கலைஞன் - -( கவிதை) என்.விநாயக முருகன்

.
இறைச்சிக்கடையொன்றில்
உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு
உண்மையில் அதுதான் முத‌ல் நாள்

அதுநாள் வரை
அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை
வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது
மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது
வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது
மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது

முதல் கொலைக்கான
உத்தரவு வந்தக் கணம்
அவன் திகைக்கிறான்
கோழிகளையும், ஆடுகளையும்
மலங்க மலங்க பார்க்கிறான்

பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்
மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்

சிட்னி முருகன் ஆலயத்தில் நவராத்திரி விழா

.
சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நவராத்திரி விழாவின் ஒரு காட்சியை தமிழ்முரசு வாசகர்களுக்காக படப்பிடிப்பாளர் ஞானி தந்திருக்கிறார்.



இலங்கைச் செய்திகள்

.
மாந்தை மேற்கு பாலியாற்றில் அரச அதிகாரிகளால் காணி அபகரிப்பு -பொது மக்களால் வேலிகள் உடைப்பு

நெடுந்தீவில் நடைமுறைப்படுத்தவிருந்த கடற்றொழிலுக்கான பாஸ்நடைமுறை நீக்கம்

மண்முனைப் பால வேலைத்திட்டம்- அமைச்சர் பசில் ஆரம்பித்து வைப்பு

 கே பி மீது எந்த வழக்கும் இல்லை"

மாத்தறைக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மூவரைக் காணவில்லை; இருவர் மீட்பு ஒருவரை பிடித்துச் சென்றனர்

மாந்தை மேற்கு பாலியாற்றில் அரச அதிகாரிகளால் காணி அபகரிப்பு -பொது மக்களால் வேலிகள் உடைப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு கிராமத்தில் பிரதேசச் செயலாளரும், அயல் கிராம அலுவலரும் இணைந்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேவன் பிட்டி, பாலியாறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேளாண்மைச் செய்கைக்காக ஓர் ஏக்கர் வீதம் வழங்குவதற்கு உலக உணவுத்திட்ட செயலகத்தின் மூலம் காடுகள் துப்புரவாக்கி மக்களுக்கு வழங்குவதற்கான அனுமதியும் பெறப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குங்குமச் சிமிழ் - சிறுகதை

.

தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிகையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் அவளுடன் சக்திகணபதி என்றொருவர் தொலைபேசியில் பேசினார். அவளின் கவிதை பற்றி அவளுடன் விவாதிக்க விரும்புவதாகவும் முகவரி கொடுத்தால் வீட்டிற்கே நேரில் வருவதாகவும் சொன்னார்.

இவளுக்குச் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதுவரைக்கும் இவளின் கவிதை பற்றி கடிதமோ ஒரு பாராட்டோ வந்ததில்லை. இந்த தமிழ்ச் சமூகம் கவிதை பற்றிய புரிதல் எதுவுமில்லாமல் வறட்சியாக இருப்பதாக நினைத்துக் கொள்வாள். இப்போது ஒருவர் இவளுடன் நேரில் விவாதிக்க விரும்புகிறார். ஆனால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியாது. வீட்டில் கவிதையைப் பற்றிப் பேசுகிற சூழல் இல்லை. "அலுவலகத்திற்கு வாருங்கள் விவாதிக்கலாம்..." என்றும் சொன்னாள்.

ரஞ்சனி எட்டாம் வகுப்புப் படிக்கும் போதிருந்தே கையில் அகப்பட்டதையெல்லாம் எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். பாடப் புத்தகங்களை விட இப்படி வாசிக்கும் பகுதிகள் அவளுக்கு ருசியாய்த் தெரிந்தன.

பத்தாம் வகுப்புப் படிக்கும் போது எழுதுகிற கிறுக்கும் பிடித்தது. அதைப் போல வாக்கியங்களை மடக்கி மடக்கி எழுதுவது அவளுக்கு சுலபமாய்க் கை கூடியது.

