வளங்கொடுக்கும் வாழ்விலென்றும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


அமரர் எஸ் .பொ. - அங்கம் -03 - முருகபூபதி


புலம்பெயர்ந்து  வாழ்ந்தாலும்  வேர்  அங்கும்  வாழ்வு இங்குமாக  இலக்கியத்தாகம்  தணிக்க  முயன்றவர்
                                         பொன்னுத்துரை  நைஜீரியாவிலிருந்து  இலங்கை   திரும்பியதும் அடுத்து   என்ன  செய்வது...?  என  யோசித்தவாறு  தமிழ்நாட்டுக்கும் சென்று  திரும்பினார்கொழும்பிலிருந்து  மீண்டும்  தமது  இலக்கிய தாகம்  தணிக்க  நண்பர்களைத்தேடினார்.
அவரது  நீண்ட  கால  நண்பர்  வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான   ஆசிரியர்  பொன். ராஜகோபாலிடம் சென்று   முருகபூபதியைப்பற்றி  விசாரித்திருக்கிறார்.   ஏற்கனவே 1985 இல்   அவர்  வந்தபொழுது  எடுத்த  ஒளிப்படத்தின் பிரதியைக்கொடுப்பதற்காகவும்   மீண்டும்  கொழும்பில் இலக்கியவாதிகளை  சந்திப்பதற்கான  தொடர்பாடலை   உருவாக்கவும் அங்கு    சென்றவருக்கு    முருகபூபதி   கிடைக்கவில்லை.
அவுஸ்திரேலியா    முகவரிதான்    கிடைத்தது.
எஸ்.பொ.வின்    மூத்த  புதல்வன்  மருத்துவ  கலாநிதி  அநுர.  அவர் முன்னாள்   உதவி  அரசாங்க  அதிபர்  மோனகுருசாமியின்  புதல்வியை   மணம்  முடித்து  சிட்னியில்  குடியேறியிருந்தார். அவரிடம்  புறப்பட்டு  வந்த  எஸ்.பொ.  1989  ஜனவரி  மாதம் 19 ஆம் திகதி   மெல்பனிலிருக்கும்  முருகபூபதிக்கு  கடிதம்   எழுதுகிறார்.
"  நான்  என்  மகனுடன்  இங்கே  தங்கியிருக்கின்றேன்.  நைஜீரிய வாழ்க்கைக்கு  வாழி  பாடிவிட்டேன்.  முன்னர் போல அந்நியச்செலாவணி    கிடைக்காது    போனமைதான்   காரணம். சென்னையில்   புத்தக  பிரசுரம்  ஒன்று  தொடங்க  உத்தேசம்.  என் வசம்   பிரசுரிக்கப்படாத   என்  படைப்புகளாகவே   இருபத்தைந்து நூல்கள்   தேறும்.
ஆபிரிக்க  கண்டத்தைப்பற்றி  நிறைய  அறிந்துள்ளேன்.  பல  நூல்கள் எழுதலாம்.   அவுஸ்திரேலியாவைப்பற்றியும்  ஒரு  நூல்  எழுதுவதற்கு    ஆசை.    இங்குள்ள  எழுத்தாளர்  அமைப்புகளுடன் தொடர்புகொண்டு    என்    நோக்கிலே   அவுஸ்திரேலியாவை சுயம்புவாக    தரிசிக்க    முடியுமல்லவா...?    இவை    குறித்து உங்களாலே   ஏதாவது  பயனுள்ள  குறிப்புகள்  தரமுடியுமாயின்   மிக்க    உதவியாக   இருக்கும்.
இதனை   நீங்கள்  எஸ்.பொ.வுக்குச்செய்யும்  தனிப்பட்ட  உதவியாக மட்டும்கொள்ளாது  -   தமிழ்  எழுத்துப்பணிக்குச்செய்யும் பங்களிப்பாகவும்   கருதி    உதவ    முன்வருவீர்கள்  என்று நம்புகின்றேன். "
எஸ்.பொ.  உலகில்  எந்தப்பகுதிக்குச்சென்றாலும்  ஏர்ணஸ்ட் சேகுவேரா     சொன்னதுபோல்    ' எனது   காலடித்தடம்   பதியும்  இடம் எல்லாம்  எனக்குச்சொந்தமே ...'  என்ற  உணர்வோடு   வாழ்ந்திருப்பவர்.
அதன்   அர்த்தம்  நில  ஆக்கிரமிப்பு  அல்ல.  '  யாதும்  ஊரே   யாவரும் கேளீர் '   என்ற   உலகத்தத்துவம்தான்.  அவர்  எப்பொழுதும் தன்னைச்சுற்றி   எவரையாவது  வைத்துக்கொண்டிருக்கப்பழகியவர். இந்த   இயல்பை   நாம்  ஜெயகாந்தனிடமும்  காணலாம்.
அவ்வாறு   அவர்  தன்னைச்சுற்றியிருப்பவர்களிடம்   தெரிவிக்கும் இலக்கிய   - அரசியல் -  சமூகம் -  கல்வி  - ஆன்மீகம்  - இஸங்கள் தொடர்பாக    சொல்லும்   கருத்துக்களினால்  அவர்  மீது  சில மதிப்பீடுகளும்   உருவாவது    தவிர்க்க   முடியாதது.

