மரண அறிவித்தல்

 .

                                                            

                      திருமதி நாகேஸ்வரி கந்தசாமி 

                                      
                                               

                                                       பிறப்பு 26 09 1932 இறப்பு 20 06 2025

சிங்கப்பூரில் (அன்றைய மலாயா) முத்தையா பார்வதி தம்பதிகளுக்கு இளைய மகளாகப் பிறந்தவரும், உடுவிலை சேர்ந்த காலம்சென்ற பொன்னுச்சாமி கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியுமான நாகேஸ்வரி அவர்கள் 20/06/2025 அன்று காலமானார்.

ஏழு பிள்ளைகளின் தாயாரான நாகேஸ்வரி அவர்கள், பிரான்சில் 25 வருடங்களுக்கு மேலாக பிள்ளைகள், பேரப்பிள்ளகள், பூட்டப் பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேத்தியான கலிசியா வரை மடியில் சுமந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தவர்.

தனது இறுதிக் காலத்தில், சூராவத்தையில் தான் கட்டி வாழ்ந்த வீட்டில் பிள்ளைகள், உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்பி 2022ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வந்திருந்திருந்த நாகேஸ்வரி அவர்கள், தனது 92வது வயதில் அவரது வீட்டில் காலமாகிவிட்டார் என்பதை மிகவும் துயரத்துடன் அறியத்தருகிறோம்..

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் :

புஷ்பலதா தியாகபாலன் : 0774781546 / 0033 611597243
சியாமளா கனேசபாலன் : 0033 601676790

கழுமல வளநகர் மலரென மலர்ந்தார் !

 



















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ...அவுஸ்திரேலியா


சீர்காழி பிறந்தார் சிவனையே கண்டார்
பாலகனாம் வயதில் பரஞானம் பெற்றார்
மூன்றகவை தன்னில் தோடுடைய செவியன்
சீர்காழி பிறந்தார் செப்பினார் தமிழில்

தத்துவம் செறிய தமிழாய் மலர்ந்தது
சைவம் வளர உரமாய் எழுந்தது
இத்தரை இறையை உணரவே வைத்தது
இறை அருளுடனே பிறந்தார் சம்பந்தர்

ஞானக் கொழுந்தாய் இருந்தார் அவரும்
தேனார் தமிழில் திருவருள் செப்பினார்
ஊனாய் உருகி உணர்வாய் உரைத்தார்
உமையே வந்து ஊட்டினார் பாலை

வாழ்நாள் எல்லாம் வருந்தியே நிற்போம் !

 



















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா




உப்பின் அருமை ஒழிந்தால் தெரியும்
அப்பா அருமை இழந்தால் தெரியும்
தப்பிதம் செய்தால் தண்டிப்பார் அப்பா
தடுமாறி விழுந்தால் தாங்குவார் அவரே 

ஏணியாய் இருப்பார் ஏற்றியே நிற்பார்
உயர வைத்து உணர்வில் மிதப்பார்
தன்னை மறப்பார் தன்னை இழப்பார்
பிள்ளை உயர்வே பெரிதென நினைப்பார்

அதிகாரி யாக அடக்கிட முயல்வார்
ஆணவம் இருக்கா அன்பே அமரும்
அச்சம் கொண்டால் ஆத்திரப் படுவார்
அஞ்சா இருவென அணைத்துச் சொல்வார்

ஆஸி தமிழ்க் கல்விச் சமூகத்தில் இருந்து திருமதி புவனா இராஜரட்ணம் பேசுகிறார் பேட்டி கண்டவர் : கானா பிரபா

 கடந்த மூன்று தசாப்தங்களாக இயங்கி வரும் மெல்பர்ன் பாரதி


பள்ளியின் பாரதி பள்ளியின் துணை அதிபராகப் பணியாற்றிய புவனா இராஜரட்ணம் அவர்களால் ஆக்கப்பட்ட 

நான்கு சிறுவர்களுக்கான வில்லிசை நாடக எழுத்துருக்கள் கொண்ட இந்நூல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இளைய சமுதாயத்தின் தமிழ்க் கல்வியை சிறுவர் நாடகங்கள் மூலம் தூண்ட முடியும் என்ற நம்பிக்கையோடு புவனா இராஜரட்ணம் அவர்கள் வழங்கிய செவ்வியை ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக 
எடுத்திருந்தேன். அதனைச் செவிமடுக்க





பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - ---யசோதா

 










