மரண அறிவித்தல்

 

திரு. கணேசராசா சுப்பிரமணியம் 



யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் இலங்கை பிரதி சுங்க ஆணையாளர் திரு. கணேசராசா சுப்பிரமணியம் அவர்கள் 21.04.2022 அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார் காலம்சென்ற சுப்பிரமணியம், சின்னம்மா ஆகியோரின் அன்பு மகனும்,

காலம்சென்ற செல்லையா, மஹேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

அற்புதம் அவர்களின் அன்புக் கணவரும், 

சிறீதரன் (Auburn) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, குலசேகரம்(யாழ்ப்பாணம்), திருஞானசம்பந்தர்(கனடா), மகேஸ்வரி(Sydney) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், ராசமலர்(யாழ்ப்பாணம்), தவமணி(கனடா), மகாலிங்கம்(Sydney), காலஞ்சென்ற தவமணி(மலேசியா), இராமநாதன்(லண்டன்), காலஞ்சென்ற Dr. பத்மநாதன்(லண்டன்), மனோன்மணி(Sydney), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள் ஆனந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,

Dr.ஜெய்சன், Dr.மயூரன், கிரன் ஆகியோரின் ஆசைப்  பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகளும், தகனமும் செவ்வாய்க்கிழமை 26.04.2022 அன்று மதியம் 12.30 மணியிலிருந்து  3.30 மணிவரை

 

South Chapel,

Rookwood Crematorium, Memorial Avenue,

Rookwood NSW 2141 ல் நடைபெறும்.

தகவல்: சிறீதரன் (மகன்) 0448 441 346

வீட்டு முகவரி: 34 Susan Street, Auburn, NSW 2144

நாமார்க்கும் குடியல்லோம் எனவுரைத்த தமிழடியார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ....... அவுஸ்திரேலியா

 

   தமிழ்மொழி மற்றைய மொழிகளிலும் சிறப்பான மொழியாக


விள ங்குவதற்குக் காரணம் மற்றைய மொழிகளில் இல்லாத ஒரு சிறப்பு தமிழ் மொழியில் இருப்பதேயாகும் என்பது அறிஞர்கள் கருத்தாக      இருக்கிறது. அந்தத் தனிச்சிறப்பு எது தெரியுமா அதுதான் " பக்தி இல க்கியம் " ஆகும். உலகின் எந்த மொழியிலும் பக்தி என்பது இலக்கியமாகக் கொள்ளப்படவே இல்லை. ஆனால் தமிழ் மட்டும் தனக்கெனப் பக்தியை இலக்கியம் ஆக் கியே இருக்கிறது. இதனால் தமிழ் பக்தியை அரவணைத்தபடியே பயணப்படு கிறது என்பதை கருத்திருத்தல் அவசியமாகும்.பக்தியை இலக்கியம் ஆக்கும் வகையில் தமிழுக்கு வந்து வாய்த்தவர்கள்தான் ஆண்டவனது அடியார்கள் ஆவர். அந்த அடியார்களில் முன்னுக்கு வந்து நிற்பவர் களில் மூத்தவர் காரைக்கால் அம்மையார். அவரின் பின்  பக்திப் பெருவெளியில் பயணப்பட இம்மாநில த்தில் வந்தவர்களாய் அப்பரும் சம்பந்தரும் விளங்குகிறார் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே காலத் தவராக இருக்கின்ற பொழுதும் - அப்பர் மூத்தவராகவும் சம்பந்தர் இவரின் இளையவராகவும் ஆகி நிற்கி றார்கள்.

   அப்பரும் சம்பந்தரும் கி.பி ஏழாம் நூற்றைண்டைச்


சேர்ந்தவர்களாய் இருந்தாலும் இருவர் வாழ்வும்அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களும் வேறு பட்டனவாகவே அமைந்திருந்தன என்பதும் நோக்கத் தக்கது,அப்பர் குடும்பச் சூழல் வேறாயும் சம்பந்தர் குடும்பச் சூழல் வேறாயும் அமைந்தே காணப்பட்டது. ஆனால் பக்தி என்னும் நிலையில் இருவரும் ஒருமித்தே பயணப்பட்டார்கள். அப்படிப் பயணப்பட்ட நிலை யிலும் அப்பரின் சிந்தனைசெயற்பாடுகள்சம்பந்தரிலும் வேறுபட்டதாகவே அமைகின்ற ஒரு நிலை தோற் றம் பெற்றது. அதற்கு உரிய காரணம் தான் என்ன என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும்.

