கவிதை 19 கவிதாயினி நிலா, புத்தளம்,இலங்கை


தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

வீணாகிப்போகும் எம்வாழ்வும் எம்சாவும்..
காணாமல் போன எம் சந்தோசப் பொழுதுகளும்
தானாகச் சேர்ந்த உறவுகளின் பொய்மையும்
வேணாம் இந்த வாழ்வென்று விரட்டியே கொல்லுதிங்கு

தேனாக இனிக்கும் தெவிட்டாத அன்பொன்றைத் தேடி
தானாக தேடிவிழும் விட்டில் பூச்சிகளாய்
மானாக வாழும் பெண்ணினமும் காயமாகி
மீனாகத் துடித்து சாகும் வாழ்க்கை கொடிது

தித்திக்கும் தீவாவளி ! [ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா ]

.
மனமெல்லாம் ஒன்றுபட்டு
     மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுத்து
     தினமெங்கள் வாழ்வுவரின்
     தித்திக்கும் தீபாவளி !

    பட்டாசு மத்தாப்பு
    பட்சணங்கள் அத்தனையும்
    சுற்றிவந்து நின்றுவிடின்
    சுவைத்துவிடும் தீபாவளி !

கார்த்திகாவின் நாட்டியாஞ்சலி 2015

.

கடந்த 31.10.15 சனி மாலை கார்த்திகா ஆடற் கலையகத்தினரின் நாட்டியாஞ்சலி விழா Wentworth வில் RedGum மண்டபத்தில் நடைபெற்றது. அன்று சிட்னி நகரில் பல நிகழ்சிகள் நடைபெற்ற போதும் மண்டபம் நிறைந்த கூட்டம் வருகை தந்திருந்தது.

நடன நிகழ்ச்சி தமிக்கா சாஇனத்தின் அறிவிப்புடன் ஆரம்பமானது. தமிக்கா பல வருடங்களுக்கு முன் கார்த்திகாவின் மாணவியாக ஆடியவர். இன்றோ தனது மகள் கார்த்திகாவுடன் நடனம் கற்பதாகவும் தனது 10 வயது மகளை எனக்கு காட்டினார். குரு பக்த்தியை தனது குரல் மூலம் வெளிப்படுத்துவதாக கூறி சிரித்தார்.

ஆறு கலை - இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015


நூல்களின் கண்காட்சி அரங்கு  இலக்கிய கருத்தரங்கு நூல் விமர்சன அரங்கு கவியரங்கு விவாத அரங்கு மகளிர் அரங்கு
                                          முருகபூபதி
அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடைபெற்றுவரும் தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் ஒரே மண்டபத்தில் ஆறு அரங்குகளாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இவ்விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் எழுத்தாளர் திரு. எம். ஜெயராம சர்மா அவர்களின் தலைமையில் மெல்பனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலின் பீக்கொக் மண்டபத்தில் எதிர்வரும் 14-11-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகிறது. 

நூல்களின் கண்காட்சி அரங்கு - இலக்கிய கருத்தரங்கு - நூல் விமர்சன அரங்கு - கவியரங்கு - விவாத அரங்கு - மகளிர் அரங்கு முதலான தலைப்புகளில் நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

