உதவிநிற்கும் என உணர்வோம் ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


             இந்துமதம்  பெளத்தமதம்  இஸ்லாமொடு  கிறீஸ்தவமும்  
                    வந்திங்கு  பலவற்றை வழங்கியே இருக்கிறது
              சொந்தமெனக் கொண்டும் பலர்சுகம் காணாநிலையினிலே 
image1.JPG                     வெந்துவெந்து உழலுகிறார் வேதனையால் வாழ்வினிலே 
               எந்தமதம் பெரியமதம் எந்தமதம் சிறந்தமதம் 
                        என்றெண்ணிப் பலபோர்கள் எங்குமே நடக்கிறது  
               வந்தமைந்த மதமுரைத்த மனுநீதி யாவுமிங்கே 
                       மதம்பிடித்தோர் கைகாலே  மடிந்துகொண்டே போகிறது ! 

              களவெடுக்கப் பொய்யுரைக்க எம்மதமும் சொன்னதில்லை
                     கற்பழிக்கக் கொலைசெய்ய எம்மதமும் விரும்பவில்லை
             போட்டிபோட்டுப் பொருள்பறிக்க எம்மதமும் காட்டவில்லை
                  பொறாமைகொண்டு பொசுக்குவென்று எம்மதம் இயம்பவில்லை
             வீட்டுநலன் நாட்டுநலன் விலத்திநிற்க வேண்டுமென்று 
                   நாட்டிலுள்ள மதமேதும் சொன்னதுண்டா எண்ணிடுவீர் 
              காட்டுத்தனம் மிகுந்துநிற்கும் கயமைக்குணம் உடையோரால்
                   கண்ணியமாம் மதமனைத்தும் காணாமல் போகிறதே  !

             ஓடுகின்ற உதிரமதில் ஒழுகுகின்ற கண்ணீரில் 
                   தேடித்தான் பார்த்தாலும் தெரிந்திடுமா வேற்றுமைகள் 
             நாடுபல இருந்தாலும் நாகரிகம் பலவிருந்தும் 
                      வாழுகின்ற மக்களெலாம் மகத்தான உயிர்களன்றோ 
             யாதுமே ஊர்களென்றும் யாவருமே கேளிரென்றும் 
                      தீதகற்றும் உண்மைதனை செவிமடுக்க மறந்தோமே 
             வாழுகின்ற வாழ்வுதனை வண்ணமுற வாழ்வதற்கு
                  ஓதிநிற்கும் மதமனைத்தும் உதவிநிற்கும் எனவுணர்வோம் ! 



        



             




நடந்து முடிந்த அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனத்தின் சொல்திறன் அரங்கம் 2018 - மது எமில்

.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனம் முதல் முறையாக நடாத்தும் சொல்திறன் அரங்கம் 2018


கடந்த ஆடித்திங்கள் 8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை Seven hills இல் அமைந்துள்ள Mayura Function Centre இல் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டு தாபனம் முதல் முறையாக நடாத்திய சொல்திறன் 2018 பல்கலைகழக மாணவர்களுக்கான இறுதி சுற்று போட்டி நிகழ்வில் ஓர் பார்வையாளராக கலந்து கொண்டேன். போட்டிகள் என்றாலே எனக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பமில்லாத ஒன்று என்பதாக இருந்தாலும் திரு செல்லையா பாஸ்கரனின் அழைப்பின் பேரில் எனது குழந்தைகளோடு சென்றிருந்தேன். போட்டிகள் சரியாக 6.15 மணியளவில் செல்வி சாரங்கா ராஜரட்ணம் அவர்களின் வரவேற்புரையோடும், திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்களின் ஆசியுரையோடும் இனிதே ஆரம்பமாகியது.


நடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 08 களனி பாலத்திற்கும் ஆமர்வீதிக்கும் நடுவே தோன்றிய பெரிய நிறுவனங்களின் சுவடுகள் - ரஸஞானி


இந்தியாவில் பெரும்பாலான நதிகளுக்கு பெண்களின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளன. அங்கு மத்திய - மாநில அரசுகளிடம் நதிநீர் இணைப்புத்திட்டங்களும் உருவாகி, விவாதங்களும் போராட்டங்களும் தொடருகின்றன.
                  பெண்களின் பெயர்களை நதிகளுக்கு சூட்டினால் எப்படித்தான்  " இணைப்பு" வரும்...? என்று அண்மையில் ஒரு முகநூல் குறிப்பு வேடிக்கையாக சொல்லியிருந்தது.
இலங்கை, இந்தியாவை விட பலமடங்கு சிறிய நாடு.  இன்னும்  சொல்லப்போனால், சிறிய தீவு. இந்தத்தீவுக்குள் பல நதிகள் இருந்தபோதிலும் அவை வற்றாத ஜீவநதிகளாக விளங்கியமையால், நதி நீர் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை.
மகாவலி கங்கையை வடக்கே திருப்பும் திட்டம் இலங்கை அரசியலில் ஒரு தனிக்கதை. இது இவ்விதமிருக்க, களனி கங்கை தீரத்தில் தோன்றிய தொழிற்சாலைகள் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை  வாய்ப்பு வழங்கியிருக்கின்றன. வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் இலங்கை பொருளாதாரத்திற்கும் வளம் சேர்த்துள்ளன.
அரசின் நிருவாகத்தின் கீழும் தனியார் துறையினரிடத்திலும் பல தொழிற்சாலைகள் இந்தப்பிரதேசத்தில் நீண்டகாலம் இயங்கின. சில 1983 வன்செயல்களுக்குப்பின்னர் மறைந்தன.
களனி பல்கலைக்கழகத்திற்கு சமீபமாகத்தான் டயர் உற்பத்தி கூட்டுத்தாபனம் இயங்குகிறது. இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தில் ரப்பரும் முக்கிய இடத்தை வகிக்கிறது. களனி கங்கை ஓடும் திசைக்கு அருகாமையில் வெல்லம்பிட்டிய முதல் அவிசாவளை, தெஹியோவிட்ட, தெரணியகல, இரத்தினபுரி, பெல்மதுளை, இறக்வானை, காவத்தை முதலான பிரதேசங்களில் ஏராளமான ரப்பர் தோட்டங்களை பார்த்துவருகிறீர்கள்.
இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு அடுத்ததாக திகழ்ந்தவை, ரப்பரும்  கொக்கோவும். இலங்கையில் விளையும் இந்தத் தாவரங்களுக்கு உலக சந்தையில் பெருமதிப்பு ஒருகாலத்தில் இருந்தது.
இவற்றின் மதிப்பிறக்கத்திற்கும் மாறி மாறி பதவிக்கு வந்த ஆட்சியாளர்களும் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களும்தான் காரணம். ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்கள் நாடுகடத்தப்பட்டு "ஒப்பாரிக்கோச்சி" களில் தலைமன்னார் ஊடாக இராமேஸ்வரம் சென்று தமிழகத்தை வந்தடைந்தனர்.
தேயிலையும், ரப்பரும், கொக்கோவும் ஏற்றுமதியானது போன்று அவற்றை உற்பத்திசெய்வதற்காக,  காடுகளையும் மலைகளையும் செப்பனிட்டு, அட்டைக்கடிகளுக்கும் மண்சரிவுகளுக்கும் மத்தியில் ஒரு அறை லயன் குடியிருப்புகளில் வாழ்ந்த அந்த ஏழை மக்களை,  தேசத்திற்கு அறுபது சதவீதமான அந்நிய செலவாணியை ஈட்டித்தந்த அந்த அப்பாவி மக்களை நாடற்றவர்களாக்கி துரத்தியடித்த ஆட்சியாளர்கள் தேசத்தின் பொருளாதாரத்தையும்  நலிவடையச்செய்தார்கள்.

கடித இலக்கியம்: வடமராட்சி " ஒப்பரேஷன் லிபரேஷன் " பேரழிவுக்காக 1987 இல் நடந்த ஒத்திகை ராஜஶ்ரீகாந்தன் (1948 - 2004) எழுதிய ஈழப்போர்க்கால கடிதம் - முருகபூபதி

                                                                                                                                                      ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன் அவர்களும் குறிப்பிடத்தகுந்தவர்.
 வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார்.

