கண்ணென திருநீற்றைக் கருத்தினில் வைப்போம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா 



திரு நீற்றைத் தினமும் பூசுவோம்

திரு நிறையும் சிவமும் தெரியும்
திரு நீறென்பது குறையைக் களையும்
திரு நீறென்றும் திருவருள் காட்டும்

உளமது தெளியும் உயர்வுகள் மலரும்
களவது அகலும் கயமைகள் ஒழியும்
பழியது மடியும் பணிவது பிறக்கும்
தினமே நீற்றை அணிபவர்க் கெல்லாம் 

மங்கலம் பெருகும் மருளது மடியும்

எங்களின் சிந்தனை இறையினில் பதியும்
கங்கையை அணிந்தவர் காட்சியும் தருவார்
எங்குமே இன்பம் பொங்கியே பெருகும்

பசியும் அகலும் பிணியும் அகலும் 
பகலும் இரவும் ஒன்றாய் அமையும்
கனிவு பிறக்கும் கருணை பெருகும்
தினமும் நீற்றை நினைப்போம் நாங்கள்

வரட்சி மறையும் செழுமை சிறக்கும்
வானும் பொழியும் மண்ணும் மகிழும்
பொய்மை பொசுங்கும் மெய்மை தளிர்க்கும்
மெய்மையாய் நீற்றை விருப்புடன் அணிந்தால்

அகமும் மலரும் முகமும் மலரும்
ஆணவம் அகலும் அகமது வெளிக்கும்
அறத்தை நினைப்போம் அன்பைக் கொடுப்போம்
அனுதினம் நீற்றை அணிந்துமே நின்றால் 

Prisioner #1056 “போர் தின்ற மனிதன் சாதித்த கதை” 📚 நூல் நயப்பு - கானா பிரபா

                                                                                                                                                                                                                                        


 “அழக்கூட முடியாமல் களைத்துப் போயிருந்தோம்"    நாளுக்கு நாள்
அனுபவிக்கும் சித்திரவதையை விட மேலானது இறப்பு என்பதுதான் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய அதிகபட்ச கருணை என்ற நிலையில் தான்அங்குள்ள அத்தனை பேரின் ஒருமித்த மனநிலை.    அம்மாவின் கைக்குள் இருந்த அந்தப் பதினேழு வயதுப் பையன் இதோ இப்போதுகைதி இலக்கம் #1056 என்ற அடையாளச் சின்னதோடு ஶ்ரீலங்கா அரசின் வதைமுகாமில்.    அவனோடு கூடவே சிறைப்பிடிக்கப்பட்ட 2700 அப்பாவித் தமிழ் இளைஞர்களின்குரலாக அது ஒலிக்கிறது.    அந்தப் 17 வயது பையன், 36 வருடங்களுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த அவலவாழ்வினைக் காட்சிப்படுத்தும் சூழலில் இருந்து ஆரம்பிக்கிறது Prisioner #1056

 அந்தப் பையன் தான் இன்று கனேடிய மண்ணின் ஆகப்பெரிய
சுயாதீன சொத்துநிர்வாக நிறுவனம் CI Financial இன் நிறைவேற்றுத் துணைத்தலைவராக வளர்ந்துநிற்கும் ரோய் ரட்ணவேல்.    

 ஈழத்தின் வடமராட்சி மண்ணின் கடல் வளம் கொண்ட பருத்தித்துறை மண்ணின்அழகியல் விபரணத்தோடு தொடங்குகிறது ரோய் ரட்ணவேலின் வாக்குமூலம்.      

மிராஜ் 2000 விமானத்தாக்குதலோடு தொடரும் பக்கங்களில் தன் கண் முன்னேகண்ட போரின் கோர வடுக்களோடு மெல்ல மெல்ல,   

1987 இல் வடமராட்சி மண் மீது ஶ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை வழியாக அந்தக்கொடிய போரின் சாட்சியங்களில் ஒருவராகக் கைதாகி, வதை முகாமில் அடுத்தஅனுபவங்களுக்கு முகம் கொடுக்கிறார். தமிழ்த் தீவிரவாதி என்று பலவந்தமாகஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக அந்தக் கொலைக்களத்தின் பலியாடுகளில்ஒருவராகிறார்.    

