முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடி: மீண்டும் சர்ச்சையில் கூகுள் நிறுவனம்

.

உலகின் சிறந்த முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளதால்இ கூகுள் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்கஅழனi-5் நகரை தலைமையகமாக கொண்டு  செயல்பட்டு வருவது கூகுள் இணையதளம். இது தகவல் மற்றும் புகைப்படங்கள் தேடலுக்கு பிரசித்தி பெற்றது. இதன் ஆங்கில தேடல் பகுதியில் உலகின் தலைசிறந்த முட்டாள் பிரதமர்கள் என்று தேடினால்இ இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படம் பலமுறை இடம் பெற்றுள்ளது. பிற நாட்டு பிரதமர்களை விட நரேந்திர மோடியின் படமே அதிக முறை இடம் பெற்றுள்ளதால் இந்தியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் கூகுள் நிறுவனத்திற்கு எதிர்ப்பு அதிகமாகியுள்ளது.

என் உயிர் பிச்சுத் தின்பவளே.. (கவிதை) வித்யாசாகர்

.

சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான்
நெஞ்சில் பாதம் பதிப்பாய்..
மீசைப் பிடித்திழுத்து – எனக்கு
வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்..
எச்சில்’ வேண்டாமென்பேன்
வேண்டுமென்று அழுது
வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய்,
வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்..
கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய்
முத்தத்தில் முழு கோபத்தையும்
தின்றுவிடுவாய்.., முத்தத்தைக்கூட
எனக்கொரு மொழியாக்கித் தந்தவள் நீ தான்..
புதுத்துணி வாங்கிவந்தால் படுக்குமுன் உடுத்திப்பார்ப்பாய்
கொடுக்காமல் எடுத்துவைத்தால் பீஜ் பீஜ்பா என்பாய்
ஆங்கிலம்கூட உன் பேச்சில் பிசுபிசுக்கும், திகட்டாதத்
தேனிற்குள் உன்பேச்சு எப்போதுமே யினிக்கும்..
கோபம் வந்தால் அடித்துவிடுவேன்
நீயா அடித்தாய் என்னை என்றுப் பார்ப்பாயா
அல்லது நீயே அடிதுவிட்டாயே என்றுப் பார்ப்பாயா
தெரியாது,


அயற்சியை அந்நியப்படுத்திய ஆளுமை ஜெயமோகன் - முருகபூபதி

.                                                                                                             
(அண்மையில்  கனடா   இலக்கியத்தோட்டம்  வழங்கிய இயல்விருதினைப் பெற்றுக்கொண்ட  படைப்பிலக்கியவாதி ஜெயமோகனுக்கு    கனடா   காலம்  இதழ்  சிறப்பு  மலர் வெளியிட்டுள்ளது.   அதில்  இடம்பெற்ற  கட்டுரை.)


தமிழ்   இலக்கியப்பரப்பில்  சமகாலத்தில்  என்னை  பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும்  படைப்பாளி  திரு. ஜெயமோகன் அவர்கள்தான்     எனச் சொல்வதன்    மூலம்   ஜெயமோகன்  வழிபாட்டில் நான்   என்னை   ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றேன்  எனச்சொல்லமுடியாது.
வாசிப்பு   அனுபவம்  காலத்துக்குக்காலம்  மாறிக்கொண்டிருப்பது.  ஒரு காலத்தில்   ஒரே  இரவில்  சிவகாமியின்  சபதம்  படித்தவர்தான் ஜெயமோகன்.   அவருக்கு  ஆரம்பத்தில்    ஆதர்சமாக  இருந்த சுந்தரராமசாமி   தமது  ஜே.ஜே. சில குறிப்புகளில் " உங்கள்  சிவகாமி சபதம்   முடித்துவிட்டாளா...? "  என்று  ஒரு  பாத்திரத்தின் வாயிலாகக்கேட்டு   அங்கதம்  பேசுவார்.

ஜெயமோகனுக்கும்   சுந்தரராமசாமிக்கும்  வாசிப்பு  அனுபவம் மாறியதுபோன்று   என்னைப்போன்ற  வாசகர்களுக்கும்  மாறலாம்.
1962  ஆம்  ஆண்டு  பிறந்த  ஜெயமோகனுக்கு - இந்தப்பத்தியை  நான் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது  53  வயது   பிறந்துவிட்டது.  அவர் எழுதத்தொடங்கியபொழுது   என்னைப்போன்ற  பலர்  எழுதி விருதுகளும்   வாங்கிவிட்டதாக  (நான்  உட்பட) பெருமையடித்துக்கொண்டவர்களே.

.

கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் இலக்கியப் பரப்பில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு நிகழ்வு ஷோபா சக்தி. ஈழத் தமிழர் போராட்டம் பெற்றெடுத்த குழந்தை என்று ஷோபா சக்தியை நிச்சயமாகக் கூறலாம். இவர் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்த, அகதிகள் படும் துயரத்தைப் பேசும் பிரெஞ்சுத் திரைப்படமான ‘தீபன்’, கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதும் பெற்றுள்ளது… சமீபத்தில் சென்னை வந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
உங்களது புதிய நாவலான ‘பாக்ஸ் கதைப் புத்தகம்’ குறித்து சொல்லுங்கள்.
முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்குப் பிறகு வன்னி பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் யுத்தத்தின் வடுக்கள் குறித்த கதை இது. யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும் செய்திகளாகக் கட்டுரைகளாகப் பதிவாகியிருக்கின்றன. அதை இலக்கியமாகப் பதிவுசெய்திருக்கிறேன்.
எண்ணற்ற உயிரபாயச் சூழல்களைத் தாண்டி வந்தவர் நீங்கள். இப்போது அந்த அனுபவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
16 வயதில் எனது குடும்பத்திலிருந்து பிரிந்து போனேன். அதற்குப் பிறகு குடும்பத்துடன் சேரவேயில்லை. எனக்கென்று குடும்பமும் இதுவரை இல்லை.
நான் மிகச் சிறிய தீவுக் கிராமமான அல்லைப்பிட்டி என்னும் ஊரில் பிறந்தவன். 16 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். இயக்க வேலைகளுக்காக இலங்கை முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினேன். 1987 வரை தாயகத்தை விட்டு வெளியே போக வேண்டும் என்று நான் நினைத்ததேயில்லை. முதலில் இந்திய அமைதிப் படையின் கைகளிலிருந்து தப்பி கொழும்புக்கு ஓடி வந்தேன். கொழும்பிலிருந்து சாய்பான் என்னும் தீவைத் தேடிப் போனோம். சாய்பானில் வேலைவாங்கித் தருகிறேன் என்று கூப்பிட்டுப் போனார்கள். எங்களைக் கூட்டிப்போன முகவர் ஹாங்காங்கில் எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டார். மீண்டும் கொழும்பு வந்தேன். இந்திய அமைதிப்படை வெளியேறியது. எங்களைத் தூக்கிச் சிறையில் போட்டார்கள். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் என்னைப் பிடித்தார்கள். எங்கள் மீது பெரிதாக எந்தக் குற்றங்களும் இல்லை என்பதை வைத்தும், சில சிபாரிசுகளை வைத்து கடிதம் கொடுத்து நான்கு மாதங்களில் விடுதலையானோம். சிறையில் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் வந்துகொண்டிருந்ததால் இடப் பற்றாக்குறை வேறு.

Mr & Mrs சுமைதாங்கி - வைகை

Mrs - டாலிங் ஏன் நாம கோயிலுக்கு போறனாங்கள்

Mr - அது டாலிங் அங்கதான் ஆணவத்த பாக்கலாம் , I  mean அங்க எல்லாரும்      
          அத விட்டுப்போடுவினம். 

மெல்பேர்ண் தமிழ்ச் சங்கம் நூல் வெளியீட்டு விழா 2.08.15


ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுகிழமை













யார் அந்த தேவதை

.


Yaar antha thevathai - Australian Tamil Movie Director: N.S.Thanapalasuntheram Production: Chandra productions Producer: Chandra Thanapalasuntheram 

வங்கிக் கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி: ஏழை பெண்ணுக்கு ஷாக் கொடுத்த வங்கிக் கிளை

.


உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஏழைப் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி இருப்பு இருந்தது தெரியவந்தது. இதை அறிந்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

கான்பூரில் வீட்டு வேலை செய்பவர் ஊர்மிளா யாதவ். இவர் விகாஸ் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் யுபிஎஸ்ஐடிசி கிளையில் மத்திய அரசின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் சில தினங்களுக்கு முன்பு சேமிப்புக் கணக்கு தொடங்கி உள்ளார். இதற்காக அவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்தி உள்ளார். 