தேவன் (யாழ்ப்பாணம்) - வ.ந.கிரிதரன்

.
தேவன் (யாழ்ப்பாணம்




தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய இக்கட்டுரையை  அவரைப் பற்றிய விரிவானதொரு ஆய்வுக்கு அடிகோலுமொரு ஆரம்பக் கட்டுரையாகக் குறிப்பிடமுடியும். இக்கட்டுரை எழுத்தாளர் முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளிவரவிருக்கும் 'இலக்கியப் பூக்கள் -2' நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. ஏற்கனவே முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளியான 'இலக்கியப் பூக்கள்' தொகுப்பு நூலின் தொடர்ச்சியாக வெளிவரவுள்ள நூலிது. - ..கி ] நான் யாழ் இந்துக் கல்லூரியிலும், வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வி பயின்றிருக்கின்றேன். இவற்றில் என் எழுத்தார்வம் தொடங்கியது வவுனியா மகா வித்தியாலய மாணவனாகவிருந்த சமயத்தில்தான். அப்பொழுதுதான் ஈழநாடு, சுதந்திரன் ஆகியவற்றில் என் ஆரம்பகால, சிறுவர் படைப்புகள் வெளிவந்தனஅப்பொழுதுதான் அகில இலங்கைரீதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்ததும் நிகழ்ந்தது. பின்னர் என் உயர்தரக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் தொடர்ந்தபொழுது அங்கே இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கால் பதித்த எழுத்தாளர்கள் சிலர் ஆசிரியர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். சொக்கன் என அறியப்பட்ட சொக்கலிங்கம், தேவன் - யாழ்ப்பாணம் என்று அறியப்பட்ட மகாதேவன் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். எனக்கு எப்பொழுதுமே ஒரு வருத்தம். என் எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்த எழுத்தாளர்கள் எவரிடமும் மாணவனாகக் கல்வி கற்கவில்லையே என்பதுதான் அந்த வருத்தம். என எழுத்தார்வதிற்கு முழுக்க முழுக்கக் காரணமாகவிருந்தது என் வீட்டுச் சூழலே. அப்பாவின் வாசிக்கும் பழக்கமும், வீடு முழுக்க அவர் வாங்கிக் குவித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளும்தாம் என் எழுத்தார்வத்தின் பிரதானமான காரணங்கள். இருந்தாலும் யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாக அப்பொழுது கடமையாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான தேவன் - யாழ்ப்பாணம் அவர்களை அவ்வப்போது யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம், அவரது படைப்புகளின் மூலம் அறிந்து கொண்டிருந்தேன். ஆச்சியின் வீட்டில் கிடந்த பரணைத் தேடியபொழுது பழைய தினத்தந்தி பத்திரிகைப் பிரதிகள், மறைமலையடிகளின் நாகநாட்டரசி குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள், திப்புசுலதான் கோட்டைமற்றும் தேவன் -யாழ்ப்பாணம் அவர்களால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 'மணிபல்லவம்' என்னும் பெயரில் வெளியாகியிருந்த ' புகழ்பெற்ற ஆங்கில செவ்விலக்கியங்களிலொன்றான Treasure Island நாவல் என பல படைப்புகள் கிடைத்தன. மேற்படி மணிபல்லவம் நாவலை அன்றைய காலகட்டத்தில் விரும்பி வாசித்துள்ளேன்.

Laughing' o Laughing 2015 - 7& 8 November in Melbourne; 14 & 15 November in Sydney

.









தமிழ் எழுத்தாளர் விழா - 2015 14 11 2015

.
 அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்
                                                


அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  15 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா  எதிர்வரும் 14-11-2015 ஆம்   திகதி சனிக்கிழமை   மாலை  4.00  மணிக்கு  விக்ரோரியா  மாநிலத்தில் மெல்பன்   கரம்டவுண்ஸ்  ஸ்ரீ சிவா  விஷ்ணு  ஆலயத்தின்  பீக்கொக் மண்டபத்தில்   நடைபெறும்.
கலை,   இலக்கிய  கருத்தரங்கு -  நூல் அறிமுக அரங்கு  உட்பட கலை நிகழ்ச்சிகளும்   இடம்பெறும்.
மேலதிக  விபரங்களுக்கு:
திரு. ஜெயராம சர்மா (தலைவர்)         0431 200 870  
திரு. ஸ்ரீநந்தகுமார்  (செயலாளர்)        0415 405 361
திரு. நவரத்தினம்  அல்லமதேவன்   (நிதிச்செயலளார்)  0413 528 342


Victorian Tamil Engineers Foundation இரவு உணவுடன் நடன நிகழ்வு 14 11 2015

.












உலகச் செய்திகள்


ரஷ்ய விமானம் வெளிக்கார­ணி­க­ளா­லேயே நடு­வானில் பிள­வ­டைந்து விழுந்து அனர்த்­தத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது

தென் சூடான் விமான விபத்தில் 40 பேர் பலி

ஆப்­கானில் திரு­ம­ணத்­துக்கு அப்­பா­லான உற­வுக்­காக இளம் பெண்­ணுக்கு கற்­களால் எறிந்து மர­ண­தண்­டனை













ரஷ்ய விமானம் வெளிக்கார­ணி­க­ளா­லேயே நடு­வானில் பிள­வ­டைந்து விழுந்து அனர்த்­தத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது

03/11/2015 எகிப்தில் கடந்த சனிக்­கி­ழமை விழுந்து நொறுங்­கிய ரஷ்ய விமானம் வெளிக் கார­ணிகளால் நடு­வானில் உடைந்து வீழ்ந்­துள்­ள­தாக அந்த விமா­னத்தைச் செயற்­ப­டுத்தி வரும் விமான சேவை நிறு­வனம் நேற்று திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.

