மரண அறிவித்தல்

.
மரண அறிவித்தல்

செல்வி Dr. வைஷ்ணவி ஜனகன்



தோற்றம்: 25-05-1989       மறைவு:13.09.2013

முன்னைநாள் North Sydney Girl College, University of Melbourne ஆகியவற்றின் பழைய மாணவியும், தற்போதைய Bendigo Hospital Melbourne  டாக்டராக பணி புரிபவரும்,
ஜனகன்(Optus Australia) , நளாயினி (Sydney Water ) ஆகியோரின் மூத்த புதல்வியும், செல்வி யஷ்வினி ஜனகனின்  அன்புச் சகோதரியும்,
திரு, திருமதி தங்கராஜா (West Ryde,NSW ), காலஞ்சென்ற திரு, திருமதி சிவகுருநாதன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:

Viewing:
Wednesday 18 September 2013 from 6pm - 9pm
Hills Alliance Church
524 Windsor Road
Baulkham Hills

Funeral Service:
Thursday 19 September 2013 from 3pm - 4.45pm
Magnolia Chapel
Macquarie Park Crematorium
Plassey Road
Macquarie Park

மேலதிக விபரங்களுக்கு:
த.சசிதரன்   0401 042 990



மறதி - கவிதை



.
வாவென்றழைத்த கணமே
வந்தென் வாய்குவியும் வார்த்தைகளும்
மனங்குவியும் மொழிகளும்
அடம்பிடித்தோடும் குழந்தைகளாய்
இன்றென் வசப்பட மறுக்கின்றன!

நிகழ்வுகளைக் கொட்டிக் கொட்டி
நிறைத்துவைத்த நினைவுக்கிடங்கும்
ஆடிமுடிந்த மைதானமென
ஆளரவமற்றுக் காட்சியளிக்கிறது!

எதிரிலிருப்பவனின் அகன்ற நெற்றியும்,
புருவஞ்சுழித்தப் பார்வையும்
எவரையோ நினைவுறுத்த,
எஞ்சியிருக்கும் என் ஞாபகப்பொதியிலிருந்து
எத்தனையோ பக்கங்களைப் புரட்டிப்பார்த்தும்,
பிறர் சொல்லாமல் அறிய இயலவில்லை,
அவனென் அன்புமகனென்று!

ஆழ்ந்த பெருமூச்சுடன்
அலுத்துக்கொள்கிறான் அவனும்,
இது ஆயிரமாவது அறிமுகப்படலம் என்று! 
சிறுபிள்ளைகள் கட்டிய மணல்வீடென
சிறுகச் சிறுகச் சரிகிறது என் நினைவுக்கோட்டை!

சிட்னியில் நடைபெறவிருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்த ஒரு முக்கிய செய்தி

சிட்னியில் நடைபெறவிருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்த ஒரு முக்கிய செய்தி 

எதிர்வரும் சனிக்கிழமை (21.09.2013)  சிட்னியில் நடக்கவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி நடக்கமாட்டாது

கடந்த வெள்ளிக்கிழமை (13.09.2013)  அன்று இந்தியாவுக்கு  தொலைக்காட்சி நிறுவனத்துடன் பேசுவதற்ககாகவும் இதர வேலைகளை முடிப்பதற்காகவும் என்று  புறப்பட்ட Symphoney Entertainers இன் பொறுப்பாளரான திரு கதிருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அவரது குடுப்ம்பத்தார், மற்றும் நண்பர்கள், Australia Police மற்றும் குடிவரவுத் துறையினரிடம் முறையிட்டுள்ளனர். 

திரு கதிர்  அவர்கள் இரண்டு நாளுக்கு ஒரு தடவை மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தவரைப் பொறுத்த மட்டில், அவரது நலம் குறித்து கடுமையான கவலை நிலவுகின்றது.

சிட்னியில் நடைபெறவிருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியின் முழுப் பொறுப்புக்களையும் கொண்ட இவர் எங்கிருக்கிறார்  எப்படி இருக்கிறார் என்று தெரியாத தர்மசங்கடமான சூழலில் இந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்யும் முடிவுக்குத்தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கும் மனம் வருந்துகின்றோம்.
புரிதலுக்கு மிக்க நன்றி

உலகத்தமிழ் இலக்கிய மாநாடு இரண்டாம்,மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் -செ .பாஸ்கரன்

.


