ஒரு பலஸ்தீனக்குரல் ( கவிதை ) எம். ஏ. நுஃமான்

 இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சொல்கிறார்:

‘We are fighting with human animals’  இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் சொல்கிறார்:

‘Israel is fighting with the enemies of civilization … this war is between forces of civilization and the forces of barbarism’

 









அதற்கு ஒரு எதிர்வினையாக இக்கவிதை


ஒரு பலஸ்தீனக் குரல் - எம். ஏ. நுஃமான்







நீ சொல்கிறாய்


நாங்கள் விலங்குகளுடன் போரிடுகிறேம் என்று


அவர்களை அப்படித்தான் நடத்தவேண்டும்


என்று சொல்கிறாய்


நீ அப்படித்தான் சொல்வாய்


உன் மூளை மரத்துவிட்டது


உன் இதயம் காய்ந்துவிட்டது

விலங்குகளை அவமதியாதே


விலங்குகள் மனிதரின் தோழர்கள்


விலங்குகள் இல்லாத உலகில்


நீயும் நானும் வாழமுடியாது


விலங்குகளை அவமதியாதே



விலங்குகள் ஆக்கிரமிப்பதில்லை


விலங்குகள் குண்டுவீசி மனிதரைக் கொல்வதில்லை


விலங்குகள் ஒரு தேசத்தை அபகரிப்பதில்லை


விலங்குகள் மனிதரைத்


தங்கள் வீடுகளை விட்டுத் துரத்துவதில்லை


கிராமங்களை நிர்மூலமாக்குவதில்லை


விலங்குகள் மனிதரை அகதிகளாக்குவதில்லை


விலங்குகளை அவமதியாதே

கவிதாயினி க. சியாவுடன் ஒரு நேர் காணல் - செ .பாஸ்கரன்

 .

கொடகே தேசிய விருது பெற்ற இலங்கை கவிதாயினி க. சியாவுடன் ஒரு நேர் காணல்.





NSW சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பு (Federation of Community Language Schools) ஒழுங்கு செய்த சமூக மொழிகள் மாநாடு

 .


NSW சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பு (Federation of Community Language Schools) ஒழுங்கு செய்த சமூக மொழிகள் மாநாடு

NSW சமூக மொழிகள் பாடசாலைக் கூட்டமைப்பின் மாநாடு, சனிக்கிழமை, 7 அக்டோபர் 2023 அன்று University of Western Sydney, Bankstown வளாகத்தில் இடம்பெற்றது. இந்தியத்  துணைக் கண்டங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றினர். இவர்கள் அனைவரும் தன்னார்வத் தொண்டு அடிப்படையில் சமூக மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்.  


நியூசவுத்வேல்ஸ்  சமூக மொழிப் பாடசாலைகள் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, சமூக மொழிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முன்முயற்சியாகவும், அதற்கான திட்டமிடலாகவும், இரண்டாவது மொழியைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகின்றவிதமாகவும் அமைந்தது.  புலம்பெயர்ந்த குடும்பங்களிடையே தாய்மொழிப் பாவனை படிப்படியாக குறைந்துவருகிறது என்பதுபற்றிய அக்கறையும் இதன்மூலம் வெளிப்பட்டது.

தமிழ், சிங்களம், குஜராத்தி, ஹிந்தி, மலையாளம், நேபாளம், பஞ்சாபி, சமஸ்கிருதம், தெலுங்கு, உருது போன்ற மொழிகளைப் பயிற்றுவிக்கும் பாடசாலைகளிலிருந்து இவ் ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக மிக அதிகமாகக் காணப்பட்டது. இது வரும் ஆண்டுகளில் தமிழ் மொழிக்கற்றலின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான களத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் கொடுத்தது.  வென்ற்வேத்வில் தமிழ் பாடசாலை, ஹோம்புஸ் தமிழ் பாடசாலை, பாலர் மலர், மவுண்றூயிட் தமிழ் கல்வி நிலையம் மற்றும் ஈஸ்ற்வூட் தமிழ் பாடசாலைகளிலிருந்து தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

படித்தோம் சொல்கின்றோம் : வேதநாயகி செல்வராசா எழுதிய நரைவழியோடிய அனுபவ மொழிகள் முருகபூபதி

இங்கிலாந்திலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஒரு


தமிழ் ஊடகத்தில் பின்வருமாறு ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது.

