.
                                                                  மரணஅறிவித்தல் 


                                                         திருமதி ராதா குமாரநாயகம்

                                                 
                                             மண்ணில்: 29- 07- 1950   விண்ணில்: 02- 02- 2012


ஏழாலையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ராதா குமாரநாயகம் 02-02-2012 வியாழனன்று லண்டனில் காலமானார்.
அன்னார் திரு. திருமதி இரத்தினம் - செல்லம்மா தம்பதியரின் சிரேஸ்ட மகளும்இ திரு. திருமதி முத்துக்குமாரசுவாமி –பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகளும்இ திரு. முத்துக்குமாரசுவாமி குமாரநாயகம் (ஏழாலை) - பொறியியலாளர்- (Balfour Beatty Ltd. U.Kஅவர்களின் பாசமிகு மனைவியும் Dr.கிருஷ்ணி குமாரநாயகம், சன்ஜீவ் குமாரநாயகம் (Investment  Banker, Goldman Sach),  Drதர்ஷினி குமாரநாயகம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

ரவீந்திரன் (Australia),  மகேந்திரன் (Australia), திருமதி ரஜனி மகேஸ்வரன் (Australia),  ஆகியோரின் அன்புச் சகோதரியும், விஜி ரவீந்திரன்,  நிரஞ்சனா மகேந்திரன்,  மகேஸ்வரன் (Australia),  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராகுல், வைஷ்ணவி, அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும, சரவணன், சரண்யா, சாரங்கன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக-ASIAN  FUNERAL  SERVICE,  209 KENTON  ROAD, HARROW HA3  OHD (Near Sainsburys),என்ற முகவரியில் 07-02-2012 செவ்வாய்க்கிழமை இரவு 6.30க்கும் 8.30க்குமிடையில் வைக்கப் பட்டு, 08-02-2012 புதன்கிழமை பிற்பகல் 2மணியிருந்து 5 மணிவரை St. MARYLEBONE CREMATORIUM,  EAST  END ROAD,  FINCHELY,  LONDON  N2  ORZ என்ற முகவரியில் ஈமக்கிரிகைகள் நடைபெற்ற பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன் வேண்டப்படுகின்றனர்.

தகவல்:         திரு. குமாரநாயகம் (கணவர்):      07949 009 514
தொடர்புகளுக்கு:  கிருஷ்ணி குமாரநாயகம்:  07904 786 941
                                     சன்ஜீவ குமாரநாயகம்; :  07866 991 742
                                     தர்ஷினி குமாரநாயகம் :  07878 796 855

அவுஸ்திரேலியாவில் வெள்ள அனர்த்தம்

.
கிழக்கு அவுஸ்திரேலியாவில் தென் வேல்ஸ் மற்றும் குயீன்ஸ்லாந்து பகுதிகள் வெள்ள அனர்த்தத்தால் மோசமான பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளன.

அப்பிராந்தியத்தில் வெள்ளத்தால் 10000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூரியில் தென் நியூ சவுத்வேல்ஸில் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உலங்கு வானூர்தி மூலம் விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூரி பிராந்தியமானது கடந்த 35 வருட காலத்தில் இல்லாத மோசமான வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது. அங்கு 2000 பேர் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 
__


n_

சிந்தனைக்குச் சில…. பரணி


.

இருவகை மக்களை இவ்வுலகில் பார்க்கின்றோம். பிறருடைய மகிழ்ச்சியான வாழ்வையும் சீர்சிறப்புக்களையும் பார்த்து தாமும் மகிழ்ந்து உவகையுறுகின்றார்கள் ஒருவகையினர். பிறருடைய சிறப்புக்களைக் கண்டு மனம் புழுங்கி அவர்களில் வெறுப்புக் கொண்டு பொறாமைப்படுகின்றார்கள் இன்னொரு பகுதியினர்.

