சித்திரைத் திருநாளைச் சிந்தையில் வைப்போம் !

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ...... அவுஸ்திரேலியா           

  கொண்டாட்டங்கள்  - வாழ்விலே புத்துணர்வை ஏற்படுத்தி உற்சாகமாய் இருப்பதற்கு நல்ல தொரு வழி காட்டிகளாய் விளங்குகின்றன எனலாம். ஒவ்வொரு கொண்டாட்டங்களும் வரு கின்ற வேளை அதாவது வருவதற்கு முன்னும் வந்த நிலையிலும் வாழ்விலே ஒரு வசந்தம் வந்து அமை வதை காணமுடிகிறது எனலாம். ஆனந்தம் வருகிறது ! அகமகிழ்வு வருகிறது ! வீடும் நாடும் விடி வு பெற்றது போல ஒரு எண்ணங்கூட உதயமாகிறது  எனலாம். அதனால் த்தான் ஆண்டுதோறும் கொண்டாட்டங்கள் அமைந்திருக்கின்றன. மாதத்தில் கொண்டாட் டம். வருஷத்தில் கொண்டாட்டம் என்று கொண்டாட்டங்கள் என்பது வாழ்விலே நிறைந்தே இருக்கிறது.நிறைந்தே இருக்கும் வண் ணம் சமூகக் கட்டமைப்பு வளர்ந்து வந்துள்ளது என் பதை மனமிருத்தல் அவசிய மானதேயாகும். அந்தவகையில் சித்திரைத் திருநாளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது பொருத்தமாய் இதுக்கு மென்று எண்ணுகிறேன்.

  சித்திரைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதா தைத் திருநாளை தமிழர் திருநாள் என் பதா என்று ஒரு போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசியல் கட்சிகளின் கொள்கையாக்கப்பட்டு அக்கட்சிகள் சார்பாக அறி ஞர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி பெரும் சர்ச்சையினை உருவாக்கி ஆட்சி கள் மாறும் வேளை காட்சிகள் மாறியதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் பல ரும் சித்திரைத் திருநாளையே தமிழர்தம் திருநாளாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதே. திருநாளினைக் கொண்டாடுவதன் நோக்கமே மனமகிழ்வும் மனநிறைவு மேயாகும். அதனை விட்டு விட்டு அங்கும் - வீண் தர்க்கமும் குதர்க்கமும் பேசி அங்கும் ஒரு பஞ்சாயத்தை அரங்கேற்றுவதும் பொருத்தமுடையதா சிந்தித்தால் தெளிவு வரும் அல்லவா ?

ஏப்ரல் – 14. உலக சித்தர்கள் தினம்

 


எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 97 ஐந்து வாரங்களின் பின்னர் மீண்டும் தொடரும் பயணம் ! நிரந்தரமாக விடைபெற்றுச்செல்லும் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் !! முருகபூபதி


அன்பார்ந்த வாசகர்களுக்கு  எமது இனிய ரம்ஸான், மற்றும்  சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, மீண்டும் எனது எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் )  அங்கம் 97 இல் உங்களை சந்திக்கின்றேன்.

கடந்த நான்கு வார காலமாக  என்னால், இந்தத் தொடரை எழுதமுடியாத நிலைக்கு ஆளாகியிருந்தேன். அதனால்,  எனக்குத்தான் நட்டமே தவிர, இந்தத் தொடரைப் படித்துவரும் வாசகர்களுக்கு எந்தவொரு நட்டமும் இல்லை.

சில இலக்கிய நண்பர்கள், தொடர்புகொண்டு,  “ என்ன…?  உங்கள்


தொடரைக் காணவில்லை. நிறைவுபெற்றுவிட்டதா..?  “ எனக்கேட்டனர்.