சிறுகதை, கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர்.  வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும்  கடுமையாக உழைத்த பெரியார் சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப்பிரதியிலிருந்து அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான்!

அழகு சுப்பிரமணியத்தினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  சிறுகதைகள் ( நீதிபதியின் மகன்), நாவல் (மிஸ்டர் மூன்)  ஆகியனவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது காலச்சாளரம்  சிறுகதைத்தொகுதிக்கும் நீதிபதியின் மகன் மொழிபெயர்ப்பு நூலுக்கும் தேசிய சாகித்திய விருதுகள்  கிடைத்துள்ளன.
 
கொழும்பில் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் இவர் பணியாற்றிய காலத்தில் சோவியத் நாடு, சோஷலிஸம் - தத்துவமும் நடைமுறையும், மற்றும் புதிய உலகம், சக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியர்குழுவிலும் பணியாற்றி ஊடகவியலாளராக தனது எழுத்துப்பணிகளைத்தொடர்ந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியிலும் பயிற்சி பெற்றிருந்த ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதைகள் ஆங்கிலம், ருஷ்யா உக்ரேய்ன், சிங்களம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சர்வதேச செயலாளராகவும் இயங்கியிருக்கும் ராஜஶ்ரீகாந்தன்,  கொழும்பில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர்.    2004 ஆம் ஆண்டு  ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி மறைந்தார்.

எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான ராஜஶ்ரீகாந்தன் மறைந்ததையடுத்து, ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளேன்.

அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்து வந்தபின்னர், குறிப்பிட்ட ஆண்டு முதல் அவர் மறைந்த 2004 ஏப்ரில் மாதம் வரையில் அவர் எனக்கு எழுதியிருக்கும் கடிதங்கள் ஏராளம். அவை இலக்கியம், சமூகம், அரசியல், எழுத்துலகம் பற்றிய செய்திகளையும் ஆவணப்படுத்தியிருக்கும். அழகிய சின்னச்சின்ன எழுத்துக்களில் அவரது கடிதங்கள் அவரது எளிமையான இயல்புகளையும்  பேசியிருக்கும்.

1987 ஆம் ஆண்டில் அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனாவின் பதவிக்காலத்தில் வடமராட்சியில் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் உத்தரவின்பேரில் இடம்பெற்ற " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பை பற்றி ராஜஶ்ரீகாந்தன் எனக்கு எழுதிய இக்கடிதம் தெரிவிக்கும் செய்திகளிலிருந்து  ஈழப்போராட்டத்தை முற்றாக நசுக்குவதற்காக  1987 இலேயே நடத்தப்பட்ட  ஒத்திகையாகவும்  அந்த " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பை அவதானிக்கலாம்.
குறிப்பிட்ட " ஒப்பரேஷன் லிபரேஷன் " தாக்குதல் ஆக்கிரமிப்பினையடுத்தே, இந்தியா வடமராட்சியில் விமானங்கள் மூலம் உணவுப்பொட்டலங்களை வீசி மற்றும் ஒரு ஆக்கிரமிப்புக்கு அடிகோலியது. அதன்பின்னர் அமைதி காக்க வந்த இந்தியப்படைகளின் காலம், அதன் பின்னரும் நீடித்த போர்க்காலம், இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அவலம்  பற்றி தொடர்ச்சியாக ஆவணங்களும் நூல்களும் பத்தி எழுத்துக்களும் வெளியாகின்றன.
ராஜஶ்ரீகாந்தன்,  கொழும்பிலிருந்து 14-07-1987 ஆம் திகதி எனக்கு எழுதிய இக்கடிதம் அன்றைய வடமராட்சி சம்பவங்களையும் தொகுத்துச்சொல்கின்றது.
----------------------------------------------------------------------------------------
கொழும்பு
14-07-1987
எனதன்புப் பூபதிக்கு,
            ஊரில் நடந்த சம்பவங்களை மிகச்சுருக்கமாக அறியத்தருகிறேன். நான் 14-04-87 ந் திகதி புதுவருடக்கொண்டாட்ட விடுமுறைக்குச்சென்று, திரும்ப கொழும்பிற்கு வரமுடியாத நிலையேற்பட்டதால் இந்த கசப்பான அனுபவங்களை நேரிற் பெறும் அனுபவம் கிட்டியது.

வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 7 – ச. சுந்தரதாஸ்


லெனின் உருவாக்கிய படங்கள் பெரும்பாலும் ஆண் கதாபாத்திரத்தை முக்கியத்துவப்படுத்தியே உருவாக்கப்பட்டன. இந்தப் படங்களில் நடித்ததின் மூலம் காமினி பொன்சேகா விஜயகுமாரணதுங்க ஆகியோர் சாதாரண ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர். குறிப்பாக லெனின் தொடர் படங்களான 'சூரயா'வைப் பார்த்த இளம் ரசிகர்கள் தாங்களும் ஒரு சூரயாவாக திகழ வேண்டும் என ஆசைப்பட்டனர். 

ஆனால் லஸ்ஸன கெல்ல படம் ஒரு பெண் பாத்திரத்தை பிரதானப் படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இயக்குனர் ஸ்ரீதர் எவ்வாறு ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தி அவரை நட்சத்திர நடிகையாக்கினாரோ அதே போன்ற சம்பவமே இலங்கையிலும் ஏற்பட்டது. 

கீதா குமாரசிங்க என்ற இளம் கவர்ச்சியான அழகுப் பதுமையை இலங்கைத் திரைக்கு வழங்கியதன் மூலம் தன் கமெரா கண்களை ரசிகர்களுடன் கொண்டு சென்றார் லெனின். 

லஸ்ஸன் கெல்ல படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. லெனினின் தெரிவை பாராட்டாதவர்களே திரையுலகில் இல்லை. அதேபோல் அவர் மீது ஆத்திரப்படாத கதாநாயக நடிகைகளும் இல்லை எனலாம். ஆனால் லெனின் அவற்றைப்பற்றி எல்லாம் கவலைப்படமால் தன் எண்ணத்தை நிறைவேற்றினார். இதன் மூலம் ஒளிப்பதிவு, டைரக்ஷன் துறையில் மட்டுமன்றி நடிகையை தெரிவு செய்வதிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபித்தார். கீதா குமாரசிங்க பின்னர் ஏராளமான சிங்களப் படங்களில் நடித்து புகழ் பெற்றார். அத்துடன் சிவாஜி கணேசனுடன் மோகனப்புன்னகை படத்திலும் ஜெய்சங்கருடன் ரத்தத்தின் ரத்தகமே படத்திலும் நடித்தார். பின்நாட்களில் அரசியலும் குதித்து நாடாளுமன்ற உறுப்பினருமானார்.

21ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் - ரஷ்யா 2018


இரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியது பிரான்ஸ்

20 வருடங்களின் பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த  பிரான்ஸ்

இங்கிலாந்தை கட்டுப்படுத்தி முதன் முறைாயக இறுதிப் போட்டியில் கால்பதித்த குரோஷியா

இங்கிலாந்தை 2 ஆவது தடவையும் வெற்றிகொண்ட பெல்ஜியம் 3 ஆவது இடத்தில்



இரண்டாவது முறையாக வெற்றிவாகை சூடியது பிரான்ஸ்

16/07/2018 ஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4 க்கு 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட பிரான்ஸ் கடந்த 20 வருடங்களில் இரண்டாவது தடவையாக பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியனானது.

கைலாசபதி கலை அரங்கில் அரங்க விழா 2018

.

"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.


"தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தவரின் பெயர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் மொழிவாரியாக நோக்கின் தமிழரே. எனவே தமிழரென்ற பெயரை மொழிவாரியாக மட்டும் உபயோகப்படுத்தினால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல அம்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அனைவருமே தமிழராகின்றனர். அதேபோன்று இஸ்லாத்தைப் பின்பற்றும் எவ்வினத்தவராயினும் அவர்கள் முஸ்லிம்களே. ஆகவே, தமிழரென்பது எவ்வாறு ஒரு தனிப்பட்ட இனத்தவருக்குமட்டும் சொந்தமான பெயராக இருக்க முடியாதோ அதேபோன்று முஸ்லிம் என்பதும் ஒரு தனிப்பட்ட இனத்தவரின் பெயராக இருக்க முடியாது. " என்று கடந்த ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்ற 'தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் எழுத்தாளர்களின் வகிபாகம்' என்னும் தலைப்பில் உரையாற்றிய கலாநிதி அமீர் அலி தெரிவித்தார்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பன், வேர்மண் தெற்கு சமூக இல்லத்தில் கடந்த ஞாயிறன்று  மாலை நடைபெற்ற கருத்தாடல் களம், சங்கத்தின் நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
மேற்கு அவுஸ்திரேலியா  மேர்டொக் பல்கலைக்கழகத்தின் பொருளியற் துறை விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலாநிதி அமீர் அலி, தொடர்ந்தும் பேசுகையில்,  " ஒரு திராவிடரோ சிங்களவரோ சீனரோ இஸ்லாத்தைத் தழுவிவிட்டால், அவர் தன்னை முஸ்லிமென்று அழைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இச்சிக்கல் ஏன் தெளிவடையாமல் ஒரு தீராத பிரச்சினையாகவும் நல்லிணக்கத்தைக் குலைப்பதொன்றாகவும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரிடையே இன்றுவரை நிலைத்திருக்கின்றது?

இலங்கைச் செய்திகள்


இலங்கை குறித்து மீண்டும் ஓரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார் நேஸ்பிபிரபு

"த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்"

ஈ.பி.டி.பி யே மகேஸ்வரனை படுகொலை செய்தது;துவாரகேஸ்வரன்

சட்டம் ஒழுங்கு அமைச்சர் யாழ். விஜயம்

"வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொதுமக்­களின் ஒத்­து­ழைப்பு தேவை"

இலங்கை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர்

இரு நாடுகளுக்குமிடையில் 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து

காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

“விஜ­ய­க­லாவின் உரை­யை சிங்­கள மொழிக்கு மொழிபெயர்க்க உத்­த­ரவு“

ரோம் நகரை அடைந்தார் மைத்திரி

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உதவி புரிந்த பெண் மீது தாக்குதல்



இலங்கை குறித்து மீண்டும் ஓரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார் நேஸ்பிபிரபு


09/07/2018 இலங்கை மீதான பிரேரணையை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை  வாபஸ்பெறவேண்டும் என அமெரிக்காவும் பிரிட்டனும் கேட்டுக்கொள்ளவேண்டும் என பிரிட்டனின் நேஸ்பி பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கியஇராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே  வேர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பிரிட்டனும் அமெரிக்காவும் பல அநீதிகளை இழைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் சித்திரவதையையும்,மோசமாக நடத்தப்படுவதையும் கண்டிக்கவேண்டும் ஆனால் சில சந்தர்ப்பங்களில் அதனை தூண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சைவ மன்றம் நடாத்தும் மாணிக்கவாசகர் குருபூசை 16/07/2018







சைவ மன்றம் நடாத்தும் சுந்தரர் குருபூசை 21/07/2018











ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் நடாத்தும் சுந்தரர் குருபூசை 22/07/2018






உலகச் செய்திகள்


சிறுவர்கள் மீட்கப்பட்டதை கொண்டாடுகின்றது தாய்லாந்து

ஜப்பானில் கனமழை:பலியானோர் எண்ணிக்கை 122

பிரிட்டன்; நோவிசோக் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான பெண் உயிரிழந்தார்

