வீரர்க்கொரு விளக்கு கவிஞர் த. நந்திவர்மன்
            பறந்தன பாரினில் பதினொரு ஆண்டுகள்
            இறந்தவர் தொலைந்தவர் எத்தனை ஆயிரம்
            மறந்திட முடியுமோ மடிந்தவர் நினைவினை?
            மறைந்தவர் வலியினில் மலருமோ புதுயுகம்?                    1

            நிறைந்திடும் வாழ்வென நிம்மதி வருமென
            குறைந்திடுந் துயரெனக் கூடிடுஞ் சுகமெனச்
            சிறந்திடுந் தமிழெனச் சீர்பல வருமென
            இறங்கினர் களத்தினில் எடுத்ததை முடித்திட.                   2

            கொடுமைகள் அழித்திடக் கொள்கையில் நின்றனர்
            விடுதலை வேண்டியே வீரராய் மாண்டனர்
            படுகுழி வீழ்ந்தனர் பதைத்திட இறந்தனர்
            தடுத்திட எவருமே தரணியில் வந்திலர்!                                   3

மே 18ம் திகதி ஓஸ்ரேலிய - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்_2020 (இணைய வழியாக) பற்றிய விபரம்

18 ஆவது வருட சேவையை தருகிறது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - செ .பாஸ்கரன்

.


அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மே மாதம் 18ம் திகதி தனது 18 ஆவது வருட சேவையை  கொண்டாடியது. 18 ஆண்டுகள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டர்கள்  இந்த வானொலியில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.  18 வருடம் என்பது மிக நீண்ட காலம்இந்த நீண்ட காலப்பகுதியிலே 24 மணி நேரமாக இந்த வானொலி இயங்கிக்கொண்டிருக்கிறது . தமிழ் சமூகத்துக்கு தேவையான அனைத்து விடயங்களையும் அனைத்து தேவைகளையும் தேடிக்  கொண்டுவந்து படைக்கின்றார்கள்.  இலாப நோக்கமற்ற இந்த நிறுவனம் 18 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே முதலில் நன்றி சொல்லப்பட வேண்டியவர்கள் இதன் நிர்வாகிகள். வருகின்ற இடர்களை  எல்லாம் நீக்கி இதனை இயங்கச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.  ஆதரவாளர்கள்இந்த வர்த்தகர்களுடைய மிகப் பெரிய ஆதரவு ஒரு தாங்கு சகித்தியாக இருக்கிறது இதிலே இரவு பகலாக வேலை செய்துகொண்டிருக்கும் தொண்டர்கள் வானொலியைக்  கேட்டுக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் வானொலியோடு இணைந்து படைப்பாளிகளுக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கிக் கொண்டிருக்கும் அன்பு ரசிகர்கள்இது தான் இவ்வளவு காலமும் இந்த வானொலி சீராக இயங்கிக் கொண்டிருப்பதற்கு அடிப்படையாக இருக்கின்றது.  சமுதாயத்தில்  உள்ள  எல்லோருக்கும் தேவையானது ஒரு நடுநிலையான வானொலிஅந்த நடுநிலையோடு 24 மணி நேரமும் இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது இந்த வானொலி. இந்த வானொலி இன்னும் நீண்டகாலம் மிக நீண்ட காலம் வாழவேண்டும் மக்களுக்காக தனது சேவையை இப்போது வழங்கிக் கொண்டிருப்பது போன்று என்றென்றும் வழங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று தமிழ் முரசு வாழ்த்துகின்றது.

கிண்டில் வழி தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது எப்படி? - எளிய அறிமுகம் - கானா பிரபா


இன்றைய யுகத்தில் சம காலத்தில் அச்சுப் பதிப்புகளாகவும், மின்னூல்களாக அமேசன் கிண்டில் (Kindle) வழியாகவும் வெளியிடும் முறைமை வந்திருக்கிறது.

