நாளுமே முகத்தை மலர்வுடன் வைப்போம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனால் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


நல்ல நினைவுகள் நமை வாழவைக்கும்
பொல்லா நினைவுகள் பொசிக்கிடும் வாழ்வை 

அல்லல் நினைத்தால் அனைத்துமே அகலும்
தொல்லை நினைப்பைத் தொலைத்திடல் வேண்டும்  !

வீழும் நினைப்பை வீழ்த்திடல் வேண்டும்
வாழும் நினைப்பை மனமதில் இருத்துவோம் 
சூழும் வினைகளைத் துரத்திட நினைப்போம்
வாழும் வரைக்கும் வளமதை விதைப்போம்  !

மனமதில் சுமைகளை ஏற்றிடா திருப்போம்
மாசுடை செயல்களை வீசியே எறிவோம்
சினமதை என்றுமே தேக்கிடா திருப்போம்
சிறியன கண்டால் ஒதுங்கியே போவோம் ! 

‘குலவிளக்குப் பிள்ளைகளே!’ சற்றுக் கேட்பீர்!……………. பாரதி இளமுருகனார்

 

 மூப்படைந்த பெற்றோரை முறையாய்த் தினமும்

    முழுவேளை பராமரிக்கப் பழுதிலா நல்ல

காப்பகமாய் விளங்குவது முதியோர்  இல்லமே

    கண்காணித் திடத்தாதி மார்களங்(கு) இருப்பரே!  

சாப்பாடொடு தக்கநேர மருத்துவ வசதியும்

     சத்தியமாய்ப் பெற்றோரைச் சாக விடாதெனக்

கூப்பாடு போட்டூரார் வாயை அடைத்திடும்;

     குலவிளக்குப் பிள்ளைகளே! சற்றுக் கேட்பீர்!

 

ஆமா!நன் றாய்க்கேட்பீர்! அமைதியாய் ஊரிலே

   அன்புபில்க வாழ்ந்தவுங்கள் பெற்றோ ரைநீவிர்

சீமான்போல்; வாழலாம் சிரமமே இராது

  செல்லமாகப் பேரனொடும் பிறக்க விருக்குமெம்

பூமாநிறப் பேர்த்தியொடும் பொழுதும் போக்கலாம்

   புறப்பட்டு;ச் சிட்னிக்குப் புலம்பெயர்ந் திடுவீர்!

ஏமாற்றிடா தீ;என்றே சொல்லிச் சொல்லி

   இங்குவர வழைத்தீரே இன்னுங் கேட்பீர்!

 

மெல்பன் கேசி தமிழ் மன்றம் நடத்திய தமிழர் திருநாள் 'தமிழ் மரபுத் திங்கள்' அஞ்சல் தலை வெளியீடு முருகபூபதி


புகலிடத்தில்  தமிழ் மொழியையும் கலை, இலக்கியங்களையும்  இனிவரும் சந்ததியினரிடத்தில் எடுத்துச்செல்லும்  பணியை தங்கு தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும்  அவுஸ்திரேலியா மெல்பன் கே சி. தமிழ் மன்றம் அண்மையில்  தைத்திருநாளை முன்னிட்டு,   நடத்திய   வருடாந்த  தமிழர் திருநாள் இம்முறையும் மற்றும் ஒரு மைல்கல்லை ஆழமாக நிலைபெறச்செய்துள்ளது.


உலகமொழிகளில்  படிப்படியாக அழிந்துவரும் மொழிகளில் தமிழும் ஒன்றாகிவிடுமோ என்று தமிழ் ஆய்வாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் அச்சம் தெரிவித்துவரும் சூழலில்  அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தின் கேசி தமிழ் மன்றமும், அதன் மூத்த பிரஜைகள் அமைப்பும் தொடர்ச்சியாக  மூத்த – இளம் தலைமுறையினருக்கு மத்தியில் ஆரோக்கியமான தொடர்பாடலையும் ஏற்படுத்தியவாறு  அவர்கள் மத்தியில் இருக்கும் ஆற்றல்களையும் வெளிக்கொணரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது.

தகப்பன் சாமியின் தைப்பூசத் திருநாள் !


