அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 18/03/2013 இரவு

படப்பிடிப்பு ஞானி



அன்பினால் விளைந்த அன்பாலயம் - சுனிதாவின் பார்வையில்




அன்பாலயம் என்ற அமைப்பினால் மார்ச் மாதம் 2ம்திகதி (02/03/2013) Bowman Hall,  Blacktown  ல் நடாத்திய “இளம் தென்றல் 2013” க்கு போய்க் கண்டு களிக்க வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சிக்கு மண்டபத்துக்கள் நுழையும் பொழுதே எனக்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் நேர்த்தியைக் காணக் கூடியதாக இருந்தது. வாசலில் நின்றவர்கள் புன்சிரிப்புடன் வரவேற்று இசை, வாத்தியம், நடனப்போட்டிகளுக்கான தராதர அட்டைகளையும் (voting card) அன்பாலய இதழையும் அன்புடன் வழங்கினர்.

நிகழ்ச்சி சில நிமிடங்கள் தாமதமாக தொடங்கினாலும் மண்டபத்தில் அமர்ந்த பார்வையாளர்கள் பொறுமையாகவும் ஆர்வமாகவும் காத்திருந்தார்கள்

ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின்னர் தமிழ்மொழி வாழ்த்து, அவுஸ்திரேலிய தேசிய கீதமும் தொடர்ந்தது. நிகழ்ச்சி நெறியாளர் திரு மகேஸ்வரன் பிரபாகரன் “அந்தப் பார்த்தனின் கீதையுடன்” தொடங்கியது ஒரு பளிச். மகேஸ்வரன் பிரபாவைப் போல அவரது குரலும் கம்பீரம் தான்.

முதல் நிகழ்ச்சியாக “கீதாஞ்சலி” இசைக்குழுவின் பின்னணியுடன் செல்வி அபிஸாயினி பத்மஸ்ரீ யின் வசீகரக் குரலில் “அடி நீ எங்கே” தாஜ்மஹால் பாடலுடன் தொடங்கியது.

பாவலனின் “செந்தமிழ் தேன்மொழியாள்” பாடலின் விருத்தத்திற்கு விசிலும், கரவொலியும் அரங்கத்தை அதிரச் செய்தது. “பாவலா நீர் பாடவல்லவர்” வாழ்க
அத்துடன் என்னை மிகக் கவர்ந்தவர்கள் அந்த அண்ணா, தங்கை “சேயோன், மாயி ராகவன்” குழந்தைகள். என்ன சுட்டித்தனமும், பாசமும். மாயிக்கு அவளது அண்ணாவுடன் அப்படி ஒரு குஷி, இந்தக் குழந்தைகளுக்கு சுற்றி போடவேண்டும்.

அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - கொடியேற்றம் - 18/03/2013

 
படப்பிடிப்பு ஞானி



அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா

அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா விநாயகர் அனுக்ஞை திருவிழா மார்ச் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியிலிருந்து மிக சிறப்பாக நடைபெற்றது. 

படப்பிடிப்பு ஞானி


இரவு விழித்திருக்கும் வீடு - எம்.ரிஷான் ஷெரீப்

.


                         


நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய
அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது
இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்
சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின்
காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த
உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை

பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்
அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது
மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்
ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன
களைகளகற்றுமுன் வலிய கைகளை
நெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது
மூதாதையர் தோண்டிய கிணற்றில்
ஒரு துளி நீரிருக்கவில்லை

இராகசங்கமம் நிகழ்ச்சி என் பார்வையில் -செ .பாஸ்கரன்

 .


கடந்த ஞாயிற்றுக்கிழமை 10.03.2013 இராகசங்கமம் நிகழ்ச்சி 6.00 மணிக்கு துர்க்ககை அம்மன் ஆலயத்தில் இடம் பெறவிருந்ததால் 5.50 மணிக்கே சென்றுவிட்டேன். சண் குமாரலிங்கம் சப்தஸ்வரா பாலாவுடன் சேர்ந்து அம்மன் ஆலயத்திற்காக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார். தென்னிந்திய இசையமைப்பாளர் சதீஸ் வர்சனின் இசையில் உள்ளுர்கலைஞர்களும் இணைந்துகொள்ள இங்குள்ள இசை அறிவுள்ளவர்கள் இராகங்களோடு பாடும் பாடல் போட்டிதான் இந்த இராகசங்கமம்.