1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் நிகழ்ந்து 40 ஆண்டுகள் தொட்டிருக்கும்நிலையில்

கட்டுரை இப்படியும் நடக்கிறது July 30, 2023

 இந்த ஊர்க்குருவி யாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் ஈழநாடுவில்


பணியாற்றிய அந்தக்காலத்தில் இரவுக் கடமை முடிந்து அதிகாலை வீட்டுக்குச் செல்வதற்காக யாழ்ப்பாண பஸ் நிலையம் செல்வதற்கு முன்னதாக அதன் எதிரே உள்ள பூபாலசிங்கம் புத்தகக்கடையில் சில நிமிடங்களைக்கழிப்பதுண்டு.

கடையின் மேற்குப் பக்கத்தில் அன்றைய தினசரிகளை விற்பதற்கான பகுதியின் முன்னால் யாழ்ப்பாணத்தின் பிரமுகர்கள் பலரை காணலாம்.
அங்கே கொட்டடியைச்சேர்ந்த அந்த பதின்மவயது வாலிபனும் தினமும் நிற்பான்.
அன்றைய பத்திரிகைகளில் வந்திருக்கின்ற செய்திகளை மற்றவர்கள் விமர்சித்துக்கொண்டிருக்கும்போது.
அவன் மட்டும் எந்தப் பத்திரிகையில் எந்த செய்தி வந்திருக்கின்றது? அந்தச் செய்தி எந்தப்பத்திரிகையில் வரவில்லை என்பது போன்ற தகவல்களை சொல்லிக்
கொண்டிருப்பான்.
அத்தனை செய்திகளையும் அலசிக்கொண்டு வருவோர் போவோர் எல்லோருடனும் கதைத்துக்கொண்டிருப்பான்.
அனேகமாக அவனுக்கு அங்கு வருகின்ற வயதான பிரமுகர்களும் நண்பர்கள் மாதிரித்தான்.
அந்த வாலிபன் இப்போது லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
இப்போது அவருக்கு எத்தனை வயதிருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள்.
நான் யாரை சுட்டுகிறேன் என்பதை அவரைத் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.
நேற்றையதினம் வட்ஸ்அப்பில் தொடர்பில் வந்தார்.
வட்ஸ் அப்தொலைபேசி அழைப்புக்களை அழைப்பவர் யார் என்பதை அவர்களின் ‘புறோஃபைல்’ காட்டித்தந்து விடும்.
அவர் தான் அழைக்கிறார் என்பதால் தவிர்க்க முடியாமல் பேசவேண்டிவந்தது.

கட்டுரை இப்படியும் நடக்கிறது July 29, 2023

 


தமிழ் அரசியலில் தமிழரசு கட்சியின் பாராளுன்றக்குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம். பியுமான இரா. சம்பந்தனுக்கு நிகராக யாரும் இன்று இல்லை என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது.
அவருக்கு நிகராக அரசியலில் அனுபவமும் ஆளுமையும் உள்ள மற்றுமொருவராக ஆனந்தசங்கரி ஐயா இருந்தாலும் அவர் இன்று தமிழ் மக்களின் பிரதிநிதியாக இல்லை.
நாம் சொல்லவருவது, தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இல்லை என்பதையே.
சம்பந்தன் நீண்டகாலமாக பாராளுமன்றம் சென்றதில்லை.
பாராளுமன்றத்தில் உரையாற்றக்கூடிய தெம்புடனும் அவர் இல்லை.
அவரின் மூளையும் சிந்தனை ஆற்றலும் கொஞ்சமும் குறையவில்லை என்றாலும் அவற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் அவரின் உடல்நிலை
ஒத்துழைப்பதாகத் தெரியவில்லை.
ஆனாலும் தமிழ் மக்களின் அரசியல் விவகாரம் என்றால் சம்பந்தன் என்ன நினைக்கிறார் என்பதை அறிய பலரும் விரும்புவது தவிர்க்க முடியாதது.
அண்மையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி செல்வதற்கு முன்னதாக சம்பந்தனை இந்தியத் தூதுவரும் அமெரிக்க தூதுவரும் அவரின்
வீடு தேடிச் சென்று சந்தித்தனர்.
அப்போது, தெற்கில் ஒரு தகவல் உலா வந்தது.
ஜனாதிபதி ரணில் இந்தியப் பிரதமரை சந்திக்கின்ற போது தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பாக அவரை வலியுறுத்துமாறு கோரி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு கடிதம் எழுதிக்கொண்டிருந்த காலம் அது.

