நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகளுக்கான வாக்கெடுப்பு

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகளுக்கான வாக்கெடுப்பு சென்ற சனிக்கிழமை 22ம் திகதி வென்ற்வேத்விலும் ஹோம்புஷ்சிலும் நடைபெற்றது.
 நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 6 பேர் போட்டியிட்டார்கள். அவர்களுள் நால்வர் தெரிவுசெய்யப்பட்டனர். சிட்னியில் உள்ள வாக்களர் தொகை  ஏறக்குறைய   11 ,200  என்றும் அவர்களில் இருந்து இந்த நான்கு பேருக்கான தேத்தல் நடை பெறுவதாகவும் அறியப்படுகிறது

கிடைக்பெற்ற வாக்குகளின் விபரம் பின்வரும் அட்டவணையில் பார்க்கவும்.

தேர்தலில் நின்றவர்கள்

                                         வென்ற்வேத்வில் ஹோம்புஷ்            மொத்தம்

மொத்த வாக்குகள்                   744                                   619                    1363

சிவசம்பு பிரபாகரன்                 91                                   113                       204

டர்ஷன் குணசிங்கம்              680                                  551                      1231

பாலசிங்கம் பிரபாகரன்        672                                  521                      1193

விக்ரர் இராஜகுலேந்திரன் 75                                      89                      164

குலசேகரம் சஞ்சயன்          718                                   582                     1300

சேரன் ஸ்ரீபாலன்                    696                                   576                      1272

நிராகரிக்கப்பட்ட வாக்குகள 11                                11                           22


தெரிவு செய்யப்பட்டவர்களில் குலசேகரம் சஞ்சயன் 1300 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வந்துள்ளார் அடுத்து , சேரன் ஸ்ரீபாலன,அதை அடுத்து  டர்ஷன் குணசிங்கம், அதை தொடர்ந்து பாலசிங்கம் பிரபாகரன் ஆகிய  நால்வரும்   தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு தமிழ் வானொலி இந்த தேர்தல் முறையாக நடை பெறவில்லை என்று சில நாட்களாக பரப்புரை செய்தது தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற முறையில் நேயர்கள் பேசிவந்தது குறிபிடத்தக்கது.
இன்பதமிழ் ஒலி வானொலி தொடர்ந்து வெற்றியீட்டிய நால்வருக்காக பிரச்சாரம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தாது ஆனால் அது நீடிக்கப்போவதில்லைஅவுஸ்திரேலியா மத்திய வங்கின் கருத்துப்படி அடுத்த மாதம் முதலாம் திகதி வட்டி வீதம் ஏறமாட்டாது என்பதால் கடனாளிகள் ஆறுதலாக இருக்க முடியும்.

கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து ஆறு தடவைகள் 0.25 வீதத்தால் உயர்ந்து இப்போது வட்டி வீதம் 4.5 ஆக ஏறியுள்ளது. மத்திய வங்கி இப்போது நிதி நிலமையைச் சீரமைத்துக் கொண்டிருக்கையில் வட்டி வீதம் கடந்த பத்து வருடங்களில் சராசரியை எட்டியுள்ளது.
XXXXX   முற்றுப் பெறாதவையாய் XXXXXXXX

-நடராஜா முரளிதரன்-


எழுந்து நடக்கும் என்னிருப்பைத்
தக்க வைத்தது என் மொழி என்பாய்
அந்த மொழியின் கழுத்தைத் திருகி
மூச்சுக்குழல் வாய் இறங்கி
அகத்தைப் புறத்தே
உருக்கி வார்ப்பதற்காய்
எழுதுவேன் ஒரு கவிதை
தொன்மங்களின் சுகானுபவம்
வாதைகளாய் மாற்றம் பெறும்
நவீனத்துவ முகம்
உன்னுடையதென்பாய்
மரபுகள் வழியாக
உன் முன்னோர்
வஞ்சிக்கப்பட்டதாய்
சரிதங்கள் விரிக்கின்றாய்
பழமையைக் கொழுத்தும்
நெருப்பின் நதிமூலத்தைத்
தேடியலைவதாக
சீற்றம் கொள்கிறாய்
பாறையின் ஆழத்திலிருந்து
மயிர்துளைக்குழாய்
வழியே எழுகின்றது
ஒரு துளி நீர்
வெப்பக் காட்டின் உக்கிரம்
அதைத் துடைத்தழிக்கின்றது
அழித்தலிலும் முற்றுப்
பெறாதவையாய்
அவை இயக்கமாய் இயங்குதலாய்
இன்னோர் வடிவம் நோக்கி
எனவேதான் இரத்தம் சிந்தாத
போர்களங்களை நோக்கி
என் மனம் அவாவுகின்றது
ஆனாலும் மனிதர்கள்
இரத்தம் சிந்தும்
போர்களங்களையே விரும்புகிறார்கள்