6.30 மணிதாண்டி விட்டது நமக்கு பொறுமையும் சற்றுக்குறைந்து கொண்டு போக தொடங்கியது. 6.35 மணிக்கு சண் குமாரலிங்கம் சபையினருக்கு வணக்கம் சொல்லி நிகழ்வை ஆரம்பித்துவைப்பதற்காக மங்கல விளக்கேற்றுவதற்கு துர்க்கையம்மன் ஆலயத் தலைவர் திரு ரட்ணம் மகேந்திரன் அவர்களை அழைக்க அவர் வந்து விளக்கேற்றினார் நான் மண்டபத்தை ஒருமுறை திரும்பிப்பார்த்தேன் மக்கள் வந்து அமர்ந்து மண்டபம் நிறைந்து காணப்பட்டது.


தமிழ் வளர்த்த சான்றோர் விழா







தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2013  நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர் பெருமானையும் நவாலியூர் தந்த “தங்கத் தாத்தா” சோமசுந்தரப்புலவர் அவர்களையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ‘தமிழ் வளர்த்த சான்றோர் விழா–2013 சென்ற 9–3—2013 சனிக்கிழமை அருள்மிகு சிறீ துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபத்தில் ----- துர்க்கை அம்மன் கோயில் கல்வி மற்றும் கராசாரப் பிரிவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவித்திருந்தபடி விழா நாதஸ்வரக் கலைஞர்கள்    ராகவன் -- ரூபதாஸ்; குழுவினரின் மங்கல இன்னிசையுடன் ஆரம்பித்தது 

உலகச் செய்திகள்


மீண்டும் கலவர பூமியாக மாறிய எகிப்து!

டெல்லி மாணவி வல்லுறவு வழக்கு: முக்கிய குற்றவாளி ராம் சிங் சிறையில் தற்கொலை!

ஐ.நா. தீர்மானத்திற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு!

புதிய பாப்பரசர் தெரிவானார்!
மீண்டும் கலவர பூமியாக மாறிய எகிப்து!

எகிப்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இக்கலவரம் ஏற்பட்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2290600-188869A8000005DC-481_634x379.jpg
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
எகிப்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற கால்பந்து போட்டித்தொடரொன்றின் போது கலவரம் ஏற்பட்டது.
போர்ட் செட் நகரில் நடந்த ஆட்டத்தில் எகிப்தின் முன்னணி அணிகளில் ஒன்றான அல் அலி கிளப் அணியை, உள்ளூரைச் சேர்ந்த அல் மஸ்ரி அணி வீழ்த்தியது.

நல்லதோர் நடன நிகழ்ச்சி - நா. மகேசன் (வானொலி மாமா)

.

Photos by Paskaran 


16. 3. 2013 சனிக்கிழமை அன்று சிட்னி சில்வவாட்டரில் அமைந்துள்ள பஹாய் அரங்கில் நடைபெற்ற நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசருடைய நடனக் கல்லூரி மாணவிகளுடைய நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன். வழமையான நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பார்க்க இந்த நிகழ்ச்சியில் பல புதுமைகளைக் காணக்கூடியதாக இருந்துது. முதலில் அவற்றைப் பட்டியல் இட்டபின் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறேன்.

1.    பெரும் பணச்செலவில் நிகழ்ச்சி நிரல்களைக் கவர்ச்சியாக அடித்து நிகழ்ச்சி முடிந்தபின் அவற்றில் சில அங்குமிங்கும் கிடந்து கால்களில் உளக்குப் படாமல் இருந்தது.
2.    பங்கு பற்றிய மாணவிகளின் பெயர்களைச் சொல்லி நேரத்தை வீணாக்காது கலை கலைக்காகவே பெயருக்காக அல்ல என்பதை வெளிப்படுத்தியது. இதற்குப் பெற்றோர் ஒத்துழைத்தது.
3.    பங்குபற்றிய மாணவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னும் முடிந்த பின்பு
ம் மேடைக்கு வெளியே ஆடை அலங்காரங்களுடன் வந்து காட்சி தராமல் இருந்தது.
4.    எல்லாத் தனித் தனி ஆடல்களும் தங்குதடையில்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து
முழு ஆடல்களும் 3 மணி நேரத்துக்கு உள்ளாகவே நிறைவுற்றது.
5.    நடனங்களை நீட்டிப் பார்வையாளருடைய முது
குகள் நோவெடுக்கா வண்ணம் பார்த்துக் கொண்டது.

