மெல்பேர்னில் ஜூன் மாதம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெறுகிறது

மெல்பேர்னில் ஜூன் மாதம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை “சாந்தாஸ் கேக்ஸ்”, சாந்தாஸ் சமையல்” நூல்களின் அறிமுகமும் கூடவே ஒரு கேக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.


                           தமிழ் மணக்கும் கேக் கண்காட்சி மற்றும் நூல் அறிமுகம்


பணம் எடுத்துச் சென்ற பாதுகாவலர் சுடப்பட்டு மரணம்.



ஒரு சப் பாதுகாவலர் வழமைபோல சிட்னி நகரத்தில் அதிகாலை பணம் எடுக்க சென்ற போது திருடன் ஒருவனால் சுடப்பட்டு மரணமடைந்துள்ளார்.

சசெக்ஸ்  வீதியில் அமைந்துள்ள டார்லிங் பாக்கில் உள்ள ஒரு கட்டிடத்தின் உள்வாசலில் அவருடைய நெஞ்சில் ஒரு முறை சுடப்பட்டார். படுகாயத்தோடு அவர் றோயல் பிறின்ஸ் அல்பிறட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு 59 வயது நிறைந்த அந்த பாதுகாவலர் சில மணி நேரத்திற்கு பின்னர் மரணமடைந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து சசெக்ஸ்  வீதி மூடப்பட்டதால் போக்குவரத்து  நெரிசல்   அவ்விடத்தில் ஏற்பட்டது.
அங்கு வந்த நான்கு திருடர்கள் ஒரு பணப்பையோடு தப்பிச் சென்றுவிட்டார்கள்.


சிட்னி இசை விழா 2010  ஜூன் மாதம் 12 ம் 13  ம் 14  ம் திகதிகளில்


சிட்னி இசைவிழா நான்காவது வருட இசைநிகழ்ச்சி ஜூன் 12, 13, 14ம் நாட்களில் சிட்னியில் நடைபெற உள்ளது. இலாபநோக்கற்ற இசைப்பிரியர்களுக்காக நடைபெறும் மூன்று முழுநாள் நிகழ்வு. பல பிரபல கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து  கொள்ளும் மாபெரும் இசைநிகழ்வு. இந்நிகழ்வு உள்ளூர் கலைஞரக ளுக்கும்
இசைபயிலும் மாணவ மாணவிகளுக்ககு மிக்க பயனள்ளதாக அமைகிறது.





சிட்னி தமிழ் அறிவகம் கொடிதினம் 2010 ஒரு பார்வை


                                                                                                                  கு கருணாசலதேவா


யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்து சிட்னி தமிழ் அறிவகம் கொடிவார விழாவை ஒவ்வொரு வருடமும் நடாத்துவது தெரிந்ததே. இவ்வாண்டும் சென்ற ஜுன் மாதம் 5ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் மாலை 6.30 மணி முதல் கொடிதினத்தை சிறப்பாக நடாத்தியது.


பகவத் கீதை - நான்கு தூண்கள்


ஹரே கிருஷ்ணா! சென்ற வாரம் நெறிமுறைகள் குறித்து ஆராய்ந்தோம். இந்த உலகில் இயற்கையும் மிருகங்களும் ஒரு எழுதப்படாத நியமத்தை பின்பற்றுகின்றன. மனிதர்களான நாமும் நான்கு முக்கிய நியமத்தை பின்பற்ற வேண்டும் என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. அந்த நான்கு நெறிமுறைகள் குறித்து இந்த வாரம் ஆராய்வோம்.

                                        இன்னுமொருமுறை எழுதுவேன்
                                                                                          
                                                              நடராஜா முரளிதரன்


நான் சிறு பையனாக
இருந்தவேளை
எனது அம்மம்மா சொல்வாள்
தான் பிறந்த வாழ்ந்த
ஓடு வேய்ந்த
சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி
ஊடுருவி உறைந்து

காலக்கண்ணாடியில் படிந்து
சடத்துவமாய் காட்சி தந்து
மூலக்கூற்றுக் கவர்ச்சி விசையிலிருந்து
பிரிந்து அவை
எங்கே செல்ல முடியும்
வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது

