மரண அறிவித்தல்

.
                         அமரர் திரு. இரத்தினநாயகம் சங்கரதாசன்
தூல முகிழ்ப்பு: 04/10/1952   * தூல அவிழ்ப்பு: 06/03/2016

   யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Toongabbie யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரதாசன் இரத்தினநாயகம் அவர்கள் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் மகேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினநாயகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற காங்கேயன்- செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரகாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும், மஞ்சுதன், மைத்திரேஜி, மதுர்சன் அவர்களின் பாசம்மிகு தந்தையும், Dr. ரகுராம் அவர்களின் அன்பு மாமனாரும், சரச்சந்திரதாசன்( USA), ராமச்சந்திரதாசன் (Australia), தேவராணி (UK), பாலரஜனி( UK) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னலிங்கம் (UK), நிரஞ்சன் (UK), வசந்தராணி(USA), அருந்ததி (Australia) , காலம் சென்ற  ஆனந்தகுமாரசாமி , சதானந்தன் , குகானந்தம் , சிவானந்தம் , அருளானந்தம் , இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். 
Viewing: Wednesday 9th Mar, 5:00 - 8:00pm: Liberty Funerals, Granville.
Funeral: Thursday 10th Mar, 9:00 - 11:00am: Magnolia Chapel, Macquarie Park.
தொடர்புகளுக்கு: 
மஞ்சுதன் - 0435 079 152
மைத்திரேஜி - 0430 173 918

மரண அறிவித்தல்

.
                     திருமதி மனோன்மணி தங்கையா
மறைவு 03 03 2016
மனோன்மணி தங்கையா 03 03 2016  அன்று சிட்னியில் காலமானார்
இவர் யாழ் இராமநாதன் கல்லூரி, மற்றும் அசோக வித்தியாலயம் கண்டி ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.
காலம்சென்ற தங்கையா (கண்டி நகரசபை ) அவர்களின் அன்பு மனைவியும்,  ரஞ்சித் (Townsville Queensland ) kaamini ( Newjersey USA ),  சுகாஷினி (Eastwood NSW ), தர்ஷினி (California, USA), ஆகியோரின் அன்புத் தாயாரும், துஸ்யந்தி (Townsville Queensland ) , Dr ஜெகநாதன்  (New Jersey, USA), ரவீந்திரன் (Eastwood, NSW) ,
Dr நாகேஸ்வரன்  (California, USA) ஆகியோரின் மாமியாரும் Dr அர்ஜுன்  (USA), Dr அனிதா  (USA), Dr கஜன்  (USA), Dr நிருஷன்  (Sydney), Dr மேனகா  (USA), அஷ்வினி  (Sydney), natasha Natasha (Sydney) , சுருதி  (Townsville) ஆகியோரின் அன்புப் பாட்டியும், மீரா  (USA) வின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவர் Dr நடராஜா ராசையா (Australia), முத்துலட்சுமி சிவலிங்கம் (Canada), புவனேஸ்வரி  சிவநாதன் (Sydney) , Dr தனலட்சுமி சண்முகரத்தினம் (London) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள்
08.03.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியிலிருந்து 1.00 மணிவரை
 Macquarie Park Crematorium
 Cnr Delhi Rd & Plassey Rd, Macquarie Park NSW இல் இடம்பெறும் 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

தொடர்புகளுக்கு ரவீந்திரன்  0431117679


சிட்னி முருகன் ஆலயத்தில் சிவராத்திரி 07/03/2016





இன்று நடந்த ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டியும் திருக்குறள் போட்டியும்

.
சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தின் திருக்குறள் போட்டியும்  ஸ்ரீ துர்க்கா தேவி  தேவஸ்தான சமய அறிவுத் திறன் போட்டியும்

6.03.2016 அன்று இடம்பெற்றது . நிகழ்வில் கலந்துகொண்ட  நடுவர்களில் சிலரையும்  பிள்ளைகள்  பெற்றோர்களையும்  காணலாம். 



மெல்பனில் அகில உலக பெண்கள் தினவிழா

.
மெல்பனில் பெண்ணிய  கருத்துக்கள்  சங்கமித்த  அகில  உலக பெண்கள்  தினவிழா 




அவுஸ்திரேலியத்  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் அகில உலகப்பெண்கள்  தினவிழா  கடந்த  6   ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை  மெல்பனில்  பிரஸ்டன்  நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர்  பேராசிரியர் .சி. கந்தராஜாவின்  தலைமையில் நடந்தது.
 சங்கத்தின்  துணைச்செயலளார்   திருமதி  சாந்தினி புவனேந்திரராஜா ஒருங்கிணைத்த  நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன.