நிறைய எழுதிப் பழகிய பின்பு, ப்ளஸ் டூ படிக்கும் போது அவள் எழுதிய ஒரு கவிதை காதல் பற்றியது - ஒரு தினசரியின் வாரப் பதிப்பில் வெளியானது. அடுத்த நாளே பள்ளியில் பிரபலமானாள். தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர்.

விருதுகளை வாங்கிக் குவிக்கும் செங்கடல்

.



தனுஷ்கோடி மீனவர்களையும், மண்டபம் அகதிகளையும் நடிகர்களாக கொண்டே செங்கடல் படமாக்கப்பட்டுள்ளது.
எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் இந்திய இலங்கை எல்லைக் கிராமமான தனுஷ்கோடி மக்களின் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாக கையாளுகிறது இத்திரைப்படம்.மத்திய தணிக்கைக் குழு செங்கடலை, அதன் அரசியல் விமர்சனுங்களுக்காக பொது இடங்களில் திரையிட தடை விதித்திருந்தது.
பல மாத கால சட்டப் போராட்டத்திற்குப் பின் எந்த வெட்டும் இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் 'A ' சான்றிதழை யூலை 20ம் திகதி பெற்றது.பல மாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சென்ஸார் தடையிலிருந்து மீண்ட செங்கடலின் வெற்றி கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்கள் பெற்ற வெற்றி.

Raji Silks தீபாவளி மலிவு விற்பனை

.

3ZZZ மெல்பேர்ன் தமிழோசை வானொலி நிலையத்தின் அறிவித்தல்


1988ம் ஆண்டுமுதல் கடந்த 24 வருடங்களிற்கும் மேலாக மெல்பேர்ன் வானலைகளில் வாராவாரம் வியாழன் மாலை 8மணி முதல் 9மணி வரை 92.3 FM அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் உங்கள் அபிமான மெல்பேர்ன். 3ZZZ தமிழோசை நிகழ்ச்சியின், வருடாந்த RADIOTHON நிதிசேகரிப்பு நிகழ்ச்சிகள், எதிர்வரும்  ஒக்டோபர் 18ம் திகதியும், எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதியும் நடைபெறவுள்ளது. வரும் வியாழக்கிழமையில் 3ZZZ வானொலி நிலையத்தை 9415 1923 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோ அல்லது தமிழோசையின் அறிவிப்பாளர்களை தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவிகளை வழங்கி தொடர்ந்தும் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களிற்கு அதன் தனித்துவமான சேவைகளை வழங்கிட உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். நீங்கள் வழங்குகின்ற நிதிப்பங்களிப்பு வரிவிலக்குதலுக்குரியது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
மறந்து விடாதீர்கள்!  ஒக்டோபர் 18ம் திகதியும்  ஒக்டோபர் 25ம் திகதியும் நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 9415 1923!
நன்றி

பங்களிப்புக்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி :- Radio 3ZZZ., P.O.Box 1106, Collingwood, Victoria - 3066

வழிகாட்டி -சோனா பிரின்ஸ் .

.

வாழ்வது எப்படி என்று
வார்த்தையில் சொன்னார் பலர்
வையத்தில் நிலைத்தவர் அதை
வாழ்ந்து காட்டிச் சென்றார்

நானே வழியென்று இயேசு
நானிலத்தில் வாழ்ந்து காட்டினார்
நல்லதைக் காணுவாய் கீதையில்
நாளெல்லாம் படியென்றார் கண்ணன்

கூப்பும் கரங்களால் தொழுது
குர்ரான் சொல்லும் வழிகளில்
கொண்ட நாட்களில் வாழ
கொடுத்தார் முகம்மது நற்சிந்தனை

தேவைக்கு மனிதரைத் தேடாது
தேடுவோருக்கு உதவி செய்து
தேடாமலே வரும் இறைவனுடன்
தேர்ந்தெடு சொர்க்கத்தை என்றனர்