பழந்தமிழர் இலக்கியங்களில் இருந்து சம கால எழுத்தாளர்கள் படைப்புகள் வரை கொட்டிக் கிடக்கும் இந்த நூல் களஞ்சியத்தில் இருந்து எப்படி மின்னூல்களைத் தருவிப்பது, சந்தா முறையான சேவை (Kindle Unlimited) போன்ற விடையங்களை உள்ளடக்கி இந்தக் காணொளியை உருவாக்கியிருக்கிறேன்.
அத்தோடு Kindle Reader என்ற கருவி இல்லாது மின்புத்தகங்களைப் படிக்கும் முறைமையையும் மேலதிகமாகக் கொடுத்திருக்கிறேன்.இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும் - மயில்வாகனம் திலகராஜா ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் )


( எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா ஞாயிறு (17-05-2020 ) தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணல் ) “ அரசாங்கம் வசம் ஜனாதிபதி பதவி இருக்கும்போது பாராளுமன்றத்தையும் தங்கள் பலத்தில் வைத்துக்கொள்ளவே ஆளுங்கட்சி தேர்தலைக் கோருகிறது. எதிர்கட்சி இப்போது பலமாக இருப்பதால் தேர்தலைப் பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருகிறது. எனவே இரண்டு தரப்பிலும் அவர்தம் சுயநலம் உண்டு. சிலவேளை எதிர் கட்சி தற்போது பெரும்பான்மை கொண்டிருக்காவிட்டால் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எனும் கேள்வியும் உள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, தேர்தலைப் பிற்போடுவதால் நாட்டில் ஜனநாயக சூழல் உருவாவது பின்னோக்கிப் போகிறது எனும் அபாயம் உள்ளது இனி இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும்   “ என்றும் தெரிவித்து உள்ளார். 
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.

( நேர்காணல் : யோ.தர்மராஜ்)

கொஞ்சம் பொறுமை எங்களுக்கு மிகவும்முக்கியம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


ஓரே ஒரு மழை - கவிதை - பாமதி சோமசேகரம்

.

லட்சம் மழைத்துளிகள்
பறக்கும் பந்து போல அசுரக்காற்று
பெருத்த கண்களையொத்த 
நீர்த்துளிகள் 
யன்னல்கள் பூத்தகண்கள்
வாஞ்சையாய் அழைக்கின்றன . 
வேர்த்து கிடக்கும் கண்கள் அவை.
அழ மறுக்கும் கண்கள் அவை.
மழைககுள் கோபம்.
காடுகள் தீப்பற்றி எரிந்த கோபம்.
காற்று மரங்களின் தலையை
பிடித்து கோரமாய் ஆட்டியது.
எங்கே பிஞ்சுப் பறவைகள்என்றழுதது..
பற்களை நற நறவென்று நெரித்து
வீடுகளை முட்டிமோதியது.
இறுதியாக அது எதையோ 
பேச விரும்புகிறது.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 14 - முகவீணை


முகவீணை – காற்றுக்கருவி
பெயரை வைததுப் பார்த்தால் இது, வீணையைப் போன்ற தந்திக்  கருவியாக தோன்றலாம். ஆனால், இது துளைக்கருவி. இன்று புழக்கத்தில் இருக்கும் பாரி நாதஸ்வரத்தின் ஆதிவடிவம். பொதுவாக இசைக்கருவிகளின் நீளம் கூடக்கூட, சுருதி குறைந்து போகும். அவ்வாறு, முகவீணையின் சுருதியைக் குறுக்கி, நீளத்தைப் பெருக்கி உருவாக்கப்பட்டதே திமிரி மற்றும் பாரி நாதஸ்வரங்கள் என்கிறார்கள் இசை ஆய்வாளர்கள். 1.2 அடி நீளமே கொண்ட இந்த இசைக்கருவி வீணைக்கு இணையாக நாதம் பேசக்கூடியது. வீணையைப் போல நாதமுகம் கொண்டதால் இது முகவீணை.

முகவீணையின் பின்புறம் உள்ள அனசு மா, பலா, வேம்பு போன்ற மரங்களில் செய்யப்படுகிறது. நீளமான தண்டுப்பகுதி செய்ய ஆச்சா மரம் தேவை. ஆச்சா என்பது கருங்காலி மரத்தில் ஒருவகை. அம்மரத்தை வெட்டி, 50 ஆண்டுகள் கடந்த பிறகே பயன்படுத்த முடியும். நன்கு நீர்வற்றிப்போன மரங்களே முகவீணை செய்யத் தகுந்தவை. ஊதும் பகுதிக்கு சீவாளி என்று பெயர். இது காவிரிக்கரையில் விளையும் ஒருவித நாணல் மூலம் செய்யப்படுகிறது. பக்க சுரமற்ற இக்கருவிக்கு தண்டுப்பகுதியான உலவில் 8 துவாரங்கள் உண்டு.