வேலை வாய்ப்புகள் பொருளியலாளர்களின் எதிர் பாப்;பினை விட இரண்டு மடங்கால் மே மாத்தில் அதிகரித்துள்ளது எனப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. வேலையற்றோர் தொகை இம் மாத்தில் 0.24 விளுக்காடுகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது வேலையற்றோர் தொகை 5.2 விளுக்காடாக உள்ளது எனப் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2010 ம் ஆண்டின் முதல் 5 மாதக் காலப் பகுதயில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து தொளாயிரத்தால் அதிரித்துள்ளது எனவும் இது ஒரு வலுவான வளர்ச்சி எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாகூரின் கீதாஞ்சலி
                                                         தமிழாக்கம்: கவிஞர் க. கணேசலிங்கம்

தெய்வத்தை எங்கே தேடுகிறாய்?

மந்திரம் ஓதலும் பாடலும் அட்சர
மாலை உருட்டலும் நீக்கிவிடு!
இந்தநற் கதவுகள் மூடிய கோயிலின்
இருள்நிறை மூலையில் தனிமையிலே
எந்தமெய்ப் பொருளினை ஏத்துகி றாய்? உன்
இருவிழி திறந்துநீ பார்த்துவிடு!
உந்தனத் தெய்வதம் உனக்குமுன் னேயிலை,
உணர்ந்திடு வாய்இதை உலகினிலே!
பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?


நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
அட்சய திருதியை                 
                                                சாந்தினி புவனேந்திரராஜா


சித்திரை அமாவாசையை அடுத்துவரும் மூன்றாம் நாளான அட்சய திருதியை நாள் இந்த ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியில் கொண்டாடப்பட்டது.  “அட்சயம் என்ற சொல்லுக்கு “நிறைவானது , குறைவில்லாதது” என்பது அர்த்தம்.

அட்சய திருதியை அன்று செய்யப்படும் காரியங்கள் நல்லபடியாக நிறைவுபெறும் என்பதும் இத்தினத்தில் தானதர்மம் செய்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதும் குறிப்பாக அட்சய திருதியையில் அன்னதானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். தானங்களில் சிறந்தது அன்னதானம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் அல்லவா! இது கொடுக்கும் தினம் – கொடுப்பதில் இன்பம் கொள்ளும் தினம்.
அதே நேரம் அட்சய திருதியையில் மங்கலப் பொருட்களை வீட்டுக்கு வாங்கிவந்தால் வீட்டிற்கு மகாலட்சுமியை அழைத்து வந்தது போல என்று சொல்வார்கள். அது குங்குமமாகவும் இருக்கலாம், குத்துவிளக்காகவும் இருக்கலாம். ஆனால் தங்கம் வாங்கினால் தான் வீட்டில் செல்வம் தங்கும்(மகாலட்சுமி தங்குவாள்)என்ற ஒன்றை எவரோ ஒரு தங்கவியாபாரி தொடக்கிவிட, அதுவே தாரகமந்திரமாகி அட்சய திருதியையில் தங்கம் வாங்கியே தான் ஆகவேண்டும் என்றாகிவிட்டது.
அவுஸ்திரேலியா மெல்பனில் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி

                                                                                                                -ரஸஞானி

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘அனுபவ பகிர்வு’ நிகழ்ச்சி கடந்த 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கத்தின் தலைவர் திருமதி அருண்.விஜயராணி தலைமையில் மெல்பனில் Spectrum Immigration Services (SIS) மண்டபத்தில் நடந்தது.

கலை,இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம், கணினி வலைப்பதிவு, சமூகம், ஓவியம், சிற்பம், குறும்படம், அறிவியல் உட்பட பல துறைகளைப்பற்றியும் கலந்துரையாடும் ‘அனுபவப்பகிர்வு’ என்னும் வித்தியாசமான அமர்வின் முதலாவது நிகழ்வில் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
                                    தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்  2010‏

முதியோர் கவனிப்பில் கிட்டும் விருப்பத் தெரிவுகள்

SydWest Multicultural Services Inc., Auburn Tamil Society


பல வகைப்பட்ட முதியோர் கவனிப்பு சேவைகள் உள்ளன, இருந்தாலும் உங்களுக்கோ அல்லது உங்களது குடும்பத்தில் உள்ள இன்னொருவருக்கோ கிடைக்கக் கூடிய முதியோர் கவனிப்பு சேவைகளின் வகைகளைக் கண்டறிவது சிக்கலானதாக இருக்கலாம்.