 “ பழைய வாகனம் அடிக்கடி திருத்த வேலைகளுக்காக செல்வது வழக்கம்தானே..? நானும் ஓடி ஓடி உழைத்துத்  தேய்ந்து பழைய வாகனம் ஆகிவிட்டேன். அதன் பிரதான இயந்திரத்தில் ( இதயத்தில் ) சில பிரச்சினைகள் வந்துவிட்டன. அவற்றை நீக்கி சீராக்குவதற்காக மருத்துவமனையிலிருந்தேன். வீடு திரும்பியதும் ஓய்வு தேவைப்பட்டது.  அத்துடன் அடுத்தடுத்து எமது குடும்பத்திலும் ( இலங்கை – தமிழ் நாடு ) சில இழப்புகள்,  நான் முன்னர் பணியாற்றிய வீரகேசரியில் உடன் பயணித்த இரண்டுபேர் இறந்துவிட்டனர்.   இந்தத் துயரங்கள் தொடர்பாக படுக்கையிலிருந்தவாறே உறவினர்களுடனும் நண்பர்களுடனும்  உரையாடவேண்டியிருந்தது. இதுவே இந்தத் தொடர் பத்தி தாமதமாவதற்கு பிரதான காரணம்  “ என்றேன்.

எனினும்,  இக்காலப்பகுதியில் வீட்டிலிருந்தவாறே சில மெய்நிகர் நிகழ்ச்சிகளிலும்,  மின்ஊடக  ( YouTube )  நேர்காணல்களிலும்  கலந்துகொண்டேன்.

இந்த அங்கத்தில் அண்மையில் மறைந்த அவர்களைப்பற்றியும் எழுதவேண்டியிருக்கிறது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைக்கும் இரண்டு பாகங்களில் வெளிவந்துவிட்டது. இந்தத் திரைப்படம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.  எனினும்,  இற்றை வரையில் நான் பொன்னியின் செல்வனை படித்ததில்லை. இனியும் படிப்பேனா..? என்பதும் ஐயப்பாடே! ?

 “ பொன்னியின் செல்வன் படிக்காத நீங்கள் எல்லாம் என்ன எழுத்தாளர்..?  “ என்று எனது மனைவி இன்றும் என்னிடம் சொல்லிக்கொண்டுதானிருக்கிறார்.  அவரது குடும்பத்தில் பொன்னியின் செல்வனில் வரும் முக்கிய சில பாத்திரங்களின் பெயர்களில் சிலர் இருக்கிறார்கள். 

அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி : வவுனியா – கம்பகா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையுடன்  புலமைப்பரிசில் உதவியை பெற்றுவரும்  மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு  இவ்வாண்டும் வழங்கப்பட்டது.

 கடந்த வாரங்களில்  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,


மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாகவும், அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு ,  அங்கிருக்கும் மாணவர் கல்வி நிறுவகத்தின் ஊடாகவும், மலையகத்தில் -  நுவரேலியா மாவட்டத்தில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாகவும்  இவ்வாண்டின் முற்பகுதிக்கான நிதியுதவிகள் இந்தப்பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வதியும்  தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

 அண்மையில் வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்வு,  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா தொடர்பாளர் அமைப்பான

நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின்    Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD ) தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில்,

நிருவாக உத்தியோகத்தர் இ. தர்சிகாவின் ஏற்பாட்டில்  வவுனியாவில் நடைபெற்றது.

 கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வு, கல்லூரி அதிபர் திரு. நா.புவனேஸ்வரராஜா அவர்களின் தலைமையில் ,  மாணவர் தொடர்பாளர் ஆசிரியை செல்வி லோஜினியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில்  மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.

சாயி இல்லத்தில் பக்தர்களின் பாதணிகளை ஏந்திய எளிமையான மலையகப் படைப்பாளி என்.எஸ்.எம். ராமையா முருகபூபதி

“ முழங்காலைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறிவந்த ரங்கையாக்


கிழவன்,  கடைசிப் படியில் நின்று வாயால் ஊதிக் கொண்டான். பத்துப் பதினைந்து படிகள் அவன் எறியதில், அவனுடைய கிழட்டுக் கால்கள் ‘வெட வெட’ வென்று நடுங்கின. தன் லயத்து வாசலை நோக்கி நடந்தவன்,  சூழ்நிலையில் ஒரு மாற்றம் தெரிவது உணர்ந்து நின்று நிதானித்துப் பார்த்தான்.