  மருள் நீக்கியார் சைவத்தில் பிறந்து சைவத்தைத்துறந்து சமணம் என்னும் சமயத்தைத் தழுவுகின் றார்.மருள் நீக்கியாரின் இளம் மனத்தில் சமணத்தின் கொள்கைகள் சிறந்தனவாகப் பதிகின்றன. சமணரும் இவரை அணைக்கின் றனர்.சமண மடத்தின் தலைவராய் ஆகும் அளவுக்கு மருள் நீக்கியார் ஆளுமை வளர்கிறது. மருள் நீக்கியார் என்னும் பெயர் மறைந்து சமண மடத்தி ன் தலைவராய் " தருமசேனர் " என்னும் புதுப் பெயர் வாய்க்கிறது.நாட்டில் சமணமே அரசபீடத்தாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.மருள் நீக்கியாரின் மனம் மாறுகிறது. சமணத்தின் தலைமயைத் தூக்கி எறிந்துவிட்டு தான் பிறந்த சைவத்தில் அவர் சங்கமம் ஆகிறார். சங்கமம் ஆகும் நிலையில் அவர் நெஞ்சம் தமிழைக் கொட்டுகிறது. அதுவும் கவியாய்பக்தியாய் ,இசையாய் கொட்டுகிறது. எம்பெருமான் சிவனே வியந்து " நாவுக்கரசு " என்று விளிக் கும் அளவுக்கு தமிழ் ஆக்கி நிற்கிறது. மருள் நீங்கியதால் அருள் கிடைக்கிடைக்கிறது. தருமசேனர் சைவம் தளைக்க தொண்டுகள் சிறக்கநாவுக்கக்கரசாய் வலம் வருகிறார்.வலம் வருகின்ற நாவுக்கரசரை இளையவரான சம்பந்தப் பெருமான் கண்டவுடன் " அப்பரே " என்று அழை க்கின்றார். இறைவன் அழைத்த நாவுக்கரசர் என்னும் பெயரும் சம்பந்தப் பெருமான் அழைத்த அப்பரே என்னும் பெயரும் - சைவத் தமிழ் உலகில் நிலையான உறுதியான பெயராக நிலைத்தே விட்டது என்பது மனங்கொள்ளத்தக்கது.

அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் கோமகன் நினைவுகள் ! குரலற்றவரின் குரலை ஒலிக்கச்செய்தவரின் குரல் ஓய்ந்தது ! ! முருகபூபதி


எழுத்தாளரும்  ‘ நடு  ‘ இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் பாரிஸிலிருந்து விடுமுறைக்கு இலங்கைக்கு வந்து திரும்புகையில்  கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மாரடைப்பு வந்து மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது.

அற்பாயுளில் மறைந்திருக்கும் கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர்.

சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர்.  கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது.

கோமகனின் தனிக்கதை, முரண் முதலான  சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.

எழுத்தாளர்கள் அனைவருமே ஒரே நேர்கோட்டில் பயணிக்கமுடியாது.


மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு  தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய   சாதனைதான்.

அச்சாதனையை   குறிப்பிட்ட  குரலற்றவரின் குரல் தொகுப்பின் மூலம்  நிகழ்த்தியவர் கோமகன்.  

எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு,                 மலைகள், ஒருபேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல்                 முதலானஇதழ்கள்,இணைய இதழ்களில் தொடர்ந்து  எழுதியவர்.   நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை  ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் வரவாக்கியிருப்பவர்.  

சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப்  பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல்  முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து 'நடு' என்னும் இணைய இதழையும் வெளியிட்டு வந்தவர்.  

       சினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ்   முதலானவற்றையும்  'நடு'  இணைய இதழ்  வெளியிட்டிருக்கிறது.

ஈழத்துத் திரைப்பட ஆவணக் களஞ்சியம் திரு. தம்பிஐயா தேவதாஸ் பேசுகிறார்



என் பதின்மப் பருவத்தில் 1987 ஆம் ஆண்டு கடும் போர்ச்சூழலில் அம்மாவின் சக ஆசிரியை ஒருவரின் வீட்டில் இடம்பெயந்து வாழும் சூழல் அமைகின்றது. அப்போது அவர்களின் வீட்டின் ஒரு அறையின் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தக அடுக்கின் மேல் என் கவனம் செல்கின்றது. அந்தப் போர்க்காலச் சூழல் முழுவதும் அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றாக வெறியோடு படித்தேன். அவை அனைத்துமே வீரகேசரி பிரசுரங்கள். அந்தக் காலகட்டத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைப் படிக்க ஆரம்பித்த எனக்கு ஒரு நாவலின் ஓட்டமும் கதைப் பின்னணியும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அதுதான், திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் மொழிபெயர்ப்பு நாவலான “நெஞ்சில் ஒரு இரகசியம்".



