புதுவெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்


 















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



நல்லன நடக்க வேண்டும்
நாடெலாம் சிறக்க வேண்டும்
வல்லமை பெருக வேண்டும்
வாழ்வது உயர வேண்டும்  

தொல்லைகள் தொலைய வேண்டும்
தோல்விகள் அகல வேண்டும் 
இல்லது என்னும் வார்த்தை
இன்மையாய் ஆதல் வேண்டும்

போரெனும் வார்த்தை மண்ணில்
பொசுங்கியே போதல் வேண்டும்
மாசுடை  ஆட்சி மண்ணில்
மடிந்துமே ஆக வேண்டும் 

மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையம் ஒளிவிழாவும் பரிசளிப்பு விழாவும் – 2023 பரமபுத்திரன்










வுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையத்தின் 2023 ம் ஆண்டு கற்றல்- கற்பித்தல் செயற்பாட்டின் நிறைவினைக் கொண்டாடும் வகையில் கடந்த 16/12/2023 சனிக்கிழமை Erskine park High Schoolஅரங்கத்தில் மவுண்ட் றூயிட் தமிழ்ப் பள்ளியில் கல்விகற்கும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும், இறைமகன் இயேசுபிரான்  புவிக்கு வந்த நாளினைக் கொண்டாடும் ஒளிவிழா நிகழ்வுகளும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.  சிறப்பு அழைப்பாளராக அருட்தந்தை வசந்தன் அவர்கள் கலந்து கொள்ள  விருந்தினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.  

தம்பிஐயா தேவதாஸ் நேர்காணல் - செ.பாஸ்கரன்

 .



புலம் பெயர்ந்தும் தமிழர்களின் நலனுக்காக ஓயாது உழைக்கின்ற சட்டவாளர் ரவீந்திரன் ! டிசம்பர் 27 இல் எண்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார் ! ! - வித்தி – ( ஆசிரியர் – யாழ். காலை முரசு )


ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிரேஷ்ட சட்டத்தரணி செல்லத்துரை ரவீந்திரன் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி,  தமது எண்பதாவது வயதை எட்டுகின்றார். அதை ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

இலங்கைப் புலம்பெயர் சட்டவாளர் அவர். இலங்கையில் சன்சோனிக் கமிஷன் விசாரணைகளில் தமிழர் தரப்பில் பிரதான பங்காற்றிய சட்டத்தரணி.

தமிழ் புனர்வாழ்வுக் கழகத்தின் பிதாமகர்களுள் ஒருவர். தமிழரின்

உரிமைப் போராட்டத்துடன் நெருக்கமாகச் செயற்பட்ட - செயற்படுகின்ற - புலமையாளர். அண்மைக் காலத்தில் 'காலைக்கதிர்' நாளிதழ் வாயிலாக பல தொடர் கட்டுரைகளை எழுதி, தமிழ் வாசக உலகில் நன்கு அறியப்பட்ட கட்டுரையாளர். கலை, இலக்கியவாதியும் கூட.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் உரும்பராய்க்குத் தனித்துவமான இடம் உண்டு. சுதந்திர வேட்கை கனன்ற பூமி அது. அங்கிருந்துதான் விடுதலைப் போராட்ட வேள்வியில் முதல் ஆகுதியான சிவகுமாரன் தோன்றினான்.
அந்த மண்ணில்தான் பிறந்தவர் செல்லதுரை ரவீந்திரன்.

தியாகி சிவகுமாரனின் தந்தை பொன்னுத்துரை ஆசிரியர், ரவீந்திரனுக்கு நன்கு தெரிந்தவர். மகன் சிவகுமாரன் விடுதலைப் போரின் பக்கம் திசை திரும்பிய போது, வழமையான யாழ்ப்பாணத் தந்தை போல மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடவே சட்டத்தரணி ரவீந்திரனின் ஆதரவைத் தேடினார் பொன்னுதுரை ஆசிரியர். ஆனால் சிவகுமாரன் அதற்கு இணங்கவேயில்லை. தனது ஒரே இலட்சியமான தனித் தமிழீழக் கனவைப் பற்றி எல்லாம் ரவீந்திரனோடு நன்கு மனம் விட்டுப் பேசி நெருங்கிப் பழகினான் சிவகுமாரன்.

