நகரங்கள் -கவிதை -தேவ அபிரா.

.


இலையுதிர்காலத்தின் எதிர்பாராத வெப்பம் தவழ்கையில்
இந்த நகரத்தை வந்தடைந்தேன்.
நகரத்தின் காலடியில் நகர்கிறது நதி.

கரையோர உணவகங்களில் நடுகுடைகள் விரிந்துள்ளன.
முறுகச்சுட்ட பாணில் உருகி வழியும் பாலாடைக் கட்டிகளுக்கருகில்
மென் பொன் மதுக்குவளையை இருத்தி
நங்கைகள் விரைந்து பரிமாறுகிறார்கள்.
பங்குச்சந்தை காய்கிறது.
வங்கிகள் சரிகின்றன.
ஆயினும் கொழுத்த முகங்களின் எண்ணைப்படிவுகளில்
இலையுதிகாலச்சூரியன் பளபளக்கிறது.

மிதவைப்படகின் தோசைக்கடைகளில் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள்.
நூற்றாண்டுகளாக நகரும் ஆற்றின் ஈரத்தைத்
தன்காதலியின் உதடுகளுக்குள் விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன்.
இலையுதிர்காலத்தின் வெப்பம் தவற விடக்கூடியதா என்ன?

மெல்பேணில் எழுச்சியுற நடைபெற்ற தமிழின உணர்வாளர் திரு. மணிவண்ணன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு


அண்மையில் மறைந்த தமிழின உணர்வாளர் இயக்குநர் - திரு. மணிவண்ணன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுற நடைபெற்றுள்ளது.

22.06.2013 சனிக்கிழமையன்று அகவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வு, வேர்மன்ற் சவுத் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்ச்செயற்பாட்டாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள், தமிழின உணர்வாளர் இயக்குநர் - திரு. மணிவண்ணன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடரேற்றியதைத் தொடர்ந்து, நிகழ்விற்கு வந்த தமிழ் உணர்வாளர்களின் மலர்வணக்கம் இடம்பெற்றது.

தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் திரு. வசந்தன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில், இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடனான் தனது அனுபவங்களை திரு தெய்வீகன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். “ஈழத்தமிழர்களின் கதைகளைப் படமாக்குவதை விடவும் ஈழத்தமிழர்களைக் கொண்டே தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும்,

SYDNEY TAMIL RESOURCE CENTRE'S SEMINAR

.

நல்ல-படம்ன்னா-என்ன-சார்..-பாலு மகேந்திரா

.
""என் சினிமா பட்டறையில் பலதரப்பட்ட மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களிடம் அவ்வப்போது பலதரப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய தருணங்கள் வரும். சில கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லுவேன். சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் இருக்காது.
அப்படித்தான் அந்த கேள்வியை எதிர்க் கொண்டேன். ""நல்ல படம்ன்னா என்ன சார்..?'' ""உதாரணமாக எந்த படத்தையாவது உங்களால் சொல்ல முடியுமா?'' என்று என்னிடம் கேட்டவன் ஓர் என்ஜீனியரிங் மாணவன். அந்த கேள்விக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. ""நாளைக்கு சொல்கிறேன்'' என்றேன். அந்த கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. தூக்கம் கலைத்தது. புலம்ப வைத்தது. மறுநாளும் அந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த மாணவன் இருந்தான். பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருந்தது.
""நல்ல சினிமா என்பது அம்மா சமைக்கும் சாப்பாடு போல் இருக்க வேண்டும்'' என்றேன். எத்தனையோ வகையான சாப்பாடு கிடைக்கும்போது, வயிற்றுக்கு நல்லதை செய்யும் அம்மாவின் சாப்பாடுதானே நமக்கு பிடித்தமானது'' என்று பதில் சொன்னேன். எல்லா மனிதர்களிடத்திலும் ஒரு மிருகம் ஒளிந்திருக்கிறது. அந்த மிருகத்தை ஒரு சினிமா சாந்தப்படுத்த வேண்டும். பதிலுக்கு அந்த மிருகத்தை அந்த சினிமா உசுப்பி விடக்கூடாது. சாந்தப்படுத்தும் சினிமாதான் நல்ல சினிமா என்று சொன்னேன்.'' என்கிறார் - பாலுமகேந்திரா