ஸ்வீட் சிக்ஸ்டி 11 - ராணி சம்யுக்தா- - - ச சுந்தரதாஸ்

 .

இந்தியாவில் பிரபமான காதல் கதைகளில் ஒன்று பிரிதிப்பிராஜன்,சம்யுக்தை கதை.ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த இவர்களின் வரலாற்று சம்பவங்களை 1962ம் ஆண்டு சரஸ்வதி பிக்சஸார் ராணி சம்யுக்தா என்ற பெயரில் படமாகத் தயாரித்தார்கள்.நடிகை பத்மினியின் உறவினரான ஏ சி பிள்ளை என்பவர் படத்தை பத்மினியின் தாயான சரஸ்வதியின் பேரில் சரஸ்வதி பிக்சர்ஸ் என்ற என்ற நிறுவனத்தைத் தொடங்கி படமாகத் தயாரித்தார்.இதன் காரணமாக படத்தின் கதாநாயகியாக பத்மினி நடித்தார்.அவருடன் அவரின் தங்கையான ராகினியும் படத்தில் இடம்பெற்றார்.பத்மினி கதாநாயகியாக முதல் முதலில் நடித்த மணமகள் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் எஸ் வி சகஸ்ரநாமம்.இந்தப் படத்தில் பத்மினியின் தந்தையாக அவர் நடித்தார்.

படத்தின் கதாநாயகனாக,பிரிதிவிராஜன் மன்னனாக நடித்தவர் புரட்சி நடிகர் எம் ஜி ஆர்.சமூகப் படங்களில் தீவிரமாக நடிக்க தொடங்கி விட்ட எம் ஜீ ஆரின் மீதமிருந்த ஒரு சில சரித்திர படங்களில் ஒன்றாக இது வெளியானது.படத்தில் அவரின் அண்ணனான எம் ஜீ சக்கரபாணியும் நடித்திருந்தார்.இப் படத்திற்கு பிறகு அவர் பல ஆண்டுகள் படங்களில் நடிக்கவே இல்லை.இவர்களுடன் நம்பியார்,எம் கே முஸ்தபா,தங்கவேலு,எம் என் ராஜம்,ஆகியோரும் நடித்திருந்தனர்.

இவர்கள் எல்லோரும் நடித்த இப் படத்தின் சிறப்பு அதில் இடம் பெற்ற வசனங்களினாலும்,பாடல்களினாலுமே அடையாளம் காணப்பட்டது.இரண்டையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.வசனங்கள் எழுதுவதில் தனக்கிருந்த திறமையை இதில் வெளிப்படுத்தி இருந்தார் அவர்.காதல் காட்சிகளில் மட்டுமன்றி,அரசியல் காட்சிகளிலும் அவரின் வசனங்கள் அருமையாக அமைந்திருந்தன.அரசியலில் காணப்படும் கபடத்தனம்,சூழ்ச்சி,போட்டி ,பொறாமை எல்லாவற்றையம் மன்னன் ஜெயசந்திரனாக நடிக்கும் சகஸ்ரநாமம் மூலமும் மந்திரியாக நடிக்கும் சக்கரபாணி மூலமாகவும் புட்டு புட்டு வைத்திருந்தார் கண்ணதாசன்.இன்றைய கால அரசியலுக்கும் பொருந்தும் படி அவர் வசனங்கள் அமைந்தது ஆச்சரியம் தான்!

“அன்சாக்”விழாச் சிறக்க ஒற்றுமையாய் வாழ்த்துவமே! –


 



இயற்றியவர் -- பல்வைத்தியகலாநிதி  பாரதி இளமுருகனார்

 





ஒற்றாமன்வல்லரசை  எதிர்த்துப்  போரிட்டு

      ஒருவழியாய்க் கலப்பொலியைக் கைப்பற்றி அந்தோ

வெற்றிகொள்வோம் என்றுஆங்கி  லேயரொடு பிரஞ்சுப்  

      பெரும்படையும்  அவுஸ்திரேலிய  நியூசி  லாந்து

நற்பயிற்சி  பெற்றதொரு  படையுஞ் சேர்ந்து

      நாள்களாகப்  பெரும்போரை  இயற்றிய காலம்

கற்றிட்ட  வித்தையால்வெல்  வோமென் றிருக்கக்

     காலனவன்  தலையெழுத்தை  மாற்றி  னானே!