சைவ மன்றத்தின் மனிதநேய நிதியத்திற்கு நிதி சேகரிக்கும் வருடாந்த இராப்போசன விருந்து - 06/08/2023

சைவ மன்றத்தின் மனிதநேய நிதியத்திற்கு நிதி சேகரிக்கும் நிகழ்வுகளில் ஒன்றுதான், வருடாந்த இராப்போசன விருந்தாகும்.

இந்த விருந்து August மாதம் 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு Bowman மண்டபம் Blacktownல் இடம்பெறும்.
 

கட்டுரை இப்படியும் நடக்கிறது July 28, 2023

 


நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்த சம்பவங்களை ஒவ்வொருவரும் தத்தமக்கு தேவையான விடயங்களை மாத்திரம் சொல்வதால் முழுமையாக எங்கும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி செயலகம் தமக்கு தேவையானவற்றை வெளியே சொல்லியது.
சுமந்திரன் தனக்கு தேவையானவற்றைச் சொன்னார்.
இப்படி ஒவ்வொருவரும் தத்தமக்கு தேவையான விடயங்களை மாத்திரம் வெளியே பகிர்ந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு தமிழ்க் கட்சி தலைவர் கூட்டம் முடிந்ததும் தொலைபேசியில் தொடர்பில் வந்தார்.
‘எதற்காக இந்தக் கூட்டத்தை ரணில் கூட்டினார் என்பது தெரியவில்லை.
பதின்மூன்றுக்கு எதிரான எல்லோரையும் வரிசையாக பேசவிட்டு, அதனை நிறைவேற்றுவதற்கு எத்தனை எதிர்ப்பு இருக்கின்றது என்று முதலில் காட்ட விரும்பினாரோ தெரியவில்லை.
பின்னர் ஒரு கட்டத்தில் தமிழ்த் தரப்பினரைப் பார்த்து உங்களால்தான் எல்லாம் தாமதமாகின்றது என்று புகார் சொல்ல அவர் முயன்றபோது,
நாங்கள் திரும்ப அதனை மறுத்ததுடன் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்தோம்.
முழுமையாக அமுல்படுத்துவதை பின்னர் பார்க்கலாம், முதலில் தேர்தலை நடத்துங்கள் என்றோம்.
அவர் அதற்கும் சரியாக பதிலை சொல்லாமல் எதுவித முடிவும் இன்றி கூட்டத்தை முடித்துவிட்டு எழும்பிவிட்டார்’ என்றார்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே ‘என்ன நடந்தது? என்ன நடந்தது?’ என்று ஒரு நண்பர் லண்டனிலிருந்து தொடர்ந்து தொடர்பில் வந்து
கேட்டுக்கொண்டே இருந்தார்.