இலங்கைச் செய்திகள்


வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு : ருவான் குணசேகர

பொலிஸாரின் அடக்கு முறைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
 மட்டு.மாவட்டத்தில் கடும் மழை : பல குடும்பங்கள் இடம்பெயர்வு
 கோத்தாவை கைது செய்ய முடியாது
தாய்லாந்து இளவரசியை சந்தித்தார் ஜனாதிபதி







வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு : ருவான் குணசேகர


02/11/2015 வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் குறிப்பிட்டார்.

தமிழ் சினிமா


நானும் ரௌடி தான்


‘யோவ் எங்க அம்மா சத்தியமா நானும் ரவுடி தான்யா’ என்ற வடிவேலுவசனம் இல்லாத மொபைல் போன் தமிழகத்தில் இருக்காது. அந்த அளவிற்கு அந்த வசனம் பட்டி தொட்டியெல்லாம் ரீச் ஆனது. இதையே வசனமாக வைத்து போடா போடி இயக்குனர் விக்னேஷ் சிவன்இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் நானும் ரவுடி தான்.
படம் எப்படின்னு கேட்காதப்பா, இவர் நடிச்சாலே சூப்பர் படம்னா கண்டிப்பா பார்க்கலாம் என்ற அந்தஸ்த்தை கொண்டவர் விஜய் சேதுபதி, இதுநாள், வரை சின்ன பட்ஜெட்டில் நடித்து வந்த இவரை, புதுப்பேட்டை நண்பர் தனுஷ், ‘ஏன் சீரியஸாவே நடிக்கிறே கொஞ்ச நாள் சும்மா ஜாலியா நடிப்பா’ என்று அவரே தயாரித்திருக்கும் படம் தான் நானும் ரவுடி தான். படத்திற்கு இன்னும் பலமாக தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி நயன்தாரா படத்தில் இணைய அதிரி புதிரி எதிர்ப்பார்ப்புடன் படம் வெளிவந்துள்ளது.
கதைக்களம்
ஒரு பொண்ணு எனக்காக இத செய்வீயா? என்று கேட்டால், சாதாரண மனிதன் கூட அசாதாரண பையனாக மாறிவிடுவான். அப்படியிருக்கநயன்தாராவே வந்து எனக்காக இதை செய் என்றால் விடுவோமா? போலிஸாக அழகம்பெருமாள் அந்த ஊரில் ரவுடிசம் செய்து வரும் கிள்ளிவளவன் பார்த்திபனை எதிர்க்கிறார்.
இதற்காக பார்த்திபன் அவர் வீட்டில் வெடிகுண்டு வைக்க, அதில் அழகம்பெருமாளின் மனைவி இறக்கிறார். அவருடைய குழந்தைக்கு (நயன்தாரா) காது கேட்காமல் போகிறது. விஜய் சேதுபதிக்கு பார்த்தவுடன் காதல், திடிரென்று ஒரு நாள் அழகம்பெருமாள் காணமால் போக, நடுரோட்டில் நயன்தாரா பயந்து நிற்க விஜய் சேதுபதி உதவுகிறார்.
பின் ஒரு கட்டத்தில் அழகம்பெருமாளை கொன்று விட்டார்கள் என செய்தி வர, அதை நயன்தாராவிடம் இருந்து விஜய் சேதுபதி மறைத்து அவரை சந்தோஷமாக இருக்க வைக்கிறார். எப்படியோ உண்மை நயன்தாராவிற்கு தெரிய, ’நீ அவனை(பார்த்திபன்) கொன்றால் தான் நமக்குள் எல்லாம்’ என விஜய் சேதுபதியை முறுக்கேற்ற, அந்த வில்லனை எப்படி எப்படி கொல்கிறார்? என்பதை செம்ம ஜாலியாக கூறியிருக்கும் படம் தான் நானும் ரவுடி தான்.
