மரண அறிவித்தல் - திருமதி சரஸ்வதி அம்மாள் புவனேந்திரன்

.


திருமதி சரஸ்வதி அம்மாள் புவனேந்திரன் 16.05.2017 அன்று சிவபதம் அடைந்தார்.

இவர் மலேசியா Seremben ஐ பிறப்பிடமாகவும், யாழ் தொல்புரம், தற்போது சிட்னி ஆஸ்திரேலியா வை வதிவிடமாகவும் கொண்டவர்.

அன்னார் ஊரெழுவை சேர்ந்த காலம் சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மக்களும், காலம் சென்ற ராஜா, தங்கம்மாவின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னார் நிலந்தி, சுபோதினி (இலண்டன்), முரளீதரன், ராகினி, பிரகலாதன், துஷ்யந்தி, ஆகியோரின் அன்புத் தாயாரும், காலம் சென்ற உருத்திரகுமார், கணேஷ்தாசன் (இலண்டன்), தவரூபி, சர்வானந்தா, சடாட்சரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நிரோஷன், சோபிகா, ஷானிதா, ஜானுசா, சகானா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், சாய் ரூபன், சாய் இந்திரராஜ் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் North Ryde, Corner Delhi Road, Plassy Road இல் உள்ள Macquarie Park தகன சாலையில் வியாழக் கிழமை மே 18 ஆம் திகதி காலை 10.30 மணியில் இருந்து பார்வைக்கு வைக்கப்பட்டு, இந்து முறைப்படி கிரிகைகள் செய்யப்பட்டு 2.15pm மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகள்:
முரளீதரன் - 0425 250 366
சர்வானந்தா - 02 9863 4017, 0401 812 448
பிரகலாதன் - 0409 783 725

நினைவுகளில் நீ................ செ.பாஸ்கரன்

.


சென்றுவிடு
செய்திகளாய் காதில் வந்து விழும்
ஒற்றைப் பனை உதிர்த்துவிட்ட
காகோலையைப் போல்
மூப்பு வந்து பாலை மறந்த
கன்றுக்குட்டியைப்போல்
பார்வையில் மட்டுமல்ல
காற்றில் கூட கேட்கமுடியாத
நீண்ட தூரத்திற்கு சென்றுவிடு

செல்வதும் மறைவதும்
வானத்துச் சந்திரனுக்கு மட்டுமல்ல
உனக்கும் உள்ள உரிமைதான்
மனத்தைக் குத்தும் நினைவுகளை
அறுத்தெறி
மண்ணில் புதைந்த காலடிகளைத்
தேடுவதை நிறுத்து
கடல் காற்றில் தெறித்து விழுந்த
கண்ணீரைக் கரையவிடு
நீ நிமிர்ந்து நிற்பாய்
அவன் பின்னால் நடந்தது போதும்
முன்னேறு
காலச் சக்கரங்கள் உனக்காய் நிற்காது
உருட்டித் தள்ளுவது உன்னால் முடியும்
ஏதோ ஒரு மூலையில் வலியிருக்கும்
பாம்பு செட்டை விலக்குவதுபோல
தூக்கிப் போடு
காலத்தின் ஒத்தடத்தில் கரைந்துபோகும்

சென்றுவிடு 

மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் இலங்கைப்படைப்பாளி மடுளுகிரியே விஜேரத்ன

.
இன நல்லிணக்கத்திற்காக  இலங்கையிலும் -வெளிநாடுகளில்    புலம் பெயர்ந்தும்  வாழும்  தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் கடுமையாக உழைக்கவேண்டும்"
" இலங்கையில் தமிழ் - சிங்கள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கph-5ு அங்கிருக்கும் எழுத்தாளர்களும், புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களும் தம்மாலியன்ற பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் வேண்டும். இரண்டு இனங்களினதும் தாய்மொழிகளுக்கு இடையில் கருத்து ரீதியாக  அதிகம்  ஒற்றுமை இருக்கிறது. மொழிகளுக்கிடையில் இருக்கும் தொன்மையான உறவு இனங்களிடத்திலும் நீடித்திருக்கவேண்டும்" என்று கடந்த சனிக்கிழமை மெல்பனில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் உரையாற்றிய  இலங்கையின் பிரபல சிங்கள எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும்  தமிழ் அபிமானியுமான கலாநிதி மடுளுகிரியே விஜேரத்ன உரையாற்றினார்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த மடுளுகிரியே விஜேரத்ன இவ்விழாவில்  தமிழில் சரளமாக உரையாடி சபையினரை வியப்பில் ஆழ்த்தினார்.
இலங்கையில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு  இலக்கிய நூல்களை தமது தாய்மொழியான சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கும், மடுளுகிரியே விஜேரத்ன, பல சிங்கள இலக்கியங்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
" நல்லிணக்கமும் மொழிப்பரிவர்த்தனையும் " என்ற தலைப்பில்  அவர்  உரையாற்றினார்.

