நந்தமிழே நல்லின்பம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா


சின்னசின்ன நடை நடந்து
செம்பவள வாய்மலர்ந்து
செந்தமிழால் அம்மாவென
செப்பிநின்றால் தேனொழுகும்
ஆசையொடு அணைத்தபடி
அப்பாவென நந்தமிழால்
பாசமுடன் அழைத்திட்டால்
பைந்தமிழும் பெருமையுறும்  !

கனியமுதே கற்கண்டே
கண்டெடுத்த நன்முத்தே
கூவுகின்ற கோகிலமே 
குதித்தோடும் மானினமே 
எனத்தமிழில் காதலியை
அழைத்துமே பாருங்கள்
விரும்பாத காதலியும் 
விருப்புடனே அருகணைவாள் !

பரமட்டா பொங்கல் நிகழ்வு - செ .பாஸ்கரன்

.


பரமட் டா  பொங்கல் நிகழ்வு சனிக்கிழமை 18.01.2020 அன்று காலை 9.45 மணிமுதல் 1.00 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு பரமட் டா சதுக்கத்தில் இடம் பெறுவதாக இருந்தது பின்  மழை காரணமாக Pemulwuy Community Center உள்ளரங்க மண்டபத்தில் நடைபெறும் என்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு  அங்கு நடைபெற்றது. 

CMRC அமைப்புடன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அன்பாலயம், தமிழ்முரசுஅவுஸ்திரேலியா, கம்பன்கழகம் , சந்திப்போம் வாழ்த்துவோம், தமிழ் மகளிர் அபிவிருத்திக் குழு (TWDG) ஆகிய தமிழ் அமைப்புக்கள் ஆதரவு வழங்க மங்கள இசையுடன்  இந்நிகழ்வு ஆரம்பிக்கப் பட்டு இடம்பெற்றது.

  

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 3 – தாரை



தாரை காற்றுக்கருவி
அமைப்பு
தாரை சுமார் 12 அடி நீளம் வரை நீண்டு இருக்கும்.  ஊதும்பகுதி சிறுத்தும், இடைப்பகுதி மேல்நோக்கியும்(சில வளைந்தும்), அடிப்பகுதி அகன்றும் காணப்படும் வித்தியாசமான பழந்தமிழ் ஊது கருவி தாரை. ஐந்தாறு பாகங்களைக் கொண்ட தாரை, எளிதாகக் கழற்றி மாட்டும் வசதியோடு உருவாக்கப்படும். தற்காலத் தாரைகள் பித்தளையில் செய்யப்படுகின்றன.
குறிப்பு
மரியாதையின் அடையாளமாகக் கருதப்படும் கிராமிய இசைக்கருவிகளில் தாரை முதன்மையானது. கோயில்களில் சுவாமி புறப்பாட்டின்போதும், தேர்த்திருவிழா காலத்திலும், கொண்டாட்டங்களிலும் இக்கருவி இசைக்கப்படுவதுண்டு. இக்கருவியில் விரல்துளைகள் இல்லை. காற்றைச் செலுத்த முகப்பில் ஒரு சிறிய துளையும், இசை வெளியேற முடிவில் புனல்வடிவ துளையும் மட்டுமே இருக்கும். சிறுதாரை, கோணத்தாரை, நெடுந்தாரை என சிறிய வடிவ வேற்றுமைகளுடன் இக்கருவி பயன்படுத்தப் பட்டது. கோணத்தாரை கொம்புக்கருவி போன்று இருக்கும் ஆனால் வாய் பகுதி கொம்பு போன்று விரிந்து இருக்காது.

ஓஸ்ரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா 2020


வங்கக்கடலில் 16-01-1993 இல் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-வினால் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த வருடமும் ஓஸ்ரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 12_01_2020 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்வூட் றிஸேவ் (East Burwood Reserveமைதானத்தில் காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் கோலாகாலமாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலை 9.00 மணியளவில் தேசியக்கொடியேற்றல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் ஓஸ்ரேலியத் தேசியக்கொடியினை விளையாட்டுவிழா செயற்பாட்டாளர் திரு அருணகிரிநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை மற்றுமொரு நீண்டகால செயற்பாட்டாளர் திரு அன்ரன் வேதநாயகம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்-களின் திருவுருவப்படத்திற்கு தமிழ் தேசியச் செயற்பாட்டாளர் திரு பரணி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில்  ஓட்டப்போட்டிகள், சமநிலை ஓட்டம்,  தவளைப்பாய்ச்சல், தேசிக்காய் கரண்டியில் வைத்து ஓடுதல் அத்தோடு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான சங்கீதக்கதிரை என்பனவும் இடம்பெற்றது.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதை!




