மரண அறிவித்தல்

.
திரு. வெற்றிவேலு சிதம்பரநடராஜா 


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேலு சிதம்பரநடராஜா அவர்கள் 9.06.2019 அன்று சிட்னியில் காலமானார். அன்னார் புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்ற வெற்றிவேலு, சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற குணவர்த்தனம், பொன்னம்மா தம்பதியினரின் ஆசை மருமகனும், கதிரவேலுப்பிள்ளை(சிட்னி), சத்தியபாமா(சிட்னி), ருக்குமணி(கனடா), காலம்சென்றவர்களான சாவித்திரி, விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சுபத்திராவின் அருமைக் கணவனும், யாழினி (சிட்னி), வெற்றிக்குமரன் (சிட்னி), உஷாந்தினி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அரவிந்தன், ருமணா, பிரஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் அக்க்ஷரா, அக்கிரா, நோவா, Zivah ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை 12.06.2019 அன்று Rookwood மயானம், south chapelஇல் காலை 11.30 மணியிலிருந்து 2.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, கிரியைகளைத் தொடர்ந்து தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்
வெற்றிக்குமரன்
-->
0422 280 599



திகழ்ந்திட்டால் சிறப்பன்றோ ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


                       
                          
         உலகிலின்று ஊடகங்கள் ஊற்றூப்போல் எழுகிறது 
                 அளவற்ற எழுத்தாளர் ஆக்குகிறார் அவர்படைப்பை 
        புவிமீது நடக்கின்ற பொருத்தமில்லா காட்சிகளை
                அவரெடுத்து தம்படைப்பால் அனைவருக்கும் காட்டுகிறார் 
        காட்டுகிறார் படைப்புக்கள் கண்ணியத்தை கைவிட்டு
                கருத்திலே இருத்தவொணா காட்சியினை காட்டுதற்கு
        ஊடகங்கள் ஒத்துழைப்பை நல்கிநிற்கும் நிலைகாண
                உள்ளமது வேதனையில் உழன்றபடி நிற்கிறதே  ! 


         ஊதிப் பெருக்குவதை ஊடகங்கள் உடன்பாடாய் 
               உள்ளிருத்தும் தன்மையதே உளம்வருந்தச் செய்கிறது 
         வருகின்ற செய்திகளை எடுக்கின்ற படைப்புக்களை
                தரமாகக் கொடுப்பதற்கு தாமதும் எண்ணவேண்டும் 
         எண்ணியெண்ணி தரவுகளை எடுத்துமே தரவேண்டும்
               கண்ணியத்தை நினைத்தபடி கருமத்தை ஆற்றவேண்டும் 
         மண்மீது மக்களிடம் மனமாசு எய்துததற்கு
                  வாய்க்கின்ற வம்புகளை வாங்கிடல் நல்லதல்ல  !


சரண்யா தியாகராஜாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் - செ.பாஸ்கரன்

.

ஜூன் முதல் நாள் மாலை வேளை Reverside theatre Parramatta வில் செல்வி சரண்யா தியாகராஜாவின் பரத நாட்டிய அரங்கேற்றம். நடன முத்திரைகளுடன் அலங்கரிக்கப்படட  அலங்கார மேடையில் இசைக்கலைஞர்கள் அமர்த்திருக்க நடன ஆசிரியை கலாசூரி ஸ்ரீமதி ஜெயலக்சுமி  கந்தையா அவர்கள் தனது 80 தாவது அரங்கேற்றத்தை நிகழ்த்தக் காத்திருக்கின்றார். 

அறிவிப்பாளர்களாக இளம் சந்ததியினரான செல்வி கீர்த்திகா  நடராஜாவும் செல்வன் ஹரன் நடராஜாவும் அழகு தமிழிலும் ஆங்கிலத்திலும்  நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கியது சிறப்பாக இருந்தது . தொடர்ந்து தியாகராஜாவின் மகனும், சரண்ணியாவின்  குட்டித் தம்பியுமான  டிலன் தியாகராஜா வந்தவர்களை மழலைத் தமிழில்  திருக்குறளையும் கூறி வரவேற்றார்.

விளக்குகள் மெல்ல அணைந்தன பாடகர் நந்தகுமார் உன்னிக்கிருஷ்னனின் கணீர் என்ற குரலில் சரஸ்வதி ராகம்   அவையில் பரத்து விரிகிறது. நடன அஞ்சலி செய்ய சரண்ணியாவின் பாதங்கள் தாளங்களோடு அசைய முகத்தில் பாவங்கள் வெளித்தெரிய காலைத் தூக்கி நின்றாடும் நடராஜப் பெருமாளுக்கும், குருவுக்கும், இசைக் கலைஞர்களுக்கும், சபையோர்க்கும் நமஸ்காரம். 