 “ எண்பது வயது அம்மா  ஒருவருடன் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணிவரையில் பேசிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெண்மணி தேவை.  அதற்கான ஊதியம் பேசித்தீர்மானிக்கப்படும். தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் வரவும். “ 

இந்த சிறுவிளம்பரத்தின் கீழே முகவரியும் தொலைபேசி இலக்கமும் தரப்பட்டிருந்தது.

புகலிட நாடுகளில் வதியும்  முதியோரின்  அந்திம கால நிலை எவ்வாறிருக்கிறது என்பதற்கு குறிப்பிட்ட விளம்பரம் ஒரு பதச்சோறு!

பாடசாலைகளில் இளம் தலைமுறை மாணவர்களின் சுயவிருத்தியை மேம்படுத்துவதற்காகவும் சில பாடத்திட்டங்களை வகுத்துவைத்திருக்கிறார்கள்.

 அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் மூத்த சகோதரி திருமதி வேதநாயகி செல்வராசா அவர்கள் எழுதியிருக்கும் நரைவழியோடிய அனுபவ மொழிகள் நூலை படித்துக்கொண்டிருந்தபோது, மேற்குறிப்பிட்ட விடயங்களே எனது நினைவுக்கு வந்தன.


ஆங்கிலத்தில் “ Experience without education better than  education without   experience. “  என்ற வாசகம் உள்ளது.

அனுபவம் சிறந்த பள்ளிக்கூடம்.  அதில் கற்றுத்தேறும்போது வாழ்க்கை குறித்த தெளிவு பிறந்துவிடும்.

வேதநாயகி செல்வராசா அவர்கள் தனது வாழ்வில் தான் கற்றதையும் பெற்றதையும் எளிய உரைநடையில், மூத்தோர் முதல் இளையோர் வரையில் படிக்கத்தக்கதாக இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஒரு வகையில் இதில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் Motivation நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

வேதநாயகி செல்வராசா அவர்கள் இந்நூலில் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஔவையார், பாரதியார், அன்னை திரேசா, ஆபிராகாம் லிங்கன், ராஜாஜி,  திருவள்ளுவர் பற்றியெல்லாம் பேசுகிறார்.

இந்த முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து கற்றதையும் பெற்றதையும்  தொடர்ந்து எழுதிவந்துள்ளார் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

 “ வயதானவர்கள் வாழ்வனுபவத்தின் களஞ்சியமாக இருக்கிறார்கள். கல்வியறிவு கற்றுத்தராத அனுபவ பாடங்கள் அவர்களிடம் நிறைய இருக்கிறது. வயதாகிறபோது அவர்களுக்கு அதிகளவு நேரமும் இருக்கிறது. இந்த அனுபவத்தையும் நேரத்தையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தாவிட்டால், பல தேவையற்ற சிந்தனைகள் மனதினுள் புகுந்து வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.. “ என்று  இந்த நூலில் என்னுரையாக குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை வாழ்வதற்கே. என்ற வாழ்வியல் தத்துவத்தை ஒவ்வொரு அங்கத்திலும் இழையோடவிட்டுள்ளார் வேதநாயகி செல்வராசா அவர்கள். அவற்றில் குட்டிக்கதைகளும் இழையோடுகின்றமையால், வாசிப்பதற்கும் சுகமாக இருக்கிறது.

இலங்கையை பூர்வீகமாகக்கொண்டிருக்கும் இவர், அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கிறார்.

வாசிப்பை நேசிக்கிறார்.  அதனால், தனது வாசிப்பு அனுபவங்களிலிருந்து சமூகத்திற்கு,  குறிப்பாக இளம் தமிழ்ப்பிள்ளைகளுக்கு பல செய்திகளைச் சொல்கிறார்.

எங்கள் மத்தியில் எமது குழந்தைகளுக்கு  இரவு நேரத்தில் படுக்கையறைக் கதைகளை  ( Bed time stories ) எம்மவர்கள் சொல்லிக்கொடுப்பது குறைந்துகொண்டு வருகிறது.