திருத்தொண்டர் தொகை தந்த சிறந்த தமிழ் அடியார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .. ..... அவுஸ்திரேலியா



  இறைவன் மீது தோழமை உணர்வுடன் இப்பூவுலகில்


வாழ்ந்தவர்தான் ஆலாலசுந்தரர் என்று அழைக்கப்ப டும் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரர் பூமியில் பிறந்த வரலாறு தேவ உலகுடன் எம்பெருமான் சிவனுடன் இணைந்த வரலாறாகக் கருதப்படுகிறது. இறைவனுக்குத் தேவ உலகில் அணுகு தொண்டராக இருந்தவர் - மனந்தடுமாறி பேரின்பச் சூழலை மறந்து சிற்றின்பத்துக்குள் மனதினைச் செலு த்திய காரணத்தால் பூவுல கில் பிறவி எடுக்கும் நிலைக்கு ஆளா கிறார். தேவ உலகில் இவரின் சிந்தையினைக் கலைத்த பெண்களும் பூவுலகில் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. சிற்றின்ப ஆசைகளுக்கு உரிய இடம் பூவுலகமே ஆனதால் சுந்தர ரின் சிற்றின்ப உணர்வு களைப் பகிர்வதற்கு - அவருக்குச் சலனத்தை ஏற்படுத்திய பெண்களே துணையா கவும் வந்து அமைகிறார்கள். அவர்களை மணந்து சுந்தரர் தான் வந்தவேலை முடிந்தவுடன் - எங்கு முன்னர் இருந்தாரோ அங்கேயே போகிறார் என்பதுதான் ஆலாலசுந்தரரின் வரலா றாய்ப் படிக்கின்றோம்.

  கதைகளை நம்பலாமா என்று எண்ணத் தோன்றுகிறது. கதைகள் எப்படி இருந்தாலும் கதைகளூடாகப் புல ப்படுகின்ற கருத்துக்களை த்தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும். காமனையே தகனம் செய்த இடத்தில் காதலுக்கு இடமே இல்லை. காதல் கொண் டால் தண்டனை அனுபவிக்க வேண்டும்தண் டனைதான் பூவுலகில் வந்து பிறப்பது. பூவுலகுதான் காதலுக்கும் சிற்றின்பத்துக்கும் ஏற்ற இடமாகும்.சிற் றின்பத்தை அனுபவிக்கும் வேளை பேரின்பம் பற்றிய புரிதல் வரும். வருவதற்கு பேரின்ப மயமான அந்தப் பெரும் பொ ருளை பரம்பெருளைப் பற்ற வேண்டும். பற்றும் நிலையும் பல இருக்கிறது. அதில் ஒரு நிலை நட்பு நிலையாகும். அதாவது அந்தப் பரம்பொருளை நண்பனாகக் கொண்டு அவனிடம் அடைக்கலம் புகுவ தேயாகும். அதைத்தான் ஆலாலசுந்தரர் இப்பிறவியில் கையாண்டார்.

கட்டுரை கனடிய எதிர்ப்பின் பின்னணி July 27, 2023

 


பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சிங்கள தேசியவாதத்தின் புதிய காவலராக தன்னை காண்பித்துக் கொள்கின்றார்.

ஒவ்வோர் அரசாங்கங்களிலும் இவ்வாறானவர்கள் இருப்பதுண்டு.
மகிந்த ராஜபக்ஷ காலத்தில் விமல் வீரவன்ஸ இந்தப் பணியை செய்துகொண்டிருந்தார்.
தற்போது சரத் வீரசேகர இனவாதப் பணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ‘வியத்மக’ உருவாக்கிய அரசியல்வாதிகளில் சரத் வீரசேகரவே முதன்மையானவர்.
தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அரசியல் மயப்படுத்தும் நோக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டு, சரத் வீரசேகரவை மாகாண சபைகள் விவகாரங்களுக்கான அமைச்சராக்கினார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் ஒருவரை மாகாண சபைகள் விவகாரத்துக்கு அமைச்சராக்குவது முட்டாள்தனமாக தெரிந்தாலும் கோட்டாபயவை பொறுத்தவரையில் இவ்வாறான செயல்பாடுகளை தனது புத்திசாலித்தனமாகவே கருதிக்கொண்டார்.
இதேபோன்றுதான், 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்கும் ஒருவரை கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநராக நியமித்தார்.
ஆனால், கோட்டாபய தன்னை புத்திசாலியாக எண்ணிக்கொண்டு முன்னெடுத்த அனைத்து விடயங்களுமே இறுதியில் அவருக்கு எதிராகவே திரும்பின.
வியத்மகவும் இறுதியில் காணாமல் போனது.
ஆனால், அதன் எச்சமான சரத் வீரசேகர போன்றவர்கள் இனவாத பணிக்கு தலைமை தாங்கி வருகின்றனர்.
இதுவரையில், தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்திய சரத் வீரசேகர தற்போது கனடாவின் தூதுவரை வெளியேற்ற வேண்டுமென்று கூக்குரலிட்டு வருகின்றார்.
கனடிய தூதுவர் அண்மையில், கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்து ருவிற்றரில் பதிவிட்டிருந்தார்.