தமிழ்வளர்த்த சான்றோர் விழா 2025 சிட்னி முருகன் கலாசார மண்டபத்திலே மே மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அரங்கு நிறைந்த தமிழ் ஆர்வலர்களுடன் ஆரம்பமானது. இந்த வருடம் செந்தமிழுக்கும் சிவநெறிச் சைவசமயத்துக்கும் அளப்பரிய தொண்டாற்றி தமிழ் நாட்டிலும் ஈழவள நாட்டிலும் அறிஞர்களாலே பெரிதும் போற்றப்பெற்ற தமிழ்ச் சான்றோராக விளங்கிய சிவத்திரு நவநீத கிருஸ்ணபாரதியார் அவர்களுக்கு விழா எடுக்கப் பெற்றது. விழாவின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக முன்னாள்தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் தலைவரக அரும்பெருஞ் சேவைகளைத் திறம்படச் செயலாற்றிய சிவத்திரு திருமதி சரோயாதேவி சுந்தரலிங்கம் அவர்களை அவையினருக்கு விழா அமைப்பாளர் பாரதி இளமுருகனார் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.    


செஞ்சொற் செல்வர் கலாநிதி சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்களும்

சைவமன்றத் தலைவர் சிவத்திரு ஜெகநாதன் அவர்களும் சிவத்திரு திருமதி கலையரசி சின்னையா அவர்களும் மங்கல விளக்கினை ஏற்றி விழாவினை ஆரம்பித்துவைத்தார்கள்  









மங்கல விளக்கு ஏற்றும் நிகழ்வின் போது கலாவித்தகர் பல்வைத்திய கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் அவர்கள் இல்லக விளக்கது இருள் கெடுப்பது .. என்று தொடங்கும் தேவாரத்தைப் பண்ணுடன் இசைத்தார். இதைத் தொடர்ந்து விழா அமைப்பாளர் பாரதி இளமுருகனார் இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்தையும் இசையுடன் அழகாக இசைத்தார். விழாவிலே பாடப்பெற்ற தமிழ் மொழி வாழ்த்து

கல்வியும் கருணையும்


 -சங்கர சுப்பிரமனியன்

                                 



என் வீட்டு மேஜை மீது பலரின் வாழ்வில் விளக்கேற்றிய அந்த உயர்ந்தவரின் புகைப்படம் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. இவர் யார்? என்று ஒன்றிரண்டு தடவை என் மகன் சிவா என்னிடம் கேட்டிருக்கிறான். அவ்வளவு எளிதில் சில வார்த்தைகளில் அந்த புண்ணியவானைப் பற்றி சொல்லிவிட முடியுமா? அவரைப்

பற்றிச் சொல்லவெண்டும் என்றால் அவரது பின்னணி அவரால் என்னைப் போன்றவர்கள் அடைந்த பலன் என்று எல்லாவற்றையும் சொன்னால்தான் அவரைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே எனக்கு நேரம் கிடைக்காததால் இன்னொரு நாள் சொல்வதாகச் அவனிடம் சொல்லியிருந்தேன்.

 

"அப்பா, போலாமா? நான் தயார்" பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக சிவா கூப்பிட்டான்.


சிவா பிராட் மீடோஸ் ஆரம்பப் பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கிறான். தினமும் காலையில் அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு வருவது என் வேலை.

 

"சரி, போலாம் வா" என்று சொல்லி ட்ரைவ் வேயில் நின்ற கார் பக்கம் சென்றேன்.


கார் ரயில்வே கிரசண்ட் ரோட்டில் அனிச்ச செயலாய் ஓடிக்கொண்டிருக்க என் மனமோ முப்பது ஆண்டு பின்னே சென்று ரயில்வே கிரசண்டை ஒற்றையடிப் பாதையாக கண் முன்னே விரியச் செய்தது. அந்த ஒற்றையடிப் பாதையில் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தேன். என்னைத் தன்னந்தனியாக தாத்தா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என் பெற்றோர்கள்.  

 

கீழப்பாவூரில் ஒரு வறுமையான குடும்பம் தான் என் குடும்பம். அம்மா, அப்பா, நான், மற்றும் என் தம்பி என நான்கு பேர் தான் எங்கள் குடும்பம். அதிகப் படிப்பில்லாததால் சொற்ப சம்பளத்தில் நெல் அரவை மில்லில் அப்பாவுக்கு வேலை. காலையில் ஏழு மணிக்கு வீட்டை விட்டால் இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு வருவார். அவர் சம்பளம் வீட்டுச் செலவுக்கு பற்றாது. ஆதலால் அம்மாவும் தன்னால் முடிந்த அளவுக்கு குடும்பத்திற்காக உழைத்தார்கள். 

நீ - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 திரையுலகில் கிசுகிசுக்களுக்கும், வதந்திகளுக்கு என்றுமே பஞ்சம்


இருந்ததில்லை. இத்தகைய கிசுகிசுவில் ஒரு சீசனில் அடிபட்ட நட்சத்திரங்கள் தான் ஜெய்சங்கர், ஜெயலலிதா இருவரும். இன்று கூட இவர்களை இணைத்து, தொடர்புபடுத்தி பல கதைகள் அவ்வப்போது உலா வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம்தான் நீ. அறுபது ஆண்டுகளுக்கு முன் இந்தப் படம் வெளி வந்தது. தமிழ் சினிமாவில் ஒற்றை எழுத்தில் வெளிவந்த முதல் படமும் இந்தப் படம்தான்.

