மரண அறிவித்தல்


 சைவத்தின் வழி நடந்த தமிழ்ச் செல்வி தங்கம்மா

 
மகாதேவ  ஐயர் ஜெயராமசர்மா
 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா


  பக்தி என்னும் கருவினை எந்த மொழியும் இலக்கியம் ஆக்கி யதே


இல்லை. ஆனால் பக்தியை உயர்வாக்கிப் பார்த்து அதனை இலக்கியமாய் காட்டிய பெருமை எங்கள் அன்னைத் தமிழ் மொ ழிக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. " பக்தி இலக்கியம் " என் று ஒரு பெரும் பகுதியை தமிழ் மொழியானது தன்னுடை இலக்கிய வரலாற்றில் கொண் டிருக்கிறது என்பதும் முக்கியம் எனலாம். பக்தி இலக்கியம் என்னும் பெருவெளியில் ஆண்களும் வருகி றார்கள். பெண்களும் வருகிறார்கள். பக்தி இல க்கியப் பாதையில் முகிழ்த்த பாடல்கள் அத்தனையும் - இறையருளைப் பற்றியன வாக இருந்த பொழு தும் அவை அத்தனையும் அன்னைத் தமிழின் அழகோவியமாய் அருங்கருத்துக் களை அடக்கியவனாவாய் இலக்கியச் சுவைகளை ஈவதாய் புலவர்க்கெல்லாம் நல் விருந்தாய் தமிழுக்கே பெரும் பொக்கிஷமாய் வாய்த்த நல் வரமென்றே எண்ண வேண்டி இருக்கிறது. அந்தப் பக்தி இலக்கிய வெளி யிலே காலத்துக்காலம் ஆண் டவன் அருளால் பல அருளாளர்கள் வந்து இணைகிறார்கள். அந்தவகையில் ஈழத்தில் நல்லை நகரில் நாவலர் பெருமான் வருகின்றார். அவரின் அடிபற்றி  எங்கள் சைவத் தின் கொழுந்து , சைவ வழி பற்றிட வருகின்றார் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக் குட்டி அவர்கள். 

முதல் சந்திப்பு: தமிழ்நாடு கலை, இலக்கிய, சமூக, அரசியல் ஆய்வாளர் தோழர் சி.மகேந்திரன் ! இளம் அரசியல் தலைவராக ‘ இந்தியா டுடே ‘ இதழ் தேர்வுசெய்த சமூகப்போராளி ! ! முருகபூபதி


அசோக மன்னரால், இலங்கைக்கு அரசமரக் கன்றுடன் அனுப்பிவைக்கப்பட்ட அவரது புதல்வி சங்கமித்திரை பற்றி வரலாற்றில் அறிந்திருப்பீர்கள்.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் அன்று அன்பையும் அகிம்சையையும்  இலங்கைக்கு போதிக்க வந்த சங்கமித்திரை பற்றி, இந்தப்பதிவில்  நான் ஏன் நினைவூட்டுகின்றேன் ?

காரணம் இன்றி காரியம் இல்லை.

இலங்கையில் இன முரண்பாடு தோன்றி, அது ஆயுதப்போராட்ட வடிவமெடுத்தபோது நெருக்கடிகள் உக்கிரமடைந்தன.

1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையின் வடமராட்சிப் பிரதேசத்தில் விமானங்கள் குண்டுகளை பொழிந்து அப்பாவிப்பொது மக்களின் உயிர்களை பலியெடுத்தன.

இந்தத்  தாக்குதல் சம்பவத்தை Operation Liberation என்று அரசியல்


வரலாற்று ஆய்வாளர்கள் பதிவுசெய்துள்ளனர்.

அவ்வேளையில்  அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பர்களாக இந்திய விமானங்கள் இலங்கை அரசின் அனுமதியின்றி வடமராட்சி வான்பரப்பில் பிரவேசித்து உணவுப்பொட்டலங்களை வீசியது.

இதனைக்கண்ட அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவும், பிரதமர் ரணசிங்க பிரேமதாசவும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் மட்டுமன்றி அரசும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தியாவின் இந்தத் திடீர் நடவடிக்கையையடுத்து வடமராட்சித்தாக்குதல் நிறுத்தப்பட்டு,  ஜே. ஆரின். அரசு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.