கட்டுரை இப்படியும் நடக்கிறது July 27, 2023


சிங்கள தேசியக் கட்சி ஒன்றின் மூலம் அரசியலுக்கு வந்த இராசமாணிக்கம் சாணக்கிய பின்னர் தமிழரசுக் கட்சியில் ஐக்கியமாகி எம்.பி. ஆன பின்னர், ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னார்: ‘தந்தை செல்வாவும் தேசியக் கட்சி ஒன்றில் அரசியலை தொடங்கி பின்னர் தமிழரசுக் கட்சியை தொடங்கியவர்தானே’
என்று.
அதாவது மகிந்த ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து அரசியலுக்கு வந்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கே சாணக்கிய இவ்வாறு பதிலளித்திருந்தார்.
அவருக்குப் போட்டியாக மட்டக்களப்பில் அரசியல் செய்பவர் ரெலோவின் பொதுச் செயலாளரும் தற்போதய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான ஜனா என்று அறியப்பட்ட கோவிந்தம் கருணாகரம்.
ஒன்றுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பில் வெற்றிபெற்ற இருவரும் அவர்கள்தான்.
இப்போது இருவரும் தமிழ்த் தேசிய அரசியலில் எதிர் எதிர் அணியில் இருக்கின்றார்கள்.
அதனால்தானோ என்னவோ சாணக்கியவைப்போலவே தானும் அவ்வப்போது பேசவேண்டும் என்று ஜனா நினைக்கிறாரோ தெரியவில்லை.

வாயாடி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து


கதைகள் எழுதப்பட்டு அவை படமாகி வெற்றி கண்டுள்ளன. 1947ம் ஆண்டளவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் பல சீர்திருத்த கருத்துக்களை உள்ளடக்கி அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி படம் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டு மாபெரும் வெற்றியை கண்டது. அதன் பின் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர் எம் சோமசுந்தரத்தின் மகன் எம் எஸ் காசி , கதாநாயகியை முன்னிலைப் படுத்தி ஒரு படத்தை 1973ல் தயாரித்தார். அந்தப் படம் தான் வாயாடி.


படத்தின் பெயரே கதாநாயகியின் கதாபாத்திரத்தை

உணர்த்துவதாக அமைந்தது. அந்த பாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக கே ஆர் விஜயா அமைந்தார். அவரை சுற்றி முழுப் படமும் உருவானது. படத்தின் தயாரிப்பிலும் அவரின் மறைகரம் தென்பட்டது.

வீட்டு வேலைகளை செய்து தன்னுடைய அன்றாட வாழ்வை ஓட்டும் பொன்னி நல்லவள், வெகுளி,ஆனால் வாயாடி! தன் மனதில் பட்டத்தை பட்டென்று வெளிப்படையாக பேசிவிடும் அவளின் செயல் ஒரு வீட்டில் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய முடியாத வண்ணம் தடுக்கிறது. செல்வந்தரான கோவிந்தசாமி வீட்டில் வேலைக்கு சேரும் அவளை கோவிந்தசாமியின் மகன் ராஜா காதலிக்கிறான். குடும்ப சொத்தை வீணாக்கி, படிக்காமல் சதா ஜாலியாக வாழும் அவனின் காதலை ஆரம்பத்தில் பொன்னி மறுக்கிறாள். ஆனால் பின்னர் அவனை காதலிக்கிறாள். அவளின் வற்புறுத்தலினால் படித்து பட்டதாரியாகிறான் ராஜா. ஒரு வழியாக பெற்றோர்கள் சம்மதிக்கவே பொன்னி , ராஜா கல்யாணம் நடக்கின்றது. ஆனால் பொன்னியின் பணத்தால் பட்டதாரியாகும் ராஜா ஆடம்பரமான, நாகரீகமான வாழ்வை நாடுகிறான். சதா மதுவிலும், மங்கையிடமும் நாட்டம் கொள்கிறான். பொன்னியோ துடிக்கிறாள். அவனை மீண்டும் மீட்டு நல்வழி படுத்துகிறாளா என்பதே மீதிக்கதை.