 

முதல் படத்துடனேயே பிசி ஹீரோவாகி விட்ட ஜெய்சங்கரையும்,

அதே போல் முதல் படத்திலேயே நட்சத்திர நடிகையாகி விட்ட ஜெயலலிதாவையும் படத்தில் முதலில் இணைத்த பெருமை டைரக்டர் டி . ஆர் . ராமண்ணாவை சாரும். தனது பட நிறுவனமான விநாயகா பிக்சர்ஸ் மூலம் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் ராமண்ணா. அது மட்டுமன்றி அது வரை காலமும் தன்னுடைய உதவி இயக்குனராக பணியாற்றிய கனக சண்முகத்தையும் டைரக்டராக்கி அழகு பார்த்தார் அவர்.
 

கல்வியும், செல்வமும், செல்வாக்கும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் சுந்தரம். கல்லுரி மாணவனான அவனுக்கு அவன் அண்ணனும், அண்ணியும் திருமணத்துக்கு பெண் பார்த்து முடிவெடுக்கிறார்கள். இந்த நிலையில் ஏழைப் பெண்ணான ஜெயாவை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறான் சுந்தரம். ஜெயா ஓர் அனாதை என்பதையும் தெரிந்து கொள்கிறான். வாழ வழியின்றி தற்கொலை செய்ய துடிக்கும் ஜெயாவை மணந்து அவளுக்கு வாழ்வு கொடுக்க முன் வரும் அவனுக்கு அவனின் நண்பர்கள் துணை நிற்கிறார்கள். அண்ணனோ அவனை குடும்பத்தில் இருந்து ஒதுக்கியே வைத்து விடுகிறார். ஆனாலும் அண்ணியின் வற்புறுத்தலின் பேரில் சுந்தரமும், ஜெயாவும் குடும்பத்தில் இணைகிறார்கள். குடும்பத்தில் குதூகலம் பொங்கும் நேரம் மாஜிஸ்திரேடான சுந்தரத்தின் அத்தான் ஜெயாவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவள் இரவு விடுதியில் பாடி ஆடும் பெண் என்றும், விலைமாது என்றும் குற்றம் சாட்டுகிறார் . குடும்பமே கலங்கிப் போகிறது. எல்லோரும் ஜெயாவை பார்த்து நீ என்று விரல் நீட்டி களங்கம் சுமத்துகிறார்கள். அதிலிருந்து ஜெயா மீண்டாளா என்பதே மீதி படம்.

தமிழ் - கன்னட "தக் லைவ்" புயலின் மையத்தில் கமல்ஹாசன்


13 Jun, 2025 | 10:28 AM

டி.பி.எஸ். ஜெயராஜ்

முன்னணி தமிழ் நடிகரான கமல்ஹாசன் தற்போது மூன்று காரணங்களுக்காக செய்திகளில் பெரிதாக அடிபடுகிறார். முதலாவதாக, நடிகரும் அரசியல்வாதியுமான அவர் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து இந்திய பாராளுமன்றத்தின் மேல்சபையான  ராஜ்ய சபாவுக்கு  தெரிவு செய்யப்படவிருக்கிறார். இரண்டாவதாக, சிறந்த திரைப்பட இயக்குநரான மணிரத்தினம் இயக்கிய -  ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு அண்மையில் உலகம் பூராவும் வெளியிடப்பட்டிருக்கும் " தக் லைவ் " ( Thug Life ) திரைப்படத்தின் கதாநாயகன் கமல் ஹாசன். அந்த படத்துக்கு அவர்  கூட்டாக திரைக்கதையை எழுதியதுடன் கூட்டு தயாரிப்பாளருமாவார். மூன்றாவதாக, கமல்ஹாசன் பகிரங்கமாக வெளிப்படுத்திய கருத்துக்களின் விளைவாக மூண்ட ஒரு சர்ச்சைக்குள் அவர் சிக்கிக்கொண்டுள்ளார். 

தமிழ் மொழிக்கும் கன்னட மொழிக்கும் இடையில் சண்டை ஒன்று மூண்டிருப்துடன் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அந்த திரைப்படம் வெளியிடப்படவுமில்லை. சுருக்கமாக சொல்வதானால் கமல்ஹாசன் அரசியல் -- சினிமா புயல் ஒன்றின் மையத்தில் சிக்கியிருக்கிறார்.

