சிட்னியில் மாபெரும் பொங்கல் விழா!
நாநிலம் உன்னை வாழ்த்தியே நிற்கும் !
ஆசை அவசியம் அழிப்பது ஆகா
உழைப்பு முக்கியம் ஊழல் களை
ஏழ்மை என்பது இழிவு அல்ல
இசைஞானி இளையராஜா வின் ❤️❤️❤️ Symphony No. 1 ❤️❤️❤️
“நாங்கள் இன்னும் இன்னும் சேர்ந்து வேலை செய்யப்
போகிறோம், எனக்கு வயது 82 என்பதையும் சொல்லி வைக்கிறேன்”
தியானத்தின் மகிமை
சிவஞானச் சுடர்
பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
(வாழ்நாள் சாதனையாளர்)
சிட்னி -அவுஸ்திரேலியா
உடலுக்கு உரமளிக்க உடற்ப யிற்சி! -
எங்கள்
உயிருக்;கு
உயர்வுதரும் சிவத்தி யானம்!
சடப்பொருளாய் அழிந்திடுமே மனிதரின் உறுப்பு! -
உயிர்
தான்செயும்; வினையாலே எடுத்திடும் பிறப்பு!
ஆறறிவு மனிதர்களும் பக்குவம் என்று - வாழ்வில்
ஆற்றிடுவர் அரன்பணியை அறவழி நின்று
பேரறிவை
நோக்கியவர் எடுத்திடும் பயணம் - ஈற்றில்
பெரும்பயனைத் தரவைக்கும் சிவத்தி யானம்.
தியானத்தின் மூலதனம் உளத்தின் தூய்மை - புறத்
தேகத்தின் சுத்தங்கூடப் பலனைக் கூட்டும்!
மயானத்தின் அமைதிநிலை சூழலிற் தேவை - பின்
மனதும்ஒரு முகமாகிpப்
பாதையைக் காட்டும்!
ஊரோடு ஒன்றி வாழ்வாய்! --- அன்பு ஜெயா, சிட்னி பா வகை: சந்தக் கலி மண்டிலம் (விருத்தம்)
அடுத்திங்குமே வாழ்வோரையே
அடியோடுநீ அறியாய்
கெடுதல்வரும்
காலத்திலே கேட்டற்குமே யாரோ?
விடுப்பாயினி
தனித்திங்குமே வீணாக்கிடும் வாழ்வை
அடுத்தோரிடம்
இணைந்தேவாழ் அதிலேபயன் உண்டே! (1)
என்றென்றுமே
நல்லோருடன் இணைந்திங்குமே வாழ்வாய்!
நன்றென்றுமே
ஆன்றோருமே நயமாகவே உரைத்தார்!
பொன்றும்துணை
என்றேயவர் புரிவார்களே உதவி!
அன்றேஉணர்
வாய்நீயுமே ஆன்றோருரை உயர்வாய்! (2)
பறக்கின்றதோர்
பறவைக்குழு படையாகவே திரியும்,
உறவுக்கென
ஓர்நாளிலே உன்னுள்ளமும் விரியும்;
உறவென்பதன்
உயரின்பமே உன்வாழ்வினில் பெருக்கு!
உறவாகவே
மற்றோரையும் உணர்ந்தால்பல மிருக்கு! (3)
வேர்விட்டவோர்
ஆல்போலநீ விழுதோடுமே வாழ்வாய்!
ஊர்போற்றநீ
எப்போதுமே ஒன்றாகவே வாழ்வாய்!
நீர்போலவே
தெளிவானதோர் நெஞ்சத்துடன் வாழ்வாய்!
பார்போற்றுமே,
பகைநீக்கியே பார்தன்னிலே வாழ்வாய்! (4)
-------------------------------
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டி முடிவுகள். இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெறும் நான்கு எழுத்தாளர்கள். நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும் புதியவர்களை எழுதத் தூண்டுவதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் கடந்த சில வருடங்களாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நாவல்,
சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில்,
ஒவ்வொன்றிலும் கடந்த 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் சங்கத்தின் இந்த பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற
நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு தலா.
50,
000
இலங்கை ரூபாவைப்
பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் பற்றிய விபரங்கள் வருமாறு:
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும்
நூல்களினதும், அவற்றை
எழுதிய எழுத்தாளர்களினதும் பெயர் விபரங்களும்: .
நாவல்: ஒரு நாள் பாவம்
நூலாசிரியர்:
சீமான பத்திநாதர் பர்ணாந்து .