படத்தின் கதையை கலைஞானம் எழுதினார். ஆண்கள் எவ்வளவுதான் கெட்டலைந்தாலும் அவர்களை திருத்தும்சாமர்த்தியம் பெண்களிடமே உண்டு என்பதை வலியுறுத்தும் வகையில் கதையை எழுதியிருந்தார். அதற்கு திரைக் கதை வசனம் எழுதி, டைரக்ட் செய்தார் மதுரை திருமாறன். வசனங்களில் சிலம்பம் ஆடும் திருமாறனின் திறமை பல இடங்களில் பளிச்சிட்டது. வாசலில் இருக்கும் செருப்பு யாரையும் தேடி போவதில்லை, அதை தேடித்தான் யாரேனும் வருகிறார்கள். பீரோவின் இருக்கும் பட்டு வேட்டியை வாசலிலும் , வாசலில் இருக்கும் செருப்பை பீரோவிலும் வைக்க முடியாது , ஒரு பெண் கையை நீட்டினால் மடக்கலாம், காலை நீட்டினால் மடக்கலாம் , ஆனால் கழுத்தை நீட்டினால் அவ்வளவுதான் என்பது போன்ற பல வசனங்களை திருமாறன் எழுதி இருந்தார்.

கட்டுரை ரணில் தீர்வு தருவாரா? July 25, 2023

 


ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதன்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயம் ஆராயப்படவுள்ளது.
தற்போதுள்ள சூழலில், அனைத்துக் கட்சிகளின் ஆதரவு இதற்கு கிடைக்குமா என்பது சந்தேகமே!
ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில், தன்னை அனைத்துக்கும் ஆதரவானவராகக் காண்பித்துக் கொள்கின்றார்.
இதன்மூலம் தான் தீர்வுக்கு தயாராக இருக்கிறார் என்றும் அனைத்து கட்சிகளும் உடன்பட்டால், அதில் தனக்கு ஆட்சேபனை இல்லையெனவும் கூறுகின்றார்.
இதன்மூலம் தமிழ் மக்களுக்கு ஆதரவானவராக அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றார்.
ரணில் ஒப்பீட்டடிப்படையில் விடயங்களை உரையாடக் கூடியவர்தான்.
ஆனால், அவர் எந்தளவு தீர்வு விடயத்தில் உறுதியாக இருப்பார் என்பதில் சந்தேகம் கொள்ளாமல் இருக்க முடியாது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அரசியல் தீர்வு விடயத்தில் போதிய அனுபவங்கள் உண்டு.
ஒரு கட்சி ஆதரிப்பதை ஏனைய கட்சிகள் எதிர்ப்பதுதான் இலங்கைத் தீவின் வரலாறு.
இந்த நிலையில், அனைத்து கட்சிகளின் உடன்பாட்டோடுதான் விடயங்கள் செய்யப்படவேண்டுமென்றால் அதன் சாத்தியம் கேள்விக்கு உரியது.

கட்டுரை இப்படியும் நடக்கிறது July 25, 2023

 ‘உன்னிடம் இரண்டு கடிதங்கள் கொடுத்தேனே, அவற்றைக்


கவனமாக ‘போஸ்ட்’ செய்து விட்டியா?’ என்று கேட்டார் முதலாளி.

