எங்களது மூக்குப்பேணி !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


எச்சில்படாப் பேணி 
எங்களது மூக்குப்பேணி
சோக்காகக் குடிப்பதற்கு
பாங்காக வந்தபேணி
ஆர்குடித்து நின்றாலும்
அசுத்தமாகா அப்பேணி

அம்மம்மா சொத்தாக
ஆகிநிற்கும் மூக்குப்பேணி 

சூடாக இருந்தாலும்
குளிராக இருந்தாலும்
இதமாகக் குடிப்பதற்கு
ஏற்றதுதான் மூக்குப்பேணி
பித்தளையில் வெண்கலத்தில்
பிறப்பெடுத்த நல்லபேணி
நித்தமுமே நீரருந்த
சுத்தந்தரும் மூக்குப்பேணி

அண்ணாந்து குடியென்று
அறிவுதந்த மூக்குப்பேணி
அளவாக உட்செல்ல
அமைந்ததுவே மூக்குப்பேணி
சிந்தாமல் சிதறாமல்
சிறப்பாகக் குடிப்பதற்கு
வந்தமைந்த மூக்குப்பேணி
வாய்தநல்ல வரமன்றோ 

இந்தியாவில் பார்சி இனத்தவர் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

இன்று மக்கள் தாம் பிறந்து வளர்ந்த பொன்னாட்டை விட்டு பிற நாட்டில் வாழ்வது சகஜமாகி விட்டது. இவ்வாறு பிறநாட்டில் போய் வாழ்வதற்கப் பல காரணங்கள் உண்டு. பிறநாட்டில் வசதியான வாழ்வைத் தேடிப் போகிறவர்கள் உண்டு. அதே சமயம் நாட்டில் ஏற்படும் போர் முதலான நெருக்கடி நிலைமைகளால் தம் சொந்த நாட்டில் வாழ முடியாத சந்தர்ப்பத்தில் பிறநாடுகளில் தஞ்சம் புகுவாரும் உண்டு.


இந்தியப் பெருங்கண்டத்தில் இப்படித் தஞ்சம் புகுந்தவர்கள் தான் பார்சி எனப்படும் இனத்தவர். இவர்கள் அன்று பேர்ஷியா எனப்பட்ட பாரசீகத்தில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் கேட்டு வந்தவர்களே!


இவர்கள் யார் என உங்களுக்கு மேலும் தெரிய வேண்டுமா? இந்தியக் கண்டத்தின் பிரதமராக இருந்து மறைந்த இந்திரா.காந்தியின் கணவர் Feroze Gandhi ஒரு பார்சி இனத்தவரே. இவர்கள் நெருப்பைத் தெய்வமாக வழிபடுபவர்கள். வழிபாட்டிற்காக நெருப்பை ஏற்றினால் அதனை அணைக்கக் கூடாது என்ற நம்பிக்கை உடையவர்கள். பண்டைய கிரேக்கர்களிடமும் இத்தகைய நம்பிக்கை இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த பார்சி மக்கள் கப்பலில் ஏறி இந்தியக் கண்டத்தை அடைந்து அங்கு தஞ்சம் கோரிய போது அன்று அந் நாட்டை ஆண்ட மன்னன் தஞ்சம் தர மறுத்தானாம். இதற்கு உதாரணமாக ஒரு பாத்திரத்தில் பாலை இராஜகுரு அவர்களின் முன் வைத்தார். அதன் அர்த்தம் எமது சமுதாயம் பால் போன்றே தூயதாக உள்ளது; இதை நாம் மாசுபடுத்த விரும்பவில்லை என்பதாகும். பிற நாட்டவர் எம்முடன் கலப்பதை நாம் விரும்பவில்லை என்பது அதில் பொதிந்திருந்த உள்ளர்த்தமாகும்.