 

சிந்தனைசொல்  செயல்களிலே வீரம்  விஞ்சச்

     சிம்மமெனப்  போரிட்டோர்  பெற்றி  என்னே!

அந்தோ பரிதாபம் விதியின்சதி  தானோ?

      கலப்பொலியைக் கைப்பற்ற  விழைந்த  வேளை

வெந்துசாம்பல் ஆகினரே தியாகச்  சுடர்கள்!

     விரும்பியரசும்  அன்சாய்க்ஸ்'என அழைத்திட் டோரைச்

சிந்தையாலே  நினைவுகூரத்  தமிழ்க்கூட் டமைப்பும்

      திரண்டுசெயல்  ஆற்றுகின்றார்  வாழ்த்து  கின்றேன்!

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -10 பேராசிரியர் எலியேஸரும் விஜயகுமாரணதுங்கவும் ! இலங்கை – இந்திய ஊடகங்கள் பிரசுரிக்கத் தயங்கிய “ ஆண்மை “ சிறுகதை ! ! முருகபூபதி

 மெல்பனில் பிரசித்தி பெற்ற மொனாஷ் பல்கலைக் கழகத்தின்


Robert Black Wood மண்டபத்தில்  1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் , அவுஸ்திரேலியாவில் பரத நாட்டியக்கலைக்கு மகத்தான சேவையாற்றிவரும் கலாநிதி சந்திரபானு அவர்களின் தனிநடிப்பு அரங்காற்றுகை நடந்தது.

இந்நிகழ்ச்சியே  1987 ஆம் ஆண்டு நான் இங்கு வந்த புதிதில் பார்த்த முதலாவது நடனநிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தகுந்தது.

பொதுவாக இந்து, வைணவ  சமயம் சார்ந்துதான்  பரத நாட்டிய  அரங்காற்றுகைகள், நடன அரங்கேற்றங்கள்  நடைபெறுவது வழக்கம்.  உதாரணமாக  சிவன்  -  சக்தி, கிருஷ்ணர் -  ராதை, பக்த மீரா, உள்ளடக்கமாக இருப்பார்கள்.

அன்று நான் பார்த்த நடன அரங்காற்றுகை வித்தியாசமானது. யேசுகிறிஸ்துவின் வரலாற்றின் முக்கிய நிகழ்வான  கல்வாரி காட்சியை பல்வேறு அபிநய முத்திரைகளுடன் நடனத்தில் சந்திரபானு பிரதிபலித்தார். சுமார் ஒன்றரை மணிநேர நிகழ்ச்சியில் அவரே தனித்து ஆடி அசத்தினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து  மெல்பனின் பிரபல தமிழ் மருத்துவர் செல்வேந்திரா அவர்களுடன் உரையாடியபோது, அவர் எனக்கு திருமதி ராணி எலியேஸர் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

மருத்துவர் செல்வேந்திரா அவர்களின் அக்கா, செல்வி புஷ்பா செல்வநாயகம் இலங்கையில் யாழ். இந்து மகளிர் கல்லூரியின் துணை அதிபராக பணியாற்றிய வேளையில் நான் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். 1987 ஜனவரி வரையில் அவருடன் தொலைபேசி தொடர்பிலும் இருந்திருக்கின்றேன். 1986 ஆம் ஆண்டு இறுதியில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் நடத்தப்பட்ட இனப்பிரச்சினை தீர்வுதொடர்பான மாநாடு யாழ். நல்லூர் நாவலர் மண்டபத்தில் நடந்தபோது  அதற்குச் சென்றிருந்த வேளையில்,  செல்வி புஷ்பா செல்வநாயகம் அவர்களின் இல்லத்திற்கும் சென்று உரையாடியிருக்கின்றேன்.

