வாழ நினைத்தால் வாழலாம் - புவனேஸ்வரி சண் - ஹட்டன்

 .

கிடைத்த வாழ்வில்

நீயும் நானும்
தடைகள்  பலதை
தாண்டியே  வந்து
நிலைகள் தடுமாறி
வழிகள் பலமறந்து
வலிகள் சுமந்திங்கே
வாழ்வைக் கடந்தோமே
ஏற்றத் தாழ்வுகளை
ஏற்றுக் கடந்திங்கே
மாற்று  வழிபலவும்
மனதில் நிறைத்திடவே
காற்று வெளியிடையே
கனவை சுமந்துக்கொண்டு
உடலும் நடையாக
ஓடி களைத்தோமே
அயர்ந்த கண்களுடன்
உயர்ந்த வாழ்விற்காக
திறந்த மனதோடு
சிறந்த நட்பானோம்
கடக்கும் காலங்களை
அடக்கி மனதுக்குள்ளே
வாழ்வே வேண்டுமென
காலம் கடந்தோமே

சுவாமி விபுலாநந்தர் 75 வது நினைவாண்டில் - கானா பிரபா



"






வெள்ளை நிற மல்லிகையோ 
வேறெந்த மாமலரோ 
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல 
வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

இன்று ஈழத்தின் பன்முக ஆளுமை சுவாமி விபுலாநந்த அடிகளாரது 75 வது நினைவு தினமாகும்.

ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். 

அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய செவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன. 

அவர் குறித்து என் விரிவான பகிர்வைப் படிக்க


கானா பிரபா

19.07.2022 


படித்தோம் சொல்கின்றோம் ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் ஆயுதங்கள் உலகெங்கும் உற்பத்திசெய்த அகதிகளின் கதை ! முருகபூபதி

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது “  அஸ்ஸலாமு அலைக்கும் – வஅலைக்கும் அஸ்ஸலாம்  “ எனச் சொல்லிக்கொள்வார்கள்.

பராக் ஒபாமாவும் அமெரிக்க ஜனாதிபதியானதன் பின்னர் கெய்ரோ சென்றவேளையில் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் “  அஸ்லாமு அலைக்கும்  “ என்று தொடங்கித்தான் தனது உரையை ஆரம்பித்தார்.

இதுபற்றிய  ஒரு விரிவான ஆக்கத்தை எனது சொல்லத்தவறிய கதைகள் நூலில் எழுதியிருக்கின்றேன். 

 “ அஸ்ஸலாமு அலைக்கும்  “ -  உங்கள் மீது சாந்தி உண்டாவதாக – என்று ஒருவர் கூறுவாரேயானால், அதற்கு  அழகிய முறையில் பதிலளிக்குமாயும் இஸ்லாம் கூறுகிறது. அந்தப்பதில் :  “வஅலைக்கும் அஸ்ஸலாம்  “ உங்கள் மீதும் சாந்தி உண்டாவதாக என்பதுதான் அர்த்தம்.

ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் பேசும் செய்திகளில் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருப்பதும் இதுதான்.  ஆதிகால மனிதன்  வேட்டையாடி சாப்பிட்டு உயிர் வாழ்வதற்காக ஆயுதங்களை கண்டுபிடித்தான். ஆனால், நவீன கால மனிதன் சகமனிதனின் உயிரைக் குடிப்பதற்காகவும்  அயல் நாடுகளை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காகவும் ஆயுதங்களை கண்டுபிடித்தவண்ணமும் உற்பத்திசெய்தவாறும் வாழ்கின்றான்.

இந்த ஆயுதங்கள் உற்பத்தி செய்தது அகதிகளைத்தான்.  அவ்வாறு உலகெங்கும் அலைந்துலழும் அகதிகளின் கதைதான் ஷோபா சக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்.

வழக்கத்துக்கு மாறான வடிவமைப்பில்  இந்த நாவலை அவர் வெளியிட்டுள்ளார்.   தமிழ்நாடு கருப்பு பிரதிகள் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

இதன் முகப்பு அட்டையின் ஒருபக்கம் நீலம் மற்றப்பக்கம்  சிவப்பு. 