மணிவிழா நாயகன் அருணாசலம் ஶ்ரீதரன் - முருகபூபதி


எந்தவொரு சமூகமும் ஒரு சிலரால்தான் இயங்கிவிருகிறது. அவ்வாறு சமூகத்திற்காக
இயங்குபவர்கள் பல தரத்தினர். பதவிகள், அந்தஸ்துகள், தகுதிகள் , மதிப்பீடுகள் எதனையும் எதிர்பார்க்காமல் சமூகத்திற்காக தன்னால் முடிந்ததை அயற்சியின்றி செய்துவருபவர்களை எம்மத்தியில் காண்து அரிது.
அத்தகையவர்கள் யார் எனத்தேடினால் எமது தெரிவுக்குள் வருபவர்கள் ஒரு சிலர்தான். அந்த ஒரு சிலருள் ஒருவராகத்தான் உடன்பிறவாத சகோதர் திரு. அருணாசலம் ஶ்ரீதரனை நீண்டகாலமாகப் பார்க்கின்றேன்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்து மூன்று (1987 -2019) தசாப்தங்களாகிவிட்டன. இக்காலப்பகுதியில் கலை, இலக்கியம், ஊடகம், சமூகம், கல்வி சார்ந்த தன்னார்வத்தொண்டுகளில் ஈடுபட்டுவந்தபோது, தன்னளவிலும் முடிந்ததை செய்வதற்காக எந்தவொரு நிபந்தனையுமின்றி எம்மோடு இணைந்து இயங்கியிருப்பவர்தான் அருணாசலம் ஶ்ரீதரன்.
நாம் வதியும் மெல்பனில் ஒரே பெயரில் பலர் இருக்கிறார்கள். அதனால், அழைப்பதற்கு ஏற்றவகையில் அவர்களது இயற்பெயருக்கு முன்பாக மற்றும் ஒரு துணைப்பெயரையும்  இணைத்துக்கொள்வோம்.
ஶ்ரீதரன் என்ற பெயரிலும் பலர் இருப்பதனால், தாடி வளர்த்திருக்கும் இவரை தாடி ஶ்ரீ என்றே செல்லமாக  அழைப்போம். அதுவே அவரது அடையாளமாகிவிட்டது!
இந்தப்பதிவில் நான் எழுதவிருக்கும் அருணாசலம் ஶ்ரீதரனுக்கு கடந்த ஜூன் 06 ஆம் திகதி 60 வயதாகின்றது. இந்த மணிவிழா நாயகன் பற்றி, எப்போதோ நான் எழுதியிருக்கவேண்டும்.
அதற்கான காலம் கனிந்திருப்பது இக்காலத்தில்தான். இவரை அவுஸ்திரேலியா வந்தபின்னர்தான் அறிவேன்.   மெல்பனில் உருவான தமிழ்ச்சமூகம் சார்ந்த   அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலெல்லாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு துரிதமாகச்செயற்படும் இயல்புகொண்டிருக்கும் ஶ்ரீதரன்,  மக்களை மாத்திரமல்ல, தாவரங்களையும் ஆழ்ந்து நேசிப்பவர்.
ஒருவருடைய இயல்புதான் அடிப்படை அழகு என்பார்கள். அந்த இயல்பு, குடும்பத்திலிருந்தும் கற்ற ஆசிரியர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும்தான் உருவாகும்.  அந்தவகையில் இவரிடமிருந்து தோன்றிய  இயல்புகள் எளிமையானது. அதே சமயம் உணர்ச்சிமயமானது.
1959 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07 ஆம் திகதி, யாழ்ப்பாணம் கொக்குவிலில், அருணாசலம் - பொன்னம்மா தம்பதியரின் ஆறாவது பிள்ளையாகப்பிறந்திருக்கும் ஶ்ரீதரன், கரம்பன் ஆரம்பப் பாடசாலையிலும், அதன்பின்னர், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு  ஆகிய நகரங்களில் சில கல்லூரிகளிலும் தனது கல்வியைத் தொடர்ந்து, வடபுலத்தில் மருதனாமடம் விவசாய பயிற்சிக்கல்லூரியில் இணைந்து, குண்டசாலை விவசாய பயிற்சிக்கல்லூரியில் தனது கல்வியை நிறைவுசெய்துகொண்டவர்.

