என்னோடு நீ இருந்தால் - சௌந்தரி கணேசன்

.

சில நாட்கள் கடினமாகும்
சில நேரம் கண்ணீர் வரும்
உன் நேசம் மட்டும் போதும் 
சிறகடித்துப் பறக்கும் மனசு
ஒரு கோணம் மறைத்தாலும்
பரலோகம் அனுப்பியதால்
நீ ஓர் சிறப்பு வழி
என் வழியில் நீ வேண்டும்
என் வானமெங்கும்
உன் நட்சத்திரத் தாராளம்
அத்தனையும் உள்வாங்கி
அழகழகாய் மின்னுகின்றேன்
என் இதயமெங்கும்
உன் ஒய்யார ஒப்பனைகள்
உல்லாசம் தாலாட்ட
உவகையில் மிதக்கின்றேன்
எதையென்று சொல்வது நான்
என் வார்த்தைகள் வெளிப்படுத்த
என் எண்ணங்கள் தெளிவுபடுத்த
என் உணர்வுகள் எளிதல்ல
மனிதபக்தி கொண்டவள் நான்
கலக்கமற்ற கற்பனைவாதி
நம்பமுடியா மகிழ்ச்சியுடன்
நன்றிக்கடன் வளர்க்கின்றேன்

15 வது வருடத்தில் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

.


அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த 14 வருடங்களாக தமிழ் மக்களுக்காக சேவை ஆற்றிவரும் ஒரு சமூக வானொலி. சிட்னி மெல்பேர்ன் ஆகிய நகரங்களில் இருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது . இன்று 14 வது பிறந்த நாளை ATBC வானொலிக் கலைஞர்களோடு கொண்டாடியது . வானொலியில் பங்காற்றும் சேவையாளர்களில் சிலரும் நிர்வாகத்னினரும்  ஒன்று கூடிய நிகழ்வில் எடுக்கப்பட்ட ஒரு சில படங்களை இங்கே காணலாம் .

கனடாவில் முடிவுறாத முகாரி

.

செ.பாஸ்கரனின் முடிவுறாத முகாரி கவிதைத் தொகுதி ஞாயிற்றுக்கிழமை 15 05 2016 அன்று கனடாவில் வெளியிட்டு  அறிமுகம் செய்யப்படுகின்றது. .. 

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

இலங்கை கலை உலகில் மூன்று தலைமுறைகள்
வாழையடி  வாழையாக  தொடரும்  பரம்பரையில்  ஒரு சமூகப்பணியாளன்  இரகுபதி  பாலஸ்ரீதரன்
தமிழ்  இளைஞர்  பேரவையின்  முக்கியமான  தூண்களில் ஒருவர்
      

                                                                                     
தொலைக்காட்சியின்  வருகைக்கு  முன்னர்  இலங்கை  வானொலிஉள்நாட்டிலும்  தமிழகத்திலும்  மிகுந்த  செல்வாக்குப்பெற்று  விளங்கியது.
நடிகர் கே.. தங்கவேலு  கூட  ஒரு  பழைய  திரைப்படத்தில்  இலங்கை வானொலி  பற்றி   விதந்து  வசனம்  பேசுவார்.   அவ்வாறு  புகழ்பெற்ற இலங்கை  வானொலிக்கலைஞர்கள்  1962  ஆம்  ஆண்டு  எங்கள்   நீர்கொழும்பூருக்கும்  வந்தனர்.
அச்சமயம்  எங்கள்  விஜயரத்தினம்  வித்தியாலயத்தின் அதிபராகவிருந்த  வித்துவான்  .சி.சோதிநாதன்இலங்கை  வானொலி   கலையகத்தின்  நாடக  நிகழ்ச்சிகளில் நடித்துக்கொண்டிருந்தார்.   அவ்வேளையில்  அவர்  எங்கள் பாடசாலைக்கு   அழைத்துவந்த  வானொலிக்கலைஞர்கள்   குழுவின் தலைவராக  விளங்கியவர்   சானா.  சண்முகநாதன்.
இவருடன்    சக்கடத்தார்  ராஜரட்ணம்,  சிசு. நாகேந்திரன் உட்பட சிலர் இடம்பெற்றனர்.

MAY 18

.