‘நீங்கதான் கவனக் குறைவாக அமெரிக்கா போக வேண்டிய கடிதத்தில் இருநூறு ரூபாய் முத்திரையையும் கொழும்புக்கு போகவேண்டிய கடிதத்தில் இரண்டு ரூபாய் முத்திரையையும் ஒட்டி இருந்தீர்கள்’ என்றான் வேலைக்காரன்.
‘சரி, சரி, முத்திரையை மாற்றி ஒட்டி அனுப்பி விட்டாய் அல்லவா?’ என்றார் முதலாளி.
‘ஒட்டி இருந்த முத்திரையை கழட்ட முடியல்ல.
அதனால் விலாசத்தை மட்டும் அழித்து மாற்றி எழுதி அனுப்பி விட்டேன்’ என்றான் அந்த புத்திசாலி வேலைக்காரன்.
இந்தக் கதைக்கும் இனி எழுதப்போகின்ற விடயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
லண்டனிலிருந்து நண்பர் ஒருவர் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்றும் அது தன்னிடம் இல்லை எனவும் கடைசியாக நடந்த தமிழ் எம்.பிக்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்திருந்தார் அல்லவா.
அதுகுறித்து பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவோ, ஏற்கனவே, அரசியலமைப்பில் இருக்கும் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவையில்லை என்றும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தியே அதனை அமுல்படுத்த முடியும்
எனவும் தெரிவித்திருந்தார்.

இலங்கைச் செய்திகள்

 பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன், ஜனாதிபதி ரணிலுடன் இன்று பேச்சு - முக்கிய ஒப்பந்தம் தொடர்பிலும் கவனம்

கவனயீர்ப்பிற்கு ஆதரவாக முடங்கியது முல்லைத்தீவு

பாப்பரசரின் பிரதிநிதி நேற்று முள்ளிவாய்க்காலுக்கு விஜயம்! -உயிர் நீத்தவர்களுக்காக சுடர் ஏற்றி வழிபாடு

கனேடிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழர்!

கோட்டாபய ராஜபக்‌ஷவினால் தடை விதிக்கப்பட்ட 5 இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி வெளியீடு


பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன், ஜனாதிபதி ரணிலுடன் இன்று பேச்சு - முக்கிய ஒப்பந்தம் தொடர்பிலும் கவனம்

July 29, 2023 5:59 am 

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் நேற்று (28) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

உலகச் செய்திகள்

 11 நாடுகளின் பங்கேற்புடன் ஆஸியில் போர் ஒத்திகை

ஷியா பள்ளிவாசல் அருகில் குண்டு வெடித்து அறுவர் பலி

டொனல்ட் டிரம்ப் மீது மூன்று புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

நைகர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம் -ஜனாதிபதி சிறைப்பிடிப்பு

டென்மார்க்கில் குர்ஆன் எரிப்புக்குக் கண்டனம்


11 நாடுகளின் பங்கேற்புடன் ஆஸியில் போர் ஒத்திகை

July 30, 2023 1:06 pm 

பதினொரு தோழமை நாடுகளின் பங்குபற்றுதலுடனான பாரிய பன்னாட்டு இராணுவ ஒத்திகை அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகியுள்ளது. ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப் பயிற்சி ஐக்கிய அமெரிக்காவினதும் அவுஸ்திரேலியாவினதும் தலைமையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை - ஆபத்தை உணர்தல் அவசியம் - July 24, 2023

 எதிர்பார்ப்புகளுடன் நோக்கப்பட்ட ரணிலின் இந்தியப் பயணம் நிறைவுபெற்றது.


