இலங்கை போர்க்குற்ற விசாரணை தேவை - பிரித்தானிய பிரதமர்

.
இலங்கையின் இறுதி கட்டப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ள ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பியுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது உரையாற்றுகையில், அவர் இவ்வாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

சனல் 4 ஆவணப் படம் குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை துணை அமைச்சரான அலிஸ்ட்டர் பர்ட் கூறுகையில்,

"இந்த ஆவணப்படத்தை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதைப் பார்க்கும் போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் இருப்பது போல இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது," என்றார் அலிஸ்ட்டர் பர்ட்.
நன்றி தமிழ்வின்

என் தெரு - கவிதை - றமேஸ்

.

யார் யாரெல்லாம் 
என் தெருவில் இப்பொழுது

என் தெரு 
உணர்வுகளால் ஆனது 
சாயங்கள் பூசப்படாத சாலை

உன்னைச் சூழ்ந்துகொண்டதே
சுத்திகரிக்கபட வேண்டிய காற்று
நான் சுவாசிப்பதே
உயிர்க்காற்று

உன்தன் சாலைகளில் 
சலவை செய்யவேண்டிய 
மனிதர்கள் அதிகம்

ஸ்வரலயா நுண்கலைக்கழகத்தின் ஐந்தாவது ஆண்டு இசைவிழா – எனது பார்வையில் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன் -

.
                                                                                                                                                                           

தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் அவுஸ்ரேலியாவில் சிட்னி மாநகரில் “UWS, Rydalmere, Parramatta Campus, Sir Ian and Nancy Turbot"   இல் இம்மாதம் யூன் 11ம் 12ம் 13ம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் இரவு 10.15 மணி வரை இடைவிடாது தொடர்ந்து மூன்று நாட்கள் பொழிந்த இசை மழையில் நனைந்து, மெய்யுருகி, மனம் சிலிர்த்து, நெகிழ்ந்து, மயங்கிய அந்த உணர்வில் இருந்து விடுபடமுடியாமல் இக்கட்டுரையை எழுதுகின்றேன்.

ATBC யின் கலை ஒலி மாலை 2011

.

மானிப்பாய் இந்துக்கல்லூரி மானிப்பாய் மகளிர் கல்லூரி பழைய மாணவர் (சிட்னி கிளையினரின்) அறிவித்தல்

.
மானிப்பாய் இந்துக்கல்லூரி மானிப்பாய் மகளிர் கல்லூரி சிட்னி கிளை  பழைய மாணவரின் வருடாந்த பொதுக் கூட்டமும் நடப்பு வருட அங்கத்தவர் தெரிவும்.
திகதி - ஞாயிற்றுக் கிழமை 26 /6 /2011
இடம் - Carrington Church Hall , Strathfield
நேரம் - மாலை 3 -5

பழைய மாணவர்களை தவறாது கலந்துகொள்ளுமாறு அன்பாக அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு பின் வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

செந்தில்ராஜன் - 9687 3668
யுசீலானந்தன் - 9643 5372
மதுரா மகாதேவ் - 9643 8007

''இலங்கையின் படுகொலைக் களம்'' சனல்4 வெளியிட்டுள்ள திரைப்படம்

.
[ புதன்கிழமை, 15 யூன் 2011, 01:56.56 AM GMT ]

சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ''இலங்கையின் படுகொலைக் களம்'' என்னும் தலைப்பில் ஓரு ஆவணத் திரைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளது.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ள, பிரிட்டன் செய்தி சனல் 4 ஆவணப் படமாக்கி நேற்று வெளிவிட்டது.

'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்...இதுபோன்ற கொடூரமான செயல்களை செய்த சிங்களப் படைகளினதும் அவர்களை ஏவிய இலங்கை அரசாங்கத்தினதும் ஈனச் செயல்களை படம்பிடித்து சனல் 4, ஐ.நா வரை காட்டிய போதிலும் அதனை பொய் என்கிறது இலங்கை அரசு.
நன்றி தமிழ்வின்உலகச் செய்திகள்

கருங்கடலில் போர் ஒத்திகை: அமெரிக்க போர்க் கப்பலுக்கு ரஷியா கடும் எதிர்ப்பு


 6/14/2011 10:14:36 AM
சோவித் ரஷியாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு நிறுத்தப்பட உள்ளது.

