மரண அறிவித்தல்

.
                                                 சிவஜெயந்தா நித்தியானந்தன்



உரும்பராய், கோப்பாய் வீதியை (ஞானவைரவர் கோவிலடி)ப் பிறப்பிடமாகவும் மார்க்கம் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  அவர்கள் இருதய வருத்தம் காரணமாக இன்று 25.06.2016 ம் திகதி கனடாவில் இறையடியேகினார்.
அன்னார் உயரப்புலம் ஆனைக்போட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற உரும்பராய் சிவலிங்கம் சிவகங்கை தம்பதியினரின் மூத்த மகளும் ,காலஞ்சென்ற உயரப்புலம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் சியான், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற சிவபாலன், சிவகுமாரன்(London, England) சிவஜெனனி கனடா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தவமதி( லண்டன்)பாலகிருஸ்ணன்; (கனடா) விவேகானந்தன்(France), அமரர் சச்சிதானந்தன், சத்தியா (அவுஸ்திரேலியா) நித்தியா (அவுஸ்திரேலியா), சதானந்தன் (France) ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடன் 8911 Woodbine Avenue, Markham ல் Chapel Ridge Funeral Home ல் 28.06. 2016 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 9.00 மணிவரையும், 29.06.2016 ம் திகதி புதன் கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு 29.06.2016 புதன்கிழமை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று Highland Hills Crematorium ல் 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவுகள் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்: நித்தியானந்தன் கணவர்: 905 554 2359
பாலகிருஸ்ணன் 416 885 8397
சிவகுமாரன் லண்டன் 011 44 7748 461376

கடலோரக் கவிதை

.

மாலை நேரக் காற்று
இளம் பெண்கள் கூந்தலை வருடிச் செல்ல,
ஆதவனோ தன்நாள் வேலை முடிவென
கடலுக்குள் மறைந்து செல்ல,

கடல் அலைகளோ தம் உறவில்
நிலைகொண்டு பொங்கிப் புரண்டு வர,
அவ் வலைகளின் அசைவிலே
சதக் பதக் என ஓர்
இசை மீட்டன கடற் தோணிகள்,

சிட்னி தமிழ் அறிவகத்தின் கொடி நாள் விழா

.


திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி - ஆத்மாவை பிரதிபலித்த பொன்மணி.

.
நான்கு  தசாப்தங்களுக்கு  முன்னர்  பாதையில்  எத்தனை ராதைகள்  பேதைகள்
ஈழத்து   வடமாகாணத்தின்  ஆத்மாவை   பிரதிபலித்த பொன்மணி.
   
                                                   
கனவு  காணும்  வாழ்க்கை  யாவும்  கலைந்துபோகும்  மேகங்கள் எனச்சொல்லப்பட்டிருக்கிறது.  தற்பொழுது  அவுஸ்திரேலியாவில் குளிர்காலம்.  இக்காலத்தில்  இரவில்  மட்டுமல்ல  பகலில் உறங்கினாலும்   கனவுகள்  சம்பந்தம்  சம்பந்தம்  இல்லாது வந்துகொண்டிருக்கிறது.
அண்மையில் வந்த  கனவில்  யாழ்ப்பாணத்தில் பண்ணைப்பாலமும்  கஷ_நோரா  பீச்சும்,  காவலூர்  அந்தோனியார் கோயிலும்   வந்தன.   இங்குதான்  பொன்மணி  படத்திற்காக இந்த இந்தக்காட்சிகள்  எடுக்கப்பட்டன  என்று  சொல்கிறார்  நண்பர் காவலூர் ராஜதுரை.   (அவர்   சிட்னியில்  மறைந்து  எதிர்வரும் ஒக்டோபர்  மாதத்துடன்  இரண்டு  வருடங்களாகப்போகிறது)

சனி பிரதோஷம் 18.06.2016- 02.07.2016

.












ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 14.

