்கருத்திற் பிழையுண்டேல்; பொறுப்பீர் தானே!

 

கவிதைகளின் பரிணாமக் கதைதனைக் கவியிலே

   கச்சிதமாய்ச் சுருக்கியென்றன் கருத்தைத் தருவேன்

புவியிலன்று பூத்திட்ட கவிவகை  என்னே!  

  புதுமையெனப் பொலிகின்ற புதுக்கவி என்னே!

தவிப்புடனே சொல்கின்றேன்  நாளைவருஞ்  சந்ததி

   தமிழைத்தான் நலிவடையச் செய்யுமோ அன்றித்

துவிமொழியாய் ஆங்கிலமும் தமிழும் கலந்த

   தூனமிகு மொழிக்கவிதை படைக்குமோ அறியேன்!

தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 11…..சங்கர சுப்பிரமணியன்.


கோவிலுக்கு செல்லாமல் நம்மை நோக்கி கடவுள் வருவார். ஆதலால் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று கட்டாயம் இல்லை. அவரே நம்மைத் தேடியும் வருவார். அவர்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பவர் ஆயிற்றே. ஆம் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததையே சொல்கிறேன். இப்போது மாடசாமி அண்ணாச்சி குழப்பத்துடன் என்னை கேட்கிறார். நீ எந்த கோவிலுக்கு போனாய் அவர் எப்போது குறுக்கே வந்தார் என்று கேள்வி கேட்டார்.


அண்ணாச்சி, பழமொழி சொன்னால் அனுபவிக்க வேண்டும். இதுமாதிரி கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது என்று சொல்லி விளக்கினேன். ஹுட்டாங்கை பார்க்க முடியாமல் தவறிப்போனதல்லவா? இப்போது அதுவே குறுக்கே வந்ததை சொன்னேன் என்றேன். அவர் முகத்தில் போதிமரத்தடியில் இருந்த புத்தரின் தெளிவைக் கண்டேன்.

மாடியில்லாமல் சின்ன சின்ன வீடுகள் ஒன்றையடுத்து ஒன்றாக சிறு

சந்துக்களில் இருப்பதைக் காணமுடிந்தது. பீஜிங்கில் இப்படி ஒரு இடமா என்று நம்பவே முடியாமல் இருந்தது. பழமையைப் பாதுகாக்கத்தான் இந்த ஏற்பாடு. அதுமட்டுமல்ல ஹுட்டாங் சுற்றுலா பட்டியலில் சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளதும் அவற்றைப் பாதுகாக்க ஒரு காரணம். சீனா முழுக்க இதுபோன்ற ஹுட்டாங்கை சில இடங்களில் பாதுகாத்து வைத்துள்ளனர்.

சிறிய வீடுகளில் சின்ன ஜன்னல். வீடுகளுக்கிடையே சிறு கடைகள் என்று அதன் தோற்றம் எழுநறு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் அத்தெருக்களில் நடந்து செல்வதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஹுட்டாங்கை கடந்து ஒரு திருப்பத்தில் திரும்பவும் மழை தூறல் போட ஆரம்பித்து ஒரு திருப்பம் ஏற்பட்டது.

என்னுள் ஆவி புகுந்து கொண்டது. புதியவனம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது. நான்வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது என்ற மனநிலையை ஏற்படுத்தியது. சீனாவின் கடும் வெயிலால் ஏற்பட்ட வெப்பத்தை மாற்றி குளுகுளுவென ஒரு சூழலை உண்டாக்குயது. ஆனால் நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுத்த கதையாக எல்லோராலும் வாத்தியார் ஆக முடியாது என்பதை உறுதிப்படுத்த பெரிய மழையாக பெய்து கெடுத்தது.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான். இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்றபடி குடை விற்பவன் அங்கு எப்படி வந்தான் என்பதைத்தான் நம்பமுடியவில்லை. அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது ஒருவருக்கு மட்டும் பட்டாபோட்டு கொடுக்கவில்லை அது இந்த குடை விற்பவனுக்கும் அல்லவா பொருந்துகிறது.

