மௌனம் - செ .பாஸ்கரன்

.

மௌனித்து நிற்பதால் 
வார்த்தைகள் இல்லை என்பது 
அர்த்தமில்லை 
வார்த்தைகளின் வலி 
அவனுக்கு புரிந்திருக்கும்  
சிந்திய வார்த்தைகளால் 
செத்துவிட்ட 
இதயங்கள்  
வானவெளியெங்கும் 
மேகம்  கலைந்ததுபோல் 
திசை அறியா பெரு வெளியில் 
மெல்ல நகர்கிறது
சுட்டெரிக்கும் 
தீப்பிழம்பாய்   
செத்து விட்ட நிலவொன்று  
எழுந்து வரும் போதெல்லாம் 
சிலந்தி வலைப்  பின்னல் போல் 
நெஞ்சில் கனத்த மழை 
ஆறாத காயங்களாய்  
தனிமையில் 
ஆடிக்கொண்டிருக்கும் 
அவல  குரல் ஒன்று 
மௌனித்து நிற்கும் 
அவன் செயல்
மருந்தாகும் 
மௌன மொழி

இயற்கை மனித இனத்தை அழித்திடுமா? ……………பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.


இறைவனின் படைப்பு -

சங்கார ஒடுக்கத்தைத் தொடர்ந்துயிர்கள் ஈடேற
சங்கார காரகனாம்;; சிவபெருமான் நித்தியமாம்
சங்கைமிகு சத்திவழி  மாயைகொண் டரியபல
சடப்பொருளும் பல்கோடி உயிர்களையும் படைத்தனனே!

வினைப்பயனை அனுபவித்து வீடுபெற்று இன்பமுற 
விதம்விதமாயப் பலபொருள்கள் வேண்டுமட்டும்; படைத்தளித்தான்
அனைத்துயிரை வருத்தாது அறங்காக்கும் இல்லறத்தால்
அன்புடனே வாழ்ந்துய்ய மன்பதையைத் தோற்றுவித்தான்

ஒன்றாயும் வேறாயும் உடனுமிருந் தருள்வதொடு
உறுதுணையாய் ஐம்புலன்கள் உதவிநிற்க வாழ்வளிப்பேன்!
என்றென்றும்  இயற்கையொடு நன்றாக இயைந்திடுவீர்!
எதுவரினும் அழித்திடாதீர்” என்றவனும் உணரவைத்தான்;!


ஜோர்ஜ் கொலையையடுத்து நொருங்கும் நிறவெறி!
திரும்புகிறது வரலாறு

வரலாறு திரும்புகிறது... உலக மக்கள் விழிப்பின் உச்சத்துக்கு வந்துள்ளனர்.. லண்டனில் அடிமைகளை வியாபாரம் செய்து பணம் ஈட்டிய ஆங்கிலேயர் எட்வர்ட்ஸ் கோஸ்ட்டனின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் துவம்சம் செய்துள்ளனர்.

125 ஆண்டு காலமாக இருந்த சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொருக்கியதுடன், அதை ஆவேசமாக இழுத்துக் கொண்டு போய் கடலில் வீசியும் எறிந்தனர். அமெரிக்காவின் மின்னசொட்டாவில், ​ேஜார்ஜ் என்ற கறுப்பினத்தவரின் கொலை சம்பவமானது, உள்நாட்டுப் பிரச்சினையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இலட்சக்கணக்கான கறுப்பின மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். இவர்களின் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டக்கார்களைப் பார்த்து ஜனாதிபதி ட்ரம்ப் திணறுகிறார். எச்சரிக்ைக விடுக்கிறார். இராணுவத்தை்க் கொண்டு அடக்க போகிறேன் என்று எச்சரிக்கிறார். இருந்தாலும் சொந்த நாட்டில் ஒருத்தரைக் கூட இவரால் அடக்க முடியவில்லை. போதாக்குறைக்கு இவரது 2வது மனைவி, மகளும் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
​ேஜார்ஜ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் இந்தப் போராட்டம் ஆரம்பமானது.. ஆனால் இப்போது நிறவெறி, இனவெறிக்கு எதிரான போராட்டமாக மாறி உள்ளது.
அதுவும் உலகளாவிய அளவில் உருமாறி உள்ளது. இங்கிலாந்திலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. லண்டனில் 'முன்னாள் பிரதமரின் வின்ஸ்ட்டன்ட் ​ேசர்ச்சிலின் நினைவுச் சின்னம் தீது இனவெறி' என்று போராட்டக்காரர்கள் எழுதி வைத்ததே இதற்குச் சாட்சி. இதைத் தவிர, அங்கிருக்கும் மகாத்மா காந்தி சிலை, ஆபிரகாம் லிங்கன் சிலைகளிலும் இனவெறிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளமை இன்னுமொரு சாட்சி.
இப்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.இங்கிலாந்தில் எட்வர்ட் கோஸ்ட்டனின் சிலை அடித்து நொருக்கப்பட்டுள்ளது.கோஸ்ட்டன் அங்கு முன்னாள் எம்பியாக இருந்தவர். அடிமைகளை விற்றே பணம் சம்பாதித்து வந்தவர்.