அதனால் பிறந்த குழந்தைதான் இலங்கை – இந்திய ஒப்பந்தம்.  அதனால்,  13 ஆவது திருத்தச்சட்டம் என்ற மற்றும் ஒரு குழந்தையும் பிறந்தது.  எனினும் இந்தக்குழந்தைகள் வளர்ச்சியடையவில்லை. பிறந்த இடத்திலேயே நிற்கிறது.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் பிறந்தபோது,  குறிப்பிட்ட நல்லெண்ணத்தை பெரிதும் விரும்பிய தமிழ்நாடு இடதுசாரித் தோழர் சி. மகேந்திரன் – பங்கஜம் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்தக்குழந்தைக்கு சங்கமித்திரை எனப்பெயர் சூட்டினார்கள்.

தோழர் சி. மகேந்திரன்,  தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் ஓரத்த நாட்டில் கீழவன்னிப்பட்டு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

தனது பள்ளிப்பருவத்திலேயே இடதுசாரி சிந்தனைகளினால் ஈர்க்கப்பட்டு, அனைந்திந்திய மாணவர் பெருமன்றத்தில் தனது 14 வயதில்  இணைந்தவர்.

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் இவருக்கு அந்த மாணவப் பராயத்திலேயே தோன்றிவிட்டது.

படித்தோம் சொல்கின்றோம்: கலை, இலக்கிய, சமூக, அரசியல் ஆய்வாளர் எம். வாமதேவனின் புதிய வரவுகள் ! மலையக மக்களின் வலிநிரம்பிய வரலாற்றை பேசும் இரண்டு நூல்கள் ! ! முருகபூபதி


இலங்கை மலையகம் 200 பேசுபொருளாகியிருக்கும் சமகாலத்தில்,  கலை, இலக்கிய , சமூக, அரசியல் ஆய்வாளர் எம். வாமதேவன் வரவாக்கியிருக்கும் இரண்டு புதிய நூல்கள் எனக்கு அண்மையில் படிக்கக் கிடைத்தன.

சில வருடங்களுக்கு முன்னர் வாமதேவன்,  இலங்கையில் பசுமையை படரச்செய்த மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை, மலையகத்தின் ஆத்மாவை கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறையில் பதிவுசெய்த சில ஆளுமைகள் பற்றிய தனது பசுமையான நினைவுகளை பதிவுசெய்த  நீங்காத நினைவுகளில் மலையக மண்ணின் மைந்தர்கள் என்ற நூலையும், குன்றிலிருந்து கோட்டைக்கு  என்ற நூலையும் எழுதியிருந்தார்.

இதில்  குன்றிலிருந்து கோட்டைக்கு என்ற நூல், எமது


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,     இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப் போட்டியில் கட்டுரைப் பிரிவில்  ஐம்பதினாயிரம் ரூபா பரிசினையும் பெற்றிருந்தது.

இலங்கையில்  அரச மட்டத்தில் பல உயர்  பதவிகளை வகித்திருக்கும் எம். வாமதேவன், தனது பேச்சிலும் செயற்பாடுகளிலும் தான் பிறந்து வளர்ந்த மலையக மண்ணின் குரலை தொடர்ந்தும் ஒலித்து வந்திருப்பவர்.

மலையக சமூகம்:  ஒரு சமகால நோக்கு என்ற நூலுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விப்பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொன். இராமதாஸ் பதிப்புரையும், மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் முகவுரையும் எழுதியிருக்கிறார்கள்.

மலையகத்  தோட்டத் தொழிலாளர்களின் மாதச் சம்பள விவகாரம் தொடர்ந்தும் நீறு பூத்த நெருப்பாகவே கனன்றுகொண்டிருக்கிறது.

அன்புத் தமிழ் மகனே கேளடா!

  


தாயாகி நானுன்; கருவிற் பதித்த

தலையாய மொழியும் தமிழல்லவா?

ஆயிரம் மொழிகள் உலகில் இருப்பினும்

அன்புத் தாய்மொழிக்(கு) ஈடாகுமோ?

 

அன்பொடு பால்தனைப் பருக்கிடும் போதிலும்

ஆசையாய்த் தமிழ்தனைக் குழைத்தூட்டினேன்

இன்றமிழ்  கற்றுநீ புலமைபெற் றெதிர்வரும்;

சந்ததிக் களித்திடக் காத்திருப்பேன்!நூல் அறிமுகம் எம். வாமதேவன் எழுதிய ' மலையக சமூக சமகாலப் பிரச்சினைகள் - ஒரு நோக்கு ' வீரகத்தி தனபாலசிங்கம் ( முன்னாள் பிரதம ஆசிரியர், கொழும்பு தினக்குரல் )


பள்ளிக்காலம்  தொடங்கி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  பல்கலைக்கழக கல்வி,    அரசாங்க சேவையில் பல உயர் பதவிகள் என்று கடும் உழைப்புடனான நீண்ட பயணத்துக்குப் பிறகு   ஓய்வில் இருக்கின்ற இன்றைய நாட்கள் வரை  பல தசாப்தங்களாக எழுத்துத்துறையில் முற்றிலும் சமூகப் பிரக்ஞையுடன் ஈடுபட்டு வருபவர்  அன்பு  நண்பர் எம். வாமதேவன் அவர்கள். 