விபத்து - சொல்லமறந்த கதைகள் 16, 17


.
விபத்து 
முருகபூபதி – அவுஸ்திரேலியா

இலங்கையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் இலங்கை வரலாற்றில் இடதுசாரிகளுக்கு படிப்பினையையும் பலத்த அடியையும் கொடுத்தது. அதற்குமுன்னர் 1970 இல் நடந்த தேர்தலின்போது முதலாளித்துவக்கட்சியான யூ.என்.பி.யின் தலைவர் டட்லிசேனாநாயக்கா சகல தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் பேசுகையில் இந்தத்தேர்தலில் இடதுசாரிகள் குத்துக்கரணம் அடிப்பார்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஆனால் அந்தத்தேர்தலில் இடதுசாரிகள் அவர் சொன்னதுபோன்று குத்துக்கரணம் அடித்து தோல்வியை தழுவவில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அமோக வெற்றியை ஈட்டினார்கள்.
ஸ்ரீமா அம்மையாரை விட்டு 1976 இறுதிப்பகுதியில் விலகியதன் பின்னர் இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) மற்றும் லங்கா சமசமாஜக்கட்சியினர் இடதுசாரி ஐக்கியமுன்னணி என்ற அமைப்பைத்தோற்றுவித்து இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக களத்தில் இறங்கியபோதுதான் டட்லி சேனாநாயக்கா சொன்னதுபோன்று குத்துக்கரணம் அடித்து தோல்வியை தழுவிக்கொண்டார்கள்.
அக்காலப்பகுதியில் எனக்குள்ளும் இடதுசாரி சிந்தனைகள் துளிர்விட்டிருந்தது. நானும் தேர்தல் பிரசாரக்களத்தில் இறங்கினேன். எங்கள் நீர்கொழும்பில் நடந்த பிரசாரக்கூட்டங்களில் கலாநிதிகள் என்.எம்.பெரேராஇ கொல்வின் ஆர்.டி சில்வா ஆகியோருடனும் மேடையேறி தமிழில் பிரசாரம் செய்தேன்.


கலைக்கோலம் 2012 - 27.10.12

.

கலைக்கோலம் 

உலகச் செய்திகள்

சென்காகு தீவுகளை நோக்கி சீன போர்க்கப்பல்கள்: ஜப்பானில் பரபரப்பு

சிரிய வான்பரப்பில் துருக்கிய பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பு

திரிபோலி சிறையிலிருந்து 120 கைதிகள் தப்பினர்!

நடிகை ஸ்ரேயாவுடன் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி: என்ன உறவு?

சென்காகு தீவுகளை நோக்கி சீன போர்க்கப்பல்கள்: ஜப்பானில் பரபரப்பு


 
 சீனா மற்றும் ஜப்பான் நாடுகளிடையேயான சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை நோக்கி சீன போர்க்கப்பல்கள் முன்னேறி வருவதையடுத்து, ஜப்பானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே சென்காகு தீவுகள் குறித்த சர்ச்சை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அத்தீவு தங்களுக்கே சொந்தம் என கூறி வருகின்றன.

அடையாளம் -ராமலக்ஷ்மி

.
னக்கு ஒரு பெயர் இருக்கிறது என்பதே அவனுக்கு மறந்து போயிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வரை அந்தப் பெயரால்தானே எல்லோரும் அவனை அழைத்தார்கள்? இப்போது யாருமே அந்தப் பெயரால் அவனைக் கூப்பிடுவதில்லை. ‘உம் பேரு என்ன’, கேட்பதுமில்லை. பாழாய்ப் போன அந்த விபத்தில் ஏற்பட்ட ஊனத்தையும், ஏழ்மைக் கோலத்தையுமே அல்லவா உலகம் அவனுக்கான அடையாளமாக்கி விட்டது!

“மூர்த்தி.”

மெல்ல முணுமுணுத்தான். அவன் பெயர் அவனுக்கே அந்நியமாகத் தோன்றியது. யார் பெயரோ போல, அந்த பெயருக்கும் அவனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமேயில்லாதது போல ஒலித்தது. அம்மா சின்ன வயதில் தன்னை எப்படி அழைப்பாள் என்பது நினைவுக்கு வரக் கண்ணீர் துளிர்த்தது.