அன்னையின் காத்திருப்பு - செ.பாஸ்கரன்

.

கருப்பையில் சுமந்து
கனகமுலை தந்து
காகம் குருவி பறவாது
காத்தெடுத்த கருணை வடிவம்.
அவளுக்காய்
நாம் ஒதுக்கிய சிறு பொழுது
அன்னையர் தினம்.
பத்துமாதம் தொடர்ந்து
வயிற்றில் சுமந்தவளுக்கு
நாம் கொடுப்பது
வருடத்தில் ஒருநாள்.
வார்த்தைகளை கற்றுத்தந்தவள்
நம் வரவுக்காய்
காத்திருக்கும் திருநாள்
முதியோர் இல்லங்களில்
விழித்திருக்கும்
பெரியவர்களின் பெருநாள்
வாசற் கதவைப் பார்த்துப் பார்த்து
ஏமார்ந்து போன அன்னையர்கள்
ஏராளம்
இன்னும் இருக்கிறார்கள்

இலங்கையில் பாரதி --- அங்கம் 19 - முருகபூபதி

.
பாரதியார் எமது இலங்கையை சிங்களத்தீவு என்று வர்ணித்துவிட்டதாக வருந்திய தமிழ்த்தேசியவாதிகள் பற்றி அறிவோம். பாரதிக்கு இலங்கையின் தொன்மையான வரலாறு தெரியாதமையால்தான் அவ்வாறு அவர் எழுதியிருப்பதாக ஒருசாராரும், இலங்கையில் பெரும்பான்மையினராக சிங்கள மக்கள் வாழ்வதனால்தான் அவர் அவ்வாறு எழுதிவிட்டார் என்று மற்றும் ஒரு சாராரும், அவர் எப்படித்தான் எழுதினாலும் இலங்கை சிங்களத்தீவாகிவிடாது, மூவினங்களும் வாழும் தேசம் என்று இன்னும் ஒருசாராரும் பேசிவருகின்றனர்.
ருஷ்யப்புரட்சியை பாரதி வரவேற்றுப் பாடியதனால் அவரை அங்கு பலரும் படித்தனர், அவருடைய படைப்புகளை மொழிபெயர்த்தனர். பிஜித்தீவில் கரும்புத்தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து கூலி அடிமைகளாக அழைத்துச்செல்லப்பட்ட  தமிழர்களின் அவலத்தை பாரதியார், கேட்டிருப்பாய் காற்றே என்ற கவிதையில் கண்ணீருடன் சொல்லியிருப்பார்.


அம்மா

.



'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று 😗
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*

*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்*.

*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.*
*அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.*

*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*
*✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.*

*✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.*

*✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!*

ஆண் உன்னத படைப்பு

.


ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை 
ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு 
ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான், 
"நேரம் நெருங்கிவிட்டது, 
பிரசவ வலி நாளை அல்லது 
நாளை மறுநாள் கூட வரலாம்.. 
ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்.. 

இதை கேட்ட அவள் கணவனுக்கு 
நெஞ்சில் ஆனந்தம் பொங்கி 
இரு கண்களை மறைக்கிறது, 

அன்று இரவே கணவன் தன் மனைவியின் 
வயிற்றில் காதை வைத்துப் பார்க்கிறான், 

"என்ன செய்கிறீர்கள்!" என்று மனைவி 
கேட்க நாளை இன்நேரம் என் மகனோ, 
மகளோ என் கையில்... என்கிறான், 
அதை கேட்க மனைவி எனக்கு 
ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று சொல்ல, 
இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளைதான் 
வேண்டும் என்று கணவன் சொல்ல 
ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர், 
படுக்கையில் தன் கணவன் அருகில் 
நெருங்கி வந்து அவன் கை விரலை 
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாள், 

தூக்கத்தில் இருந்த கணவன் 
விழித்து தன் மனைவியை பார்க்கிறான். 

உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல்;

.
உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல்; கணினிகள் முடக்கத்தால் பெரும் பரபரப்பு
உலகமெங்கும் 99 நாடுகளில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கணினிகள் முடங்கின. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.cyber attack-1
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 99 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கணினிகளில் சட்டவிரோதமாகவும், திருட்டுத்தனமாகவும் புகுந்து தாக்குதல் நடத்துகிற ‘தி ஷேடோ புரோக்கர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற ஹேக்கர்கள்தான் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய ‘டூல்’களை (கருவிகளை) திருடியதாகவும், அவற்றை இணையதளத்தில் ஏலம் மூலம் விற்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
‘பாஸ்வேர்டு’

