காண அருள் தாமுருகா ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா


இன்று நவம்பர் 26 ஆம் திகதி "எஸ்.பொ." நினவுதினம்: சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான்! ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ. அங்கம் -01 - முருகபூபதி



இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில்   கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி  மறைந்தார்.  இன்றுடன் அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.  அன்னாரின் நினைவாக 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் எழுதிய நீண்ட பதிவிலிருந்து சில பகுதிகளை இங்கு மீண்டும் நனவிடை தோய்கின்றேன்.   இந்த நனவிடை தோய்தல் என்ற சொற்பதத்தையும் அவர்தான் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
கடந்த  காலங்களில்  எனக்குத்தெரிந்த -  நான்  நட்புறவுடன்  பழகிய பல  படைப்பாளிகள்  சமூகப்பணியாளர்கள்  குறித்து எழுதிவந்திருக்கின்றேன்.  அவர்கள் வாழ்ந்த  காலத்திலும்  அதிலிருந்த   ஆழமான கணங்களிலும்   எனக்கேற்பட்ட அனுபவங்களையே   நினைவுப்பகிர்வாகவே  தொடர்ந்து  எழுதிவருகின்றேன். காலமும்  கணங்களும்  ஒவ்வொருவர்   வாழ்விலும்  தவிர்க்க முடியாதது.
 ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. வின் நினைவுதினம் இன்றாகும்.

எஸ்.பொ.  அவர்களை  1972  ஆம்  ஆண்டு,  எனது இலக்கியப்பிரவேச தொடக்க காலத்தில்தான்   முதல்  முதலில்  கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில்  ரெயின்போ  அச்சகத்தில்  சந்தித்தேன். அதன்பிறகு  கொழும்பில்  பல  இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன்.   எஸ்.பொ.,   இரசிகமணி   கனக செந்திநாதன் ,  கலைஞர் .ரி. பொன்னுத்துரை  உட்பட  பல  இலக்கியவாதிகள்   எமது நீர்கொழும்பு   இந்து  இளைஞர்  மன்றம்  தொடர்ச்சியாக  மூன்று நாட்கள்  நடத்திய  தமிழ்  விழாவிற்கு  வருகை தந்த காலப்பகுதியில் எனக்கு எட்டு வயதுப்பராயம். அந்த வயதிலேயே அவரது நகைச்சுவையான பேச்சை கேட்டுள்ளேன். மீண்டும் அவரைச்சந்தித்து பேசும்போது எனது வயது 21.  அதன்பின்னர் கொழும்பு -07 இல் அமைந்திருந்த கல்வி வெளியீட்டுத்திணைக்களத்திலும் விவேகானந்தா வித்தியாலயத்திலும் அடிக்கடி சந்தித்து உரையாடியிருக்கின்றேன். அவர் இந்த வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றினார்.

எஸ்.பொ.  1980  களில்  நைஜீரியாவுக்கு  தொழில்  நிமித்தம்  புறப்பட்ட வேளையில்   கொழும்பு -  ஜம்பட்டா  வீதியில்  மலையக  நாடகக் கலைஞரும்   அவள்  ஒரு  ஜீவநதி  திரைப்படத்தின்   தயாரிப்பாளரும் வசனகர்த்தாவுமான   மாத்தளை   கார்த்திகேசுவின்  இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக    நடந்த   பிரிவுபசார  நிகழ்வில்   உரையாற்றினேன்.

2018 மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த், கன்பரா 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்!!!


தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில்நவம்பர் 27ம் திகதி தமிழர்கள் வாழும்அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறவிருகின்றனஇந்தவகையில் ஸ்ரேலிய  நாட்டிலும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில்,  ஒஸ்ரேலியாவின்  விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதிசெவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

சிட்னி மாநிலத்தில் Newington Reserve, Holker St, Silverwater இல் நவம்பர் மாதம் 27ம் திகதி, செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிமுதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் ணர்வு பூர்வமாக  அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

****மெல்பேண் மாவீரர் நாள் நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த தமிழின உணர்வாளரும், தமிழ் இலக்கியப் பேச்சாளரும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் நீண்டநாள் ஆதரவாளரும், மலேசியா தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய திரு இரா. திருமாவளவன் அவர்கள் மாவீரர் சிறப்புரை ஆற்றவுள்ளார்.***

==> அத்துடன் மெல்பேண் ஸ்பிரிங்வேல் மண்டபத்தை அண்டி புனர் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால், வாகன தரிப்பிட வசதிகள் குறைவாக உள்ள காரணத்தால், நேரத்துடன் நிகழ்வுக்கு மக்களை வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள், அத்துடன் மண்டபத்தை அண்டிய வீதிகளிலும், வியு வீதி (View Road) இலும் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.