ஆரம்பத்தில் சிவகுமாரனின் தனி நாட்டுக் கோரிக்கை ரவீந்திரனை அதிகம் ஈர்க்கவில்லை. எனினும் அதில் அவன் காட்டிய பற்றுறுதி, திடசங்கற்பம், அதையொட்டிய இலட்சிய வேட்கை, அர்ப்பணிப்பு, தியாகம் யாவையும் ரவீந்திரனுக்கு அவன் மீது பெரும் மதிப்பை தந்தன. அவனோடு நெருங்கிப் பழகியவர் ரவீந்திரன்.

இலங்கை பொலிஸின் சுற்றிவளைப்புக் கைதில் இருந்து தப்புவதற்காக சயனைட் அருந்திய முதல் போராளி சிவகுமாரன்தான். அப்போது ஆஸ்பத்திரி வரை ஊடாடியவர் ரவீந்திரன். அதை ஒட்டிய விடயங்களை 'காலைக்கதிர்' நாளிதழில் தான் வரைந்த கட்டுரைத்  தொடரில் பிரஸ்தாபித்திருக்கிறார் ரவீந்திரன்.

அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் முருகபூபதிக்கு பாராட்டு விழா


பிரபல எழுத்தாளரும்ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கு 
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்,  2022 ஆம் ஆண்டிற்கான இயல் விருதையும்பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை இலக்கியச் சாதனையாளர் விருதையும்   வழங்கிக் கௌரவித்துள்ளனஇதனைத் தொடர்ந்துஎழுத்தாளர் முருகபூபதி அவர்களைப் பாராட்டும் விழா, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய  கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் 2024  ஜனவரி  மாதம் ஆம்திகதி   ஞாயிற்றுக்கிழமை  மாலை 4-00 மணிக்கு நடைபெறவுள்ளது.

 112 High St, Berwick VIC - 3806, Australia  

என்ற முகவரியில் அமைந்துள்ளமூத்த பிரசைகள் மண்டபத்தில் இட


ம் பெறவுள்ள இந்த விழாவில்முருகபூபதியின் இலக்கியச் சாதனைகள்சமூகநலச் செயற்பாடுகள்      என்பவற்றைப்பற்றிஅறிஞர்களும்இலக்கியவாதிகளும்சமூகச் செயற்பாட்டாளர்களும்  உரையாற்றவுள்ளனர்.

 சிறுகதைநாவல்கட்டுரை,பயண இலக்கியம்சிறுவர்     இலக்கியம்கடித இலக்கியம், நேர்காணல் பதிவுகள்புனைவு சாராத ஆக்கங்கள் முதலிய பல் துறைகளிலும் எழுதிவரும் அவரது படைப்புகள் முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களாக  வெளிவந்துள்ளன

 எழுத்தாளர் முருகபூபதிமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் வீரகேசரி     பத்திரிகையில் பணியாற்றியவர்அவரது சுமையின்     பங்காளிகள் என்ற  சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1976 ஆம் ஆண்டிலும்,    பறவைகள் என்ற நாவலுக்கு 2003 ஆம் ஆண்டிலும், இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகள் கிடைத்தன.

 கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைஇந்தியாஅவுஸ்திரேலியா மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள்    எங்கும் வெளிவரும் பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும்  தொடர்ந்து எழுதிவரும் முருகபூபதி , 1987 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்

இலங்கையில் முன்னர், நீடித்திருந்த போரினால் பெற்றோர்களை இழந்த  மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக,  கடந்த 35 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான, இலங்கை மாணவர் கல்வி நிதியம்  என்னும் அமைப்பின் நிறுவனரான முருகபூபதி,  அவுஸ்திரேலியாவில்

 2001 ஆம் ஆண்டிலிருந்து  தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் 

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தையும்     ஆரம்பித்து அதிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 89 எனது படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்களின் வரிசையில் சட்டத்தரணி நிவேதனா அச்சுதன் ! முருகபூபதி

அன்பார்ந்த வாசகர்களுக்கு,  இனிய 2024 ஆங்கிலப் புத்தாண்டு


வாழ்த்துக்கள்.

எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடர் மூன்று வருடங்களையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  மூன்று வருடங்களுக்கு முன்னர் முதல் பாகம் ஆரம்பமாகியது. இதன் இரண்டாம் அங்கம், தொடரும் 2024 ஆம் ஆண்டிலும் இந்த இரண்டாம் பாகம் நிறைவுபெறுமா..? என்பது எனது ஆரோக்கியத்திலும் தங்கியிருக்கிறது.

எனது எழுத்துலக வாழ்வில் சந்தித்தவர்கள் பற்றி முடிந்தவரையில் எழுதி வந்திருக்கின்றேன். இந்த அங்கத்திலும் இனிவரவிருக்கும் சில அங்கங்களிலும்  எனக்கு மொழிபெயர்ப்பு விடயத்தில் பக்கபலமாக இருந்தவர்கள் பற்றி பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த காலப்பகுதியில் எனக்கு அறிமுகமான ரேணுகா – தனஸ்கந்த தம்பதியர் பற்றி, முன்னரும் எழுதியிருக்கின்றேன்.


தனஸ்கந்தா, மாஸ்கோவில் முன்னர் படித்த பொறியியல் பட்டதாரி. அவரது மனைவி ரேணுகா, இலங்கை  வடபுலத்தில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றியவர். எனது புதர்க்காடுகளில் சிறுகதையை ரேணுகா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்தப்  பதிவை,  இலங்கையில் The Island பத்திரிகையில் இலக்கிய நண்பர் கே. எஸ். சிவகுமாரன் வெளிவரச்செய்தார்.

ரேணுகாவின் கவிதைகள், முன்னர் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தொகுத்து வெளியிட்ட சொல்லாத சேதிகள் நூலிலும் இடம்பெற்றுள்ளது.

மலரும் புத்தாண்டில் ( 2024 )  மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினத்தின்போது எனது யாதுமாகி ( பெண் ஆளுமைகள் பற்றிய நூல் ) நூலின் இரண்டாம் பாகத்தில் ரேணுகா தனஸ்கந்தாவைப்பற்றிய விரிவான பதிவு இடம்பெறவிருக்கிறது. குறிப்பிட்ட  இரண்டாம் பாகத்தில் 35 பெண் ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கின்றேன்.

எனது தொடர் நூல்களின் வரிசையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவரவிருக்கும் யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) பற்றிய செய்தியையும் வாசகர்களுக்கு முற்கூட்டியே அறியத்தருகின்றேன்.

1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ் மன்றத்தில் நடந்த பூரணி காலாண்டிதழ் அறிமுக நிகழ்வுக்குச்சென்றிருந்தேன். இது பற்றி முன்னரும் நான் எழுதியிருக்கலாம்.

அப்போது அந்த மன்றத்தின் தலைவராகவிருந்தவர் கு. விநோதன்.  அந்த நிகழ்வில்தான் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்த ஶ்ரீகாந்தா, அஷ்ரப், கனக. மனோகரன் ஆகியோரையும் சந்தித்தேன்.

பின்னாளில் இவர்கள் அரசியலுக்குள் வந்தார்கள்.   அன்றைய சட்டக்கல்லூரி நிகழ்ச்சி பற்றி பூரணி இதழிலும் எழுதியிருக்கின்றேன்.