மீள் வாசிப்பு அனுபவம் - 3 ராகுல்ஜியின் வால்காவில் இருந்து கங்கை வரை - செ .பாஸ்கரன்

.


என் மீள் வாசிப்புக்கு  ஒரு ஊக்கம் கொடுத்த என் புத்தக அறைக்கு நன்றி கூறலாம் . இவ்வாரம் புத்தக அலுமாரிக்கு முன்  நின்றபோது கண்ணில் பட்டது ராகுல்ஜியின் வால்காவில் இருந்து கங்கை வரை ( From Volga to The Ganga), அது என் பெறாமகனின் மனைவி வாங்கிச் சென்று படித்துவிட்டு இவ்வாரம்தான் திருப்பித் தந்திருந்தார். அது பற்றி பலவிடயங்களையும் அவரோடு பேசிக்கொண்டிருந்ததால் மீள் வாசிப்புக்கு இலகுவாக அமைந்தும் விட்டது.


தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்த பெயர் ராகுல்ஜி, உலகம் சுற்றிய பயணியான அவர் இந்தியாவினுடைய தத்துவ வரலாற்றில் பெற்றுக் கொண்ட பெருமையும் அவருக்கு இருக்கின்றது. சோவியத் நாட்டில் தொடங்கி இந்தியாவின் கங்கை வரை இந்த நூல் அழைத்துச் செல்கின்றது. ஐரோப்பாவில் இருந்து கிமு 600 தொடக்கம்  20ஆம் நூற்றாண்டு காலம் வரையிலான மனிதகுல வரலாற்றை கதைகள் வடிவில் கூறுகின்றது. தமிழில் முதல் பதிப்பு ஆகஸ்ட் மாதம் 1949 ஆம் ஆண்டு வெளிவருகின்றது 24ம் பதிப்பு ஜூலை மாதம் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது, இதை கண முத்தையா அவர்கள் மொழி பெயர்க்க தமிழ் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இவ்வளவு அதிகமாக பதிக்கப்பட்ட ஒரு பதிப்பு எத்தனை பேருடைய கைகளிலே இது தவழ்ந்திருக்கும் என்று நினைத்து பார்க்கின்றேன். ராகுல் சாங்கிருத்தியாயன் அதுதான் அவருடைய பெயர்
ராகுல் ஜி தமது சிறை வாசத்தில் 1942 ல் (Hazaribag jail) ஜெயிலில் இருந்ததபடி இப் புத்தகத்தை எழுதி முடித்தார்.  தமிழில் மொழி பெயர்த்த காண முத்தையா அவர்களும் ஜெயிலில் இருந்ததபடி இப் புத்தகத்தை மொழிபெயர்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

டாக்டர் சிதம்பரப்பிள்ளை தவசீலன் மருத்துவ சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருதைப் பெற்றார்.