6.    மாணவர்களும் பெற்றோரும் ஒழுங்கையும் அமைதியையும் பேணியமை.
7.    அந்த நிதிக்காக இந்த நிதிக்காக என்று சொல்லி ஆதரவு தேடாமல் நிகழ்ச்சியை இலவசமாகவே வழங்கியது.




சிட்னியில் திருமலை 30.03.2013

.

ஒரு காரின் கதை - எஸ். கிருஷ்ணமூர்த்தி


அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும், சியவச என்றொரு அதிஸ்ட லாபச்சீட்டு இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் விற்பனை செய்யபபட்டது. அந்தச் சீட்டின் விலை என்னவென்று ஞாபகமில்லை. என்ன நிதிசேகரிப்புக்காக அது விற்கப்பட்டது என்பதும் நினைவில்லை. ஆனால் மறக்காதது, அதன் முதல் பரிசு கார்.  அந்தச் சீட்டில் ஒரு கார் படம் ஒன்று. வரையப்பட்டிருந்தது. அந்த சீட்டை வாங்கியதிலிருந்து, இரவு பகலாய் கார்க் கனவு. அந்த அதிஸ்டலாபச்சீட்டின் முடிவு வெளிவந்த போது பலரைப் போல் எனது கனவும் கனவாகிப் போய்விட்டது. ஆனால் கார் வைத்திருக்கும் ஆசைமட்டும் விட்டுவிட்டு போகவில்லை.

சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா





புலம் பெயர்ந்த மண்ணில் இளையோரின் தமிழ் இசை இந்துமதி ஸ்ரீனிவாசன்

.

“இசை கேட்டால் புவி அசைந்தாடும் - அது இறைவன் அருளாகும்.” என்பது உண்மைதான் இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வசமாகிவிடுவது இயல்பு ஆகும்.  03/03/2013 அதாவது மார்ச் மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை செல்வி கேஷிகா அமிர்தலிங்கத்தின் இன்னிசைக் கச்சேரி மிகவும் சிறப்பாக சிட்னி முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள கல்வி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
அன்றைய காலத்தில் ஆலயம் என்பது தனியே வழிபாட்டு நிலையமாக மட்டுமன்றி ஒரு சமூக நிறுவனமாகவும் இயங்கியது. அதே போல் இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ஆலயங்கள் சமூக நிறுவனமாக இயங்குவது மகிழ்ச்சியான விடயமே. அந்த வகையில் சிட்னியில் வைகாசி குன்றில் அமைந்திருக்கின்ற முருகன் ஆலய சைவமன்றத்தினர் இங்கு வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் முகமாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மாதந்தோறும் ஒரு கலைநிகழ்ச்சியினை கலாச்சார மண்டபத்தில் நடாத்திவருகின்றனர். இங்கு வளர்ந்து வருகின்ற இளம் பிள்ளைகள் தமது கலை ஆர்வத்தினை வெளிக்காட்டவும், வளர்ப்பதற்கும் நல்லதொரு களம் அமைத்து கொடுப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
சிட்னியில் இசைக்கல்லூரியினை நடாத்தி வருகின்ற திருமதி பஷ்பா ரமணனின் மாணவியான செல்வி கேஷிகா அமிர்தலிங்கம் அவர்கள் தரமான பக்கவாத்திய கலைஞர்களுடன் இணைந்து சுருதி, லயத்துடன் இணைந்து வாடி எம்மையெல்லாம் பக்தி பரவசநிலைக்கு தள்ளிவிட்டார் என்றே கூறலாம்.

சிட்னியில் தமிழ்ப் பாடநூல் அறிமுகம்



தி. திருநந்தகுமார், ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம்

நி.ச.வே. தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு வெளியிடும் தமிழ்ப் பாடநூல்கள்  வரிசையில் தமிழ் ஆறு பாடநூல், சென்ற 23.02.13 மாலை 6.30 மணிக்கு கிரவீன் ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு எளிமையான வைபவத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாடநூற்குழுவின் ஆலோகர்களில் ஒருவரான வானொலி மாமா மகேசன், கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பாடநூல் குழுவின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலவகைப்பட்டோர் குழுமியிருந்த அவையில் கூட்டமைப்பின் தலைவர் திரு ஜெ.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்க, அறிமுக உரைகள் இடம்பெற்றன.