.
 “உய்வு”

எமது நண்பர் Haig Karunratne  ஆங்கில நாடகங்கள் பலவற்றை தயாரித்து பிரபலமானவர். பிரபல சிங்கள ஆடற்கலைஞர்களான சித்திரசேனா, பணிபரத, போன்றோரின் நட்பும் இவருக்கு உண்டு. எனது மேடை நிகழ்ச்சிகட்கு தவறாது வந்தவர் நல்ல நண்பருமாகிவிட்டார். அவர் என்னிடம் அடிக்கடி வரியுறுத்தியது ஆண் பாத்திரத்தை ஆண்களும், பெண் பாத்திரத்தை பெண்களும் ஏற்று நடிப்பதே இயல்பானது. நாட்டிய நாடகங்களில் பெண்கள் ஆண்பாத்திரம் ஏற்று நடிப்பதை அவர் விரும்புவதில்லை.
ஆனால் எமது நாட்டிய நாடகங்கள் மிகை படுத்தப்பட்ட கலை வடிவம். இயல்பு வளி நாடகங்கள் அல்ல ஆந்திர கூச்சிப்புடி நாட்டிய மரபிலே ஆண்களே பெண்பாத்திரம் ஏற்று நடிப்பது சம்பிரதாயம்.  பெண்களையும் விஞ்சிய நளினத்துடன் கவர்சிகரமாக ஆடுபவர் அவர்கள். அந்த விந்தையை பலரும் பாராட்டி உள்ளார்கள்.


சிட்னி முருகன் சைவசமய பாடசாலை தகவல் தினம் 03 07 2016

.












இலங்கைச் செய்திகள்


இறுதி  யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் :  பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை

 44 இலங்கை அகதிகளை சந்திக்க ஐ.நா. அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியது இந்தோனேசியா

மட்டக்களப்பில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு.!

மாணவி பலாத்காரம்: ஆசிரியருக்கு உடந்தையாக இருந்த அதிபர், ஆசிரியைகளுக்கு விளக்கமறியில்

சரத் பொன்சேகாவின் அமெரிக்கா விசா நிராகரிப்பு.!

தேசிய அடையாள அட்டையில் இனரீதியாக பாரபட்சம்

அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் வீடுகள் வேண்டாம் : கூடாரங்கள் பாதுகாப்பற்றவை : களுப்பான மக்கள் விசனம்

மாணவிகளுடன் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது ; அதிபரை கைதுசெய்ய நடவடிக்கை (காணொளி இணைப்பு )

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

ஜனாதிபதி பிரதமரை சந்திக்கிறது கூட்டமைப்பு.!

மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்

வெலிக்கடை சம்பவம் : ஐ.நா. அலுவகத்தில் முறைப்பாடு செய்ய தீர்மானம்

கடத்­தப்­பட்ட வர்த்­தகர் விடு­த­லை : கடை­ய­டைப்பு கைவி­டப்­பட்­ட­து

நான்தான் # சுவாதி பேசுகிறேன்!

.

இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன்.
அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன்.
எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை.
எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார்.
உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்க்குத் தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழியப் பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது. இன்று நான் வாய்கிழிபட்டுதான் இறந்தேன்.
உங்களில் ஒருவருக்கு கூட அதைத் தடுக்க ஆண்மை இல்லையே, வரிஜினிட்டியை ஆண்மையாக என்னும் சமூகத்தில்தானே இன்னும் நீங்கள் வாழ்கிறீர்கள். அவனைத் தடுக்காத உங்களின் கயமை கூட எனக்குப் புரிந்தது. ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படைச் சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கைப் பார்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களைச் சுடவில்லையா? உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை, இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னைக் கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான்.

'கவியரசு' கண்ணதாசன் - பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்

.

பல்லாயிரக்கணக்கான கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற 'கவியரசு' கண்ணதாசன் (Kannadasan) பிறந்த தினம் இன்று (ஜூன் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தவர். இயற் பெயர் முத்தையா. சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு 'நாராய ணன்' என அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி யும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.
* சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கி னேன்..' என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.
* சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 'கிரகலட்மி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பதுதான் இவரது முதல் கதை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரிய ராக உயர்ந்தார். 'சண்டமாருதம்', 'திருமகள்', 'திரை ஒலி', 'தென்றல்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

உலகச் செய்திகள்


விண்வெளியில் 6 மாதங்களை கழித்து சாதனை படைத்து வெற்றிகரமாக பூமி திரும்பிய பிரித்தானிய விண்வெளிவீரர்

இந்தியாவுக்கு ஆதரவு தேடி சீனாவுக்கு இரகசிய பயணம்

பராக் ஒபாமாவாக்கு எழுந்து நிற்க உதவிய 4 ஆம் வகுப்பு சிறுவர்கள்

காபூலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் ; 14 பேர் பலி

 கச்சத்தீவு குறித்து பேச தி.மு.கவுக்கு அருகதை கிடையாது ; முதல்வர் ஜெ.