அதற்குப் பதிலாகக் கப்பலிலே வந்த பார்சிகள் குருவானவரின் பாலில் ஒரு கரண்டி சக்கரையைக் கலந்தனராம். அதன் அர்த்தம் பாலில் சக்கரை கலந்தது போல் உங்களுடன் இனிமையாக நாம் கலந்து வாழ்வோம் என்பதாகும்.,


தமிழர்களை மகிழ்ச்சிடைய செய்த ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் செயல்!

 .


கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் 1998 இல் மெல்பர்ன் வந்திருந்த போது அப்போது நான் பல்கலைக்கழக மாணவனாக ஒரு பேட்டிக்கு அணுகினேன். அவர் மனம் திறந்து கொடுத்த பேட்டி அப்போது உதயம் பத்திரிகையிலும் முழுமையாக வந்தது. அவரின் மணிவிழா மலரையும் எனக்கு அப்போது பரிசளித்திருந்தார்.

பின்னர் 2013 இல் சிட்னியில் நிகழ்ந்த உலகத்தமிழ் இலக்கிய மாநாட்டு நிகழ்வுக்கும் பெருந்தகை ஒளவை நடராசனோடு வந்து கலந்து சிறப்பித்தார்.
இன்று வந்திருக்கும் செய்தியால் உலகத் தமிழர்கள் நாம் பேருவகை கொள்ள வேண்டும்.


On Fri, 27 Aug 2021 at 10:27, Para Sundha <parasundha@gmail.com> wrote:
https://jvpnews.com/article/the-australian-govt-that-made-the-tamils-happy-1629992637


அவுஸ்திரேலியாவில் உள்ள நகரமொன்றில் உள்ள வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கவிக்கோ ஸ்டிரீட் - kavikko street - எனும் பெயரைக் கொண்ட அந்தத் வீதி, புகழ்பெற்ற தமிழக கவிஞரான கவிக்கோ அப்துல் ரகுமானை கெளரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

"இன்னமும் வாழும்" ஈழத்துப் படைப்பாளி மாவை வரோதயன்

 ஏரும் ஊரும் பட்டை நனையும்


எங்கள் அன்னை நெஞ்சினிலே

காரும் சூழும் கண்ணீர் வடிக்கும்

கன்னி மாதா நெஞ்சினிலே

போரும் சூழும் ரத்தம் சுவறும்

பொன்னித் தாயாள் நெஞ்சினிலே

தேரும் ஓடும் சங்கும் முழங்கும்

தேவன் செவ்வேள் கோயிலிலே

 

ஆரைக் காட்டு அழகைக் காட்டி

ஆலிங் கனங்கள் செய்து நிதம்

ஊரைக் கட்டி உவக்கும் மட்டும்

ஊரில் களங்கம் வந்ததென்ன

மாரைக் காட்டிக் களப்பில் ஓடி

மேழித் தனங்கள் செய்த நிலம்

போரைக் கூட்டி பகையில் வீழ்ந்து

போரில் சுடலை யான தென்ன

 

குப்பி லாம்பு ஏற்றி வைத்து

கல்வி கற்கும் கால மிதோ

கப்பி சுற்றி வா னொலிக்கும்

கை கொடுக்கும் ஆதி யிதோ

முற்பிறப்பில் செய்த தீதோ

முற்றிப் போன வீண் முரசோ

தப்பி விட்டால் தாயம் என்று

தஞ்சம் தேடும் நாளிதுவோ?

 

விந்தை மீந்து வளர்ந்த காலம்

வீழ்ந்து ஆதி ஆனதுவோ

சந்தை போட்டு சலித்துப் போன

சாத்வீகங்கள் மாண்டனவே! - மாவை வரோதயன்

 

அஞ்சலிக்குறிப்பு “ நல்ல நல்ல நூல்களே நமது சிறந்த நண்பராம் “ எனப்பாடிய சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார் முருகபூபதி

மகாலம், கொரோனா காலமாகியமையால், அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலமாகவும்  இது மாறிவிட்டது.  கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம்  அடுத்தடுத்து எமது தமிழ்ச்சூழலில் பலரையும்  நாம் இழந்து வருகின்றோம்.