இலங்கைச் செய்திகள்

.
கண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்

ஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை : கலகொட அத்தே ஞானசார தேரர்

கல்விக்கு மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மாணவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்: ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு

இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும்: எலியோட்

வடக்கின் போர் ஆரம்பம்
  
மத, கலாசார உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் "வக்கிரம்'


பாலாவின் பரதேசி

.

பாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல்
நாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி,

கீதவாணி விருதுகள் 2013 Vidio

.

தமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி - எழுச்சியுடன் திரண்ட மக்கள்


தமிழர் தாயகத்தில் நிகழ்ந்தேறிய பேரவலத்தின் சாட்சியங்களை கொண்ட பதாகைகளை தாங்கியவாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவின் கான்பராவில், நீதிக்கான எழுச்சிப்பேரணியில் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள். 

தொடர்ந்துகொண்டிருக்கும் தமிழின அழிப்பினை எடுத்துக்காட்டியதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கேட்டும்,  தமிழ் மக்களுக்கு நீதியான நீடித்துநிலைக்கக்கூடிய சுதந்தரமான கௌரவமான அரசியலுரிமை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், இவ்வெழுச்சிப்பேரணி நடைபெற்றது.
தமிழர்கள் அதிகமாக வாழும் சிட்னி மெல்பேர்ண் ஆகிய பெருநகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணம் செய்து, கான்பராவில் வாழும் தமிழர்களுடன் இணைந்து நடைபெற்ற இப்பேரணி 13 - 03 - 2013 அன்று புதன்கிழமை மதியம் 12 மணிக்கு அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமானது.

வானொலி மாமாவின் குறளில் குறும்பு 57 தண்ணீரும் வியாபாரமா?


சுந்தரி:
        கேட்டியளே அப்பா இவள் எங்கடை மகள் ஞானாவின்ரை சங்கதியை…
அப்பா:        விஷயத்தைச் சொல்லாமல் கேட்டியளோ அப்பா எண்டால் நான் என்னத்தை சொல்லிறது             சுந்தரி.
சுந்தரி;:        அதுவந்தப்பா…இவள் ஞானா என்ரை சிநேகிதியின்ரை மகள் அமுதாவோடை இப்ப கதைக்        கிறதில்லையாம்.
அப்பா:        சுந்தரி! அவையள் இளம்பிள்ளையள். ஆவையள் தங்களுக்கு விரும்பினபடி செய்யட்டும்             நீh ஏன் அவையளின்ரை விஷயத்துக்கை தலையிடுகிறீர்?
சுந்தரி:        அவையள் எங்கடை குடும்பச் சிநேகிதர். அவையளின்ரை நட்பைக் கைவிடலாமே அப்பா?
அப்பா:        நட்பைக் கைவிடக் கூடாதுதான் சுந்தரி. இவள் பிள்ளை ஞானா ஏன் அந்தப் பிள்ளை            அமுதாவோடை கதைக்கிறதில்லை எண்டு விசாரிச்சநீரே?   
சுந்தரி:        அந்தப் பிள்ளையின்ரை தகப்பன் வானம்பாடி, தண்ணீர் வியாபாரம் செய்யத் துவங்கி            இருக்கிறாராம். அதுதானாம் காரணம்.                               
அப்பா:        சுந்தரி, இந்தத் தண்ணியடிக்கிறவை, தண்ணி வியாபாரம் செய்யிறவை, இப்பிடிப்                பட்டவையோடை அதிகம் தொடர்பு வைக்காமல் இருக்கிறது நல்லதுதானே.   