டிசம்பர் 13 ஆம் திகதி அருண். விஜயராணி ( 1954-2015) நினைவு தினம்


" ஒரு  பெண்  குழந்தையைப்  படிப்பித்தலே  ஒரு நாடு  செய்யக்கூடிய   சிறந்த  மூலதனம்"
" நம் மரபு பற்றி  நமக்கே  ஒரு  பெருமை  இருக்க  வேண்டும் "
அருண். விஜயராணி நேர்காணல் - புரிதலும் பகிர்தலும்

( இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழின் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்கு 1999 இல் அருண். விஜயராணி வழங்கிய நேர்காணல். புரிதலும் பகிர்தலும் தொகுப்பில் வெளியானது. 16-03-1954 ஆம் திகதி இலங்கையில் உரும்பராயில் பிறந்த விஜயராணி செல்வத்துரை  இலக்கியவாதியானதன்  பின்னர், அருணகிரி அவர்களை மணந்து  அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதிவந்தவர். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகிய அமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றிய கலை, இலக்கிய சமூக தன்னார்வலர். கடந்த 13-12- 2015 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் மறைந்தார்.
எதிர்வரும்  டிசம்பர் 13 ஆம் திகதி அருண். விஜயராணியின்  மூன்றாவது  நினைவு தினம்.   அவரை நினைவு கூர்ந்து  மீண்டும்  இந்த நேர்காணலும் பதிவாகிறது. )

கேள்வி:   இலங்கையிலும்  இங்கிலாந்திலும்  வாழ்ந்து  தற்போது அவுஸ்திரேலியாவில்  குடியேறியிருக்கிறீர்கள்.  இம்மூன்று நாடுகளிலும்  தங்கள் வாழ்வு அனுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில்  எவ்வாறு அமைந்துள்ளன ?

இரண்டு பேராசிரியர்கள் இணைந்து எழுதிய "பாரதி மறைவு முதல் மகா கவி வரை" மகாகவி பாரதிக்கு 136 வயது - முருகபூபதி


( விரைவில் வெளிவரவிருக்கும் முருகபூபதியின் இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலின் இறுதி அங்கத்தில்  இடம்பெறும் ஆக்கம்)
தமிழ்நாடு  திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பிறந்திருக்கும் சுப்பிரமணியன் சுப்பையாவாகி,  தனது 11 வயதில் பாரதியாகி, 1921 செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி சென்னையில் திருவல்லிக்கேணியில் மறைந்தார்.
அவருக்கு நாளை டிசம்பர் 11 ஆம் திகதி 136 வயது!
பாரதியை இன்றும் சிலர் கவிஞராக மாத்திரமே பாரக்கின்றபோதிலும் அவர் ஒரு மகாகவி என்பதை நிரூபிப்பதற்காக  பலர் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர்.
யார் கவிஞன் என்று பாரதியே ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லியுள்ளார்:

"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், எவனொருவன் 

வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி "

அத்துடன்,  " நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் "  எனவும் சொன்னவர் அவர்.

