அவளிடமிருந்து உனக்குத் தருகிறேன் -கு.உமாதேவி

.

 என்னுடையதென்று என்னிடம் எதுவுமில்லை

பிரபஞ்சம் எங்கும் உயிர்களைப் பிரசவித்த

காமத்தின் உச்சி முகர்ந்த வாசம்

எலி மருந்து தின்று

இறந்து போனவளின் வெஞ்சினம்

பறவையின் கூரிய இறகினையொத்த

எனது விழிகளில் சுரந்தோடும் கருணை

கட்டற்று அணல்தாவும்

காட்டுத் தீயின் பெருங்கோபம்

வேலிகளைத் தாண்டிப் பூத்தரும்பும்

மலர்களின் மென்மை

பசித்து வருந்தும் வரியவர்க்கு

ஈயும்

தாய்மையின் வீச்சம்

துரோகத்தின் எல்லை மீறுகையில்

பீறிடும் கொலைவெறி

எல்லாம் உன்னுடையதுதான்

உன்னுடையதை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன்

மகளேமெல்பேர்னில் விற்றில்சீ தமிழ்ச் சங்கம் வழங்கிய வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை - 2012

.

கலாநிதி.கௌசல்யா அன்ரனிப்பிள்ளை.


மெல்பேர்னில் உள்ள விற்றில்சீ பிரதேச சபையில் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட விற்றில்சீ தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நடாத்திய வருடாந்த இரவு ஒன்று கூடல் நிகழ்வே வானமுதத்தின் வண்ணத்தமிழ் மாலை - 2012. மெல்பேர்னில் உள்ள nபுரும்பாலான தமிழ் மக்களால் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் மக்களால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவும் 6மணியிலுருந்து இரவு 8மணிவரை விரும்பிக் கேட்க்கப்பட்டு வரும் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை, விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினாலேயே ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளைக் கடந்து தடைகள் எதுவுமின்றி வீடுகள் தோறும் ஒலித்துக் கொண்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது.


வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள்

.

சிட்னி முருகன் கோவிலில் சமயச் சொற்பொழிவுதேவார இசைமணி,  திருமுறைத்திலகம்,  சித்தாந்தரத்தினம் பேராசிரியர் கோ.ப.நல்லசிவம்
(தத்துவத்துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவ10ர்,  தமிழ்நாடு,  இந்தியா)
அவர்கள் வழங்கும்

1.    நவம்பர் மாதம் 26ம் திகதி இரவு 7.30 முதல் 9.00 வரை
                     கந்தபுராணத்தில் முருகன்

 2.  நவம்பர் மாதம் 28ம் திகதி இரவு 7.30 முதல் 9.00 வரை
                      அருணகிரிநாதரின் பாடல்களில்    பக்தியும் இசையும்;

 3.  நவம்பர் மாதம் 29ம் திகதி இரவு 7.30 முதல் 9.00 வரை
                       சமயங்களைக் கடந்த   சைவசித்தாந்தம்;

சிட்னி முருகன் கோவிலில் சைவமன்றம் வழங்கிய திருப்புகழ் விழா 17/11/2012

.


சிட்னி முருகன் கோவிலில் திருப்புகழ்  விழா கோலாகலமாக இடம் பெற்றது .
விழாவின் பொது இடம் பெற்ற சில நிகழ்வுகளை இங்கு காணலாம் .
படப்பிடிப்பு  ஞானி   &  சிவகுமார்

சைவமன்றம் வழங்கும் நிகழ்வு நவம்பர் 24உறவு சொல்ல இருவர் - - ரிஷபன்

.தகவல் வந்து விட்டது. 

கோபியின் தம்பிதான் வந்து சொல்லி விட்டுப் போனான்.

"மன்… ஸ்ஸ்… வந்து… ரெண்டு மணிக்குன்னு சொல்லச் சொன்னாங்க."

வத்சலாவிடம் நின்று பேசவில்லை. அவசரமாய் ஒடி விட்டான். இரண்டு பேருக்குமே கண்ணீர் தளும்பி விட்டது.

"என்னவாம்"?”

அப்பா வெளியில் வந்தார்.

"அவங்க வீட்டுலேர்ந்து வந்தாங்க"

"ஓ!…"

"ரெண்டு மணிக்காம்…"

திருமுறை தேனமுது November 24, 25

.


இலங்கைச் செய்திகள்

.
வெலிக்கடைச்சிறையில் தமிழ் கைதியொருவரும் மூன்று முஸ்லிம் கைதிகளும் உயிரிழப்பு

கோயிலில் பெருந்தொகையான பணம், தங்கநகைகள் திருட்டு

புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டவர்களில் 21 பேருக்கு பிணை: 4 பேருக்கு விளக்கமறியல்

மதுபானசாலை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 இராணுவ நினைவுத்தூபிக்கு உகண்டா ஜனாதிபதி மரியாதை

பரிதியின் மரணம்: இன்னும் ஏன் இந்த கொலை வெறி?

தமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும் மதீந்திரன்; புலிகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தில் பலியானார். (1)


ஐ.நா. தனது பொறுப்பை சரிவர செய்யவில்லை: பான் கீ மூன்

  யாழ்.- கொழும்புக்கான புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
   
திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் கைது


சிட்னி முருகன் கோவிலில் கந்த சஷ்டி 2ம் நாள்

.

கந்த சஷ்டி ஆரம்பித்து விட்டது சிட்னி முருகன் கோவிலும் பக்தர்களால் நிரம்பிய வண்ணம் உள்ளது. ஆறுமுக பெருமானை வழிபடும் அடியவர்களின் குறைதீர்க்கும் கந்தவேளை  வணங்க வந்திருக்கும் அடியார்களை இங்கே காணக்கூடியதாக இருக்கிறது.
                                                                                     படப்பிடிப்பு  ஞானி

வானொலி மாமா நா. மசேனின் குறளில் குறும்பு 46 - “துலாக் கொடி”

ஞானா:        அப்பா….அண்டைக்கு பனையின் பயன் சொல்லிக் கொண்டு வந்து பாதியிலை நிப்பாட்டிப்போட்டுப் போட்டியள். இப்ப சொல்லுங்கோ விட்ட இறத்திலை இருந்து, உறியும்,  உமலும்,  திருகணையும் ஊற்று இறைக்கக் கொடிதானாவாய் எண்டால் என்ன கருத்து?

அப்பா:  
      ஞானா,  ஒவ்வொரு நாளும் நீதான் என்னைக் கேள்வி கேட்பாய், இண்டைக்கு நான் உன்னை ஒரு கேள்வி கேட்கப் போறன் அதுக்குப் பதில் சொன்னால்,  உதுக்கு நான் விளக்கம் சொல்லிறன்.

ஞானா:        என்ன கேள்வி அப்பா கேளுங்கோ பாப்பம்.

அப்பா:        அதாவது வந்து…வந்து…..திருக்குறளிலை ஊற்று என்ட சொல்லு இருக்கோ,        சொல்லு பாப்பம்.

ஞானா:        ஊற்று….ஆதாவது நிலத்திலை தண்ணீர் உறிறது அதுதானே அப்பா.

அப்பா:
        ஓமோம்…..அதுதான் …அதுதான் ஊற்று.

UNISON Musical Program with Jollee and Reshma Abraham ,24-11-2012.

.

செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம்பிள்ளை

.
 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.


இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார்.ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். திறமையான எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளர், தன்னலமில்லா தொழிற்சங்கத் தலைவர், துணிவுடைய சுதந்திரப் போராட்ட வீரர். வ.உ.சி. யின் தியாக வாழ்க்கை ஒர் உன்னத வரலாறானது.
அவரது வாழ்க்கை, இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக தியாகங்கள், போராட்டங்கள், அனுபவித்த துயரங்கள் இவற்றால் நிறைந்தது. வ.உ.சி. யின் அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். அவரது குணநலன்களை உலகம் போற்றுகிறது.
வ.உ.சி. ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர், தமிழ் செய்யுள்கள் இயற்றியுள்ளார், கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் உள்ள அனேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பாலகங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

சனியின் கதை..!

.

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் சின்னம், ரோமானிய விவசாயக் கடவுளின் சின்னமான அரிவாள்தான்.

இரவு வானில் சூரியக் குடும்பத்தின் 5 உறுப்பினர்களை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றி பார்க்க முடியும். அவைகளில் ஒன்றுதான் சனிக் கோள். நம் மூதாதையர்களும், இதனை வெறும் கண்ணால் பார்த்தனர். கண்ணால் பார்க்கும் கோள்களில் இதுதான் தொலைவில் உள்ளது என்றும் தெரிந்து கொண்டனர். சனிக்கோள் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் பளிச்சென்று தெரியும். பூமியிருந்து பார்க்கும்போது வானில் தெரியும் கோள்களில் மூன்றாவது பிரகாசமான கோள் சனி. சனிக்கோளை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதர்கள் பார்த்து வந்திருக்கின்றனர்.

உலகச் செய்திகள்

.

எகிப்திய விமானப் பணிப்பெண்களுக்கு புதிய சட்டம்

பொருளாதாரத் தடையினால் தினசரி 100மில்லியன் டொலர்களை இழக்கும் ஈரான்

திருநீறு அணிந்து சிவனை வணங்கிய கனேடிய பிரதமர்

இன்று (10/11/2012)  மலாலா தினம்!

எகிப்திய விமானப் பணிப்பெண்களுக்கு புதிய சட்டம்

 
விமான பணிப்பெண்கள், தலைமுடியை மறைக்கும் விதத்தில், முக்காடிட்டு பணிக்கு வர வேண்டும் என எகிப்து அரசு, வலியுறுத்தியுள்ளது.

எகிப்து நாட்டில், ஹொஸ்னி முபாரக் ஆட்சியில் இருந்தவரை, முஸ்லிம்களுக்கான கட்டுப்பாடுகள் ஏதும் பெரிய அளவில் விதிக்கப்படவில்லை. மக்கள் புரட்சி மூலம், கடந்த ஆண்டு, முபாரக், ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி வெற்றி பெற்றது.