அமைதி - தவமணி தவராஜா

.
எவ்வளவு அழகான சொல், ஆனந்தமயமான சொல், செலவே செய்யாமல் அனுபவிக்கக்கூடிய சொல். அற்புதமான சொல். ஆனால் அதை எங்கே வாழவிடுகறார்கள்? நிம்மதியாக. அதைச் சிதைப்பதே தம் தலையாய கடன் என்று அரசியல்வாதிகளும், பணம் புரட்டும் முதலைகளும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் எத்தனை பேர் கண்ணீரும், கம்பலையுமாய் வாழ்க்கை என்னும் போராட்டத்தில் தத்தளிக்கின்றார்கள், சீரளிக்கப்படுகிறார்கள். சின்னாபின்னப்படுகிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதேயில்லை. தலைவலியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். காலம் ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை கொள்வோம். அமைதியை அடுத்தவரை அழிப்பதற்குப் பயன்படுத்த வேண்டாமே.
எல்லோரும் இன்புற்றிருந்தால் அறிவு, மன, ஆன்ம வளம் எல்லோருக்கும் குறைவற இயங்கி அமைதிமயமாகவும், ஆனந்தமயமாகவும் வாழமுடியும். அமைதி தேடி எங்கேயும் அலையத்தேவையே இல்லை. அது ஆற்றலின்றி நமக்குள்ளேயே அமுங்கிக் கிடக்கிறது. இங்கே பாருங்கள்! உலகில் ஓரிடத்தில் புதுமை, புதுமை என்று ஆடம்பரப்பிரியர்களாக வாழும் ஒரு வகை மனிதர்கள் இன்று அணிந்த உடை நாளை கழிக்கப்படவேண்டியது என்பது அவர்களுடைய நிலையான எண்ணம் வந்து கொண்டிருப்பது, வரப்போவது இவைகளைத் தேடி காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கும் சுயநலமிகள். ஒரு புறம் வாழ வளியற்று உண்ண உணவின்றி, மாற்றுடையின்றி அவல வாழ்வு வாழும் வகையற்ற மனிதர்கள். இதனால் குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அன்பையும், அறத்தையும் உணவுடன் ஊட்டி வளர்க்கப்படவேண்டும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் உயர்ந்த பண்பாளர்கள் என்பதும், தாழ்ந்த இடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணங்கள் தவிர்க்கப்படவேண்டும். உயர்ந்த இடத்தில் ஊழல் மலிந்தவனும், தாழ்ந்த இடத்தில் உயர் குணம் படைத்தவனும் இருக்க முடியும். அதனால்தான் பாரதியார் தப்புத்தப்பாய் வேதம் ஓதும் பிராமணனை விட ஓழுங்காகச் சிரைப்பவன் உயர்ந்தவன் என்றாராம்.
கன்பியூசியஸ் ஒரு முறை தன் சீடர்களை அழைத்து, இந்தமக்கள் எதைச் சொன்னபோதிலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள்! இனிமேல் மக்களுக்கு எந்தவிதமான நல் உபதேசங்களும் செய்வதில்லை. இனி வாழ் நாள் முழுவதும் மௌனம் சாதிக்கலாம் என்றிருக்கிறேன், என்று கூறினாராம். இதைக் கேட்டுத் திடுக்கிட்ட சீடன், ‘குருவே நீங்கள் மௌனமாகி விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று கவலையுடன் கேட்டனராம். அதற்கு அவர் சீடனே நான் பேசாவிட்டால் அதனால் பெரிய நஷ்டம் ஓன்றுமில்லை. இந்த எல்லையற்ற ஆகாயம் பேசுகிறதா? ஆனாலும் அதனுடைய பருவகாலம் தவறாமல் வந்து போய் கொண்டுதானிருக்கிறது. அதேவானத்தில் என்னென்ன விசித்திரங்களெல்லாம் சிருஷ்டிக்கப்படுகின்றன என்பதும் உனக்குத் தெரிந்ததுதானே! ஆனாலும் வானம் பேசியதுண்டா? ஆரவாரத்திலும், ஆடம்பரங்களிலும் சாதிக்க முடியாத ஓன்றை அமைதி சாதித்து விடும் என்பதைப் புரிந்துகொள்! என்றாராம்.
ஒருமுறை விஞ்ஞானி ஐன்ஸ்பீனிடம், இவர் காலம், இடம், பொதுத் தொடர்பு என்ற தத்துவத்தைக் கண்டறிந்தவர். அவருடைய நண்பர் “வாழ்க்கையின் வெற்றிக்கான சூத்திரம் என்ன? என்று கேட்டாராம். அதற்கு ஐன்ஸ்டீன் “ஏ” என்பது வாழ்க்கையில் வெற்றியைக் குறிக்கிறது. எக்ஸ், ஒய், இஸெட் இவை மூன்றும் சேரும்போது “ஏ” உண்டாகிறது. “எக்ஸ்” என்பது உழைப்பு, “ஒய்” என்பது விழையாட்டு, என்று கூறி நிறுத்தினாராம். இஸெட் எதைக் குறிக்கிறது என்று கேட்டாராம் நண்பர். “பேசாமல் உமது வாயை மூடிக்கொண்டிரும் என்பதைக் குறிக்கிறது” என்றாராம் ஐன்ஸ்டீன் சட்டென்று. பார்த்தீர்களா? அமைதி எவ்வளவு ஆற்றலுள்ளது என்பதை. ஆகையால் எல்லோரும் அமைதி காத்து ஆற்றலுள்ள மகத்தான மனிதர்களாக முயலுவோம்.
நன்றி.