நாம் சிறுவயதில் பாட்டிமார், தாத்தமார் சொல்லித்தந்த கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள்.  ஆனால், இன்று அவர்கள் தொலைக்காட்சி சீரியல்களை பார்ப்பதில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் எமது இளம் தமிழ் தலைமுறையினருக்காக தனது பொன்னான நேரத்தை செலவிட்டு, இந்த கட்டுரைகளை எழுதித்  தொகுத்திருக்கிறார்.

இந்நூலுக்கான முன்னுரையை  எழுதியிருப்பவர் தேர்ந்த வாசகியும் தன்னார்வத் தொண்டருமான யசோதா பத்மநாதன்.

அதில்,  “ வேதநாயகி செல்வராசா அவர்கள், தனது அனுபவச்சாற்றினை எண்ணையாக ஊற்றி, வாழ்க்கைத் திரியை அறிவுக்கனலால் ஏற்றி இளைய சந்ததிக்கு கொடுத்திருக்கும் கைவிளக்கு இந்த நூல்.  “  என்று விதந்துரைத்திருக்கிறார்.

இந்த பதிவின் தொடக்கத்தில், ஒரு மூதாட்டியோடு தினமும்  சில மணிநேரங்கள்  பேசிக்கொண்டிருக்க ஆள் தேவை என்ற விளம்பரத்தைப்பற்றி குறிப்பிட்டமைக்கும் காரணம் இருக்கிறது.

வேதநாயகி அவர்கள் தனது முதியவயதில் அத்தகைய ஒரு நிலைக்குச்செல்லாமல், வாசித்திருக்கிறார். வாசித்தவற்றை வாழ்வியல் அனுபவமாக நேசித்திருக்கிறார்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 83 கூகுளை ( Google ) கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி சொல்வோம் ! முருகபூபதி


கல்லிலிருந்து கணினிக்கு வந்த தமிழின் அதிசயங்கள் தொடர்பாகவும், Download Journalism – Cut and Past Journalism பெருகும் காலத்தில் வாழ்கின்றோம் என்பது பற்றியும் கடந்த 82 ஆவது அங்கத்தில் சில செய்திகளை எழுதியிருந்தேன்.

இச்செய்தியானது முற்றுப்பெறாமல் தொடருகின்றமையால், மேலும் சில தகவல்களை இங்கே பதிவுசெய்கின்றேன்.

28 பெண் ஆளுமைகள் பற்றி கடந்த ஆண்டு அனைத்துலக பெண்கள்


தினத்தின்போது ஒரு மின்னூலை ( யாதுமாகி ) வெளியிட்டிருந்தேன்.

இந்நூலை வாசகர்கள் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

இதில் இடம்பெற்றிருந்த கட்டுரைகளும் ஏற்கனவே என்னால் எழுதப்பட்டு ஊடகங்களில் வெளியானவைதான்.

ஒரு நாள் கொழும்பிலிருந்து ஒரு பேராசிரியை என்னைத் தொடர்புகொண்டு,   தன்னைப்பற்றி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையின் Word Document  ஐ தனக்கு அனுப்பமுடியுமா..?  “ எனக்கேட்டிருந்தார்.

   என்ன…? திடீரென்று கேட்கிறீர்கள்..?  “ என வினா தொடுத்தேன்.

 “ இங்கே ஒரு அமைப்பு என்னை பாராட்டி கௌரவித்து விருது வழங்கப்போகிறதாம்.  அதற்கு என்னைப்பற்றிய விரிவான குறிப்பு தேவைப்படுகிறதாம். உங்கள் பதிவு விரிவானது. காத்திரமானது. இயலுமானால் அனுப்புங்கள்.   “ என்றார்.

நானும் அனுப்பினேன்.  அதன்பிறகு என்ன நடந்தது?  என்பது எனக்குத் தெரியாது.

மற்றும் ஒரு நாள் எனக்கு நெருக்கமான ஒரு சிரேஷ்ட  பத்திரிகையாளர் தொடர்புகொண்டு, அவருக்கு நன்கு தெரிந்த ஒரு சட்டத்தரணிக்கு ஒரு தலைப்பில் பத்து நிமிடங்கள் பேசுவதற்கு ஒரு உரை தேவைப்படுகிறது. எழுதி அனுப்பமுடியுமா..? எனக்கேட்டு,  தலைப்பினையும் தந்தார். கேட்டிருந்தவாறு எழுதி அனுப்பினேன். அதன் பின்னர் என்ன நடந்தது ? என்பது எனக்குத் தெரியாது.