“மூர்த்தீதீஈஈஈ....”

விஜயரகுநாதத் தொண்டைமான் கடிதம்

.
ராஜகிரி கஸ்ஸாலி

25.10.1801ஆம் நாளன்று புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொண்டைமான் கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்..

திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பில்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர்வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம், காரியவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன்னை மெச்சிக்கொள்ளும் துரோகம், தான் பிழைத்திருப்பதையே புகழுக்குரியது என்பதற்கான ஆதாரமாய்க் காட்டுகிறது. ஆயினும் வரலாறு எதிர்காலத்தில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது.

ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழுந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டை மானைக் கேட்கிறார். அவன் துரோகிக்கே உரிய ராஜ விசுவாசத்துடன் மறுக்கிறான். சினம் கொண்ட ஹைதர் அலி தஞ்சாவூரைக் கைப்பற்றிய பிறகு புதுக்கோட்டையின் மீதும் படையெடுக்கிறார். அப்போதும் ஆங்கிலேய விசுவாசத்தில் தொண்டைமான் உறுதியாக இருக்கிறான். நாயினும் மேலான இந்த நன்றிப் பெருக்கைக் கண்டு வெள்ளையர்களே சிலிர்த்திருக்கக் கூடும். இச்சமயத்தில்தான் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க' விஜய ரகுநாதத் தொண்டைமான் 1789ல் பட்டத்திற்கு வருகிறான். திப்பு கொலை செய்யப்பட்ட நான்காவது மைசூர் போரில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் படையனுப்பி உதவவும் செய்கிறான்.

ஒலியை விட வேகமாக விண்வெளியிலிருந்து குதித்து பீலிக்ஸ் சாதனை

.

ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த ஆகாச சாகசக்காரரான  பீலிக்ஸ் போம்கார்ட்னர் பூமியிலிருந்து 24 மைல்கள் (128,100 அடி)  மேலே இருந்து குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஈலியம் நிரப்பப்பட்ட பலூன் மூலம் பூமியிலிருந்து சுமார் 24 மைல்கள் தொலைவுக்கு சென்ற பீலிக்ஸ் அதனுடன் பொருத்தப்பட்ட கெப்சூலில் இருந்து கீழே குதித்தார்.

குரங்குசூழ் உலகு - - நட்சத்ரன்

.
தத்தம் குரங்குகளுக்கிடையே விதவிதமாய்ச் சண்டை மூட்டி விளையாடிக் களிக்கிறார்கள் குரங்காட்டிகள்

கூண்டுக்குள்

அடைய மறுக்கும்

குரங்குகளை வைத்துக்கொண்டு

அலைகிறார்கள் வீதிகளில்

குரங்காட்டிகள்

உலகம்

குரங்குகளாலும் குரங்காட்டிகளாலும்

நிரம்பிவழிகிறது

குரங்குகளின் இரைச்சல்

சமுத்திரப் பேரலைகளின் இரைச்சலையும் விஞ்சி

எதிரொலிக்கிறது

பிரபஞ்சமெங்கும்!

தத்தம் குரங்குகளுக்கிடையே

விதவிதமாய்ச் சண்டை மூட்டி

விளையாடிக் களிக்கிறார்கள்

குரங்காட்டிகள்

தமிழ் சினிமா

.
மாற்றான் - விமர்சனம்
ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் மற்றும் ஜெனட்டிக் பற்றிய தமிழ்சினிமாவிற்கு பெரியளவில் அறிமுகமற்ற புதிய கதையில் சினிமா மசாலாக்களை கலந்து கே.வி. ஆனந்த் சொதப்ப சூர்யா அசத்தியிருக்கும் படமே மாற்றான்.

பால்மா உற்பத்தியில் பெயர் பெற்று விளங்கும் சூர்யாக்களின் தந்தையான சச்சின் கடேகர் தவறான பதையில் பணம் சம்பாதிப்பது பிள்ளைகளுக்கு தெரியவர தந்தையின் தவறுகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே கதை. இதற்காக ஜெனட்டிக், ஒட்டிப்பிறந்த சகோதரர்கள், உக்வேனியா, காதல், உறவுகள் என சினிமா சாயம் பூசியிருக்கிறார் இயக்குனர்.

