மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து - தமிழைச் சுமந்தபடி
தரணியெங்கும் ஒளிவீசி நின்றது.அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று - பண்டிதராய், கல்லூரி ஆசிரியராய், அதிபராய், தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம்.மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து -
"ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல "
என்னும் மனப்பாங்கினைப் பெற்று - ' என்கடன் பணி செய்து கிடப் பதே ' என்னும் விசாலித்த நோக்குடன் ; இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி - விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். முத்தமிழ் வித்தகராய் முழுப் பேராளுமையாய் விளங்கிய எங்கள் விபுலாநந்தத் துறவியை இப்படியும் பார்க்கலாம் என்பதை மனமிரு த்துவது அவசியம் என்று எண்ணத் தோன்றுகிறது.