மற்றும் ஒருநாள் கிழக்கிலங்கையில் ஆசிரியையாக பணியாற்றும்  வளர்ந்துவரும் புதிய தலைமுறை எழுத்தாளரான ஒரு யுவதி தொடர்புகொண்டு, கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை ஒன்றை எனக்கு அனுப்பி, அதற்கு நயப்புரை எழுதி அனுப்பமுடியுமா..? எனக்கேட்டார்.

 “ எதற்கு..?  “ எனக்கேட்டேன்.

 “ தங்கள் பிரதேச தமிழ்த்தின விழா போட்டி நடக்கவிருக்கிறது. குறிப்பிட்ட நயப்புரையை ஆதாரமாக வைத்து மாணவர்களுக்கு பேச்சு தயாரித்து கொடுக்கவேண்டும்  “ என்றார்.

அவர் கேட்டவாறு அந்த நயப்புரையை எழுதி அனுப்பினேன்.

அதன்பிறகு என்ன நடந்தது ?  என்பது எனக்குத்  தெரியாது.

90 ஆண்டுகளை கடந்திருக்கும் இலங்கையின் பிரபல பத்திரிகையில் பணியாற்றிய ஒரு பெண் ஊடகவியலாளர் ஒரு நாள் நடு இரவில் ( அப்போது நேரம் நடுச்சாமம் 2-00 மணி ) தொலைபேசியில் தொடர்புகொண்டு,  “ சேர்… 90 ஆண்டுகளை முன்னிட்டு, எங்கள் பத்திரிகை ஒரு விசேட இணைப்பினை தயாரிக்கிறது. அதன் பயணத்தில் இலக்கியத்திற்கான வகிபாகம் பற்றி ஒரு கட்டுரையை தாமதிக்காமல் அனுப்ப முடியுமா..? காத்திருக்கின்றேன். பக்கம் வடிவமைக்கவேண்டும்.  “ என்றார்.

அந்த நடுநிசியில் படுக்கையைவிட்டு  எழுந்து,  ஒரு தேநீர் தயாரித்து அருந்திக்கொண்டே  அவர் கேட்டிருந்தவாறு ஒரு கட்டுரையை எழுதி தாமதிக்காமல் அனுப்பினேன்.

அதற்கு என்ன நடந்தது?  என்பது மாத்திரம் தெரிந்தது. குறிப்பிட்ட அந்த பெண் ஊடகவியலாளர்,  எனது ஆக்கம் வெளியான பத்திரிகையின் இணைப்பினை அடுத்த சிலநாட்களில் அனுப்பியிருந்தார்.

நூல் அறிமுகம் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்திலிருந்து "சுப்பிரமணியப்பெருமானுடைய திருப்பெருவடிவம்"- 11/11/2023 - சிட்னி முருகன் கல்வி கலாசார மண்டபம்





சூரியகாந்தி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 அந்தஸ்து, கௌரவம் பிரச்னைகளை அடிப்படையாய் கொண்டு


தமிழில் ஏராளமான படங்கள் வந்துள்ளன. இவற்றில் பல படங்கள் சமுதாய அந்தஸ்தை பிரதானமாகக் கொண்டே உருவாகி இருந்தன. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சூரியகாந்தி படம் முதல் தடவையாக கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈகோ பிரச்னையை அடிப்படையாக கொண்டு படமானது.


மோகன், ராதா இருவரும் தொழில் செய்து கொண்டே

காதலிக்கிறார்கள். பெற்றோர்கள் அனுமதியுடன் கல்யாணமும் செய்து கொள்கிறார்கள். கல்யாணத்துக்கு பிறகும் வேலை செய்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். அப்படியென்றால் இல்லறம் மகிழ்ச்சியாகப் போக வேண்டியது தானே . அதுதான் இல்லை . ராதா தன்னை விட அதிகமாக சம்பாதிக்கிறாள் ,அதனால் குடும்பத்தில் அவளுக்கு அதிக மரியாதை , தான் ஒரு செல்லாக்காசு என்று மோகன் நினைத்து நினைத்து மாய்கிறான் . இதனால் தம்பதிகள் இடையே தகராறு வருகிறது. ராதா
விட்டுக் கொடுத்து போக நினைத்தாலும் மோகனின் போலி கௌரவம் , தாழ்வு மனப்பான்மை என்பன அதனை உணரத் தடுக்கிறது. இளம் தம்பதிகள் மீண்டும் சேர்ந்தார்களா என்பதே படத்தின் கதை .