இதற்கு உக்ரைனின் அயல் நாடான ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பகுதியில் உலகளாவிய ஏவுகணை தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கணங்கள் - (சிறுகதை) -முருகபூபதி


.


 அண்ணாவின் ஆதரவு இல்லாமல் நானோ மகனோ அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கமாட்டோம்.  நானும் மகனும் இங்குவருவது முதலில் மச்சாளுக்கு விருப்பமில்லை என்பதை அண்ணாதான் ஒருநாள், மகனை அந்தப்பாடசாலையில் சேர்க்க அழைத்துப்போனபோது சொன்னார்.
 “ அவள் புருஷனைப்பறிகொடுத்திட்டு பிள்ளையோட தனிச்சுப்போனாள். 215 என்று ஒரு விஸா திட்டம் இருக்கு. அதன்மூலம் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இரத்த உறவினரை இங்கே அழைக்கலாம். அதுதான் பத்மாவையும் மகன் நிர்மலனையும் அழைக்கப்போறன்.” என்று அவவுக்குச்சொன்னன்
 மகனை பாடசாலையில் சேர்ப்பதற்குச்சென்றபோது மச்சாள் வேலைக்குப்போயிருந்தா. அதனால் அண்ணாவால் சற்று சுதந்திரமாக அன்று பேசமுடிந்தது.
 “ ஏன்... அண்ணா நாங்க வாரது மச்சாளுக்கு விருப்பமில்லையா?”
 “ அவவுக்கு தன்ர தம்பியை இந்த 215 விஸாவில் இங்கே அழைக்க விருப்பம் இருந்தது. ஆனால் அவன்ரபோக்கு எனக்குப்பிடிக்கயில்லை. உனக்குத்தெரியும்தானே...? ஊர்மேயும் கழுதை. ஒழுங்காக படிக்கவும் இல்லை. இயக்கத்துக்குப்போய் பிழைசெய்து பங்கருக்குள்ள போட்டான்கள். பிறகு எப்படியோ வெளிய வந்திட்டான்.”

படுவான்கரையும் எழவேண்டிய விடயங்களும்


 .

"நெஞ்சாலி விளைவேலி ஆயிரமூர் புரக்கும்
திருவோங்கி நிறைவுடைய செல்வமெல்லாஞ் சுரக்கும்
அஞ்சாயல் மடவார்க்கட் கறநெறிஆர்மனமு முருக்கும்
துஞ்சாம லிரவுபகல் மள்ளர்குரல் களிக்கும்
சுவாமிவிபு லாநந்தர்யா ழிசைநின் றொலிக்கும்
மஞ்சாரும் பொழில் மட்டு மாநாட்டி னினிய
மண்வளம்போல் வாழ்வாரின் மனவளமு மினிதே"


என்று புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பின் பெருஞ்சிறப்பைப் பற்றி எழுதிய பாடல். 

விக்கிபீடியாவில் மட்டக்களப்பு 

பிரச்சாரப் பொதி சுமக்கும் மரக்குதிரை - செல்லப்பா


.
கிராமியக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமான அழகர்சாமியின் குதிரைக்கு இசையமைக்க ஹங்கேரி இசைக் குழுவைச் சார்ந்த ஐவர் இளைய ராஜாவால் அழைத்துவரப்பட்டிருந்தனர் என்னும் தகவல் இப் படத்தின் மீது சிறு ஈர்ப்பை உருவாக்க, உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்படுவதற்காக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதை அதிகப்படுத்த ‘இந்தப் படத்தின் இசையைக் கேட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காவிட்டால் நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்’ என்ற இளையராஜாவின் அதிரடி அறிவிப்போ குதிரை இதுவரை நாம் அனுபவித்தறியாத, பயணப்பட்டிராத ஏதோ ஒரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச்செல்லக்கூடும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியதால் மிகுந்த ஆர்வத்தோடு கவனத்தை எல்லாம்

மீனும் மீனும் பேசிக் கொண்டன - வித்யாசாகர்

7.
உலக மக்களின் மொத்த பரபரப்பினையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஒரு பிரபல்யம் மிக்க அசைவ உணவகமான சனியாண்டி விலாஸ் வாசலில் வந்து நின்றது அந்த மீன்களை சுமந்து வந்து விற்பனைக்குக் கொட்டும் மீன்பாடி வண்டி.