நினைவரங்கும் இலக்கிய உரையும் நிகழ்ந்தவை

.
அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய கலைச் சங்கம் 14 05 2016 சனிக்கிழமை  மாலை 3 மணிக்கு மெல்பேனில் நடாத்திய நினைவரங்கும்  இலக்கிய உரையும் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களை காணலாம் .


சிட்னியில் சித்திரைத் திருவிழா --- அன்பு ஜெயா

.

சித்திரைத் தாய்க்குமோர் சிறப்பான வரவேற்பைச்
சிந்தையில் நல்க வேண்டும்,
சித்திரைத் தாயும்தன் சிறார்க்கு நல்வாழ்வைச்
சீருடன ளிக்க வேண்டும்,
இத்தரை மீதினில் இதமான வாழ்விலே
இளையோரும் திளைக்க வேண்டும்,
இதமான வாழ்விற் கிணையான சக்தியை
என்னம்மை ஊட்டவேண்டும்.
சென்ற ஞாயிற்றுக் கிழமை 8ஆம் தேதி, சிட்னியின் பிரம்மாண்டமான ரோஸ் ஹில் தோட்ட அரங்கில்,  தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சித்திரைத் திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள் 

முள்ளி வாய்க்கால் 7ம் ஆண் டு நினைவு நாள் 18/05/2016 சிட்னி



ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபாடும் விதம் 12 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் .

.
எல்லாளன் காமினி தொடர்


நாடகம் மக்களின் ரசனைக்காகவே படைக்கப் படல் வேண்டும் என்ற சிந்தனையில் இன்று நாடகங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. பார்த்து இரசித்து மகில்தாலே நாடகம். இது ஒரு பொழுது போக்கு. இதற்கு மாறாக நாடகமானது சமூகத்திற்கு நல்ல பல கருத்துக்களை நாசுக்காக பார்வையாளர் மனதிலே பதிய வைக்க வேண்டும் என்று எண்ணாதவரும் இல்லை. இவ்வாறாகnaam தற்காலத்திலே சிந்தித்து விடை காண முயல்கிறோம். ஆனால் கிபி 2 ஆம் நூற்றாண்டு என கருதப்படும் "நாட்டிய யாய்திரம்" என்ற நூல் இதற்கான தீர்வை என்றோ கூறிவிட்டது.

நாட்டிய யாத்திரம் கூறுவது நாடகம் என்பது "அறிவூட்டும் விளையாட்டு கருவி" என என்றோ வரையறுத்து கூறிவிட்டது. அறிவூட்டும் விளையாட்டுக் கருவி என கூறினரே அன்றி விளையாட்டான அறிவு என கூற வரவில்லை. பார்வையாளருக்கு நாடகமானது, முதலில் களிப்பூட்டும் கலையம்சம் நிரம்பிய ஒரு விளையாட்டாகவே இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்கும் போதே அந்த விளையாட்டினைப் பார்க்க மக்கள் வருவார்கள்

உலகச் செய்திகள்


கனடாவில் ஏற்­பட்­டுள்ள காட்­டுத்­தீயை கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் எடுக்­க­லாம்

ஐ.எஸ். தீவிரவாதிகளால் தன்னினசேர்க்கையாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதல் : 90 பேர் பலி

விஜய் மல்லையாவுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் .!

ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு

மொரி­ஷியஸ், தென் ஆபி­ரிக்­காவில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இரு சிதை­வுகள் எம்.எச்.370 விமா­னத்­திற்­கு­ரி­யவை

வைகாசி விசாகம் 21 05 2016

.

பொ. கருணாகரமூர்த்தி | அ. முத்துலிங்கம்: இரண்டு நிகழ்வுகள், சில விமர்சனங்கள்

.
கனடாவில் பிடித்த காலம் எது என்ன என்று கேட்டால் கோடைகாலம் என்று உடனடியாகவே சொல்லிவிடுவேன். கோடை காலம் தொடங்கிவிட்டாலே பல் கலாசார நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டத் தொடங்கிவிடும். இந்த முறையும், வழமையைவிட சற்று அதிகமாகவே இலக்கிய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. மே மாதம் 16ம் திகதி முதல் இன்றுவரை 5 ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக அறிமுகங்கள் நடைபெற்று இருக்கின்றன