பெருமாள் கோயில்களில் நள்ளிரவு வழிபாட்டின்போது, ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி போன்ற ராகங்களை முகவீணை மூலம் இசைப்பார்கள். இதமான இசை, நித்திரையில் சொக்கிக்கிடக்கும் மக்களை காற்றாக வருடித் தாலாட்டும். சில சிவத்தலங்களிலும், சுவாமிமலை உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் இந்த இசைக்கருவி வாசிக்கப்பட்டது. நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களே இக்கருவியையும் வாசிப்பார்கள். உயர்ந்த சுருதியையும் லாவகமாக வளைக்க முடியும் என்பதால் முகவீணையை நாட்டிய நிகழ்வுகளில் பயன்படுத்தினார்கள்.

படித்தோம் சொல்கின்றோம்: ஜீவநதி 136 ஆவது இதழ் சிறந்த சிறுகதைகளை வரவாக்கியிருக்கும் 13 ஆவது ஆண்டு மலர் முருகபூபதி


மகாகவி  பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமி அவர்கள் தோன்றிய  இலங்கையின்   வடபுலத்தில்  அல்வாய் பிரதேசம்,  பல கலை, இலக்கியவாதிகளையும்  தமிழ்  அறிஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அவ்வூரிலிருந்து 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் வெளிவரத்தொடங்கிய   ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழ் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்,  தனது 136 ஆவது  இதழை ஆண்டுமலராக வெளிக்கொணர்ந்துள்ளது.
இதன் ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஈழத்து இலக்கிய உலகில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்.
யாழ்குடா நாட்டிலிருந்து மறுமலர்ச்சி முதல் மல்லிகை வரையில் பல இதழ்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்துவிட்ட சூழலில் அங்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜீவநதியாக ஊற்றெடுத்து வந்தது இந்த   இதழ்.
இலங்கையில் நீடித்த போர்க்காலம் முடிவுறாத காலப்பகுதியில் வடக்கிலிருந்து  வெளிவரத்தொடங்கிய ஜீவநதி,  ஈழத்து சிற்றிதழ் இலக்கிய வரலாற்றில் கூடுதலான சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கும் பெருமையும் பெற்றது. கடந்த  பதின்மூன்று ஆண்டுகளுக்குள்   இருபது சிறப்பிதழ்களையாவது   ஜீவநதி  வெளியிட்டிருக்கும் என்பது எமது கணிப்பு.
ஜீவநதி அவுஸ்திரேலியா – கனடா சிறப்பிதழ்களையும் முன்னர் வெளியிட்டு இந்த நாடுகளிலிருந்து எழுதிவரும் படைப்பாளிகளையும் ஊக்கிவித்துள்ளது. அத்துடன் சில ஈழத்து இலக்கிய  ஆளுமைகளின் வரிசையில் எழுத்தாளர்கள் கே.எஸ். சிவகுமாரன், க. சட்டநாதன், செங்கைஆழியான், தெணியான், குழந்தை சண்முகலிங்கம்  ஆகியோரை கௌரவிக்கும் வகையிலும்   சிறப்பிதழ்களையும் வெளியிட்டிருக்கிறது.  
   இவை தவிர, பெண்கள் சிறப்பிதழ்  ,  கவிதைச்  சிறப்பிதழ் , உளவியல் சிறப்பிதழ் , இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ்சர்வதேச  தமிழ்  எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்மலையக சிறப்பிதழ்திருகோணமலை சிறப்பிதழ்ஈழம்- கவிதை சிறப்பிதழ் , ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், சிறுவர் இலக்கிய சிறப்பிதழ், ஈழம் ஹைக்கூ கவிதைச் சிறப்பிதழ்   முதலானவற்றையும் வெளியிட்டுள்ளது.  
அத்துடன் ஜீவநதி வெளியீடாக இதுவரையில் 90 இற்கும்  மேற்பட்ட நூல்களும் வெளிவந்துள்ளன. ஜீவநதியின் ஆசிரியர் கலாமணி பரணீதரனும் படைப்பிலக்கியவாதி.  இவரது தந்தையார் கலாமணியும் மூத்த எழுத்தாளர். கலாமணியின்  தந்தையார் தம்பிஐயா வடபுலத்தில் கிராமங்கள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட  தடவை  இசைநாடகங்களை அரங்கேற்றியிருப்பவர்.
பரணீதரனின் மனைவி விஷ்ணுவர்த்தினியும் படைப்பிலக்கியவாதியாவார்.  இவ்வாறு  ஒரு  கலை இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து ஜீவநதியை தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் பரணீதரனுடைய சில இலக்கிய நூல்களும் வரவாகியுள்ளன.  

