மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஞானிகளின் வரலாறு நமக்கென்றும் பெருவியப்பே.பிறப்பும்
வியப்புத்தான். அவர்கள் வாழ்வும் வியப் புத்தான். அவர்களின் செயல்களும் வியப்புத்தான். அவர்களின் ஆற்றலும் வியப்புத்தான். வியப்பினை வரமாக்கி மாநிலத்தில் வந்து சேர்ந்தவர்களாகவே ஞானிகள் விளங்குகிறார்கள். நடந்திருக்குமா என்று ஐயங்கள் எழுந்திடும் வகையில் அவர்களின் வாழ்வையே நாம் உற்று நோக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.அப்படி வியப்புடன் நோக்கும் வண்ணம் ஒருவர் மாநிலத்தில் பிறக்கிறார்.
அல்லும் பகலும் அனைவரதமும் ஆண்டவனையே அகமிருத்தி
வாழ்ந்து வந்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அளவிலா ஆனந்தம் அடைகி றார்கள் பெற்றவர்கள். ஆனால் அவர்களின் அளவிலா ஆனந் தமோ ஒரு மட்டோடு நின்று விடுகிறது.அழகான ஆண்பிள்ளை அ ம்மா, அப்பா என்று மழலை மொழியால் அழைப்பான் என்று ஆவலுடன் பார்த்திருந்த பெற் றாருக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. ஆசையுடன் பிறந்த ஆண்பிள் ளை பேசமுடியாத பிள்ளையாக இருப்பதைக் கண்டதும் பெற்றவர்கள் பேதலித்தே நின் றார்கள். எந்தக் கடவுளுக்கு விரதம் இருந்து இந்தக் குழந்தை யைப் பெற்றார்களோ அந்தக் கடவுளின் சன்னதிக்கே பிள்ளையையும் கொண்டு அழுதபடி ஓடினார்கள். ஆண்டவன் சன்னதியில் குழந்தையைக் கிடத்தி " நீ தந்த குழந்தை பேசாதிருக்கின்றான்.அவனைப் பேச வைத்திடு. இல்லாவிடின் நாங்கள் மடிந்து விடுவோம் " என்று பெரும் வேண்டுதலை விடுத்து பக்கமிருந்த கடலை நோக்கி ஓடினார்கள்.
வைதாரையும் வாழவைப்பவன் முருகன் அல்லவா ! அந்த முருகன் சன்னதியில் மனமுருகிடும் அடி யாரின் வேண்டுதல் வீணாகி விடுமா? குரல் கேட்டதும் குமரன் அருள் சுரந்தான்.பேசாமல் இருந்த பிள்ளை பேசியது. பேசியதே அந்தப் பரம்பொருளான முருகனைப் பற்றியே ஆகும். ஐந்து வயதுவரை பேசாதிருந்த அந்தப்பிள்ளை அரன் மைந் தனை அகமிருத்தி " திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா " என்னும் அற்புதமான பொக்கிஷத்தை திருவாய் மலர்ந்தருளுகிறது. பிள்ளை யின் குரல் காதில் கேட்டதும் அள விட முடியா ஆனந்தத்தத்துக்கும் , ஆச்சரியத்