நீலப்பக்கதிலிருந்து வாசிக்கத் தொடங்கினால், பின்வரும் வரிகள் எமக்கு Geneva Convention ஐ நினைவூட்டுகின்றன.

  “ ஒருவருடைய இனக்குழு, மதம், தேசிய இனம், குறிப்பிட்ட ஒரு சமூகக் குழுவின் உறுப்புரிமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாகவோ அல்லது அவர் வெளிப்படுத்திய அரசியல் கருத்துக்களுக்காகவோ தனது நாட்டில் துன்புறுத்தப்படலாம் என்று நிரூபணமாகக் கூடிய அச்சத்தால், அவர் இன்னொரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்தால், அவரை ஓர் அரசியல் அகதியாகக் கருதி, அவருக்கு பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவேண்டும்.  “

தமிழினைத் துறக்காத துறவி !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

 

  

ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து - தமிழைச் சுமந்தபடி தரணியெங்கும் ஒளிவீசி நின்றது.அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று - பண்டிதராய்கல்லூரி ஆசிரியராய்,   அதிபராய்தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம்.மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து - 

 

"ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல  உற்றுப் பெற்ற

பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல "

என்னும் மனப்பாங்கினைப் பெற்று - என்கடன் பணி செய்து கிடப்


பதே என்னும் விசாலித்த நோக்குடன் இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி - விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி  இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். முத்தமிழ் வித்தகராய் முழுப் பேராளுமையாய் விளங்கிய எங்கள் விபுலாநந்தத் துறவியை இப்படியும் பார்க்கலாம் என்பதை மனமிரு த்துவது அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.

  காரைதீவு மண்ணில் பிறந்தவர் யாவர் மனத்திலும் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்   என்றால் - அதற்கு திருப்பு முனையான காலமாய் அமைந்தது முத்தமிழ் மாமுனிவரின் துறவற த்தின் பின்னான காலம் என்றே சொல்லலாம்.1924 ஆம் வருடம் மயில்வாகனனை மாநிலம் அறிந்திட மலரச்செய்த காலம் எனலாம். மயில்வாகனன் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பட்ட தாரியாய் மேல்நாட்டு உடையுடன் மிடுக்குடன் இருந்த கோலம் மாறி -உடையாலும் உள்ளத்தாலும்.  தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து - துறவியாய் பிறப்பெடுத்த நாள் எனலாம்.

 

கவிஞர் வாலி நினைவு தினம் - லாரன்ஸ் விஜயன்

 .

கவிஞர் வாலி நினைவு தினம்: எழுதி வைத்த ஓவியம்போல் இருக்‍கின்றாய் இதயத்தில் நீ!...

லாரன்ஸ் விஜயன் 

உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்‍கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்‍கும்

பிரிவு... காலங்கள் சில ஆன பின்னே காயங்கள், வடுக்களாக மாறிவிடும். ஆனால், வடுக்களை காலாகாலத்திற்கும் காயங்களாக மாறி நம்மை வதம் செய்யும். இதற்குப் பெயர்தான் பிரிவு. பிரிவின் வலி வலியது. கொடியது. பிரிவு. ஒரு பங்கமா? அல்லது வாழ்வின் ஒரு அங்கமா?

பிரிவுத் துயரை பாடலாக வடித்து நெஞ்சை பிழிய வைத்திருக்கும் இந்த நேசமிகு கவிஞன் யார்?. அதுதான் கவிஞர் வாலி.

தீரர்கள் கோட்டமாம் திருச்சி.. 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருவரங்கம். இங்குதான் சீனிவாச ஐயங்காருக்‍கும் - பொன்னம்மாளுக்‍கும் மகனாக பிறந்தார் வாலி. இயற்பெயர் ரங்கராஜன். திருவரங்கத்தில் பிறக்‍கும் பல ஆண்குழந்தைகளுக்‍கு ரங்கராஜன், ரங்கநாதன் போன்றவைதான் திருப்பெயராய் சூட்டப்படும். வாலியும் அதற்கு விதிவிலக்‍கல்ல.