.Shining stars in general practice have been rewarded in this year’s Queen’s Birthday Honours List for their outstanding contributions to education, healthcare and their communities.  - http://medicalrepublic.com.au/


அவுஸ்திரேலிய மாநிலத்தில் வாழும் நம்மவரான டாக்டர் சிதம்பரப்பிள்ளை தவசீலன் அவர்கள் இவ்வருடத்திற்கான இராணியின் பிறந்த நாளில் அவுஸ்திரேலியா மருத்துவ துறை சார்ந்த சேவைகளுக்காகவும், மருத்துவம் சார்ந்த கற்பித்தலுக்காகவும் வழங்கப்பட்ட விருதுகளில் ஒன்றான Medal of the Order of Australia (OAM) விருதை பெற்றிருக்கிறார். இவ்விருதை Governor-General David Hurley அறிவித்துள்ளார். அவர் அறிவித்த 13 பேரின் பட்டியலில் டாக்டர் சிதம்பரப்பிள்ளை தவசீலன் அவர்கள் அடங்குகின்றார். இந்த பட்டியலில் நம்மவரான சிதம்பரப்பிள்ளை தவசீலன் அவர்கள் உள்ளது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. This year, three GPs were appointed a member of the Order of Australia (AM), and 13 were awarded a Medal of the Order of Australia (OAM). Dr Sithamparapillai Seelan, Baulkham Hills NSW, for service to medicine, and to professional colleges. 
தமிழ்முரசுஅவுஸ்திரேலியா அவரை வாழ்த்துகிறது.

by C.Paskaran

விக்கிப்பீடியாவில் அசத்தும் ஈழத் தமிழன்! விருதுகளை அள்ளிய மயூரநாதன்

.


ன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு.
2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.  அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார்.
ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்துள்ளனர். இலங்கைத் தமிழரான இவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார்.
உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை, ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியது இவரது அரிய சாதனை. இவரே தன்னுடைய முனைப்பால் 4,458 கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். உலகப் பன்மொழித் திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன.

பொய்யா விளக்கு 🎬 என் பார்வையில் - கானா பிரபாஈழத்தமிழினத்தின் துயர் தோய்ந்த பக்கங்களில் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிகழ்ந்த யுத்தத்தின் கோர அனர்த்தம் ஒரு இருண்ட காலமாக யுகங்கள் கடந்தும் நிற்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது பொய்யா விளக்கு.

மன்னிப்பு - சிறுகதை : தேவகி கருணாகரன் ; ஒலிவடிவம் : செ.பாஸ்கரன் #ஈழத்தவர்_கதை_கேட்போம்

.

ஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை தேவகி கருணாகரன் அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறுகதை படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது படைப்புகள் ஈழத்தின் வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திகைகளிலும், ஞானம், கலைமகள், கல்கி போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.

இங்கே நாம் ஒலிப்பகிர்வாகப் பகிரும் படைப்பான “மன்னிப்பு” என்ற சிறுகதை கல்கி வார இதழில் கடந்த மார்ச் 2020 இல் வெளியானது.
கவிஞர் செ.பாஸ்கரன் அவர்களின் ஒலி நடையில் தொடர்ந்து இந்தச் சிறுகதையைக் கேட்போம்.கிண்டில் மின் பதிப்புகள் 📖 சவால்களும் வாய்ப்புகளும்

கானா பிரபா

புத்தக வாசிப்புப் பழக்கம் என்பது இன்று கிண்டில் வழி மின் பதிப்பு வாகனமேறியிருக்கும் சூழலில் கிண்டில் பயனாளருமான திரு என்.சொக்கன் அவர்களை வானலையில் சந்தித்தேன். இந்த நீண்ட உரையாடலில் கிண்டில் மின் பதிப்புகள் குறித்து இதுவரை அதிகம் பேசப்படாத பல விடயங்களை என்.சொக்கன் விரிவாகவும், விளக்கமாகவும் பகிர்கிறார். 

பேட்டியில் கேட்ட சில கேள்விகள்

📕 நீங்கள் எழுத்தாளராகப் பல தொழில் முனைவர்கள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் குறித்தெல்லாம் ஆய்ந்து எழுதியிருக்கிறீர்கள் அந்த வகையில்
ஐபாட் போன்ற கைக்கணிகள் நுகர்வோரை ஆக்கிரமித்த சூழலில் Kindle சாதனத்தின் மீதான அபிமானம் பெருகுமென்று கணித்தீர்களா?