சிட்னியில் 6ம் 7ம் 8ம் திகதிகளில் சிட்னி தமிழர் மண்டபத்தில் நடந்த உலகத்தமிழ் இலக்கிய மாநாடு சிட்னி தமிழர்களை மட்டுமல்லாது உலகத்தமிழர்களை ஒன்றுகூட்டியிருந்தது. விஜிபி உலகத்தமிழ்ச்சங்கமும் தமிழ்இலக்கிய கலைமன்றம் ஒஸ்ரேலியாவும் சேர்ந்து இந்த மூன்றுநாள் நிகழ்ச்சியை நடத்தியிருந்தது.


காலை மாலை என்று மூன்று நாட்களும் நடந்த இந்த தமிழ் மாநாட்டிற்கு பிரபல தொழிலதிபரான செவாலியர் டாக்டர் வி ஜி சந்தோசம் பிரதம நீதியரசர் வள்ளிநாயகம் கவிக்கோ அப்துல் ரகுமான் முனைவர் அவ்வை நடராஜன் முனைவர் வாசுகி கண்ணப்பன் முனைவர் விஜயலஸ்மி ராமசாமி ரிகே எஸ் கலைவாணன் முனைவர் பத்மநாதன் இப்படி மாபெரும் அறிஞர்கள் பேச்சாளர்கள் என்று மேடையில் தமிழ்முழக்கம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாகவும் கிடைத்தற்கரிய ஒரு தமிழ் விழாவாகவும் இருந்தது.

தொடர்ந்து நடந்த இரண்டாம் நாள் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளில் தமிழ்க் கல்வி நிலைய 


மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921)

.

சுப்பிரமணிய பாரதியார் தோன்றிய ஊர் எட்டயபுரம். இளமையிலேயே கவி காடும் ஆற்றல் கைவரப் பெற்றவர். பாட்டுத்திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடச் செய்தவர். நாட்டு விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த கவிச்சிங்கம். இந்நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர். நீடு துயில் நீக்கப் பாடிவந்த முழுநிலவு. இவர்தம் படைப்புக்ள் பல. குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு போன்றவை தமிழர்தம் உள்ளங்களை ஆட்டிப்படைப்பவை. கவிதை, கதை, கட்டுரை, ஆராய்ச்சி முதலிய பலதுறைகளிலும் தொண்டு புரிந்தவர்.
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'. அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திரும்பிப்பார்க்கின்றேன் --- 07 யாழ்தேவி… நீ யார் தேவி? நிற்பதும் ஓடுவதும் யாருக்காக? எடிட்டிங் கற்றுத்தந்த எடிட்டர் ‘நடா’ நடராஜா முருகபூபதி



யாழ்ப்பாணத்துக்கு   மீண்டும்   யாழ்தேவி   ஓடவிருப்பதாக  வெளியாகியிருக்கும்  செய்தி பார்த்து   மிகவும்  மகிழ்ச்சியடைந்தேன்.  தற்பொழுது  கிளிநொச்சிவரையில்  ஓடிக்கொண்டிருக்கும்   இந்த  ரயில்  பற்றித்தான்   எத்தனை  சுவாரஸ்யமான  கதைகள்  இருக்கின்றன.
காங்கேசன்துறையிலிருந்து    கொழும்பு    கோட்டைக்கும்    கோட்டையிலிருந்து  காங்கேசன்துறைக்கும்   தினமும்    காலை,  மதியம்   பின்னர்  இரவுநேரமும்  ஆறு ரயில்கள்    மற்றும்    அனைத்து    நிலையங்களிலும்    தரித்துச்செல்லும்   பொதிகள்  ஏற்றி  இறக்கி  நீண்ட  நேரத்தை  எடுத்துக்கொள்ளும்  சரக்கு   ரயில்   என்பனவற்றில்    பயணித்தவர்கள்    தற்காலத்தில்    உலகெங்கும்   வாழ்கிறார்கள்.
இவ்வாறு    தினமும்    எட்டு   ரயில்கள்  ஓடிக்கொண்டிருந்த   பாதையில்  பல  ஆண்டுகளாக    ரயிலே    இல்லை.   நீடித்த   உள்நாட்டுப்போர்   தொலைத்துவிட்ட  அந்த  ரயில்களை…   அந்தப்பயணங்களை,    அதில்  பயணித்த  எவராலுமே   தங்கள்   மனங்களிலிருந்து    தொலைத்துவிடவே    முடியாதுதான்.