பாரதி தன்னை கவிஞனாகவே பிரகடனம் செய்துகொண்டிருந்தாலும், அவர் மகாகவியா..? அதற்கான தகுதி அவருக்குண்டா என்னும் வாதங்கள் நீண்ட காலம் தொடர்ந்தன. அத்துடன் அதற்கு எதிர்வினைகளும் பெருகின.
பாரதி மகாகவிதான் என்பதை வலியுறுத்தும் வகையில் இலங்கைப்பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ( 1932-2011) அவர்களும் தமிழகப்பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களும் இணைந்து  நீண்ட நாட்கள் ஆய்வுமேற்கொண்டு எழுதிய  நூல்தான் பாரதி மறைவு முதல் மகா கவி வரை.

வட இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் 1932 இல் பிறந்திருக்கும் இவர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கொழும்பு சாகிறா கல்லூரி ஆகியனவற்றின் பழைய மாணவர். தொடக்கத்தில் சாகிறாவில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கும் சிவத்தம்பி அவர்கள், இலங்கை நாடாளுமன்றில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.  சிறந்த இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். அத்துடன் சமூகச்சிந்தனையாளர். 

பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று இளமாணி, முதுமாணி பட்டங்களையும் பெற்று லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதியானவர்.

இலங்கைச் செய்திகள்


ஐ.நா. பிரதிநிதிகள் மனித உரிமைகள் குறித்து ஆராய முல்லைத்தீவு விஜயம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வாக்குறுதிகளை மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் - பிரித்தானியா

முப்படைகளின் பிரதானிக்கு பிணை

ரவிகரனை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

இனியொரு யுத்தம் வேண்டாம் கிளிநொச்சியில் போராட்டம்

1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு ; மன்னாரில் அதிர்ச்சி

இலங்கைக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்- நாய்சண்டையில் யாருக்கும் ஆதரவில்லை

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி 

வவுணதீவு பொலிஸார் கொலை சம்பவம் : மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

அதிகாரத்தை தக்கவைக்க மைத்திரி - மஹிந்த சூழ்ச்சி : 19 ஆவது திருத்தம் மீது குறை

வெள்ளத்தில் மூழ்கிய தொண்டைமானாறு

தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

வவுணதீவு சம்பவத்தை கண்டித்து சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்!!


ஐ.நா. பிரதிநிதிகள் மனித உரிமைகள் குறித்து ஆராய முல்லைத்தீவு விஜயம்

05/12/2018 இலங்கைக்கான விசேட பயணம் மேற்கொண்டுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு சிவில் சமூக அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

உலகச் செய்திகள்


ட்ரம்பை சினமூட்டிய, புட்டின் - சல்மான் சந்திப்பு

இம்ரான்கானுக்கு ட்ரம்ப் கடிதம்

புஷ்ஷுக்கு அஞ்சலி செலுத்திய ட்ரம்ப்

இந்து சமுத்திரத்தில் சீனாவின் நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அதிகரிப்பு- இந்திய கடற்படை தளபதி

பத்திரிகையாளர் கொலையில் சவுதி இளவரசரிற்கு தொடர்பு- அமெரிக்க செனெட்டர்கள்

ஹரியை கொலை செய்யவேண்டும்- பிரிட்டனின் மர்ம அமைப்பு

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க நாமும் அணுவாயுத தயாரிப்பை முன்னெடுப்போம்