📕 இன்றைய சூழலில் புதிய புத்தகங்களை அச்சுப் பதிவாக வெளியிடும்  சம காலத்தில்
 மின் பதிப்பாக kindle தளத்தில் வெளியிடும் முறைமையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 18 – திமிலை மற்றும் பாணி - சரவண பிரபு ராமமூர்த்தி


திமிலை மற்றும் பாணி - தோற்கருவிகள்
திமில் என்கிற சொல்லுக்குப் பேரொலி என்று பொருள். பேரொலி எழுப்புவதால் இக்கருவிக்குத் திமிலை எனப் பெயர் ஏற்பட்டு இருக்கலாம். திமிலையும் பாணியும் ஒரே அமைப்பை உடைய நேரக் குடுவை வடிவிலான தமிழர் இசைக் கருவிகளாகும். பாணி சுமார் இரண்டு அடி நீளமும், திமிலை சுமார் ஒன்றரை அடி நீளமும் உடையது. பண்டைய சேரநாடாக விளங்கிய கேரளத்தில் தான் தற்பொழுது திமிலை உருவாக்கப்படுகிறது. நன்கு முற்றிய முதிர்ந்த பலா மரத்திலிருந்து (வரிக்க பலா என்னும் வகை) வெட்டிய கட்டைகளை நன்கு காயவைத்து, குடைந்து, அதிலிருந்து திமிலை கருவிக்கான உடற்பகுதி நேரக் குடுவை வடிவில் செய்யப்படுகிறது. திமிலை ஒரு முகத்தில் மட்டுமே இசைக்கப்படும் கருவியாகும். அதனால் உடல் பகுதி தயார் செய்யும்பொழுது கொட்டு முகத்தின் (வலந்தலை) பக்கம் பாரமாகவும், கொட்டப்படாத எதிர் முகத்தின் பக்கம் (இடந்தலை) பாரம் குறைவாக இருக்கும்படியும் செதுக்கப்படுகிறது.
அன்னாங்குடி அல்லது வென்னில் அல்லது மஞ்சா என அழைக்கப்படும் கொடிவகைச் செடியில் இருந்து முற்றிய கிளைகளை வளைத்து உருவாக்கப்பட்ட வளையங்களில் தோல் போர்த்தப்படுகிறது. பிரம்பு வளையமும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை வட்டம் என்று அழைக்கிறார்கள்.  ஒரு வயதுக்குக் கீழ் உள்ள கன்றுக்குட்டியின் சுத்திகரிக்கப்பட்ட தோலை வெட்டி இந்த வட்டங்களில் பச்சை அரிசியின் காய்ச்சியப் பசையினால் ஒட்டப்படுகிறது.  நன்கு காய்ந்த பிறகு தோல் போர்த்திய வளையத்தில் ஆறு துளைகள் இடப்படுகின்றன. பின்பு, அவை முறுக்கப்பட்ட தோல் கயிறுகளின் உதவியுடன் பலாக்கட்டையில் செய்த உடல் பகுதியுடன் சேர்த்து இறுக்கி கட்டப்படுகின்றன (கயிற்றின் மொத்தத் தேவை 25 அடி). மேல் வட்டம் எனப்படும் கொட்டு முக வட்டத்தில் சற்றுக்மான தோல் போர்த்தப்படுகிறது. கீழ் வட்டம் அல்லது மூடு வட்டம் எனப்படும் இசைக்கப்படாத எதிர் முகத்திற்கு மெல்லிய தோல் போர்த்தப்படுகிறது. இசைப்பவரின் தோள்களில் திமிலையைத் தொங்கவிட ஒரு நீண்ட துணி பயன்படுத்தப்படுகிறது.
திமிலை மற்றும் பாணி இசைக்கருவிகள் பழங்காலத்தில் நடனத்திற்கு பக்கவாத்தியக் கருவியாக இசைக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை நமது பழங்கோயில்களில் காணப்படும் சிற்பங்களில் வழியாக நாம் அறிய முடிகிறது. பராந்தகச் சோழன் காலத்து ஆலயமான திருப்புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோவிலில் பெண்ணொருவர் திமிலை இசைக்கும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. தாராசுரம் கோயிலிலும் நடனத்திற்கு பக்க வாத்தியமாகப் பாணி இசைக்கும் சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பொற்றாமரைக்குளத்தின் தெற்கு மதிற்சுற்றில் அடுத்தடுத்து மூன்று நடனக்காட்சிகளில் பாணி இசைக்கருவி கொண்டு இசைக்கும் சிற்பத்தைக் காணமுடிகிறது. மேலும், திருவிடைமருதூர் மருதப் பெருமான் கோவிலிலும் திமிலை இசைக்கும் பெண்ணின் சிற்பம் உள்ளது.