ஆனால் பின்னர் அந்த கருவிகள் இலவசமாக கிடைத்ததாகவும், அவற்றை பயன்படுத்துவதற்கான ‘பாஸ்வேர்டு’ கடந்த மாதம் 8–ந் தேதி வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநருக்கான திறமை ரத்தத்தில் இருக்க வேண்டும்: கே.விஸ்வநாத் பேட்டி

.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள இயக்குநர் கே. விஸ்வநாத், தெலுங்கு சினிமா துறையின் சாதனையாளர். அவரது படங்கள் பல்வேறு மொழிகளில் ரீமேக், டப்பிங் செய்யப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் தி இந்துவுக்கு (ஆங்கிலம்) அளித்த பேட்டியின் சுருக்கம்
திரையுலகில் உயரிய விருதைப் பெற்றதில் எப்படி உணர்கிறீர்கள்?
திரைத்துறைக்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி. அது தாமதமாக இருந்தாலும். தலைநகரத்துக்கு வந்து இந்த விருதை நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் அளவு நான் சுறுசுறுப்பாக இருப்பதே எனக்கு விலைமதிக்க முடியாத ஒன்று. பல வருடங்களாக நான் செய்த முயற்சிகளுக்குப் பிறகு இப்போது திருப்திகரமாக உணர்கிறேன். என்னைப் பொருத்தவரையில், திரைப்படங்கள் என் ரத்தம் போன்றது, வெறும் தொழில் மட்டுமல்ல.

இலங்கைச் செய்திகள்


மோடிக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து

மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு

 புங்குடுதீவு வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கில் தீடீர் திருப்பம்

வடமாகாண சபையினை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள் !

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன்!

தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மோடி

பிரதமர் மோடி - மனோ தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள்  சந்திப்பு  


மோடிக்கு ஜனாதிபதி விசேட இராப்போசன விருந்து

11/05/2017 சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) விசேட இராப்போசன விருந்து ஒன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


உலகச் செய்திகள்


பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..! 

மக்ரானுக்கு உலக தலைவர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்..!

கெட்ட வார்த்தையில் திட்டிய அயலவரைக் கொன்ற கனேடிய இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

தென்கொரியாவில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவு ஆரம்பம்..!



பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..! 

பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியாக இமானுவல் மக்ரோன் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.

உன்னதமானது - ஊடக சுதந்திரம் தி. சுவாமிநாதன், நாமக்கல்.


ஜனநாயத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுவது பத்திரிக்கைத் துறை. பத்திரிக்கை சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தை வகிக்கிறது. கிட்டத்தட்ட உலகின் கடைசி இடத்தில் வட கொரியா உள்ளது. இந்தியா 140-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா தொழில் நுட்பத்தில் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும்;, ஜனநாயகத்தின் ஆணி வேரான கருத்து சுதந்திரத்தில் நாம் பின்தங்கியே உள்ளோம் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
கொலம்பியா தேசத்தின் பத்திரிக்கையாளர் கிலெர்மோ கானோ கிசாகா என்பவர் 1986ம் ஆண்டு டிசம்பர் 17-ல் அவரது அலுவலகம் முன்பாக வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய பேச்சு வலுப்பெற்றது. இவரது நினைவாக, உலக அமைதிக்காகவும், பேச்சு சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினுடான பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிக்கை எழுத்தாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 25000 டாலர் வெகுமதியான பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், ஆண்டுதோறும் மே 3ம் தேதி உலகப் பத்திரிக்கை சுதந்திர தினமாக(World Press Freedom Day கொண்டாடப்பட்டு வருகிறது. (World Press Freedom Day)

.

Siragu best speaker winston churchill3

பேச்சுக் கலை கொண்டோரின் ஆற்றல் பிறரை எளிதில் அவர்கள் கொள்கை, கோட்பாட்டினை ஏற்க வைத்திடும்.
திருவள்ளுவர் சிறந்த பேச்சிற்கான இலக்கணம் பற்றிக் கூறும் போது,
“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் ”
என்கிறார்.
அதாவது சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
அத்தகைய சொல்வன்மை பெற்றோர் உலக அளவில், தமிழக அளவில் ஏராளமானோர் உண்டு.
வின்ஸ்டன் சர்ச்சில், பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்தவர், சிறந்த பேச்சாளர். அவர் பேச்சுக் கலையின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்.

தமிழ் சினிமா


கடம்பன்


ஆர்யா தொடர்ந்து படங்களில் நடித்துவந்தாலும் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் பெரிதளவில் போகவில்லை. வழக்கம் போல தன் படங்களில் அடுத்ததாக வந்துள்ள இந்த கடம்பன் படத்தை நம்பும் ஆர்யாவுக்கு இது கை கொடுக்குமா என பார்ப்போம்.