மெல்பனில் நண்பர் மாவை நித்தியானந்தன் பாரதி பள்ளியை தொடங்கிய காலத்தில், அங்கே எனது மூத்த மகள் பாரதியுடன் படித்தவர்தான் செல்வி நிவேதனா.  எனது மகளை பாரதி பள்ளிக்கு அழைத்துச்சென்றவேளைகளில் நிவேதனாவையும் சந்தித்துப்  பேசி பழகியிருக்கின்றேன்.

தமிழ் கலை, இலக்கிய ஆர்வம் மிக்க நிவேதனாவுடன் உரையாடியபோதுதான், அவர் நான் 1973 இல் கொழும்பு சட்டக்கல்லூரியில் சந்தித்த ஶ்ரீகாந்தாவின் புதல்வி என்பதை தெரிந்துகொண்டேன். நிவேதனாவின்  அம்மாவும் சட்டம் பயின்றவர்தான்.

மெல்பன் பல்கலைக்கழகத்தில் நிவேதனா பயின்ற காலத்தில், அங்கிருந்த தமிழ் மாணவர்களின் ஒன்றுகூடல் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.  நண்பர் மாவை நித்தியானந்தன் தலைமையில் நடந்த பட்டிமன்றத்திலும் நிவேதனா, வெகு சுவரசியமாக வாதிட்டார்.

தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தூண்களில் ஒருவரான தேர்ந்த வாசகர் வசந்தி தயாபரன் ! முருகபூபதி

“ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்  “ என்று எனது


பதிவுகளில் அடிக்கடி சொல்லி வந்திருக்கின்றேன்.

இலக்கியப்படைப்புகளை எழுதும் எழுத்தாளர்களும், செய்திகளை மக்களுக்குத் தரும் ஊடகவியலாளர்களும் அவ்வாறுதான் உருவாக்கப்படுகிறார்கள்.

சிலர் தமது குடும்பத்தின் பின்னணியிலிருந்தும், வேறும் சிலர்,  சமூக உறவுகளினாலும் வெளியுலகத் தொடர்புகளினாலும்  எழுத்துத் துறைக்கு உள்வாங்கப்பட்டு,  உருவாகியிருக்கிறார்கள்.

அவ்வாறு கலை, இலக்கிய, கல்வித்துறை ஆர்வலர்களின் குடும்பத்திலிருந்து உருவாகியவர்தான் திருமதி வசந்தி தயாபரன்.

எங்கள் நீர்கொழும்பூரின் இந்து இளைஞர் மன்றத்தின் செயற்குழுவில் நான் அங்கம் வகித்திருந்த 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இம்மன்றம் நடத்திய மாணவர்களுக்கான நாவன்மைப் போட்டிகளுக்கு கொழும்பிலிருந்து நடுவர்களை அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் நானும் இலக்கியப்பிரவேசம்


செய்திருந்தமையால், கொழும்பில் வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்கள் – ஆசிரியர்களாக பணியாற்றிய  ‘ பூரணி ‘  மகாலிங்கம், சிவராசா, கந்தசாமி, அநு. வை. நாகராஜன்,                     வ. ராசையா ஆகியோரின் நட்புறவு கிடைத்தது.

இவர்கள் எங்கள் ஊரில் நடந்த குறிப்பிட்ட நாவன்மைப்போட்டிகளுக்கு வருகை தந்தனர்.  இவர்களில் ராசையா மாஸ்டர் என நாம் அன்போடு  அழைக்கும் அன்பர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர்மலர் நிகழ்ச்சியில் வானொலி மாமா.

இந்நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரிலிருந்து சிறுவர்களையும் அழைத்துச்சென்றிருக்கின்றேன்.

வ. ராசையா மாஸ்டரின் தலைமையில் கொழும்பில் நடந்த இலக்கிய கூட்டங்களிலும் உரையாற்றினேன்.  இந்தத் தொடர்புகளினால்,  அவரது புதல்வி வசந்தி எனக்கு அறிமுகமானார்.