புகல்வாழ்வின் நிஜங்கள்: புலம்பல்களில் புனைவின் வண்ணம் கலந்து புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருக்கொள்கின்றது. முனைவர் ப. சரவணன் ஆசிரியர், லட்சுமி பள்ளி மதுரை


இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளரின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது.  மக்கள், ஏதேனும் ஒரு காரணம் குறித்து தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க - வழக்கங்

களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டிற்குக் குடி பெயர்வதே 'புலம்பெயர்வு'.


அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களை 'புலம்பெயர்ந்தோர்' என்று அழைக்கின்றனர். 'புலம்பெயர்ந்தோர்' என்பது நாட்டு எல்லையைவிட்டு நீங்கி முற்றிலும் வேறுபட்ட நிலச்சூழலில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு வாழமுற்பட்டவர்களால் படைக்கப்படும் இலக்கியம் 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்'


இலங்கை படைப்புகள் : இலங்கையிலிருந்து 1960  களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கியது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்தோரால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் முதன்மையாகக் கருதப்படுகின்றன.


புலம்பெயர்ந்தோர் படைப்புகளில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கியப் புனைவுகள் முதன்மையாகக் கருதப்பட்ட

போதிலும், கலைகள் சார்ந்த வெளிப்பாடுகள், சிற்றிதழ்கள், ஓவியம், குறும்படம், கூத்துக்கலை, தெருநாடகம் அனைத்தும் புலம்பெயர்ந்தோரின் செயல்பாட்டு அடையாளமாகத் திகழ்வதால் அவையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். மொழி, நிறம், பண்பாட்டுச் சிக்கல் பற்றியதாக இப்படைப்புகள் அமைகின்றன.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -13 ஊர்பெயர்தலின் வலி சுமந்த வாழ்க்கையின் தரிசனம் !


மார்கழி மாத குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. குடலைகள் முதிர்ந்த நிலையில், பச்சைப்பசேலென்ற நெற்பயிர்கள் காற்றிலே சலசலத்தன. மாலைக்கதிரவன் மேற்குத்திசையில் நின்ற தென்னை மர ஓலைக் கீற்றுகளினூடாக எட்டிப்பார்த்தவாறு ஆழியில் மூழ்கத் தயாராகினான்.  சித்திரவேலாயுதர் கோயிற் குளத்தின் படிக்கட்டிலே நான் உட்கார்ந்து அந்தச் சூழல் பற்றி ஏதேதோ எண்ணி எண்ணி, நினைவு மீட்டுக்கொண்டிருந்தேன்.
மாரிக்குளம். நீர் நிறைந்த குளம். குளக்கரை வரையும் நீந்திவந்த மீனினம் திடீரெனத்தாவித் திரும்பிச்சென்றன. அதனால், என் சிந்தனை இடையிடையே தடைப்பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். நிறைகுளத்திலே செந்தாமரையும் வெண்டாமரையுமாகப் பூக்கள்.  பரந்து கிடந்த  பச்சை இலைகளிடையே எழுந்து நின்ற பூக்களும், இலைகளின் மீது உருண்டோடிய நீர்த்துளிகளும் என் கண்ணிற் தெளிவாகத் தெரிந்தன. தாமரை இலையில உருண்டோடிய துளிகள் போல என் நினைவுகளும் நிலை இழந்து நின்றன.
குளத்தின் அருகே, மூன்று கரைகளையும் பார்த்தேன். சாயல்  அலரிகள். செந்நிறப் பூக்கள் குலுங்கக் குலுங்க வீசும் காற்றிலே நடனமாடின. அவை,  “போய்வருக போய்வருக  “ என்று பிரியவிடை தருவது போன்ற ஓர் உணர்ச்சி என் மனசில் ஓடியது.
“  ஊரைவிட்டு நான் சென்றபின், இந்தக்கவினுறு காட்சிகளும் இனிய சூழலும்….. “

மரணபீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு…. “ மரவள்ளிக்கிழங்கு “ காலம்தான் இனி ஒரே வழி ! தேசத்தின் தன்னிறைவும் அரசியல் தலைமையின் தீர்க்கதரிசனமும் !! முருகபூபதி


டந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில்   தேசங்களின் தன்னிறைவு மற்றும் தேசங்களை வழிநடத்தவேண்டிய அரசியல் தலைமையின் தீர்க்கதரிசனம் குறித்தும் உரத்துச்  சிந்திக்கவேண்டியிருக்கிறது.
சின்னஞ்சிறிய நாடாக கரிபியன் கடலை அண்மித்திருக்கும் கியூபாவை முன்னுதாரணமாகக்கொண்டுதான் எங்கள் தேசத்தின் கடந்த காலத்தையும் சமகாலத்தையும் எடைபோடவேண்டியிருக்கிறது.
உலகின் முதல் பெண்பிரதமர் என்று விதந்துரைக்கப்படும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா ( 1916 – 2000) பல்கலைக்கழகம்  சென்று பட்டம் பெற்றவர் அல்ல. அவரது கல்வித்தரம் ஒன்பதாம் வகுப்பிற்கும் கீழ்தான்.

அவரது கணவர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா லண்டனில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவர்
1959 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரது அமைச்சரவையிலிருந்த கலாநிதி தகநாயக்கா காபந்து அரசின் பிரதமரானார்.
எனினும்,  அவரால் உருவாக்கப்பட்ட கட்சி அடுத்துவந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தனது கணவருக்குப்பின்னர் பாதுகாத்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா  தேர்தலில் வென்று பிரதமரானார்.
அதற்குப்பிறகு மூன்று தடவைகள் பிரதமர் பதவியை அலங்கரித்துவிட்டு, 2000 ஆம் ஆண்டில் மறைந்தார்.  இவரது மகள் ஜனாதிபதியானபோது, அவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பிரதமர் பதவி ஏற்ற அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.

ஶ்ரீமாவோ,  பதவியிலிருந்த காலத்திலும் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்தது என்னவோ உண்மைதான்.   தமிழ் மொழி இரண்டாம் பட்சமாகிய புதிய அரசியல் அமைப்பு -  பல்கலைக்கழக அனுமதியில்  தரப்படுத்தல் என்பனவும் நிகழ்ந்தன.  மறுக்கவோ மறைக்கவோ முடியாது !ஆனால், அவரது காலப்பகுதியில் இனக்கலவரங்கள் நடைபெறவில்லை.

இலங்கைச் செய்திகள்


கடற்படை, வாழைத்தோட்ட பகுதியில் அதிக தொற்று ஏற்பட காரணத்தை கண்டறியவும்

ராஜித சேனாரத்னவுக்கு மே 27 வரை விளக்கமறியல்

ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் ஞானசார தேரர் மனு

வாகனங்கள் உட்பட ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதி தடை

18ஆம் திகதி 6.18க்கு வீடுகளில் விளக்கேற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற தயார்கடற்படை, வாழைத்தோட்ட பகுதியில் அதிக தொற்று ஏற்பட காரணத்தை கண்டறியவும்கடற்படை, வாழைத்தோட்ட பகுதியில் அதிக தொற்று ஏற்பட காரணத்தை கண்டறியவும்-Meeting With Presidential Task Force on COVID-19
- திட்டங்கள் முன்னெடுக்கும்போது தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யவும்
- எதிர்கால இடர்நிலையை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்
- மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அடிக்கடி பரிசோதிக்கவும்

உலகச் செய்திகள்


வைரஸுக்கு எதிராக உலகெங்கும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி சுகாதார அமைப்பு நம்பிக்கை

சொந்த போர்க் கப்பல் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல்

கொவிட்-19: 7 அல்லது 8 சாத்தியமான தடுப்பு மருந்துகள் பற்றி அவதானம்

உலகில் 2ஆவது மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யாவில் ‘கொவிட்-19’ தீவிரம்

கொவிட்-19: குழந்தைகளுக்கு அரிய அழற்சி நோய் பாதிப்பு

லண்டனில் மிக வேகமாக தணிகிறது கொரோனா!