*காஸ்ட்ரோவை சந்தித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்....*

.

1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் சபை இருக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்து குவிந்தனர்​. தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை ஐ.நா ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது கியூபா அதிபரான 34 வயது பிடல் காஸ்ட்ரோ ஐ.நா நிகழ்வுக்காக நியூயார்க் வருகிறார். அமெரிக்க அதிபர் #DwightEisenhower க்கு பயந்து கொண்டு காஸ்ட்ரோவுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்க இடம் அளிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகங்கள் கூட்டு முடிவு எடுத்திருந்தது. ஐ.நா. மூத்த நிர்வாகிகளைச் சந்தித்த காஸ்ட்ரோ எனக்குத் தங்க இடம் அளிக்க மறுக்கிறார்கள், எனவே நான் ஐ.நா. வளாகத்திற்குள் ஒரு டெண்ட் அடித்து தங்கப் போகிறேன் என்று அதிரடியாகச் சொல்கிறார். நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர், என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. காஸ்ட்ரோவுக்கு ஆதரவு தெரிவித்தால் அமெரிக்க அதிபரின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடுமே என்று தயங்குகின்றனர். அப்போது தெரேசா ஹோட்டல் என்ற சாதாரண ஹோட்டல் உரிமையாளர் காஸ்ட்ரோவுக்கு இடம் அளிக்க முன் வருகிறார். அவரின் அன்புக்காக அங்கே தங்க சம்மதிக்கிறான் காஸ்ட்ரோ.....
நியூயார்க் நகரம் முழுவதும் பல்வேறு நாடுகளுகளின் தலைவர்கள்​ சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. காஸ்ட்ரோ தங்கியிருந்த ஹோட்டல் மட்டும் வெறிச்சோடி இருந்தது. காஸ்ட்ரோவை சந்தித்தால் அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து கொண்டு மற்ற நாட்டுத் தலைவர்கள் காஸ்ட்ரோவை புறக்கணித்தனர். அப்போது,

விளிப்புணர்வு மனெமெல்லாம் விசுவரூபம் எடுக்கவேண்டும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

          யாருக்கு இருக்கிறது 
                யாருக்கு இல்லையென்று
          யாருக்கும்   தெரியாது  
                 பாருக்குள் பரவிருக்கு 
          வேர்விட்டு  விருட்சமாய் 
                 ஆகிவிட்ட கொரனாவின்
          ஆபத்தை உணராமல்
                 அனைவருமே உலவுகிறார்  !

           மருந்துவந்து விட்டதென
                 செய்திதான்  வருகிறது 
          மாகொரனா தன்னளவில்
                 மலர்ச்சியுடன் திரிகிறது 
           விருந்துண்ண யாவருமே
                   விரும்பியே எழுகின்றார் 
           வில்லங்கக் கொரனாவை
                   விளங்காமல் திரிகின்றார் !

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -17 இரண்டாவது உலகத்தமிழராய்ச்சி மாநாடு நினைவுகள் ! மக்கள்திலகம் எம்.ஜி. ஆர் சூட்டிய தங்கப்பதக்கம் !


அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றி நீங்கள் அறிவீர்கள்.  இன்றைய புதிய தலைமுறை இம்மாநாடு பற்றி எவ்வளவுதூரம் அறிந்துள்ளார்கள் என்பதை நானறியேன்.
அருட் தந்தை தனிநாயகம் அடிகளாரினால் தோற்றுவிக்கப்பட்ட இம்மாநாடு எமது இலங்கையில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தவேளையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் பற்றி இற்றைவரையில் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் எழுதிவருகிறார்கள்.
இம்மாநாட்டின் பின்னணி பற்றி எனது நினைவுக்கு எட்டிய சில குறிப்புகளை முதலில் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
 1964  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில்  புதுடில்லியில்  நடைபெற்ற   அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது.
அருட்தந்தை தனிநாயகம்  அடிகளார் அக்காலப்பகுதியில்  மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் பீடத்தின்  தலைவராகவிருந்தார்.
அவர் தனது Tamil Culture எனும் இதழ் மூலம் ஏற்கனவே  உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆய்வாளர்களை ஒன்றிணைத்திருந்தவருமாவார்.  அதனால் அவரால் முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியாவில் கோலாலம்பூரில் நடத்துவதற்கு சாத்தியமாகியிருந்தது.
இதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.  இம்மாநாடும் குறிப்பிட்ட ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம்தான் நடைபெற்றது.
இம்மாநாட்டில்  சமர்ப்பிப்பதற்காக  மருத்துவத் தமிழ் முன்னோடி கிறீன் பற்றிய ஒரு கட்டுரையை நான் அனுப்பியிருந்தேன். அதனையும் அங்கு வாசிப்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து,  அதற்கான நேரமும் ஒதுக்கியிருந்தார்கள்.
அதனால், இம்மாநாட்டிற்கு செல்வதற்கு தீர்மானித்துமிருந்தேன். இதே காலப்பகுதியில் தமிழ்நாட்டில் மற்றும் ஒரு மாநாடும் – இலக்கிய மாநாடாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதனை ஆக்க இலக்கியத்துறை விழாவாக ஒழுங்குசெய்திருந்தனர். அதன் ஒரு அங்கமே, அனைத்துலக தமிழ்க்கவிதைப்போட்டி.

மனிதன் விளையாடும் இடம் பணத்தோட்டம் ! பொலிஸ்காரன் வீட்டில் பொலிஸார் தேடுதல் நடத்திய கதை! முருகபூபதி

லரிடத்திலும் அஞ்சல் முத்திரை, பழைய நாணயக்குற்றிகள், பழைய ரூபா நாணயத்தாள்கள் சேகரிக்கும் பழக்கம் இருப்பதை அறிவோம்.
ஒரு காலகட்டத்தில் புழக்கத்திலிருந்த நாணயக்குற்றிகள் காலப்போக்கில் மறைந்துவிட்டன.
நான் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்த காலத்தில் ஒரு சதம், இரண்டு சதம், இரண்டு அவுஸ்திரேலியன் வெள்ளி நாணயத்தாள்களும் புழக்கத்தில் இருந்து  காலப்போக்கில் மறைந்துவிட்டன.
இலங்கையில் சிறிய வயதில் ஒருசதத்திற்கும் சீனிபோலை எனப்படும் இனிப்பு மிட்டாய் வாங்கிச்சாப்பிட்ட காலத்தையும் கடந்துள்ளோம்.
எமது முன்னோர்கள்  ஒரு அணா, இரண்டு அணா, கால் அணா பயன்படுத்திய  அக்காலத்தகவல்களும் அறிவோம். தேசங்களின் பொருளாதாரமும்  நாணயங்களின்  பெறுமதியில்தான் தங்கியிருக்கின்றன.
நம்பிக்கையின் அடிப்படையில்  பிறந்த சொல்தான் நாணயம்.  நேர்மை என்றும் பொருள்படும்.  நாணயத்தாள்கள் அறிமுகமானதன்பின்னர்தான் அதன் நாணயத்தன்மையும் நம்பிக்கையும் கேள்விக்குரியதாகியது.

வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும் (கவிதை) வித்யாசாகர்!