ஒருவருடைய மறைவுச்செய்தி  அண்மைக்காலத்தில் கிடைத்தால்,  “ என்ன நடந்தது..? அவருக்கும் கொரோனா தொற்றா..?   எனக்கேட்கும் நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

கடந்த சில வருடங்களாக சில நோய் உபாதைகளுடன் காலத்தை கடத்திக்கொண்டிருந்த,  ஈழத்து இலக்கிய உலகில் சிறுவர் இலக்கியத்திற்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட  எழுத்தாளரும் முன்னாள் ஆசிரியர் – அதிபர் த. துரைசிங்கம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கிடைத்ததும், அவரது சகோதரர்   எழுத்தாளர்  இளங்கோவனுடன் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துவிட்டே, இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன்.

இளங்கோவன் பிரான்ஸில் வசிப்பவர்.  இவரது குடும்பத்திலிருந்து


எழுத்தாளர்கள் நாவேந்தன், சட்டத்தரணி தமிழ்மாறன், ஆகியோருடன் துரைசிங்கமும் நீண்ட காலமாக இலக்கியப்பிரதிகள் எழுதிவந்தவர்.

இலங்கையில் சப்த தீவுகள் என வர்ணிக்கப்படும்  பிரதேசத்தில்    வீதி மார்க்கமாகச்செல்லக்கூடிய புங்குடுதீவு, பல கலை, இலக்கிய ஆளுமைகளையும்  கல்விமான்களையும் எமக்கு தந்திருக்கிறது.

அவர்களில் துரைசிங்கமும் குறிப்பிடத்தகுந்த ஒருவர்.

நான் வீரகேசரியில் ஒப்புநோக்காளராக எனது பணியைத் தொடங்கிய காலத்தில்  இலங்கையின் பல பிரதேசங்களையும் சேர்ந்த நிருபர்கள் எழுதி அனுப்பும் செய்திகளை அச்சுப்பிரதியில் ஒப்புநோக்கும்போது,  குறிப்பிட்ட செய்திகளின் மூலப்பிரதிகளையும் பார்க்கவேண்டும் என்பது அவசியம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து அப்போது யாழ். நிருபர் செல்லத்துரையும்,  மானிப்பாயிலிருந்து அரசரட்ணமும், உடுப்பிட்டியிலிருந்து தில்லைநாதனும், புங்குடுதீவிலிருந்து துரைசிங்கமும் எழுதிக்கொண்டிருந்தனர்.

தினமும் இவர்களின் எழுத்துக்களை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்து வந்தமையால்,  இன்றும் அவர்களின் எழுத்துவடிவம் மனக்கண்களில் தங்கியிருக்கிறது.

துரைசிங்கம் புங்குடுதீவு ஶ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் முதலில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் பணியாற்றியவர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கான அவசர வேண்டுகோள் - கோவிட் -19 நெருக்கடி மற்றும் உயிர் காக்கும் CPAP இயந்திரங்கள்









இலங்கையில், ஒரு நாளைக்கு 3,500 க்கும்மேற்பட்ட கோவிட் நோயாளிகளுடன்  அதிகரித்து வருகிறது. வட மாகாணத்தில் கொவிட் இறப்புகள் அதிகரித்து வருவதை நாங்கள் அறிவோம். இது முக்கியமாக ஆதாரங்களின் பற்றாக்குறையால், மருத்துவமனை சமாளிக்க மற்றும் நிதி கோரவில்லை.  