இலங்கைச் செய்திகள்



டிக்கோயாவில் அன்னதானம் உட்கொண்ட பலர் வைத்தியசாலையில் அனுமதி

முஸ்லிம்-சிங்கள ஒற்றுமையை சீர்குலைக்க சில தீயசக்திகள் செயற்படுகின்றன : ஜனாதிபதி

யாழ்தேவி சேவையை ஆரம்பித்தது

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம்: 3 பேர் கைது


---------------------------------------------------------------------------------------------------

டிக்கோயாவில் அன்னதானம் உட்கொண்ட பலர் வைத்தியசாலையில் அனுமதி

10/09/2013  ஹட்டன் - டிக்கோயா பிரதேசத்தில் ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட 100 இற்கும் மேற்பட்டோர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நண்பகல் டிக்கோயா வழிப்பிள்ளையார் ஆலயத்தில் வழங்கப்பட்ட மதிய உணவை உண்டவர்களே வாந்தி, மயக்கம், வயிற்றோட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சுமார் 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து பலர் வைத்தியசாலைக்கு லொறிகளில் கொண்டுவரப்படுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அருணாசல அற்புதம் 5: ரமணரின் சம்பாத்தியம்


ஒரு ஊரில் கோடீசுவரர் ஒருவர் இருந்தார். வயது எழுபதுக்கு மேல். அவருக்கு நான்கு மகன்கள். அவர் மிகுந்த பக்திமான். அந்த ஊருக்கு ஒரு மகான் வந்தார். தனவந்தர் அவரைத் தன் வீட்டுக்கு அமுது செய்விக்க அழைத்தார்.

மகானும் தனவந்தர் வீட்டுக்குச் சென்றார். வந்தவருக்குப் பாதபூஜை செய்தபின் சற்றே பேசிக்கொண்டிருந்தார்கள். மகான் நல்ல தபஸ்வி. எப்போதும் ‘அருணாசலம், அருணாசலம்!’ என்று இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார். அவருக்குத் தம் முன்னே இருப்பவரைப் பற்றி எல்லாமும் அறியும் ஆற்றல் இருந்தது. ஆனாலும், மரியாதை நிமித்தமாகச் செல்வந்தரைப் பற்றிய விவரங்களை விசாரித்தார். முதலில், “அருணாசலம்! நீங்கள் மிகவும் இளமையாகத் தெரிகிறீர்களே, உங்களுக்கு வயது 60 இருக்குமா?” என்று கேட்டார். அதற்குச் செல்வந்தர் தனக்கு வயது ஐந்து என்று கூறினார்! சுற்றியிருந்த எல்லோரும் தனவந்தர், மகானிடமே பொய் சொல்கிறாரே என்று எண்ணி அதிர்ச்சி அடைந்தனர்.

“அருணாசலம்! இறைவன் உங்களுக்கு நிறையச் செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். உங்கள் சொத்தின் மதிப்பு பல கோடி இருக்குமே!” என்றார் மகான். “அப்படி எல்லாம் இல்லை ஐயா. நான் சேர்த்தது என்னமோ இரண்டு லட்சம்தான்” என்றார் செல்வந்தர். இன்னொரு பொய்யா என்று மருகினர் அருகிருந்தோர். இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் செல்வந்தரின் மனைவியும் ஒரு மகனும் வந்து மகானை நமஸ்கரித்தனர்.

சிட்னி உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2013

.
சிட்னி உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2013

வரவேற்பு நடனத்திற்கு இயற்றப்பட்ட கவிதை

(பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி)


திசையெட்டும் போற்றும்நற் தேன்தமிழ் அன்னையின்
திறம்பாடும் விழாவன்றோ தோழர்களே!
இசைபாட இயல்பேச நாடகத் தமிழொடு
எழில் கூட்டும் விழாவன்றோ தோழர்களே!