சிட்னி தமிழ் அறிவகம் கொடி தினம் 15/06/2019






மெல்பேணில் யாழ் சுளிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் கலை நேரம் - 2019



மெல்பேண் மண்ணில் கடந்த 01.06.2019 சனிக்கிழமையன்று கலை நேரம் 2019 பல்சுவைக் கதம்ப கலை நிகழ்ச்சிகள், சுளிபுரம் விக்ரோரியாக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், இசைக் கலை ரசிகர்கள், தமிழ் ஆதரவாளர்கள் என மண்டபம் நிறைந்த நிகழ்ச்சியாக நடந்தேறியது.
யாழ் சுளிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் அவுஸ்திரேலியா மெல்பேண் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்படுகின்ற இந்த கலை நேரம் நிகழ்ச்சிக்கு செல்ல எனக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது. இது எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது. அத்துடன் மிகவும் ரசித்துப் பார்த்தேன். என் மனம் மிக மகிழ்ந்தேன். அதனால் இந்த நிகழ்ச்சி பற்றி எழுதத் தூண்டியது எனலாம்.
வழமை போல் மங்கள விளக்கேற்றல், அகவணக்கம் ஆகியவற்றினைத் தொடர்ந்து  அவுஸ்திரேலியா நாட்டு தேசிய கீதம், கல்லூரிக் கீதங்கள் இசைக்கப்பட்டன. கல்லூரிக் கீதத்தினை செல்வி.சாம்பிகா ஈஸ்வரநாதன் அவர்கள் இசைத்திருந்தார். பழைய மாணவர்கள் சங்கத்தின் நடப்பாண்டுத் தலைவர் திரு.ஸ்ரீ ஸ்ரீகுமார் அவர்கள் வரவேற்புரை வழங்கியிருந்தார். அத்துடன் சிறப்பு விருந்தினராகக் கல்லூரியின் முன்னாள்  ஆசிரியரும், யாழ் பல்கலைக் கழக முன்னாள் விரிவுரையாளருமான திரு.மாரிமுத்து சின்னத்தம்பி அவர்கள் கலந்து சிறப்பித்தமை கலை நேரம் நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்த்திருந்தது.

பயணியின் பார்வையில் - அங்கம் 10 வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் பின்னணியில் ஒரு பெண்ணின் கதை! சேலம் - வேலூர் பாதையில் நேர்ந்த இன்ப அதிர்ச்சி - முருகபூபதி


"காட்பாடியிலிருந்து கோயம்புத்தூருக்குச் செல்லவேண்டும்"  என்று எனது தம்பியின் குடும்ப நண்பரும் வாடகை வாகன சாரதியுமான ரெட்டி அங்கிளிடம் சொன்னேன்.
" பீகாரிலிருந்து ஆலப்புழை ( கேரளா) நோக்கிவரும் எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.20 மணிக்கு காட்பாடி சந்திக்கு வருகிறது. அதில் கோயம்புத்தூர் போகலாம்" என்றார்.
" அதற்கு டிக்கட் முன்பதிவுசெய்யவேண்டுமே" என்றேன்.
" அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். காலையில் ரெடியாக இருங்கள். வந்து அழைத்துச்சென்று ரயிலேற்றிவிடுகிறேன்" என்றார் ரெட்டி அங்கிள்.
நானும் தயாரானேன். சொன்ன வாக்குத்தவறாமல் அதிகாலையே துயில் எழுந்து தனது காரையும் எடுத்துவந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு அழைத்துச்சென்றார். அப்பொழுது நேரம் காலை 4.00 மணி.
" ஒரு நூறு ரூபா கொடுங்கள்" என்று கேட்டுவாங்கிச்சென்றவர்,  சில நிமிடங்களில் திரும்பிவந்து,  ஒரு சிறிய அனுமதிச்சீட்டும் மிகுதியாக இருந்த 25 ரூபாவும் தந்தார். அவருக்குரிய கார் வாடகையை கொடுத்தேன்.
எனது பேக்கையும் அவரே எடுத்துவந்து காட்பாடி ரயில் நிலைய மேடைக்கு அழைத்துச்சென்றார்.
" எழுபத்தியைந்து ரூபாவில் கோயம்புத்தூர் செல்ல முடியுமா?" என்று வியப்புடன் கேட்டேன். அந்த வியப்பையே முறியடிக்கும் வகையில் மற்றும் ஒரு வியப்பை அவிழ்த்தார் ரெட்டி அங்கிள்!
" உங்களை முதல் வகுப்பு ஏ.ஸி. கொம்பார்ட்மென்டில் ஏற்றிவிடுவேன். செக்கர் வந்தால், அவசரத்தில் ஏறிவிட்டதாகச் சொல்லுங்கள். மேலதிகமாக எவ்வளவு செலுத்தவேண்டும் என்று கேட்டு, அதற்குரிய கட்டணத்தை கொடுத்து பயணத்தை தொடருங்கள்" என்றார்.
இந்த நடைமுறை எனக்கு அதிசயமாகப்பட்டது. ரயில் வந்தது. தயக்கத்துடன் ரெட்டி அங்கிளின் முகத்தைப்பார்த்துக்கொண்டே அந்த முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ஏறினேன்.
" ஒன்றும் யோசிக்காதீங்க. நீங்க நல்லா பேசுவீங்கதானே?" என்றார்.
" நல்லா பேசுவேன். அதற்கும் பயணத்திற்கும் என்ன சம்பந்தம்" என்று நான் சொல்வதற்கிடையில் ரயில் புறப்பட்டது. அவர் கையசைத்து விடைபெற்றார். அவர் வாங்கித்தந்த அந்த 75 ரூபா டிக்கட்டை மீண்டும் மீண்டும் புரட்டிப்பார்த்து யோசித்துக்கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த அந்த முதல்வகுப்பு கொம்பார்ட்மென்ட் அறையில் வேறு எவரும் இல்லை. தனித்துவிடப்பட்டிருந்தேன்.