சிக்கலான இந்த கதையை பிரபல கதாசிரியர் பாசுமணி எழுதினார்.தமிழ் சினிமவுக்கு புதிதான இந்த கதைக்கு வசனம் எழுதினார் பேராசிரியர் ஏ எஸ் பிரகாசம். பல இடங்களில் பிரகாசத்தின் வசனங்கள் பிரகாசித்தது. மோகனாக வரும் முத்துராமனும், ராதாவாக வரும் ஜெயலலிதாவும் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தம். துடுக்காகவும், அலட்சியமாகவும் பல படங்களில் நடித்த ஜெயலலிதாவுக்கு இதில் கணவனை அணுசரித்து , அரவணைத்து போகும் பாத்திரம். அந்த பாத்திரமாகவே மாறியிருந்தார் அவர். நடித்ததோடு நின்று விடாது இரண்டு பாடல்களையும் பாடி இருந்தார் அவர். ஆணவம், முரட்டுத்தனம், பிடிவாதம் போன்ற பாத்திரங்கள் முத்துராமனுக்கு புதிதல்ல , அதனை இதிலும் செய்திருந்தார் அவர்.

சிட்னி ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானம் - பொழுதுபோக்குடன் இரவு உணவு - 12/11/2023 மாலை 6 மணி

 










இலங்கைச் செய்திகள்

மலையக மக்களது அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்

திருக்கோணேஸ்வரர் ஆலய வழிபாடுகளில் நிர்மலா பங்கேற்பு

கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நாடு திரும்பாமல் தடுப்பது எனது பொறுப்பாகும்

இலங்கை – இந்தியா பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு; 12 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கொழும்பில்

காசா பகுதியில் இடம்பெயர்ந்த 17 இலங்கையர்களில் 15 பேர் எகிப்திற்கு

சர்ச்சைக்குரிய கருத்தால் சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம்

இலங்கை முழுவதும் பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்த இந்திய நிதி அமைச்சர்

பிரதமர் தினேஷ் – இந்திய நிதி அமைச்சர் அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு

காசா எல்லையில் சிக்கியிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்


மலையக மக்களது அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்

November 3, 2023 6:39 am 

மலையக பெருந்தோட்ட மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடை பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, திருமதி நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

இஸ்ரேலுடன் உறவை துண்டித்தது பொலிவியா

இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலுக்கு ஹுத்திக்கள் உறுதி

காசாவில் இஸ்ரேலின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் எகிப்துடனான ரபா எல்லை முதல்முறையாக திறப்பு

ஈரான் ஆதரவு குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்

காசாவில் முன்னேறும் இஸ்ரேலிய படைகளுடன் பலஸ்தீன போராளிகள் பல முனைகளில் மோதல்

இஸ்ரேலிய துருப்புகள் காசா நகரை சுற்றிவளைப்பு; தொடர்ந்தும் மோதல்

இஸ்ரேலுக்கு 14 பில். டொலர் நிதியளிக்க அமெரிக்கா திட்டம்

காசா தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலையில்லை

காசா வரி வருவாயை நிறுத்தியது இஸ்ரேல்

காஸாவில் இதுவரை கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் தாண்டியது!


இஸ்ரேலுடன் உறவை துண்டித்தது பொலிவியா

November 2, 2023 4:19 pm 

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடர்பில் பொலிவியா இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்திருப்பதோடு மேலும் இரு லத்தீன் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலில் உள்ள தமது தூதுவர்களை திரும்ப அழைத்துள்ளன.

எழுத்தாளர் ஐ.சாந்தன் நேர்காணல்

 


கட்டுரை - கலக்கமடைகின்றனவா தமிழ் தேசியவாத கட்சிகள்?