திருவள்ளு வர்தந்த பொதுமறை போற்றியே
சிலைநாட்டும் விழாக்கண்டு சிறப்புச் செய்வோம்
அருந்தமிழ் வளர்த்திட்ட பெருமை விளக்கிடும்
அற்புத விழாவன்றோ தோழர்களே!

உலகிற் பரந்திட்ட தமிழின் பெருமையை
உணர்த்துமோர் கண்காட்சி காணவாரீர்
பலநாட்டு அறிஞர்கள் கலந்திடும் விழாவினைப்
பார்த்துச் சுவைப்பீரே தோழர்களே!

எங்கெங்கும் தமிழ்மணம் எதிலுந் தமிழ்மணம்
என்றென்றும் தமிழினை வளர்ப்போ மென்று
இங்குவாழ் தமிழர்நாம் கூடிச்சூ ழுரைப்பமே
இளைஞர்காள் விழாவிற்குத் திரண்டு வாரீர்!

மணிரத்னத்தின் பூர்வ வேர்கள் - யமுனா ராஜேந்திரன்


மணிரத்னத்தின் பூர்வ வேர்கள் - யமுனா ராஜேந்திரன்

.


“எனது பதின்மப் பருவத்தில், எண்பதுகளில், ஹாலிவுட் படங்களில் ஆச்சர்யமுற்றபடி, டேவிட் லீன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ரிட்லி ஸ்காட் போன்றவர்களின் படங்களைப் பார்த்தபடி  நான் வளர்ந்தேன். மணிரத்னத்தின் படங்களை நான் பார்க்கத் துவங்கியவுடன் எனது விசுவாசம் மாறிப்போனது“ என 'மணிரத்னத்துடன் உரையாடல்கள்' (Conversations with Maniratnam : Bharatwa Rangan : Viking Penguin: : 2012) எனும் நூலுக்கான முன்னுரையில் எழுதுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். “நாம் பார்க்க விரும்பியிருக்கக்கூடிய  படங்களை உருவாக்குவதை சாத்தியப்படுத்தியவர்” என கமல்ஹாசன் மணிரத்னம் குறித்துச் சொல்ல, "இந்தியாவில் உலகத்தரமான படங்களை உருவாக்குகிறவர்களில் ஒருவர்” என ரஜினிகாந்த் மணிரத்னம் குறித்துச் சொல்கிறார்.

அரசியல் ரீதியில் ‘அகில இந்திய’ தமிழ் திரைப்படங்களையும், “உலகத் தரமான” தமிழ் திரைப்படங்களையும் உருவாக்கியவர்கள் என மணிரத்னம், சங்கர், கமல்ஹாசன் என மூவரை நாம் குறிப்பிடலாம். கமல்ஹாசன் உருவாக்கிய 'விஸ்வரூபம்' திரைப்படத்தை நாம் அவர் விழைகிற உலகத்தரமான படம் எனக் கொள்வோம் எனில்
மணிரத்னம் படங்களில் எவையெவை உலகத்தரமானவை என நாம் புரிந்து கொள்ள முடியும். ரஹ்மானின் உலகத்தரம் டேவிட் லீன், ஸ்பீல்பர்க், ரிட்லி ஸ்காட்டுக்கு அப்பால் மார்டின் ஸ்கோர்சிசே, கொப்பாலோ வரை கூட போகவில்லையெனில் அவர் விழையும் உலகத்தரம் எவை என்பதும் நமக்குப் புரிகிறது. ரஜினிகாந்த உருவாக்கும் உலகத்தரம் 'முத்து, எந்திரன்' போன்ற படங்களின் தரம்தான்.

உலகச் செய்திகள்


எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்

மாலைதீவு ஜனாதிபதி தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்கெடுப்பை நோக்கி நகர்ந்தது

இந்திய உத்தரப் பிரதேச கலவரத்தில் 21 பேர் பலி

இர­சா­யன ஆயு­தங்­களை கைய­ளித்தால் சிரியா மீதான தாக்­கு­தலை தடுக்க முடியும்: ஜோன் கெரி









--------------------------------------------------------------------------------------------------------
எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்
10/09/2013     நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காப்பகங்களில் சிக்கியுள்ள தமது பிள்ளைகளை தம்மிடம் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

நோர்வேயின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய கன்சர் வேட்டிவ் கட்சியின் தலைவியும் எதிர்க்கட்சித் தலையுமாக இருந்த IRON ERNA SOLBERG எட்டு வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நோர்வேயின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.
இந்நிலையிலேயே புதிதாக தெரிவாகியுள்ள நோர்வே நாட்டு பிரதமரிடம் மேற்படி நோர்வேயில் வதியும் வெளிநாட்டு வதிவாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஆக்காண்டி ஆக்காண்டி...