இதையடுத்து அவருக்கு 2 எஸ்எம்எஸ் வந்துள்ளது. முதல் எஸ்எம்எஸ்ஸில் ரூ.9,99,999 வரவு வைத்ததாகவும், 2-வதில் ரூ.9.97 லட்சம் கழித்துக் கொண்டு மீதம் ரூ.2,000 இருப்பு இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வங்கிக் கணக்கு தொடங்க உதவிய லல்தா பிரசாத் திவாரியை அழைத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றுள்ளார். அங்கு அவரது கணக்கை சரிபார்த்தபோது, அதில் ரூ.95,711,69,86,47,130.14 (ரூ.95 ஆயிரம் கோடி) இருந்துள்ளது. இந்தத் தொகையை கணக்கிட முடியாமல் வங்கி அதிகாரியே அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தற்கொலை-கோழைத்தனமானது -தி. சுவாமிநாதன் - நாமக்கல்

.
இந்தியாவில் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது என இந்திய சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளிவிவரம் நமக்குத் தெரிவிக்கிறது. அதாவது நம் நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 240 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். உலக அளவில் தற்கொலை செய்து கொள்வோர்களின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 10-சதவீதம் (1ஃ10) ஆகும்.
பொதுவாகää தற்கொலை செய்துகொள்பவரின் சதவீதம் நம் நாட்டில் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலை தருகிறது. தற்கொலை முடிவை தேடுவோர்களில் விஷம் குடிப்போர்கள் 36.6 சதவீதம். தூக்கு கயிற்றில் தொங்குபவர்கள் 32 சதவீதம். தீக்குளிப்பவர்கள் 7.9 சதவீதம் ஆவர். 2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1>87>000  ஆகும்.


இலங்கைச் செய்திகள்


கிளிநொச்சியில் காணாமல்போன 3வயது சிறுமியின் சடலம் மீட்பு

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரகம்

அரசியல் விவகாரங்களில் தலையிடமாட்டோம் : ஐரோப்பிய கண்காணிப்புக்குழு

வடக்கில் தேர்தலை நடத்தாதிருந்தால் இன்றும் மஹிந்த தான் ஜனாதிபதி

கைவிரலை உடைக்க பார்த்தார், தாக்கவில்லை பிடித்து தள்ளினேன் : மஹிந்த

கொல்­லப்­பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இன் இலங்கை பிரஜை முன்னாள் அதிபர்


கிளிநொச்சியில் காணாமல்போன 3வயது சிறுமியின் சடலம் மீட்பு

20/07/2015 கிளி­நொச்சி உருத்­தி­ர­புரம் எள்­ளு­காடு பகு­தியில் கடந்த மாதம் 21ஆம் திகதி காணா­மல்­போன உதயகுமார் யர்சிகா என்ற 3 வயது சிறு­மி­யி­னு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்­கப்­பட்­டுள்­ளது.

நெகிழ்ந்து விரியுங்கள் மனங்களே - எச். ஏ. அ ஸீஸ்

.
தயவுடன்  வேண்டுகிறேன்
ஒருவரையும்   எரித்து விட வேண்டாம்
எத்தகைய  அரசியல்வாதியாய்
இருந்த போதும்

அந்த  நச்சுப்  புகையை  நாம்  ஏன்
சுவாசிக்க  வேண்டும்
ஒரு  அச்சுப்பிழையில்  தலையெழுத்து
அடங்குவதில்லை  அன்றோ

அவர்களாக  சாவர்
எதை  அள்ளிக்  கட்டிக்கொண்டு  போவர்

பாவம்  செய்து  கொண்டு
பிறரை,  பார்த்து  ரசிக்க  செய்யும்
சாபம்  ஒன்றுள்ளதோ

நொந்த  மனங்களே  கொஞ்சம்
நெகிழ்ந்து விரியுங்கள்
அந்த  அருளாளன்  அறிவான்
அவரவர்க்கு  எது  தகுமென

எந்த  அரசியல்வாதியையும்
எரித்து  விட வேண்டாம் 
தயவுடன்   வேண்டுகிறேன்

எங்கோ  ஒரு  மூலையில்
ஒன்றிரண்டு
விசித்திரங்கள்  இருக்கக் கூடும்
அரிதாக
மிக  மிக  அரிதாக

நொந்த  மனங்களே  கொஞ்சம்
நெகிழ்ந்து விரியுங்கள்


-எச். ஏ. அ ஸீஸ்

அவதார புருஷன்- முத்தமிழில் ராம அவதாரம்‏

.