மெக்ஸிக்கோவில் ஆசிரியர்கள்- பொலிஸார் மோதல்; 6 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயற்சித்த இளைஞர் மடக்கி பிடிப்பு : அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் : இளைஞன் அதிர்ச்சி வாக்குமூலம்

கச்சதீவை தாரை வார்த்தது நானா? ; ஏன் ஜெயலலிதாவால் மீட்க முடியவில்லை - கருணாநிதி

பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் குண்டு தாக்குதல் ; அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

பி.எஸ்.எல்.வி. சி-34 ரொக்கெட் 20 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவி சாதனை (வீடியோ இணைப்பு)

வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

மரணத்தில் முடிந்த செல்பி ஆசை ; கங்கையில் மூழ்கி 7 பேர் பலி

முகமூடி நபரால் திரையரங்கில் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம் : ஜேர்மனியில் பதற்றம் (காணொளி இணைப்பு)


கம்பனின் அறிவியல் ஆழம்: மேற்கே உதித்த சூரியன்!


வால்மீகி எழுதிய இராமயணத்தை தமிழில் தந்த நமது கம்பர், இந்தப் பூமி ஒரு பந்து வடிவம் என்ற உண்மையை  அனுமான் என்னும் பாத்திரத்தினூடாக என்ன அழகாக விளக்கம் கொடுக்கின்றார் என்பதைப் பார்ப்போம்.

இராவணனின் வஞ்சனையினால், ராம லட்சுமணர்கள்  உட்பட ஒட்டுமொத்த வானர சேனைகளும் மாண்டுபோயினர். இவர்களை உயிர்ப்பிக்க, மருந்து மலையிலிருக்கும் மூலிகையை விடியுமுன் கொண்டுவந்தால்தான் முடியும் என்ற அவசர நிலை. அம்மூலிகையைக்  கொண்டு வருவதற்காக அனுமான் புறப்படுகிறான். 

இலங்கையில் இருந்து வட திசையில் மிகப் பெரிய தொலை தூரம் ஐந்து பெரு மலைகளைத் தாண்டிப்  போயாகவேண்டும். முதலில் இமயமலை (9,000 யோசனை தூரம்), பொன்மலை (11,000 யோ.), செம்மலை (9,000 யோ.), மேருமலை (9,000 யோ.)  எல்லாம் தாண்டி உத்தரகுரு நாடு என்னும் போக பூமியை அடைகிறான். 

சிட்னி முருகன் கோவில் Skills Assessment 2016



மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணையத்தளத்திலிருந்து:


http://www.sydneymurugan.org.au/murugan2/index.php/downloads/publications/category/5-model-questions-and-answers

You may also collect the booklets from the Sydney Murugan Temple Counter during the Temple hours for the respective division according to the age of the child/children.

Deadline for the application is 30/06/2016.

அகவை எண்பத்தொன்பதில் ஆசியர் டொமினிக் ஜீவா - வாழ்ந்திடு பல்லாண்டு !

.
அகவை எண்பத்தொன்பதில் காலடி எடுத்துவைக்கும் மல்லிகை
        ஆசியர் டொமினிக் ஜீவா அவர்களை வாழ்த்திப்பாடிய வாழ்த்து

 மல்லிகையின் நாயகனே மனவுறுதி கொண்டவனே
         நல்லதமிழ் இலக்கியத்தை நாளுமே வளர்த்தவனே
         சொல்லவொணா துயரமெலாம் தோழிலே சுமந்தவனே
         வல்லவனே ஜீவாவே வாழ்வுனக்குச் சிறந்திடட்டும் !

         எளிமையாய் வாழ்ந்தாலும் இலக்கியத்தை நேசித்தாய்
         பழுதில்லா இலக்கியத்தை பரப்புதற்குத் துணையானாய்
         எழுதிநிற்பார் அனைவரையும் ஏந்திநின்றாய் மல்லிகையில்
         இப்போதும் அவரெழுத்தில் மல்லிகையே மணக்கிறது !

