உள்ளுராட்சி சபைகளின் உத்தியோக பூர்வ முடி


இலங்கையின் வடகிழக்கில் உள்ளுராட்சி சபைகளின் உத்தியோக பூர்வ முடிவுகளின்படி 17 சபைகளை TNA கைப்பற்றியுள்ளது:-
65 ஆம் இணைப்பு 2011 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்களின் நேரடிச் செய்திகள்
65
யாழ்ப்பாணம் மாவட்டம் 
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை 
இலங்கை தமிழரசுக் கட்சி - 16 ஆசனங்கள் 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 05 ஆசனங்கள்
64
கிளிநொச்சி மாவட்டம் 
பூநகரி பிரதேச சபை 

தமிழர் விடுதலைக் கூட்டணி - 06 ஆசனங்கள் 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 04 ஆசனங்கள்


சாபங்களைச் சுமப்பவன் ----- எம்.ரிஷான் ஷெரீப்,


.



நேர் பார்வைக்குக் குறுக்கீடென
ஒரு வலிய திரை
ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று

பசப்பு வரிகளைக் கொண்ட
பாடல்களை இசைத்தபோதும்
வெறித்த பார்வையோடு தான்
துயருறுவதாகச் சொன்ன போதும்
பொய்யெனத் தோன்றவில்லை
ஏமாறியவளுக்கு
இருள் வனத்திலொரு ஒளியென
அவனைக் கண்டாள்

புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன
வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன
அவனது கைகள்
ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன
தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்

உலகச் செய்திகள்

நோர்வேயில் பாரிய குண்டுவெடிப்பு இலங்கையர்கள் எவருக்கும் 
    பாதிப்பில்லை
இலங்கை, இந்தியருடன் கப்பல் கடல் கொள்ளையரால் கடத்தல்.
தொலைபேசி உரையாடல்கள் ஒற்றுக்கேட்கப்பட்ட சர்ச்சையின் 
   மூலமாகக் கருதப்படும் செய்தியாளர் சடலமாகக் கண்டுபிடிப்பு
தொலைபேசி உரையாடல் ஒற்றுக்கேட்ட விவகாரம் பிரிட்டனின்  
    பிறிதொரு உயர்மட்ட பொலிஸ் அதிகாரி இராஜிநாமா 
பிரபல பாடகி எமி வைன்ஹவுஸ் மர்ம மரணம்
# இலங்கை விவகாரம் குறித்து மன்மோகனுடன் பேசுவார் ஹிலாரி _



18/07/2011
ந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லவுள்ள ஹிலாரி கிளின்டன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார்.

விக்ரோறிய மானிலத்தில் ஆடிக்கூழ் விழா


.

விக்ரோறிய மானிலத்தில் கேசி காடினியா(casy+cardinia  council) பகுதியில்
ஆரம்பிக்கப்பட்ட கேசி தமிழ் மன்றம் பல நிகழ்வுகளை நடாத்திக் கொண்டு
வருகின்றது இதன் நிமித்தம் ஆடிப்பிறப்பு விழாவினை விழாவினை Berwick senior  citizeons Hall 122, high street, Berwick, என்ற முகவரியில் கடந்த ஞாயிறு 17.07 20011 அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்தினை ராகமாலிகா இசைக்
கல்லுரியின் ஆசிரியை டவீணா வேந்தனின் மாணவிகளான ஆரபி மதியழகன்இ நித்தியா பத்மசிறிஇ காவியா வேந்தன் ஆகியோர் பாடினார்கள்

டான்ஸ் கொம் 2011

கொக்குக் குஞ்சுகள் ---- சிறுகதை ----அகளங்கன் .

                         
பம்பைமடு ஓர் அழகிய கிராமம்.

வவுனியா வாவட்டத்தில் வவுனியாவின் மேற்கே ஏழுமைல் தொலைவில் உள்ளது.

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியில் ஐந்து மைல் தூரம் சென்று பம்பைமடுச்சந்தியை அடையலாம்.

சந்தியிலிந்து வடக்கு நோக்கி இரண்டு மைல் தூரம் காட்டுக்குள் சென்றால் அந்தஅழகிய கிராமத்தைக் காணலாம்.

இது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முந்திய நடைமுறை இப்பொழுதுசந்தியில் பெரிய இராணுவ முகாம் இருப்பதால் அதைத் தாண்டிப் புதுப் பாதை வழியேசெல்ல வேண்டியிருப்பதால் இன்னும் ஒரு மைல் தூரம் அதிகம்.