ரஞ்சன் ராமநாயக்கவினால் பதிவு செய்யப்பட்ட மொத்த உரையாடல்கள் 1,27,000 - விமல் வீரவன்ச
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவினால் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள், பழைய குப்பையை கிளறி புதிய பிரச்சினைகளை வெளியே கொண்டு வந்துள்ளன.
நீதித்துறை, பொலிஸ் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் பணிபுரியும் முக்கிய பிரமுகர்களின் முறையற்ற ஒழுக்கவிழுமியங்களை மேற்படி பதிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன. ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தில் பணியாற்றிய பலர் இந்தப் பொறியில் சிக்கியுள்ளனர். இதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆவார்.

சமூகங்களை சீண்டுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்






இலங்கையில் காணப்படும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவிடமிருந்தே தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை தமிழினத்துக்கு ஊட்டும் முயற்சிகளில் அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ ஈடுபடக் கூடாது என தமிழ் ஊடகங்களின் பிரதானிகள், ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். தமிழ் மக்களுக்கும் அரசுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்த வேண்டாமெனவும் பிரதமர் கேட்டிருக்கின்றார். மாற்றுச் சிந்தனையின் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழ்ச் சமுகத்தின் மத்தியில் வெறுப்புணர்வை தோற்றுவிப்பதை பிரதமர் கடுமையாகச் சாடியிருக்கின்றார்.
நாட்டின் எதிர்கால வேலைத் திட்டங்கள், அபிவிருத்திச் செயற்பாடுகள், அரசியல் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுப்பதற்கு தமிழ் ஊடகங்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் பெரிதும் எதிர்பார்க்கின்றது. நாட்டை பின்னடைவுக்குள் இட்டுச் செல்வதை எவருமே அனுமதிக்க போவதில்லை. முதலில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வும், நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த இடமளிக்கப்படக் கூடாது. சில ஊடகங்களின் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாகக் காணப்படவில்லை.

கருத்ததனை மனமிருத்திக் களிப்புடனே பொங்கிடுவோம் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா


      " தைபிறந்தால் வழிபிறக்கும் " என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளை களுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியே எண்ணியே பார்ப்பதும் இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலை பொங்கி வருகின்றோம்.நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம்தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி நாங்கள் தெளிவு படுத்துதலும் முக்கிய மானது என்பதை நாங்கள் அனைவரும் மனதில் இருத்துவது மிகவும்  அவசிய மானதே. 
   புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அங்குள்ள சூழலுக்கு ஏற்பவே தங்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள். அவ்வாறு மாறும் வேளை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவில் மாறலாம். உடையில் மாற லாம். உழைப்பில் மாறலாம். ஆனால் உள்ளத்தில் தங்களின் பண்பாடுகலா சாரம் பற்றிய எண்ணங்களை மட்டும் மாற்றாமல் அவர்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியமாகும். பண்பாடுகலாசாரம்இவற்றினை உணர்த்துவதுதான் எங்களின் விழாக்களும்கொண்டாட்டங்களுமாகும். பண்பாட்டினை நிலை நிறுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக அமைவதுதான் " தைப்பொங்கல் " எனலாம். எங்கள் பிள்ளைகளை உணரச் செய்தாலே பொங்கல் விழாவானது பூரிப்பான தாகிவிடும். 

மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 19 - முருகபூபதி


தனிமனித அங்கீகாரமும் அரசியலாகிவிடுகிறது. அந்த அங்கீகாரத்திற்கு கிடைக்கும் ஆதரவு – எதிர்ப்பு  நிலைப்பட்ட முடிவுகளை வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொள்வதற்கும் சாமர்த்தியம் தேவைப்படுகிறது.
அத்தகையதோர் சாமர்த்தியத்தை பெற்றுக்கொள்ளமுடியுமா…?  என்று அபிதா யோசிக்கத் தொடங்கினாள்.
இப்படியெல்லாம் என்னை சிந்திக்கத்தூண்டியது யார்..? ஜீவிகாவின் அறையில் குவிந்து கிடக்கும் பத்திரிகைகள், இதழ்கள், புத்தகங்களை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் பொழுதுபோக்கிற்காக படித்ததனால் வந்த விளைவுகளா..?
நல்லவேளை, கற்பகம் ரீச்சருக்கு, இந்த வீட்டில் தனது பொழுது எவ்வாறெல்லாம் கழிகிறது என்பது தெரியாமலிருக்கிறது. இதுவும் தெரிந்தால், தன்னை இங்கிருந்து கலைத்துவிடுவதற்கு ஏதும் திட்டம் தீட்டிவிடுவாள்.
இனிமேல் இந்த வீட்டிலிருந்துகொண்டு என்ன செய்தாலும் வீட்டின் எஜமானி  ஜீவிகாவிடம் சொல்லிவிடவேண்டியதுதான். அவள்தானே என்னை இங்கே அழைத்தது. அவள்தானே, மாதம் முடிந்ததும் சம்பளம் தருவது,
அப்படியிருக்கும்போது நான் எதற்கு இந்த வாத்திச்சிக்கு பயப்படவேண்டும். மஞ்சுளாவும் சுபாஷினியும் ஆதரவோடு இருக்கிறார்கள்.
ஜீவிகாவுக்கோ, தான் சொல்லும் வேலைகளையும்  செய்து,  வீட்டையும் நன்றாக பராமரித்து சுத்தம் பேணினால்  போதும். இந்த கற்பகம் ரீச்சர்தான் நான் எவ்வளவு பணிவிடை செய்தாலும் எனக்கு வில்லியாக காட்சியளிக்கிறாள்.
அந்த வீட்டில் கற்பகம் ரீச்சர் எவருடனும் ஒட்டுறவில்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்..? அபிதா  அந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதகாலத்துள், அங்கிருக்கும் நால்வரதும் குண இயல்புகளை ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறாள்.
அதுபோன்று தனது அடங்கிப்போகும் இயல்புகளை அவர்களும் தெரிந்துவைத்துள்ளனர். ஆனால்,  அடக்கிவைத்திருப்பதன் மூலம்தான் தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என கற்பகம் ரீச்சர் நினைக்கின்றாவோ..? யார் கண்டது…?
தனக்குத்தரப்பட்ட முதல் மாத சம்பளத்தை நிகும்பலையில் ஒரு வங்கியில் கணக்குத்திறந்து வைப்பிலடவேண்டும். கையில்  கொஞ்சம் பணமும்  வைத்திருக்கவேண்டும்.

மெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி


மெல்பன் கே.சி தமிழ்மன்றத்தின் வருடாந்த பொங்கல் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை மெல்பனில்  Keysborough  GAELIC  மைதானத்தில் காலை முதல் மாலை வரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.  வெளியரங்கில் மூத்த இளம் தலைமுறையினரின் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும்  விளையாட்டுப்போட்டிகளும்  உள்ளரங்கில் சிறார்களுக்கான ஓவியப்போட்டி மற்றும் கைவினை, கோலம் வரைதல் நிகழ்ச்சிகளும்  இடம்பெற்றன.
இம்முறை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கதை சொல்லும் நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மெல்பன் எழுத்தாளர்  விலங்கு மருத்துவர் நடேசனின் சிறுகதையொன்றை திருமதி சுமதி அருண் குமாரசாமி சமர்ப்பித்தார். திரு. முருகபூபதி தமிழ் சினிமாவில் நாவல் - சிறுகதைகளின் தாக்கம் பற்றியும் திரு. மணியன் சங்கரன் தான் எழுதிய சிறுகதையொன்றையும் சமர்ப்பித்தார்.
சங்கத்தின் செயலாளர்  கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் நன்றி நவின்றார். 











லண்டனில் முதற் தடவையாக ‘சாஸ்வதம்’ போட்டி நிகழ்ச்சி - நவஜோதி ஜோகரட்னம் - லண்டன்

.