நவம்பர் 27ம்திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி மரியாதை செய்ய நம் பேதங்களை மறந்து  அனைவரும் திரண்டு வருவோம்...



சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை - கானா பிரபா - ஈழப்போர்காலத்துநினைவுகள்


வீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி வைத்து ஊதி  ஊதி மண்ணைத் துரத்தி விட்டு வேப்பம் பழத்தின் கசப்பைச் சுவை பார்த்திருக்கிறேன். காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை (கொசு) விரட்டியடிக்கும்.
இந்த வேப்பம் கொட்டைகளுக்கு இன்னொரு பயன் இருப்பதை அப்போது நான் அறிந்து கொண்டது நம்மூர்த் திருவிழாக்களில் தான். மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருந்தது. அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான். 
விடுவேனா நான். வாசுகி திருவள்ளுவருக்குக்கு நிலத்தில் விழுந்த சோற்றுப் பருக்கைகளை ஊசியால் ஒற்றி எடுத்துக் கொடுத்தது போல வீட்டு முற்றமெல்லாம் தேடித் தேடி வேப்பங்கொட்டை பொறுக்கினாலும் அந்த மருதடிப் பிள்ளையார் கோயில் தேர்த் திருவிழாவுக்கு மில்க்வைற் இடம் தொப்பி வாங்க ஒரு கிலோ தேறவில்லை. என்னுடைய திடீர் ஆர்வக் கோளாறைப் பார்த்து விட்டு அம்மம்மாவும் அயலட்டையில் பொறுக்கிக் கொஞ்சம் தந்தார். ஏறக்குறைய ஒரு கிலோ தேறிய அந்த வேப்பங்கொட்டைச் சரையைச் சைக்கிள் கரியரில் கிடத்தி வைத்து, மருதடிப் பிள்ளையார் கோயிலில் கடை விரித்திருந்த மில்க்வைற் நிறுவனத்தின் தற்காலிக விற்பனை மேம்படுத்தல் கூடத்தில் கொண்டு போய்க் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்தார்கள்.  
“ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறையுது ஆனாலும் பறவாயில்லை தம்பிக்கு ஒரு தொப்பி குடுங்கோ” என்று முகப்பில் நின்ற ஒருத்தர் கட்டளையிட ஒரு வெள்ளைத் தொப்பி எனக்குப் பரிசாகக் கிடைத்தது.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்றி வித விதமான சவர்க்காரங்கள். நம்மூரில் சோப் ஐ சவுக்காரம் (சவர்க்காரம்) என்போம். என்னைப் போலவே பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற்  வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.

அஞ்சலிக்குறிப்பு: கலைக்குடும்பத்தில் பிறந்த ஆசிரியை நித்தியகலா கிருஷ்ணராம் (1963 - 2018) - முருகபூபதி


இலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பூர்,   மூவின மக்களும் செறிந்து வாழும் பிரதேசமாகும்.  அங்கு தமிழ்க்கத்தோலிக்க மக்கள் மத்தியில்  இந்து தமிழ் மக்களும் நீண்ட நெடுங்காலமாக வாழ்கின்றமையால் அவர்களுக்கென அங்கு ஆலயங்களும் சமூக அமைப்புகளும் ஒரு இந்துக் கல்லூரியும் இயங்குகின்றன.
நீர்கொழும்பூரின் பெயரையே இணைத்துக்கொண்டு கலை, இலக்கிய வாதியாகத்திகழ்ந்தவர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம். இவரது மருமகளும்  நீர் - விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் ஆசிரியையுமான சகோதரி திருமதி நித்தியகலா கிருஷ்ணராம் திடீரென மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
1963 ஆம் ஆண்டில் எங்கள் ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பயின்று, அங்கேயே ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் மறைந்திருக்கிறார்.
இவரை குழந்தைப்பராயத்திலிருந்து தெரிந்துவைத்திருந்தமையால் எனக்கு உடன்பிறவாத சகோதரியாகத் திகழ்ந்தவர். எப்பொழுதும் என்னை அண்ணா, அண்ணா என பாசம் பொங்க அழைக்கும் நித்தியகலாவின்  திடீர் மறைவு தந்திருக்கும் துயரத்தை கடந்துசெல்வதற்கு காலம் செல்லும்.
இவரது பாட்டனார் எங்கள் ஊரில் சிறந்த சிலம்படி கலைஞர். அத்துடன் நாடகங்களும் நடித்திருப்பவர். இவரது தாய் மாமன்மாரான முத்துலிங்கம், கதிர்காமம்  ஆகியோர் நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் முதலான துறைகளில் ஈடுபட்டவர்கள். முத்துலிங்கம் ஈழத்து இலக்கிய உலகில் எழுத்தாளராகவும் நன்கு அறியப்பட்டவர்.