யாழ்ப்பாணத்தில் கோவிட் -19 நிலைமை அதிகரித்து வருகிறது, மேலும் அவர்களின் ICU நிரம்பியுள்ளது. அவர்கள் அதிக சார்பு பராமரிப்புடன் நோயாளிகளை (வார்டு 4) கவனிக்க ஒரு புதிய வார்டைத் திறக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம், 5 CPAP இயந்திரங்கள் தேவை. ஒரு CPAP இயந்திரம் நேர்மறை ஆக்ஸிஜன் அழுத்தத்தை அளிக்கிறது மற்றும் COVID.19 நிமோனியா நோயாளிகளுக்கு நுரையீரலைத் திறக்கிறது. செலவுகள் அதிகமாக இருப்பதால் மருத்துவமனை பெரும்பாலும் CPAP இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. தேவையானவற்றின் உருப்படியான பட்டியலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கோரியுள்ள்ளது, எனினும் இயந்திரங்கள் விலை உயர்ந்தவை.   ஒவ்வொரு CPAP இயந்திரமும்   AUD $ 8,300.00 (12,00,000 இலங்கை ரூபாய்) செலவாகும்.

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 56 வாழ்நாளில் ஜூலை மாதத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் ! நினைக்கத் தெரிந்த மனதிற்கு மறக்கவும் தெரியாது ! ! முருகபூபதி


அன்று 1984 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி.

 எனது வாழ்நாளில் பல முக்கியமான சம்பவங்கள் இந்த ஜூலை மாதத்தில்தான் நிகழ்ந்துள்ளன.

இம்மாதத்தில் 1951 ஆம் ஆண்டு  13 ஆம் திகதி பிறந்தேன்.  அதே திகதியில் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் எனது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம் வெளியான மல்லிகை இதழ், எங்கள் வீடுதேடி தபாலில் வந்தது.

1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் எனக்கு திருமணமும் நடந்தது.

வீரகேசரியுடனான எனது தொடர்பு முதலில் நீர்கொழும்பு பிரதேச


நிருபராக 1972 இல் ஜூலை மாதம்தான் தொடங்கியது.

பின்னர் 1977 ஆம் ஆண்டு அங்கு ஒப்புநோக்காளராக இணைந்து,  சிவநேசச்செல்வன் 1984 இல் பிரதம ஆசிரியராக வந்ததும் கிடைத்த துணை ஆசிரியர் பதவியும் இதே  1984 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி கிடைத்தது.

ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தபோது, கடமை நாட்களில் தினமும் வீரகேசரியின் பக்கங்களை முழுமையாக ஒப்புநோக்கிய பின்னர், பக்கத்தின் இறுதியில் எமது கையொப்பமும் வைத்துவிட்டு, ஆசிரிய பீடத்தில் காண்பிப்பதுதான் நடைமுறை.  அங்கு பிரதம ஆசிரியரோ, அல்லது செய்தி ஆசிரியரோ அவர்களும் ஆசனத்தில் இல்லையாயின் வேறு யாராவது துணை ஆசிரியரோ மேம்போக்காக அதனைப் பார்த்து, ஒப்பமிட்ட பின்னர்தான், குறிப்பிட்ட பக்கம் மீண்டும்  அச்சுக்கோப்பாளர் பிரிவுக்குச்செல்லும். குறிப்பிட்ட  பக்கத்திலும் மேலும் திருத்தவேண்டிய எழுத்துக்கள் இருப்பின் அவற்றையும் மாற்றி வைத்துவிட்டுத்தான்  அச்சுக்குத்தயாரகும்.

எனவே ஒரு பத்திரிகை தயாராகி வெளியே வாசகரிடம் செல்வதற்கிடையில் எத்தனையோ நடந்துவிடும். 

தினமும்  ஆசிரியபீடத்திற்கு இதற்காக சென்று வந்த நான், அன்று  ஜூலை 01 ஆம் திகதி  காலை ,  அங்கு எனக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் வந்தமர்ந்தேன்.

அங்கிருந்தவர்கள் புன்னகை சிந்தி வரவேற்றார்கள். புன்னகையில் பல ரகம் இருக்கிறது !