இவர்களில் பிறராக்கம் கண்டு மகிழ்வோரே சந்தோஷமாகவும் மன அமைதியுடனும் வாழ்கின்றார்கள். பிறராக்கம் கண்டு பொறாமைப்படுவோர் மன அமைதி அற்றுஇ மன உறுத்தலுடன் வாழ்கின்றார்கள். மற்றவர் உயர்வைக் கண்டு பொறுக்க முடியாத குணத்தை அழுக்காறு என்பர். அவர்கள் மனமும் வாழ்வும் அழுக்கு நிறைந்ததாய்த் தீமையே விளைவிப்பதாய் இருக்கும். இதனையே திருவள்ளுவர்,

“அழுக்காறு எனஒருபாவி திருச்செற்றுத்
 தீயுழி உய்த்து விடும்”

தங்கநிலவு - மேரி ஆன் - கவிதை

.
மார்கழி மாத முன் பனிக் காலம் 
கொட்டும் பனிப்பாளம் 
வெடவெடுக்கும் 
விடியற்கால சாமம்

மாட்டைக்குடிலில் 
மரியாள் மடியில் 
இடையர்கள்  நடுவில் 
மா மன்னவர் மழலை வடிவில்
வரிசையாய் 
வானவர் மேய்ப்பர் மூவரசர் 
வந்தவர் பணிந்தனர்
வாய் விட்டு வியந்தனர் 
வைக்கோல் பட்டறையில் 
வைர அட்டிகையா  
குப்பை மேட்டில்
குத்து விளக்கா
தரையிலா தவழ வேண்டும் 
தங்க நிலவு
ஓ!  தன்னை தாழ்த்துகிறவன் 

உயர்த்தப்படுவான் போலும்.

அவுஸ்திரேலியா மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா”


.
வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவான ”தமிழர் விளையாட்டு விழா” அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வருடந்தோறும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 - 01 - 2012 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வொன்ரோனாவில் ஜேடபிள்யு மான்சன் றிசேவ் (J.W. Manson Reserve, Wantirna)மைதானத்தில் நடைபெற்றது.

Kundrathu Kumaran Temple - Maha Kumbhabhishekam 12-02-2012

மௌனம் கலைகிறது....2 - நடராஜா குருபரன்

.
மகிந்த ராஜபக்ஸ அன்றன்றே கொல்வார் றணில் நின்று கொல்வார்.


ஏறத்தாழ 12 வருடங்களுக்குப் பின்னோக்கி உங்களை அழைத்துச் செல்கிறேன். மகிழ்ச்சியுடன் அல்ல வலி சுமந்த வேதனையோடு. காரணம் நீண்ட யுத்தத்தின் பின், பெருக்கெடுத்த ரத்தத்தின் பின் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை பலருக்கும் நின்மதிப் பெருமூச்சை கொடுத்தது. ஆனால் அது கானல் நீராக அமைதிக்குப் பிந்தைய சுனாமியாக மாறும் என பெரும்பான்மையோர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிலவிய அமைதிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே திரைமறைவில் எதிர்மறையான செயற்பாடுகளையே மேற்கொண்டனர். அந்த வகையில் சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததோடு றணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சர்வதேச காய்நகர்த்தல்களும் ஆரம்பித்திருந்தன. இந்த புதிய அத்தியாயத்தில் நானும் மெதுவாக உலகைநோக்கி ஒரு செய்தி சேகரிப்பாளனாக நகர்ந்தேன். அதில் மிகப் பிரதானமானது அமெரிக்க வெள்ளை மாளிகை விஜயம்.

அந்தமானில் தமிழ் வழிக்கல்வி


.
அந்தமான் நிகோபார் தீவுகள் வங்கக் கடலில் அமைந்துள்ள அற்புதமானஇயற்கை அழகு நிறைந்த பசுமைத் தீவுகள்.  அந்தமான் தீவுகள் இயற்கைவிரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.அருமையான சுற்றுலாத்தலம்.அந்தமானின் கடற்கறைகள் மிகத்தூய்மையானவைஅழகானவை.அந்தமான்,நிகோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் 36தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.இங்குள்ளமக்களில்  தமிழர்களும் கணிசமாக வசிக்கிறார்கள்தீவுத்தலைநகர்போர்ட் ப்ளேயர்அந்தமான்நிகோபார் தீவுகள் நமது தாய் தமிழ் நாடில்இருந்து 1200 கி.மீதூரத்தில் இருந்தாலும் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்குமான உறவு 11ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. 2ம்ராஜேந்திர சோழ மன்னர் அந்தமான்நிகோபார் தீவுகளைக் கைப்பற்றிஅங்கு தமது படைகளை விட்டு சென்றார் என வரலாற்று நூல்கள்குறிப்பிடுகின்றனதஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டின்தொடர் கல்வெட்டு ஒன்று இங்குள்ள பிலோ பாபித்தீவில்இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கைச் செய்திகள்

.
கச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் -  முதல்வர் ஜெயலலிதா

மீதிக் கடனைப் பெறுவதா இல்லையா கொழும்பு தீர்மானிக்க வேண்டிய விடயம் சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது

தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளுக்கு விடுதலை


விடுதலைப்புலிகளுக்கு பொருள்கள் கடத்திய வழக்கில் ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் சென்னையில் கைது
கச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் -  முதல்வர் ஜெயலலிதா
சென்னை, பிப்.3: கச்சத் தீவை மீட்கும்வரை ஓய மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  உறுப்பினர் ஆறுமுகம் (வால்பாறை) வெள்ளிக்கிழமை பேசியது: ""தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கச்சத் தீவை மீட்க முதல்வர் தலைமையில் அனைவரையும் திரட்ட வேண்டும். கச்சத் தீவை மீட்க மத்திய அரசு தடையாக இருந்தால் மக்கள் மத்தியில் அதை அம்பலப்படுத்த வேண்டும்'' என்றார். அதற்கு முதல்வர் அளித்த பதில்: ""இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்குவதைப் பற்றி உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். இலங்கைக் கடற்படையினரால் எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி இடங்களில் தொழிலை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கான நிரந்தரத் தீர்வு, தாரைவார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்டெடுப்பதுதான். இதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தேன். இந்த வழக்குக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ஆவணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைக் கட்டிக்காக்க, கச்சத் தீவை மீட்கும்வரை நான் ஓயமாட்டேன் என தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார் முதல்வர் ஜெயலலிதா.

ஈழத்தமிழர் கழகத்தின் உணவுடன் ஒன்றுகூடல் 12.02.2012

.

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்


.

காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும். அதை அவன் கவனித்திருக்கிறான். ஒருமுறை கழுத்துப்பகுதியில் சிறகுதிர்ந்த, சற்று சாம்பல் நிறம் கலந்த காக்கை இப்படித்தான் செய்தது. எல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்து கொண்டான். தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான்.

துரோகி - பூமாறங் - - யதீந்திரா


.
ஈழ அரசியலைப்  பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்றுவரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் ‘துரோகி’ அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.
Mathaiahஎனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்கு சந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன.அப்போது இணக்கம் என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் ‘இயக்கம்’ என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் ‘பொடியள்’ என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா, நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்து  கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார்.

வானவில் 2012




கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி சத்தியதேவி மனம் திறந்து பேசுகிறார்

.
பகுதி -1

- டி.பி.எஸ்.ஜெயராஜ்



நண்பர்களே!



சூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி மற்றும் கடற்புலிகள் என்றழைக்கப்படும் அதன் அதன் கடற்படைப் பிரிவின் விசேட தளபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தார் .வடமராட்சியில் உள்ள பொலிகண்டி என்கிற பிரதேசத்தை தன் சொந்த இடமாகக் கொண்டிருந்த இவர்,யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்கிற இடத்தில் 2009 மே 17 – 18 ல் மரணமடைந்தார்.


மூழ்கும் உண்மைகள் - ஞாநி


.


இந்திய அரசின் வல்லரசுக் கனவில் இன்னொரு அத்தியாயம் நனவாகிறது. கோடிக்கணக்கான ரூபாய்கள் அணு உலைகளிலும் நீர்மூழ்கிகளிலும் மூழ்கும்போது கூடவே பல கசப்பான உண்மைகளையும் சேர்த்து மூழ்கடிக்க்ப் பார்க்கிறது அரசு.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைத் தன் கடற்படையில் வைத்திருக்கும் உலக நாடுகள் இதுவரை ஐந்துதான். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா.ஆறாவதாக இந்தியாவும் இந்த அணுகுண்டர்கள் க்ளப்பில் சேர்கிறது. இந்தப் ‘பெருமை’ இப்போதைக்கு வாடகைப் பெருமைதான். ஏனென்றால் இந்தியா இந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டவில்லை. ரஷ்யா கட்டிய நெர்ப்பா என்ற கப்பலை வாடகைக்கு வாங்கி ஐ.என்.எஸ் சக்ரா-2 என்று பெயர் மாற்றிவிட்டது. வாடகை ரொம்ப அதிகமில்லை ஜெண்ட்டில்மன். ஐயாயிரம் கோடி ரூபாய்கள்தான். பத்து வருடத்துக்கான வாடகை.

கையடக்கத்தொலைபேசியை உபயோகித்தால் போர்க் குற்றவாளி! _

வடகொரியாவில் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜொங் Il இற்கு 100 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு யாரும் கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிக்ககூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.