சிட்னி முருகன் கோவிலில் மகாசிவராத்திரி 07 03 2016





திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
ஈழத்தமிழர்  அரசியல்  வாழ்வில்  மறக்கமுடியாத பொன்னாலையின்   மறுபக்கத்தை   ஆவணப்படுத்திய வரதர்
இலக்கியவாதிகளின்   இதயத்தில்  இடம்பிடித்த சாகித்தியரத்தினா.
    
                                       
இலங்கையில்  மூவினத்தவர்களினதும்  அரசியல்  வாழ்வை  சுமார் நாற்பது   ஆண்டுகளுக்கு   முன்னர்  ஒரு  துப்பாக்கியின்  வேட்டுக்கள்  புரட்டிப்போட்ட  சம்பவம்  நடந்த  வடஇலங்கையின் யாழ்.குடாநாட்டுக்கு  வடமேற்கே  அமைந்த  பொன்னாலை வரதராஜப்பெருமாள்   கோயில்  பற்றி  அறிந்தவர்கள்  அநேகர்.

1975 ஆம்  ஆண்டு  ஜூலை  மாதம்  27  ஆம்  திகதி  வேலுப்பிள்ளை பிரபாகரனின்  கரத்திலிருந்த  துப்பாக்கியிலிருந்து  சீறிப்பாய்ந்த தோட்டா   அன்றைய  யாழ்ப்பாணம்  நகரமேயரை  உலகிலிருந்து விடைபெறச்செய்தது.

அன்று தொடங்கிய  பிரபாகரன்  முன்னிலை  வகித்த ஆயுதப்போராட்டம்  முடிவுக்கு  வருவதற்கு  ஏறக்குறைய  நான்கு தசாப்தங்கள்    சென்றன.   அல்பிரட்  துரையப்பா  முதல்  காமினி வரையில்   தொடர்  எழுதிய  அற்புதனும்  துப்பாக்கி  வேட்டிலேயே விடைபெற்றார்.

இலங்கை  அரசியல் வரலாற்றினை  உன்னிப்பாக  கவனித்தால்,  சில தமிழ்த்தலைவர்கள்  கோயில்களிலும்  தேவாலயத்திலும் வழிபடச்சென்றவிடத்து   தமது  உயிரைக்  காணிக்கையாக்கியிருப்பது தெரியவருகிறது.

திருமுறைத் தேன் அமிர்த மழை 11.03.2016

.

ஏனையவர்களிருந்து கார்த்திகா வேறுபாடும் விதம் - 11 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
எல்லாளன் - காமினி


எனது நாட்டியப் பணியின் மூலம் சமுதாய விழிப்பை ஏற்படுத்த வல்ல நல்ல கருத்துக்களை கலை வடிவத்தில் வழங்க வேண்டும் என விரும்பினேன்.

1976 இரண்டே இனம் வாழும் இலங்கையில் ஒரு நெருக்கடி நிலை உருவாக்கி கொண்டிருந்ததை நாம் எல்லாரும் உணர்ந்த காலமது. இந்நிலைமையை வளரவிடக் கூடாது என சிந்திதவர்களில் நாமும் அடங்குவோம் (நானும் எனது கணவரும்) பேராசிரியர் இந்திரபாலாவுடன் கலந்துரையாடியத்தின் விளைவாக எல்லாளன் - காமினி நாட்டிய நாடகம் உருவானது. நாடக முக்கிய நிஜ பாத்திரம்கள் தவிர கற்பனா பாத்திரங்களும் சம்பவங்களும் என் பொறுப்பே.

நாட்டிய நாடகம் பற்றி "ரூபன்" சிங்கள நாடக அரங்கக் கலைக்கான சஞ்சிகையில் எழுதப்பட்டது. தமிழாக்கம் தினகரன் வார மஞ்சரி.

May 16, 1976 வெளிவந்தது.

Sri Venkateswara Temple Shiva Mahotsavam 2016 27/02 - 08/03 2016



உலகச் செய்திகள்


போதை­வஸ்து கடத்தல் தொடர்பில் ஈரா­னிய கிரா­மத்­தி­லுள்ள அனைத்து ஆண்­க­ளுக்கும் மர­ண­தண்­டனை நிறை­வேற்றம்

இலங்கை தூத­ரகம் இன்று முற்­றுகை

கற்பை காப்பாற்றி கொள்ள தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட சிறுமி : அதிர்ச்சி செய்தி

அகதிகள் மீது பொலிஸார் தாக்குதல்

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது 

MH370 விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு : அமெரிக்கா அறிவிப்பு



"செங்கை ஆழியான்" படைத்த "வாடைக் காற்று" நாவல் திரைப்படமான போது - கானா பிரபா

.