 கனடாவில் கைதுசெய்யப்பட்ட சீனாவின் அதிகாரி

 ‘த அயர்ன் லேடி’ 

2018 இன் உலக அழகியானார் மெக்ஸிகோவின் வனிசா 



ட்ரம்பை சினமூட்டிய, புட்டின் - சல்மான் சந்திப்பு


03/12/2018 ஜி-20 உச்சிமாநாடு கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ஜன்டீனாவில் புயனொஸ் அயர்ஸ் நகரில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது. 
மேற்படி 13 ஆவது ஜி-20 உச்சி மாநாட்டில் உலகளாவிய ரீதியிலுள்ள 19 செல்வந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இருவருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவிருந்தது. எனினும் அந்த சந்திப்பானது ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் இம் மாநாட்டின்போது புட்டின் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் கைகுளுக்கி அளவலாவி வெறுப்பேற்றியுள்ளார்.

தமிழ் சினிமா - வண்டி திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விதார்த். இவர் நடிப்பில் குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை ஆகிய தரமான படங்களை தொடர்ந்து ராஜேஸ் இயக்கத்தில் வண்டி என்ற படமும் வந்துள்ளது, இந்த படமும் அந்த லிஸ்டில் இணைந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே டுட்டூ என்ற பைக் காவல் நிலையத்தில் நிற்கின்றது. அந்த பைக் ஏன் காவல் நிலையத்திற்கு வந்தது என்று கதை விரிகின்றது.
அந்த கதை மூன்றாக நான் லீனியராக வருகிறது, இதில் ஒவ்வொரு கதையும் எப்படி ஒரு இடத்தில் சந்தித்து படத்தின் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது என்பதே வண்டி படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விதார்த் எப்போதும் கதை தேர்வில் கோட்டை விட மாட்டார், அதை இந்த முறையும் சூப்பராக செய்துள்ளார், விதார்த் வேலையை விட்டு சுற்றும் இளைஞராக நடித்துள்ளார், அவரை போலவே கூட வரும் நண்பர்களும் அப்படியே உள்ளனர்.
ஜான் விஜய் காமெடியில் கலக்கி எடுத்துள்ளார், அதேபோல் வண்டியை திருட இரண்டு இளைஞர்கள் வருகின்றனர், அதில் ஒரு இளைஞரின் நடிப்பு சூப்பர், நல்ல எதிர்காலம் தமிழ் சினிமாவில் அவருக்கு உள்ளது.
படத்தின் முதல் பாதியில் வரும் கதை மிகவும் சுவாரஸ்யமாக நகர்கின்றது, அடுத்து என்ன, அடுத்து என்ன என்று சென்றாலும், இரண்டாம் பாதியில் மூன்றாவது கதை தொடங்கியது கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பிக்கின்றது.
முதல் டுவிஸ்டிலேயே படத்தின் கதை தெரிந்துவிட, அதன் பின் சுவாரஸ்யம் கொஞ்சம் குறையத்தொடங்குகிறது, படத்தின் பின்னணி இசை கலக்கல், ஒளிப்பதிவும் நான் லீனியர் கதையை நமக்கு புரியும் படி தெளிவாக கலர் டோன் மாற்றி காட்டியுள்ளனர்.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை அனைத்தும் மக்களுக்கு புரியும் படி காட்டிய விதம்.
படத்தின் கிளைமேக்ஸ் 3 கதையும் ஒரு இடத்தில் சந்திக்கும் விதம் சூப்பர்.

பல்ப்ஸ்

மூன்றாவது கதை வரும் போது ஆடியன்ஸிடமே கொஞ்சம் சுவாரஸ்யம் குறைகிறது. மிகவும் டபுள் மீனிங் வசனம், அதை தவிர்த்து இருக்கலாம்.
மொத்தத்தில் இந்த வண்டி ரேஸ் பைக் போல் செல்லவில்லை என்றாலும், ஒரு முறை உட்கார்ந்து ரைடு வரலாம்.
நன்றி CineUlagam