மெல்பனில் பேராசிரியர் சிவத்தம்பிக்கு இரங்கல் கூட்டம்


.


 மறைந்த தமிழ் அறிஞரும் இலக்கிய விமர்சகருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் இரங்கல் கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில்
    Preston  Spectrum  Immigration  Services  மண்டபத்தில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா கிளை ஒழுங்கு செய்துள்ளது.
     பேராசிரியரின் நண்பர்களும் எழுத்தாளர்களும் இந்நிகழ்வில் இரங்கல் உரையாற்றுவர்.

மேலதிக விபரங்களுக்கு: லெ. முருகபூபதி (03) 9308 1484,  04166 25766


அறிவித்தல்

.


இலங்கை , இந்திய செய்திகள்

பத்மநாபசுவாமி கோவில் வழக்கின் மனுதாரர் சுந்தரராஜன் காலமானார்


17/07/2011
திருவாங்கூர் அரச குடும்பத்தின் கீழ் ஓர் நம்பிக்கையின் அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சொத்துக்கள் யாருடையது?, அதன் பெறுமதி என்ன? எனும் கேள்விகளை எழுப்பி வழக்கு தாக்கல் செய்த மனுதாரர் டி.பி. சுந்தரராஜன் நேற்று காலமானார்.

70 வயதுடைய இவர், கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்ததாக அவருடைய உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், விஷேட புலனாய்வு பிரிவிலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு பிரிவிலும் கடமையாற்றியவராவார். இவருடைய திடீர் மரணம் அந்நகரவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி வீரகேசரி இணையம்

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 1


.
                                                                                           பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


நீர்வளமும், நிலவளமும் நிரம்பப்பெற்றது மட்டக்களப்பு நாடு. அந்த மண்ணிலே நிறைந்திருப்பது கனிவளம். மக்கள் மனதிலே உறைந்திருப்பது கவிவளம். மானோடும் காடுகளும், மயிலாடும் சோலைகளும், வற்றாத நீர் பாயும் வாவிகளும், தானாக விளைகின்ற கழனிகளும் நிறைந்த அந்த நாட்டிலே மீன்கூட, பாடும்! அந்த மக்கள் கதைக்கும் தமிழிலும் ஒரு கவிநயம் தெரியும். வளம் மிகுந்த நாடு என்பதால், மக்களுக்கு ஓய்வுநேரம் மிக அதிகமாகவே இருந்தது. அதனால் கலைகளில் ஈடுபாடு மிகுந்தது.

உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் அவர்கள் மிக அழகாகப் பாடினார்-

மட்டுநகர் நாடு கவி மணக்கும் நாடு
மகளிர் வாய்த் தாலாட்டில் மயங்கும் நாடு

அயராமல் இயங்கிய மூத்தபத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம் - முருகபூபதி

.
நான் எழுத்துலகில் பிரவேசித்த 1972ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபராகவும் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதனால் கொழும்பில் வீரகேசரி அலுவலகத்திற்கு அடிக்கடி செல்ல நேர்ந்தது. அவ்வேளைகளில் அங்கு பிரதம உதவி ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் எஸ்.எம். கார்மேகமும், எஸ்.நடராஜாவும் தான்.

இவர்கள் இருவரும் இருமருங்கும் அமர்ந்திருக்க நடுவே-நடுநாயமாக செய்தி ஆசிரியர் டேவிட் ராஜூ இருப்பார். இவர்கள் மூவருக்கும் பின்னால் அமைந்திருந்த அறைகளில் ஒவ்வொன்றிலும் ஆசிரியர்களான கே.வி.எஸ்.வாஸ், க.சிவப்பிரகாசம் ஆகியோர் அமர்ந்திருப்பர்.

ஈழத் தமிழ்ச் சங்கம் விக்டோரியா விடுத்துள்ள அறிவித்தல்

.

கடந்த 32 வருடங்களாக தமிழ்ச் சமூகத்திற்குச் அரிய பல சேவைகள் செய்து வரும் விக்டோரியா ஈழத் தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும், காலஞ் சென்ற மாமனிதர் பேராசிரியர் சி.ஜே.எலியேசர் அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவுப் பேருரை

Celebrating and Preserving Cultural Heritage

என்ற தலைப்பில் பேருரையை வழங்குபவர்

Anthropology பேராசிரியர் Dr.Rohan Bastin

கலை, கல்விப் பீடம், Deakin பல்கலைக்கழகம், மெல்பேண், அவுஸ்திரேலியா.