ஆபத்பாண்டவன் என்பது ஆபத்துக்கு உதபுபவன் என்று பொருள் கூறுமானால் இவனும் அந்த வரிசையில் இடம் பிடித்துவிட்டான். இவனும் எல்லா வல்லமைகளையும் பெற்றவன் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டிருந்தான். புராணகாலத்தில் கிடைத்த அட்சயபாத்திரம் உறுமாறி அவன் முன்னே மேஜையாக இருந்தது. அதன்மேல் அட்சயபாத்திரம் வழங்கிய உணவைப்போல குறையாமல் குடைகள் குவிந்து கொண்டே இருந்தன.

பெயரை மாற்றி அழைப்பதால் வரும் மன உளைச்சல்! - சங்கர சுப்பிரமணியன்.

 பெங்களூரு நண்பர்கள் வட்டம் பெங்களூரிலுள்ள மத்திய அரசு நிறுவனத்தில் சில நண்பர்கள் இணைந்து நடத்தும் ஒரு அமைப்பு. அதில் நண்பர்கள் வைத்திருக்கும் வைப்புத்தொகை மூலம் அவசர தேவைக்கு நண்பர்களுக்குள் பணத்தை கடனாக கொடுத்து உதவுவார்கள். அந்த அமைப்பில் ஒவ்வொருமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு உணவகத்தில் நண்பர்கள் கூடி மதிய உணவு உண்பதுடன் அமைப்பு சம்பந்தமான கணக்கு வழக்குகளைப் பார்ப்பது வழக்கம்.


அந்த அமைப்பில் முருகனும் ஜெகனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதை அனைவரும் அறிவர். சில ஆண்டுகளாக முருகனின் சொந்த ஊரான நெல்லையில் இருந்து வந்து அங்கு பணிபுரிந்த சிவலிங்கமும் அவர்கள் அமைப்பில் இணைய அவனும் முருகனின் நெருங்கிய நண்பன் ஆகிவிட்டான்.

ஒருநாள் அலசூரில் இருந்த ஜெகா அலசூர் ஏரிக்கரையில் நடைபயிற்சிக்காக சென்றபோது சிவன்செட்டி கார்டனில் வசித்த
பாலமுருகனை சத்தித்தான். பாலாவும் நண்பர்கள் வட்ட உறுப்பினன் ஆவான். ஜெகாவின் முகத்தில் கவலையின் சாயலைக் கண்ட பாலா,

“ஜெகா, என்ன ஏதோபோல இருக்க. வழக்ககமாக இருப்பது போலில்லையே? என்று கேட்டான்.

“பெரிதாக சொல்ல ஏதுமில்லை. ஆனால் கொஞ்ச நாளாக கவனித்தாயா முருகன் நான்கு ஐந்து முறை என் பெயரையே மாற்றிச் சொன்னான்”

“என்ன சொல்ற? உன் பெயரை மாற்றிச் சொன்னானா?”

“ஆமாம்பா, ஜெகா என்ற என் பெயரையே மறந்நு சிவா என்று அழைத்தான்”

“ஓ, அதுவா? அவன் வேண்டுமென்று அழைத்திருக்க மாட்டான். வாய்தவறி வந்திருக்கும். அவ்வளவுதான்.”

“அப்படியொன்றும் தெரியவில்லை. வாய் தவறி அழைப்பதானால் ஓரிரு முறை என்றால் நம்பலாம்” என்று தன் கருத்தைக் கூறினான்.

இதைக் கேட்டுவந்த பாலமுருகன் அவனைத் தேற்றினான். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கலாம். மேலும் அவர்கள் இருவரும் இப்போது ஒரே இடத்தில் வசிப்பதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகூட இருக்கலாம். என்ன இருந்தாலும் நீ தான் அவனது நெருங்கிய நண்பன் என்பது உனக்கே தெரியும் என்றான்.

உன்னை அவனால் அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது என்று சமாதானம் செய்தான். உன் பெயரை நான்கைந்து முறை தவறுதலாக சொல்வதற்கே இவ்வளவு வருந்துகிறாயே? சிலர் வேண்டுமென்றே தொடர்ந்து வேறு பெயரைச் சொல்லி மற்றவர்களை அழைத்து வருகிறார்களே அதைப்பற்றி என்ன சொல்வாய்? என்றான்.