கையடக்கத்தொலைபேசிகள் உபயோகிப்பதினை அந்நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சி "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது.

கையடக்கத்தொலைபேசிகளை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

.



எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய ஜனாதிபதிகளுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




உலகச் செய்திகள்

.

காசாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு! _

எம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்: சொத்தின் மதிப்பு தெரியுமா?


எகிப்திய நாட்டு உதைபந்தாட்ட மைதானத்தில் கலவரம் : 74 பேர் பலி; 150 பேரின் நிலை கவலைக்கிடம்!
 _


காசாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு! _




ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் மீது காசாவில் செருப்பு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் சிறைப்பட்டிருக்கும் பலஸ்தீனியர்களின் உறவினர்கள், காசாவுக்குள் நுழைய முயன்ற போதே, பான்கீமூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர்.

அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தி, "இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது போதும்..." என்று எழுதப்பட்டிருந்த போஸ்டர்களை பான்கீமூனிடம் காண்பித்தனர்.

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 7)

.
அது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு அவர்களின் தலைமேல் வைக்கப்பட்ட பணங்காய் போல் எண்ணி விருது வாங்கவந்த அநேகம் பேர் வருந்தியிருக்கலாம்.

ஜானகிராமனுக்கு உள்ளே ஒரு பயம், ஒரு பரவசம், உலகம் உற்றுநோக்கும் இந்திய தேசத்தின் முதல் குடிமகன் சிரித்தமுகத்தோடு நின்று கைகூப்பி படைப்பாளிகளை வணங்கி வரவேற்று ஒவ்வொரு துறை சார்ந்தவருக்குமாக விருதினை வழங்கிக் கொண்டிருப்பதை கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தாலும், நினைவெல்லாம் தன் மனைவி ஜானகியிடமே இருந்தது.

'சோக்கவுட்’ 'நிசப்தம்' ஈரானியச் சினிமா

.
நிசப்தம் எனும் நாத வெள்ளம் ‘சோக்கவுட்’ (The Silence)

கண்கள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகைத் தெரிந்து கொள்ளாத மடையர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதுகள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகிலிருந்து எழும் உன்னத ஒலிகளின் லயநயத்தை ரசிக்கத் தெரியாத கலைஞானம் அற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.


இருந்த போதும் காலையில் விழித்து எழும்போது எழுகின்ற பறவைகளின் ஒலியும், தென்றலின் இசையும், பல எழுத்தாளர்களின் மனத்தைத் தொடுவதை படைப்புகளுடாக வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான். ஒளிந்திருக்கும் அக் கலைஞனை மீட்டெடுத்து சுருதி கூட்ட வேண்டியது அவரவரால்தான் முடியும்.

வீதியில் ஓடும் வாகன இரைச்சலும், தொலைவில் கூவிச்செல்லும் இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் அராத்தும் ஒலியும் தூக்கத்தைக் கெடுத்து பலரையும் இம்சைப்படுத்துகின்றனவே ஒழிய மனம் உருக வைப்பதில்லை.
அடுத்த வீட்டில் கதவை அடித்து மூடும் ஓசையும், பைப் நீர் விழுந்து வாளி நிறைக்கிற ஒலியையும், அதிலிருந்து நீரை மொண்டு குளிக்கிற ஓசையிலும் ஒரு இனிய லயம் கலந்திருப்பதை எங்களில் யாராவது, எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறோமா? 

நித்திரையைக் குழப்புகின்றன, அமைதியைக் குலைக்கினறன என்று எரிச்சல்படத்தான் பலருக்கும் தெரிகிறது. இச் சத்தங்களும் ஒலிகளும் சூழலை மாசடையச் செய்து எமது காதுகளை மந்தமாக்குகின்றன என்ற குற்றச் சாட்டுகளுக்கும் குறைவில்லை. அதில் விஞ்ஞான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் ஓசை இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? எவ்வளவு மந்தமான உயிர்ப்பற்ற சவக்காலையின் வெறுமைக் கலவையாக இருக்கும்.

கண்களால் காணும் காட்சிகளாவன, காதில் விழுபவற்றை விட வேகமாக எமது மூளையில் உறைப்பதால்தான் ஒலியை விட ஒளியில் மறந்து, ரசிக்கத் தெரியாது வாழ்கிறோம்.