யாழ். குடாநாட்டின் போர்க்காலச்செய்திகளை வீரகேசரியில் நான் எழுதும்போது,  இவரையும் தொடர்புகொண்டு செய்தியை ஊர்ஜிதப்படுத்துவது எனது வழக்கம். பிரபல சித்தார் மேதை ரவிசங்கர் தென் அவுஸ்திரேலியா மாநிலத்தின் தலைநகர் அடிலைற்றில் ஸ்தாபித்த International Shruthi Centre என்ற இசைக்கல்லூரியுடன் தொடர்பிலிருந்தவர்தான் மருத்துவர் செல்வேந்திரா.

விண்ணை தொட்ட லைக்கா! கிறிஸ்டி நல்லரெத்தினம்


1957ம் ஆண்டு.... மாஸ்கோ நகரமே தூங்கிக் கொண்டிருந்த நடுநிசி வேளை!  ஒரு கறுப்பு நிற வாகனம் அந்த சந்தில் நுழைந்து அமைதியடைந்தது.  அதன் இருபுறமும் கொட்டை எழுத்துக்களில் "ரஷ்ய விண்வெளி நிறுவனம் "  என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதில் இருந்து இறங்கிய மூன்று உருவங்கள் காலத்தை வீணாக்கவில்லை. அவர்கள் தேடி வந்தது  அவர்கள் கண் முன்னே வாலை ஆட்டியபடி  நின்ற ஒரு தெரு நாய்தான். மூவரும் அந் நாயை சுற்றிவளைக்க ஒருவன் நாயின் மேல் ஒரு கோணிப்பையை வீசி  'லபக்' என அதை பிடித்து வாகனத்தினுள் வீசுகிறான்.  வாகனம் சந்தை விட்டு வெளியேறி நகருக்குள் சென்று மறைகிறது! தான் ஒரு உலக சாதனையை படைக்கப் போகிறோம் என்ற உணர்வு இல்லாமல் அந்தப் பிராணி உரக்கக் குலைத்து அமைதியடைகிறது!

இப்படித்தான் ஆரம்பித்தது  எமது நாயகி லைக்கவின்  கதை!

அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்ணாதிக்கத்தில் போட்டி

போட்ட நாட்கள் அவை. இரு வல்லரசுகளும் விண்ணை ஆழ விஞ்ஞான வளர்ச்சியின் துணை கொண்டு பல மில்லியன் பணத்தை கொட்டித்தீர்த்த நாட்கள் அவை.
சோவியத் ஒன்றியம் எனும் கட்டமைப்பின் கீழ் ருஷ்ய நாடுகள்  கூட்டுக்குடும்பம் நடத்திய  ஐம்பதுகள்.

விண்வெளியில் முதல் மானுடனை   யார் அனுப்புவது எனும் பனிப்போர் உக்கிரமடைந்திருந்தது. 83 கிலோ எடையுள்ள ஸ்புட்னிக் 1 எனும் விண்கோளை அக்டோபர் 1957ல் சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு அனுப்பியிருந்தது. அது உலகை மூன்று வாரங்களுக்கு வெற்றிகரமாக வலம் வந்து மின்கலங்கள் சக்தியிழந்தததினால்  'சும்மா' பூமியை சுற்றித்திரிந்து ஜனவரி மாதம் 4ம் திகதி 1958ல் பூமியின் வான்வெளி எல்லைக்குள் நுழைந்து எரிந்து மறைந்தது.
ஸ்புட்னிக் 1  இன் இந்த வெற்றி  அமெரிக்காவின் விஞ்ஞான சமூகத்தில் ஒரு பீதியை கிளப்பிற்று.
இதற்கு இன்னொரு காரணம் உண்டு.

கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து ஏழு ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

                                          

  சுவையினைத் தருகின்ற பதனீரைக் காய்ச்சுவதன் மூலமாக


இன் னும் சுவையினைப் பயக்கும் பல கிடை க்கின்றன என்பது மனமிருத்த வேண் டிய முக்கிய கருத்தாகும். பனையிலிருந்து இறக்கிய நிலையில் குளிர்மையாக இருந்து குடிக்கும் சுவையான பானமாக அமைகின்ற பதனீர் அடுப்பில் வைத்துக் கொதிக் கவைத்து ஆறவி ட்ட நிலையிலும் யாவருக்கும் நல்ல இனிப்பான சுவையினை வழங்கியே வருகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.பதனீர் என்னும் பெயரினினுக்கு ஏற்றாற் போன்று அது என்றுமே நல்ல பதமாகவும் இதமாகவுமே ஆகியே அமைகிறது.