‘தங்கத் தாத்தா’வை நினைவு கூருவோம்! - இயற்றியவர் - பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர்              


 (மே 251878 யூலை 101953)   

தங்கத் தாத்தா எனத் தமிழ் ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்பெற்றவர் நவாலி ஊரிலே பிறந்த சோமசுந்தரப் புலவர் ஆவர் இவர் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான செந்தமிழ்ப் பாடல்களை இயற்றி ஈழவள நாட்டிலே புலவர் பரம்பரையை இலங்கச் செய்தவர்.அவரின் பேரனான பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்கள்; குழந்தைகளுக்காக இயற்றிய சிறுவர் செந்தமிழப்; பாடல்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் இருந்து சிறுவர்களுக்காக இப் பாடல்கள் பிரசுரிக்கப்படுகின்றன.

 

   இனிய கவிதைகள் சிறுவர் பாட

             இயற்றித் தந்த தாத்தா

      புனிதன் சோம சுந்தரப் புலவர்;

             புலமையைப் போற்று பாப்பா!.

  

     தமிழ்த்தாய் அருளைப்; பெற்ற எங்கள்

           தங்கப் புலவர் கோனார்

     அமிழ்தம் எனவே அளித்த தமிழை

           அள்ளிப் பருகு பாப்பா!

 

எனக்கு வயது 39 ( சிறுகதை ) முருகபூபதி


இவ்வளவுகாலமும் நான் எனது கதையை உங்களுக்குச் சொல்லவில்லை.  ஆனால், இப்போது சொல்ல நேர்ந்திருக்கிறது.

கொழும்பில் பெரியாஸ்பத்திரியில்  நான் பிறந்தபோது,  எனது அழுகுரலை அம்மாவும், அம்மாவைச் சுற்றியிருந்த தாதிமாரும் ஒரு பெண் மருத்துவரும் மாத்திரமே கேட்டதாக, பிற்காலத்தில் அம்மா சொன்னார்கள்.

இப்போது நான் எனது இந்தக் கதையை வெளிநாடு ஒன்றிலிருந்து சொல்கின்றேன். சொல்லவேண்டிய காலத்தில் நான் இருக்கின்றேன்.

இங்கு எனது சிநேகிதி தினேஷா வன்னிநாயக்காவுக்கு எனது


கதையை சொல்லநேர்ந்தது. அவளை இங்கே எனது பல்கலைக்கழக வாழ்க்கை தொடங்கப்பட்ட காலம் முதல்தான் அறிவேன்.

அவள்தான்  எனது பிறந்த தினத்தை அடிக்கடி நினைவுபடுத்துபவள்.  ஜூலை மாதம் வந்தவுடனே எனது அம்மா கலவரடைந்துவிடுவார். எனது பிறந்த நாள் ஒவ்வொருவருடமும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரும்.  ஏனைய பிள்ளைகளைப் போன்று எனது வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் இதுவரையில் நடைபெற்றதில்லை.

ஏன் தெரியுமா..? அன்றுதான் எனது அப்பாவும் கொல்லப்பட்ட நாள்.  அம்மாவுக்கு பிரசவ வலி வந்ததும், கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு, அப்பா தேமர்ஸ் ஃபிளாஸ்க்கில் தேநீர் வாங்கச் சென்றவர்தான், அதன் பிறகு திரும்பி வரவேயில்லை.

எனது பிறப்பின் கதையை காலம் கடந்துதான் அம்மா சொன்னார்கள்.  அவுஸ்திரேலியாவிலிருந்த அம்மாவின் அண்ணன்,  என்னையும் அம்மாவையும் ஸ்பொன்ஸர் செய்து அழைக்கும்போது எனக்கு பத்துவயதுதான் இருக்கும்.

எனக்கு தமயந்தி என்று பெயர் வைத்ததும் அம்மாதான். எனது பெயருடன் இருக்கும் இராஜசேகரன் என்ற எனது அப்பாவை நான் வீட்டிலிருக்கும் ஒரே ஒரு படத்தில்தான் பார்த்திருக்கின்றேன்.

கொழும்பில் அந்தக்கலவரத்தில் எங்கள் வீடு சூறையாடப்பட்டபோது,  அம்மா – அப்பாவின் திருமணப்படம் உட்பட பலதும் எரிந்துவிட்டதாக அம்மா சொன்னார்.