‘பரதநாட்டியத்தின் உச்சம் இசையின் காட்சி வடிவம். அது ஒரு சடங்கு. பக்தியின் செயற்பாடு. நடனத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருவர் அதே அளவுக்கு இசைக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்த இரண்டு கலை வடிவங்களிலும் முழுப் பயிற்சி பெற வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அத்தகைய கலைவடிவத்தை இன்று ‘சாஸ்வதம்’ என்ற நிகழ்ச்சி மூலம் முதற்தடவையாக முன்னெடுத்த கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும், ஸ்ரீமதி பவித்ரா சிவயோகம் அவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். லண்டனில் பரத நாட்டியத்தைப் பயின்று வரும் மாணவர்கள் தமது அபிநயம் இசை இரண்டையும் மிக அழகாக இணைத்துத் தம் கருத்துக்களை ரசிகர்களுக்கு வெளிப்படுத்திய விதம் அபாரமானது. நடனக்கலையைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் உட்பட, மாணவர்களின் திறமையை விதந்து மகிழ்கின்றோம். அத்தோடு களம் அமைத்துக் கொடுத்த ருனுநயச புரinநௌள னுயnஉந இங்கிலாந்தின் நிர்வாகியாகவும் சர்வதேச நடனப்போட்டிகளின் பரிசோதகராகவும் செயற்படும் கலாநிதி ஜெயந்தி யோகராஜாவும், சென்னை ராஜ், சண் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், கலாச்சார நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்ட பவித்திரா சிவயோகத்தினதும் கடின முயற்சிக்கு தலைசாய்க்கின்றோம். இவர்களின் வித்தியாசமான இச்செயற்பாடு மண்டபம் நிறைந்த மக்களின் இதயங்கனின் மீது பொழிந்த அமுத மழையாக இருந்தன’ என்று பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த முன்னாள் லண்டன் நகர முதல்வரும் தற்போதைய ஹரோ நகர சபை உறுப்பினரமான லண்டன் பாபா- சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் தமது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்திருந்தார்.


இலங்கைச் செய்திகள்


பாரம்பரியம் மாறாத விதத்தில் பொங்கல் கொண்டாடுவோம்!

மாற்றுச் சிந்தனையோடு செயற்படுங்கள் தமிழ் ஊடகங்களிடம் பிரதமர் வேண்டுகோள்

ரஞ்சனுக்கு ஜன. 29 வரை வி.மறியல்; குரலை பகுப்பாய்வு செய்யவும் உத்தரவு

MCC தொடர்பில் மக்கள் கருத்து கவனிக்கப்படும்

ரஞ்சனுடன் உரையாடல்; நீதிபதிகளிடம் வாக்குமூலம் பெற உத்தரவு

கேணல் கிட்டுவின் 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி

இலங்கை பாதுகாப்பு படை உபகரண கொள்வனவுக்கு இந்தியாவிடமிருந்து 50 மில். டொலர்



பாரம்பரியம் மாறாத விதத்தில் பொங்கல் கொண்டாடுவோம்!



மண்பானையில் பொங்கி,  சூரிய பகவானுக்கு நன்றிக் கடன் செலுத்துவதே தமிழர் மரபு
தமிழர்களின் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் தினம் இன்றாகும். தைப்பொங்கலின் பெருமை, சீவக சிந்தாமணியில் பாடலாக இடம்பெற்றுள்ளது.

உலகச் செய்திகள்


விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ஈரானில் கைது நடவடிக்கை

பிலிப்பைன்ஸ் ‘தால்’ எரிமலை அபாய நிலை தொடர்ந்து நீடிப்பு

சீனா மீதான குற்றச்சாட்டை கைவிட அமெரிக்கா முடிவு

பாக், ஆப்கானில் 110 பேர் உயிரிழப்பு

செனட்டில் அடுத்த வாரம் விசாரணைகள் ஆரம்பம்

புட்டின் ஆட்சியில் நீடிப்பதற்காக ரஷ்ய அரசு திடீர் இராஜினாமா

அமெரிக்கா–சீனா இடையிலான வர்த்தக உடன்பாடு கைச்சாத்து



விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ஈரானில் கைது நடவடிக்கை




சிட்னி துர்கா கோவிலில் சிறப்பு வழிபாடுகள்


 