  பனங்கட்டி என்று சொல்லும் பொழுதே நாவெல்லாம்


ஊறுகிறதல்லவா பனங்கட்டிதான் எங்களின் சொந்தமான இனிப்பாக விளங்கி இருக்கிறது. எங்களின் வாழ்வியலோடு இணைந்து நிற்கும் கற்பகத ருவாம் பனையின் கொடைகளில் பனங்கட்டியும் முக்கிய இடத்தினை வகிக்கிறது என்பதை மறுத்து ரைத்து விடவே முடியாது எனலாம்.பனங்கட்டியாய்பனை வெல்ல மாய்பனஞ்சீனியாய்பனங்கற் கண்டாய்பனங்காடியாய் என்றெல்லாம் கற்பகதரு எமக்கெல்லாம் வழங்கும் நிலையில் பதனீர் என்னும் மூலத் தையே அளித்து நிற்ப தைக் கட்டாயம் மனத்திலிருத்துதல் வேண்டும்.

  பதனீரானது இனிப்பாய் பதமாய் இருப்பதற்குத்தான் அதனை எடுக்கும் பாத்திரங்களுக்குள் சுண்ணாம்பு பூசப்பட்டது. அந்தச் சுண்ணாம்பு பூசப்படு வதால்த்தான் பதனீர் புளிக்காமல் இருக்கிறது. பாதுகாப்பதற்குப் பூசப்படும் சுண்ணாம்பினைத் தரமற்றதாகப் பூசிவிடும் நிலையில் பதனீர் கெட்டுப் போய் விடுகிறது என் றும் அறிய முடிகிறது. அதேநேரம் சுண்ணாப்பினை அளவுக்கு அதிகமாகப் பூசுவதாலும் பதனீர் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டாகிறதாம் என்றும் அறி ந்திடக்கூடியதாக இருக்கிறது.சுண்ணாம்பு பூசுவதால் த்தான் பதனீர் பக்குவமாய் கிடைக்கிறது. ஆனால் அந்தச் சுண்ணா ம்பே பதனீரி னைக் காய்ச்சிப் பனங் கட்டி செய்யும் வேளை - பனங்கட்டியில் காரத்தன்மையினையும்கருநிறத்தையும் கொடுப்பதோடு சுவையி னையும் கெடுத்து விடவும் கூடியதாக இருக்கிறதாம் என்பது முக்கிய கருத்தாகும். இதனால் பதனீரில் இரு க்கும் சுண்ணாம்புத் தன்மையினை நீக்குவது - பனங்கட்டி உருவாக்கத்தில் முக்கியமாகிறது. அதனால் பதனீ ரைக் காய்ச்சும் பொழுது சுண்ணாம்பின் தாக்கத்தை அகற்றுவதற்காக பொஸ்போரிக் அமிலம் அல் லது சிற்றிக் அமிலம் பயன்படுதப்படும் நிலை ஏற்படுகிறது.

அணிநடை எருமை — ஆர். பாலகிருஷ்ணன்

 .

எத்தனை முறை தோண்டினாலும் சங்கச்சுரங்கத்தில் ஏதோ ஒன்று புதிதாகக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. எப்படித் தவறவிட்டோம் என்ற ஆதங்கம்; இப்போதாவது கவனித்தோமே என்ற ஆறுதல். ‘அண்ணல் ஏறு' என்றும் 'அணிநடை எருமை' என்றும் எருமைக்குப் பொன்னாடை போர்த்திய இலக்கியம் வேறெதுவும் இருக்கிறதா?   அண்ணல் என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. தலைமை. அரசன். பெருமையில் சிறந்தோன். முல்லைநிலத் தலைவன். கடவுள் என்று பொருள்விளக்கம் அளிக்கிறது தமிழ்க்களஞ்சியம். 2020 செப்டம்பர் 5-ம் தேதி அணிநடை எருமை பற்றி இணைய வழியில் இரண்டு மணி நேரம் கொட்டித்தீர்த்தேன். மனசு ஆறியது. 