பொ. கருணாகரமூர்த்தி
80களின் தொடக்கத்திலேயே போரினால் இடம்பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளார் கருணாகரமூர்த்தி அண்மையில் வெளியிட்ட பெர்லின் இரவுகள் என்ற புத்தகம் மூலம் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டவர். இவர் எழுதிய அகதி உருவாகும் நேரம், அவர்களுக்கென்று ஒரு குடில், பெர்லின் இரவுகள், கூடு கலைதல், போன்ற நூல்கள் பற்றிய விமர்சனமாக ஸ்கார்பரோவில் நடைபெற்ற நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றது. தேவகாந்தன், குரு அரவிந்தன், நவம், என். கே. மகாலிங்கம், இளங்கோ ஆகியோர் நூல்கள் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க பொ. கருணாகரமூர்த்தி ஏற்புரையாற்றினார். பொ. கனகசபாபதி நேர்த்தியான முறையில் நிகழ்ச்சி தொகுப்பை வழங்கினார்.

வானொலி நாடகங்களின் பின்னணி உழைப்பின் சுவாரசியங்கள் - முருகபூபதி

.

புகலிடத்தில்  தமிழ் வானொலிகளை  செவிமடுக்கும் மூத்ததலைமுறையும்
தாயகத்தில்  தமிழ் வானொலிகளின்  அபிமான நேயர்களாகியிருக்கும்   இளம்தலைமுறையும்
                                              
( அவுஸ்திரேலியா  மெல்பனில்  அண்மையில்  கொழும்பு இந்துக்கல்லூரி  பழையமாணவர்  சங்கம்  ஏற்பாடு செய்திருந்த இளம்படைப்பாளி  இரகுபதிபாலஸ்ரீதரன்  திருச்செந்தூரனின் 'திரைவிலகும்போது ' நாடக  நூல்  அறிமுகவிழாவில் நிகழ்த்தப்பட்ட    தலைமையுரை)


இலங்கை   வானொலியின்  தமிழ்த்தேசியசேவையும் வர்த்தகசேவையும்  முன்னர்  கடல் கடந்தும்  இந்தியாவில்  புகழும் செல்வாக்கும்  பெற்றிருந்தது.  அதற்குக்காரணம்  அவற்றில் ஒலிபரப்பாகிய  நிகழ்ச்சிகளின்  தரமும்  உள்ளடக்கமும்தான்.
தேசிய  சேவையில்  இடம்பெற்ற  பல  தரமான  நிகழ்ச்சிகள்  தேர்ந்த நேயர்களுக்கும்  வர்த்தகசேவையில்  பல  நிகழ்ச்சிகள் ஜனரஞ்சகமாகவும்  இளம்தலைமுறையினரை  கவரும்  வண்ணமும் இருந்தமைதான்   அடிப்படைக்காரணம்.
எம்மில்  பலர்  அவுஸ்திரேலியா  உட்பட  பல புகலிடநாடுகளுக்குச்சென்றபின்னர் , இலங்கையில்  மேலும்  சில தனியார்  நிறுவனங்களின்  வானொலிகள்  ஆரம்பமாகிவிட்டன. ஏறக்குறைய  கால்நூற்றூண்டுக்கு  முன்னர்  சக்தி  வானொலியும் அதன்பின்னர்   சூரியன் FM  வானொலியும் இலங்கை வானொலியைக்கடந்து   மக்களிடம்  செல்வாக்குச்செலுத்தின.


இயற்கை மீதான ஆர்வம் இன்னும் தீரவில்லை எனக்கு! - டேவிட் அட்டன்பரோ பேட்டி ---- (c) நியூயார்க் டைம்ஸ்,

.

இயற்கை உலகை ஆவணமாக்கிய கலைஞர் டேவிட் அட்டன்பரோ கடந்த ஞாயிறு அன்று 90 வயதைத் தொட்டிருக்கிறார். இவர் ‘காந்தி’ என்ற புகழ்பெற்ற படத்தை எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் தம்பி. ‘லைஃப் ஆன் எர்த்’இ ‘த லைஃப் ஆஃப் பேர்ட்ஸ்’ போன்ற புகழ்பெற்ற ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார்.