முப்பெரும் விழா 25/01/2020 Dandenong North VIC












வீணை இசைக் கச்சேரி 25/01/2020













சிவபூமி யாழ்ப்பாணம் அரும் பொருட்காட் சியகம் திறப்பு விழா 25/01/2020




சிட்னி துர்க்கா கோவில் - Sarva Mangala Maha Yagam 26/01/2020













தமிழ் சினிமா - பட்டாஸ் திரைவிமர்சனம்

னுஷ் கடைசியாக அசுரன் படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முக்கியமானவராகிவிட்டார். பலரின் கண்களுக்கும் இன்னும் அவர் சிவசாமி தான். அதிலிருந்து மாறி தற்போது பட்டாஸாக பொங்கலுக்கு வந்திருக்கிறார். பட்டாஸ் சத்தமாக வெடித்ததா இல்லை மென்மையாக போய்விட்டதா என பார்க்கலாம்.
கதைக்களம்தனுஷ் பட்டாஸாக ஒரு திருடனாக ஊரில் ஜாலியாக தன் நண்பர் கலக்கப்போவது யாரு சதீஷுடன் சுற்றி வருகிறார். அவ்வப்போது சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அவரை எதிர்வீட்டு பெண்ணாக கண்களை ஈர்க்கிறார் ஹீரோயின் மெஹ்ரீன்.
மறுபக்கம் சினேகா அடிமுறை என்னும் தற்காப்பு கலை பயின்று தன் ஆசானையே கணவனாக பெற்றவர். அவருக்கு வில்லன் நவீன் சந்திராவால் பெரும் அழிவு. தன் மகனை தொலைத்த ஏக்கத்திலும் தன்னை விட்டு பிரிந்த கணவரின் சோகத்தில் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.
இதற்கிடையில் சினேகாவுக்கு ஒரு பெரும் ஆபத்து. அவரை காப்பாற்ற போய் பல உண்மைகள் தனுஷுக்கு தெரியவருகிறது. சினேகாவுக்கு நேர்ந்தது என்ன? அவரின் மகன் கிடைத்தாரா? அழிக்கப்பட்ட தற்காப்பு கலை மீண்டும் உயிர் பெற்றதா என்பதே இந்த பட்டாஸ்.

படத்தை பற்றிய அலசல்

தனுஷின் நடிப்பு திறமையை எடுத்துச்சொல்ல அசுரன் படமே போதும். இன்னும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் சிவசாமி தெரிகிறார் என அவரே கூறியுள்ளார். இந்த படத்தில் சென்னை பாஷையில் பட்டாஸாக அவர் பேசியது இண்ட்ரஸ்டிங். தன் பின்னணி என்ன என தெரிந்தும் தற்காப்பு கலையை வெளிப்படுத்தும் உருமாற்றமும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
ஹீரோயின் மெஹ்ரீன் உயர்ந்த வேலையில் அதிக சம்பளம் கிடைத்தது செய்யும் அலம்பல் இருக்கே. அப்பப்பப்பா.. தனுஷ் ஜோடியாக அவர் லைட் ரொமான்ஸ் காட்டுகிறார்.
புன்னகை இளவரசி சினேகாவை இப்படத்தில் பார்த்தது பலருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அவரின் முகத்தை ஓரு வீரமும், இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கமும் மட்டுமே. ஒரு தாயாக உணர்வுகள் அதிகமாக கொட்டாமல் சகித்துச்செல்லும் சிங்கப்பெண் போல நடந்துகொள்வது பாராட்டத்தக்கது.
காமெடிக்கு முனிஷ்காந்த் இயல்பாக தன் நடிப்பை பதிவு செய்திருக்கிறார். இவருடன் கூட்டணி சேரும் தனுஷ், கலக்கப்போவது யாரு சதீஷ் போடும் கவுண்டர் கலக்கல்.
நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ள வில்லன் நவீன் சந்திரா ஹீரோவுக்கு இணையாக ஒரு துடிப்பை கையாள்கிறார். இனி இவருக்கு தமிழில் படங்கள் வர வாய்ப்புகளும் உண்டு.
தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கியிருந்த துரை செந்தில் குமார் தற்போது பட்டாஸ் படத்தில் மீண்டும் கூடியுள்ளார். கொடி படமே ஓகே. இந்த படம் கொஞ்சம் ஸ்லோ என சொல்லும் படி வைத்துள்ளார். 7 ம் அறிவு போன்ற படங்களை பார்த்து வந்தவர்களுக்கு இந்த படம் ஓகே லெவல் தான்.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஸ்வீட்டான ரகம். அதிலும் சில் ப்ரோ பாடலுக்கு நடன அமைப்பு இதயம் ஈர்ப்பு.

கிளாப்ஸ்

தற்காப்பு கலையை மீண்டும் உயிர் பெற செய்த முயற்சி வரவேற்கத்தக்கது.
ஆசானாகவும், திருடனாகவும் தனுஷின் நடிப்பு தனியான ஒன்று.
பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தும் சினேகாவின் அதிரடி ஸ்டைல்.

பல்பஸ்

முதல் பாதி மிகவும் மெதுவாக சென்றது போல ஃபீல்.
மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு பட்டாஸ் ஒரு நாட்டு ரக தயாரிப்பு.




நன்றி CiniUlagam