பண்பாட்டிற்கும் மொழிக்குமான உறவு எத்தகையது? வார்த்தைகளைப் பண்பாடு செதுக்குகிறதா? அல்லது, பண்பாட்டு அசைவுகளை வார்த்தைகள் வழிநடத்துகின்றனவா?   சங்க இலக்கிய அணி நடை எருமைக்கும், 'எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கான்', 'எருமை மாட்ல மழை பேஞ்ச மாதிரி’, ‘சொரண கெட்ட எருமை', 'மேய்க்குறது எரும, அதுல என்ன பெரும' என்ற சமகாலச் சொல்லாடல்களுக்கும் எவ்வளவு தூரம்! அது நாம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சறுக்கிவிழுந்த தூரம். 
நீர் எருமை இந்தியாவின் பெருமை. 6300 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டு விலங்காகப் பழக்கப்பட்டது. சிந்துவெளி மக்கள் மெசபடோமியாவுக்கு எருமைகளை ஏற்றுமதி செய்தார்கள்.  சிந்துவெளி முத்திரைகளில் எருமையின் உருவம்: எருமைக்கொம்பைத் தலையில் சூடிய மனிதன்;  செம்பில் செய்த எருமை உருவ பொம்மை: மண்பாண்டங்களில் எருமை ஓவியங்கள்; வழிபாட்டு முறையில் எருமைப் பலி. 

சிங்காரிதான் காவேரி, காவேரிதான் சிங்காரி ! காயங்களுக்கு மத்தியில் காய் நகர்த்தும் அதிபர் !! அவதானி


இலங்கை அரசியல் வரலாற்றில்,  இவ்வளவு தூரம் அவமானப்பட்ட ஒரு தலைவர் கோத்தபாய ராஜபக்‌ஷவை விட வேறு எவரும் இல்லை எனச்சொல்லும் அளவுக்கு அவருக்கு எதிரான போராட்டங்கள் வலுடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில்,  அவர் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார்.

மக்கள் எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடிகளை


முன்வைத்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை தொடங்கியிருந்த நிலையில், தலைநகரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய ஆர்ப்பாட்டங்களை காலிமுகத்திடலில் நடத்தின. ஆனால், எழுச்சிகொண்ட  மக்கள் திரள் ஜனாதிபதியின் வாசஸ்தலம் அமைந்த வீதிக்கே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இராணுவத்தினர் வந்திறங்கிய பஸ் வண்டியையும் தீயிட்டுக்கொளுத்தினர்.

அந்தப்போராட்டம் காலிமுகத்திடலை நோக்கியும் நகர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கோத்த கோ கோஷம் உச்சஸ்தாயியில் உயர்ந்தது.

தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பு காலத்தில் காலிமுகத்திடல் போராட்டம் வேறு வடிவங்களையும் அடைந்தது. மக்கள் நடுவீதியில் பால் பொங்கி, பாற்சோறும், வருடப்பிறப்பு பண்டிகை கால பலகார பட்சணங்களும் உண்டு குளிர்பானம் அருந்தி, இசைக் கச்சேரிகள் சகிதம் , றபான் ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தபாய,  எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை கண்டுவிட்டு, “   நாடாளுமன்றில் 113 அங்கத்துவர்களை உங்கள் தரப்பில் காண்பியுங்கள். புதிய அரசுக்கு வழிசமைக்கின்றேன்.  “ என்றார்.

எது சாத்தியமில்லையோ, அதனையே செய்து நாட்டில் எதிர்நோக்கப்படும் நெருக்கடிக்கு தீர்வு தாருங்கள் என்றார்.

எதிரணி, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும்,  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவரும் தீர்மானத்தையும்  நோக்கி நகரத்தொடங்கியது.

இலங்கைச் செய்திகள்

 யாழ்., மன்னாரிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இந்திய 400 மில்லியன் டொலர் பரிமாற்ற வசதி கால எல்லை நீடிப்பு

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியா மேலும் 500 மில். டொலர்

புலிகளின் ஆயுதங்களைத் தேடி முல்லைத்தீவில் STF வேட்டை



 யாழ்., மன்னாரிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இது வரை 60 பேர் அகதிகளாக சென்றுள்ளனர்

இலங்கையிலிருந்து மேலும் 04 குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரும் தனி நபர் ஒருவர் உட்பட 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.  மன்னாரைச் சேர்ந்த 03 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும்,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத் தைச் சேர்ந்த 04 பேரும், தனி நபர் ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

உலகச் செய்திகள்

மரியுபோல் நகரம் ரஷ்யா வசமானது

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புது தடை

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதம் வழங்க பிரிட்டன், அமெரிக்கா உறுதி 

காசா மீது இஸ்ரேலிய படை வான் தாக்குதல்



மரியுபோல் நகரம் ரஷ்யா வசமானது

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மரியுபோலில் உள்ள உருக்காலையைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம் என்று ரஷ்யப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.