ஆஸ்பத்திரியிலிருந்து பம்பலப்பிட்டியில் அகதிமுகாமுக்கு என்னையும் தூக்கிக்கொண்டு அம்மா சென்றாராம்.

ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரும்போது,  அப்பாவின் படத்துக்கு முன்னால் அம்மா நின்று கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதை எனக்கு அறிவு தெரிந்த  நாள் முதல் பார்த்துவருகின்றேன். முன்னர்  இலங்கையில் பார்த்தேன். இப்போது அவுஸ்திரேலியாவிலிருந்தும் பார்த்துவருகின்றேன்.

தம்மைத்தாமே தகனம் செய்யும் தற்குறிகள் ! அவதானி


ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்..?  என்று கேட்டபோது,   “ ஒரு நூலகம் கட்டுவேன்  “ என்றார்  மகாத்மா காந்தி.

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்..?  என்று ேட்ட போது,  புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்றார்  ஜவஹர்லால் நேரு.

எனது  கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று


வினவப்பட்டபோது,  சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா.


பிறந்த நாளுக்கு என்ன வேண்டும்…?  எனக் கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என தயக்கமின்றி லெனின் கூறியதும்,  குவிந்த புத்தகங்கள் பல இலட்சம்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டொலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை..?  என கேட்கப்பட்டபோது


புத்தகங்கள்தான் என்றார் மார்டின் லூதர்கிங்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே எனது தலைசிறந்த நண்பன்  என்றார்  ஆபிரகாம் லிங்கன்.

இந்தச் செய்திகளை ஆத்திரம் வந்தால், புத்தகங்களை எரிப்பவர்கள் அறிந்திருக்கிறார்களா..? இல்லையாயின் இனிமேலாவது அறிந்துகொள்ளட்டும்.

 “ கோத்தா கோ  “  என ஆரம்பித்த போராட்டம் நூறாவது நாளையும் வெற்றிகரமாக கொண்டாடிவிட்டது.  இப்போராட்டம் ஆரம்பமானது முதல் தலைநகரத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் பல காட்சிகள் அரங்கேறிவிட்டன.

அவற்றில் ராஜபக்‌ஷ சகோதரர்களின் ஆட்சியில் அங்கம் வகித்தவர்கள், மற்றும்  ஆதரவாளர்களின் இல்லங்கள் எரிக்கப்பட்ட காட்சிகளும் அடக்கம்.  பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதி செய்திருந்தால் நட்ட ஈடும் கிடைத்துவிடும்.

ஆனால், அந்த இல்லங்களில் எரியுண்டுபோன புத்தகங்களை மீளப்பெற முடியுமா..?

சர்வாதிகாரி – கொடுங்கோலன் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட  ஹிட்லர், இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில்,  தனது படையினரிடம், மருத்துவ மனைகள், பாடசாலைகள், நூலகங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். அங்கெல்லாம் குண்டுகளை பொழியவேண்டாம் என்றுதான் அறிவுறுத்தியிருப்பதாக படித்திருக்கின்றோம்.

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (1/6) கே.எஸ்.சுதாகர்

அதிகாரம் 1

1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. வடபகுதிக் கிராமங்களில் அமைதி


நிலவிக்கொண்டிருந்த காலம். இல்லாவிடில் வீட்டு வேலியைப் பிரித்து, வீதியை ஆக்கிரமித்து ஒரு விழா நடத்த முடியுமா?

 வீட்டு வளவிற்குள் மேடை போடப்பட்டிருந்தது. வளவிற்கும் வீதிக்கும் இடையே இருந்த கிடுகுவேலி நீக்கபட்டிருந்தது. வீதிக்குக் குறுக்காக வாங்குகள் வரிசை வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஆண்டாண்டு காலங்களாக வாழையடி வாழையாகப் படிந்திருக்கும் அழுக்கு, வாங்குகளுக்கு அழகு கூட்டியது. வீதியில் எப்போதாவது வாகனங்கள் வருவதுண்டு. அதுவும் யாராவது கனவான்கள் கோவிலுக்கென்று வந்தால்தான். வீதி இவர்கள் குடியிருப்புக்கு அப்பாலும் இருபது இருபத்தைந்து குடிமனைகளைத் தாண்டி அம்பாள் கோவிலில் போய் முடியும்.