ராசையா மாஸ்டர் வீட்டில் நடக்கும் சந்திப்புகளின்போது, எமக்கு சிற்றுண்டி , தேநீர் தந்து உபசரிக்கும், வசந்தியும் தாயார்  பூரணம் அவர்களும் அந்தக் கலந்துரையாடல்களில் பார்வையாளர்களாக இருப்பார்கள்.  வசந்தி அப்போது மாணவியாக இருந்திருக்கவேண்டும்.

எழுத்தாளர்களின் கருத்துக்களை கூர்ந்து அவதானிப்பார்.  வசந்தியின் பெற்றோர்கள், கலை, இலக்கிய, இசைத்துறை ஆர்வலர்களாக இருந்தமையால், வசந்தியையும் இந்தத் துறைகள் தொற்றிக்கொண்டன.

வசந்தி, மற்றுமொரு இலக்கியவாதி திருமதி மனோன்மணி சண்முகதாஸின் சகோதரர்  தயாபரனை காதல் திருமணம் செய்த பின்னர், இலக்கிய ஈடுபாட்டிலும், எழுத்துத்துறையிலும்  தீவிரமானார்.

மூன்று புத்திரர்களுக்கு தாயான பின்னரும்கூட  வசந்தி, தனது இலக்கியச் செயற்பாடுகளை தங்கு தடையின்றி தொடருகின்றார்.

கொழும்பில் இயங்கிய தமிழ்க்கதைஞர் வட்டம், ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.  மாதாந்தம் இலங்கைப்  பத்திரிகைகளில், இலக்கிய இதழ்களில் வெளியாகும் சிறந்த சிறுகதைகளைத்  தேர்வுசெய்து,  பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வந்தது.

இந்த அமைப்பில் வசந்தியும் ஒரு தூணாகவே நிற்பவர்.

மாணவப்பராயத்தில் வானொலி நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்று, இசை, நடனத் துறைகளிலும் ஈடுபட்டவர்.   கணவர் தயாபரனின் சகோதரி மனோன்மணி, பேராசிரியர் அ. சண்முகதாஸின் அன்புத் துணைவியார்.

இத்தகைய பின்புலங்கள் அனைத்தும், வசந்தியையும் தேர்ந்த வாசகராகவும், எழுத்தாளராகவும் இலக்கியச்செயற்பாட்டாளராகவும் உருவாக்கியது.

மதுரை காமராசர்  பல்கலைக்கழகத்தில்  ( இளங்கலைமாணி தமிழ் சிறப்பு ) பயின்ற வசந்தி, கணக்கியல், வங்கியியல் கற்கை நெறிகளிலும் தேர்ச்சி பெற்றவர்.  தற்போது மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

வசந்தி,  கொழும்பில் வாழ்ந்தமையால், சிங்கள மொழியையும் கற்றிருக்கிறார்.  தனது அம்மம்மாவிடமிருந்து குழந்தைப்பருவத்தில் கதை கேட்டு வளர்ந்தவர். தாயார் வாசிக்கும் பழக்கத்தை தூண்டியவர்.  தந்தையார் நூல் நயப்புரைகள் எவ்வாறு அமையவேண்டும் என சொல்லிக்கொடுத்தவர்.

அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே….

 

நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி எனும் நடிகர் விஜயகாந்த்...

December 28, 2023 5:26 pm 

ஆகா என்ன பொருத்தம்! – ஐந்து நிமிடத் திரைப்பிரதி - கே.எஸ்.சுதாகர்

நான்கு  பாத்திரங்கள் :         தந்தை (கிருஷ்ணா)

            தாய் (சாந்தி)

            மகன் (பிரசாந்)

            பிரசாந்தின் காதலி (அபிநயா)

 


காட்சி 1

வீடும் வெளிப்புறமும்

காலை

(பிரசாந்திற்கு 27 வயதாகின்றது. கட்டிளங்காளை. முகத்தில் வலை வேலைப்பாடுகள் கொண்ட கன்னக் கிருதா, மீசை. தினமும் மடிப்புக் கலையாமல் ஆடைகளை அயன் செய்து போடுவான். நகரத்தில் ஆர்க்கிட்டெக்காக வேலை பார்க்கின்றான்.)