“வேண்டுமென்றா? அவர்கள் யார்? ஏன் பெயரை மாற்றி அழைக்கிறார்கள்?”

அனாமிகாவின் – “ததா கதா”, “உறுமி” – (கவிதைத்தொகுப்புக்கள்) உரை: சி.ரமேஷ்

 





அன்பே வா - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 

இந்திய சினிமாவில் புகழ் பெற்று விளங்கிய நிறுவனம் ஏவி எம் புரொடக்ஷன்ஸ் . இதன் அதிபர் ஏவி மெய்யப்ப செட்டியார் தனது கடின உழைப்பாலும், திட்டமிடலாலும் இந்த நிறுவனத்தை உன்னத நிலைக்கு உருவாக்கி இருந்தார். இவர் தயாரித்த படங்கள் தென் இந்தியாவில் மட்டுமன்றி வட இந்தியாவிலும் , குறிப்பாக ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. 


 தமிழில் சிவாஜி, ஜெமினி, எஸ் எஸ் ஆர் , என்று நட்சத்திர நடிகர்களின் படங்களை தொடர்ந்து தயாரித்து வந்த ஏவி எம் ஒரு நட்சத்திர நடிகரின் படத்தை மட்டும் தயாரிப்பதை தவிர்த்து வந்தார் . அந்த சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல , எம் ஜி ஆர் தான்! தான் தயாரிக்கும் படங்களில் வேறு எவருடைய தலையீட்டையும் விரும்பாத செட்டியார் , எம் ஜி ஆர் நடிப்பில் படம் எடுத்தால் அவரின் தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்பதால் அவரை தவிர்த்தே வந்தார். ஆனாலும் எம் ஜி ஆர் நடித்த நாடோடி மன்னன், தெய்வத் தாய் போன்ற படங்களுக்கு நிதியுதவி வழங்க அவர் பின் நிற்கவில்லை . 

 எம் ஜி ஆர் நடிப்பில் ஒரு படமேனும் எடுக்க வேண்டும் என்று பல

தயாரிப்பாளர்கள் தவம் இருக்க எம் ஜி ஆர் சில தயாரிப்பாளர்களின் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற அஜெண்டாவை உருவாக்கி வைத்திருந்தார். 

 பெரிய தயாரிப்பாளர்களும், ஸ்டூடியோ அதிபர்களுமான பக்ஷிராஜா ஸ்டுடியோவுக்கு மலைக் கள்ளன், மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அலிபாபாவும் 40 திருடர்களும், விஜயா வாஹினி ஸ்டுடியோவுக்கு எங்க வீட்டுப் பிள்ளை படங்களில் நடித்து அவை வெற்றி பெற்ற நிலையில் ஏவி எம் ஸ்டூடியோ , ஜெமினி ஸ்டூடியோ இவை இரண்டுமே பாக்கி இருந்தன. இந்த நிறுவனங்களின் படங்களில் சிவாஜி எற்கனவே நடித்து விட்டார்! 

 இந்த நிலையில் எம் ஜி ஆருக்கு இப்படியொரு எண்ணம் இருப்பதை அறிந்திருந்த அசோகன் , ஏவி எம்மின் புதல்வர்களான முருகன், குமரன், சரவணன் மூவரிடமும் எம் ஜி ஆர் நடிப்பில் ஒரு படம் எடுங்கள் , அவரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று வலியுறுத்தத் தொடங்கினார். தொடர்ந்து எம் ஜி ஆருடன் இடம் பெற்ற அவர்களின் முதல் சந்திப்பிலேயே எம் ஜி ஆர் ஏவி எம் நிறுவனத்துக்கு படம் நடித்து தர உடன் பட்டார் . அந்த படம் தான் அன்பே வா. 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

31 - 01 - 2026 Satதமிழ் இசை விழா  - மாலை 5.30 மணி - தமிழ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும்  நடைபெறும்.  இடம்: சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்

07 - 02 - 2026 Sat: சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது.  இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200
நேரம்: மாலை 6 மணி

20 - 02 - 2026 Fri: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில்  திருவிழா ஆரம்பம்

21 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்

28 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா

01 - 03 - 2026 Sunசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா

02 - 03 - 2026 Monசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா

07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா

                                at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200

இலங்கைச் செய்திகள்

தித்வா புயலால் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச்சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன

கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினருக்கு எதிராக 3 குற்றப்பத்திரிகை தாக்கல்!