.
சண்முகம் சிவலிங்கம் 

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.


வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்,
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.


குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.

கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.

அழகிய லைலா - சிறுகதை -அ .முத்துலிங்கம்

.                   
அழைப்பு மணியை அடித்து பிரயோசனமில்லை. கதவை கைகளாலும் கால்களாலும் உதைத்தான். உள்ளே ஒரு சத்தத்தையும் காணவில்லை. அவன் வேண்டுமென்றே திறக்காமல் இருக்கிறான். கதவு திறந்து ஒரு கணம் தோட்டு ரவியின் முகம் வெளியே நீட்டியது. நிஷாந் பேசத் தொடங்கினான். அடுத்த கணம் முகத்தை காணவில்லை. சாத்திய கதவுதான் முன்னால் நின்றது. மறுபடியும் கதவை அடித்தான். கதவு திறக்கவே இல்லை. ‘என்னுடைய காசைத் தா. அல்லது என்னை என் நாட்டுக்குத் திருப்பி அனுப்பு.’ அழுவதுபோன்ற குரலில் நிஷாந் கத்தினான். அந்த தமிழ் வார்த்தைகள் காற்றிலே ஒவ்வொன்றாகப் பிரிந்து பரவின. உக்கிரைன் நாட்டிலே அந்த வார்த்தைகளை புரியக்கூடிய எவரும் சுற்று வட்டாரத்தில் இல்லை.

அன்று அம்மாவை நினைக்கும் நாள். நிஷாந் புறப்பட்டு இரண்டு வருடத்துக்கு மேலாகியும் அவன் இன்னமும் உக்ரைனிலேயே தங்கியிருந்தான். அவனுக்கு பின்னர் புறப்பட்ட தங்கை கனடா போய்ச் சேர்ந்துவிட்டாள். அம்மாவின் கடிதம் வந்தால் இரண்டு வரியை படித்துவிட்டு மூடி வைத்துவிடுவான். மறுபடியும் இரண்டு வரி. கடிதம் இப்படிப் போகும். ‘நேற்று ரஸ்யா பற்றி வகுப்பில் பாடம் எடுத்தேன். அப்போது உன்னை நினைத்தேன். நீ அங்கே இருப்பது வகுப்பு பிள்ளைகளுக்கு தெரியாது. நீயும் நானும் ஒன்பது மாதம் ஓர் உடம்பை பங்கிட்டுக்கொண்டோம் என்பதை நினைத்துப் பார்ப்பேன். கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். நேற்று உனக்குப் பிடித்த நெத்தலி குழம்பு வைத்தேன். ஆனால் என்னால் ஒருவாய் உண்ண முடியவில்லை.’

தமிழ் சினிமா

ஐந்து ஐந்து ஐந்து (555)