குர்ஸிட் பார்வையற்ற ஒரு சிறுவன். அவன் எங்களைப் போல கலாஞானசூனியனாக இல்லை. அவனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி எழுகின்ற ஒவ்வொரு ஒலியிலும் ஏதோ ஒரு இசை இருக்கிறது. லயம் இருக்கிறது. மனத்தை ஈர்க்கும் அமானுச சக்தி இருக்கிறது. வாத்திய ஒலிகளும், இன்னிசையும் மட்டும் அவனை ஈரப்பதில்லை. அவனைப் பொறுத்தவரையில் உலகே ரம்யமான ஒலிகளின் கூடம்தான். ஆனால் அதில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து ரசிப்பவன்.

காலையில் இவனது வீட்டுக் கதவை கோபத்தோடு ஓங்கி அறைந்து தட்டும் ஒலியும், தொடர்ந்து அவர்களைத் துயில் எழுப்பி வாடகைப் பணத்தை அறவிடச் சத்தமிடும் வீட்டு சொந்தக்காரனின் கோபக் குரலிலும் கூட ஏதோ ஒரு ஓசை நயத்தை அவனால் ரசித்து மகிழ முடிகிறது. 

பும் பும் பூம்… பும் பும் பூம்…

இசைக்கு அப்பாலும் அவனது உணர்திறன் விசாலித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் வழியில் தாம் சுட்ட பிரட்டுகளை விற்பதற்காகப் பெண்கள் நிற்பார்கள். தனது விரல்களின் தொடு உணர்வுகள் மூலம் அவர்களது பிரட்டின் தரத்தை இவனால் சொல்லிவிட முடிகிறது. ஆனாலும் ஒருவளது பிரட் சற்றுக் காய்ந்ததாக இருந்தபோதும் அவளிடம் வாங்கிச் சாப்பிடுகிறான். காரணம் அவளது குரல் இனிமையானது என்கிறான். அவனைப் பொறுத்தவரை உணவின் சுவையை விட இசை மாண்புடையது.

10-12 வயது மதிக்கத்தக்க சிறு பையன் அவன். ஒலிகளின் நயத்தைக் கூர்த்தறியும் அற்புத ஆற்றல்  இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. தனது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறான். தகப்பனற்றவன் எனச் சொல்ல முடியாது. ஏதோ தேவைக்காக ரசியாவிற்கு சென்ற தகப்பனிடமிருந்து எந்தத் தகவலோ உதவியோ கிடையாது. இதனால் மிகவும் வறுமையிலிருக்கும் அவனது குடும்பத்தின் வயிற்றுப்பாட்டிற்கு அவனது உழைப்பு அவசியமாக இருக்கிறது.

அவனது ஆற்றல் அவனுக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்திருந்தது. இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் அவன் அவற்றிக்கு சுருதி மீட்டிக் கொடுப்பவனாகத் தொழில் பார்க்கிறான். ஆனால் எல்லா முதலாளிகளையும் போலவே இவனது முதலாளியும் காசு ஒன்றே குறியானவன். இவனது திறமையை மதிப்பவனாக இல்லை. யாராவது அவன் விற்ற வாத்தியத்தைக் குறை கூறினால், சுருதி சேர்த்துக் கொடுத்த இவனே குற்றவாளியாக ஏச்சு வாங்க வேண்டியவனாகிறான்.

வேலைக்குச் செல்லும்போது பஸ்சில் பயணிக்க நேருகிறது. போகும் வழியெல்லாம் இவன் சூழலிருந்து எழும் ஒலிகள் கேட்காதவாறு, தனது காதுகளைப் பொத்திக் கொண்டே பயணிக்கிறான். அவனாக விரும்பி இதைச் செய்வதில்லை. நல்ல இசை கேட்டால் இவன் தனது சூழலையும், தன்னைக் காத்திருக்கும் பணிகளையும் மறந்து விடுவான். இவனது கால்கள் தன்னிச்சையாக இசை ஒலியைப் பின் தொடரும். எங்கோ செல்ல வேண்டியவன் அதை மறந்து வேறெங்கோ சென்றுவிடுவான். 

இவனது பயணத்தில் உதவுவது ஒரு குட்டித் தோழி நதீரா. ஆனால் இவனிலும் சற்றுப் பெரியவள். பார்வையற்றவனின் கண்களாக அவள் இயங்குகிறாள். அத்துடன் இவன் வாத்தியங்களைச் சுருதி மீட்டும் போது, அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதும் அவள்தான். அவன் சுருதி மீட்டும் போது மெல்லியதாக அவளது காது வளையம் ஆட ஆரம்பிக்கும், பின் தலை முடி, முகம், கைகள் எனத் தொடர்ந்து இறுதியில் உடலே தாளலயத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடும். அந்த அழகை ரசித்திக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக நடிக்கிறாள் அந்தப் பெண். 