புகழ்பெற்ற ‘பிளானட் எர்த்’ தொடரின் இரண்டாம் பாகத்துக்கும் அவரே குரல் கொடுக்கப்போகிறார் என்று பி.பி.சி. சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தயாரிப்பாளர்இ எழுத்தாளர்இ நிகழ்ச்சி வழங்குபவர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து அவர் வழங்கிய ஆவணப்படங்களும் தொடர்களும் 100-ஐத் தாண்டும். அவரது புத்தகங்களின் எண்ணிக்கையும் 25-ஐத் தாண்டும். எனினும் அவரது ஆர்வமும் உத்வேகமும் சற்றும் குறைந்தபாடில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியிலிருந்து:

அவர் இரங்க வேண்டுவமே ! [ எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா ]

.


               கடவுள் ஒருநாள் தமிழரைப் பார்க்கத்
                      தமிழ்நாடு வந்தாராம்
                 தமிழர் வெறியாய் ஓடித்திரிவதைத் 
                      தெரிவினில் கண்டாராம்
                 காரணம் புரியா நிலையில் கடவுள்
                      கைகட்டி நின்றாராம் !

                 தோரணம் கட்டித் தமிழர்கள் எல்லாம்
                         துடிப்புடன் நின்றாரும்
                 ஆரது ஆட்சியைப் பிடிக்கிற  தென்று
                         அடிபட்டுக் கொண்டாராம்
                 வாயிலே வந்ததை வார்த்தைகள் கொட்டி
                           வாக்குகள் கேட்டனராம் !

                 

இலங்கைச் செய்திகள்


மஹிந்த விரைவில் கைதாவார் : வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் : அரசாங்கம்

மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு உகண்டாவை சென்றடைந்தார்

லண்டனுக்கு பயணமானார் ஜனாதிபதி

பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு

யாழில் மினி சூறாவளி   

பனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் ; அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கை

கட்டாருக்கு சென்ற மகனை காணவில்லை   : தாய் முறைப்பாடு

சித்திரவதைகளுக்குள்ளான 110 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் : இருவர் ஊனமாகிய பரிதாபம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அரசாங்கத்தின் கோரிக்கை  

வெள்ளவத்தை தொடர் ரயில்  விபத்து : தடுக்க விஷேட திட்டம்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்.!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்

யாழ்.மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

இந்தியாவை சென்றடைந்தார் ஜனாதிபதி

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி, மோடியுடன் பேச்சுவார்த்தை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  புதனன்று வடமாகாண சபையின் ஏற்பாட்டில்

துண்டு -தேனம்மை லெக்ஷ்மணன்.

.

மேட்டிமையாய்த் தோளிலும்பணிவாய் இடுப்பிலும்
கரைகளை மாற்றி
கட்சி சார்பாய் ஆக்கி
வியர்வை வாசமும்
வெத்திலைக் காவியும் சுமந்து
குழந்தையின் மூக்கு சிந்தியும்
இயலாமையின் கண்ணீரும் கலந்து
வானம் பொய்க்கையில் தலையிலும்
வருத்தும் மனைவி விசும்பலிலும் பழுப்பேறி
அவ்வப்போது தலையணையும்
யதார்த்தம் மூடிமறைக்கும் போர்வையுமாய்.
வெய்யில் உறைத்தாலோ
திருவிழா வந்தாலோ தலைப்பாக்கட்டாய் மாறும்
கௌரவப் போர்வைத் துண்டு.

தேனம்மை லெக்ஷ்மணன்.
காரைக்குடி

தமிழ் சினிமா 24 விமர்சனம்


24 விமர்சனம்



காலத்தை கடந்து செல்லும் ஐன்ஸ்டினின் Time Machine கதைக்களத்தை கொண்டு ஹாலிவுட்டில் பல படங்கள் வந்துள்ளது. அந்தவரிசையில் தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.

கதைக்களம்

1990 இல் இரட்டை சகோதர்களான தம்பி சூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான Project24 வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு சொந்தமாக்க முயற்சி செய்ய தனது தம்பி சூர்யாவையும், அவருடய மனைவி நித்யா மேனனயும் கொலை செய்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பி சூர்யாவின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project24 யும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா.
பின்னர் 26 வருடம் கழித்து நிகழ்காலத்தில் அவர் அடைய நினைத்த project24ஐ அடைந்தாரா? மகன் சூர்யா பெரியப்பாவை பழி வாங்கினாரா? என்பதை பல சுவராஷ்யங்களுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.