     அவர் ஏற்கெனவே பல நூல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார்.  பத்திரிகை ஆசிரியராக இருந்தவன் என்ற வகையில் அவர்  மலையக தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து  தொடர்ச்சியாக  எழுதிய பெருவாரியான கட்டுரைகளை   வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

    தனது சமூகத்தின் நலன்களில்  அவர் கொண்டிருக்கும் தளராத 


பற்றுதியை அதன் மூலம் என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது மாத்திரமல்ல, அரசாங்க சேவையில் மிகவும்  உயர்ந்த அந்தஸ்து பதவிகளில் இருந்த ஏனைய சமூகத்தைச் சேர்த்தவர்களில் எத்தனை பேர் இவரைப் போன்று தங்கள் சமூகத்தின் மேம்பாட்டில்  கருத்தூன்றிய அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன்   செயற்பட்டிருப்பார்கள் ?  என்ற கேள்வியும் என்  மனதில் எழுந்தது.

    ' மலையக சமூக சமகாலப் பிரச்சினைகள் ; ஒரு நோக்கு ' என்ற இந்த நூலுக்கான முகவுரைரை எழுதும்போது சில வருடங்களுக்கு 

 முன்னர் வெளியான   ' மலையகம் ; சமத்துவ அபிவிருத்தியை நோக்கி ' என்ற நூலுக்கான  முன்னுரையில் வாமதேவனின் எழுத்துக்களுக்கு இருக்கும் தகுதி குறித்து  எமது பெருமதிப்புக்குரிய    இலக்கியமேதை  காலஞ்சென்ற தெளிவத்தை ஜோசப் அவர்கள் தெரிவித்த கருத்தை நினைவு படுத்தாமல் என்னால் கடந்துசெல்ல முடியவில்லை.

   " எழுதவேண்டும் என்பதற்காகவோ நூல்களை வெளிக் கொண்டுவரவேண்டும் என்ற ஆசையிலோ  எழுதுபவர் அல்ல வாமதேவன். சமூக அந்தஸ்து மிக்க உயர் அரசாங்க பதவிகளில் இருப்பவர்கள் மேலதிக கௌரவத்துக்காக தங்களுக்கும் எழுதத் தெரியும் என்று எதையாவது எழுதி நூல் வெளியிட்டு உறவினர்கள், சக உத்தியோகத்தர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி பரவசமடைவதையும் நாம் கண்டிருக்கிறோம். நூல்களை வெளியிடவேண்டும் என்பதற்காக கட்டுரைகளை வலிந்து எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள்.            இது போன்ற அசம்பாவிதங்களுக்கு அப்பாற்பட்ட மகத்தான விதிவிலக்காக அமைபவையே வாமதேவனின் எழுத்துக்கள்" என்று தெளிவத்தையார்  குறிப்பிட்டிருந்தார்.

பொம்மை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 ஆங்கிலத்தில் திகில், மர்மம், திடீர் திருப்பம் என்று வித்தியாசமான


படங்களை இயக்கி புகழ் பெற்றவர் அல்ப்ரேட் ஹிட்ச்கொக். இவருடைய படங்கள் மொழி தெரியாதவர்களை கூட விறுவிறுப்பின் உச்சத்துக்கு எடுத்துச் செல்லும். அவருடைய இதே பாணியை பின் பற்றி தமிழிலும் ஒருவர் சில படங்களை இயக்கினார். அவர்தான் எஸ் பாலச்சந்தர். பிரபல வீணை வித்துவானான இவர் திரைப்படம் என்று வரும் போது திகில், சஸ்பென்ஸ் படங்களையே தொடர்ந்து இயக்கினார். அவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் இயக்கிய படம்தான் பொம்மை.

திரையுலககிற்கு புதுமுகமான சில நடிகர்களையும், ஓரளவு

அறிமுகமான சில நடிகர்களையும் ஒன்றிணைத்து குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி , நடித்து, இசையும் அமைத்திருந்தார் அவர். ஒரு நடமாடும் பொம்மையை பிரதான பாத்திரமாகக் கொண்டு அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாக படமாகியிருந்தார் பாலச்சந்தர்.