 அவனுடைய வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளியிருக்கும் சிவசாமியின் வீட்டிற்குள்ளிருந்து ஒளி வெள்ளம் வெளியே பாய்ந்து கொண்டிருந்தது. அந்த லயத்தின் ஒன்பது வீடுகளிலும் சிணுங்கிக் கொண்டிருந்த லாந்தர் வெளிச்சத்திலும், சின்னப் போத்தல் விளக்குகளின் மங்கிய ஒளிக்கும் மத்தியில் அந்த ஒரு வீட்டு வெளிச்சம் மட்டும் வாசலை நோக்கி வைரச் சுடரை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.

ஒளியின் சக்தி மகத்தானதுதான். 

இவ்வாறு தொடங்குகிறது ,  எம்மத்தியில் வாழ்ந்து மறைந்துவிட்ட


மலையக படைப்பாளி என். எஸ். எம். ராமையாவின் வேட்கை என்ற சிறுகதை.

1967 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுதை வெளியான காலத்தில் பெற்றோ மக்ஸின் விலை நூற்றி இருபது ரூபாதான் என்பதை இக்கதையின் மூலம் தெரிந்துகொள்கின்றோம்.

மலையகம் 200 பேசுபொருளாகியிருக்கும் இக்காலப்பகுதியில்,  இன்றைய தலைமுறை  எழுத்தாளர்களும், வாசகர்களும், மலையக மக்களின் ஆத்மாவை இலக்கியத்தில் பதிவுசெய்த இந்த மூத்த எழுத்தாளரைபற்றித்  தெரிந்துகொள்ளவேண்டும்.

பதுளையில் ரொக்கில் தோட்டத்தில் 27-01- 1931 ஆம் திகதி மலையக தோட்டத் தொழிலாளரின் குடும்பத்தில் பிறந்திருக்கும், ராமையா, அங்கு கணக்காளராகவும் பணியாற்றியவர்.

இந்தத் தோட்டத்தின் துரையாக இருந்தவர்தான் பின்னாளில் இலங்கை அரசில் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ரஞ்சன் விஜேரத்தின.

தோட்டத்துரையின் அழுத்தங்களை தாங்கமுடியாமல் கொழும்புக்கு வந்து,  ஒரு இரும்புக்கடையில் பணியாற்றினார்.

நான் எழுத்துலகில் பிரவேசித்த 1970 இற்குப்பின்னரே அவரை அந்தக்கடையில் முதல் முதலில் சந்தித்தேன்.

 “ இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாயிருந்து கலையம்சம் மிக்க  கலை, இலக்கியங்களைப் படைக்க வேண்டிய மணிக்கரங்கள் இரும்புக்கடையின் மத்தியில் கணக்கு ஏட்டுடன் சதா கருமமாற்றும் நிலை என்றுதான் மாறுமோ ?  “ என்று வீரகேசரியில் பணியாற்றிய  நண்பர் மூர்த்தி, என்.எஸ்.எம். ராமையாவைப் பற்றி மல்லிகையில் எழுதியிருந்தார். பின்னாளில்  கனடாவுக்கு புலம்பெயர்ந்த மூர்த்தி, அங்கிருந்து வீரகேசரி மூர்த்தி என்ற பெயரில் எழுதினார். தற்போது அவரும் எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.

 என். எஸ். எம். ராமையா, 1990 ஆம் ஆண்டு தமது 59 ஆவது வயதில் தனது மூச்சை நிறுத்திக்கொண்டார்.

 நானும் முதல்முதலில் என்.எஸ்.எம். அவர்களை அந்த இரும்புக்கடையில்தான் சந்தித்தேன்.