திசைகள் -முருகபூபதி


DSCN0367.JPG

.
வானம்   அழுதுகொண்டிருந்த   அந்தக்காலைப்பொழுதில்   எனது  பேத்தி  மாயாவும்  அழத்தொடங்கிவிட்டாள்.  எப்பொழுதும்   மாயப்புன்னகையுடன்   தோன்றும்   அவளை அழுகையுடன்   பார்க்கச்   சகிக்கவில்லை.
திருவிளையாடல்  படத்தில்   நகேஷ்  தருமி  சிவாஜி   சிவனிடம்  கேட்கும்  கேள்விகளில்  ஒன்று   சகிக்கமுடியாதது…?   பதில்  பச்சிளம்குழந்தையின்  அழுகை. ஆம்…உண்மைதான்.  இயக்குநரும்   வசனகர்த்தாவுமான   ஏ.பி.நாகராஜன்   தனது  அனுபவத்தில்தான்   அதனை  எழுதியிருப்பார்  என்று  சொல்லவேண்டிய  அவசியம்  இல்லை.  எல்லோருடைய   அனுபவமும்   அப்படித்தான்.
தொடர்ந்து  மூன்று  நாட்களுக்கு  மழைபெய்யும்  என்று வானிலை  அவதானநிலையத்தினர்   தொலைக்காட்சிகளிலும்  வானொலி  மற்றும்  ஊடகங்களிலும்   சொல்லியிருந்தனர்.   அத்தகைய   மழைக்காலத்தில்   ஒருநாள்   மருத்துவபரிசோதனை  முடிந்து   மெல்பனிலிருந்து   தொலைவில்  உள்ள   எனது  புதிய  ஊருக்குச்செல்லவிருந்தேன்.
ரயிலையும்   பஸ்ஸையும்  தவறவிட்டபடியால்   மெல்பனிலிருக்கும்  மகள் வீட்டுக்குச்செல்லும்போது  இரவு  11 மணியாகிவிட்டது.   பேத்தி   ஆழ்ந்த  உறக்கம். காலை  எழுந்ததும்   அவளுடன்  விளையாடலாம்  பொழுதைப்போக்கலாம்   என்று  நம்பியிருந்தேன்.   பேத்தி   வாரத்தில்  ஒருநாள்   குழந்தை பராமரிப்பு  நிலையத்துக்கு  சென்று  வருகிறாள்  என்பதை  அறிந்தவுடன்  சற்று  கவலை  வந்துவிட்டது.  மறுநாள்  விடிந்தால்  வெள்ளிக்கிழமை.   அன்று  பேத்தி   குறிப்பிட்ட   பராமரிப்பு  நிலையத்திற்குப்போகவேண்டும்.

யாவும் வசப்படும் சிட்னி திரை அரங்கில்

.
யாவும் வசப்படும் , ஈழ தமிழர்களின் அடுத்த முயற்சியாக சிட்னி திரை அரங்கான  REDING CINIMA , AUBURN  இல்  வெளிவருகிறது .

ஜூலை மாதம்
5ம் திகதி  வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணிக்கும்
6ம்  திகதி சனிக்கிழமை  பிற்பகல் 2.30 மணிக்கும் மாலை 6.00 மணிக்கும்.
7ம்  திகதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2.30 மணிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது .



https://www.youtube.com/watch?v=Pp7HxSPIruM&feature=youtube_gdata_player

காட்சி விபரங்களை  கீழே பார்க்கவும்


உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. -வானொலி மாமா நா. மகேசன்-




ஒரு பெரியவர் நண்பர் ஒருவருடைய வீட்டுககுச் சென்றார். தனது வீட்டிலிருந்து இரண்டு மயில் தூரம் நடந்தே சென்றார். மத்தியான வேளை. பசியும் களைப்புமாக இருந்தது. நண்பர் அவரை வரவேற்றுக் களைப்பாறக் குளிர்பானம் கொடுத்து உசரித்தார். வெகு நேரம் பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். மத்தியானம் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார் நண்பர். பெரியவர் மறுக்காது இருவரும் ஒன்றாக உணவருந்தினார்கள். உண்டபின் மிகுந்த திருப்தியுடன் பெரியவர் “உண்டி கொடு;த்தோர் உயிர் கொடுத்தோரே” என்று சொல்லித் தனது திருப்தியைத் தெரிவித்துக் கொண்டார். நண்பர் நல்ல வார்த்தை சொன்நீர்கள். இந்தச் சொற் தொடரை எப்படித் தெரிந்து கொண்டீர்கள். இதை யார் சொன்னார்கள் என்று நண்பர் கேட்டார்.

என்னுடைய தகப்பனார் அடிக்கடி சொல்லுவார். அதைப்பார்த்தும் கேட்டும் பழக்கமாகிவிட்டது. நானும் சொல்லத் தொடங்கிவிட்டேன் என்றார் பெரியவர். இப்படிப் பல சொற்தொடர்களைப் பலர் நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்திப் பேசுகிறார்கள்;. ஆனால் அந்த வார்த்தைகளின் மூலம் தெரிவதில்லை. போகட்டும். பழைய வார்த்தைப் பிரயோகங்கள் நடை முறையில் இருக்கின்றனவே என்று பெருமை கொள்வோம்.

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 6 கீதா மதிவாணன்

.
அரண்மனையின் உள்ளே ஆட்சி செய்த அற்புத எழிலையும் செல்வச் செழிப்பையும் காண்போம் வாரீர்.
நெடுநல்வாடைப் பாடல் ((101- 107)
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்தும் ஐஅகல் நிறைய நெய்சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி
அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்க
பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் 


WARRANT- சிறந்த குறும் படமாக விஜய் டிவி விருதுகளில்

.


Nantri:sinnakuddy1blogspot

இலங்கைச் செய்திகள்


வடக்குத் தேர்தல் செப்டெம்பர் இறுதி வாரத்தில் நடைபெறும் சாத்தியம்

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத்தங்களை மேற்கொள்வதற்கோ இடமளியோம்

விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டார் மைக்கல் ஏவின்

இந்தியா இலங்கைக்கு முதுகை திருப்பினால் அவர்கள் சீனாவை அணுகி விடுவார்கள் - இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

தமிழினி விடுதலை
  
போதுமிந்தப் பாராமுகம்!

துரிதமாக வளர்ச்சிகண்டு வரும் கிழக்குப் பல்கலைக்கழகம்

மன்னார் ஆயர் புதிய பிரபாகரனா?: சேனாவின் கருத்துக்கு த.தே.கூ. கண்டனம்
========================================================================
வடக்குத் தேர்தல் செப்டெம்பர் இறுதி வாரத்தில் நடைபெறும் சாத்தியம்

25/06/2013   வட மாகாண சபை தேர்தல் செப்டெம்பர் மாதம் முதல் இருவாரத்திற்குள் நடத்துவது சாத்தியமற்ற விடயமாகும். ஏனெனில், போதிய கால அவகாசம் இல்லை. ஆனால், செப்டெம்பர் 21அல்லது 28ஆம் திகதியே சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசு அறிவிப்பின் பின்னரே ஏனைய விடயங்களை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது  நன்றி வீரகேசரி  


நீடு வாழி ஜீவா அகவை 87 தாண்டி.........

.

27.06.2013 ,87 அகவையில் புகும் ஜீவாவை தமிழ்முரசு வாழ்த்துகிறது 



நீடு வாழி ஜீவா
நின்னை 
நினைக்காத நாட்கள் இல்லை
சிரிக்கும் கண்கள்
ஆதூரமாய் பற்றும் கரங்கள்

SBS வானொலியின் புதிய நேர அட்டவணை

.

உலகச் செய்திகள்

அரை நிர்வாண ஆர்ப்பாட்டத்தால் ஆடிப்போன பிரசல்ஸ்!