செல்வந்தரான சோமசுந்தரம் ஒரு ஞாயிறு காலை தன்னுடைய தொழில் பங்காளியான ஜெகதீஷுக்கும், தன் நிறுவனத்தில் பணிபுரியும் தன்னுடைய உறவினருக்கும் தான் அன்று காலை சிங்கப்பூர் செல்லப் போவதாக அறிவிக்கிறார். இதனை கேட்டவுடன் அவர்கள் சோமசுந்தரத்தை கொல்வதற்கு நூதனமான முறையில் திட்டம் தீட்டுகிறார்கள். நடமாடும் பொம்மை ஒன்றில் ஒரு வெடி குண்டை பொருத்தி அதனை சிங்கப்பூரில் இருக்கும் ஒருவரிடம் ஒப்படைக்கும் படி கோருகிறார்கள். பொம்மையின் மடியில் ஒப்படைக்க வேண்டியவரின் விலாசம் செருகப் பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் பொம்மையை ஒப்படைக்க விலாச சீட்டை சோமசுந்தரம் இழுத்து எடுக்கும் போது உள்ளே உள்ள விசை அழுத்தப் பட்டு குண்டு வெடிக்கும், சோமசுந்தரம் இறப்பார். அதன் பிறகு அவரின் சொத்துகள் எல்லாம் பங்காளி ஜெகதீஷுக்கு சென்று சேரும். அவர் தனது சகபாடிகளுக்கும் பிரித்து கொடுப்பார். இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்த முனையும் போது சதிகாரர்கள் பயணம் செய்த டக்சியில் பொம்மை தவறி விடுகிறது. அதன் பின் அது ஒரு குழந்தை, பிச்சைக்காரன், ஒரு சிறுவன், டக்சி டிரைவர், பொம்மைக்கடைக்காரன் என்று பலரிடமும் சுற்றுகிறது. அதே சமயம் எங்கே எந்த நேரம் அது வெடித்து விடுமோ என்ற பதைபதைப்பும், அச்சமும் தொடர்கிறது.

இலங்கை ஒருகாலத்தில் செய்தது போல இஸ்ரேல் பாதுகாப்பு வலயங்களை கொலைக்களமாக மாற்றியுள்ளது

 June 12, 2024


அனைவரினதும் கவனமும் ரபாவின் மேல் காணப்பட்ட வேளை, இஸ்ரேல் காசாவின் தென்பகுதியில் உள்ள சிறிய பகுதியை பாதுகாப்பான மனிதாபிமான வலயம் என மே 22 ம் திகதி அறிவித்துவிட்டு நான்கு நாட்களின் பின்னர் அந்த பகுதி மீது குண்டுதாக்குதலை மேற்கொண்டது.

இஸ்ரேல் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது மேற்கொண்ட தாக்குதில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம்,15 வருடத்திற்கு முன்னர் இலங்கையின் உள்நாட்டுபோரின் இறுதி தருணங்களில் பொதுமக்களின் அவலநிலையை விவரிக்கும் இரகசிய கேபிள்களை விக்கிலீக்ஸ் இடைமறித்த வேளை தெரியவந்த விபரங்களை நினைவுபடுத்துகின்றன.

2009 மே மாதம் கொழும்பில் உள்ள  அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கேபிள்கள் பாதுகாப்பு வலயத்தில்  சிக்குண்டுள்ள ஏழு கத்தோலிக்க மதகுருமார்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க தூதரகம் தலையிடவேண்டும் என மன்னார் ஆயர் எவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் என்பதை தெரிவிக்கின்றன.

தமிழ் அரசு கட்சியின் தலைமை யாரிடம்?

June 13, 2024


தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளதாக எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இதேவேளை ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சிவஞானம் சிறீதரன் தமிழ் பொது வேட்பாளர்தான் தங்களுடைய நிலைப்பாடு என்று தெரிவித்திருக்கின்றார். இருவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான்.

ஆனால் சுமந்திரன் ஆணித்தரமாக தமிழ் அரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக கூறுகின்றார். இதன் மூலம் என்ன விடயத்தை சுமந்திரன் நிறுவமுற்படுகின்றார்? – அதாவதுஇ இப்போதும் நான் நினைத்ததே தமிழ் அரசு கட்சிக்குள் நிகழும் அதனை எவரும் மாற்றிவிட முடியாது. ஆனால் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவோ தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை முன்கொண்டு செல்லும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் தலையசைக்கின்றார் அதேவேளை தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு எதிரான கூட்டத்திலும் முன் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்.