படத்தை பற்றிய அலசல்
விஜய் சேதுபதி சார் இப்படியே 4 படம் நடிங்க என்று கேட்கத்தோன்றுகின்றது, எப்போதும் மிகவும் சீரியசான படத்தில் நடித்து வரும் இவருக்கு இந்த படம் புதிய திருப்பம். அதிலும் அவரின் டயலாக் டெலிவரி ப்பாஆஆஆ... விஜய் சேதுபதி is Back என்று சொல்ல வைக்கின்றது. தன் அம்மா(ராதிகா) தன்னை போலிஸாக்க முயற்சிக்க, ஆனால், நான் பெரிய ரவுடி ஆக வேண்டும் என சிறு வயதிலிருந்தே கொள்கையில் இருக்கும் விஜய் சேதுபதி எடுக்கும் முயற்சிகள் எல்லாம் சிரிப்பு சரவெடி. சர்ப்ரைஸாக ஜூனியர் விஜய் சேதுபதியும் வருகிறார்.
நயன்தாரா காது கேளாதவராக ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் உதடை மட்டும் பார்த்து பேசுகிறார், வெறும் டூயட், கவர்ச்சியில் மட்டும் இதுநாள் வரை பார்த்த நயன்தாராவிற்கு இந்த படத்தில் நடிக்க செம்ம ஸ்கோப். நயன்தாராவின் திரைப்பயணத்தில் ராஜா ராணிக்கு பிறகு மற்றொரு கலக்கல் கதாபாத்திரம்.
RJ பாலாஜி சந்தானம், சூரி இடத்திற்கு வந்து விடுவார் போல, தெறிக்க விடலாமா? இது அட்டாக் பன்ற புலி என இன்றைய ட்ரண்டிற்கு ஏற்ற டயலாக் காமெடியில் கலக்கியுள்ளார். பார்த்திபன் ஹீரோவாக நடித்தாலே கொஞ்சம் நெகட்டிவ் இருக்கும், இதில் நெகட்டிவாகவே நடிக்கிறார் என்றால், சொல்லவா வேண்டும், தன் வழக்கமான நக்கல் வசனத்தில் அதிரி புதிரி செய்கிறார்.
ராதிகா, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மேலும் விஜய் சேதுபதி நண்பர்கள் என அனைவரும் கலகலப்பிற்கு பஞ்சமில்லை. படத்தின் மற்றொரு கதாநாயகன் அனிருத் தான், பாடல்கள், பின்னணி இசை என அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். படத்தின் காதல் காட்சிகள் மிகவும் இளமையாக, அதிலும் விஜய் சேதுபதி இப்படியெல்லாம் நடிப்பாரா? என்று கேட்க வைக்கின்றது. இயக்கியது விக்னேஷ் சிவன் அல்லவா? இருக்காதா பின்ன!!
க்ளாப்ஸ்
சாதாரண பழிவாங்கும் கதை தான், ஆனால், அதை இத்தனை கலகலப்பாக எடுத்ததற்காகவே பாராட்டலாம், அதிலும் குறிப்பாக இரண்டாம் பாதியில் பார்த்திபனுக்கு ஸ்கெட்ஸ் போட்டு அவரை கொலை செய்ய முயற்சிக்கும் 15 நிமிடம் சிரித்து சிரித்து வயிறு வலியே வரலாம்.
பாடல்கள், ஒளிப்பதிவும் என அனைத்தும் இன்றைய இளைஞர்களை குறிவைத்து, அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தியுள்ளது.
பல்ப்ஸ்
ஜாலியான கதை, அதில் நகைச்சுவை, காதல் என்பதால் வழக்கமான சினிமா தான் என்று தோன்ற வைக்கின்றது. மற்றப்படி ஏதும் இல்லை
மொத்தத்தில் நானும் ரவுடி தான், விஜய் சேதுபதி+நயன்தாராவின் காதல் ஆக்‌ஷன் காமெடி கலாட்டா...சூப்பர் ஜி சூப்பர் ஜி.
ரேட்டிங்- 3/5

நன்றி  cineulagam