ஜீவநதி வெளியீடு - அல்வாய்.
சிறுகதைத்தொகுதி:
தைலாப்பெட்டி
நூலாசிரியர்: ஏ பீர் முகம்மது
கஸல் பதிப்பகம்
ஏறாவூர்
கட்டுரை: நாட்டார் வழக்காறுகள்
நூலாசிரியர்:
நாராயணபிள்ளை நாகேந்திரன்
கவிதை
மோகனம் -
மருதூர்க்கொத்தன் கவிதைகள்
நூலாசிரியர்: மருதூர்க்கொத்தன்.
திருவிளையாடல் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
புராண, பக்திப் படங்களில் இருந்து தமிழ் சினிமா விலகி சமூகப்
படங்களில் அக்கறை காட்டிக் கொண்டிருந்த அறுபதாம் ஆண்டு நடுப் பகுதியில் ட்ரெண்ட் சேன்ஜ் என்பது போல் ஒரு பக்திப் படம் வந்து தமிழ் திரையுலகையே வியந்து அண்ணாந்து பார்க்க வைத்தது . அந்தப் படம்தான் திருவிளையாடல். அன்றைய கால கட்டத்தில் இப்படி ஒரு படம் வந்ததே ஈசன் திருவிளையாடல் தானோ என்பது போல் இப் படம் வந்து திரையுலகை ஒரு கலக்கு கலக்கியது.
அனுபவம் கொண்ட ஏ பி நாகராஜன் கதை வசனம் எழுதி இப் படத்தை இயக்கியிருந்தார். திருவிளையாடல் புராணத்தில் இருந்து சில சம்பவங்களை எடுத்து அவற்றை பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் ஜனரஞ்சக ரீதியில் படத்தை படைத்திருந்தார் அவர். படத்தின் ஒவ்வொரு காட்சியும், அவரின் திறமையை நிரூபிப்பதை போல் இருந்தது.
அடிமறி மண்டில ஆசிரியப்பா: (ஒவ்வொரு அடியும் தனித்தனியாய் பொருள் முடிந்து ஓசை கெடாது அளவடிகளாக இயற்றப் பட்டுள்ளது.) சுவரோவிய காட்சியும் சிந்திக்க வைக்குதே!
-சங்கர சுப்பிரமணியன்.
ஆலையிலா ஊரில் இலுப்பை பூவினிப்பே
பாலைவனமதில் தனி மரமும் சோலையே
காலையில் மலர்கின்ற தாமரையும் அழகே
மாலையில் மயக்குகிற பொழுதும் இனிதே
பல்லக்கு தூக்குவர் பல்லக்கில் ஏறாரே
சொல்லுக்கு பொருள் தெரியாரும் உளரே
மல்லுக்கு நிற்பதில் மாற்றம் வந்திடாதே
எல்லைக்குள் நின்றால் எதுவும் சிறப்பே
தற்பெருமை கொள்வர் தரணியில் சிலரே
அற்பரும் ஒருநாள் கயமை களைவாரே
கற்றவர் எந்நாளும் அடக்கத்தால் அமரரே
சிற்றோர் என்றுமே சிறப்பின்றி யிருப்பரே
எவரும் வெறுத்திடா மாந்தருமி ங்குண்டே
உவப்ப தலைகூடி உள்ளப்பிரிவர் புலவரே
அவரிவரென குறைகூறா நிற்றலும் பண்பே
சுவரோவிய காட்சி சிந்திக்க வைக்குதே!
நின்றேனும் கொல்லும் தீங்கு (06) - (திகில் தொடர்) - சங்கர சுப்பிரமணியன்.
"ஊர்மிளா! நீ எப்படி இங்கு வந்
விதையை அரைத்துக் குடித்து இறந்து விட்
கோண்டிருந்தபோதே அவள்அந்த யூகலி
மரத்தினடியில் பார்த்ததைப் போலவெ
புடவையுடனும் விரித்த தலைமுடியு
பிரகாசமான ஒளியுடனும் மாறி விகா
அப்போது அதிர்ச்சியில் பெரிதா
"ஊர்மிளா......ஊர்மிள்....... ஆ
நின்றன. மூச்சுதிணற மூக்கிலிரு
உடலிருந்து உயிர்விடை பெற்று செ
தீங்கிழைத்தேன். அதற்கு தண்டனை
விட்டது. இன்று ஒன்றுமறியா கற்
எங்கோ.........................
(முற்றும்)
-சங்கர சுப்பிரமணியன்.