அவளது உலகம் குர்ஸிட் மட்டுமே. இவனது கவனம் அங்கும் இங்கும் அலையவிடாது கவனமாகக் கூட்டிச் செல்பவள் அவள்தான். அவளால்தான் அது முடியும். தெருப் பாடகனின் இசையில் மயங்கி அவனது ஓசையைப் பின் தொடர்ந்து செல்வதால், வேலைக்குச் செல்லத் தாமதமாகி ஏச்சு வாங்காஙாகாது காப்பாற்றுவது அவள்தான்.

அவன் எல்லா அழகையும் ஆராதிப்பவன். அவளின் புற அழகை அல்ல. அவளின் உள்ளொளியைப் புரிந்து வைத்திருக்கிறான். 

குர்ஸிட் ஒரு வண்டு போன்றவன். அவற்றின் ஓசை இவனுக்குப் பிடித்தமானது. ஆயினும் சாணியில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் அபசுரம் என்பான். ஆனால் மலர்களில் தேன் தேடும் தேனீக்களின் ரீங்காரம் அற்புதமானது என ரசிப்பான். தேனீக்களுடன் பாசம் கொண்டவன். அவற்றோடு பேசுவதும் இவனுக்குப் பிடித்தமானது. அவை பற்றிப் பேசுவதில் மகிழ்வு கொள்பவன். 

ஆனால் அவற்றைப் போலவே இவனும் நெறிப்படுத்தப்படாத தேனீ. பதவி, பணம், அந்தஸ்த்து  போன்றவை இவனது இசை ரசனையைப் பாதிப்பதில்லை. தெருப் பிச்சைக்காரன் எழுப்பும் இசை லயத்துடன் அமைகையில் அதில் ஆழ்ந்துவிடுவான். அந்த கானகக் கானமும் இவனை வாவென அழைக்கும்.

நெரிச்சல் மிகுந்த கடைத் தெருவில் இசையின் வழியே பயணிக்கிறான். இளைஞன் கையிலிருக்கும்; ரேடியோவிலிருந்து அற்புதமான இசை வருகிறது. நெருக்கமான சனங்களிடையே, இசையின் நீக்கல்களின் இடையே நெளிந்து வளைந்து புகுந்து பயணிக்கும் இவன் வழி தவறிவிடுகிறான். கூட வந்த நதீரா இவனைக் காணாது பயந்து தேடுகிறாள். என்னவானானோ என நாமும் கலங்கிவிடுகிறோம். 

ஆனால் அவள் எப்படி இவனைக் கண்டுபிடிக்கிறாள் என்பது அற்புதமான காட்சியாகிறது. அவள் தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு தேடியலைகிறாள். எங்கோ தொலை தூரத்தில் மங்கலாக இசை ஒலி கேட்கிறது. அதில் தன் மனத்தை ஆழச் செலுத்துகிறாள். கண்களை மூடியபடியே அது வரும் திசையில் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறாள். அவள் அடைந்த இடம் ஒரு இசைக் குழு கானம் எழுப்பிக் கொண்டிருக்கும் கடையாகும். அங்கு வெளியே மதிலோரம் இசையில் மயங்கி, சுவரில் சாய்ந்தபடி தன் தனியுலகில் இருக்கிறான் குர்ஸிட்.

படம் முழுவதும் இசை பொங்கி வழிகிறது. காற்றில் பறந்தலையும் கடதாசிச் சுருள் போல நாம் அந்த இசையின் ஓட்டத்தில் அள்ளுண்டு பயணிக்கிறோம். மழை ஓசை இசையாகிறது. நாயின் குரைப்பிலும், குதிரையின் குளம்பொலியிலும், பறவைகளின் சிறகடிப்பிலும், செம்மறி ஆடுகளின் கனைப்பிலும் கூட இசை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிசயிக்கிறோம். ஒருதடவை வாத்தியத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மழை ஆரம்பிக்கிறது. அதில் குதித்து விளையாடி ஆனந்திக்கிறான். மழை விடவில்லை. நனைந்து தெப்பமாக குளிர்பிடிக்கிறது. ஓடும்போது தடக்கி விழுகையில் வாத்தியம் கை நழுவித் தூரப் போய் விழுகிறது. எங்கென பார்வையற்றவன் கண்டு கொள்வது எப்படி? மிகுந்த துயரம் ஆட்கொள்கிறது. ஏற்கனவே முதலாளி இவனை வேலையிலிருந்து கலைக்க முற்பட்டிருக்கிறான். இப்பொழுது வாத்தியமும் தொலைந்து விட்டால்? 