14 வயது நிறைந்த பாடசாலை மாணவன் கத்தியால் குத்தி படுகாயம்


சிட்னி மேற்குப் பகுதியில் சில கடைகள் கொண்டுள்ள கட்டிடத்திற்குள் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 14 வயதுடைய ஒரு சிறுவன் மற்றய ஒரு சிறுவனை குத்திக்காயப்படுத்தியுள்ளான். இந்த சிறுவன் பிளம்ரன் சந்தைக்கட்டிடத்தில் சென்ற செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தகராற்றில் ஈடுபட்ட ஒரு குழுவின் ஒருவராகும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவசாலையில் காயப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுவன் மவுண்ட் றூயிட் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

கத்தியால் குத்திய சிறுவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் முன்பு ஒருமுறை சிட்னி சிறுவர் வைத்தியசாலையில் சண்டை பிடித்துள்ளார் என தெரியவருகிறது.
போர்க்குற்றங்களுக்கு எதிரான நாள்: மெல்பேர்னில் அனுட்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம்!
தாயகத்தில் கடந்த வருடம் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மனிதப்பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகொள்ளும் போர்க்குற்றத்துக்கு எதிரான நாள் இன்று செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியா மெல்பேர்னிலும் நடைபெற்றது.
நியூ சவுத் வேல்ஸ் அரசு சட்ட மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளது

நியூ சவுத் வேல்ஸ் அரசு குற்றச் செயல்கள் மூலம் சொத்துச் சேர்பவர்களைக் குறைக்கும் நோக்குடன் சொத்துக் சேர்த்த முறையை விளக்க முடியாதவர்கள் குற்றவாளிகள் என அனுமானிக்கக் கூடிய வகையில் சட்ட மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளது. சட்ட ரீதியற்ற முறையில் சேகரிக்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்ய காவல்துறையினர் அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருந்தது எனவும் புதிய மாற்றங்கள் அவ்வாறு நிரூபிக்க வேண்டிய பொறுப்பை சொத்து உரியாளருக்கு கையளிக்கின்றது எனவும் முதல்வர் கிறிஸ்ரீனா கெலி தெரிவித்தார். மேலும் அவர் ஒருவரால் எவ்வாறு தனது சொத்துச் சேர்க்கப்பட்டது என்பதை விளக்க முடியாத இடத்தில் அச்; சொத்துகளை அவர் தொடர்ந்து அனுபவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
புலி சந்தேக நபர்களை திருப்பியனுப்புவதில் அவுஸ்திரேலியா அதிருப்தி
விடுதலைப்புலி சந்தேக நபர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்படுவது குறித்து அவர்கள் கவலையடைவார்கள் என்பதை அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் செனட்டர் கிறிஸ் இவான்ஸ் ஒத்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான விசாரணைகள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கும் சர்வதேச நெருக்கடி ஆணைக்குழுவானது, இரண்டு தரப்பிலும் யுத்தக்குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி சந்தேக நபர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பிவைக்கும் பட்சத்தில், இலங்கை அரசாங்கம் அவர்களை இலக்கு வைக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இலங்கையில் யுத்த அநர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்

முருகபூபதி (ஸ்தாபகர்-நிதிச்செயலாளர்-இலங்கை மாணவர் கல்வி நிதியம்)

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்

--மகா கவி பாரதி.
பகவத் கீதை - மரணம் என்றால் என்ன?

ஹரே கிருஷ்ணா!


அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் இந்த இணைய ஆசிரியர் மதுர மகாதேவ் அவர்களின் மைத்துனி காலமானார். மேலும் சிலர் காலமான செய்தியினைப் படித்தேன். அதனால் இந்த வாரம் மரணம் என்றால் என்ன? மரணத்திற்கு பின் என்ன? இந்த கேள்விகள் குறித்து ஆராயலாம் என்று முடிவு செய்தேன். இந்த வாரக் கட்டுரையை இந்த இணைய தளத்தில் வெளியான, சமீபத்தில் காலமான அனைவரின் சார்பிலும் பகவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.
இணையத்தில் தோற்கும் மைக்ரோசாஃப்ட்                                                                                             எம். மணிகண்டன்கணினித் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன.​ இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் காலாவதியாகாமல் இருக்கும் என்பதைக் கணிக்கக்கூட முடியாத அளவுக்கு இந்த மாற்றங்கள் வேகம்பிடித்திருக்கின்றன.​ மாற்றங்களைத் தாங்காத சில தொழில்நுட்பங்கள் நாள் கணக்கிலேயே காணாமல் போய்விடுகின்றன.​ மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் தொழில்நுட்பங்களுக்கு ஆயுள் அதிகமாக இருக்கிறது.
xxxxxxxxxxxxx   மரணம்  xxxxxxxxxxxxxxxxxx


                                                    ஆக்கம் சௌந்தரி
மரணம் எனக்களித்த

மிகப்பெரிய இழப்பு என் தந்தை

மரணம்தந்த இல்லாமையின் வலி

என் வார்த்தைகளுக்கும் நோகும்

மரணபயம் மறைந்து போனது

நாளைகூட இறந்து போகலாம்

எதையும் சாதிக்காமல் - இந்த

உலகைவிட்டு மறைந்து போகலாம்

இறப்பற்ற வாழ்க்கை என்பது இல்லை

இறந்தபின் என்னை யாருக்குத் தெரியும்

என் நினைவுகள்கூட இல்லாது போகும்

கனவுகளில்,

கடந்துபோன நினைவுகளில்

காலத்தை கரைக்கும் மனிதா

உன்னை படைத்தவன்கூட

மரணத்தை மறைத்தே வைத்தான்

இருக்கும் நாட்கள் மிகவும் சொற்பம்

இருக்கின்ற ஒரே மூச்சும் போனபின்

கூடவருவது மரணம் ஒன்றுதான்


மரணமோர் அற்புதமான கருவி

யாரை எப்போது அணுகுவதென்று

அளவீடு கொண்ட அதிசயக் கண்டுபிடிப்பு

சில மரணங்கள் இயற்கையானவை

சில மரணங்கள் பயங்கரமானவை

சில மரணங்கள் சுவாரஸ்யமானவை

இன்னும்சில ஒருவரிச் செய்தியானவை

மரணம் பொதுவானதல்ல

மிகவும் அந்தரங்கமானது

ஒருவன்போல் இன்னொருவன் பிறப்பதுமில்லை

ஒருவன்போல் இன்னொருவன் இறப்பதுமில்லை


மரணம் வாழ்வின் எதிரியல்ல

இன்றோ நாளையோ என்றோ

ஒரு புள்ளியில் மரணம் சந்திக்கும்

எட்டாத தொலைவில்

வேண்டாத சந்திப்பே மரணமென்ற

கற்பனைசுகத்தில் மிதக்கும் மனிதா

அழையா விருந்தாளியாக

உன் வீட்டுக்குள் நுழைந்து

பாசக்கயிற்றை நேசத்தில் வீச

வாசலில் காத்துக்கிடக்கிறது மரணம்


மரணம் இது விஞ்ஞானிக்கு வியப்பு

ஆன்மீகவாதிக்கு ஓர் பாலம்

என் கவிதைக்கு கருப்பொருள்!


aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
 காக்க காக்க


                                                                                     அ. முத்துலிங்கம்

இது எல்லாம் சரியாக ஒரு நிமிடத்தில் நடந்து முடியும். நான் கண்ணாடிக்கூண்டுக்கு முன் நிராயுதபாணியாக நின்றேன். அதிகாரி ஒரு நிமிடம் என்றார்.
நான் விட்ட பிழை என்னவென்றால் நியூ யோர்க் டைம் சதுக்கத்தில் நிஸான் வாகனத்தில் வெடிகுண்டு வைத்து அது கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் புறப்பட்டதுதான். கனடாவுக்கு விமானத்தில் பறப்பவர்கள் முதலில் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளைத் தாண்டவேண்டும். அதற்குப் பின்னர்தான் பாதுகாப்பு பரிசோதனை.
மெல்பேர்னில் நடைபெற்ற வைகாசி பேரவல நினைவுகூரல் நிகழ்வு
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வைகாசி பேரவலம் நிகழ்வு ஆஸ்திரேலியா மெல்பேர்னில் நேற்று சனிக்கிழமை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.