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 87

.
அனைத்து சாளரங்களும் திறந்து உள்ளே ஒளிவெள்ளம் பெருகிக்கொண்டிருந்தபோதும்கூட பன்னிரு பகடைக்களக்கூடம் இருள் சூழ்ந்திருப்பதை விகர்ணன் கண்டான். அங்கிருந்த உடல்களிலிருந்து அவ்விருட்டு கசிந்து ஊறி நிறைவதுபோல. ஒவ்வொருவருக்கும் பேருருக்கொண்ட பல நிழல்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருளாகிச் செறிந்ததுபோல. இரைகாத்து வயிறுபடிய அமர்ந்திருக்கும் ஓநாய்களைப்போல விழிமின்ன வாய்திறந்து மூச்சு எழுந்தமைய  அனைவரும் காத்திருந்தனர். சுனைமையச் சுழி போல அவர்களுக்கு நடுவே காத்திருந்தது பன்னிரு பகடைக்களம் எழுந்த  மேடை.
வாயிலைக் கடந்து துச்சாதனன் வந்ததை அவை ஒற்றைக்குரலில் எதிர்கொண்டது. “ஆ!” என எழுந்த ஒலியைக் கேட்டதும் அறியாமல் விழி தாழ்த்திக்கொண்டான். அவள் அவைக்குள் வருவதை ஓசைகளாகவே அறிந்தான். ஆடை சரசரப்பு. மூச்சொலிகள். எங்கோ எவரோ சற்று விம்முவதுபோல. ஓர் இருமல். ஒரு மெல்லிய முணுமுணுப்பு. அவன் காதில் எவரோ சீறல் ஒலியாக “விழி எழு! அரிய காட்சி. நீ உன் இருண்ட ஆழத்தில் என்றும் அழியாது சேர்த்துவைக்கப்போவது” என்றார்கள். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. “அன்னையின் உடல்நோக்க விழையாத மைந்தர் எவர்? பிழையல்லஉ” என்றது அக்குரல்.

திரும்பிப்பார்க்கின்றேன் -- முருகபூபதி

.
கருத்தியல்  போராட்டம்  நடத்தி  களைத்துப்போனவர் ஓய்வு  பெறட்டும்
சிவாசுப்பிரமணியம்  நினைவுப்பகிர்வு


" இந்தக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ள  பெயருக்குரியவனை உமக்குத்தெரியுமா ? "
" தெரியாது. "
" உமக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?"
" தமிழ், ஆங்கிலம், சிங்களம் தெரியும்."
" எப்படி உம்மால் இந்த மூன்று மொழிகளிலும் சரளமாகப்பேசமுடிகிறது"
" நான் இலங்கையன். இம்மூன்று மொழிகளும் இங்கே பேசப்படுபவை. அதனால் கற்றேன். பேசுகின்றேன்"

ஹார்வர்ட்-பல்கலைக்கழகத்தில்-தமிழுக்கு-இருக்கை

.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு தனி இருக்கை கிடைக்க தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பொருளுதவி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையின் தேவை விளக்க விழா, தமிழ் இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீட்டு விழா, அறக்கொடை அறிமுக விழா ஆகிய நிகழ்வுகள் அடங்கிய முப்பெரும் விழா ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பு சார்பில் சென்னை தியாகராய நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

பொன்மணி திரைப்படம்

'அப்பா' படத்தை உருவாக்கியது ஏன்?- இயக்குநர் சமுத்திரகனி விளக்கம்

.

'அப்பா' படத்தை உருவாக்கியது ஏன் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சமுத்திரக்கனி விளக்கியுள்ளார்.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அப்பா'. சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார். ஜூலை 1ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநர் சமுத்திரக்கனியிடம் பேசிய போது, "இப்படத்தில் ஒரே ஒரு அப்பாவைப் பற்றி கூறவில்லை. 4 அப்பாக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். பையனின் ஆசை, ஏக்கங்கள் என்ன என்பதை அவனுக்கு தெரியாமல் அறிந்து, நிறைவேற்றும் ஒரு அப்பா, அம்மாவின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இப்படி எல்லா செய்ய வேண்டும், படிக்க வேண்டும் என்று திட்டமிடும் ஒரு அப்பா, உனக்கு என்ன தோணுதோ பண்ணுடா மகனே என்று வளர்க்கும் ஒரு அப்பா என காட்டியிருக்கிறேன்.

தமிழ் சினிமா - முத்தின கத்திரிக்கா

.

முத்தின கத்திரிக்கா (வீடியோ இணைப்பு) - Cineulagam
பேய் படங்களுக்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவில் தற்போது டிரண்டில் இருப்பது ரீமேக் படங்கள் தான். அதிலும் குறிப்பாக மலையாள படங்களின் தாக்கம் அதிகம் என்றே சொல்லலாம். அவ்வகையில் Vellimoonga எனும் மலையாள படத்தின் தழுவலே இப்படம்.