“சீனாவுடனான உறவை துண்டிப்பேன்” டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை


வைரஸுக்கு எதிராக உலகெங்கும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி சுகாதார அமைப்பு நம்பிக்கை
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 900 க்கும் குறைவாகக் காணப்படும் நிலையில் வைரஸுக்கு எதிரான உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது. எனினும் இரண்டாம் அலை தாக்கம் குறித்து கடும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 1 - C I D சங்கர் - ச . சுந்தரதாஸ்

.


ஆங்கில திரைப்படங்களில் மிகப்பிரபலமானது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் .கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு பல மொழிகளில் ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன, அந்தவகையில் தமிழிலும் பல படங்கள் தயாரிக்கப்பட்டன. எம்ஜிஆர், சிவாஜி உட்பட பலர் இவ் வேடங்களில் நடித்த போதிலும் ஜெய்சங்கருக்கே இவ்வேடம் கண கச்சிதமாக பொருந்தியது, இதனால் ரசிகர்கள் அவரை தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அழைத்தனர். அவ்வாறு அவர் நடித்து 1970 இல் வெளிவந்த படம் சிஐடி சங்கர். படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்றும் பல ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளது.

படத்தின் ஆரம்பத்தில் பிரபல அரசியல் தலைவர் ரகுநாத் ஊர்வலமாக தொண்டர்கள் புடைசூழ அழைத்து வரப்படுகிறார், அப்போது ஒரு இளம் பெண் கையில் மாலையுடன் அவரை அணுகி மாலையை அவருக்கு போடுகிறாள் மறுவினாடி குண்டுவெடிக்க இவரும் இறக்கின்றார்கள் , இதைப் படித்தவுடன் உண்மையில் நடந்த சம்பவம் வாசகர்களுக்கு நினைவில் வரும் . 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம்தான் அது. 20 வருடங்களுக்கு முன்னரே இச்சம்பவம் சிஐடி சங்கர் படத்தில் காட்சியாக சித்தரிக்கப்பட்டிருந்தது.


வடமொழியா? தமிழா? - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.  எமது மொழியான தமிழ்மொழி மிகுந்த தொன்மை வாய்ந்ததும், இலக்கியச் செறிவும் உள்ள மொழி. இவற்றால் நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் எம்மில் ஒருவர் தமிழை மட்டுமே கற்றுத் தேர்ந்தவராக இருந்தவராகவும் அதில் பாண்டித்யம் பெற்றவராகவும் இருந்தால் அவரை தமிழ் அறிஞர் என்கிறோமா? இல்லைத்தான். காரணம் அவர் உலகை அறிந்துகொள்ளக் கூடிய மொழியான ஆங்கிலத்தை அறிந்திராததே காரணமாகிறது. தமிழ் மொழியின் தொன்மையை, சிறப்பை ஆய்வதற்கும் இன்று ஆங்கிலமே கருவி மொழியாக பயன்படுவதை நாம் அறிவோம்.

  ஆங்கிலேயர் எமது நாட்டை ஆணசடு எமது வளங்களை சூறையாடியது யாவும் இன்று வரலாறு ஆகிவிட்டது. ஆனால் அதன் பக்க விளைவுகளாக நாம் சில நலன்களையும் பெற்றுள்ளோம். அதில் ஒன்றுதான் ஆங்கிலக் கவில். இன்று ஆங்கிலம் மூலமே நாம் உலகைப் பார்க்கிறோம். சர்வதேச மொழியான ஆங்கிலத்தை அறியாவிட்டால் நாம் கிணற்றுத் தவளைகள்தான். இலங்கை இந்தியா போன்ற நாடுகள் சுதந்திரம் பெற்ற நாடுகள்தான். ஆனால் ஆங்கில ஆதிக்கம் இன்றுவரை அங்கு நிலைபெற்றிருப்பதைக் காண்கிறோம்.