ஆச்சரியம் காத்திருக்கிறது. வாத்தியத்தின் மேல் விழும் மழைத்துளிகள் ஓசையை எழுப்புகின்றன. அது ஒரு சீரான ஒலிலயத்தில் அவன் காதில் பாய்கிறது. இசைத்துளி பொழிகிறது. அதுவே அவன் மனத்திற்கு ஒளதடமாகிறது. வாத்தியமும் கிடைத்து விடுகிறது.

எமக்கென்று தனிப்பாதை கிடையாது. வானை எட்டும் முகில்களாகப் பறந்தும், ஆழ்கடல் சிறுமீன்களாக நீந்தியும் இசையுடன் இரண்டறக் கலந்து பயணிக்கிறோம். சுட்டெரிக்கும் தீயும் இல்லாத, குத்தி வலிக்க வைக்கும் முற்களும் இல்லாத ஆனந்தப் பெருவெளி. சண்டை, சச்சரவு, குரோதம் ஏதுவும் எம்மைச் சஞ்சலப்படுத்தாத படம்.

அவன் வாழும் வீடு நதியுடன் இணைந்தது. பாலத்தால் வீதிக்கு வர வேண்டும். அவன் வேலையிலிருந்து வரும்போதும் மரங்களின் நிழல் அமைதியான நீரில் பிம்பமாக விழும் தோற்றம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கிறது. கை தேர்ந்த ஓவியனின் கன்வஸ் ஓவியம் போல கலைநயம் மிக்கது.


அதேபோல Tajikistan நகரின் கடைத் தெருக்களிலும், வீதிகளிலும் எம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது கமரா. மிகச் சிறப்பான படப்பிடிப்பு. அலங்காரமான கடைகள், அழகான முகங்கள், இவை யாவும் வித்தியாசமான கோணங்களில். நாம் காண்பது அவ்வாறாக இருந்தபோதும், அவர்களின் மொழியும், கலாசாரமும் அந்நியமாக தோன்றியபோதும், அந்த மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மற்றெல்லா மனிதர்களுடையது போலவே இருப்பதால், அதில் எங்களையும் அடையாளம் காண முடிகிறது. இதனால் படத்துடன் ஒன்றச் செய்கிறது.

மிகவும் மாறுபட்ட பார்வையில்; மனித வாழ்வின் மறக்கவொண்ணா கணங்களையும், மனத்தில் எழும் கவித்துவ உணர்வுகளையும் இசையில் குழைத்து அள்ளிச் சொரிகிறது இப்படம். உள்ளத்தை அள்ளிப்பிடிக்கும் ஓவியம் போன்றிருக்கிறது. உலகம், மனித வாழ்வு, இசை இவற்றை வெறுமனே சித்தரிப்பதற்கு அப்பாலும் பயணிக்கிறது. கனதியில் எம்மனத்தை ஆழ்த்தியபடியே படம் நிறைவுறுகிறது.

ஈரானின் புகழ்பெற்ற Mohsen Mahmalbaf  ன் படைப்பு இது. அவர் திரைப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாவார். நெறியாளர் மட்டுமல்ல நல்ல கதாசிரியரும் கூட. ஈரானிய சினிமாவில் புதிய அலை இவருடனேயே ஆரம்பிக்கிறது எனலாம். இவரது மிகப் பிரபலமான முதற் சினிமா கந்தஹர் ஆகும். 

இவரது வாழ்க்கை இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகனான குர்ஸிட் போலவே மிகச் சிறுவயதிலேயே குடும்பச் சுமையைத் தனது தோளில் ஏந்த வேண்டியதாயிற்று. 8 வயதிலேயே தந்தை இழந்து பல சின்னசின்னத் தொழில்களைச் செய்து, 15 வயதளவில் விடுதலைப் போராளியாகி, துப்பாக்கிச்; சூடுபட்டு சிறைப்பட்டவராவார். 4 ½ வருட தண்டனையில் தன்னைப் புடம்போட்டுக் கொள்கிறார். தீவிர அரசியலில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு படிப்படியாக வளர்ந்தவர் ஆவார். இப்பொழுது பிரான்ஸ்சில் வசிக்கிறார்.