1
ரு நிலா செய்து தெருவில்
உருட்டிவிடவும்,
நட்சத்திரங்களை பொருக்கி சட்டைப்பையில்
கொட்டிக்கொள்ளவும்,
பூமியைச் சுருட்டி வீட்டுக்
கதவு மூலையில் வைத்துவிடவும்,
வானத்து முதுகில் ஒரு
பெயரெழுதி வைக்கவும்,
கடலுக்குள் கைவிட்டு ஒரு முத்தெடுத்து
உனக்கு மூக்குத்தி மாட்டிவிடவும்,
கவிதைக்குள்
எல்லாமே சாத்தியமாகி விடுகிறது;
ஆனாலந்த கவிதை மட்டும்
உன்னால் தான் சாத்தியமாகிறது!!
-----------------------------------------

சே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்சே குவேராபடத்தின் காப்புரிமைKEYSTONE

கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா.
ஞாயிறன்று, மருத்துவராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் 92வது பிறந்தநாள். அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம்.
  • சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார்.
  • பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்ற சே குவேரா, புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமைந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார்.
  • 1951இல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் ஒன்பது மாதங்கள் இரு சக்கர வாகனத்தில் தென்னமெரிக்க கண்டம் முழுதும் பயணித்தார். அப்போது சே குவேரா எடுத்த குறிப்புகள் 'தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்' என்ற பெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது. அந்தப் புத்தகத்தின் அதே தலைப்பில் ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.

நெஞ்சில் நிற்கும் ஈழத்து எழுத்தாளர்கள் சிலர்

.

இருப்பவர்கள் இடமிருந்து வலம்

வி எ கந்தசாமி , டானியல் , முருகையன் , கனக செந்திநாதன், இளங்கீரன், செ .கணேசலிங்கம்

நிற்பவர்கள் இடமிருந்து வலம்

டொமினிக் ஜீவா , பசுபதி, மாணிக்கவாசகர், நீர்வை பொன்னையன், அம்பி , தம்பிராஜா , நாவேந்தன்


பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 5 - விளையாட்டுப் பிள்ளை - ச . சுந்தரதாஸ்

.


பிரபல எழுத்தாளரும் கலைஞருமான கொத்தமங்கலம் சுப்பு இரண்டு பிரபல  நாவல்களை எழுதியுள்ளார். ஒன்று  தில்லானா மோகனாம்பாள் மற்றையது ராவ்பகதூர் சிங்காரம்.  தில்லானா மோகனாம்பாள் ஆனந்தவிகடனில் தொடராக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெறவே  இயக்குனர் ஏபி நாகராஜன் அதனை படமாக்க விகடன் அதிபர் எஸ் எஸ் வாசனிடம்  அனுமதி கேட்டார். வாசனோ  அதனை தானே படமாக்கப் போவதாக கூறி விடவே நாகராஜன் சரி என்று  விட்டு விட்டார் ஆனால் காலம் கடந்ததே தவிர தில்லானாவை ஏனோ  வாசன் படமாக்கவில்லை. நாகராஜன் மீண்டும் வாசனை அனுக்கிக்  கேட்க இறுதியில் அவரின் அனுமதி கிடைத்தது. ஏ பி என்  அதனை இயக்கி படமாக்கினார். தில்லானா மோகனாம்பாள் மாபெரும் வெற்றிப் படமாகி ஜனாதிபதியின்  வெள்ளிப் பதக்கத்தையும் பரிசாக பெற்றது.  

தில்லானா மோகனாம்பாள் வெற்றியைக் கண்டு பிரமித்த வாசன் அதே கொத்தமங்கலம் சுப்புவின் மற்றைய நாவலான ராவ்பகதூர் சிங்காரமத்தை
 படமாக்க முனைந்தார்

படத்திற்கான திரைக்கதையை எழுதி தானே தயாரிக்க ஏபி நாகராஜன் வசனம் எழுதி டைரக்ட் செய்தார். ஜெமினி படநிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு விளையாட்டு பிள்ளை என்று பெயரிடப்பட்டது.  மோகனாம்பாளில்  நடித்த சிவாஜி பத்மினி ஜோடி இதிலும் நடிக்க , பாலையா, சிவகுமார், காஞ்சனா, சோ ,மனோரமா ஆகியோரும் இடம் பெற்றார்கள் . படத்திற்கான பாடல்களை கண்ணதாசன் இயற்ற கேவி மகாதேவன் இசையமைத்திருந்தார்.