அவுஸ்திரேலிய அணி வீரர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர்ப்புகள்

austriliya_plyசொல் பேச்சுக் கேட்கவில்லை என்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட வட்சன், கவோஜா, பற்றின்சன், ஜோன்சன் ஆகியோர் மீதான நடவடிக்கைக்கு கடும்
எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.
பிரபலமானவர்களின் கருத்துகள்

டேரன் லீ மேன் : நாம் என்ன கிரிக்கெட் ஆடுகிறோமா அல்லது வேறு ஏதாவதா? நாங்கள் ஒன்றும் பாடசாலை பையன்கள் அல்ல. நாம் முறையாக நடந்து கொண்டு இந்தியாவில் பொறுப்பான முடிவுகளை எடுப்போம். அவர்கள் விளையாடுவது அவசியம்.

மார்க்வோ  மிகவும் முட்டாள்தனமாக உள்ளது. ஏதோ படிவத்தை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக அணியிலிருந்து  நீக்குவது படு முட்டாள்தனம். இந்த முடிவினால் அணியில் மற்ற வீரர்களும் அதிருப்தி அடைவார்கள். அணியில் பிளவை உண்டாக்கும் வேலை இது. இந்த நடவடிக்கை அணியை ஒன்றுபடுத்திவிடும் என்று நினைக்கிறார்களா ?இந்த நாடகத்தினால் எப்படி  3 ஆவது டெஸ்டில் உயிர் பெற்று விளையாட முடியும்? எனக்குத் தெரியவில்லை. இது போன்ற ஒன்றை நான் கிரிக்கெட்டில் கேள்விப்பபட்டதே இல்லை.

தமிழ் சினிமா

சில்லுன்னு ஒரு சந்திப்பு 

பள்ளி பருவத்தில் வரும் காதல் எல்லாம் சும்மா இனக்கவர்ச்சிதான் என்றும் மன முதிர்ச்சி பெற்ற பிறகு வரும் காதலே நல்ல காதல் என்று சொல்வதே இப்படத்தின் கதை.`
"களவாணி" விமலும், ஓவியாவும் ஊட்டி கான்வெண்ட்டில் ஒரே பள்ளியில் ப்ளஸ்-டூ படிக்கின்றனர். படிக்கும்பொழுதே இருவருக்குமிடையே காதல் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஓவியாவின் அரசாங்க அதிகாரி அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றம் வருகிறது.
இவர்கள் இருவரும் கல்யாணம் செய்து வைக்க கோரி பொலிசாரை நாடும்பொழுது உங்கள் இருவருக்கும் அதற்கான வயது இன்னும் வரவில்லை, வந்ததும் உங்களிடையே இதே காதல் இருந்தால் திருமணம் செய்து வைக்க நான் தயார்.
அதுவரை உங்கள் தாய், தந்தையாருடன் வாழுங்கள் என்று இருவரது அப்பா-அம்மாவிடமும் ஒப்பந்தம் போட்டு அனுப்புகிறார் ஊட்டி பொலிஸ்காரர்.
பின்னர் விமல், அமெரிக்காவில் கைநிறைய சம்பாதித்து ஊர் திரும்பியதும் தன் அண்ணியின் தங்கையான தீபாஷாவை காதல்செய்கிறார்.
அவர்கள் காதல் கல்யாணத்திற்கு போகும் தருவாயில் விமலின் பழைய காதல் தீபாஷாவிற்கு தெரிய வருகிறது.
அதனால் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் விமல் மீண்டும் அமெரிக்கா திரும்பும்வேளையில் எதிர்பாராமல் ஓவியாவை சந்திக்கிறார்.
இதன்பின் என்ன நடப்பது என்பது தான் "சில்லுன்னு ஒரு சந்திப்பு" கதை களமாகும்.
விமல், ஓவியா, தீபாஷா, சாருஹாசன், அஸ்வின், மனோபாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தில் ஓவியா மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார்.
படத்தில் நகைச்சுவையை மனோபாலா மட்டுமே தாங்கி நிற்கிறார். இவருடைய காட்சிகள் வரும்போதெல்லாம் வசனத்திலேயே வயிரை பதம் பார்க்கின்றன.
படம் முழுக்க ஏகப்பட்ட இரட்டை அரத்த வசனங்கள் இடம்பெறுகின்றன. குடும்பத்துடன் ரசிப்பது சற்று கடினம்தான்.
பைசல் இசையில் பாடல்கள் பார்க்கும்போது ஓரளவிற்கு பிடித்தாலும், வெளியில் வந்தால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ராஜேஷ் யாதவ், ஆரோ ஒளிப்பதிவு பளிச் ரகம்.
நாயகிகளை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். விமல் இனியும் சிட்டி ‌சப்ஜெக்ட்டுகளில் கவனம் செலுத்தாமல், களவாணி, வாகை சூடவா போன்ற கிராமத்து கதைகளில் கவனம் செலுத்தினால் நல்லது.
மொத்தத்தில் சில்லுன்னு ஒரு சந்திப்பு சில்லுன்னு இல்லை





ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்
[ Sunday, 03 March 2013, 02:07.33 PM GMT +05:30 ]
இந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்த நடன இயக்குனர் நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில் நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் படம்தான் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்"
மும்பையில் நண்பர்களான கே.கே மேனனும், பிரபுதேவாவும் இணைந்து நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
மும்பையில் நடக்கும் நடனப்போட்டிகள் அனைத்தும் இவர்கள் பள்ளிதான் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதனால் இந்தப் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், பிரபுதேவாவுக்கும் கே.கே மேனனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிடுகிறது. பிரபுதேவாவிற்கு தனது நடனப் பள்ளியில் எந்தப் பங்கும் இல்லை என்று கே.கே மேனன் சொல்லி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறார்.
இதனால் மனமுடைந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவெடுக்கும் பிரபுதேவா மற்றொரு நண்பரான கணேஷ் ஆச்சர்யாவை சந்திக்கிறார்.
இந்நிலையில் கணேஷ் ஆச்சர்யா வசிக்கும் குடியிருப்பு பகுதியின் இளைஞர்களுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டை கண்டு, அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க முன்வருகிறார் பிரபுதேவா.
தன்னை ஏமாற்றிய நண்பனின் நடனப் பள்ளியைவிட மிகச்சிறந்த நடனப்பள்ளியை உருவாக்கி வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பிரபுதேவாவும், ஆச்சர்யாவும் இணைந்து புதிய நடன பள்ளியை தொடங்குகிறார்கள்.
இதற்காக இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார். ஆனால், அவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிரபுதேவா களமிறங்குகிறார்.
இந்த தடைகளை தாண்டி பிரபுதேவா தனது லட்சியத்தில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.
நடனத்தைப் பற்றிய கதை என்பதால் பிரபுதேவா ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். நட்பு, நம்பிக்கை, துரோகம் என்று சாந்த சொரூபமாக நடிப்பில் நம்மை வியக்க வைக்கிறார்.
ஆனால் நடனம் என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டுகிறார். படத்தில் இவரைத் தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே.
குறிப்பாக, இந்த படத்தில் இவர் ஆடும் தனி(solo) நடனம், நடனப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய விதமாக இருந்தது சிறப்புக்குரியது.
பிரபுதேவாவின் நடனத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் கண்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இந்த நடனம் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.
பிரபுதேவாவின் நல்ல நண்பராக வரும் கணேஷ் ஆச்சர்யா அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.
கெட்ட நண்பராக வரும் கே.கே மேனன் வில்லத்தனம் காட்டுவதில் தனது பங்களிப்பை முழுமையாக வெளிப்படுத்திருக்கிறார்.
இறுதி காட்சியில், நடனப்போட்டியில் தனது குழு நடனத்தின் கரு (கான்செப்ட்) களவாடப்பட்டதும், மும்பை நகரில் விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் நடனத்தை விறுவிறுப்பாக செய்து காட்டி நடனப்போட்டியில் பிரபுதேவா குழு வெற்றி பெறுவது எதிர்பாராத திருப்பம்.
இதுபோல், எதிர்பாராத திருப்பங்களை படத்தில் ஆங்காங்கே வைத்து ஆரம்பம் முதலே ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் ரெமோ டிசோசா.
சச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும் படத்தை மொழி, பேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன.
மொத்தத்தில் ‘ஏபிசிடி’ ரசிக்கலாம் பாய்ஸ்.
நன்றி விடுப்பு