 வாங்குகளில் இருந்தவர்கள் சுருட்டுப் பிடித்தும், பாக்கு வெற்றிலை போட்டபடியும் கன்னாபின்னாவென்று கதையளந்தபடி இருந்தார்கள். குடித்து முடித்த தேநீர்க்கோப்பைகள் வாங்குகளின் கீழே நடனமாடின. அவற்றின் மீது எறும்புக்கூட்டங்கள் வரிசை கட்டி ஏறின. முன்வரிசையில் சில வாண்டுகள் காலாட்டியபடி ஆவலோடு மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் ரி.எம்.எஸ்ஸின் பாடலை நிறுத்தி, மைக்கைத் தட்டி சரி செய்து கொண்டிருந்தார் ஒருவர்.

 சந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் காலையில்தான் ஊரில் திருமணம் நடந்திருந்தது.

"உன் கடவுளிடம் போ" (தெய்வீகன்) சிறுகதைத் தொகுப்பு பற்றிய சிறு குறிப்புகள் (கன்பரா யோகன்)

 "உன் கடவுளிடம் போ" என்ற சிறுகதைத் தொகுப்பை கடந்த 2021 ஆம்


ஆண்டு அக்டோபர் மாதம் தெய்வீகன் வெளியிட்டிருக்கிறார். இதிலுள்ள சில கதைகளை சில சஞ்சிகைகளிலும் அவரது முகநூலிலும் படித்திருந்தபோதிலும் இந்தத் தொகுப்பு  கைக்கு வந்த பின்னரே முழுக் கதைகளையும் படிக்க முடிந்தது. 

தெய்வீகன் முற்றிலும் புதிய களங்களில் கதைகளை நகர்த்த விரும்புபவர். அதே வேளை நிகழ்வுகளின் அல்லது பாத்திரங்களின் பொதுமைக்காக இரண்டு களங்களை- ஒன்று புதிய களம், மற்றையது பரிச்சயமான களம் - என்று இவற்றை இணைப்பது என்ற உத்தியில் எழுதப்பட்ட பல கதைகளையும் இங்கே எழுதியிருக்கிறார்.  அவரது சொற்தெரிவுகளும், வாக்கிய அமைப்பும்  எழுத்து நடையை செழுமைப்படுத்துவதுடன் ஆர்வமூட்டும் வாசிப்பனுபவத்தை தருகின்றது.

 'இருள்களி' கதையில் அவரது  சொல்லும் முறையில் ஊடுபாவாக நகைச்சுவையை  கொண்டு வந்திருந்தபோதிலும் ஈழப் போர்க்களத்தை இலாவகமாக விவரிப்பதற்கு கைகொடுப்பது அவருள் உறைந்திருக்கும் அனுபவ வெளிப்பாடுதான் என்று தெரிகிறது.  இறுதியில் வரும் அவுஸ்திரேலிய அன்சாக் தின நிகழ்வின் மூலம் இரு வேறு காலங்களில் , நாடுகளில் இழப்பை அனுபவித்த இருவரின் பொதுத் துயரம் காட்டப்படுகிறது.

 'அவனை எனக்குத் தெரியாது' என்ற கதையில்  இந்தோனேஷியக் களத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.  அவுஸ்திரேலியாவில் தொடங்கி, இந்தோனேசியாவில் முடியும் கதை, இடையே தாயகப் போர்க்களத்தையும் தொட்டு வருவதுடன் துல்லியமான விவரணங்களும்  கனதியான மனநிலையிலேயே வாசகரை வைத்திருக்கிறது.

போர்க்களத்தில் எதிரியைக் குறி பார்க்கத் துப்பாக்கியைத் தூக்கிய அவனே பிறகு வாழ்வின் வேறொரு கட்டத்தில், தொழிலுக்காகத் தூக்கிய துப்பாக்கியில் தமிழன் ஒருவன் பலியாகும் அவலம் கதையின் மையம்.