மகாதேவ ஐயர்
  ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 

 மெல்பேண் ... ஆஸ்திரேலியா  

 

   எம்மைப் படைத்த பரம்பொருளினை வாழ்வெல்லாம் எண்ணிட


வேண்டும் என்பதற்காக எங்களின் முன்னோர்கள் விடியும் ஒவ்
 
வொரு நாளினையும் அந்தப் பரம்பொருளுக்கு உரிய நாளாகவே ஆக்கி அதற்கென்று ஒரு பெயரி
 னையும் சூட்டி பக்தியின் பாதை யிலேதான் பயணித்து வந்திருக்கி றார்கள்.   அந்த வகையில் வரு டத்தின் இறுதி மாதமான மார்கழியினை தெய்வத்துக்கு ரிய மாத மாக்கி - திருவெம்பாவை என்றும்திருப்பாவை என்றும் பக்திப் பனுவ ல்களை அதிகாலை வேளையிலே ஆலயத்தில் பாடிப் பரவி நின்றார்கள். சைவம் என்றோவைணவம் , என்றோ பார்க்காமல் அந்தப் பரம்பொருள் புகழ் பாடும் மாதமாகவே வருடத்தின் இறுதி மாதமான மார்கழியினை ஆக்கி விட் டார்கள். வருடத்தின் இறுதி மாதம் பரம்பொருளின் புகழ்பாடும் மாதமாக அமைத்த

எங்கள் முன்னோர் வருடத்தின் தொடக்கத்தையும் பரம்பொருளினை எண்
 ணி பக்திவழியிலேயே தொடங்கும் வண்ணம் ஆக்கிவிட்டார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.பூமாதேவியைத் தொட்டு ஆதவனை அகமிருத்தி பஞ்சபூதங்களையும் வணங்கி நன்றி நவி லும் முகமாக தைப்பொங்கல்த் திருநாளினை வருடத்தின் தொட க்கமாகவே அமைத்த முன்னோர்களின் மகத்தான வாழ்வியல் நெறியினை வியந்துதான் பார்க்கவேண்டி இருக்கிறதல்லவா ! 

  நட்சத்திரங்களைநாட்களைதிதிகளை எல்லாம் மனமிருத்தி அவை ஒவ் வொன்றும் உரிய வகையில் பரம்பொருளினைப் போற்றிக் கொண்டாடும் வகையில் பக்தித் திருநாட்களை ஒழுங்கமைத்த பாங்கினைப் பாராட்டியே ஆதல் வேண்டுமல்லவா ! மார்கழியில் ஆதிரை நட்சத்திரத்தை சிவனுடன் இணை த்து திருவாதிரைத் திருநாள் வருகிறதல்லவா ! மார்கழிமூலம் ஆஞ்ஞனேயருக்கு உரியதாக்கி அதனையும் திருநாளாக்கினார்களல்லவா ! தைப்பொங்கல் தைமாதப் பிறப்பாக அமைகிறது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது மனத்தைரியத்தையும்

நம்மவர் பேசுகிறார்

 

   நடன நர்த்தகி, கலை, இலக்கிய  ஆய்வாளர்,

                        வானொலி ஊடகவியலாளர்

கலாநிதி கார்த்திகா கணேசர் ( பவளவிழா நாயகி  )

                                         அவர்களுடன்

                                  உரையாடல்

வாசிப்பு அனுபவம் : முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை இலங்கை தலைநகரின் கதையை கூறும் நூல் ! ஜோதிமலர் சிவலிங்கம்


அவுஸ்திரேலியாவில்   முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர்   முருகபூபதி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

 மல்லிகை ஜீவா அவர்களால்  அரை நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கியவாதி, ஊடகவியலாளர். சிறுகதை,  நாவல்  முதலான துறைகளில்  இலங்கையில்  இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகள் பெற்றவர்.

இதுவரையில் 25 நூல்களை எழுதியிருக்கும் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் நடந்தாய் வாழி களனி கங்கை.

இதனை கொழும்பில் குமரன் புத்தக இல்லம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

கிழக்கிலங்கையில் திரு. பூபாலரத்தினம் சீவகன் அவர்கள்


வெளியிட்டு வரும் அரங்கம் வார இதழில் வெளியானதே நடந்தாய் வாழி களனி கங்கை தொடர். தற்போது நூலுருப்பெற்றுள்து.

கணத்திற்குக்  கணம்   மாறிக்கொண்டிருக்கும்  இப்பூவுலகில்  இந் நூலானது கடந்து போன காலங்களையும்,   அக்காலத்தில்   நடந்த சம்பவங்களையும் எமது   கண்  முன்னே  கொண்டு வந்து நிறுத்துகின்றது.