நடைபெறும் காலம் :- 24.07.2011 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.30 மணி முதல் 5.00 மணிவரை.

நடைபெறும் இடம் :- Rotunda Theater RI, கட்டிடம்; 8. Monash பலகலைக்கழகம் Clayton வளாகம். Wellington Rd, Clayton. மெல்வழி விபரம் 70 G 10

நிகழ்வின் முடிவில் யாவருக்கும் சிற்றுண்டிகள், தேனீர் விருந்து வழங்கப்படும். அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள் விக்டோரிய ஈழத் தமிழ்ச் சங்கத்தினர்.

மெல்பனில் முருகபூபதிக்கு மணிவிழா


.
சமூக சேவையாளரும் தமிழ் இலக்கியவாதியுமான திரு. லெட்சுமணன் முருகபூபதியின் மணிவிழாவை முன்னிட்டு அவர் அங்கம் வகிக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆகியன இணைந்து அவரது சேவைகளை பாராட்டும் முகமாக எதிர்வரும் 31-07-2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடல் நிகழ்ச்;சியை ஒழுங்கு செய்துள்ளன.

நடைபெறும் இடம்:

Mulgrave Community Centre


355 Wellington Road, Mulgrave


காலம் மாலை 6.30 மணி

இந் நிகழ்ச்;சியில் பேராசிரியர் அமீர் அலி, கலாநிதி லயனல் போபகே, சட்டத்தரணி செ. ரவீந்திரன் திரு எஸ். கொர்னேலியஸ் ஆகியோரும் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ள அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றுவார்கள்.

மேலதிக விபரங்களுக்கு:

திருமதி அருண்.விஜயராணி 94997176

திரு சண்முகம் சந்திரன் 0432633033

நொயல் நடேசன் 0411606767

வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்

.
கறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும்
கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு
வீடுவந்த உயிர்பலிகள்!

அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று
நம்பியிருப்பவர்களை
எந்த கொய்யா வந்தும் அதனை மாற்றிடவில்லை;

இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே
நீள்கிறதிந்த இழிபிறப்பு!

அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த
சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த
சங்கிலி அறுக்கவோ சாக்கடை சீர்செய்யவோ இயலவேயில்லை!

இன்னும் ஒரு தேர்தல், இன்னொரு ஆட்சி
இன்னொரு நாயகன் வருவானென்று நம்பி நம்பியே
மரணத்தை முட்டிவிட்ட வரலாறுகளே எங்களிடம் மிச்சம்!

தமிழ் சினிமா

தெய்வத்திருமகன்


படத்திற்குப் படம் தன்னை மெருகேற்றி கொள்ளும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு சிறந்த படமாக வெளியாகியிருக்கிறது ”தெய்வத்திருமகள்”.

ஐந்து பாட்டு, மூன்று சண்டை, பஞ்ச் வசனங்கள் என்று பெரிய நாயகர்களை மசாலா கண்ணோட்டத்தில் பார்க்கும் சில இயக்குனர்களுக்கிடையே, தான் முற்றிலும் மாறுபட்டவன் என்பதை மறுபடியும் ஒரு முறை நிருபித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.

மனவளர்ச்சி குன்றிய விக்ரமுக்கும், அவருடைய காதல் மனைவிக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் விக்ரமின் மனைவி இறந்து விடுகிறார். குழந்தை அழுதால் கூட என்ன செய்வது என்று தெரியாத மனநிலையில் இருக்கும் விக்ரம், தனது பெண் குழந்தைக்கு ”நிலா” என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார்.

குழந்தைக்கு ஐந்து வயதாகி பள்ளிக்கு செல்லும் இடத்தில் பிரச்சினை ஆரம்பமாகிறது. விக்ரமின் பணக்கார மாமனார் திடீரென்று நிலாவை விக்ரமிடம் இருந்து பிரித்து விடுகிறார். நிலாவை தேடி அலையும் விக்ரமுக்கு உதவ முன்வரும் வழக்கறிஞரான அனுஷ்கா, நீதிமன்றத்தின் மூலம் நிலாவை மீட்க சட்டப்படி போராடுகிறார். மனவளர்ச்சி குன்றியவர் குழந்தையை வளர்க்க முடியாது என்று சொல்லும் சட்டத்திற்கு இடையே விக்ரமின் தந்தை பாசம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை உணர்ச்சிக்கரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவுஸ்திரேலியா