ஓர் இயதம் ஈருடலாக பிறக்கும் குழந்தைகளில் ஒருவர் உயிர்பிழைக்க ஒருவரை கொல்ல வேண்டி ஏற்படுட தாயின் விருப்பத்தினால் பிரிக்கப்படாமல் ஓருயிர் ஈருடலாக அகிலன் மிளகு ரசம் குடிக்கும் பிள்ளையாக வளர விமலன் சரக்கடிக்கும் பிள்ளையாக வளர்கிறார்.

படத்தில் கொமடியன் இல்லை என்ற குறை தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் சூர்யா. நகைச்சுவை காட்சிகளில் சூர்யாவின் டைமிங் கொமடிகள் அத்தனையும் அரங்கத்தை சிரிப்பொலியில் அதிரச் செய்கிறது. இதனால் முதல் பாதி நீளமானபோதும் ரசிக்கும்படி வேகமாகவும் கலகலப்பாகவும் நகர்கிறது திரைக்கதை.

ஒரு கட்டத்தில் சீரியஸான சூர்யாவிற்கு அப்பாவின் தவறுகள் தெரியவரும் போது அவரை வில்லன்கள் கொன்றுவிட இதயமாற்று சிகிச்சை மூலம் விமலன் பிழைக்க அதிலிருந்து திரைக்கதை ரசிகர்களை ரசிகர்களை கொல்ல ஆரம்பிக்கின்றது. மேலும் விமலன் இறந்தபோதும் அது பெரிதாக இதயங்களை கனக்கச்செய்யவில்லை இத்தனைக்கு அந்த இடங்களில் சூர்யாவின் நடிப்பு அபாராம் என்றாலும் இயக்குனர் கோட்டை விடுவது ரசிகர்களுக்கு சோகம்.

பின்னர் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஒரு சூர்யாவுடன் பயணிக்கிறது கதை. விமலன் இன்றிய அகிலனின் தவிப்பு மட்டுமே இரண்டாம் பாதியில் ரசிக்கக்கூடியதாக உள்ளது. இன்னொரு நாட்டின் மனச்சாட்சியே இல்லாத தீர்மானங்கள், ஜெனட்டிக் என புதுக்களத்தில் கதை சென்றாலும் படம் எப்போது முடியும் என நீண்ட நேரமாக எம்மை சோதிக்கும் திரைக்கதையில் கே.வி. ஆனந்த் இயக்குனராக தோற்றுப்போகிறார். அது எப்படி என்பதை நீங்களே திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் இது எம்.ஜி.ஆர் படங்களை போன்ற படம் என சூர்யா தெரிவித்திருந்தார் அது உண்மை என நிரூபிப்பது போல இரண்டாம் பாதியில் காட்சிகள் அமைந்துள்ளமை ஒரு பழைய படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவதை தடுக்க முடியவில்லை.

உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் எங்கே போனாலும் அங்கே வில்லனில் அடியாட்கள் அசோகனிடம் பாஸ் அவங்க வந்துட்டாங்க, பாஸ் அவங்க போய்ட்டாங்க என வில்லனிடம் தகவல்கொடுப்பது போன்ற அடியாட்கள் சிலரையாவது தவிர்த்திருக்கலாம். மேலும் அதில் இடம் வசனங்களையாவது கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். எனக்கு இதயம் இல்லைன்னாலும் ஈரம் இருக்கும்மா என ஓரிரு வசனங்களே மனதை வருடுகிறது.