சிலப்பதிகார மகாநாடு

.

பேர்த் பாலமுருகன் ஆலய திருப்பணி வருடாந்த நிதி சேகரிப்பு கலை நிகழ்ச்சி


பேர்த் பாலமுருகன் ஆலய திருப்பணி வருடாந்த நிதி சேகரிப்பு கலை நிகழ்ச்சியில்  தலைவரின்  உரை : 

ஓம் சரவணபவாய நமக

அன்பார்ந்தபாலமுருகன்அடியார்களே,அன்பர்களே,நண்பர்களே, குழந்தைகளே;

ஆண்டுதோறும் நமது ஆலயத்தால் நடாத்தப்படும் ஆலய திருப்பணி வருடாந்த நிதி சேகரிப்பு கலை நிகழ்ச்சி இவ்வாண்டும் தொடர்ந்து நடைபெறுவதை முன்னிட்டு நானும் எனது சக அங்கத்தவர்களும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். மேலும் இப்பணி  தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறவேண்டும் என தாழ்ழையுடன் கோரிஇதற்கு எமது பாலமுருகன் ஆசியையும் வேண்டி நிற்கின்றேன். இத்துடன் இந் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அங்கத்தவர்கள் அனைவர்க்கும் நன்றியை தெறிவிக்கிறேன்.


இப்பொருளாதார உதவியினால் எமது திருக்கோயிலில் நடைபெற உள்ள மகா கும்பாபிசேக புனருத்தான வேலைகளைப்பற்றி ஒரு சிறு விளக்கங்களை இங்கணம் எடுத்துரைக்க உள்ளேன்.

எமது இறைவன் முருகன் இத்தலத்தில் அமர்ந்து சுமார் இருபத்து மூன்று வருடங்களுக்கு மேல்எம் எல்லோருக்கும் வேண்டிய நற்பயன்களை அழித்தவண்ணம் உள்ளார்.மேலும் அவர் எல்லோருக்கும் தொடர்ந்து அருள்மழை பொழிய கும்பாபிசேக வேளையில்நவகுண்ட யாகம் செய்யவுள்ளோம்.இதனால் 9 புரோகிதர்களை இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்து அழைக்கவுள்ளோம்.
ஆத்மலிங்க கட்டிட வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆச்சார்யார்களின் வருகையை எதிர்பார்த்தவண்ணம் சிற்ப வேலைகள் கார்திருக்கின்றன. அவர்கள் வந்தவுடன் சிற்ப வேலைகள் தொடரும் .அத்துடன் மேலும் சகல கற்பகிரகங்களுக்குள்  திருத்த வேலைகள் மேற்கொள்ளுவார்கள். இத்திருத்தல பணிகளுக்கு சுமார் 100ஆயிரம் வெள்ளியும் தொடர்ந்து கும்பாபிசேக குடமுழக்கு நடைபெற மேலும் 150 ஆயிரம் வெள்ளியும் தேவையுள்ளது.