செங்கை ஆழியான் எழுதிய "வாடைக் காற்று"
நாவல் குறித்து நான் பத்து வருடங்களுக்கு முன் எழுதியது. இந்தப் படைப்பு திரை வடிவம் கண்ட போது முக்கிய நாயகனாக நடித்த கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணர் நம்மை விட்டுப் பிரிந்த மாதத்தில் (பெப் 24, 2014) என் ஆதர்ச எழுத்தாளர் செங்கை ஆழியானும் மறைந்தது மனக் கிலேசம் தரும் ஒற்றுமை.

செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் "இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே". இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.

UNSW ANJALi TAMiL SOCiETY PRESENTS COCONUT RAJINI 11, 12/03/2016




நூல் அறிமுகம்: "ஒரு கூர்வாளின் நிழலில்" - தெய்வீகன்

.
(மெல்பனில்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம் நடத்திய  அகில  உலகபெண்கள்  தினவிழாவில் அறிமுகமான   தமிழினியின்  புதிய  நூல். )


விடுதலைப்புலிகள்  அமைப்பின்  மகளிர்  அரசியல்துறை பொறுப்பாளரான  தமிழினி அவர்கள்  எழுதிய  தன்வரலாற்று  நூல் ஒரு கூர்வாளின்  நிழலில். சாவதற்கு  முன்புவரை  தான் எதிர்கொண்ட  போராட்ட  வரலாற்றையும்  தான்  நடத்திய போராட்டங்களையும்  சத்தியத்தின் வழிநின்று  சாட்சியமாக்கியிருக்கும்  பதிவு.

வாழ்வுக்கும்  சாவுக்கும்  இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த  உயிரின்  கடைசித்துளிவரைக்கும்  தான்  மிகவும்  நேசித்த மண்ணுக்கும்  மக்களுக்கும்  உண்மைகளை  சொல்லவேண்டும் என்பதற்காக  பல  விடயங்களை  எழுத்தில்  பதிந்துவிட்டு சென்றிருக்கும்   வரலாற்று  பொக்கிசம்.
 ஒரு இனத்தின்  அகமும்  புறமுமாக  முப்பதாண்டு  காலம்  பெரு நம்பிக்கையுடன்  மேற்கொண்ட  ஆயுதப்போராட்டமானது  எவ்வாறு கொடூரமாக  முடிவுக்கு  கொண்டுவரப்பட்டது  என்பதை உணர்வுபூர்வமாக  பேசியிருக்கும்  வரலாற்று  நூல்  என்று இதைக்கூறலாம்.


அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய எஸ். பொ. நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

.
அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய
எஸ். பொ. நினைவுச் சிறுகதைப்
போட்டி முடிவுகள்



முதற்பரிசு பெறும் கதை
இவர்களும் எந்தன்      
எஸ்.ஐ.நாகூர் கனி,
24/15, பேரா வீதி,
வாழைத்தோட்டம், கொழும்பு 12. இலங்கை


இரண்டாவது பரிசு பெறும் கதை
புத்தியுள்ள மனிதரெல்லாம்
மூதூர் மொஹமட் ராபி
356/7, கண்டி வீதி, பாலையூற்று,
திருகோணமலை, இலங்கை          
                   

மூன்றாவது பரிசு பெறும் கதை
இந்தநிலை என்றுமாறுமோ,
நடராசா இராமநாதன்,
கோகுலம்,
உடையார்கட்டு வடக்கு,
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,
இலங்கை

HEALTH SCIENCES & UMAT INFO DAY 2016 13 .03 16

.

இலங்கைச் செய்திகள்


யோசித்தவின் பதவி, தொழில் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார் மஹிந்த

இராணுவத்திடமே எமது பிள்ளைகள் : மீட்டுத்தருமாறு ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் கதறல் 

காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் :  தாய் ஒருவர்  சாட்­சி­யம்

6 தேரர்கள் உட்பட 11 பேருக்கு பிணை

லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்

விடுவிக்கப்படாத காணிகள் விரைவில்  உரிமையாளர்களிடம் வழங்கப்படவேண்டும் : அமெரிக்கா  வலியுறுத்தல்

வித்தியா படுகொலை : சந்தேகநபர்கள் விடுவிப்பு

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்க வலி­யு­றுத்தி யாழில் கவ­ன­யீர்ப்பு 

எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாணை

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பேராதனைப் பல்கலைக்கழக கலை பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


நிழல்களை எரித்த நிஜங்கள்:- -டிஸ்கி :- 1984 இல் எழுதியது.

.
சந்தானம். சந்தானம். ஹூம் இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கின்றேன். நல்ல பரிச்சயம் கூட. எங்கே எங்கே .. என்று பாலகுமாரனின் ”மௌனமே காதலாயில்” வந்த  கதாநாயகன் பெயரைப் படித்துவிட்டு மனதினுள் தேடினாள் சுசீ.