முழுப்படத்தையும் கடைசிவரை இழுத்துச்செல்வது படத்தின் நாயகன் சூர்யா மட்டுமே. ஒவ்வொரு சீனிலும் மனிதன் அசத்துகிறார். நகைச்சுவை உட்பட அனைத்து விதமான நடிப்பிலும் பட்டையை கிளப்புகிறார். சின்ன சின்ன அசைவுகளும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. சில காட்சிகளில் எத்தனை இலகுவாக எம்மை அழச்செய்கிறாரோ அத்தனை இலவுவாக சிரிக்கவும் செய்வதுடன் இரட்டையர்களாகவே வாழ்ந்திருப்பது சூர்யாவின் அபார உழைப்பு ஆனாலும் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கிறது திரைக்கதை என்பதே வருத்தம்.

நாயகி காஜலுக்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரம் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவ்வப்போது தமிழ் படங்களில் தலைகாட்டினாலும் பழகிய முகமாக கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார். ரொமன்ஸ் காட்சிகளும் ரசிக்கலாம். படம் முடியும் வரை மொழிமாற்றம் செய்துகொண்டே இருப்பதுவே உறுத்தல்.

இந்த இருவரையும் தாண்டி ஒளிப்பதிவாளர் மட்டுமே ஆறுதல் அளிக்கிறார். நோர்வேயின் அழகை மேலும் அழகுபடுத்துகிறது சௌந்தரின் கைவண்ணம். அயனில் பார்த்த பல கோணங்கள் இயக்குனரின் கெடுபிடியாக இருக்கலாம். உச்சிகளில் பாடல்களை படமாக்குவதை தவிர்த்திருக்கலாம் காரணம் கே.வி. ஆனந்தின் படங்களில் ஏற்கனவே இடம்பெற்ற பாடல்களை நினைவுபடுத்துகிறது.

நாயகன் நாயகி தவிர சூர்யாவின் அப்பாவாக வரும் சச்சின் கடேகர் மட்டுமே மனதில் நிற்கிறார் ஏனையவர்கள் எவரும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.

அடுத்தது சண்டைக்காட்சிகள் சூர்யாவின் முயற்சிகளை சிதறடிக்கிறது அவற்றின் நீளம். இரண்டாம் பாதி கிட்டத்தட்ட சண்டை காட்சிகள் மட்டுமே உள்ளது போல் தோன்றச்செய்கிறது. 3 படங்களின் சண்டைக்காட்சிகளை ஒரே படத்தில் பார்த்த உணர்வு.

இசை ஹாரீஸ் ஜெயராஜ் பாடல்கள்தான் எதுவும் மனதில் நிற்கவில்லை என்றால் பின்னணி இசையும் எரைச்சலால் எரிச்சலூட்டுகிறது. சுட்டாச்சும் நல்லாத்தான் இசையமைத்துக்கொண்டிருந்தார் அண்மைக்காலமாக என்னாச்சு என்றே புரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் பின்னணியில் நிஜமான நாயகனாக இருக்க வேண்டிய இயக்குனரே படத்திற்கு வில்லனாகிவிட்டார். படத்தின் கதை சிறப்பாக அமைந்தபோதிலும் திரைக்கதையில் கோட்டை விட்டதில் சினிமா ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டார் கே.வி. ஆனந்த். மேலும் முந்தைய படங்களின் பாதிப்பிலிருந்தும் மீளவில்லை என பல இடங்களில் நிரூபிக்கிறார்.

4 வருடங்கள் உட்கார்ந்து எழுதிய கதை என்றார்கள் ஆனால் 4 வருடங்களில் ஏகப்பட்ட படங்களை பார்த்து எழுதிய கதை என்பது இப்போது புரிகின்றது. போதாதற்கு சூர்யாவின் கடைசித் தோல்வி 7ஆம் அறிவு போலவும் சில காட்சிகள். சூர்யாவுக்கு படம் முடிந்து எழுத்தோட்டத்துடன் விருது வழங்கும் இரண்டாவது படம் இது. சூர்யாவின் வெற்றியே வித்தியாசமான கதைத்தேர்வுகளே எனவே அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் சூதானமாக அமையட்டும் சூர்யா!

மாற்றான் வழக்கத்துக்கு மாற்றமான கதையானாலும் ரசிகர்களின் ரசனையை மாற்றான்!
- அமானுல்லா எம். றிஷாத்

நன்றி வீரகேசரி