இத்தகைய பின்புலத்தில், இந்த கட்டுரை கமல்ஹாசன் மீது கவனத்தை திருப்புகிறது.கமல் என்று பிரபல்யமாக அறியப்பட்ட கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இன்று தலைசிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் மிகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

காசாவின் அல்-அவ்தா மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தாள்.அவளுக்கு மூளை இல்லைஎண்ணங்கள் இல்லை கனவுகள் இல்லை நினைவுகள் இல்லை. ஒரு குறிக்கோளில்லா சடலம்.-டாக்டர் எஸ்ஸிடீன் ஷேஹாப்

Published By: Rajeeban

11 Jun, 2025 | 04:43 PM

வடக்கு காசாவின் அல்-அவ்தா மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தாள், ஆனால் இந்த உலகம் அவளை ஏற்கவில்லை. அவளுக்கு மூளை இல்லை. அவள் அப்பாவித்தனமானவள்  என்;ற அர்த்தத்திலோ அல்லது கவிதையாகவோ நான் இதனை தெரிவிக்கவில்லை.- உடற்கூறியல் ரீதியாக இதனை தெரிவிக்கின்றேன்.

அனென்செபலி. மூளைப்பகுதி இல்லாத பிறவி. எண்ணங்கள் இல்லை கனவுகள் இல்லை நினைவுகள் இல்லை. ஒரு குறிக்கோளில்லா சடலம்.

அவள் முழுமையாக கருவுற்று பிறந்தாள். அவளது தாய் ஒன்பது மாதங்கள் அவளை சுமந்தாள்—தீக்காய்ந்த இரவுகள் அழும் காலைகள் தூசிஇ துக்கம்இ மற்றும் சைரன்களின் இடையேஅவளை சுமந்தாள். பிறந்தாள் ஆனால் காப்பாற்றுவதற்கு உயிர் இல்லை. மௌனமே மிச்சம்.மருத்துவர்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக காணப்பட்டார்கள்.  தங்கள் கைகளின் எல்லைகள் அவர்களை ஏமாற்றியது.

நான் மிகவும் திறமையான மருத்துவநிபுணர்களின் சுத்தமான விரல்கள் நடுங்கியதை பார்த்தேன்.. குழப்பத்தால் அல்ல உணர்வால். 

ஊனமுற்ற வளர்ச்சி. பிறவியியல் தோல்வி. இதுவும் ஒரு விபத்தால் இல்லை போர் காரணமாக. 

குண்டுகள் கட்டிடங்களை மட்டுமல்லமரபணுக்களையும் தாக்கின. 

இலங்கைச் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக பால் புதுமையினரின் நடைபவனி - இது தமிழ்க் கலாசார சீர்கேடு என கீதநாத் கண்டனம்

யாழ். தையிட்டியில் ஆர்ப்பாட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்

தையிட்டிக்கு தென்பகுதியிலிருந்து செல்லவுள்ள இனவாத குழுக்கள் ; மக்கள் குரோத கருத்துக்களையும் புரிந்துணர்வின்மையையும் தவிர்க்கவேண்டும் - காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு : துணை முதல்வரானார் தயாளன்  


நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக பால் புதுமையினரின் நடைபவனி - இது தமிழ்க் கலாசார சீர்கேடு என கீதநாத் கண்டனம் 

10 Jun, 2025 | 07:03 PM

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக நடைபெற்ற பால் புதுமையினரின் (LGBTQ) நடைபவனி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், குறித்த செயற்பாடு தமிழ் கலாசாரம் மற்றும் சமய நெறிகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், 

இவ்விடயத்தில் தனி நபர்களோ அமைப்புகளோ தமது உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியும். எனினும் அவர்கள் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை, குறிப்பாக புனிதத் தலங்களுக்கான இடங்களில் மதிக்கவேண்டியது கட்டாயமானதாகும்.

உலகச் செய்திகள்

 இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு வேளையிலும் ஆர்ப்பாட்டங்கள் - பலர் கைது

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி


இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Published By: Digital Desk 2

14 Jun, 2025 | 01:41 PM

இந்தியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின், அமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கடந்த 12 ஆம் திகதி நண்பகல் புறப்பட்டது.

அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்த்துக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.

ஆஷாதன நவராத்திரி மற்றும் மஹா சண்டி ஹோமம் 26/06/2025

 


சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் ஜூன் 26, 2025
வியாழக்கிழமை முதல் ஜூலை 04, 2025 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் சிறப்பு 9 நாள் ஆஷாதன நவராத்திரி விழாவிற்கு துர்கா தேவியின் ஆசிகளையும் அருளையும் பெற பக்தர்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஜூன் 29, 2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகா சண்டி ஹோமம் நடத்தப்படும்.

மஹா சண்டி யாகத்தில் கலந்து கொண்டு துர்கா அன்னையின் அருளைப் பெற ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானம் உங்களை அன்புடன் அழைக்கிறது.