.
நித்திரையத் தொலைக்கின்றோம்
நித்திரையத் தொலைக்கின்றோம்
நிம்மதியை இழக்கின்றோம்
முத்தமிட குழந்தைவந்தால்
மூர்க்கமாய் நோக்குகிறோம்
எத்தனையோ வழிகளிலே
சொத்துச்சேர்க்க விளைகின்றோம்
என்றாலும் எம்மனதை
ஏன்மாற்ற விரும்பவில்லை
பொய்பேசும் கூட்டத்தை
மெய்யென்று நம்புகிறோம்
பொறுப்பற்றார் நட்புதனை
புகழென்றே எண்ணுகிறோம்
புத்திசொல்லும் பெரியோரின்
பக்கம்செல்ல மறுக்கின்றோம்
இத்தனையும் பிழையென்று
ஏன்மனது சொல்லவில்லை
இறைபக்தி மனமிருத்தி
எம்மனதை மாற்றிடுவோம்
நிறைவான குணமுடையார்
நெருக்கமதை ஏற்றிடுவோம்
குறைவான விடயங்களை
குழிதோண்டி புதைத்திடுவோம்
நெறியுடனே நாம்வாழும்
நிம்மதியும் கிடைத்துவிடும்