ராமாயணக் கதை மேடை யேற்றப்படுவது புதிதல்ல. ஆனால் இயல், இசை, நாடகம் என முத்தமிழின் துணை யுடன் காட்சிக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் விதத்தில் ராமாயணக் கதையை மேடை யேற்றியது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பாக நடத்தப்பட்ட ‘அவதார புருஷன்’ நாட்டிய நிகழ்ச்சி.
சென்னை நாரதகான சபாவில் கடந்த வாரம் அரங்கேறிய இந்த நாட்டிய நாடகம் காட்சிகளாலும் கருத்தாலும் ரசிகர்களை 2 மணி நேரத்துக்கும் மேலாகக் கட்டிப் போட்டது. ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் (பாதிக்கு மேல் குழந்தைகள்) துணையுடனும் தொழில்நுட் பத்தின் உதவியுடனும் ராம காதையை ரத்தினச் சுருக்கமாக மேடையில் நிகழ்த்திக் காட்டி னார்கள்.
ராமாயணக் கதையின் சங்கிலி அறுபடாமல், நேர்த்தியாகச் சுருக் கித் தந்தார்கள். தேவைப்படும் இடத்தில் ஒளிப்படக் காட்சியின் மூலமும், கதை சொல்லியும் நாடகத்தை நகர்த்திச் சென்றார்கள். பொதுவாக இதுபோன்ற நாட்டிய நாடகங்களில் அபிநயங்களின் வழியாகவே காட்சிகள் விளக்கப் படும். தொடர்ச்சியாக நடன நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர் களுக்கே இது புரியும். ‘அவதார புருஷன்’ நிகழ்ச்சியில் இந்த இடைவெளியை நிரப்பியது அனிமேஷன் ஒளிப்படக் காட்சி. அபிநயங்களின் உட் பொருள் களை சாதாரண ரசிகர்களுக்கும் அனிமேஷன் காட்சிகள் புரிய வைத்தன.

உலகச் செய்திகள்


சவூ­தியில் 431 பேர் கைது

துருக்கிய எல்லையில் குண்டுத் தாக்குதல் 28 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

 ஈரான் தொடர்­பான அணு­சக்தி உடன்­ப­டிக்­கைக்கு ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபை அங்­கீ­காரம்

சயனைட் ,தொலை தொடர்பு சாதனங்களுடன் இலங்கையர் உட்பட மூவர் இந்தியாவில் கைது

பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தம்

சவூ­தியில் 431 பேர் கைது

20/07/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவூதி அதி­கா­ரிகள் சனிக்­கி­ழமை அறி­வித்­துள்­ளனர்.


கர்மவீரர் காமராஜர் - தி.ஆறுமுகம்

.



கையால் துவைத்து மடித்த, நீளக் கைகொண்ட நாலைந்து 
கதர் சட்டை, வேட்டியோடு ரொக்கமாக நூறு ருபாய்  
தவிர தனது உடமையென்று சொல்ல வேறெதுவுமின்றி, 
1975 அக்டோபர் திங்கள் 2ம் நாளில்  பூதவுடலை நீத்தும்,  
பூமியில் வாழ் மனிதரின் உள்ளத்தில் 
உறைந்திருக்கும்  தன்னலமற்ற மாமனிதர், 
ஏழைப்பங்காளர், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 
1903 ஜூலை 15ல் தற்போதைய விருதுநகர் அப்போதைய விருதுபட்டியில் குமாரசாமி - சிவகாமி அம்மாள் மகவாக மகவாக இவ்வுலகில் அவதரித்தார்.

ஆறு வயதில் தந்தையை இழந்தார். தாயார் மற்றும் தமக்கையுடன் விருதுபட்டியிலே வாழ்ந்தார். தாத்தா  நடத்தும் ஊர்ப் பஞ்சாயத்துக்களில் சென்றமர்ந்து நடக்கும் நிகழ்வுகளை அமைதியாய்க் கவனிப்பார். அதனைக் கண்ணுற்ற ஊர் மக்கள் உவகையோடு பாராட்டினர். திண்ணைப்ப் பள்ளியில் தமிழெழுத்துக்களைக் கற்றார். பின்னர் உணவுடன் 
கற்றுத்தரும் சத்திரிய உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். பள்ளிப்படிப்பில் நாட்டமில்லை. நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பார். அரசியல் தலைவர்களின் மேடைப் 

கீதவாணி விருதுகள் 19/09/2015 at UNSW Clancy Auditorium



















11 கோடி ஆண்டுகளுக்கு முன் பாம்புக்கு எத்தனை கால்கள் இருந்தது தெரியுமா?

.