எதிர்பார்த்தவாறே இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தியிருக்கின்றார்.
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கான எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் அவசரமாக அனைத்து கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
ரணிலைப் பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் உடன்பட்டால் அரசியல் தீர்வு விடயத்தில் தனக்கு எவ்வித முரண்பாடுமில்லை என்று கூறுகின்றார்.
ஆனால், நமக்கு நன்றாகத் தெரிந்த விடயம் சில விடயங்களில் அனைத்து கட்சிகளும் உடன்படப்போவதில்லை.
குறிப்பாக, 13ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் பொலிஸ் அதிகாரத்தை அமுல்படுத்துவதில் நிச்சயம் அனைத்து கட்சிகளும் உடன்படப்போவதில்லை.
இந்த நிலையில் தமிழ் கட்சிகள் விடயங்களை எவ்வாறு கையாளப்போகின்றன? வழமைபோல் 13இற்கு அப்பால் செல்லுதல் – அல்லது 13 மைனஸை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கொழும்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு இறுதியில் புதிய அரசியல் யாப்பு பற்றிப் பேசப்போகின்றனவா அல்லது விடயங்களை தூர நோக்குடனும் விவேகத்துடனும் கையாளப் போகின்றனவா? மாகாண சபை முறைமையிலுள்ள குறைபாடுகளுக்கு அப்பால் அது வடக்கு – கிழக்கில் குறிப்பிட்டளவான அதிகாரத்தை கையாள்வதற்கான வாய்ப்பை தமிழ் மக்களுக்கு வழங்குகின்றது.
இந்த நிலையில், ரணில் அதனை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறுகின்றபோது பந்தை ரணிலின் பக்கமே வீசிவிட வேண்டும்.
தமிழர் தரப்பு விடயங்களை குழப்பியதான தோற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.

கட்டுரை - இப்படியும் நடக்கிறது - July 24, 2023

 இரண்டு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி


ஒன்றை இரண்டு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், எழுந்து இருவரும் வெளியே வந்தபோது ஒருவர் கேட்டார், என்ன நினைக்கிறீர்கள் இருவரின் கருத்துக்களைப் பற்றி?
என்று.
அதற்கு மற்றவர் சொன்னார், ‘ஒருவர் அறிவாளி போல முட்டாள்தனமாக கதைக்கிறார்’ என்று, ‘அப்ப மற்றவர்?’ என்று கேட்டார்.
அதற்கு இவர் சொன்னார், ‘அவர் தன்னை மகா அறிவாளி என்றும் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அடி முட்டாள்கள் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்’ என்று.
அண்மையில், ஒரு விடயம் தொடர்பாக இரண்டு பேர் பாராளுமன்றில் உரையாற்றியது பற்றிய செய்திகளைப் படிக்க முடிந்தது.
இந்த நாட்டில் சமஷ்டி தீர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவில்லை என்றும் தமிழ் தலைவர்கள் கனவு காணவேண்டாம் எனவும் கூறியிருக்கிறார் சுதந்திரக் கட்சியின் அனுசரணையுடன் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்து இன்று மொட்டு கட்சி பிரமுகராகி இராஜாங்க அமைச்சையும் பெற்று அரசியல்வாதியாக
இருக்கும் சுரேன் ராகவன்.
ஏதோ அவரிடமே தமிழ் தலைவர்கள் சமஷ்டியை கேட்டது போலவும்தானே அதற்கு அனுமதி தரவேண்டியவர் போலவும் அவர் பேசியிருக்கிறார்.

ஆழியாள் கவிதைகள் : உரையாடல்

 இலக்கியவெளி 

 

நடத்தும்


இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 30


ஆழியாள் கவிதைகள் : உரையாடல்

 

நாள்:         சனிக்கிழமை 05-08-2023       

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

                     

உரை நிகழ்த்துவோர் :

சி.ரமேஷ்

தானாவிஷ்ணு

தர்சிகா ரமணாகரன்

சு.குணேஸ்வரன்

 




சினிமா - விடாமுயற்சிக்கு வந்த விடிவுகாலம்!.. வதந்திகளுக்கு படக்குழு வைத்த முற்றுப்புள்ளி

 July 27, 2023

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டனர்.

இதையடுத்து விடாமுயற்சி படம் குறித்து எந்த அப்டேட்களும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அஜித் மீண்டும் வேர்ல்ட் டூர் செல்கிறார் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஆகஸ்ட் 18 -ம் தேதி தொடங்கும் என்றும் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.    நன்றி ஈழநாடு