கதைக்களம்

ஆர்யா தான் அந்த கடம்ப மலைக்காட்டின் ராஜா என்று சொல்லலாம். காட்டை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் இவர் அதை பாதுக்காப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளார்.
மலைவாசி மக்கள் கூட்டத்தில் ஆர்யாவுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. இதற்கு காரணம் மூதாதையருக்கு பிறகு அவரின் திறமைகள், நுணுக்கங்கள் எல்லாம் இவரிடம் உள்ளதே.
ஆர்யாவின் மீதுள்ள பொறாமையால் எதிரி போல செயல்படுகிறார் ஹீரோயின் கேத்ரின் தெரேசாவின் அண்ணன். கேத்ரின் அவ்வப்போது ஆர்யாவுக்கு காதல் வலை வீசுகிறார்.
செழிப்பாக போகும் கடம்பவனம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் தங்களுக்கு ஏதோ பெரிய துன்பம் வரப்போவதை அவர்களுக்கே உரிய பாணியில் தெரிந்துகொள்கிறார்கள்.
மும்பையிலிருந்து தமிழுக்கு வில்லனாக வந்துள்ள தீப் ராஜ், பெரிய தொழிலதிபர், அவர் காட்டை அழித்து கோடி கோடியாய் சம்பாதிக்க ஆசைபட்டு கடம்பவனத்தை குறிவைக்கிறார்.
வனத்துறை அதிகாரிகள், ட்ரஸ்ட் நடத்தும் ஒய்.ஜி.மகேந்திரன் அவரது மகள் மதுவந்தி ஆகியோர் பணத்திற்காக வில்லனோடு சேர்ந்து மலைவாழ் மக்களை விரட்ட நல்லது செய்வது போல் ஏமாற்றுகிறார்கள்.
காட்டை காப்பாற்ற கோர தாக்குதல்களை சந்திக்கும் இந்த மக்களின் சமூகம் என்ன ஆனது? ஆர்யா என்ன செய்தார், கேத்ரின் காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆர்யா ஓப்பனிங்கில் வீர தீர சாகசங்கள் எல்லாம் செய்கிறார். இந்த படத்திற்காக அவர் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரை இதற்காக பாராட்டலாம்.
கேத்ரின் தெரேசாவை மலைவாழ் பெண்ணாக பார்ப்பது சற்று வித்தியாசமாக உள்ளது. ஆனால் இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒரு சில இடங்களில் தான். தன்னுடைய நடிப்பை புரிந்து நடித்திருக்கிறார்.
அதே போல இவரின் அண்ணனாக வருபவர் தீடீரென ஆர்யாவுடன் சண்டை போடுவதும், பின் அவருடன் ஒன்று சேர்ந்துகொள்வது சற்று யோசிக்க வைக்கிறது.
அறக்கட்டளை மூலம் ஒய்.ஜி., மதுவந்தி ஆகியோர் ஆர்யாவுக்கு உதவி செய்வது போல தாங்கள் காய் நகர்த்துவதும், பின் ஆர்யா அவர்களுக்கு எதிராக மாறுவதும் கொஞ்சம் ட்விஸ்ட்.

கிளாப்ஸ்

ஆர்யா படத்திற்காக உடல் எடை கூட்டியது, ரிஸ்க் எடுப்பது சொல்லப்போனால் டார்சன், ஜங்கிள் புக் போல மாறியிருக்கிறார்.
கதையை நகர்த்திய விதம் ஓகே. சில இடங்களில் CGI கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்திய காட்சி முகம் சுளிக்கவில்லை.
யுவன் இசையில் பாடல்கள் உணர்ச்சிவசம். ஒரு கட்டத்தில் மலை மக்கள் படும் வலிகள் கொஞ்சம் ஃபீல் பண்ண வைக்கிறது.

பல்பஸ்
காட்டை தாயின் கர்ப்பப்பையையும் ஒப்பீட்டு அதை பாதுக்காக்க வேண்டும் நமக்கும் நாளைய தலைமுறைக்கும் அது தான் தீர்வு என டையலாக் கூறியவிதம் ஸ்மூத்.
ஆர்யா கேத்ரின் காதல் என்ன ஆனது, அவர்கள் சேர்ந்தார்களா என சொல்லாமலே சென்றுவிட்டார் இயக்குனர்.
ஒரே ஒரு இடத்தில் கிராஃபிக்ஸ் காட்சியை இன்னும் எஃபோர்ட் போட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
ஆர்யாவுடன் சண்டையிட்டு தன் பக்கம் மக்களை அழைத்து செல்லும் கேத்ரின் அண்ணன் திடீரென வில்லனை பிடிக்க ஆர்யாவுக்கு உதவி செய்யும் ட்விஸ்ட் லாஜிக் இடிப்பது போல தோன்றுகிறது.
மொத்தத்தில் கடம்பன் காட்டின் ராஜா. கச்சிதம். சோசியல் மெசேஜ்..
Direction:
Production:
Music:


நன்றி  Cineulagam