காதல், வெயில் படத்திற்கு பின்பு சொல்லிக்கொள்ளும் படியாய் படம் அமையாதிருந்த பரத்திற்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்திருக்கும் படம் 555.
ஒரு கார் விபத்தில் சிக்கி கொடூரமாய் அடிபடும் பரத், என்று பரபரப்பாய் தொடங்குகிறது படம்.
மருத்துவமனையில் கோமா நிலைக்கு சென்று சிகிச்சை பெற்று குணமாகி வரும் பரத், தன் காதலி மிர்த்திகாவை நினைத்து அவள் நினைவாலேயே வாடிக் கொண்டிருக்கிறார்.
மிர்த்திகாவை பார்த்து, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரமாக இவர் நினைத்திருந்த அனைத்துமே காணாமல் போய்விடுகிறது. இது எல்லாமே பிரம்மை. மிருத்திகா என்ற ஒரு பெண்ணே இல்லை.
விபத்துக்கு பின்பு உன்னுடைய மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தான் இப்படி கற்பனையான சில விடயங்களை உருவாக்கியிருக்கிறது என பரத்துக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரும், பரத்தின் அண்ணன் சந்தானமும் சொல்ல, அதை பரத்தால் நம்ப முடியவில்லை.
உருத்தலுடன் மிர்த்திகா இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறார். அங்கு அவள் இருந்ததற்கான ஆதாரங்கள் பரத்திற்கு கிடைக்கிறது.
கூடவே, ஒரு கொலைகார கும்பலும் பரத்தை துரத்துகிறது. அவர்களிடம் பரத் சண்டை போடுகிறார். இந்த சண்டையில் சந்தானம் கொல்லப்படுகிறார்.
இறுதியில், பரத் தன்னை துரத்தும் கொலைகார கும்பல் யார் என்பதை கண்டுபிடித்தாரா? தன்னுடைய காதலியாக நினைத்துக் கொண்டிருக்கும் மிர்த்திகா இறந்தாளா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
இந்த படத்தின் ஒட்டுமொத்த விளம்பரத்திற்கும் அடிப்படை பரத்தின் சிக்ஸ் பேக் உடற்கட்டுதான்.
இவரது உடலில் புடைத்துக் கொண்டு நிற்கும் நரம்புகளும், செதில் செதிலாய் திரண்டு நிற்கும் சதைகளும், இதுவரை நாம் தமிழ் சினிமாவில் பார்த்த சிக்ஸ் பேக் உடற்கட்டுகளையெல்லாம் ரொம்ப சாதாரணமாக்கிவிட்டது.
சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்தையும், காதல் காட்சிகளில் ரம்மியத்தையும் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகி மிருத்திகா, இன்னொரு கேரள வரவு. இவருடய சுவாரஸ்யமான முகமும், முகபாவங்களும் ரசிக்க வைக்கிறது.
லைலா, ஜெனிலியா போன்று கொஞ்சி பேசுகிறார். பரத்திற்கு விசேஷ சக்தி இருப்பதாக மிர்த்திகா நம்பும் காட்சிகளின் போதெல்லாம் திரையரங்கில் கை தட்டல் வாங்குகிறார்.
கேபிள் கனெக்ட் பண்ண ஹீரோயின் வீட்டுக்கு வந்து பரத் பெட்ரூம் சூழலை நோட் பண்ணிவிட்டு, பின் ஃபோனில் தனக்கு ஒரு பவர் யோகாவால் கிடைத்ததாகவும், இப்போ உன் பக்கத்தில் என்னென்னெ இருக்கு? என்பதை சொல்லமுடியும் என்று ஹீரோ அள்ளிவிடும் காட்சிகள் சுவராஸ்யம்.
இன்னொரு நாயகி எரிக்கா பெர்னாண்டஸ். ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டு, அப்படியே சில காட்சிகளில் நடித்துவிட்டு இரண்டாவது நாயகிகளுக்கே உரித்தான இலக்கணத்தில் இறந்து போகிறார்.
படத்தில் கஜினி, சமர் பட சாயல் அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். வில்லனை கடைசி 20 நிமிடத்திற்கு பின்னர் தான் காட்டியிருக்கிறார்.
படத்தில் சில காட்சிகள் ரசிக்கும்படியாய் இருந்தாலும், அதையே இழுத்தடித்து கடுப்பேத்தியிருக்கிறார்கள்.
அறிமுக இசையமைப்பாளர் சைமன் இசையில் ‘எழவு’ என்ற பாடல் மட்டும் கவனத்தை ஈர்க்கிறது. ‘முதல் மழைக் காலம்’ பாடல் ரம்மியமாய் இருக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் படத்தின் ட்ரைலரே இவரது திறமையை காட்டிவிட்டது. இருப்பினும், படத்தின் ஆரம்பம் முதல் விபத்து காட்சியிலிருந்து, படம் முழுக்க ஆங்காங்கே தன் தனித்திறமையை பதித்திருக்கிறார்.
சொல்லாமலே, பூ போன்ற வித்தியாசமான காதல் கதையை தந்த சசி, இம்முறை ஆக்ஷனில் களமிறங்கி வெற்றியும் கண்டுள்ளார்.
மொத்தத்தில் ‘555’க்கு கொடுக்கலாம் 55.
நன்றி விடுப்பு