வேந்தனார் நூல் வெளியீட்டு விழா - ஆதி

.
அமரர் வித்துவான் வேந்தனார் அவர்கள் எழுதிய தன்னேர் இலாத தமிழ், கவிதைப் பூம்பொழில், குழந்தை மொழி ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா சென்ற 06/11/10 சனிக்கிழமை ஹோம்புஸ் ஆண்கள் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சிட்னி முருகன் கோவிலில் நடைபெற்ற சூரன் போர்

.
ஐப்பசி மாதத்தில் அமாவாசையைத் தொடர்ந்து ஆறு நாட்களாக முருக பக்தர்கள் உபவாசம் இருந்து (பாலும் பழமும் மட்டுமே ஒரு நேரம் சாப்பிடுவார்கள்) கந்த சஷ்டி கவசம் பாடி விரதம் பிடிப்பார்கள்.

இந்த ஆறு நாட்களாக முருகப்பெருமான் சூரபத்மனோடு போராடி இறுதியில் வெற்றி பெறுகின்றார்.  சூரபத்மனை கொடிய அசுரன் என்றும் அவனைக் கொன்று தேவர்களைக் காப்பதே முருகப் பெருமான் அவதாரம் எடுத்ததன் நோக்கம் என்றும் நாம் கூறிக்கொண்டு வருகின்றோம். ஆனால், முருகப் பெருமான் அவதாரத்தின் நோக்கம் சூரபத்மனைக் கொல்வது அல்ல. கொடியவனாக இருந்த அவனை தேவனாக்கி வழிபாட்டுக்குரியவனாக்குவதேயாகும்

 இந்த சூரன் போர் சிட்னி முருகன் கோவிலில் சென்ற வியாழக்கிழமை 11ம் திகதி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்களை கிழே காணலாம்.

முருக வழிபாடு

.
முருகப் பெருமானை பிரம்மமாக வழிபடுவது பக்குவ நிலை அடைந்தவர்களுக்கே சாத்தியம்


கந்த சஷ்டி விரதம் என்பது அனைத்துத் தெய்வங்களுக்காகவும் ஒரே நேரத்தில் அனுஷ்டிக்கும் விரதமாகும். முருகனை வணங்குவது அனைத்துத் தெய்வங்களையும் வணங்குவதற்கு சமனானதாகும். தத்துவ ரீதியாக நோக்கும்போது முருகப் பெருமான் மூலப்பரம் பொருள் அவரை பிரம்மமாக வழிபடுவது உரிய பக்குவ நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். ஏனையவர்கள் முருகனை தெய்வமாகவே வழிபட முடியுமென சைவ சித்தாந்த சுரபி ஏரம்பு சோதிலிங்கம் தெரிவித்தார்.

கலைக்கோலம்

வருடம் தோறும் நிகழும் சிட்னி முருகன் கோவிலின் கலைக்கோலம் நிகழ்வு 14 .11 .2010  அன்று நடைபெற்றது. அந்த  நிகழ்வுகளின் படங்களைக் கீழே  காணலாம்.

தண்டனை

.

விமானத்தில் ஒரு முறை பறந்து கொண்டிருந்தபோது அது பாதி வழியில் பழுதாகி மேலே பறக்க முடியாமல் கீழே அகப்பட்ட விமான நிலையம் ஒன்றில் இறங்கியது. முதலில் இரண்டு மணித்தியாலத்தில் விமானம்  சரியாகிவிடும் என்று சொன்னார்கள். பின்னர் ஆறு மணி நேரம் என்றார்கள். பழுதுபார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி மூன்று மணிநேரம் ஓடுதரையில் காத்திருந்த பின்னர் மீண்டும் இறக்கப்பட்டோம். ஒரு முழு நாள் ஆனது. விமானக் கம்பனி பயணிகளுக்கு தங்க இடமும் உணவும் ஏற்பாடு செய்து, ஒரு புது விமானம் வருகிறது காத்திருங்கள் என்றது. எல்லா பயணியரும் கோபத்தின் உச்சிக்கு போய் பழுதுபட்ட விமானத்தில் மீண்டும் பறப்பதற்கு  தயாராக இருந்தார்கள். காத்திருப்பது ஒருவருக்குமே பிடிப்பதில்லை. அது பெரிய தண்டனை.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அடைமழை:பெருவெள்ளம்

.
60,000 குடும்பங்கள் பாதிப்பு: 2.5 இலட்சம் பேர் இடம்பெயர்வு: ஒருவர் உயிரிழப்பு
(ஸாதிக் ஷிஹான்)

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதுடன் இரண்டரை இலட் சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெய ர்ந்துள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரக்காப்பொல என்ற இடத்திலேயே இவர் உயிரி ழந்துள்ளார்.

தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தின் தீபத் திருநாள்

.
தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தின்  தீபத் திருநாள் Homebush உயர்தர பாடசாலையில் 12 .11 .2010 அன்று நடைபெற்றது. கீழே அந்த நிகழ்வின் படத்தொகுப்பைக் காணலாம்.

ஆன்மீகம்

.
பெரியாழ்வார் திரு அவதாரம்வாசகர்களை  மீண்டும்  இந்த வாரம் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி. கடந்த வாரம் கேரள நாட்டில் அவதரித்த குலசேகர ஆழ்வாரை பற்றி பார்த்தோம். இந்த வாரம் அடுத்த   ஆழ்வாரான பெரியாழ்வரை பற்றி காண்போம்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இந்தியா முழுமனதுடன் ஒத்துழைக்க வேண்டும்

.
இலங்கையில் நிலவிய கொடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சுமார் பதினெட்டு மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. யுத்தம் முடிவடைந்த கையோடு யுத்தத்தின் தோற்றுவாயான இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோஷங்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஓங்கி ஒலித்தன.

யதார்த்தத்துக்கு அமைவான அரசியல் தீர்வு

.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இச் செய்திகளை இருதரப்பும் மறுக்காத நிலையில் அவை சரியான செய்திகள் எனக் கருத முடியும்.

நு}ல் வெளியீட்டு விழாவும் குறும்பட விழாவும்

உலகச்செய்திகள்

இந்திய சந்தை வேண்டும்
ஒபாமா வருகையையொட்டி இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சுமார் ரூ.44 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தக உடன்பாடுகள் எட்டப்பட்டன.

‘இந்திய சந்தைகள் எங்களுக்கு தேவை. எங்களது பொருட்களுக்காக இந்திய சந்தைகளை திறந்துவிடுங்கள்’ என்று ஒபாமா இந்திய தொழிலதிபர்களிடம் கேட்டுக் கொண்டார்.

தமிழ் சினிமா

விக்ரம், சூர்யாவுடன் இணைவாரா கமல்?
அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
தமிழகத்தில் உள்ள ஈழ மாணவர்களுக்கு நடிகர் கருணாஸ் உதவி
முதல்வர்… கமலுக்கு சூட்டிய புகழாரம்