இலங்கைச் செய்திகள்


உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை

தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறேன்; எனக்கு வாக்களிக்க வேண்டாம்

தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவது நாமே வெளிநாடுகள் தருமென எவரும் நம்பக்கூடாது

கிழக்கில் இன, மத வேறுபாடின்றி தொல்பொருட்கள் பாதுகாக்கப்படும்

சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸாரால் முற்றுகை

திருகோணமலை கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு

பாராளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05, புதன்கிழமை

நாடு முழுவதும் வாக்களிப்பு ஒத்திகை

வரைபடங்களுடன் 25 வருடங்கள் போராட்டத்தை நடத்தியவன் நான்

அரசுடன் பேச்சு நடத்த TNA தயார்உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை
உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கைதான 53 பேர் பிணையில் விடுதலை-53 FSP Members Including Kumar Gunaratnam Granted Bail
அமெரிக்க தூதரகமும் அறிக்கை
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னிலை சோசலிசக் கட்சி முக்கியஸ்தர்களான குமார் குணரத்னம், துமிந்த நாகமுவ உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்டின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

உலகச் செய்திகள்


உலக நன்மைக்காக தடுப்பூசி தயாரிப்பதில் சீனா தீவிரம்

கொரோனா வைரஸ் பரவல்; எங்கள் மீது எந்த தவறும் இல்லை

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை அம்பலப்படுத்திய செய்மதிப் படங்கள்

ஐரோப்பா, அமெரிக்காவெங்கும் அடிமைத்துவ சிலைகள் நீக்கம்

அமெரிக்காவில் கொரோனா தொற்று சம்பவங்கள் 2 மில்லியனை எட்டியது

ஜோர்ஜ் பிளொயிட் மரணம்: கைதான பொலிஸார் பிணையில் விடுதலை

இந்தியா எதிர்க்கும் நேபாள வரைபடம் மீது வாக்கெடுப்புஉலக நன்மைக்காக தடுப்பூசி தயாரிப்பதில் சீனா தீவிரம்

Tuesday, June 9, 2020 - 6:00am

உலக மக்களின் நன்மைக்காக தடுப்பூசியை உருவாக்க தீவிரமான முயற்சிகளை எடுப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது.

தெருவாழ் மக்கள் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.  தாம் வாழ்வதற்கு இடம் இல்லாது தெருவிலே வாழ்பவர்கள். அழுக்கடைந்த உடை, சவரம் செய்யாத முகம், கைகளிலே அவர்கள் உடைமையாக வைத்திருக்கும் பொதிகள், அவர்களைக் கண்டால் ஒதுங்கி மறுபுறம் போய்விடுகிறோம். ஆனால் பல தொண்டு நிறுவனங்கள் அவர்களும் மனிதர்கள்தான் என மதித்து, அவர்கள் பசியைப் போக்குவதற்கு உணவளித்து வருகிறார்கள். ஏதோ ஒரு மனித சேவை செய்த திருப்தி இவர்கட்கு. ஆனால் அவர்களும் மனிதர்தான் என சிந்திக்காதவர்களே பலர்.

  இவ்வாறானோர் தமது வாழ்வை எவ்வாறு மேம்படுத்த முடியும் என அவர்கட்காக ஒரு நூலை எழுதியுள்ளார் சேரா காணற். அவர்கட்கு தான் இருக்க வீடு கிடையா, உடமைகளோ சில அழுக்கடைந்த பொருட்கள். இப்படிப்பட்டோர் வாழ்வை மேம்படுத்த நூலா? அதை அவர்கள் வாசிப்பார்களா? இவ்வாறாக பலரும் வியக்கலாம். இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காகப் போலும் ABC வானொலி நிருபர் Mickal Pahart சேராவை பேட்டி கண்டார். அதை செவிமடுக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. அவற்றை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமே என்னை எழுதத் தூண்டியது.