பழக்கத்தின் பேரில் மிக லாவகமாக ஈர வலையில் சுற்றிக் கட்டப் பட்டிருந்த மீன்களை எடுத்து முதுகு மேலிட்டு சற்று சாய்ந்தவாறு நடந்து உள்ளே சென்றார் ‘அந்த மீன் வியாபாரியால் அனுப்பப் பட்ட தொழிலாளி ஒருவர்.

“இருப்பா இருப்பா அதோ அந்த மேசை மேல கொட்டு”

கொட்டி மீன்களை மேஜையில் பரப்பி –

“பார்த்தியா, மீனு துள்ளோ துடிக்கோ எப்படி ஜம்முனு இருக்கு..?”

“பாதி செத்து போச்சு போலிருக்கே, பழைய மீனை கலந்துட்டாரா உங்க முதலாளி?”

“அட, என்னண்ணே நீ, என்னைக்கு நாங்க அப்படி கொடுத்தோம் இப்படி பேசுற, எல்லாம் கடல் ல இருந்து இறக்கியாந்த புது மீன் ண்ணே, செவல பிச்சி பாரேன் தெரியும்”

“சரி சரி போ, நாளைக்கு வந்து பணம் வாங்கிக்கோ”

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

பாகம் 3

நலன்:

எந்த ஒரு செயலைச் செய்வதானாலும், மற்றவருடைய நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள். அனைவருடைய நலனையும் கவனியுங்கள். தனிப்பட்ட பலன்களை மட்டும் எண்ணாதீர்கள். ஜபம், தியானம் போன்றவை சுயநல நோக்குடன் செய்யப்படுகின்றன. இதற்குப்பதில், இறைவன் பெயரைச் சொல்லியவாறு, சமுதாயத்தில் இறங்கி சேவை செய்யுங்கள். இதுவே உண்மையான சாதனையாக அமையும். நீங்கள் யாருக்கு சேவை செய்தாலும், இறைவனுக்கு செய்வதாக எண்ணிக் கொண்டு செய்யுங்கள்.இலங்கை இந்தியா செய்திகள்

.
*யாழ். த.தே.கூட்டமைப்பின் தோ்தல் கூட்டத்தில் இராணுவத்தினர்  
 அடாவடி! எம்.பிக்கள் மீதும் தாக்க முயற்சி
*தமிழக சட்டசபைத் தீர்மானங்களும் இலங்கை - இந்திய உறவும்
*இலங்கையும் பான் கீமூனும்
*அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா தலையிடாது

இலங்கையில் அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இந்தியா தலையிடாது எனவும் அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் எனவும் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலேசாகர் சிவ் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்திய தூதுக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது வடக்கு இராணுவமயப்படுத்தப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்களிடம் சிவ்சங்கர் மேனன் கூறுகையில், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வழங்குவதும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவமே உடனடி இலக்காகும் எனக்கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பாக விபரங்களை வெளியிடுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா

.
மாவீரன்

தெலுங்கில் வெளியாகி, வெற்றி பெற்ற "மகதீரா" படத்தை தமிழில் "மாவீரன்" என பெயர் சூட்டி, மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

ராம்சரண் நாயகனாக கம்பீரமாக நடித்துள்ளார். சில நூற்றாண்டுகளுக்கு முன், ராஜ குடும்பத்தில் பிறந்த நாயகன் ராம் சரண் - நாயகி காஜல் அகர்வால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து இறக்கிறார்கள்.