இத்துடன் எமது முருகப்பெருமானுக்கு ஒரு அடியாரின் நன்கொடையால் எண்கோண  வடிவமைந்த 24 அடி உயர சித்திர தேர் இலங்கை யாழ்பாணத்தில் தயார் செய்யப்படுகின்றது.

உலகக் கிண்ணம் - 2019


 முடிவை மாற்றியமைத்தார் மிட்செல் ஸ்டாக்!

150 விக்கெட்டுக்களை வேகமாக சாய்த்த 2 ஆவது வீரர்

டெய்லரின் அதிரடியுடன்  வீழ்ந்தது பங்களாதேஷ்!

முதல் வெற்றியும் மூன்றாவது தோல்வியும்

பழி தீர்த்த பாகிஸ்தான் !

மிட்செல் ஸ்டாக் முதலிடத்தில் !

கைவிடப்பட்டது இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம்!

சகிப்பின் சதம் வீணானது ; 106 ஓட்டத்தால் இங்கிலாந்து வெற்றி!

இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி.

இலங்கைச் செய்திகள்


சட்டவிரோத குடிவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது-அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

பதவி துறந்த அமைச்சர்கள் விபரங்கள்!

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏன் பதவி துறந்தனர் ; தமது அடுத்தகட்ட நகர்வு என்ன - ஹக்கீம் விளக்கம் 

தமிழினியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிவைப்பு

சிறீதரனை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

கடுவாபிட்டியவுக்கு சென்ற அவுஸ்த்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்

நெருக்கடியில் இருந்து நாடு விடுபட 'ஒரே தேசம் ஒரே குரல்" ; 6 அம்ச திட்டம் 

இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களைத்  தளர்த்த பிரிட்டன், கனடா 

இலங்­கைக்கு உதவும் 20 அவுஸ்தி­ரே­லிய புல­னாய்வு அதி­கா­ரிகள்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் அமைச்சுப்பொறுப்புகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்



சட்டவிரோத குடிவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது-அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

04/06/2019 சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரித்துள்ளார்.

உலகச் செய்திகள்


வடகொரியா தனது விசேட தூதுவரை கொலைசெய்யவில்லை- சிஎன்என்

மலையேறச் சென்று காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்பு

Spice (ஸ்பைஸ்) ரக குண்டுகள் வாங்குவதற்கு இஸ்ரேலிடம் இந்தியா ஒப்பந்தம்

அமெரிக்க- ரஸ்ய யுத்தகப்பல்கள் மோதிக்கொள்ளும் ஆபத்து தவிர்க்கப்பட்டது

லண்டன் பேருந்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது தாக்குதல்

பாகிஸ்தான் பிரதமர்,இந்திய பிரதமருக்கு கடிதம்

மசூதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி: ஏமன் நாட்டில் சம்பவம்



வடகொரியா தனது விசேட தூதுவரை கொலைசெய்யவில்லை- சிஎன்என்

04/06/2019 அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதி கிம் சொல் கொலை செய்யப்படவில்லை  சிறைவைக்கப்பட்டுள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகளிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து வடகொரியா அந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கிய தனது விசேட பிரதிநிதியை  சுட்டுக்கொலை செய்துள்ளது என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவருடன் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர், விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
எனினும் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் தோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தைகளில் அவரது பங்களிப்பு குறித்து விசாரணையை எதிர்கொண்டுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா - கொலைகாரன் திரைவிமர்சனம்

சில நடிகர்களின் படங்கள் மீது எப்போதும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியான ஈர்ப்பை கொண்டவர் விஜய் ஆண்டனி. அழுத்தமான கதைகளில் நடிக்கும் அவர் இப்போது கொலைகாரனாக வந்துள்ளார். வாருங்கள் நடந்த சம்பவம் என்ன என பார்க்கலாம்.

கதைக்களம்

விஜய் ஆண்டனி ஒரு தனி மனிதர். கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்யும் அவர் தனியே வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு ஹீரோயின் ஆஷிமா அறிமுகமாகிறார்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆஷிமா தன் அம்மா சீதாவுடன் வசித்து வருகிறார். சந்தோசமாக செல்லும் இவரின் வாழ்க்கை பின்னணியில் பெரும் சோகம். இதற்கிடையில் விஜய் ஆண்டனிக்கும், ஆஷிமாவுக்கும் காதல் மலர்கிறது.
ஒரு நாள் ஆஷிமாவை காண மர்ம நபர் அவரின் வீட்டின் நுழைகிறார். அம்மா, மகளின் உயிருக்கு ஆபத்தான வேளையில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தேறுகிறது. இந்நிலையில் போலிஸ் அதிகாரி அர்ஜூன் கொடூர கொலை சம்பவம் தொடர்பாக ஆஷிமா, விஜய் ஆண்டனியை விசாரிக்கிறார்.
இதில் கொலை செய்யப்பட்டது யார், ஆஷிமா ஆபத்திலிருந்து தப்பித்தாரா, ஆஷிமா, விஜய் ஆண்டனி இருவரும் காதிலில் ஒன்று சேர்ந்தார்களா, அர்ஜூன் தேடி வந்த கொலைகாரன் யார் என்பதே கதை.