சுமார் 11.3 கோடி ஆண்டுகளுக்கு முன்னதான பாம்பின் படிமங்கள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் அப்போதைய பாம்புகளுக்கு 4 கால்கள் இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமாக பல படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த படிமங்கள் அனைத்தும் பாம்பின் மூதாதையர் உயிரினங்களுடையது என்று புதிய கண்டுபிடிப்பின் படி தெரிகிறது. அவை அனைத்திலும் மிகச் சிறிய 4 கால்கள் உள்ளன.
படிமங்களின் தன்மையை ஆராய்ந்து வரும் பிரேசிலின் பாத் பல்கலைக்கழக மருத்துவர் நிக் லாங்க்ரிச், பல்லி போன்ற ஊர்வனவைகளின் பரிணாம வளர்ச்சியே பாம்பாக மாறியுள்ளது உறுதியாவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா


மாரி


வேலையில்லா பட்டதாரி, அனேகன் படத்தின் தொடர் வெற்றியை தக்க வைத்து ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்று தன் மீசை முறுக்கி மாரியாக தனக்கே உரித்தான லோக்கல் சென்னையில் களம் இறங்கியிருக்கிறார் தனுஷ்.
இவர் இப்படி எல்லாம் படம் இயக்குவாரா என இத்தனை நாள் காதலை மட்டும் தன் படத்தில் காட்டிவந்த பாலாஜி மோகன் விஜய், அஜித் கால்ஷீட்டை பிடிப்பதற்காக பிள்ளையார் சுழி போட்டுள்ள படம் தான் மாரி.
கதைக்களம்
ஆடுகளம் படத்தை செம்ம கமர்ஷியலாக, கெத்தா, Positive கிளைமேக்ஸோடு எடுத்தால் எப்படியிருக்கும் அப்படி ஒரு படம் தான் இந்த மாரி. சென்னையில் லோக்கல் பையனாக ஒரு ஏரியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தனுஷ், புறா ரேஸ் விடுபவர்.
இவரை எப்படியாவது புறா ரேஸில் வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர் கூட்டணியில் போட்டி போடுபவர் ‘மைம்’ கோபி. தனுஷை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என அவருடைய பழைய கேஸை (கொலை வழக்கு) ஒரு பக்கம் தீவிரமாக தேடுகிறார் போலிஸ் அதிகாரி விஜய் ஜேசுதாஸ் (பாடகர் விஜய் ஜேசுதாஸ் தாங்க).
அந்த கொலையை தனுஷ் செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், காஜல் அகர்வாலின் காதலால் அந்த உண்மையை வெளியே கொண்டு வந்து தனுஷை கைது செய்கிறார் விஜய் ஜேசுதாஸ்.
அதன் பின்பு தனுஷின் மார்க்கெட் இறங்க, விஜய் ஜேசுதாஸின் உண்மை முகம் உடைய, தன் இழந்ததை எல்லாம் தனுஷ் எப்படி மீண்டும் பிடித்தார், விஜய் ஜேசுதாஸ் சூழ்ச்சி வலையை எப்படி உடைத்தார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
தனுஷ் ஒரு தண்ணீர் போல, எந்த பாத்திரமாக இருந்தாலும் அப்படியே அந்த உருவமாக மாறுகிறார். ஒரு தாதாவாக இருக்க உடல் வாகு தேவையில்லை என்று தனுஷ் புதுப்பேட்டையிலேயே நிரூபித்துள்ளார்.
அதேபோல் இதில் காலரை தூக்கி கலாட்டா செய்துள்ளார். படம் தேங்கி நிற்கும் இடத்தில் எல்லாம் பூஸ்ட்டாக இருப்பது ரோபோ ஷங்கரின் காமெடி தான், தனக்கே உரித்தான Voice Modulation என அதகளம் செய்கிறார். இவர் பேசும் இடத்தில் தான் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கின்றது. காஜல் அகர்வால் அழகாக வந்து அதிரடியாக Twist வைத்து, மீண்டும் தனுஷ் மனதில் இடம்பிடிக்க அவர் முயற்சிப்பது செம.
விஜய் ஜேசுதாஸ் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு நன்றாக நடித்துள்ளார். படத்தின் பாதி பலமே அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை தான், ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். ஆனால், பல இடங்களில் 300 படத்தின் இசையை போட்டு விட்டார். கொஞ்சம் கவனிங்க சார், காதல் காட்சிகளில் 3 பட Music கூட வருகின்றது.
க்ளாப்ஸ்
தனுஷின் யதார்த்த நடிப்பு, அனிருத்தின் பின்னணி இசை, ரோபோ ஷங்கர் கவுண்டர் வசனம், படத்தின் இரண்டாம் பாதி. ஓம் பிரகாஷின் கலர்புல் கேமரா.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே செல்கின்றது, பாலாஜி மோகன் கொஞ்சம் இன்னும் வித்தியசமான மாஸ் படத்தை தருவார் என நினைத்து செல்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். பெண்களை பற்றி பேசும் சில தவறான வசனங்களை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் மாஸ் ரசிகர்களை மட்டும் குறி வைத்து இந்த மாரி தான் நினைத்ததை ‘செஞ்சுவிட்டார்’.
ரேட்டிங்- 2.75/5  நன்றி cineulagam