அத்துடன்  இந்நூலில் இடம்பெற்றுள்ள   பல நிகழ்வுகள்  நம்மை எமது  முந்திய காலத்திற்கும்   அழைத்துச் செல்கிறது.  உதாரணத்திற்கு  வீரகேசரி,  லேக் ஹவுஸ்  (Lake  house) , ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதலான செய்தி ஊடகங்கள் சார்ந்தனவற்றின்  வரலாறுகளாகும்.

பிரித்தானியரின்  ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தலைநகரில் நடந்த பல சம்பவங்களையும் இந்நூல் நினைவுபடுத்துகின்றது.    களனி கங்கையின்   ஆரம்பப்  பெயர்  கல்யாணி  என்பதையும் நாளடைவில் அது  களனி என மாற்றம் அடைந்ததையும் நூலாசிரியர் கூறியுள்ளார்.  அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில்  நடந்த குதிரைப் பந்தயம்,  சூதாட்டம்  பற்றியும்  கூறியபோதுதான் அக்காலத்தைய கசினோ பற்றிய வரலாறு  புரிந்தது.

கற்பதருவைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்தாறு ]

 


 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
  மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

 

  பலவிதமான பழங்கள் இருக்கின்றன. அவைகள் ஒவ்வொன்றுமே


தனித்தனி யான தன்மையும் , சுவையும் கொண்டனவாகவே இருக்கின்றன. அநேகமான பழங்களை அது இருக்கின்ற மரத்திலோ அல்லது கொடியிலோ அல்லது செடி யிலோ நாமே சென்று பறித்துத்தான் சுவைக்கும் நிலை காண ப்படுகிறது. ஆனால் பனம்பழம் அப்படியான பழமல்ல. தானாகாகவே கனிந்து மண்ணிலே விழுந்து தேனாக இனிப்பினை எமக்கெல்லாம் அளித்து நிற்கிறது என்பதுதான் முக்கியமாகும். மண்ணில் விழுந்தவுடன் அதன் வாசம் காற்றில் பரவி சூழவுள் ளார்கள் மனமெல்லாம் பதிந்து நாவூறச் செய்து நிற்கும்.நன்றாகக் கனிந்த பனம்பழம் உயரான பனையிலிருந்து மண்ணில் விழும் பொழுது தரை சற்று கடினமாய் இருந்தால்

விழுந்த பழம் பிளந்த வண்ணம் காட்சி தரும்.கறுப்புத் தோல் வெளியிருக்க மஞ் சள் நிறத்துடன் உட்பகுதி வெளிப்பட பனம்பழம் விரிந்து கிடப்பதைப் பார்த்தபடியே இருக்கலாம்
அந்த அழகு அகத்திலே பதிந்தே விடும்.அது ஒரு தனி அழகு என்றுதான் சொல்ல வேண்டும்.தென்னை எப்படி முயன்றாலும் பனைக்குப் பக்கத்தில் வந்துவிடவே முடியாது. தேங்காய் பழத் தேங்காய் என்று பெயர் பெற்றாலும் பனைபோல பழத்தைக் கொடுக்க முடி யாமல் இருக்கிறது அல்லவா ! பனை என்றுமே தனித்துவமானதுதான் என்று தென்னையானது தெரிந்து கொண்டால நல்லது அல்லவா !

  பனம்பழத்தை ஊட்டச்சத்து நிறைந்த உணவாகக் கருதி அந்தக் காலங்களில் தினமுமே பலரும் உண்டு மகிழ்ந்தார்கள். இன்று அந்தப்பழக்கம் அருகி வரு வதைத்தான் காணமுடிகிறது. இதுதான் காலத்தின் கோலம் என்று கருதிடக் கூடியதாக இருக்கிறது. பப்பாளிப் பழத்தை அனைவரும் விரும்பி உண்ணுகி றார்கள்.அந்தப் பப்பாளிப்பழத்தைவிட கூடுதலான வைட்டமின் சி மற்றும் கல்சியம் அதிகளவில் பனம்பழத்தில் காணப்படுகிறது என்பது நோக்கத்தக்க தாகும்.பனம்பழத்தின் சாறில் நீர்ச்சத்துபுரதச் சத்து ,  கொழுப்பு சத்துஉலோக உப்புக்கள் சர்க்கரைகரோட்டின் ஆகியன நிறைந்து காணப்படுகின்றன என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும்.அதுமட்டுமல்லாமல் கண்ணினது பார்வைத் திறனை அதிக ரிக்கச் செய்யும் பீட்டா கரோட்டின் என்னும் வைட்டமின் ஏ சத்து பனம்பழத்தில் நிறைந்தே இருக்கிறது என்பது நோக்கத்தக்கதேயாகும்.