வாழ்வை எழுதுதல் அங்கம் 07 எங்களுக்கு மதிய உணவளித்த பணிஸ் மாமாவின் கதை! இன்று அலரிமாளிகைக்காக அடிபடும் சிங்களத் தலைவர்களுக்கும் இந்தக்கதை சமர்ப்பணம்!! - முருகபூபதி


இவரைத் தெரியுமா?
இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் இவரை அறிந்திருக்கமாட்டார்கள்.
இவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் இவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப்பராயத்தில் இவரை அவ்வாறுதான் அழைத்தேன்.

எங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா - நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவு பெக்கட்டுகள் தலைமை ஆசிரியரின் அறையில்  அடுக்கப்பட்டிருக்கும். மதியவேளையில் எங்கள் பெரியம்மா உறவுமுறையுள்ளவர் அங்கு வந்து விறகடுப்புமூட்டி பால் காய்ச்சித்தருவார்கள். பெரியம்மாவுக்கு மாதம் முடியும்போது பால் காய்ச்சிய கூலியை பாடசாலை நிருவாகம் வழங்கும்.
மாணவர்களுக்காக இந்த உபயத்தை செய்பவர் கல்வி மந்திரியான தகநாயக்கா அவர்கள்தான்  என்று  ஒருநாள் பெரியம்மாதான் எனக்கும் எனது மாணவப்பராயத்து நண்பர்களுக்கும் சொன்னார்கள். அன்றிலிருந்துதான் அமைச்சர் தகநாயக்காவை பணிஸ் மாமா என அழைக்கத்தொடங்கினோம்.
அவர், தென்னிலங்கையில் காலி என்ற ஊரில்  1902 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி  திரு. திருமதி முகாந்திரம் தியோனிஸ் சேபால பண்டித தகநாயக்கா தம்பதியரின் புதல்வராகப்பிறந்தார். அதுவரையில் இவருடன் இவரது தாயாரின் கருவறையில்  இருந்த மற்றும் ஒரு குழந்தையும் அன்றைய தினம்  பிறந்தது.

ஹாலிவுட்டில் தடம் பதித்த தமிழர்-அசோக் அமிர்தராஜ் - திருவேங்கடம் சுவாமிநாதன்.


இன்றைய காலக்கட்டத்தில் படித்து, ஒரு தொழிலிலோ, நல்ல வேலையிலோ அமர்ந்து கௌரவமாக குடும்பத்தை பராமரித்து நல்ல நிலையில் இருப்பது என்பது பெரும் போரட்டமாகவே உள்ளது. தொழில் நஷ்டம், போட்டி, பொறாமை, படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்காமை, சாலை விபத்து, புதுப்புது நோய், குடிநோய், வேலியே பயிரை மேயும் குடும்பச் சூழல் என எவ்வளவோ கஷ்டங்களை கடந்தால்தான்  வாழ்வில் மேம்பட முடியும். இந்நிலையில் ஓருவர் மிகவும் சவாலான விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் சாதனை புரிந்து, பின்னர், இடர்பாடுகள் நிறைந்த திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிக் கொடி நாட்டுவது என்பது எளிதானதல்ல. கடின உழைப்பும், ஒழுக்கமும் இருந்தால் சாத்தியம் என்கிறார் இக்கட்டுரையின் நாயகன்.
1956-ல் சென்னையில் பிறந்த அசோக் அமிர்தராஜ் முன்னால் தொழில் முறை டென்னிஸ் விளையாட்டு வீரர் என்பது யாவரும் அறிந்ததே. பின்னர், இந்திய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். 'நேஷனல் ஜியாகிராபிக்'; என்கிற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமைச் செயலதிகாரியாக உள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்து, வளர்ந்த இவர், தனது 9 ஆண்டு கால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்க்காக பல பன்னாட்டு டென்னிஸ் பந்தயங்களில் பங்கேற்று சிறப்பபாக விளையாடி சர்வதேச அளவில் தன் முத்திரையை மிக ஆழமாகப் பதித்துள்ளார்; என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல டென்னிஸ் வீரர்களான விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோர் இவரது உடன் பிறந்த சொந்த சகோதரர்கள் ஆவர்.