தடைகளை நீக்க அணு ஆயுதங்களை முற்றிலும்  அழிக்க வேண்டும்

மேலும் சீன பொருட்களுக்கு வரி விதித்துள்ள அமெரிக்கா 

கொடியேற்றி அரசியல் பயணம் தொடங்கினார் கமல்ஹாசன்

புதின் எனக்கு எதிரியல்ல; ட்ரம்ப்

நவாஸ் ஷெரிப் பேரன்கள் கைது

இந்தியா குடியரசு தினவிழாவில் பங்கேற்க ட்ரம்ப்புக்கு அழைப்பு

கைதானார் நவாஸ் ஷெரீஃப்


சிறுவர்கள் மீட்கப்பட்டதை கொண்டாடுகின்றது தாய்லாந்து

10/07/2018 குகைக்குள் சிக்கிய சிறுவர்களும் அவர்களது  பயிற்றுவிப்பாளரும் இரண்டு வாரங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டதை தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
12 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை மீட்பு நடவடிக்கை பல மாதங்கள் நீடிக்கலாம் என்ற அவநம்பிக்கைகளிற்கு மத்தியில் உலகநாடுகள் இணைந்து சிறுவர்களை மீட்டுள்ளன.
பிரிட்டிஸ் நிபுணர்கள் தலைமையிலான சுழியோடிகள் குழுவொன்றும் தாய்லாந்தின் நேவி சீல் படைப்பிரிவை  சேர்ந்தவர்களும் குகைக்குள் நுழைந்து சிறுவர்களை ஓவ்வொருவராக கடும் போராட்டத்திற்கு மத்தியில் நீண்ட தூரத்திலிருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்.
குகைக்குள் இருந்த சிறுவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட செய்தி வெளியானதும் தாய்லாந்து அதனை கொண்டாடிவருகின்றது.
குகைக்கு அருகில் உள்ள சியாங் ராய் நகரின் மக்கள் வீதிகளில் இறங்கி சிறுவர்கள் மீட்கப்பட்டதை கொண்டாடி வருகின்றனர்.வாகனச்சாரதிகள் தங்கள் வாகனங்களின் ஓலிகளை எழுப்பி மகிழ்ச்சி வெளியிட்ட அதேவேளை சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வெளியே மக்கள் நடமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது எனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் நான் இதனை என்றும் நினைவில் வைத்திருப்பேன் என உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நபர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் சினிமா - மிஸ்டர் சந்திரமௌலி திரைவிமர்சனம்

சினிமாவில் சில நடிகர்களுக்காகவே படங்கள் எதிர்பார்ப்பை பெறும். அந்த வகையில் அண்மையில் அடல்ட் படங்கள் மூலம் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் கார்த்திக். அவரின் நடிப்பில் தற்போது மிஸ்டர் சந்திரமௌலிபடம் வெளியாகியுள்ளது. மௌலி என்ன சொல்கிறார் என பார்க்கலாமா?  

கதைக்களம்

கார்ப்பரேட் உலகில் இன்று போட்டிகள் அதிகரித்துவிட்டன. அதே வேளையில் குற்றங்களும் பெருகி வருகிறது. இந்நிலையில் இரு நிறுவனங்களுக்கான போட்டியில் இறங்குகிறார்கள். இவர்களால் பொது மக்களுக்கு எதிர்பாராத அசம்பாவிதங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது.