கிருஷ்ணா: மகன் எங்கையோ வெளிக்கிடுறான்போல கிடக்கு. வெளியிலை மோட்டச்சைக்கிளைத் துடைச்சுக் கொண்டு நிக்கிறான். இனிச் சனிக்கிழமை வெளிக்கிட்டான் எண்டா  வர பின்னேரமாகும்.

சாந்தி: போய் விசயத்தைச் சொல்லுங்கோ. காதும் காதும் வச்சது மாதிரி இருக்கட்டும். சத்தம் போட்டுக் கதையாதையுங்கோ.

கிருஷ்ணா : அவனிட்டைக் கேக்கிறதுக்கு முதல், உம்முடைய சினேகிதி மகாலச்சுமியோடை ஒருக்காக் கதையும்.

சாந்தி: மகாலச்சுமி ஒரு ஆளைத் தூது விட்டு என்னட்டைக் கேட்டதுக்குப் பிறகுதானே நான் இந்த விசயத்தையே தொடங்கிறன்.

கிருஷ்ணா: அட்றா சக்கை எண்டானாம்… அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.

சாந்தி: அச்சாப் பிள்ளை மாதிரி பிரசாந்திட்டைப் போய் விசயத்தைக் கக்கி விடுங்கோ…

கிருஷ்ணா : அவன் நீ சொன்னாத்தான் கேப்பான். நான் வள் சுள் எண்டு கதைக்கிற பேர்வழி. நீயெண்டா பக்குவமாக் கதைப்பாய்.

சாந்தி : உங்களோடை நிண்டு மாரடிச்சா காரியத்துக்கு ஆகாது.

(சாந்தி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருகின்றாள். மகன் பிரசாந்திடம் கேட்பதா விடுவதா என்று தயங்குகின்றாள்.)

சாந்தி: பிரசாந்… உன்னோடை ஒண்டு கதைக்க வேணும். உனக்கும் வயது வந்துட்டுது. இந்த ஆவணியோடை இருபத்தேழு முடியுது. கலியாணம் செய்து கொள்ளுற எண்ணம் ஒண்டும் இல்லையா?

இலங்கைச் செய்திகள்

தாய் மண்ணில் காலடி வைத்த இசைக்குயில் கில்மிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில்; சுனாமி தாக்கத்தின் 19ஆவது ஆண்டு நினைவு தினம்

“மலையகம் 200” நிகழ்வில் புத்தகம் வெளியீடு

மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை

உறவுகளின் கண்ணீரால் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்


தாய் மண்ணில் காலடி வைத்த இசைக்குயில் கில்மிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

December 28, 2023 4:11 pm 

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய கில்மிஷாவிற்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலகச் செய்திகள்

உக்ரைனில் ரஷ்யா சரமாரித் தாக்குதல்

இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருவதால் மத்திய காசாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்: கெய்ரோவில் தொடர்ந்தும் பேச்சு 

காசாவில் தஞ்சமடையவும் இடமின்றி மக்கள் தவிப்பு

சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்

பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா – ஒமான் இணக்கம்

இஸ்ரேலிய தரைவழி தாக்குதல்கள் மக்கள் நெரிசல் மிக்க மத்திய காசாவில் உக்கிரம்



உக்ரைனில் ரஷ்யா சரமாரித் தாக்குதல் 

December 30, 2023 12:38 pm 

உக்ரைன் மீது ரஷ்யா 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டதட்ட 13 பேர் இதில் பலியாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

போர் ஆரம்பித்த 22 மாதங்களில் இதுபோன்ற சரமாரியான தாக்குதல் எட்டு மாதங்களுக்குப் பின் இப்போதுதான் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.