“ஹாங்.. வந்துவிட்டது. கோ எஜுகேஷனில் எட்டாப்பூப் படிக்கும்போது எதுக்கெடுத்தாலும் என்னோட போட்டி போடுற சந்தான ராமன். வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு, வெள்ளையாய் அணிந்து கொண்டு, வெள்ளையாய்க் காண்பித்துக் கொண்டு எதுக்கெடுத்தாலும் படிப்பு, டிராமா, விளையாட்டுப் போட்டி அத்தனையிலும் போட்டி போடும் சந்தானம். தினம் அழகாய் உடையணிந்து கொண்டு நெற்றியில் கீற்றுப் பிறையாய் சந்தனத்துடன் வரும் சந்தானம்..

”கேர்ள்ஸ் லீடர்ஸ் எல்லாம் பாய்ஸ் லீடர்ஸ்கிட்ட குளோரின் தயாரித்தல் ஒப்பிக்கணும். பாய்ஸ் லீடர் எல்லாம் கேர்ள்ஸ் லீடர் கிட்ட ஒப்பிக்கணும். யாராவது தப்பாச் சொன்னா எங்கிட்ட வந்து சொல்லுங்க.” என்று கூறிவிட்டு மேஜை மேல் கையைக் கோர்த்துத் தலையைக் கவிழ்த்த நாகநாதன் வாத்யார் மேல் எரிச்சலாய் வந்தது சுசீக்கு.

அவள் குளோரின் தயாரித்தல் சரியாகப் படிக்கவில்லை. கேர்ள்ஸ்  தன்னிடம் ஒப்பிக்கும்போது மனப்பாடம் பண்ணிக் கொள்ளலாம் என்று அஸால்ட்டாய் இருந்து விட்டாள் வாத்தியார் இப்படி இப்பவே ஒப்பிக்கச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நன்றாகப் படித்திருக்கலாமே. 

தமிழர்தம் ஆவணக்காப்பாளரை இழந்தோம் - முருகபூபதி

.
மௌனத்தின்   நாயகனாகவே   நிரந்தரத் துயிலுக்குச்சென்ற  செங்கைஆழியான்
பூகோளச்சுற்றுச்சூழலையும்  ஈழத்தமிழர்களின் வரலாற்றையும்  ஆய்வுக்கண்ணோடு   பதிவுசெய்த பன்னூல்   ஆசிரியர்
    
               

          
 கடந்த  சில  வருடங்களாக  எதுவும் பேசாமல் - எழுதாமல் மௌனத்தின்  நாயகனாகவே  வாழ்ந்திருக்கும்  செங்கை ஆழியான் தனது  பவளவிழா  வயதையும்  நிறைவுசெய்துகொண்டு  தனது மௌனத்தை  நிரந்தரத்துயிலின்  ஊடாக  நிரந்தரமாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
அனைவரும் சொல்வதுபோன்று  செங்கைஆழியான்  மறைவு ஈடுசெய்யப்படமுடியாத  இழப்பு  அல்ல.   ஈடுசெய்யப்படவேண்டிய பாரிய  இழப்பு.
அவரால்  தோன்றியிருக்கும்  பாரிய  வெற்றிடத்தை  இனியார்தான் நிரப்புவார் ?

செங்கைஆழியான்  சிறுகதை,   நாவல்,   விமர்சனம், இலக்கியத்தொகுப்புகள்,   கட்டுரைகள்  என  ஏராளமாக எழுதிக்குவித்தவர்.    அவருடைய  சிறுகதைகள்,   நாவல்கள் சர்ச்சைகளையும்  உருவாக்கியது.   குறிப்பாக  வாடைக்காற்று,  காட்டாறு  முதலான  நாவல்கள்.
அவரது  அரச  உயர்பதவிகளுக்கும்  ஆப்புவைத்திருக்கிறது.  ஆயினும் அவர்  சோர்வடையாமல்  தொடர்ந்து  வேறு  ஏதாவது  ஒரு  பணியில்   தன்னை  இணைத்துக்கொண்டு  தீவிரமாக  இயங்கும் இயல்புகொண்டிருந்தவர்.
நோய்  உபாதை  அவரை  முடக்கியிராவிட்டால்,  மேலும்  பல பதவிகள்   அவரை நோக்கிவந்திருக்கும்.   தொடர்ந்தும்  படைப்பு இலக்கியத்துடன்   பூகோளச்சுற்றுச்சுழல்,   ஈழத்தமிழர்  வரலாறு பற்றியும்  கட்ட கட்டமாக  வளர்ந்திருக்கும்  ஈழத்தமிழ் இலக்கியத்துடன்   புகலிடத்தவர்களின்  படைப்பு  இலக்கியங்களையும் மதிப்பீடு செய்திருப்பார்.
சுருக்கமாகச்சொன்னால்   அவர்  ஒரு  நடமாடும்  நூலகம்.    நடமாடிய என்சைக்கிளோபீடியா.