படகோட்டி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் நடிப்பில் கலரில் தயாராகும் படம் , மீனவர்களின்


வாழ்வைப் பற்றிய படம் , ஐந்து எழுத்தில் படத்துக்கு பெயர் வேண்டும் என்று சரவணா பிலிம்ஸ் ஜி என் வேலுமணி சொன்னவுடன் படகோட்டி என்ற பெயரை சொல்லி நூறு ரூபாய் பரிசை பெற்றுக் கொண்டார் கவிஞர் வாலி. 1964ம் ஆண்டு உருவான இந்தப் படம் தான் எம் ஜி ஆர் நடித்த முதல் ஈஸ்ட்மென் கலர் படமுமாகும். அதற்கு மேலும் மெருகூட்டும் வண்ணம் கேரளாவில் எடுக்கப் பட்ட வெளிப்புற காட்சிகளும் , கடற்கரை காட்சிகளும் அசத்துகின்றன !


1964ம் வருடம் எம் ஜி ஆர் நடிப்பில் ஏழு படங்கள் திரைக்கு வந்தன.

அவற்றில் கலரில் உருவான ஒரே படம் இதுதான். இதே ஆண்டில் சிவாஜி நடிப்பில் ஈஸ்ட்மென் கலரில் கர்ணன், புதிய பறவை என்று இரண்டு படங்கள் வெளிவந்த சமயம் தானும் கலரில் ஒரு படம் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் எம் ஜி ஆர் இருந்தார். சின்னப்பா தேவர், ராமண்ணா, என்று எம் ஜி ஆரை போட்டு தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இருக்கையில் எம் ஜி ஆரின் முதல் ஈஸ்ட்மென் கலர் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு ஜி என் வேலுமணிக்கு கிட்டியது. சிவாஜியின் தயாரிப்பாளர் என்று முத்திரை குத்தப்பட்ட வேலுமணி , அவரிடம் இருந்து விலகி எம் ஜி ஆர் நடிப்பில் பணத்தோட்டம் படத்தை தயாரித்து பணம் பார்த்து விட்டு அடுத்து தயாரித்த படம் படகோட்டி. மீனவர்களுடைய கதையை பின்புலமாக கொண்டு உருவான இதில் மீனவ குப்பம் ஒன்றின் தலைவராக எம் ஜி ஆர் நடித்தார்.

இரண்டு மீனவக் குப்பங்கள் . ஒன்றின் தலைவன் மாணிக்கம் படித்த இளைஞன். தன் இனத்துக்காக பாடுபடுபவன். மற்றைய குப்பத்தில் தலைவன் அலையப்பன் வில்லனின் அடிமை. அவனின் சூழ்ச்சிக்கு தன் இனத்தை பலியாக்குபவன். இரண்டு இனமும் சேர வேண்டும் என்று மாணிக்கம் பாடு படுகிறான். அதற்கு அலையப்பனின் மகள் முத்தழகியும் உதவுகிறாள். மாணிக்கத்துக்கும் அவளுக்கும் இடையில் உள்ள காதலை அறிந்து கொள்ளும் முதலாளி அவர்களை பிரிக்க சதி செய்கிறான். மக்கள் ஆதரவுடன் மாணிக்கம் எவ்வாறு அதனை முறியடித்து இரு குப்பத்துக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறான் என்பதே கதை.

உலகச் செய்திகள்

ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மூன்று பிள்ளைகள் பலி

 ஏழாவது மாதத்தை எட்டியது காசா போர்: உக்கிர தாக்குதல்களுக்கு இடையே கெய்ரோவில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஆரம்பம்

கான் யூனிஸில் இருந்து வாபஸ் பெற்ற இஸ்ரேல் படை ரபாவை தாக்க திட்டம்

இலங்கை மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

பழிக்கு பழி.. வடக்கு இஸ்ரேலில் பாய்ந்த 40 ஏவுகணைகள்! தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரானின் ஹிஸ்புல்லா


ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

April 12, 2024 11:35 am 

ஈரானிய மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ‘இரும்புக் கவசமாக’ ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

இலங்கைச் செய்திகள்

 இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவு

இஸ்ரேல் பயணமாகும் இலங்கையின் முதல் கட்டுமான குழு

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – ‘அவுஸ்திரேலியா மைக்ரோ அபிவிருத்தி இன்க்’ இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் காலமானார்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்


இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவு

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் உறுதி

April 11, 2024 8:34 am 

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீ ராம நவமி ஏப்ரல் 17, 2024 புதன்கிழமை

 

ராமர் என் தாய் மற்றும் ராமா (ராமச்சந்திரா) என் தந்தை, ராமன் என் இறைவன் மற்றும் ராமன் (ராமச்சந்திரா) என் நண்பன், ராமனே என் எல்லாவற்றிலும், ஓ இரக்கமுள்ள ராமா (ராமச்சந்திரா) என் எல்லாவற்றிலும், எனக்கு தெரியாது வேறு எதாவது; எனக்கு வேறு யாரையும் தெரியாது; உண்மையில் எனக்கு வேறு யாரையும் தெரியாது. விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர், ராவணனை அழிக்க பூமியில் அவதரித்தார். இந்து பாரம்பரியத்தில், ராமர் "மரியாத புருஷோத்தமன்" என்று கருதப்படுகிறார், ஒரு மனிதனால் அடையக்கூடிய பரிபூரணத்தின் உச்சத்தை எடுத்துக்காட்டும் சரியான மனிதராகக் கருதப்படுகிறார். அவர் விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், தர்மத்தைப் பாதுகாப்பவர் மற்றும் ஆதரிப்பவர். அவர் நல்லொழுக்கத்தின் உருவகம் மற்றும் தர்மத்தை அல்லது சரியான செயலை உறுதியாகப் பின்பற்றுபவர். பகவான் ஸ்ரீ ராமர் சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் (ஒன்பதாம் நாள்) "நவமி திதியில்" பிறந்தார்.

அவரது மகிமையில் அந்த நாள் "ஸ்ரீராம நவமி" என்று கொண்டாடப்படுகிறது. இராமாயணத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்தவரை, இந்த விழாவிற்கு ராமர் பெயரிடப்பட்டாலும், பொதுவாக அன்னை சீதா தேவி, ஸ்ரீ லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயர் / அனுமன் ஆகியோருக்கான மரியாதை இதில் அடங்கும்.

இந்த ஆண்டு "ஸ்ரீராம நவமி" SVT இல் 17 ஏப்ரல் 2024 புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

காலை 10.00 மணி - ஸ்ரீ ராமர், ஸ்ரீ சீதாதேவி மற்றும் ஸ்ரீ லக்ஷ்மணருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை. ஸ்ரீ ராமர் & ஸ்ரீ சீதா தேவிக்கு "கல்யாண உற்சவம்" உடனடியாகத் தொடரும்.

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 37 “நூல்களைப் பேசுவோம்”

நாள்:         சனிக்கிழமை 20-04-2024       

நேரம்:      

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30  

வழி:  ZOOM 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09 

நூல்களைப் பேசுவோம்:

 பா.இரவிக்குமாரின் ‘திறனாய்வுக் கலைஞனும் கலைத் திறனாய்வாளனும் (பஞ்சுவும் பாலுவும்)’


உரை :  ஜெ.சுடர்விழி

 

டானியல் அன்ரனியின் ‘டானியல் அன்ரனி (சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்)’

 

உரை : அருண்மொழிவர்மன்

 

ஸ்ரீரஞ்சனியின் ஒன்றே வேறே

 

உரை :  த.அஜந்தகுமார் 

 

பா.அ.ஜயகரனின் அவனைக் கண்டீர்களா?’

 

உரை : இ.இராஜேஸ்கண்ணன்

 

https://youtube.com/@IlakkiyaveliTv