இலங்கைச் செய்திகள்

 கம்பன் விழா கோலாகலமாக ஆரம்பம்

அவுஸ்திரேலியா வீஸா விதிகளை கடுமையாக்குவதாக அறிவிப்பு

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை- சீனா 13ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள்

ஏப்ரல் 21 தாக்குதல் புலனாய்வு தகவல் தொடர்பில் அதிகாரிகள் செயற்பட்ட விதம் சரியா?


கம்பன் விழா கோலாகலமாக ஆரம்பம்

June 15, 2024 6:00 am 

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2024 கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் கோலாகலமாக நேற்று மாலை ஆரம்பமானது. இந்த விழாவுக்கு வருகை தந்த பிரமுகர்கள் கம்பன் தலைமை அலுவலக கோட்டத்திலிருந்து ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க அழைத்துச் செல்லப்படுவதை படத்தில் காணலாம்.   நன்றி தினகரன் 

உலகச் செய்திகள்

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் காசாவின் ரபாவில் மோதல் உக்கிரம்

உலகில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டோர் எண்ணிக்கை 120 மில்லியனாக சாதனை உச்சம்

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு 651.51 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

தொடரும் தாக்குதல்: காசாவில் விரைவில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்புகள் குறைவு

ரஷ்யாவின் வட்டியால் உக்ரைனுக்குக் கடன்

மாலைதீவுக்கு இந்தியா ஒரு மூலோபாய பங்காளியாக முன்பை விட ஏன் அதிகமாக தேவைப்படுகிறது?போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் காசாவின் ரபாவில் மோதல் உக்கிரம்

வான், தரை மற்றும் கடல் வழியாக கடும் தாக்குதல்

June 14, 2024 10:04 am 

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான சாத்தியம் இன்னும் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கும் நிலையில் காசாவின் ரபா நகரில் இஸ்ரேலிய ஹெலிகொப்டர்கள் நேற்று (13) தாக்குதல் நடத்தியதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பதோடு அங்கு ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகள் இடையே வீதிகளில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

ஊடகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பிரான்சு விஜய அரசியல் சந்திப்பு


இன்று 12/06/2024 பிரான்ஸ்  பொபினி Bobigny நரகரத்தின் நகரசபை முதலர்வரும் Seine-Saint-Denis மாவட்டசபையி பிரதித் தலைவரும் ,வெளிநாட்டு வெளிவிவகாரத்திற்கு பொறுப்பானவருமான 

திரு.Abdel Sadi அவர்களுக்கும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும்இடையே சந்திப்பு Bobigny நகரசபையில் நடைபெற்றது. 


குறித்த சந்திப்பில் இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்காக நீதி மற்றும் இலங்கையில் தமிழர்களுநடைபெற்றுவரும் கட்டமைக்கப்பட இனவழிப்பு மற்றும் நில அபகரிப்புகள், அரசியல் கைதிகளின் விடுதலைஇலங்கையிங் தொடர்ந்து நடைபெற்றுவரும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பற்றியகலந்துரையாடல் இடப்பெற்றது. 


குறித்த சந்திப்பு பிரான்சில் தொடர்ச்சியாக அரசியல் வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் தமிழ்பண்பாட்டு வலையம் பிரான்சினால் ஒருங்கிணைக்கப்பட்டது. 


ஸ்ரீ வெங்கடேஸ்வர பிரதிஷ்டை தினம் @ SVT ஜூன் 20, 2024 வியாழன்
“ஷாந்த-காரம் புஜக-ஷயனம் பத்ம-நாபம் சுரேஷம்

விஶ்வ-தாரம் গகந-ஸদৃஶம் மேঘவாரணம் ஶுভாங்கம் । லக்ஷ்மி-காந்தம்

கமலா-நயனம் யோகி-பி-த்யான-ஆகாம்யம்

வந்தே விஷ்ணும் பவ-பய-ஹரம் ஸர்வ-லோகைக-நாதம்”

shaanta-kaaram bhujaga-shayanam padma-naabham suresham
vishwa-dhaaram gagana-sadrisham megha-varanam shubhaangam. lakshmi-kaantam kamala-nayanam yogi-bhi-dhyaana-agamyam
vande vishnum bhava-bhaya-haram sarva-lokaika- naatham”

2024 ஜூன் 20 வியாழன் அன்று SVT இல் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் பிரதிஷ்டை தினம் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது.

காலை 09.00 மணிக்கு பூஜை விதானம் தொடங்கி, கலச பூஜை, பஞ்ச சூக்த மற்றும் மூல மந்திர ஹோமம் மற்றும் 10.30 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ ஆண்டாள் ஆகியோருக்கு அபிஷேகம், பிற்பகல் 2 மணிக்கு "கல்யாண உற்சவம்".