இதற்கிடையில் படத்தில் கார்த்திக் தன் மகன் மகனுடன் தனியே வாழ்கிறார். அவருக்கு காரும், மகனும் தான் உலகம். சின்ன விபத்தில் ஹீரோயின் ரெஜினாவை அவர் சந்திக்கிறார்.
ஒருபக்கம் தன் மகனுக்கு ஹீரோயினுடன் காதல் ஏற்படுகிறது. கௌதம் பாக்ஸிங் வீரர். அவருக்கு சதீஷ் தான் உற்ற நண்பர். ஒரு நாள் நள்ளிரவில் அப்பாவின் ஆசைக்காக அவருடன் அதே பழைய காரில் பயணம் செய்கிறார்.
எதிர்பாராத விதமாக கோர விபத்து நடந்தேறுகிறது. இதில் கார்த்தி பிழைத்தாரா? கௌதம் என்ன ஆனார்? அடுத்தடுத்த அசம்பாவிதங்களின் பின்னணி என்ன என்பது தான் படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் ஹீரோவாக நடிகர் கௌதம். இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. ஏற்கனவே ஹர ஹர மஹா தேவகி, இருட்டறையில் முரட்டு குத்து படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக காட்டிவிட்டார்.
ஆனால் அவருக்கு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. இதனால் படங்களில் தவறான அர்த்தமுள்ள வார்த்தைகள் பேசுவதை தவிர்த்திருந்தார். அடல்ட் ஹீரோ அதிலிருந்து மாறி தற்போது சகஜமான ஸ்டோரியை கையில் எடுத்துள்ளார்.
அவரின் அப்பாவாக கார்த்திக். ரியல் லைஃபிலும் இவர்களுக்குள்ளான உறவு இப்படிதான் இருக்குமா என சில இடங்களில் கேட்வைக்கிறது. ஆனாலும் ஏதோ மிஸ் ஆனது போல ஒரு ஃபீல்.
கௌதமுக்கு ஜோடியாக ரெஜினா. இருவரும் திடீரென அறிமுகமாகிறார்கள். இவரை பார்த்ததுமே ஹீரோவுக்கு காதல். கெமிஸ்ட்ரி நன்றாக தான் இருந்தது. ஆனால் இருவருக்கிடையேயான முழுமையான லவ் ஸ்டோரி இல்லாமல் போய்விட்டதோ என தோன்றவைக்கிறது.
விபத்தால் கௌதமுக்கு பெரிய ஒரு குறை ஏற்பட்டிருந்தாலும் பின்னணியை கண்டுபிடிக்க இவர்கள் கையாளும் டெக்னிக் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங். ஆனாலும் ஒரு இடத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து நம்மை யோசிக்க வைக்கிறார்கள். இதனால் கதை கொஞ்சம் வேறு கோணத்தில் நம்மை அழைத்து செல்லும்.
காமெடியான நடிகர் சதீஷ் இருந்தாலும் லேசான தூவல் தான் இப்படத்திலும். ஒரு முழுமையான காமெடி மசாலா இல்லை. ஒரு காட்சியில் இன்னொரு காமெடியன் ஜெகன் வந்துபோகிறார். அவர் அவருடைய ஸ்டைலில் கவுண்டர் அடிக்கிறார். அவர் சொல்லும் ஆன்மீக அரசியல் காமெடி கொஞ்சம் ஸ்பார்க் போல தான்.
இதில் இயக்குனர் மகேந்திரனுக்கு ஒரு முக்கிய ரோல். ஒரு விசயத்தால் பலரின் எண்ணமும் இவரை நோக்கி தான் ஓடும். அவருக்கு உதவியாளராக மைம் கோபி. கிட்டத்தட்ட இவர் வில்லன் போல தான்.
நடிகை வரலட்சுமி, கார்த்திக்குக்கு திடீரென அறிமுகமாகிறார். இருவரும் நட்பாகிறார்கள். ஆனால் அவருக்கு வந்த சோதனை? என்ன சொல்வது? முதல் பாதி ஒரு அனைத்தும் கலந்த மசாலா காம்போ.
இரண்டாம் பாதி கொஞ்சம் சீரியஸ். ஆமாம் எல்லாம் சொன்னீங்க. யார் இந்த மிஸ்டர் சந்திரமௌலி? னு நீங்க கேட்கலாம். ஒரே விடை போய் படத்தில் பாருங்க..”

கிளாப்ஸ்

கார்த்திக் வயதானாலும் அந்த ஸ்டைல், காமெடி சென்ஸ் குறையவில்லை.
சாம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அலட்டல் இல்லாத மென்மையான பின்னணி இசை.
லவ், ரொமான்ஸ் இருந்தாலும் முக்கிய விசயத்தை இயக்குனர் பகிர்ந்த விதம் நன்று.

பல்ப்ஸ்

கார்த்திக் உடனான வரலட்சுமியின் காட்சிகள் முழுமை பெறவில்லையோ என கேள்வி வருகிறது.
காமெடியன்கள் இருந்தும் முக்கியத்துவம் இல்லாதது போல இருந்தது.
மொத்தத்தில் மிஸ்டர் சந்திரமௌலி பார்ப்பவர்கள் தன்னை ரசிக்கும் படி செய்வான்.. நன்றி CineUlagam