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்குச் சென்று ஜனாதிபதி வழிபாடு

வடக்கு, தெற்கு அல்லது கிழக்கில் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும், இனவாதத்திற்கு இடமில்லை - யாழில் ஜனாதிபதி

காணிகளை விட்டு வெளியேறுமாறு 62 காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்! ; அறிவித்தல்களும் ஒட்டப்பட்டன! ; களத்தில் இறங்கிய ரவிகரன்



தித்வா புயலால் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச்சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன

Published By: Vishnu

17 Jan, 2026 | 04:02 AM

(எம்.மனோசித்ரா)

தித்வா புயலுடன் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள், இலங்கையின் மத்திய மலைநாட்டின் இயற்கை வனச் சூழல் தொகுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மலைநாட்டின் இயற்கைக்காடுகளில் 34 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக சுற்றாடற்துறை அமைச்சர் தம்மிக படபெந்தி குறிப்பிட்டுள்ளார்.

தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, தனது அறிக்கையை புதனன்று தன்னிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உலகச் செய்திகள்

போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் -  ஈரான் அரசுக்கு ட்ரம்ப்  எச்சரிக்கை

வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு

ஈரான் போராட்டம் தீவிரம்: 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்

கூகுளுடன் கைகோர்த்தது ஆப்பிள்: தொழில்நுட்ப உலகில் புதிய திருப்பம்

இராணுவ சட்டம் அமுல்படுத்திய விவகாரம் : தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறை  



போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் -  ஈரான் அரசுக்கு ட்ரம்ப்  எச்சரிக்கை 

14 Jan, 2026 | 02:48 PM

ஈரான் போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அதற்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

நேற்று செவ்வாய்க்கிழமை (13) சிபிஎஸ் செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்தபோதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். 

ஈரான் அரசின் கொடூரமான ஒடுக்குமுறையில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்து வருவதை இதன்போது சுட்டிக்காட்டிய ட்ரம்ப், ஈரான் நாட்டின் சர்வாதிகாரத்தை வன்மையாக கண்டித்திருந்தார். 

“போராட்டக்காரர்கள் தூக்கிலிடப்பட்டால், அதற்குப் பிறகு நடக்கப்போகும் சில விடயங்களை நிச்சயமாக நீங்கள் பார்ப்பீர்கள்” என்றும் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 

ஷ்யாமளா நவராத்திரி திருவிழா 19 - 27 /01/2026

அறிவு, கலை, நற்சொல் வளர்ச்சிக்காக ஷ்யாமளா நவராத்திரி திருவிழா



திருவிளக்கு பூஜை 25/01/2026

 




சண்டி மகா ஹோமம் 25/01/2026

 





தமிழ் இசை விழா - சனிக்கிழமை 31/01/2026 - மாலை 5.30 மணி

 

நடைபெறும் இடம் – சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்

நேரம்: மாலை 5:30 மணிக்கு

1    தமிழ் இசை விழாவில் சிறப்பு உரைகள்

2    தமிழ் இசை விழாவில் மாணவர்கள் பங்கேற்பு
3    தமிழ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் தமிழியல் சுவடுகளும் நூற்றாண்டு தின நிகழ்வும்” 07/02/2026

 


ஒருங்கிணைப்பு:  பேராசிரியர் அ.சண்முகதாஸ்

 நாள்:  சனிக்கிழமை 07-02-2026

நேரம்:

 இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 8.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:00

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 சிறப்புப் பேச்சாளர்கள்:

 பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்

இ.இராஜேஸ்கண்ணன்

சு.குணேஸ்வரன்

எம்.எம்.ஜெயசீலன்

சி.ரமேஷ்

மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316

 https://www.ilakkiyaveli.com

சம்ஹிதா 07/02/2025

 சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது

இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200

நேரம்: மாலை 6 மணி





சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் திருவிழா 2026 : 20/02/2026 - 04/03/2026


 









அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா 07/03/2026