இலங்கைச் செய்திகள்


மைத்திரிக்கு செக் வைக்கும் கரு ? : வைரலாகிய விடயம் குறித்து சபாநாயகர் காரியாலயம்

35 ஆண்டுகளுக்கு பின் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வு

யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் என்னை தொடர்புகொண்டனர்- அகாசி

மைத்திரிக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ள மக்கள்

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக ஹன்சார்ட்டில் பதிவு

பாராளுமன்றில் இன்று நடந்தது என்ன ? - முழுவிபரம்

 “முஸ்லிம்களின் குடியேற்றங்களினால் வன்னி மக்களின் தமிழ்மண் பறிபோகின்றது”

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்தின ஏற்பாடுகள் !

அவசர சந்திப்பில் மைத்திரி , மஹிந்த

பிரதமரோ, அரசாங்கமோ இல்லையென ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது - சம்பந்தன்

நான் அரசமைப்பை மீறவில்லை- பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் சிறிசேன

சனல் 4 பேட்டியில் ரணில் - மங்கள தெரிவித்திருப்பது என்ன?

மாவீரர் நாள் நிகழ்விற்கே தடை நினைவேந்தலுக்கல்ல : யாழ் நீதவான் நீதிமன்றம் 

அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகளின் ஆசிகளுடன் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டார் முன்னாள் பிரதமர்

புதிய பிரதமரை நியமிக்க தான் தயார்: ஜனாதிபதியின் அதிரடி முடிவு

 ரணில் ஊழல்பேர்வழி- விசாரணை செய்ய ஆணைக்குழு- கண்ணீர்விட்டழுதார் சிறிசேன

உலகச் செய்திகள்


முதியவர் சொன்ன அருள்வாக்கை கேலி செய்த இளைஞர்கள்: நடுக்காட்டில் சொன்ன இடத்திலேயே தோண்டியதும் காட்சி தந்த ஐயப்பன்

சிக்காகோ துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி

கஷோக்கியின் கொலைக்கும் சவுதி இளவரசருக்கும் எவ்வித தொடர்புமில்லை

கஜா புயல் மறுசீரமைப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை.

கராச்சியில் சீன தூதரகம் மீது தாக்குதல் ; இரு பொலிஸார் பலி

 பாக்கிஸ்தானில் மற்றுமொரு குண்டுவெடிப்பு- 25 பேர் பலி

கஜா புயல் நிவாரண நிதியாக  ஒரு கோடி ரூபா

மயிரிழையில் உயிர் தப்பிய விமானப் பயணிகள்

படேல் சிலையை மிஞ்சும் ராமர் சிலை

மாவீரர் நாள் - சிட்னி 27/11/2018


மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் 27/11/2018






தமிழ் சினிமா - திமிரு புடிச்சவன் திரை விமர்சனம்



   போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்காத நடிகர்கள் இருக்க முடியாது. பல கதாபாத்திரங்களை தேடி ஹீரோக்கள் நடித்தாலும் போலிஸ் கதாபாத்திரம் எப்போதும் பேர் சொல்லும் விதமாக இருந்துவரும் ஒன்று. அந்த வகையில் போலிஸாக இப்போது வந்துள்ள விஜய் ஆண்டனி சாதாரண போலிஸா இல்லை திமிரு புடிச்ச போலிஸா என பார்க்கலாம்.