பிரசாந்தி மண்டபத்தின் ஒரு வருட பூர்த்தி விழா மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டம்

 வன்னி ஹோப் ( VANNI
HOPE)  
நிறுவனத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட பிரசாந்தி மண்டபத்தின் ஒரு வருட பூர்த்தி விழா மிக விமரிசையாக நடைபெற்றது

பிரசாந்தி மண்டபம் இலங்கையின் சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டம் கலிகமுவ பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிந்தெனிய மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ளதுசென்ற வருடம் 17/01/2021ஆம் ஆண்டு திறப்புவிழா கண்டதுஇவ்வருடம் சிறந்த மாற்றங்களுடன் வன்னி ஹோப் ( VANNI HOPE) நிறுவனத்தின் நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது இந்த நிகழ்வு.(16/01/2022) ஒரு சேவை பயன் தரக்கூடியதாக அமைந்தால் அதுதான் உண்மையான சேவையாகும் உன்னதமான சேவையாகவும் இருக்க முடியும்அதற்கு

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுப்போட்டி 2021 - 30/01/2022

 

இப் போட்டிகள் ஐனவரி  மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (30/01/2022) சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து  நடைபெறவுள்ளது. 

வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் கீழே தரப்பட்டுள்ளது)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

இலங்கைச் செய்திகள்

 வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு திடீர் இடமாற்றம்

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த கட்டுவன்-மயிலிட்டி வீதியை விடுவிக்க நடவடிக்கை

2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இரண்டாம் நாள் இன்று

ராஜிதவுக்கு எதிரான வழக்கு மார்ச் 15க்கு ஒத்திவைப்பு

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானியா பாராட்டுவடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு திடீர் இடமாற்றம்

வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில்,நேற்று (19) இரவு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

 வட கொரியா மீதான தடை: சீனா, ரஷ்யா முட்டுக்கட்டை

பாகிஸ்தான் துறைமுகத்தை சீனா கோர வாய்ப்பு

டொங்காவுக்கு சர்வதேச உதவிகள் குவிகின்றன

பெருமளவு நன்னீரை கடலில் கொட்டும் ஏ68 பனிப்பாறை

ரஷ்யப் படை உக்ரைனுக்குள் நுழையும்: பைடன் நம்பிக்கை

பாகிஸ்தான் மதநிந்தனை குற்றச்சாட்டு; பெண்ணுக்கு மரண தண்டனை

எரிமலை வெடிப்பு: டொங்கா அவசர உதவிக்கு அழைப்புவட கொரியா மீதான தடை: சீனா, ரஷ்யா முட்டுக்கட்டை

வட கொரியாவைச் சேர்ந்த ஐவர் மீது ஐ.நாவில் தடை விதிக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகளை, சீனாவும் ரஷ்யாவும் தடுத்துள்ளன.

“இலக்கியவெளி” நடத்தும் “சாந்தன் எழுதிய 'சித்தன் சரிதம்' நாவல் குறித்த திறனாய்வுக் கூட்டம்”பேச்சாளர்கள்:

 

பாரதிபாலன் – இந்தியா


கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப) – இலங்கை


கலாநிதி கனகசபை இரகுபரன் – இலங்கை


சி.ரமேஷ் - இலங்கை

 

ஏற்புரை: சாந்தன்

 

ஒருங்கிணைப்பு:  அகில் சாம்பசிவம்

 

நாள்:         ஞாயிற்றுக்கிழமை 30-01-2022       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 8.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 

 

ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து

 Tuesday, January 18, 2022 - 11:18am

 - இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி

குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிவதாக ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் ஒற்றுமையாக தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக நேற்று (17) இரவு  சமூக வலைத்தளத்தில்  அறிவித்துள்ளார். 

பல நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து அவர்களது இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதியும் தங்களது விவாகரத்து குறித்து அறிவித்துள்ளது அவர்களது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.