கதைக்களம்

தனது தாத்தா, அப்பா என யாரும் அரசியலில் சாதிக்காததை தான் சாதிக்க நினைக்கும், அதே சமயம் 40 வயதை தாண்டியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஒரு முத்தின கத்திரிக்காயான நாயகன், எப்படி அரசியல், கல்யாணம் என இரண்டிலும் வெற்றி அடைய போராடுகிறார் என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

நாயகன் சுந்தர் சி முத்தின கத்திரிக்கா பாத்திரத்தில் நச் என பொருந்துகிறார். அரசியல் தில்லு முல்லு, லேட் பிக்கப் காதல் என அனைத்திலும் சூப்பர். பூணம் பாஜ்வா பார்க்க லட்சணமா இருக்காங்க, ஆனால் அவ்வளவு பெரிய வாய்ப்பில்லை நடிப்பதற்கு. சதீஸ் புது கெட் அப்பில் பட்டையை கிளப்பும் குறும்பு தனமான வசனங்கள் மூலம் கை தட்டல்களை அள்ளுகிறார். விடிவி கணேஷ்சிங்கம் புலி இரு அரசியல் கட்சிகள் சார்ந்த அண்ணன் தம்பியாக வந்து ரசிக்க வைக்கிறார்கள். இவர்களை தவிர யோகி பாபு, ரவி மரியா, ஸ்ரீமன், சிங்கப்பூர் தீபன், கிரண் என அனைவரும் தங்கள் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்கள்.
ஆர் ஜே பாலாஜியின் கலகலப்பான வாய்ஸ் ஓவரில் படம் ஆரம்பிக்கிறது, பின் சற்று மெதுவாக பிக்கப் எடுக்கிறது இந்த காமெடி எக்ஸ்பிரஸ். அரசியல் சார்ந்த படம் என்பதால் இயக்குனர் வெங்கட் ராகவனுக்கு விளையாட களம் பெரிது, அதை நன்றாக பயன்படுத்தி திரைக்கதையில் நகைச்சுவையை தாராளமாக வைத்திருக்கிறார். குறிப்பாக சுந்தர் சி தர்ணா செய்யும் காட்சி, யோகி பாபு சுந்தர் சியை கடத்தும் காட்சி, பூணம் பாஜ்வாவை பெண் கேட்கும் காட்சி அதில் வரும் குட்டி பிளாஷ் பேக் என சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை.
அரசியலை சாடி வரும் அனைத்து வசனங்களும், காட்சிகளும் நம் இயல்பு வாழ்க்கையில் ஒப்பிட்டு கொள்ளும் படி இருந்தது படத்தின் பெரும் பலம். ஆனால் சுந்தர் சி யின் கட்சி சின்னமே டக் என மாறும் அளவிற்கா லாஜிக் மீறல் வைப்பது. சில காட்சிகள் ஏற்கனவே பார்த்தவை என்பதால் சற்று சுவாரஸ்யம் குறைகிறது. என்னதான் முதல் பாதி அளவிற்கு 2ம் பாதி இல்லை என்றாலும் க்ளைமேக்ஸில் வரும் டுவிஸ்ட்கள் ரசிக்க வைக்கிறது.
டெக்னிக்கலாக பெரிதாக இல்லை என்றாலும் அவ்வளவாக குறை சொல்வதற்கு இல்லை. சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். கானா பாலாவின் குரலில் ஒலிக்கும் அரசியல் பாடல் வரிகள் ரசிக்க வேண்டியவை.

க்ளாப்ஸ்

அரசியல் சாடல் வசனங்கள், சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போகும் அளவிற்கு நகைச்சுவையான திரைக்கதை, ரசிக்க வைக்கும் திருப்பங்கள்.

பல்ப்ஸ்

லாஜிக் மீறல்கள், சில பார்த்து பழகிய காட்சிகள், சில இடங்களில் அடுத்தது என்ன என்று யூகிக்க கூடிய காட்சிகள்.
மொத்தத்தில் இந்த முத்தின கத்திரிக்கா நகைச்சுவை ரசிகர்களுக்கு செம விருந்து!

ரேட்டிங்: 2.75/5   நன்றி    cineulagam