 


உள்ளூராட்சி தேர்தலை காரணம் காண்பித்து – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னத்துக்கு உரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சி – தேர்தல் முறைமையை முன்வைத்து தனித்து போட்டியிடும் தீர்மானத்தை அறிவித்தது.
உள்ளூராட்சி தேர்தல் என்பதால் வெள்ளோட்டம் ஒன்றை ஓடிப் பார்ப்பதில் கட்சிகள் மத்தியில் தடுமாற்றங்கள் இருக்கவில்லை.
உளளூராட்சித் தேர்தலில் தங்களின் செல்வாக்கை எடைபோட முடியுமென்றே அனைவரும் எண்ணினர் – ஆனால்இ தற்போது நிலைமைகள் தங்களுக்குப் பாதகமாகிவிடுமோ – என கட்சிகளின் தலைவர்கள் அச்சப்படுவதுபோல் தெரிகின்றது.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற பின்னர் – விரைவாக பாராளுமன்ற தேர்தலொன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் நிச்சயம் இடம்பெறுவதற்கான வாய்ப்பில்லை.
ஜனாதிபதி – மற்றும் பாராளுமன்றம் இவைகள் உறுதியான நிலையை அடைந்த பின்னரே ஏனைய தேர்தல்கள் நடைபெறும்.
இந்த நிலையில் கட்சிகளின் தலைவர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற நிலையில் தங்களின் வெற்றி வாய்ப்பு தொடர்பில் கலக்கமடைந்திருக்கின்றனர் எனத் தெரிகின்றது.
இதனால்இ கூட்டணியில் இருப்பவர்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால்இ தாங்களாக இதனை கூறாமல் மற்றவர்களைக்கொண்டு பேச வைப்பதற்கும் அவர்கள் முயற்சிக்கக்கூடும்.
தமிழ்த் தேசியவாத கட்சிகள் அனைத்துமே தேர்தல் மைய கட்சிகள்தான்.
தேர்தல் வெற்றியில்லாவிட்டால் தங்களால் அரசியலில் நிலைகொள்ள முடியாதென்பதில் அனைவருமே தெளிவாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலை தனித்தனியாக எதிர்கொண்டால் – நிச்சயமாகஇ தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற சிலர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பில்லை.
இதேவேளை தமிழ் தேசியவாத கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் – அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் தமிழ் கட்சிகள் பலமடைவதற்கான வாய்ப்பே அதிகம் உண்டு.
2020இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மோசமான பின்னடைவுகளை சந்தித்திருந்தது.
அரசாங்க ஆதரவு தமிழ் கட்சிகள் கூடுதலான ஆசனங்களை பெற்றிருந்தன.

தனது சொந்தக் காதலை சொல்லாமல் போன ஜானகி!

 November 5, 2023 12:16 pm 

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை அமைப்பில் அதிகமான பாடல்களை பாடிய ஜானகியின் காதல் பாடல்கள் பலருடைய மனதை கவர்ந்தவையாகும்.

ஜானகி என்று அவரை சொல்வதை விடவும் இப்போது உள்ள ரசிகர்கள் அவரை ஜானகி அம்மா என்றுதான் அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பலருடைய மனதில் வாழ்ந்து வருகிறார். பல பேர் காதலுக்கு மருந்தாக இவருடைய பாடல்கள் இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவர் காதலித்த நபரிடம் அவருடைய காதலை சொல்லவே இல்லையாம்.

ஜானகி ஆரம்ப காலகட்டத்தில் மேடை பாடகியாக இருந்தபோது ராம் பிரசாத் என்பவர் அவருக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் யார் என்றால் ஜானகி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவரின் மகன் தானாம். ஆனால் அவர் தன்னுடைய தந்தையிடம் ஜானகியின் திறமை வெறும் இசை கச்சேரியோடு முடிந்து விடக்கூடாது. சினிமா பாடல்களில் பாட வைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம். அவரின் ஆலோசனையில்தான் சென்னைக்கு வந்து ஜானகி ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இப்படி தன்னுடைய இசைப்பயணம் தொடங்க காரணமாக இருந்த ராம் பிரசாத் மீது ஜானகிக்கு ஆரம்பத்தில் நட்பு இருந்த நிலையில் பிறகு காதலாக மாறி இருக்கிறது.

சோலைக்கிளி படைப்புகள்: ஓர் உரையாடல்

 


இலக்கியவெளி 

 நடத்தும்

இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 32

சோலைக்கிளி படைப்புகள்:  ஓர் உரையாடல்

 

நாள்:         ஞாயிற்றுக்கிழமை 19-11-2023       

நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 8.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09