ஆப்கான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் அதிரடித் தாக்குதல்!

உத்தரகண்டில் தொடரும் அழிவுகள்: உணவின்றி 20 பேர் பலி

ஸ்னோடெனை ஒப்படைக்க முடியாது: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ரஷியா

உத்தரகண்டில்  அழிவுகள் ( படங்கள் )


==========================================================================

அரை நிர்வாண ஆர்ப்பாட்டத்தால் ஆடிப்போன பிரசல்ஸ்!

26/06/2013     பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸில் வைத்து டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட்டின் வாகனத்தொடரணி மீது பாய்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரை நிர்வாணப் பெண்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது சக பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் படி வலியுறுத்தி உக்ரேன் நாட்டு பெண்கள் இயக்கமான 'பெமென்' இயக்க உறுப்பினர்களே இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட் அங்கிருந்து திரும்பும் போதே அவரது வாகனத் தொடரணி மீது இரண்டு பெண்கள் பாய்ந்துள்ளனர்.

ஈழத்தமிழ்மகன் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா- 2013

.

ஈழத்தில் பிறந்து தமிழ்தொண்டாற்றிய வண. பிதா. தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு (July 4-7, 2013) கொண்டாடப்படுகிறது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையும் கனேடியத் தமிழர் பேரவையும் இணைந்துTORONTO, CANADA வில் நடத்தும் தமிழ் விழா, ஈழத்தமிழ் மகன், தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்து தமிழ்த்தொண்டாற்றிய ஈழத்தமிழ் மகனுடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது மிகவும் சிறப்பானதாகும். எல்லைகள், மதம் எல்லாவற்றையும் கடந்து தமிழ் எங்களை இணைக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

பக்தியின் மொழி தமிழ்

"If Latin is the Language of Law and of Medicine 
French the Language of the Diplomacy 
German the Language of Science 
And English the Language of Commerce 
Then Tamil is the Language of Bhakti 
The devotion to the sacred and the holy."  
-Rev. Fr. Thaninayakam –

தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில்,ஊர்காவற்துறையில் கரம்பன்  என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசுசிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு ஆவணி 2, 2013  இல் பிறந்தார்.  

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டை தோற்கடித்தார் முன்னாள் பிரதமர் கெவின் ருத்

27/06/2013    அவுஸ்திரேலிய தொழில் கட்சி தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பில் பிரதமர் ஜூலியா கில்லார்ட்டை முன்னாள் பிரதமர் கெவின் ருத் தோற்கடித்துள்ளார்.
மேற்படி தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பில் கெவின் ருத் 57 சதவீத வாக்குகளையும் ஜூலியா கில்லார்ட் 45 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் கட்சித் தலைமைத்துவத்துக்கான வாக்களிப்பை நடத்துவதற்கு அழைப்பு விடுத்த நிலையிலேயே மேற்படி தேர்தல் நடத்தப்பட்டது.
கட்சிக் கூட்டமொன்றில் முன்னாள் பிரதமர் கெவின் ருத்தின் ஆதரவாளர்கள் வாக்களிப்பொன்றை நடத்துவதற்கு நிர்ப்பந்தித்ததை தொடர்ந்து அவர் மேற்படி அழைப்பை விடுத்திருந்தார்..
இதன்பிரகாரம் புதன்கிழமை. கட்சித் தலைமைத்துவத்திற்கான இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த கட்சித் தலைமைத்துவத்துக்கான வாக்களிப்பில் ஜூலியா கில்லார்ட்டும் கெவின் ருத்தும் போட்டியிட்டனர்.

தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்

.
1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில, மாதிரிப்படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸிந்தி, உருது மொழிகள் உட்பட) இலக்கிய வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளுடன், அந்தந்த மொழிகளின் சில கதைகள், கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இவற்றில் தமிழ் மொழிக்காகச் சேர்க்கப்பட்டவை, ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற கதையும் சல்மாவின் சில கவிதைகளும். எனது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய கட்டுரைக்கு Enigma of Abundance என்று தலைப்பு கொடுத்திருந் தார்கள். Enigma of Abundance………..!!! தலைப்பு என்னமோ வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதை நியாயப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆகவே இப்போது எனக்குள்ள சுதந்திரத்தில் மிகச் சாதாரண மொழியில்,
தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்

இணையற்ற அருள்மொழி


எப்போதும் உதவு, ஒருபோதும் புண்படுத்தாதே

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளிய அற்புத மொழிகள் ஆயிரமாயிரம். பாமரரும் பண்டிதரும் கூடிய சபையில் அவர் அருள்மொழி வழங்கினால், ஒவ்வொருவருக்கும் அவருக்கென ஒரு செய்தி இருக்கும். அவர் சுமந்து வந்த கேள்விக்கு விடை இருக்கும். அவருக்கென ஒரு வழிகாட்டல் கிடைக்கும். “இது வறட்டுத் தத்துவம், எனக்குப் புரியாது” என்று எவரும் நினைக்க வாய்ப்பே இருக்காது.

வேதசாரத்தை எளிய சொற்களில், அன்றாட வாழ்விலிருந்து எடுத்த உதாரணங்களோடு, வெகு சரளமாக வழங்குவது பகவானின் அருட்பிரவாகம். தமிழில் 36 தொகுதிகள் 42 புத்தகங்களாக (சில தொகுதிகள் இரண்டு பகுதிகளாக) ‘பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளமுதம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தவிர, ‘சனாதன சாரதி’ என்ற தமிழ் மாத இதழும் வெளியாகிறது.

கீதவாணி விருது 2013 வென்றவர்கள்

.

கல்பனா ராகவேந்தர்

கீதவாணி விருதுகள் 2013 இன் நிகழ்வு சனிக்கிழமை மாலை நியு சவுத் வேல்ஸ் யூனிவேசிடி யில் இடம் பெற்றது . நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களாக பின் வருவோர் தெரிவு செய்யப்பட்டார்கள் .

கீள்பிரிவு  (Junior ) செல்வி கேசிகா  அமிர்தலிங்கம்
மேற்பிரிவு  (Senior ) முத்துலிங்கம் ஜெயபாரதிதாசன்
இளையோர் (youth ) சுவாதி கிறிஷ்ணமூர்த்தி
இருவர்  (Duet ) ரகுராம் நவரட்ணம் , ஞானமகள் அசோகன்

இப்போட்டிகள் சதீஷ் குமார் அவர்களின் இசையமைப்பில் இடம் பெற்றது .
போட்டிகளுக்கு நடுவர்களாக பிரபல தென்னிந்திய பாடகர்களான கல்பனா ராகவேந்தர் , அனந்த நாராயணன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள் .

போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கீதவாணி 2013 விருது வழங்கப்பட்டது .

சுன்னாகம் ஸ்ரீ சந்திரசேகர விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் - 2013





தெல்லிப்பழை கிழக்கு திருவருள் மிகு குருநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்