இவ் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்!.
இன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வந்தன. இதனால் ஏற்பட்ட சூரிய கிரகணம் அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் தெளிவாக தெரிந்தது.
அந்நாட்டின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், சுற்றுலாவாசிகள் மற்றும் வானியல் நிபுணர்கள் ஆகியோர் இக் கிரகணத்தை காண ஆவலுடன் கூடியிருந்தனர்.தமிழ் சினிமா


துப்பாக்கி

உலகமெங்கும் இன்று தீபாவளிக் கொண்டாட்டமாக இளைய தளபதியின் நடிப்பில் துப்பாக்கி வெடித்துள்ளது.
தீபாவளிக் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்களுக்கு துப்பாக்கி அதிரடியான இசைக் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பின்னிப் பெடலெடுக்கின்றன. ஒரு அதிரடி ஆக்ஷன் நிறைந்த நட்சத்திர ஹீரோவை சரியாக கையாண்டுருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு போன்ற படங்களிலிருந்து துப்பாக்கியை வேறொரு கோணத்தில் பார்க்கலாம்.
விறுவிறுப்பான கதைக்களத்தில் தொடங்கும் துப்பாக்கியின் கதை, ஒரு இராணுவ வீரனின் விறுவிறுப்பான செயல்கள் மூலம் தீவிரவாதிகளை பிடிப்பது.
இராணுவத்தில் இருக்கும் விஜய் மும்பைக்கு விடுமுறையில் வருகிறார். அங்கே பொலிஸில் இருக்கும் சத்தியனுடன் ஊர் சுற்றுவது தான் வேலை.
ஒரு முறை இவர்கள் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறேங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடிக்கிறது.
ஆனால் அத்தீவிரவாதியை பிடித்து பொலிசில் கொடுக்கிறார். அவன் ஒரு பொலிசாராலேயே தப்பிக்க வைக்கப்பட இவரது வேட்டை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் தவறான பொலிசாரைக் கூட தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு இருக்கிறது.
கதையில் பெரியளவு வித்தியாசத்தைக் காணமுடியாவிட்டாலும் விஜயின் வழமையான பாணியில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவும் அளவுக்கதிகமான ஹீரோயிசம் இல்லாமலும் கில்லியில் பார்த்த விஜயின் இன்னும் ஒரு புதிய தோற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது.
நடனத்துக்காக தினேசும், சிறீதரும் விஜயை நன்றாகப் புழிந்து விட்டார்கள் என்பது அவரது நடன அசைவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.
காஜல் அகர்வால் அழகு விருந்து படைத்தாலும் திரில் நிறைத்த கதைப் பகுதிக்குள் நுழைக்கப்படவே இல்லை என்பதால் ஆரம்பத்தில் மட்டும் ஒரு சில காட்சிகளால் மனதுக்குள் பதிந்ததோடு மறைந்து போய் விடுகிறார்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும் இடத்திலும், தீவிரவாதிகளை அவர்கள் இடத்திலேயே தங்கையை பணயமாக வைத்து அழிக்கும் இடத்திலும் விஜய் ஸ்டைலில் ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார்.
துப்பாக்கி சுழற்றலக்காகவே அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும்காட்சியும் அதற்காக விஜயின் கெட்டப்பும் ஃபாக்ஸ், ஏ. எக். என் இல் ஒளிபரப்பான பிரபல தொடரான 24 மணிநேரத்தையும் அதில் நடித்த ஜக் பவர் ஐயும் அப்படியே நினைவுபடுத்திச் செல்கிறது.
அதே போல கையில் சிப்ஸ் பதித்துச் செல்லும் இடத்திலும் மிசன் இம்பாஸிபிள் ஐ நினைவூட்டுவது போல உள்ளது.
சந்தோஷ் சிவன் தனது ஒளிப்பதிவை திறம்படச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பஸ் மற்றும் கப்பல் குண்டு வெடித்தால் காட்சிகள் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் இப்படத்திலும் இரு தங்கைகள் மூலம் தங்கை சென்டிமென்டை கையாண்டிருக்கிறார். அனைவரும் எதிர் பார்த்தது போல படத்தில் அலட்டல் அலப்பாறைகள் நிறைந்த எந்நவொரு பஞ்ச் வசனத்தையும் விஜய் பேசவில்லை.
அதே போல ஹரிசின் இசையும் விஜயின் ஸ்டைலுக்கும் படத்தின் விறுவிறுப்புகம்கும் பெரிதும் ஒத்துப் போவது மிகப் பெரிய பிளசான விடயமாக இருக்கின்றது.
நண்பனுக்கு பின்னர், விஜய்யும் சத்யனும் துப்பாக்கியில் இணைந்து நடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
காஜல் அகர்வால் முதன் முறையாக விஜய்யுடன் நடித்தாலும் நடிப்பில் கவரச்சியில் வாங்கும் சம்பளத்திற்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார்.
நடிகர்: விஜய்
நடிகை: காஜல் அகர்வால்
இயக்குனர்: ஏ.ஆர்.முருகதாஸ்
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு: சந்தோஷ்சிவன்
நன்றி விடுப்பு