படத்தை பற்றிய அலசல்

சூர்யா சூர்யா சூர்யா...ஒருவர் இருந்தாலே மிரட்டுவார், இதில் 3 சூர்யா ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கதைக்கு தேவையானதை அழகாக செய்திருக்கிறார்.. அதிலும் ஆத்ரேயா அடுத்த வருட பெஸ்ட் வில்லன் விருது எடுத்து வைக்க வேண்டியது தான். ஆரம்பத்தில் அதிரடியாக களம் இறங்கி பின் கோமாவிற்கு சென்று வீல் சேரில் உட்கார்ந்தாலும் மிரட்டல் தான்.
சூர்யாவே முழுப்படத்தையும் ஆக்ரமிக்கிறார், சமந்தா, நித்யா மேனன் எல்லாம் பெரிதான கதாபாத்திரம் இல்லை. காதல் காட்சிகளில் டைம் மிஷின் பயன்படுத்தியது அழகாக இருக்கிறது.
படத்தின் காட்சியமைப்புக்கள் தான் தனி அப்லாஸ் கொடுக்க வேண்டும், முதன் முறையாக ஒரு ஒளிப்பதிவிற்காக ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். திரு சூப்பர் சார். ஹாலிவுட் தரம். அதிலும் அந்த மிஷினில் சாவி போட்டு திறக்கும் போது அத்தனை நுணுக்கம்...கண்டிப்பாக ஆர்ட் டைரக்ட்ரையும் பாராட்டியே ஆகவேண்டும். படத்தின் முதல் 20 நிமிடம் பிரம்மிக்க வைக்கின்றது.
ஏதோ ஸ்டீபன் ஸ்பில்பர்க் படம் பார்ப்பது போல் இருந்தது. அடுத்தடுத்து அதே அதிரடியை கையாண்டு இருக்கலாம், கொஞ்சம் ஜனரஞ்சக ரசிகர்களுக்காக காதல் காட்சிகள் சேர்த்திருப்பது படத்திற்கு எந்த விதத்தில் பலம் என்று தெரியவில்லை. டைம் மிஷின் மட்டுமின்றிப்ரீஸ்(freeze) என்ற கான்செப்ட்டும் வருகிறது. அதில் தோனியுடன் செல்பி எடுக்கும் காட்சி எல்லாம் அட்ராசிட்டி. கற்பனைக்கு அப்பாற்பட்டு ரசிக்க வைக்கின்றது.
டைம் மிஷின் என்றால் பல வருடங்கள் பயணம் செய்வதை மட்டும் பார்த்து வந்த நமக்கு 10 நிமிடத்திலிருந்து 1 நாள் வரை முன்னோக்கி பின்னோக்கி செல்லும்படி திரைக்கதையில் மிரட்டியிருக்கிறார் விக்ரம் குமார். குறிப்பாகக் கிளைமேக்ஸில் காலம் கடந்து செல்லும் காட்சி. என்ன டைம் மிஷினில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம், காதலை தவிர்த்து...!.
அதிலும் கிளைமேக்ஸ் அரைமணி நேரம் டைம் மிஷினுக்கே உரிய திரைக்கதையில் விளையாடுகிறார். ஏ.ஆர்.ரகுமான் எப்போதும் போல் பின்னணியில் முன்னணி என்று நிரூபித்துவிட்டார்.

க்ளாப்ஸ்

சூர்யாவின் ஆத்ரேயா கதாபாத்திரம் இன்னும் நிறைய ரசிகர்ளை சூர்யாவிற்கு கொடுக்கும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட்கள் ஆர்வத்தை தூண்டுகிறது.
ஆய்வு கூடம் 1990களுக்கு ஏற்றார் போல் தத்ரூபமாக இருக்கிறது. படத்தின் டெக்கனிக்கல் விஷயம். குறிப்பாக படத்தின் இரண்டாவது ஹீரோ ஒளிப்பதிவாளர் திரு. கிளைமேக்ஸ் அரைமணி நேரம் மற்றும் படத்தின் முதல் பாதி.

பல்ப்ஸ்

காதல் காட்சிகள், குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றது.
அடிக்கடி சூர்யா தன்னை வாட்ச் மெக்கானிக் என்று அடிக்கடி சொல்வது சலிப்பை தட்டுகின்றது
மொத்தத்தில் 24 டைம் மிஷினுக்குள் நம்மை அழைத்து சென்று ஒரு விஷ்வல் ட்ரீட்டை கொடுத்துள்ளது

ரேட்டிங்- 3.25/5  நன்றி cineulagam