கதைக்களம்

விஜய் ஆண்டனி ஊரில் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து போலிஸாக பணியில் சேர்கிறார். அவருக்கு ஒரு தம்பி. அவ்வளவு தான் அவரின் குடும்பம். தம்பியின் மேல் அதிக அக்கறை இருந்தாலும் தவறுகளை தட்டி கேட்பதில் ஒரு போலிஸ் தான்.
திடீரென அவரின் தம்பி காணாமல் போக வருடங்கள் கடந்தோட ஒரு நாள் பணியில் அமர்த்தப்பட்டு புதிய ஊருக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத ஒரு கொலை சம்பவம். இதை கண்டு அவர் அதிர்ச்சியுற கதை சூடுபிடிக்கிறது.
எதிர்பாராத ஒரு திருப்புமுனையாக அவர் மீது சக போலிஸான ஹீரோயின் நிவேதாவுக்கு காதல் வருகிறது. அடுத்தடுத்து சில அசம்பாவிதங்கள் நடக்க இதன் பின்னணியில் பெரும் ரவுடியாக சாய் தீனா இருக்கிறார். கொலைகளின் காரணம் என்ன, காணாமல் போன அவரின் தம்பி என்ன ஆனார்? என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே அதற்கென ஒரு ரசிகர்கள் வட்டாரம் உண்டு. குறிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என பலரும் இருப்பார்கள். தியேட்டர்களில் அவர்களை காணலாம். அவரும் அதைப்போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த முறையும் அவரின் படத்தில் செண்டிமெண்ட்ஸ், எமோஸனல் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் கடந்த படத்தை விட இந்த படம் ஓகே ரகம் தான் என்ன சொல்லவைத்திருக்கிறார். நல்ல திறமையுள்ள அவரை ஆக்‌ஷன் ரொமான்ஸ் படங்களில் எப்போது பார்க்கலாம் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். அவர் நன்றாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஹீரோயின் நிவேதா பெத்து ராஜ் குறும்பான நடிப்பால் ஹீரோவை முந்துகிறார். அங்கங்கே காமெடிகளை இறக்கிவிடுகிறார். தியேட்டர்களில் பலரும் சிரிக்க தான் செய்தார்கள். இதனால் சில இடங்களில் கூடுதலாக ஸ்கோர் செய்கிறார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோமோசனாக தெரிந்தாலும் படத்தில் ஆங்காங்கே சிரிப்பை வரவைக்கும் காட்சிகள் இருந்ததால் அது பெரிதாக தெரியவில்லை.
சாய் தீனா வழக்கம் போல் வில்லனாக நன்றாக நடிப்பாரே. இந்த படத்திலும் அப்படித்தான். ஆனால் என்ன இன்னும் அவருக்கு பலம் கூட்டும் படியாக கதையில் இருந்திருந்தால் ஷார்ப்பாக இருந்திருக்கும்.
விஜய் ஆண்டனியின் தம்பி நண்பர்களாக வந்த மூன்று பேரும் நன்றாக நடித்திருந்தார்கள். கதையை பொருத்தவரை இயக்குனர் கணேசா காவல் துறை மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார்.
ஆனால் என்ன திமிரு புடிச்சவன் என டைட்டில் வைத்துவிட்டு மிகவும் சாந்தமாக இருப்பது போல விஜய் ஆண்டனியை காட்டியிருக்கிறார். அவருக்காக பல விசயங்களை சேர்த்திருக்கிறார்.
மேலும் திருநங்கைகள் முன்னேற்றம், சிறார் குற்றங்கள், அதன் சட்டங்களை என சமூக விழிப்புணர்வு விசயங்களையும் பதிவு செய்துள்ளார்.
விஜய் ஆண்டனியே படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என அவரின் ஸ்டைலை காண முடிந்தது.
ஊழியம் என்ற பெயரில் அட்டூழியம் செய்யும் சில மத விற்பனையாளர்களை கிண்டல் செய்து கலாய்த்த லொல்லு சபா சுவாமி நாதன் தன் ஜெபத்தால் பலரையும் தியேட்டர்களில் சிரிக்க வைத்துவிட்டார்.

கிளாப்ஸ்

நிவேதாவின் குறும்பான நடிப்பு, இயல்பான காமெடி ஸ்மார்ட்.
திருநங்கைகள் சமுதாயத்தில் சாதித்தவர்களை ஹைலைட் செய்தது வரவேற்கத்தக்கது.
புண்பட்ட போலிஸ்காரர்களின் மனங்களை குளிரவைத்தது யூனிபார்ம் போட்டவர்களுக்கு கூல் செக்மெண்ட்.

பல்ப்ஸ்

கதையோடு டைட்டில் செட்டானதா என்ற கேள்வி எழுகிறது.
கூடுதலான எமோசன்ஸ் அண்ட் சென்டிமெண்ட்ஸ் கொஞ்சம் போர்.
மொத்தத்தில் திமிரு புடிச்சவன் கொஞ்சம் வித்தியாசமானவன். குடும்பத்துடன் பார்க்கலாம்.
நன்றி