படத்தை பற்றி அலசல்

விஜய் ஆண்டனியின் படங்களை மக்கள் மிகவும் எதிர்பார்த்து தியேட்டருக்கு வர காரணம் அவரின் முந்தய படங்களில் ஒன்றான பிச்சைக்காரன் தான். அதன் பின் சில திகில் கதைகளில் நடித்து வந்தாலும் தற்போது கொலைகாரனில் மிரட்டியுள்ளார்.
அவருக்கேற்ற படியான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். எந்த சிரிப்பும் இல்லாமல், சீரியஸாக அவர் போனது நம் கண்களை ஷார்ப் ஆக்குகிறது. அதே வேளையில் ஹீரோயினுடன் குளோசப் ரொமான்ஸையும் இங்கும் தொடர்ந்துள்ளார். ஆக்‌ஷன், செண்டிமெண்ட், அதிரடி என கலவை காட்டியுள்ளார்.
ஹீரோயின் ஆஷிமா நர்வால் நம் சினிமாவுக்கு புதுமுகம். இந்திய ஆஸ்திரேலியா வம்சாவளியை சார்ந்த இவருக்கு விஜய் ஆண்டனிக்கு இணையாக படத்தில் பயணிக்கிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளதால் கொஞ்சம் முன் அனுபவம் இருக்கிறது என அவரின் நடிப்பு சொல்கிறது.
ஹீரோயினுக்கு அம்மாவாக வரும் சீனியர் நடிகை சீதா ஒரு காலத்தில் டாப் ஹீரோயின். தொடர்ந்து படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் பொதுவான எதிர்பார்ப்பு. இப்படத்தில் அவர் தனக்கு வரும் பிரச்சனையை கையாளும் விதம், என்ன நடந்தது என நம் கவனத்தை கூட்டுகிறது.
ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இப்படத்திலும் ஒரு போலிஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார். அவர் வழக்கை அணுகும் விதம், அவருக்கே உண்டான தோரணை, ஸ்டைல் என கேரக்டருடன் பொருந்துகிறது. வழக்கு விசாரணையில் அவருக்கு ஆலோசனை வழங்கும் நாசரின் வசனும் நம்மை யோசிக்க வைக்கிறது.
படத்தில் காமெடிகள் என தனியாக எதுவும் இல்லை. ஆனால் அதை எதிர்பார்க்காத அளவிற்கு படத்தை போக்கிலேயே நம்மை அழைத்து செல்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். என்ன நடந்திருக்கும் நமக்குள் தேடும் அளவிற்கு அனைத்து காட்சிகளையும் கவனமாக கையாண்டுள்ளார். திறமை இருக்கிறது இயக்குனரே.
யவ்வன்னா பாடல் ஹிட் கொடுத்த இசையமைப்பாளர் சைமன் கிங் இப்படத்தில் பின்னணி இசை, பாடல்கள் என விஜய் ஆண்டனியின் டேஸ்டுக்கு ஏற்றார் போல் அமைத்து கொடுத்திருக்கிறார்.

கிளாப்ஸ்

அர்ஜூனின் அடுக்கடுக்கான சந்தேக யூகங்கள் நமக்கு திரில்லர் டிராவல் அனுபவம்.
இயக்குனர் சஸ்பென்ஸை கடைசி வரை தெளிவாக கொண்டு போனது.
ஆக்‌ஷன், பின்னணி இசை, பாடல்கள், என அனைத்தும் விஜய் ஆண்டனிக்கான ஸ்டைல்.

பல்பஸ்

ரொமான்ஸ் பாடல் ஒன்று இடையில் தேவை தானா என்ற ஃபீல்.
மொத்தத்தில் கொலைகாரன் எதிர்பாராத திகில். ஓகே. ஆனால் கவனமாக பார்த்தால் தான் கச்சிதமாக புரியும்.   நன்றி  CineUlagam