தமிழ் சினிமா

தீயா வேலை செய்யனும் குமாரு 

கொலிவுட்டில் 'கலகலப்பு' கொமெடி படத்தைத் தொடர்ந்து 'தீயா வேலை செய்யனும் குமாரு' படம் மூலம் தீப்பொறி கிளம்ப மற்றும் ஒரு நகைச்சுவை வெற்றிப்படத்தை தந்திருக்கிறார் சுந்தர்.சி.
பாட்டன் காலத்திலிருந்து பாரம்பரியமாக காதல் திருமணம் செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் சித்தார்த்.
ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இவரால் மட்டும் காதலில் வெற்றி காண முடியவில்லை.
இவருக்கு காதல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இவரது அக்காக்கள் காதல் அனுபவத்தைப் பற்றி விளக்குகிறார்கள்.
மறுநாள் வேலைக்குப் போகும் சித்தார்த் அங்கு புதிதாக இவரது கம்பெனியில் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை கண்டதும் காதல் வயப்படுகிறார்.
அதே நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ், ஹன்சிகாவுடன் நெருங்கி பழகுகிறார்.
இதைக்கண்ட சித்தார்த், எப்படியாவது ஹன்சிகா தன்னை காதலிக்க வேண்டும் என்று தனது அக்கா கணவரிடம் ஆலோசனைக் கேட்க, அதற்கு அவர் சந்தானத்தின் முகவரியைக் கொடுத்து ஹன்சிகாவை அடைவதற்காக தேவையான அனைத்து உதவிகளை செய்வார் என்று அனுப்பி வைக்கிறார்.
சந்தானத்தை சந்திக்கும் சித்தார்த், தனது நிலைமையை சொல்லி புலம்புகிறார். இதற்கு சந்தானம் பணம் வாங்கிக் கொண்டு ஆலோசனை வழங்குகிறார்.
இதிலிருந்து இவர்கள் இருவரும் செய்யும் கலாட்டாக்களால் திரையரங்குக்குள் சிரிப்பொலி அதிர்கிறது.
ஒரு கட்டத்தில் சித்தார்த்துக்கு சந்தானம் கொடுக்கும் ஐடியா, கணேஷ்- ஹன்சிகா இருவரும் காதலிப்பதற்கு காரணமாகிறது.
இதனால் விரக்தியடைந்த சித்தார்த் தற்கொலை முயற்சிக்குச் செல்கிறார். மீண்டும் சந்தானம் அறிவுரை வழங்கவே கணேஷ்- ஹன்சிகா காதல் முறிகிறது.
இந்த சூழலில் சந்தானத்தின் தந்திரமான ஆலோசனையால் ஹன்சிகா, சித்தார்த் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர்.
இருவரையும் சந்தானம் ஒன்றாக சேர்த்து பார்த்தவுடன் மனமுடைந்து காதலை பிரிக்க திட்டமிடுகிறார்.
இருவரையும் சந்தானம் ஏன் பிரிக்க நினைக்கிறார்?. இவர் சதியில் இருந்து சித்தார்த்- ஹன்சிகா காதல் மீண்டதா? என்பது மீதிக்கதை.
கதாநாயகன் சித்தார்த், முதலில் சாதுவாக தோன்றி பின்னர் சந்தானத்துடன் இணைந்தவுடன் பாவப்பட்ட முகத்துடன் அடிக்கும் லூட்டிகள் திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.
ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும் சிக்கென்றும் தோன்றுகிறார். கணேஷின் காதலை ஏற்றுக்கொண்டு பிறகு அதை பிரேக்அப் செய்வது போன்ற காட்சிகள் சிறப்பு. அவரது கன்னக்குழியில் ரசிகர்களை விழச்செய்திருக்கிறார்.
மோக்கியாவாக வரும் சந்தானம் தான் கூறும் ஒவ்வொரு கருத்துக்களையும் லோக்கல் ஏரியா லாங்குவேஜை சொல்லி விளக்குவது திரையரங்கை அதிரவைக்கிறது.
''நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ள நாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது'' என்பது போன்ற ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் எண்ணில் அடங்காதவை.
"ஆர்யாவுக்கு 6 லட்சம் ரூபாய்க்கு காதல் டிப்ஸ் தந்தவன் நான்" என்பதில் தொடங்கி சித்தார்த்தின் காதலுக்கு அவரது அக்கா-தங்கை, அத்தான்கள் என்று அனைவரும் உதவுவதை பார்த்து, "இது குடும்பம் அல்ல விக்ரமன் படம் " என்று கமெண்ட் அடிப்பது வரை சந்தானத்தின் ‌ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்கே சிரிப்பில் அதிர்கிறது.
ஹன்சிகாவை காதலிப்பவராக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் மொட்டை பாஸ்கி, எப்.எம். பாலாஜி, விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி உள்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்.
படம் முழுக்க சந்தானத்தை பயன்படுத்தி திறன்பட காட்சிகளை அமைத்து படத்தில் தொய்வில்லாம் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். இதற்காக இவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபிஅபர்நாத்தின ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி.
'தீயா வேலை செய்யனும் குமாரு' - 'திரையரங்கமே அதிருது பாரு'
நன்றி விடுப்பு