25 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய இவரது 5 திரைப்படங்கள் அவரது தாய் நாடான ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளன. அதில் நிசப்தம் என்ற இந்தத் திரைப்படமும் அடங்கும்.

ஏன் இது தடைசெய்யப்பட்டது என்பதை படத்தை மனத்துள் மீள்வாசிப்பு செய்தேன்.

குர்ஸிட்டும், நதீராவும் பாதை வழி போகையில் அவள் திடீரென நிற்கிறாள். கையைப் பற்றி அவனையும் நிறுத்துகிறாள். அவள் முகம் பயத்தால் உறைந்திருப்தைக் காண்கிறோம். “அந்த வழியில் துவக்கோடு இளைஞன் நிற்கிறான். பெண்கள் முக்காடின்றி வந்தால் தாறுமாறாக ஏசுவான்” போகிற போக்கில் சொல்லிப் போகும் வசனமாக முதலில் தோன்றியது. அவள் வேறுபாதையால் செல்வோம் என்கிறாள். இது போன்ற வேறு ஓரிரு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இரை மீட்கையில் மிகவும் முக்கியமான காட்சியாகப்படுகிறது. தீவிரவாதிகளும், மத கலாசார அடிப்படைவாதிகளும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிப்பதில்லை. துப்பாக்கி, பொல், கடும்சொல் போன்ற ஆயுதங்களால் மக்களை பயமுறுத்தி அடிமைப்படுத்துகிறார்கள். தங்கள் கருத்தை ஆயதமுனையில் திணிக்கிறார்கள். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வேறுபாதையைத் தான் நாடமுடியும். நதீரா தெருப்பாதையை மாற்றுவது ஒரு குறியீடாக ஒலிப்பதாகவே நான் கருதுகிறேன். மிக நாச+க்காக தன் கருத்தைத் தெளிவித்திருக்கிறார். இப்படம் ஈரானில் தடை செய்யப்படுவதற்குக் இதுதான் காரணமாக இருந்ததோ தெரியவில்லை.

படம் முழுவதும் இசை அள்ளி அணைக்கிறது. வருடிக் கொடுத்து இதமளிக்கிறது. கிளுகிளுப்பூட்டிச் சிரிக்கவும் வைக்கிறது. மோனத் துயரில் ஆழவும் வைக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவனின் 5வது சிம்பனி கம்பீரமாக ஒலிக்கிறது. மேற்கத்தைய உலகின் நாதமும், ஈரானிய கலாசாரத்தின் வாழ்வும், இசையாலும் அற்புதமான கமராக் கண்களாலும் இணையும் உன்னதம் அது.



மங்கிய ஒளி, அமைதியான ஆற்று நீர், அதில் மிருதுவான பூவாக மிதக்கும் ஓடம், தொலைவிலிருந்து அது மெதுவாக நகர்ந்து வருகிறது இவனையும் ஏற்றி வேறிடம் செல்ல. தொலைவில் அவர்கள் வாழ்ந்த வீடு அந்நியமாகி எட்டாத தூரத்தில் மறைந்துகொண்டு வருகிறது. 

வேலை போய்விட்டது. வீட்டு வாடகை கட்ட முடியாததால் பொருட்களை தூக்கி எறிந்து அவர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான் சொந்தக்காரன். நிர்க்கதியாகி நிற்கிறார்கள் அவர்கள். ஆனால் வாழ்வு என்றுமே அஸ்தமித்துப் போய்விடுவதில்லை. ஏனெனில் அஸ்தமனங்ளையும் உதயமாக்க வலு கொடுக்கும் இசை அவனது கைவசம் இருக்கிறது. அவனது கைகள் அசைகின்றன. தலை தாளம் போடுகிறது. லயநயத்துடன் உடல் அசைந்தாடுகின்றது. ஒரு இசை ஞானிக்குரிய நுட்பத்துடன் இசையைப் பிறக்க வைக்கின்றன. 

அவனது கையசைவிற்கு ஏற்ப கடைத்தெருவே இசை எழுப்புகிறது. பானை, சட்டி, இசை கருவிகள், வாளால் மரமரிதல் என யாவும் வாத்தியங்களாகின்றன. தொழிலாளிகள் தாள லயத்துடன் தட்டி இசையாக எழுப்புகிறார்கள. சந்தை இசைக் கூடமாகிறது. 

இசையில் மயங்கி மனக்கண் மூடிக் கிடந்த நாம் ஏதோ அருட்டுணர்வில் மடல் திறக்கையில் படம் முடிந்திருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்.