.
நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேர்ன்
மெல்பேர்ன் ரொக்பாங் குன்றத்துக்
குமரன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் கடந்த வருடம் நடைபெற்றது. இந்த வருடம் முதலாவது
ஆண்டு நிறைவாக மகோற்சவத் திருவிழா நடந்தேறியது. மகோற்சவத்திருவிழா கடந்த மாதம்
16.02.2013 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. விஷேச தினங்களாக திருவிழாக்களாக
சப்பறத்திருவிழா இரதோற்சவம் தீர்த்தோற்சவம் பூற்காவளம் திருக்கல்யாணம் என்பனவாகும்.
இந்த ஆலயத்தின் வளர்ச்சி அடியார்களின்
அளவிடற்கரிய ஆதரவுடன் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருத்தலத்தின் சிறப்புக்கள்
பலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆலயத்திற்குரிய வளவு நுழைவாயிலில் வழிப்பிள்ளையார்
ஆலயம் இருக்கின்றது. அதனுடைய விஷேசம் என்னவென்றால் அமர்ந்திருப்பவர் இரண்டு கைகளை மட்டுமே
கொண்டிருக்கும் கற்பகவிநாயகர். இந்தியாவிலே இருந்து விஷேசமாக வரவழைக்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தினுள் வீற்றிருக்கும் நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் தங்களது தேவிமாருடன் அமர்ந்திருக்கின்றனர்.
சிவபெருமானுடைய இடபவாகனம் எருது பசு மாடு ஆறுமுகப்பெருமானின் மயில் வாகனமான மயில்
ஆகியன வளர்க்கப்படுகின்றன. ஆலயத்தின் அருகில் 350 தொடக்கம் 400 பேர் அமர்ந்திருக்கக்கூடிய
கலாச்சார மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது கலாச்சார நிகழ்வுகள் பல நடைபெறவிருக்கின்றன.
அருகில் கொரரொயிட் என்ற சிற்றாறு (மழசழசழவை உசநநம) ஓடுகின்றது. காலப்போக்கில் தீர்த்தோற்சவம்
அங்கு நடைபெறக்கூடிய வசதிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்.